தமிழ்நாடு இறையியல் கல்லூரி
அரசரடி, மதுரை - 625016
திறனாய்வு வழிபாடு 2025 2026
செம்பொருள்:
"திருவிருந்து என்னும் திருவருட்சாதனம்"
Sacrament of Holy Communion
நாள்: 2025 ஜீலை 27
புதன்கிழமை
நேரம்: காலை 6.00 மணி
இடம்: கிறித்தரசர் வழிபாட்டு மனை
வழிபாடு நடத்துபவர்:
திருமிகு.ஜீ.தேவஞான காட்சன்
திறனாய்வு மாணவர்:
திருமிகு.பா.ராஜ்வின் யாபேஸ்
திறனாய்வு ஆசிரியர்:
அருட்பணி. முனைவர். T. ராக்லாண்ட் செல்வராஜ்
வாழ்த்தும் வரவேற்பும் (Greeting and Welcome)
பெற்றவர், மைந்தர், தூய ஆவியாரின் திருப்பெயராலே ஆமென். இந்த திறனாய்வு வழிப்பாட்டிற்கு வருகை தந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் இறைமகன் இயேசு கிறிஸ்துவின் இனிய திருப்பெயரினாலே அன்போடு வாழ்த்தி, வரவேற்றுக் கொள்கிறேன்.!
இறைப்புகழ்: (Invocation)
பிதாவே நீர் எங்கள் தந்தை
இயேசுவே நீர் எங்கள் இரட்சகர்
ஆவியே என் தேற்றரவாளனே
அறிவேன் என் ஆத்துமாவில்
வழிபட அழைப்பு: (Call to Worship)
வாருங்கள் ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்: நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள். (திருப்பாடல்கள் 95:1) என்ற திருமொழிக்கேற்ப நாம் கடவுளை இணைந்து வழிபடுவோம். வாருங்கள்.
தொடக்க இறைவேண்டல் : (Opening Prayer)
அப்பம் ஒன்றே. ஆதலால் நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம். ஏனெனில், நாம் அனைவரும் அந்த அப்பத்தில்தான் பங்கு கொள்கிறோம். (1 கொரிந்திரியர் 10:17) என்று வாழ்வளிக்கும் நல்ல கடவுளே! நீர் அருளிய புதிய நாளுக்காக உமக்கு நன்றி படைக்கின்றோம். இந்த காலை திறனாய்வு வழிப்பாட்டின் வழியாக உம்மோடும் ஒன்றிணையவும், உம்முடைய வார்த்தைகளை கேட்கவும் நீர் எங்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்த வழிபாட்டு சூழலுக்காக உமக்கு நன்றி படைக்கிறோம். இந்த வழிபாடு எங்களுக்கு உதவியாக அமைய துணை புரியும். தொடக்க முதல் நிறைவு வரை உம்முடைய இருத்தல் நிலையை உணர அருள்தாரும். இவை அனைத்தையும் இறைமகன் இயேசு கிறிஸ்துவின் வழியாக வேண்டிக் கொள்கிறோம். அன்பின் கடவுளே!. ஆமென்.
போற்றிப் பாடல்: (Song Of Praise)
(யூபிலி அரசரடி புத்துயிர் பாடல் எண் : 7)
(போற்றிப் பாடல் பாட பெறும் பொழுது ஒளியேற்றல் நடைபெறும்)
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயாவே ஆண்டவனுக் கல்லேலூயா அல்லேலூயாவே
பரிசுத்த ஆலயத்தில் தரிசித்த ஆண்டவன
வல்லமை விளங்கும் வான விரிவினிலே ஆராதிங்க
நல்லவர காக்கா குருவி பறவைகளோட - நம்ப 2
வல்லவர வாழ்த்திட வாங்க மிருகங்களோட - அல்லேலூயா
பூரணர வாழ்த்திட ஓர்
காரணந்தான் வேணுங்களோ
வயிறாரத்துன்னுறதுக்குக் காரணம் வேறு சொல்லணுங்களோ
செயல்படுகிற கடவுளாக இருப்பதற்காக - அட 2
உயிருள்ள வர பாடுங்க அய்யா அல்லேலூயாவே - அல்லேலூயா
உருமிமேளம் முட்டித் தாளம்
பெரிய மோளம் ஒடுக்கை ஓலம்
பம்பை மத்தாளத்தோட போடுங்கையா சிங்கிதாளம்
கும்மியாட்டம் ஒயிலு ஆட்டம் வீர சிலம்பாட்டம் -ஆடி
கும்மாளமா ஆராதிச்சிப் பண்ணுங்க ஆர்ப்பாட்டம் - அல்லேலூயா
- ஜே.தியாப்பிலஸ் அப்பாவு
பிழை உணர அழைப்பு: (Call to Confession)
தம் குற்றப் பழிகளை மூடி மறைப்பவரின் வாழ்க்கை வளம் பெறாது. அவற்றை ஒப்புக் கொண்டு விட்டுவிடுகிறவர் கடவுளின் இரக்கம் பெறுவார். (நீதிமொழிகள் 28:13) என்ற திருமொழிக்கேற்ப நாம் நம்முடைய பிழைகளை அமர்ந்த நிலையில் அறிக்கை செய்வோம்.
