Type Here to Get Search Results !

Book of Hosea Bible Study | ஓசேயா புத்தகம் ஓர் கண்ணோட்டம் | Jesus Sam

=========
ஓசேயா இறைவாக்கு நூல்
========
எழுதியவர்: இறைவாக்கினர் ஓசேயா
மையக்கருத்து: கடவுளின் நியாயத்தீர்ப்பும் மீட்டெடுக்கும் அன்பும்
எழுதப்பட்ட காலம்: கி.மு. 715-710

ஓசேயா நூலின் பிண்னணி:
ஓசேயா என்ற பெயருக்கு இரட்சிப்பு அதாவது மீட்பு என்று பொருள்.  இவர் பேயோரின் மகன் என அடையாளப்படுத்தப்படுகிறார். ஓசேயா தன்னை குறித்து இந்த நூலில் கூறும் குறிப்புகளைத் தவிர இவரைப் பற்றிய தகவல்கள் ஒன்றும் கிடைக்கவில்லை. ஓசேயா இஸ்ரவேலை சேர்ந்தவர். யூதாவை சேர்ந்தவரல்ல. தன் சொந்த மக்களுக்கு இறைவாக்கு உரைத்தார் என்று காண முடிகிறது. எப்படியென்றால், முதலில் இவரது நூலில் இஸ்ரயேல், எப்பிராயீம் என்பவை மட்டும் அதிகமாக கூறப்படுகிறது. இவை வடக்கு அரசாட்சிக்குக் கொடுக்கப்பட்ட முக்கியமான பெயர்களாகும். வடக்கு அரசாட்சியின் தலைநகரமான சமாரியாவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டாவதாக சமாரியாவில் இருந்த இஸ்ரவேலின் அரசரை நம்முடைய அரசர் என இவர் கூறுகின்றார். மூன்றாவதாக, இவரது ஏக்கம் எல்லாம் இஸ்ரயேலின் ஆவிக்குரிய, ஒழுக்க ரீதியான அரசியல் மற்றும் சமுதாய கறைகளைக் குறித்தே அமைந்துள்ளது. யூதேயாவில் இருந்துகொண்டு இஸ்ரவேலர்களுக்கு இறைவாக்கு உரைத்த ஆமோஸ் இறைவாக்கினரின் அடிச்சுவற்றை இவர் பின்பற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓசேயா யூதேயாவில் இருந்தவரல்ல. ஆமோஸ் மற்றும் ஓசேயா ஆகிய இரு இறைவாக்கினர்கள் மட்டுமே வடக்கு அரசாட்சியின் அழிவை குறித்து இறைவாக்கு உரைத்தனர். தெற்கு அரசாட்சியின் கடைசி நாட்களில் இறைவாக்கு உரைக்குமாறு அழைக்கப்பட்ட எரேமியாவை போலவே, இஸ்ரவேலில் இறுதி 30 ஆண்டுகளுக்கு அதின் வீழ்ச்சியைக் குறித்து பேசும்படியாக ஓசேயாவை கடவுள் தெரிந்தெடுத்தார்.

