Type Here to Get Search Results !

Critic Service | செல்வத்துள் செல்வம், இறைச்செல்வம் | Divine Wealth is Supreme of all Wealths | Jesus Sam

தமிழ்நாடு இறையியல் கல்லூரி
அரசரடி, மதுரை 625016

திறனாய்வு வழிபாடு - 2025–2026

நாள்: 2026 சனவரி 27
செவ்வாய் கிழமை
இடம்: கிறித்தரசர் வழிபாட்டு மனை
நேரம்: காலை 6.00 மணி

செம்பொருள்: “செல்வத்துள் செல்வம், இறைச்செல்வம்”
'Divine Wealth is Supreme of all Wealths'

பாடல்: திருமிகு.மனோ ஃப்ராங்க்ளின்.மு
பண்: அருட்பணி.முனைவர்.பீட்டர் சிங்.ம
இசை: திருமிகு.அன்புராஜ். ப


பறையிசை முழங்க - வரவேற்பு (Welcome)

இறைப்போற்றி (பின்பற்றி)
நடத்துனர்:
இறைவனே போற்றி போற்றி!
படைத்தவா போற்றி போற்றி!
அரூபியே உம்மைப் போற்றி!

அவை:
இறைவனே போற்றி போற்றி!
படைத்தவா போற்றி போற்றி!
அரூபியே உம்மைப் போற்றி!

நடத்துனர்:
ஆண்டவரே போற்றி! அற்புதரே போற்றி!
எனக்காய் மரித்தாய் நீ போற்றி!

அவை:
ஆண்டவரே போற்றி! அற்புதரே போற்றி!
எனக்காய் மரித்தாய் நீ போற்றி!

நடத்துனர்:
கடந்தவரே போற்றி! காப்பவரே போற்றி!
கரிசனையே உம்மைப் போற்றி

அவை:
கடந்தவரே போற்றி! காப்பவரே போற்றி!
கரிசனையே உம்மைப் போற்றி

நடத்துனர்:
இறைவனே போற்றி போற்றி!
படைத்தவா போற்றி போற்றி!
அரூபியே உம்மைப் போற்றி!
அருட்பணி.முனைவர்.ஜாஷ்வா பீட்டர்

வழிபட அழைப்பு (Call To Worship)
உலகச் செல்வங்கள் நிலைக்காதவை இறைவன் தரும் செல்வமே நிலைத்தது. எனவே மூவொரு கடவுளின் முன்னிலையில் பணிவோடும் நம்பிக்கையோடும் நம் உள்ளங்களைத் திறந்து, வழிபடுவோம். வாருங்கள்

தொடக்க இறைவேண்டல் (Opening prayer)
அன்பும் அருளும் நிறைந்த இறைவா, இந்த மனமகிழ்ச்சியான காலைப் பொழுதில் உம்முடைய திருப்பெயரை நினைத்து உமது திருப்பாதங்களில் எங்களைத் தாழ்மையுடன் ஒப்படைக்கிறோம். உலகம் அளிக்கும் செல்வங்கள் நிலையற்றவை என்பதை நாங்கள் உணர அருள்புரியும். உம்மையே உண்மையான செல்வமாக ஏற்றுக்கொள்ளும் ஞானத்தை எங்களுக்குத் தாரும். இவ்வழிபாட்டில் உம்முடைய இருத்தல் நிலையை நாங்கள் உணர்ந்து கொள்ள வழிநடத்தும். அதன் வழியாய் திருச்சபையிலும் சமுதாயத்திலும் புதிய மாற்றங்கள் நிகழ்த்திட அவற்றுக்கான திறன் மிகுந்த கருவிகளாய் நாங்கள் எங்களை ஒப்படைக்க உதவுவீராக. இவை அனைத்தையும் எங்கள் செல்வமாகிய இயேசு கிறிஸ்துவின் வழியே வேண்டுகிறோம் அருள் நிறைந்த கடவுளே! ஆமென்.