பிழை அறிக்கை: (Confession of Sins)
அன்பின் ஆண்டவரே ! நீர் எங்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்த திருவிருந்து என்னும் திருவருட்சாதனத்தை எங்கள் புரிதலினால் ஆலயங்களுக்கிடையே ஏற்படுத்தியுள்ள பிரிவுகளை உணர்ந்து எங்கள் இழி நிலையை எண்ணி மனம் வருந்துகிறோம். இறைவா !
(இசை) ஐயையா, நான் வந்தேன்.....
அவர் அப்பத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப்பிட்டு, அவர்களுக்கு கொடுத்து. இது உங்களுக்காகக் கொடுக்கப்படும் எனது உடல் எனது நினைவாக இவ்வாறு செய்யுங்கள் என்றார். (லூக்கா 22:19) என்ற திருமொழியை அறிந்திருந்தும் உம்மை உண்மையாய் நினைவு கூறாமலும் உம்மை அறிக்கையிடாமலும் நாங்கள் சுயமாய் வாழ்ந்து வரும் இழி நிலையை எண்ணி மனம் வருந்துகிறோம்.. இறைவா !
(இசை) ஐயையா, நான் வந்தேன்.....
(நாம் நமது தனிப்பட்ட பிழைகளை அறிக்கை செய்வோம்)
பிழை மன்னிப்பின் உறுதி : (Absolution)
நம் பாவங்களை மீட்டெடுப்பதற்காக தனது உடலைச் உடைத்து, சிதைத்து, பங்கிட்டு கொடுத்த இறைமகன் இயேசு கிறிஸ்துவின் வழியாக மன்னிப்பை பெற்றுக் கொண்டு நிலை வாழ்வோடு வாழ்வதற்கு கடவுள் நம்மை வழி நடத்துவராக ! ஆமென்!..
திருமறைப்பாடங்கள்: (Scripture Reading)
1. விடுதலைப்பயணம் : 12:1-14
(Exodus 12:1-14)
2. 1கொரிந்தியர் : 10:14-22
(1 Corinthians 10:14-22)
3. தூய லூக்கா : 22:7-20
(St.Luke 22:7-20)
சிறப்புப் பாடல்: (Special Song)
'திருவிருந்து என்னும் திருவருட்சாதனம்'
மண்ணால் உருவான மனிதனுக்கு
வாழ்வு தர
நம்மைப் போல இங்கு வந்தார்
இறைவன். -2
அவரே விதையாகி புது வாழ்வை விதைத்தார்.
அவரே தன் வாழ்வை தந்து நம்மை வாழ வைத்தார்.