இரண்டாவது, யெரோபெயாம் ஆட்சிக்காலத்தில் ஓசேயா இறைவாக்கு உரைக்க ஆரம்பித்த போது இஸ்ரவேல் ஒரு தற்காலிக பொருளாதார செழிப்பையும், அரசின் சமாதானத்தையும் பெற்றதால், பாதுகாப்பு எனும் தவறான மாயையில் அவர்கள் சிக்கியிருந்தனர். ஆனால், கி.மு. 253-ல் இரண்டாவது யெரோபெயாம் மரித்த பின் இஸ்ரயேல் வீழ்ச்சியடைய ஆரம்பித்தது. கி.மு. 222-ல் முழுவதும் வீழ்ந்துவிட்டது. அவரது மரணத்திற்கு பின் 15 வருடத்திற்குள் 4 அரசர்கள் அடுத்தடுத்து கொல்லப்பட்டனர். மேலும் 15 ஆண்டுகளில் சமாரியா புகைக்காடாகி அழிந்துவிட்டது. இஸ்ரயேலர் அசீரியாவிற்கு சிறைப்பிடிக்கப்பட்டதுடன் பல நாடுகளுக்கு சிதறடிக்கப்பட்டனர். இஸ்ரயேலருக்கு பல கொடுமைகளும் நடந்தது. ஓசேயாவின் உடைந்துபோன திருமணமும், இறைவாக்கு செய்திகளும் இஸ்ரவேலர்ளுக்கு இறைவார்த்தையாக இந்த அழிவின் நாட்களில் அமைந்தன. கடவுளிடம் இஸ்ரயேலர் காண்பித்த உண்மையற்ற தன்மையை வெளிப்படுத்துவதற்காக ஒரு விலைமகள் ஒருத்தியை திருமணம் செய்ய சொல்லி கடவுள் ஓசேயாவிற்கு கட்டளையிட்டார். இஸ்ரவேலருக்கு புத்தியைக் கற்பிப்பதற்கு ஒரு தெய்வீக இறைவாக்கினரிடம் ஒரு விலைமகளை திருமணம் செய்ய சொல்லி கடவுள் கூறியதற்கு அப்படியே கீழ்ப்படிந்து ஓசேயா கோமேர் என்கிற விலைமகளை திருமணம் செய்து கொண்டார். இஸ்ரயேலை ஆட்சி செய்த இரண்டாம் யெரோபெயாம் காலத்திலும் ஓசேயா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா ஆகிய யூதாவின் அரசர்களின் காலத்திலும் (கி.மு. 255-215 வரை) ஓசேயா ஊழியம் செய்தார். எனவே, இவர் ஆமோஸ், மீகா, ஏசாயா ஆகியவர்களின் காலத்தில் வாழ்ந்த இளம் இறைவாக்கினராக இருந்திருப்பார். இவரது திருப்பணியின் முக்கிய பகுதியும் இஸ்ரவேலை சிறிது காலம் ஆட்சி செய்த 6 அரசர்களை காட்டிலும், யூதாவிலிருந்த 4 அரசர்களை பற்றி அதிகமாக குறிப்பிடுவதால் இவர் சமாரியாவின் வீழ்ச்சிக்கு சற்று முன்பாக வடக்கு அரசாட்சியை விட்டுவிட்டு யூதாவில் குடியேறியுள்ளார் என்பது தெரியவருகிறது. இங்கு தான் ஓசேயா தனது இறைவாக்கு உரைகளை தொகுத்து ஒன்று திரட்டி இந்த ஓசேயா நூலை வடிவமைத்திருக்க வேண்டும்.

ஓசேயா ஏழுதப்பட்டதன் நோக்கம்:
இஸ்ரயேலரின் சிலை வழிபாடு, துன்மார்க்கம், கீழ்ப்படியாமை ஆகியவற்றினால் இஸ்ரயேல் அழிந்துபோகும் முன் கொடுக்கப்படும் கடவுளின் கடைசி எச்சரிப்பாக ஓசேயாவின் இறைவாக்குகள் அமைந்துள்ளன. முதலில் கடவுள் தமது உடன்படிக்கையின் மக்களிடம் தொடர்ந்து அன்புகூர்ந்து அவர்களின் அக்கிரமங்களிலிருந்து அவர்களை விடுவிக்க விரும்பினார் என்றும், இரண்டாவதாக, அவரது மீட்பின் அன்பை மறந்து மக்கள் கடவுளுக்கு கீழ்ப்படியாமல் தொடர்ந்து வாழ்ந்ததால் அநேக தீமைகளை அனுபவிப்பார்கள் என்றும் வெளிப்படுத்தவே இந்த நூல் எழுதப்பட்டது.