போற்றிப் பாடல் (Opening song) (பின்பற்றி பாடுறது)
நடத்துநர்:
ரி க ரி சா / ரி க ரி சா / ரி மா பா ம க... ரி சா

அவை:
ரி க ரி சா / ரி க ரி சா / ரி மா பா ம க... ரி சா

நடத்துநர்: நல்லது நல்லது நல்லதே - நம்
கடவுளைப் புகழ்வது நல்லதே. -3

அவை: நல்லது நல்லது நல்லதே - நம்
கடவுளைப் புகழ்வது நல்லதே. -3

1
நடத்துநர்:
அவர் நல்லவராம் வல்லவராம்
சொல்லரும் மாண்புகள் உடையவராம்

அவை:
நல்லது நல்லது நல்லதே- நம்
கடவுளைப் புகழ்வது நல்லதே.

நடத்துநர்:
அவர் எல்லை எல்லாம் நுண்ணறிஞர்
எல்லாருக்கும் தந்தை தாயுமாவார்

அவை:
நல்லது நல்லது நல்லதே- நம்
கடவுளைப் புகழ்வது நல்லதே.

நடத்துநர்:
இந்தப் பூவுலகம் வானுலகம்
அவரது அதிசயப் படைப்புகளாம்

அவை:
நல்லது நல்லது நல்லதே- நம்
கடவுளைப் புகழ்வது நல்லதே.

நடத்துநர்:
அவர் எளியோரை வாழ்விக்கின்றார்
நலிந்தோரைக் கை தூக்குகின்றார்

அவை: நல்லது நல்லது நல்லதே- நம்
கடவுளைப் புகழ்வது நல்லதே.

நடத்துநர்:
தமக்கஞ்சி நடப்போரைக் தாங்குகின்றார்
நம்பி வந்தோரைக் காக்கின்றார்

அவை:
நல்லது நல்லது நல்லதே- நம்
கடவுளைப் புகழ்வது நல்லதே.

நடத்துநர்:
அவர் ஒடுக்கப்பட்டோரை உயர்த்துகின்றார்
ஒதுக்கப்பட்டுள்ளோரை வாழ்விக்கின்றார்.

அவை: நல்லது நல்லது நல்லதே - நம்
கடவுளை புகழ்வது நல்லதே.
பாடல்: ஜான் பிரிட்டோ
இசை:- சரவனகணேஷ்

திருமறைப் பாடங்கள் (Scripture reading)
1. எரேமியா 9:23-24
Jeremiah 9:23-24

2. திருத்தூதர் பணிகள் 17:23-34
Acts 17:23-34

3. தூய மத்தேயு 25:14-30
St. Matthew 25:14-30

திருத்தூதர் பற்றுறுதி அறிக்கை - தழுவியது (Affirmation faith)
விண்ணையும் மண்ணையும் படைத்த வல்லமையுள்ள இறைவனை நம்புகிறோம். உலகம் செல்வத்தைச் சேர்க்கச் சொல்லும் போது, உறவுகளை மதிக்க அழைக்கும் இறைவனையே எங்கள் வாழ்வின் ஆதாரமாக நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.

அவருடைய ஒரே திருமகனாகிய இயேசு கிறிஸ்துவை எங்கள் ஆண்டவராக நாங்கள் நம்புகிறோம். அவர் தூய ஆவியாராலே கன்னி மரியாவிடமிருந்து பிறந்து, மனித வாழ்வின் நடுவே வந்து இறைவனின் அன்பை வெளிப்படுத்தினார்.

அவர் பொந்தியு பிலாத்துவின் அதிகாரத்தின் கீழ் சிலுவையில் துன்புற்று, மரித்து, அடக்கம் செய்யப்பட்டார். மூன்றாம் நாளில் அவர் உயிர்த்தெழுந்தார். இறப்பு இறுதியல்ல என்றும், செல்வம் அல்ல உயிர்த்தெழுதலே செல்வத்துள் செல்வமான இறைச்செல்வம் என்றும் நம்புகிறோம். அவர் விண்ணகம் ஏறி, இறைவனின் வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கிறார். உயிருள்ளோரும் இறந்தோரும் நடுத்தீர்க்க அவர் மீண்டும் வருவார் என்று நாங்கள் நம்புகிறோம்.

தூய ஆவியாரை நம்புகிறோம் எங்களைத் தன் சுயநலத்திலிருந்து மனித நேயத்திற்கும், செல்வ மையமான வாழ்விலிருந்து இறைச்செல்வ மையமான வாழ்விற்கும் வழிநடத்துகிற ஆவியாரையும். தூயோரின் கூட்டுறவும், பிழைபொறுப்பும் உடல் உயிர்ப்பும், நிலை வாழ்வும் உண்டென்று நம்புகிறோம். ஆமென்.