பல்லவி
தன் வாழ்வை தந்திட்டார்
அந்த வாழ்வுக்கு நன்றி சொல்லுவோம்
திருவிருந்து எனும் திருவருட்சாதனம் - 2
இருளின் இருந்த மக்களுக்கு ஒளியாக
விடிவெள்ளி போல விண்ணிலிருந்து வந்தார்
இறைவன் - 2
நம்மை மீட்கவே அவரே தம்மை ஈர்ந்தார்
அவர் உடலாலும் குருதினாலும்,
நிலை வாழ்வை அளித்தார் - 2
தன் வாழ்வை தந்திட்டார்
அந்த வாழ்வுக்கு நன்றி சொல்லுவோம்
திருவிருந்து எனும் திருவருட்சாதனம்
என்றும் நிலைக்கும் அருட்சாதனம் - 2
பாடல் எழுதியவர்: திருமிகு.ஸ்டாலின் ராஜ்
பண்: திருமிகு. V.சாலஸ் வேலண்டைன் ஜோசப்
அருளுரை: (Sermon)
பற்றுறுதி அறிக்கை: (Affirmation of Faith)
பாடல் வழியாக (யூபிலி அரசரடி புத்துயிர் பாடல் எண் : 305)
1. வானும் புவியும் வையகமும்
வனைந்த நல்ல பரனான
வானகத் தந்தையை நம்புகிறோம்
2. அவரொரே திருமகன் கன்னியிடம்
அனைவரின் நாதர் கிறிஸ்துவாய்
அவதரித்ததையும் நம்புகிறோம்
3. பிலாத்துவின் கீழவர் சிலுவையதில்
பெரும்பாடுகளுடன் இறந்தடங்கி
பெருங்குழி புகுந்ததை நம்புகிறோம்
4. உயிரோடெழுந்தார் மூன்றாம் நாள்
உயரே எழுந்து பரன் வலமே
உடனிருப்பதையும் நம்புகிறோம்
5. உயிருள்ளோரும் இறந்தோரும்
உண்மையாம் தீர்ப்பை அடைந்திடவே
உறுதியாய் வருவார் நம்புகிறோம்
6. தூயாவி தூயோர் சபை உறவு
பாவ மன்னிப்பு உடல் உயிர்ப்பு
மெய் நிலைவாழ்வையும் நம்புகிறோம்
- இசுரேல் செல்வநாயகம்.
நடத்துநர்:
நாம் பாடல் வழியாக அறிக்கை செய்த இந்த பற்றுறுதியில் உயிர் உள்ள வரைக்கும் நிலைத்திருக்க கடவுள் அருள் செய்வாராக.
அனைவரும்:ஆமென்
நன்றியும் மன்றாட்டும்: (Thanks giving and Intercessory Prayer)
நன்றி செலுத்துவோம்
- வாழ்வளிக்கும் வல்ல கடவுளே இந்த கல்வியாண்டின் முதல் பருவத்தில் நாங்கள் கற்றுக் கொண்ட பாடங்களுக்காகவும், எங்களுக்கு கற்றுக் கொடுத்த பேராசிரியர்களுக்காகவும் இறைவா உமக்கு நன்றி செலுத்திறோம்.
- தமிழ்நாடு இறையியல் கல்லூரியின் 55 வது ஆட்சிமன்றக் குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றமைக்காகவும், அதில் கலந்து கொண்ட பேராயர்கள், ஆயர்கள், உறுப்பி னர்கள் ஆகியோரின் பயணங்கள் பாதுகாப்பாக அமைந்தமைக்காக இறைவா உமக்கு நன்றி செலுத்துகிறோம்.!
மன்றாடுவோம்
- வருகின்ற 30.08.2025 அன்று முதல் தொடங்க இருக்கும் முதல் பருவத் தேர்வுக்காகவும் மாணவர்களாகிய நாங்கள் அனைவரும் சிறப்பாக தேர்வு எழுதவும் தேர்வு நேரங்களில் எங்களுக்கு எந்தவித சுகவீனமும் ஏற்படாமல் இருக்கவும் இறைவா உம்மிடம் மன்றாடுகிறோம்...
- நமது கல்லுாரியில் பணியாற்றுகின்ற முனைவர். கிறிஸ்டி பெமிளா அக்கா அவர்களின் தாயார் திருமதி. விக்டோரியா அவர்களும், குமாரி பேராயத்தின் முன்னாள் ஆயரும் நமது தமிழ்நாடு இறையியல் கல்லூரியின் முன்னை மாணவர் அருட்திரு. செல்லக்கண் அவர்களும் கடந்த நாட்களில் கர்த்தருக்குள் குடும்பத்தின் நித்திரை அடைந்தார்கள் இவர்களின் ஆறுதல்களுக்காக இறைவா உம்மிடம் மன்றாடுகிறோம். ஆமென்.!
இவையணைத்தையும் இறைமகன் இயேசுகிறிஸ்துவின் வழியாக வேண்டுகிறோம். அன்பின் கடவுளே!. ஆமென்.