ஓசேயாவின் சிறப்பம்சங்கள்:
இறைவாக்கினர் ஓசேயாவின் நூலானது சிறிய இறைவாக்கினர் நூல்கள் என்ற பட்டியலில் உள்ளது. ஏசாயா, எரேமியா, எசேக்கியேல் போன்ற இறைவாக்கினர்களின் நூல்களை ஒப்பிடும்போது ஓசேயா இறைவாக்கினரின் நூலானது சிறியதாக உள்ளதே இதற்குக் காரணம். ஆனால், 12 சிறிய இறைவாக்கினர்கள் நூலில் முதல் புத்தகமாக இருப்பது ஓசேயா நூல் ஆகும்.

வடக்கு அரசாட்சிப் பகுதியை சேர்ந்த 2 இறைவாக்கினர்களில் ஒருவர் ஓசேயா. மற்றொருவர் யோனா.

எரேமியா, எசேக்கியேல் போன்றவர்களைப்போல, ஒசேயாவின் தனிப்பட்ட அனுபவங்களும் இறைவாக்குகளாக விளக்கப்பட்டுள்ளன.

இஸ்ரவேலரின் 150 விதமான பாவங்கள் இங்கே எழுதப்பட்டுள்ளன. அவற்றில் பாதிக்குமேல் சிலைவழிபாடுகள் ஆகும்.

பழைய உடன்படிக்கையின் மற்ற இறைவாக்கினர்களை விட ஓசேயா தனது நூலில் கடவுளின் உண்மையான அன்பைப் பற்றியும், கடவுள் மக்கள் மேல் காட்டும் பொறுமையைப் பற்றியும் காட்டுகிறார்.

ஓசேயா பிரிவு 4 முதல் 14 வரை உள்ள பகுதிகளில் ஒரு குறிப்பிட்ட வரைமுறை திட்டமில்லை. ஒரு இறைவாக்கு எங்கே துவங்குகிறது, எங்கே முடிகிறது என்று எளிதாக கூறமுடியவில்லை.

இந்நூல் பல தெளிவான உவமைகளைக் கொண்டது மட்டுமல்லாமல், அவற்றில் ஏராளமானவை கிராமிய சூழ்நிலையிலிருந்து எடுக்கப்பட்டவையாகும்.

புதிய ஏற்பாட்டில் நிறைவேற்றல்:
எகிப்திலிருந்து என் குமாரனை வரவழைத்தேன்.
ஓசியா 1:1 => மத்தேயு 2:15

மரணத்திலிருந்து கிறிஸ்துவின் வெற்றி
ஓசியா 13:14 => 1 கொரிந்தியர் 15:15

பலியை அல்ல, இரக்கத்தையே கடவுள் விரும்புகிறார்.
ஓசேயா 6:6 => மத்தேயு 9:13, மத்தேயு 12:7

கடவுளுடையவர்கள் அல்லாத புறஇனமக்கள் அவருக்கு சொந்தமாகுதல்
ஓசேயா 1:9,10, ஓசேயா 2:23 => ரோமர் 9:25,26, 1 பேதுரு 1:10

கடவுள் தம் மக்களின் கணவர் – ஓசேயா
கிறிஸ்து மணவாளன், சபை மணவாட்டி – புதிய உடன்படிக்கை
1 கொரிந்தியர் 11:2
எபேசியர் 5:22-32
வெளிப்படுத்துதல் 19:6
வெளிப்படுத்துதல் 21:1,2,9,10

ஜீவனில் பிரவேசிக்க கடவுளை உண்மையாக அறிந்து கொள்ளுதல் அவசியம்
ஓசேயா 2:20, 4:6, 5:15, 6:3,6 => யோவான் 17:1-3


ஒசேயா பிரிவு - 1
தீர்க்கதரிசன புத்தகங்களில் ஒன்று ஓசேயா, இந்த ஓசேயாவை அனேக நேரங்களிலே நாம் 12 சிறு தீர்க்கதரிசிகள் என ஒரு பட்டியல் வைத்திருப்போம் அந்த பட்டியலில் இவரையும் நாம் முதன்மையானவராக சேர்த்திருப்போம்.