சிறப்பு நிகழ்வு (Special Event)
    குறுநாடகம்

அருளுரை (Sermon)
தலைப்பு: செல்வத்துள் செல்வம், இறைச்செல்வம்
Divine Wealth is Supreme of all Wealth's

பிழை உணர அழைப்பு (Call to confession)
பிழைகள் நம்மிடம் இல்லை என்போம் என்றால் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வோம். உண்மையும் நம்மிடம் இராது. மாறாக நாம் பாவங்களையும் இறைவன் நமக்குக் கொடுத்த இறைச்செல்வத்தைப் பயன்படுத்தாமல் இருந்ததையும் நாம் ஒப்புக் கொள்வோம் என்றால், கடவுள் நம் பிழைகளை மன்னித்துக் குற்றம் அனைத்திலிருந்து நம்மைத் தூய்மைப்படுத்துவார். ஏனெனில் அவர் நம்பிக்கைக்குரியவர் நேர்மையுள்ளவர்.

பிழை அறிக்கை (Confession of sins)
(நாம் நம்முடைய பிழைகளை அமைதியாக ஏறெடுப்போம்)
செல்வத்தை மறைத்து விட முடியும் ஆனால் மனச்சான்றினை மறைக்க முடியாது. செல்வத்துள் செல்வமான இறைச்செல்வம், தம் பிழைகளை உணர்ந்து இறைவன் முன்னிலையில் பணிவுடன் நிற்பதில்தான் தொடங்குகிறது. ஆகையால், நாம் செய்த பிழைகளைப் பிறருடன் அல்ல. நம் இறைவனுடனே தனிப்பட்ட முறையில் ஒப்புக்கொள்வோம்.

அமைதி
(பின்பற்றிப் பாடுவது)
நடத்துநர்:
என் இயேசுவே என்னை மன்னியும்
என் இயேசுவே என்னை மன்னியும்

அவை: என் இயேசுவே என்னை மன்னியும்
என் இயேசுவே என்னை மன்னியும்

அனைவரும்:
என் இயேசுவே என்னை மன்னியும்
என் இயேசுவே என்னை மன்னியும்

நடத்துநர்:
உம்குரல் எனத் தெரிந்தும்
கேட்காமல் நான் திரிந்தேன்

அவை: என் இயேசுவே என்னை மன்னியும்
என் இயேசுவே என்னை மன்னியும்

நடத்துநர்:
உம் வழியை அறிந்திருந்தும்
நடவாமல் மாறிச் சென்றேன்

அவை:
என் இயேசுவே என்னை மன்னியும்
என் இயேசுவே என்னை மன்னியும்

நடத்துநர்:
உம் செல்வம் எனில் இருந்தும்
உணராமல் நான் வாழ்ந்தேன்

அனைவரும்:
என் இயேசுவே என்னை மன்னியும்
என் இயேசுவே என்னை மன்னியும்

பிழை மன்னிப்பின் உறுதி (Absolution)
"உன் குற்றங்களைக் கார்மேகம் போலும், உன் பாவங்களைப் பனிப்படலம் போலும் நான் அகற்றிவிட்டேன். என்னிடம் திரும்பி வா. நான் உனக்கு மீட்பளித்துவிட்டேன்" (எசாயா 44:22) என்று கருணையுடன் கரங்களை நீட்டும் ஆண்டவரின் வார்த்தையை செவிச்செல்வமாக நாம் கேட்கிறோம். ஆகையால், கடவுள் நம்மை மீட்டு, அந்தப் பாவங்களிலிருந்து விடுதலை அளித்து, எல்லா நலமும் நிறைந்த நிலைவாழ்க்கைக்குள் நம்மை நடத்துவாராக. ஆமென்.

நன்றி (Thanks Giving)
1. "நேற்றைய நாளில் நடைபெற்ற குடியரசு தின வழிபாட்டையும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளையும் எந்த இடையூறும் இன்றிச் சிறப்பாக நடத்தி முடிக்கச் செய்ததற்காக, இறைவா, உமக்கு நன்றி செலுத்துகிறோம்.