(நன்றியும் மன்றாட்டும் ஒன்று திரட்டி ஆண்டவர் இயேசு கிறிஸ்து கற்பித்த மன்றாட்டை ஏறெடுப்போம்)
ஆண்டவர் இயேசுகிறிஸ்து கற்பித்த இறைவேண்டல் (Lord's Prayer)
விண்ணுலகிலிருக்கிற எங்கள் தாயும் தந்தையுமாகிய கடவுளே,உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக. உமது ஆட்சி வருக உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவதுபோல் மண்ணுலகிலும் நிறைவேறுக. இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளது போல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீயோனிடமிருந்து எங்களை விடுவியும். ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமக்கே. ஆமென்.
ஒப்படைப்பு: (Dedication)
யூபிலி அரசரடி புத்துயிர் பாடல் எண் 271.
ஒப்படைக்கின்றோம் இறைவா எமையே
உலகின் ஆதார வாழ்வாம் உமக்கே
துணைப்பல்லவி
அப்பனும் அம்மையும் ஆகினீர் எமக்கே
அடியவர் நாங்கள் அர்ப்பணித்தோமே
தாகம் நிறைமாந்தர் வாழ்வுகள் மலர (2)
தந்தோம் எமையே அர்ப்பணமாக
ஏகமனதாக யாவரும் சொல்வோம் (2)
இயேசுவே “மாரநாதா” என்றே
-மா. ஞானவரம்
இறைவாழ்த்து: (Benediction)
வார்த்தைகளின் வழியாக வாழ்வு தரும் இயேசு கிறிஸ்துவின் அருளும், எல்லா நிலைகளிலும் ஆசி வழங்கி, வருகின்ற கடவுளின் அன்பும், துாய ஆவியரின் பாதுகாப்பும், பாரமரிப்பும், இன்றும் என்றும் எல்லா காலங்களிலும் நம்மோடும் இருப்பதாக ! ஆமென்.....
நிறைவுப் பாடல் : (Closing Song)
யூபிலி அரசரடி புத்துயிர் பாடல் எண் : 182
இறைவன் அருளும் விருந்து - இந்த
இகந்தனில் அருள் மருந்து.
துணைப்பல்லவி
குறைவில் இறைவன் அருளை - நாம்
கொண்டாடுவோம் அகமகிழ்ந்து
- இறைவன்
உண்ணும் உணவில் இறையருளை - நாம்
உணர்ந்து போற்றிடுவோம்.
மண்ணில் பசியால் வாழும் மாந்தர் - உண்டு
மகிழ்வுடன் வாழ்ந்திடவே.
- இறைவன்
அன்பின் உறவில் வளர்ந்திடவே - நம்
ஆண்டவர் அருள் விருந்து
தம்மை நம்பும் அடியாரை - ஒன்றாய்த்
தாங்கிடும் அருள் மருந்து
- இறைவன்
- மா.ஞானவரம்
அனைவரும் இணைந்து சொல்லுவோம்:
என் உயிரே ஆண்டவரை போற்றிடு. என் முழு உள்ளமே அவரது திருப்பெயரை ஏத்திடு. என் உயிரே ஆண்டவரை போற்றிடு. அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே. ஆமென்!.
அனுப்புதல் (Sending Out)
நடத்துனர்:
ஆண்டவர் உங்களோடு இருப்பாராக,
அவை
அவர் உம்மோடும் இருப்பாராக!
நடத்துனர்: ஆண்டவரை நினைவு கூறும்படி அவருடைய திருச்சித்தத்தின் படி வாழ எல்லோரும் சென்று வாருங்கள் !
அவை: ஆண்டவரின் திருப்பெயராலே ! ஆமென்!
வழிபாட்டில் கலந்து கொண்ட, உதவி செய்த அனைவருக்கும் நன்றிகள்.....
தட்டச்சு உதவி:
திருமிகு. தே. வசந்தகுமார். தேவியல் இளையர் IV.
Gist in English
The passage given for this critic service is "Sacrament Of Holy Communion"
Exodus 12:1-14,
1 Corinthians 10:14-22,
Luke 22:7-20
The name of the Holy Communion in Hebrew is "Holy Qurbana". In English, it means "giving", "gift" in Tamil.
The word communion is "Deipnon" in Greek.
The word "Kyriakon deipnon" is used. It means "evening meal". The Lord's Supper is also called "the Lord's Supper". It is derived from the Greek word "Kyriakon deipnon"
This word is translated as the Lord's Supper or "the Lord's Supper."
Communion: This refers to a Christian ritual or celebration in which we remember Christ's sacrifice and redemption by partaking of bread and wine.