இந்தப் 12 சிறு தீர்க்கதரிசிகளில் 9 பேர் இஸ்ரயேலரின் முதலாவது சிறைபிடிப்புக்கு முன்பதாகவே தீர்க்கதரிசனம் உரைத்தனர் அதில் ஓசையாவும் ஒருவர், இவர் எட்டாம் நூற்றாண்டு தீர்க்கதரிசிகளில் ஒருவர்,

அதுமட்டுமல்ல முதன் முதலில் தீர்க்கதரிசனங்களை எழுத்து மூலம் பதிவு செய்த தீர்க்கதரிசியாகவும் இந்த ஓசேயா கருதப்படுகிறார். இவர் ஏசாயாவின் காலத்தில் சற்று முன்பு எழுந்தவர், ஆக இவரை ஏசாயாவுக்கும் முந்தைய தீர்க்கதரிசி எனவும் கூறுவர், இவர் இசக்கார் கோத்திரத்தைச் சார்ந்தவர் எனவும் கூறப்படுகிறது.

யூதர்கள் கூறும் கூற்றின்படி இந்த ஓசேயா 70 ஆண்டுகள் தீர்க்கதரிசனம் உரைத்தார் என கருதப்படுகிறது. இவர் இஸ்ரயேல் தேசத்தின் வீழ்ச்சி, அழிவு பற்றியும், அதற்காக புலம்பவும், அது முடிந்த பின்னர் அதை மேம்படுத்தவும் அதன் ராஜ்யத்திற்கு எச்சரிப்பு செய்யவும் இவரை கடவுள் பயன்படுத்தினார்.
இந்த முதலாம் அதிகாரத்தில் இஸ்ரயேலருக்கு ஆண்டவர் இவர் வழியாய் கொடுக்கும் வார்த்தைகளை நாம் பார்க்க முடியும்.

1. உன்னால் பாடுபடும் கிறிஸ்து.
The Christ who Suffers Through your Deeds
இரண்டாவது வசனத்தில் நீ போய் விலை மகள் ஒருத்தியை சேர்த்துக் கொள் வேசி பிள்ளைகளை பெற்றெடு ஏனெனில் நாடு ஆண்டவரை விட்டு விலகி வேசித்தனத்தில் மூழ்கியுள்ளது.(ஒசேயா1.1) என்று ஆண்டவர் கருத்தில் கூறுகிறார் இதில் ஆண்டவர் தம்முடைய மக்கள் வழி விலகிப் போகின்ற பொழுது தம்முடைய தாசன் ஆகிய ஓசேயா வை ஆண்டவர் படும் பாடுகளை தானும் படும்படியாக அனுமதிக்கிறார். எப்படியெனில் தன்னுடைய மனைவி வேசியாக வேசி பிள்ளைகளை பெற்றெடுக்கும் அந்த துன்புறுதல், அதேபோல, கிறிஸ்துவும் இஸ்ராயேல் மக்கள் கடவுளை விட்டு வழி விலகிப் போகின்ற பொழுது துன்புற்று பாடுபடுகிறதை நாம் உணர முடிகிறது.

2. தன்னையே வெறுத்து விட்டுகொடுந்த இறைமகன்.
The Son of God Who Rejected And Abandoned Hinself.
ஓசேயா விற்கு கடவுள் சித்தப்படி பிறப்பிக்கப்பட்ட பிள்ளைகளில் மூத்தவன் பெயர் "இஸ்ரியேல்", இரண்டாவது - மகளின் பெயர் "லோ ருகாமா",
மூன்றாவது - மகனின் பெயர் "லோ அம்மீ",