2. இறைச்செல்வம் தன்னலமற்ற அன்பிலும் பிறருக்காக தம்மை அளிக்கும் வாழ்விலும் வெளிப்படுவதை, மதுரை நாராயணபுரத்தைச் சேர்ந்த நிதீஷ் என்ற இளைஞரின் வாழ்வின் வழியாக நாங்கள் காண்கிறோம். மூளைச் சாவு அடைந்த நிலையிலும் தன் உடல் உறுப்புகளைத் தானமாக அளித்து ஏழு பேருக்குப் புதிய வாழ்வை அளித்த அந்த மனிதநேயச் சான்றுக்காக, இறைவா, உமக்கு நன்றி செலுத்துகிறோம்.

மன்றாட்டு (Intercessory)
1. படைப்புகளைப் பாதுகாக்கும் படைப்பாளராம் எங்கள் இறைவா! இந்தியாவின் பெரு நகரங்களான பெங்களூர், சென்னை, டெல்லி போன்ற நகரங்களில் எதிர்காலத்தில் தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது என, ஐநாவின் அறிவியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் இந்நிலைமையை மாற்ற இறைவா! எம்மிடம் மன மாற்றம் ஏற்பட உம்மிடம் மன்றாடுகிறோம்.

2. மனித உயிரை மதித்துக் காக்கும் எங்கள் இறைவா, இந்தியாவில் சாலை விபத்துக்கள் ஏற்படாமல் இருக்கவும், உயிரிழப்புகள் தவிர்க்கப்படவும், வாகனம் ஓட்டுவோர்க்கு பொறுப்புணர்வும் பொறுமையும் அருளச் செய்ய, இறைவா உம்மிடம் மன்றாடுகிறோம். இவையனைத்தையும் பாதுகாவலராம் இயேசு கிறிஸ்துவின் வழியாய் எங்கள் மன்றாட்டுகளை ஏறெடுக்கிறோம் அன்பு நிறைந்த இறைவா! ஆமென்.

ஆண்டவர் கற்பித்த இறைவேண்டல் (Lord's Prayer)
பு.பாடல் எண்: 319
1. ஒசத்தியான குணம் படைச்சோர் மனசில் வாழும் கடவுளே
அசத்தலான ஒங்கபேரு தூயதுன்னுப் போற்றுகின்றோம்
தூய மனசுக் கொண்டோரில் ஒங்க ஆசை வெல்வது போல்
தீய மனசு போக்கி எம்மில் வென்றிடத்தான் செய்யுமே
பசப்பு இல்லா ஓங்க ஆட்சி நாளும் வரவேணுமே -2

2. ஒழைக்கும் மக்க வேர்வைக்கேத்த கூலி நாளும் கெடைக்கணுமே
ஒலகிலுள்ள எல்லாத்துக்கும் எல்லா வளம் கெடைக்கணுமே
நல்ல மனசுக்கொண்டு நாங்க நண்பர்களை மன்னிச்சா
கள்ள மனசு தொறக்க நெனக்கும் எங்களையும் மன்னிச்சிடுமே
பசப்பு இல்லா ஒங்க ஆட்சி நாளும் வரவேணுமே -2

3. தேனப்போல இனிச்சாலும் தீயவழிக்கு மசியாம
ஈனபுத்தி கொண்ட தீய சிந்தனைய தகர்த்திடுமே
ஒங்களோட ஆட்சி மாட்சி வல்லமையும் என்னைக்குமே
ஒன்றுபோல சேர்ந்து இங்கே வெற்றி நட போடணுமே
பசப்பு இல்லா ஒங்க ஆட்சி நாளும் வரவேணுமே -2
ஆமென் - 3
சி.சா.ரா.