The Eucharist is a gift from God to the Church. "Justin Martyr" said that the faithful are imbued with the word of God and are united with one another through the Eucharist.
The name Holy Communion refers to the relationship that the members of the body of Christ have with God and with people.
"Thomas Aquinas" said that through this communion we communicate with Christ, and so it is called "communion". We communicate with one another, we are united.
The Catholic Church follows 7 sacraments. The Reformed Churches follow 2 sacraments. 1-Baptism, 2-Holy Communion. What we are thinking about today is that the Lord's Supper is a reminder of how Jesus Christ was killed by the ruling class and died on the cross, shedding his blood, for fighting for the freedom of the underprivileged. With the theme of the Lord's Supper as the central theme, we will meditate under three sub-topics from the Holy Scriptures.
1. The sign of remembrance from the Lord: Exo 12: 1-14.
Background: Exodus 12:1-14 refers to the event in the Bible where God commanded the Israelites to observe the Passover before they were freed from Egypt. This event represents the first Passover for the Israelites. The first Passover is mentioned in Exodus 12:21 through 28. It says that before the tenth plague that
would kill the firstborn of the Egyptians came, the Israelites were to put the blood of a lamb on the doorposts of their houses. When God saw this blood, He would pass over those houses. This would be a sign of their deliverance. Exodus 12:13 states. Exodus 12:14 states. that this day should be a day of remembrance for them. To remember is to think about, talk about, or reminisce about an event, person, or a specific time period.
In the passage of Scripture that you have just read, God tells the people of Israel to remember. In Exodus 12:26, the sign of God's deliverance is the painted sign of the feet.
2. It makes you act with determination; 1 Corinthians 10: 14-22
The Christians in Corinth were eating food associated with idolatry and were involved in idolatry-related problems. That is why Paul says in 1 Corinthians 10:18-22, "You cannot drink the cup of the Lord and the cup of demons. You cannot be partakers of the Lord's table and the table of demons."
1 Corinthians 10:22 says that when we do that, we provoke the Lord to anger. He reminds the Christians in Corinth of the danger of engaging in idolatry. The Israelites had forgotten the redemption that God had given them. In a situation where they did not remember that God had
redeemed them, the apostle Paul urged the Christians in Corinth to act with caution. When the Christians in Corinth were confused about whether it was right or wrong to eat food that had been sacrificed to idols, Paul advises them to act with caution and reminds them of the danger of engaging in idolatry.
3. The Lord leads to eternal life. Luke 22:7-20
The central idea of the Gospels is the last days of Jesus.
It tells of the supper and the new covenant he established through bread and wine. The passage we heard from Luke 22:7-13 mentions the preparation for the Passover meal in Proverbs. It refers to the breaking of bread. The breaking of bread is also seen as a sequence used in the early church for sharing food (Acts 2:42-46). John 6:51-53 says that the Lord's Supper is essential for life in the Gospels. John Luke 22:14-20 This passage explains the importance of the Lord's Supper in the Gospels. The Last Supper of Jesus Christ is mentioned, and through it, the Lord Jesus wanted to make us remember his death and the new covenant, and to reveal his love and redemption to his disciples. In this passage, Jesus commands his disciples to remember his body by calling it bread and his wine his blood. The wine confirms that it is the new covenant made by his blood. When we remember this and observe it, the Lord's Supper will pave the way for us to eternal life.
These acts of Jesus Christ are considered a sign of the redemption that will come to mankind through his death and resurrection.
1. The first covenant Exodus 24:8
2. The sign of the new covenant Exodus 22:20
(Hebrews 8:8-13, 9:15-22) The blood of Jesus has brought forgiveness of sins and has written the law of God in our hearts. This is the glory of the new covenant.
Conclusion:
The Eucharist occupies a central place in the life and worship of the Church. The Eucharist is not considered a mere ritual or doctrinal part of the Church today, but rather each Eucharistic celebration should be given a deeper meaning.
Third year fieldwork.
In the Bible, 1 Corinthians 10:17 says, "There is one bread. Therefore though many, are one body. For we all partakers of the one bread...
May God Himself bless you through this word! Amen...
Translated By
Mr.Manishkumar.S BD-IV
அருளுரை:
தலைப்பு: திருவிருந்து என்னும் திருவருட்சாதனம்
இறைவேண்டல் செய்வோம்.