லோ ருகாமா என்பதற்கு "கருணை பெறாதவள்" என்று அர்த்தம் அதாவது கைவிடப்பட்டவள் என்றும் அர்த்தம் கொள்ளலாம் அடுத்ததாக லோ அம்மி என்பதற்கு, "என் மக்கள் அல்ல" என்பது பொருளாகும் அதாவது கைவிடப்பட்டவள் இவள் என்னுடைய மக்கள் அல்ல என்று ஆண்டவர் கூறுகிறார் அதோடு மட்டுமல்லாமல் முதலாவது மகனின் பெயர் இஸ்ரியேல், இஸ்ரியேல் என்பதற்கு "இவனுடைய இரத்தப் பழிக்காக" என்று பொருள்(வ.4)ல் நாம் பார்க்க முடிகிறது. இரத்த பலி என்பது மறைமுகமாக நமக்கு காட்டுவது என்னவென்றால் இஸ்ரியேல் இரத்தம் சிந்தப்படும் படியாக பலி செலுத்தப்படுவதை நமக்கு காண்பித்துக் கொடுக்கிறது.

(உடலின் உயிர் குருதியில் உள்ளது. அதனை நான் உங்களுக்காகப் பலிபீடத்தின்மேல் உங்கள் உயிருக்கெனப் பாவக்கழுவாய் செய்யும்படி ஆணையிட்டேன். ஏனெனில், அது உயிருக்கான பாவக்கழுவாய் நிறைவேற்றும் குருதி. லேவியர் 17:11)

கிறிஸ்துவின் சிலுவை பலியை குறியிடும் கருத்தாக இதனைப் பார்க்கலாம்

3. மன உருக்கம் நிறைந்த கடவுளின் அன்பு.
The tender Love of God
தம் மக்களை மீட்டெடுக்கவே கடவுள் சித்தம் கொண்டிருக்கிறார்.,

(வ.10) ஆயினும்....."நீங்கள் என்னுடைய மக்களல்ல" என்று அவர்களுக்குக் கூறப்பட்டதற்கு மாறாக, "வாழும் கடவுளின் மக்கள்" என்று அவர்களுக்குக் கூறப்படும்.
ஓசேயா 1:10

தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்.
யோவான் 3:16

வாழும் கடவுள் அவர் அடிக்கப்பட்டார், கொல்லப்பட்டார், மீண்டும் உயிர்த்தெழுந்தார்.
இன்னும் அவர் உயிருள்ள கடவுளாய் வாழ்கிறார்

ஓசேயா 2:1 அம்மீ (என் மக்கள்) என உங்கள் சகோதரர்களிடம் கூறுங்கள். "ருகாமா" (கருணை பெற்றவர்) என உங்கள் சகோதரிகளிடம் கூறுங்கள்.

கடவுளின் கிருபையின் பலியால் நாம் அவர் மக்களாக அவர் வழியாய் வாழ கருணை பெற்றிருக்கிறோம், அவருக்காக வாழ அழைக்கபட்டிருக்கிறோம்,
கர்த்தர் தாமே உங்களோடிருந்து நடத்துவாராக, ஆமென்.


ஓசேயா பிரிவு - 3
==========
1. இது அன்பைப் பற்றிய ஒரு முக்கியமான கொள்கையை நமக்குக் காட்டுகிறது. ஓசியா அன்பை நோக்கி வழிநடத்தப்படுகிறார், அது அன்பு செய்வது கடினமாக இருந்திருக்க வேண்டியிருந்தாலும் கூட அன்பைப் பற்றிய பல காதல் மாயைகளால் நாம் நிரம்பியுள்ளோம், மேலும் இந்த மாயைகளில் ஒன்று அன்பு நம் விருப்பத்துடன் மிகக் குறைவாகவே தொடர்புடையது. நாம் அன்பால் "பிடிக்கப்பட்டுள்ளோம்", அது வழிநடத்தும் எந்தப் பாதையையும் பின்பற்றுகிறோம். ஆனால் கொள்கையளவில், வேதம் நமக்கு இன்னொரு வழியைக் காட்டுகிறது. அந்த அன்பு பெரும்பாலும் விருப்பத்தைப் பொறுத்தது. மேலும் கடவுள் நமக்குச் சொல்லும் ஒருவரை நேசிக்க நம்மை வழிநடத்தும்போது அது நடக்கும். அதனால் தான் "நாங்கள் இனி காதலிக்கவில்லை" என்பது ஒரு மோசமான உறவு அல்லது விவாகரத்துக்கான சரியான காரணமல்ல. காதல் என்பது நம் விருப்பத்திற்கு அப்பாற்பட்ட அல்லது வெளியே உள்ள ஒன்று என்று அது கருதுகிறது.