ஒப்படைப்பு (Dedication)

இறைவாழ்த்து (Benediction)
செல்வத்துள் செல்வமான இறைச்செல்வத்தை தம் வாழ்வின் வழியாக வெளிப்படுத்திய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அன்பும், உலகச் செல்வத்திலிருந்து நம்மை விடுதலை செய்து, அறமும் அன்பும் நிறைந்த வாழ்க்கைக்குள் வழிநடத்தும் தூய ஆவியாரின் உடனிருப்பும், இப்போதும். இனி என்றென்றும் நம்முடன் நிலைத்திருப்பதாக. ஆமென்

நிறைவு பாடல் (Closing Song)
கீர்த்தனை எண்: 320
மங்கலம் சதா ஜெய மங்களம் வேதா
எங்கள் துங்கமங்கலர்க்கு மங்கலம் சதா

1. அணைத்துக்காத்தவா - உல - கனைத்தும் படைத்தவா
இணையில்லா பிதாவுமக்கு மங்கலம் சதா

2. யேசுநாயாகா - எம் - நேசநாயகா
மாசில்லாத சுதனுமக்கு மங்கலம் சதா

3. ஞானவாரியே - திரு - வானமாரியே
ஆனந்த சுத்தாவியுமக்கு மங்கலம் சதா
-ஞா.சாமுவேல்

நன்றி அறிதல் உள்ளத்தோடு யாவரும் இணைந்து சொல்லுவோம்:
என் உயிரே ஆண்டவரே போற்றிடு என் முழு உள்ளமே அவரது திருப்பெயரை ஏத்திடு என் உயிரே ஆண்டவரைப் போற்றிடு அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே ஆமென். (தி.பா 103:1-2)

அனுப்புதல் (Sending Out)
நடத்துநர்: கடவுள் உங்களோடு இருப்பாராக!
அவை: அவர் உம்மோடும் இருப்பாராக!

நடத்துநர்: இறைச்செல்வத்தோடு நாம் கடந்து செல்வோம்.
அவை: கடவுளின் திருப்பெயராலே! ஆமென்.


Gist in English
"Divine Wealth is Supreme of all Wealth's"
Introduction
We have read in Thiruvalluvar's Thirukkural that the greatest of all riches is the wealth of hearing. That is, the wealth of hearing is the mind that listens to the right thing. What a person listens to, that is what creates him. The ear that listens to the sounds of the world drags a person into the world. But the ear that listens to the words of God takes a person into the wealth of God. Wealth is something that everyone seeks in human life. Some seek money, some seek position, some seek power, some seek security, but the Holy Scriptures and our life experience tell us the same truth. "The greatest of all riches is the wealth of God." That is why the theme of today's worship is "The wealth of God in wealth."

Today's world pushes a person into a single belief. That belief is that wealth is security. This world makes a person believe that if there is money, life is secure, and if there is power. the future is certain. But the Holy Scriptures raise a different question. What is real wealth? What is real security? The sacred passages of this day remind us that there is a wealth that is higher than wealth. That wealth is the wealth of God.

1. The Jeremiah 9:23-24: Knowledge of God is Incomparable Wealth
Knowledge of God
Jeremiah argues that true wisdom, powers, and wealth do not provides grounds for pride. Nonetheless, true "knowledge of God" is a relationship grounded in aspects such as love. justice, honesty, which shape society. and confers meaning upon life. When people use their success as a savior. then such a community becomes an idol. More so, having inner faith is more vital than outside successes.

2. Acts 17:23-34: The Riches of God in a World of Wealth
Paul explains that this "Unknown God" sustains every aspect of life, every breathing creature, and every existence. The Apostle Paul disqualifies the assumption that God resides and can also be contained by mere icons or possessions that have value or money. The Apostle Paul transforms the subject from man searching for God into God searching for man. Thus, God is no longer seen as man-made, but as a living thing that calls for a transformation.

3. Matthew 25:14-30: Discipleship that Turns away from Unrighteous Wealth
This particular parable is actually commenting on unjust economic systems, as opposed to calling for talent development. The refusal of the third servant to have any part of a system that "reaps where it did not sow" is actually voicing a moral protest against exploitation. Here, we see that Jesus makes this particular parable address the idea of the kingdom of God as a corrective alternative system to the world system.

Conclusion
True wealth consists in the knowledge of God expressed in terms of love, in a living relationship with God that changes one's self-image, and in justice that refuses exploitation in any form. Real wealth or divine wealth is "not a thing but a way of life in service and righteousness." In order to gain true meaning in life, one had better put one's trust in God rather than in things, even if it means standing alone in opposing the values in the world around us.
-Translated By
Mr. Sam Gilbert - BD-III

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.