என் கற்பாறையும் மீட்பருமான ஆண்டவரே! என் வாயின் சொற்கள் உமக்கு ஏற்றவையாய் இருக்கட்டும். என் உள்ளத்தின் எண்ணங்கள் உமக்கு உகந்தவையாய் இருக்கட்டும்! ஆமென்!
மூவொரு கடவுளின் திருப்பெயராலே! வாழ்த்தி வரவேற்கிறேன்.
இன்றைய நாளில் திறனாய்வு வழிபாட்டிற்கென்று கொடுக்கப்பட்டிருக்கும் தலைப்பு.
"திருவிருந்து என்னும் திருவருட்சாதனம்" இதற்காக தரப்பட்டிருக்கும்
திருமறைப் பகுதி:
விடுதலைப் பயணம் 12:1-14, 1-கொரிந்திரியர் 10:14-22 லூக்கா 22:7-20
திருவிருந்து என்பது எபிரேயத்தில் "தூய கொர்பானா" என்று பெயர். ஆங்கிலத்தில் Holy Qurbana. தமிழில் ஈவு, கொடை என்று பொருள்படும்.
திருவிருந்து என்ற வார்த்தை கிரேக்க மொழியில் "Deipnon" என்ற வார்த்தை பயன்படுத்தப் படுகிறது. இதன் பொருள் “இரவு உணவு” ஆகும். மேலும் திருவிருந்து என்பது "கர்த்தருடைய பந்தி” என்றும் அழைக்கப்படுகிறது. இது கிரேக்க வார்த்தையான "Kyriakon deipnon" ( ) இந்த வார்த்தை கர்த்தருடைய பந்தி அல்லது "ஆண்டவரின் இரவு உணவு" என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
திருவிருந்து: இது ஒரு கிறிஸ்தவ சடங்கு அல்லது கொண்டாட்டத்தைக் குறிக்கிறது. இதில் அப்பத்தையும் திராட்சை ரசத்தையும் எடுத்துக் கொள்வதன் மூலம் கிறிஸ்துவின் பலியையும், மீட்பையும் நினைவு கூறுகிறோம். ஆகும்.
திருவிருந்து என்பது திருச்சபைக்குத் தரப்பட்டக் கடவுளின் அருட்கொடை.
ஜஸ்டின் மார்டியர், என்பவர் பற்றுறுதியாளர்கள் கடவுளின் வார்த்தையால் தாக்கப்பட்டு திருவிருந்தின் வழியாக ஒருவரோடு ஒருவர் இணைக்கப்படுகின்றனர்.
Holy Communion என்ற பெயர் கிறிஸ்துவின் உடலின் உடன் உறுப்புகள் கடவுளோடும், மக்களோடும் கொள்ளும் உறவைக் காட்டுகிறது. தாமஸ் அக்குவினாஸ் என்பவர் இதன் வழியாக நாம் கிறிஸ்துவுடன் தொடர்பு கொள்வதால் "கம்யூனியன்” என்று பெயர் பெறுகிறது. இதன் மற்றொருவருடன் தொடர்பு கொள்கிறோம், ஒன்றிணைக்கப் பெறுகிறோம்..
கத்தோலிக்க திருச்சபையில் 7 திருவருட்சாதனம் பின்பற்றுகின்றனர். சீர்த்திருத்த திருச்சபைகளில் 2 திருவருட்சாதனம் பின்பற்றுகின்றனர். அதில் 1-திருமுழுக்கு, 2-திருவிருந்து.
இன்றைய நாளில் நாம் சிந்திக்க இருப்பது. திருவிருந்து என்பது இயேசு கிறிஸ்து அடித்தள மக்களின் விடுதலைக்காக போராடியதற்காக எப்படி ஆதிக்கவர்க்கத்தாரால் கொலை செய்யப்பட்டு சிலுவையில் மரித்து இரத்தம் சிந்தினவரை நாம் நினைவு கூறுவதாகும். திருவிருந்து என்னும் திருவருட்சாதனம் என்ற தலைப்பினை மையமாக வைத்து, நாம் படிக்கக் கேட்ட மூன்று திருமறைப் பாடங்களிலிருந்து மூன்று இணைத் தலைப்பின் கீழ் நாம் தியானிப்போம்.
1. திருவிருந்து நினைவு கூறுதலின் அடையாளம் : வி.பயணம் 12: 1-14.