2. கோமேருக்கு பணம் கொடுத்ததன் நோக்கம் அவளை ஒரு விபச்சார தொழிலை கைவிடச் செய்வது மட்டுமல்ல, அவளுடைய கணவனான ஓசேயாவுடன் உறவுக்குள் கொண்டு வருவதும் ஆகும். உறவும், ஒன்றாக வாழ்வதும் தான் குறிக்கோளாக இருந்தது.

3. இஸ்ரவேலின் வீழ்ச்சியடைந்த நிலையில், அதற்குத் தேவையான இயற்கைக்கு அப்பாற்பட்ட வழிகாட்டுதல் இருக்காது.

4. இஸ்ரவேல் புத்திரர் திரும்பி வந்து தங்கள் தேவனாகிய கர்த்தரைத் தேடுவார்கள். அரசியல் மற்றும் ஆன்மீக அழிவின் இந்த நேரத்தில் இஸ்ரவேல் திரும்பி வந்து மீண்டும் கர்த்தரைத் தேடுவார்கள். இது அவர்களின் மறுசீரமைப்பைக் குறிக்கும். மேலும் அவர்கள் கர்த்தரிடம் திரும்பும் வரை மறுசீரமைப்பு இருக்காது.

ஓன்பதாம் அதிகாரம்
==========
ஓசேயா நூல் ஒன்பதாம் பிரிவு, இஸ்ரவேல் மக்கள் கடவுளைவிட்டு விலகிப்போனதைக் குறித்தும், அதன் விளைவாக அவர்கள் அனுபவிக்கப் போகும் பாடுகள், உபத்திரவங்கள் குறித்தும் பேசுகிறது. அவர்கள் அக்கிரமங்களின் காரணமாக, தங்கள் நாட்டில் குடியிருக்க முடியாமல், வேறு நாடுகளுக்கு அடிமைகளாகப் போக நேரிடும் என்று இறைவாக்கு உரைக்கப்பட்டுள்ளது.

இந்த பிரிவில், இஸ்ரவேல் மக்கள் ஏன் இப்படிப்பட்ட தண்டனைக்கு உள்ளாகிறார்கள் என்பதைப் பற்றிப் பேசுகிறது. [1,1]

• கடவுளை விட்டு விலகுதல்: இஸ்ரவேல் மக்கள் கர்த்தரை விட்டு விலகி, மற்ற தெய்வங்களை வணங்கினார்கள்.

• அக்கிரமங்கள்: அவர்கள் பல பாவச் செயல்களில் ஈடுபட்டார்கள்.

• விளைவுகள்: இதன் காரணமாக, அவர்கள் தங்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள், பசியாலும், வறுமையாலும் வாடுவார்கள், மற்ற நாடுகளில் தீட்டுள்ளவைகளைப் புசிக்க நேரிடும் என்று கூறுகிறது.

• எச்சரிக்கை: இந்த பிரிவில், இஸ்ரவேல் மக்களுக்கு ஒரு எச்சரிக்கையாக உள்ளது. அவர்கள் தங்கள் வழிகளை மாற்றிக்கொண்டு, கர்த்தரை நோக்கித் திரும்பினால், இந்த தீய விளைவுகளைத் தவிர்க்கலாம் என்று கூறுகிறது.

சுருக்கமாக, ஓசியா 9-ம் பிரிவு, கடவுளைவிட்டு விலகிய இஸ்ரவேல் மக்களுக்கு வரப்போகும் தண்டனையைப் பற்றியும், அவர்கள் தங்கள் பாவங்களிலிருந்து திரும்பினால் மட்டுமே இந்த தண்டனையிலிருந்து தப்பிக்க முடியும் என்பதைப் பற்றியும் கூறுகிறது.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.