பின்னணியம்: விடுதலைப்பயணம் 12:1-14 திருமொழிகளில் இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து விடுதலை பெறுவதற்கு முன்னே பஸ்கா என்னும் பண்டிகை அனுசரிக்க கடவுளால் கட்டளையிடப்பட்ட நிகழ்வைக் குறிக்கிறது. இந்த நிகழ்வு இஸ்ரயேலரின் முதல் பஸ்காவைக் குறிக்கிறது. முதல் பஸ்கா விடுதலைப் பயணம் 12:21 தொடங்கி 28 வரைக்கும் உள்ள திருமொழிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. எகிப்தியரின் தலை மகனைக் கொல்லும் பத்தாவது வாதை வருவதற்கு முன்னதாக இஸ்ரயேலர்கள் தங்கள் வீடுகளின் கதவுகளில் ஆட்டுக்குட்டியின் இரத்தத்தைப் பூச வேண்டும். என்று கூறுகிறது. இந்த இரத்தத்தை பார்க்கும் போது கடவுள் அந்த வீடுகளைத் தவிர்த்து விடுவார். இது அவர்களின் விடுதலையின் அடையாளமாக இருக்கும். விடுதலைப்பயணம் 12:13-ல் கூறப்பட்டுள்ளது. விடுதலைப்பயணம் 12:14-ல் இந்த நாள் அவர்களுக்கு நினைவு நாளாக இருக்க வேண்டும். என்று குறிப்பிடுகிறார்.
நினைவு கூறுதல் என்பது ஒரு நிகழ்வையோ. நபரையோ, அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்தையோ, மனதில் கொண்டு, அதைப்பற்றி மீண்டும் யோசிப்பதும்,பேசுவதும், அல்லது எழுவதும் ஆகும்.
படிக்கக் கேட்ட திருமறை பகுதியில் கடவுள் இஸ்ரயேல் மக்களிடம் நினைவு கூறும்படி கூறுகின்றார். விடுதலைப்பயணம்: 12:26-ல் கடவுள் மீட்பு அளித்ததின் அடையாளம் நிலக்கால்களின் பூசப்பட்ட அடையாளமாகும்.
2. திருவிருந்து நிதானித்து செயல்பட வைக்கிறது: 1-கொரிந்திரியார் 10:14-22.
கொரிந்து நகரிலுள்ள கிறிஸ்தவர்கள் சிலை வழிப்பாட்டுடன் தொடர்புடைய உணவை உண்பதும், மற்றும் சிலை வழிப்பாட்டிற்குரிய சிக்கல்களில் ஈடுபட்டிருந்தனர். எனவே தான் பவுல் அடிகளார் 1-கொரிந்திரியர் 10:18-22 திருமொழிகளில் நீங்கள் ஆண்டவருடைய கிண்ணத்திலும் பேய்களுடைய கிண்ணத்திலும் பருக முடியாது. நீங்கள் ஆண்டவரின் பந்தியிலும் பேய்களின் பந்தியிலும் பங்கு கொள்ள முடியாது. என்கிறார்..
1-கொரிந்திரியர் 10:22-ல் நாம் அப்படி செய்யும் பொழுது ஆண்டவருக்கு எரிச்சல் மூட்டக் கூடியவர்களாக இருக்கிறோம். என்கிறார்..
கொரிந்து நகரிலுள்ள கிறிஸ்தவர்கள் சிலை வழிபாட்டில் ஈடுபடுவதன் ஆபத்தை அவர்களுக்கு நினைவூட்டுகிறார். இஸ்ரயேல் மக்கள் கடவுள் கொடுத்த மீட்பை அவர்கள் மறந்துவிட்டனர். கடவுள் அவர்களை மீட்டெடுத்ததை அவர்கள் நினைவு கொள்ளாத சூழலில் அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்து பட்டணத்து கிறிஸ்தவ மக்களை நிதானித்து செயல்பட வைக்கிறார். கொரிந்துவிலுள்ள கிறிஸ்தவர்கள் சிலைக்கு படைக்கப்பட்ட உணவினை உண்பது சரியா, தவறா என்று குழப்பமடைந்த நிலையில் இருக்கும் போது பவுல் அவர்களை நிதானித்து செயல்படும் படியாக அறிவுரை கூறுகிறார். சிலை வழிபாட்டில் ஈடுபடுவதின் ஆபத்தை அவர்களுக்கு நினைவூட்டுகிறார்.
3. திருவிருந்து நிலை வாழ்விற்கு வழிவகுக்கின்றது. : லூக்கா : 22: 7-20
திருமொழிகளின் மையக் கருத்து இயேசுவின் கடைசி இராப்போஜனத்தையும் அப்பம் மற்றும் திராட்சை ரசத்தின் மூலம் அவர் ஏற்படுத்திய புதிய உடன்படிக்கையையும் கூறுகிறது. நாம் படிக்கக் கேட்ட லூக்கா 22:7-13 -ல் திருமொழிகளில் பஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்வதைக் குறித்து குறிப்பிட்டுள்ளது. அப்பம் பிட்குதலைக் குறிக்கிறது. அப்பம் பிட்குதல் என்ற தொடர் ஆதித்திருச்சபையில் உணவை பகிர்ந்து உண்பதற்குப் பயன்படுத்திய தொடராக காணப்பட்டதை (திருத்துாதர்பணிகள் 2:42-46) -ல் காணலாம். யோவான் 6:51-53 திருமொழிகளில் வாழ்வு அடைய திருவிருந்து மிகவும் அவசியம் என்கிறார். யோவான்.. லூக்கா 22:14-20 திருமொழிகளில் ஆண்டவரின் திருவிருந்தின் முக்கியத்துவத்தை இந்த பகுதி விளக்குகிறது. இயேசு கிறிஸ்துவின் இறுதி திருவிருந்தையும் அதன் வழியாக இயேசு தம்முடைய மரணம் மற்றும் புது உடன்படிக்கையை நினைவு கூரச் செய்ய விரும்பியதையும் தமது சீடர்களுக்கு அவருடைய அன்பையும் மீட்பையும் வெளிப்படுத்துவதை குறிப்பிடப்பட்டுள்ளது இந்த பகுதியில் இயேசு தம்முடைய உடலை அப்பம் என்றும் இரசத்தை அவருடைய இரத்தம் என்றும் கூறி அதை நினைவு கூறும் படி தமது சீடர்களுக்கு கட்டளையிடுகிறார். இரசம் அவருடைய இரத்தத்தினால் ஏற்படும் புது உடன்படிக்கை என உறுதிப்படுத்துகிறது. இதை நினைவு கூர்ந்து அதை கடைப்பிடிக்கும் பொழுது திருவிருந்து என்னும் திருவருட்சானம் நம்மை நிலை வாழ்வுக்கு வழி வகுக்கும்.
இயேசு கிறிஸ்துவின் இந்த செயல்கள் அவருடைய மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம் மனுக்குலத்திற்கு கிடைக்கும் மீட்பின் அடையாளமாக கருதப்படுகிறது. 1. முதல் உடன்படிக்கை விடுதலைப்பயணம் 24:8 2. புதிய உடன்படிக்கையின் அடையாளம் லுர்க்கா :22:20.
(எபிரேயர் 8:8-13, 9: 15-22) இயேசுவின் இரத்தம் பாவமன்னிப்பைத் தந்து நமது உள்ளத்தில் கடவுளுடைய சட்டத்தைப் பதித்துள்ளது. இதுவே புதிய உடன்படிக்கையின் மாட்சியாகும்..
முடிவுரை:
திருச்சபை வாழ்விலும் வழிபாட்டிலும் தலையாய இடம் பெறுவது திருவிருந்து ஆகும். திருவிருந்து என்பது இன்றையத் திருச்சபையின் சடங்காவும் அது கோட்பாடு சார்ந்த ஒன்றாக கருதாமல் ஒவ்வொரு திருவிருந்து வழிபாடும் ஆழமான பொருள் கொண்டதாக அடைய வேண்டும்.
மூன்றாம் ஆண்டு களப்பயற்சி.
திருமொழிகளில் 1-கொரிந்திரியர் 10:17 -ல் அப்பம் ஒன்றே. ஆதலால் நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கின்றோம். ஏனெனில், நாம் அனைவரும் அந்த ஒரே அப்பத்தில்தான் பங்கு கொள்கிறோம்...
நாம் ஆயராக படித்து கொண்டியிருக்கிறோம் நம்முடைய திருப்பணி எப்படிப்பட்டதாக இருக்கின்றன. என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்....?
கடவுள் தாமே இவ்வார்த்தையின் மூலம் ஆசிர்வதிப்பராக ! ஆமென்,......











