தமிழ்நாடு இறையியல் கல்லூரி
அரசரடி மதுரை-16 2025-2026
திறனாய்வு வழிபாடு
செம்பொருள்
வழிபாட்டில் கடவுளின் வெளிப்பாடு
"Revelation of God in Worship"
திறனாய்வு ஆசிரியர்:அருட்பணி.முனைவர்.ஹெ.ஆட்லின் ரெஜினாபாய்
திறனாய்வு மாணவர்: பி. ஏசுராஜா
வழிபாடு நடத்துபவர்: ஆ. அலெக்ஸ் கிளிண்டன்
இடம்: கிறிஸ்து அரசர் வழிபாட்டுமனை
நாள்: 18.06.2025 (புதன்கிழமை)
நேரம்: காலை 6 மணி
1. இறையழைப்பு: [Invocation)
கடவுளின் திருமுன்னிலை
புலர்ந்திடும் பொழுதினிலே வணங்கிட
நாம் இணைந்திடுவோம்
வழிபட வந்தனம்
2. வழிபட அழைப்பு: [Call to Worship]
"கடவுள் உருவமற்றவர். அவரை வழிபடுவோர் அவரது உண்மை இயல்புக்கேற்ப உள்ளத்தில் தான் வழிபட வேண்டும்."(யோவான்4:24) என்ற திருமொழிக்கேற்ப கடவுளை வழிபடுவோம் வாருங்கள்.
3. தொடக்க இறைவேண்டல்: [Opening Prayer]
இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். [மத்தேயு 18:20] எனக் கூறும் எங்கள் பெற்றவராம் கடவுளே, இந்தக் காலைப் பொழுதிற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். இந்த வழிபாட்டிலும் உம்முடைய வெளிப்பாட்டை நாங்கள் காண எங்களுக்கு அருள் தாரும். இந்த வழிபாட்டின் தொடக்க முதல் முடிவு வரை உம்முடைய இருத்தல் நிலையை உணர்ந்து கொள்ள எங்களுக்கு உதவி பாராட்டும். இவை அனைத்தையும் இயேசு கிறிஸ்துவின் வழியே வேண்டிக்கொள்கிறோம் எங்கள் பெற்றவராம் கடவுளே. ஆமென்.
4. போற்றிப் பாடல்: [Song of Pralse) பு.பாடல் 54
வழிபடுவோம் வாரீர் இறைப்பதம்
தொழுதிடுவோம் வாரீர்
1. துங்கவன் இயேசுவின் நாமத்தையே
தூதர்களின் பரிவாரத்துடன்
தூயா தூயா தூயாவென
துத்தியம் செய்த போற்றிடுவோம்
துங்கவன் இயேசு நல்லவரே
துதிகளுக்கென்றும் பாத்திரரே
- வழிபடுவோம்
2. பாவியின் நேசன் பாதமதில்
பாவங்களை மிகு வணக்கத்துடன்
பணிவாய் அவரிடம் அறிக்கை செய்து
பரமனின் ஆசி பெற்றிடுவோம்
பாவத்தில் கோபம் வைத்திருப்பார்
பாவி மேல் கோபம் வையாரே
- வழிபடுவோம்
3. கேட்டிடுவோம் நல் திருவசனம்
நாட்டமுடன் நாம் நலம் பெறவே
அகத்தின் இருளினைப் போக்கிடுமே
இகத்திலவர் வழி காட்டிடுமே
தாமே வார்த்தையாய் நின்றவரே
தாரணி மீட்டிட வந்தவரே
- வழிபடுவோம்
- மெ. தாமஸ் தங்கராஜ்
5. திருமறைப் பாடம்: [Scripture Reading]
1. 1 அரசர்கள் (1Kings) 8:22-30
2. திருவெளிப்பாடு (Revelation) 14:1-7
3. தூய மாற்கு (Mark) 3:1-6 (நாடக வடிவில்)
6. சிறப்புப் பாடல்: [Special Song]
வருக! வருக! வருக!
நின் வருக!
தருக! புகழ் தருக!
அருள் ஒளிர்க!
இறை வருக...
அதிகுணனே அருளரசே
பழமை ஆதிக்கம் மறைந்தோட
மகிபாலனே மனுவேந்தனே
இன அடிமைத்தன வேரறுக்க
வழக்கம் தொலைத்து
வாழ்வைப் பெறவே
தொழுகை சிறக்க - உம்
இருப்புப் தெரிய...
வருவாய்...
உறவாட உரையாட
வாழ்வின் ஒளியாக மறையாக
வழியாக வாழ்வாக
இறையுறவில் இணையாக
இனம் கடந்து
மதம் மறைந்து
சடங்காய் அல்ல
சமமாய் சரியாய்.
பாடல்: பி.ஓவியப்பாவை
பண்: வி.சாலஸ் வெலண்டைன் ஜோசப்
7. அருளுரை: [Sermon]
8. பற்றுறுதி அறிக்கை: [Affirmation of Faith] பு.பாடல் 305
நம்பிக்கையில் யாம் வளர வேண்டுமையா - எம்
நம்பிக்கையின்மை அகலத் தூண்டுமையா
1. இறைவனாய்ப் படைத்துயிர் அனைத்தையுமே
நிறைவான ஆற்றலுடன் ஆளுபவர்
குறையாத அன்புடைய தந்தையவர்
மறை காட்டும் மாட்சி இறை மன்னர் தமில்
- நம்பி
2. தந்தையருன் திருவாக்காம் இறை மைந்தர்
உற்றுலகில் தூயாவியால் கன்னி மகனாய்
நிந்தைமிகு சிலுவையில் உயிர் நீத்து
விந்தை உயிர்த்தேகி பரம் தீர்ப்பில் வருவார்
- நம்பி
3. புது உண்மை பலகாட்டும் ஆவியாரும்
பொதுவான ஒரே துய்யத் திருச்சபையும்
புதுவாழ்வும் புனிதரின் கூட்டுறவும்
கதி மன்னிப்புயிர்த்தெழல் உண்டு எனும்
- நம்பி
மெ. தாமஸ் தங்கராஜ்
9. பிழை உணர அழைப்பு [Call to Confession]
ஆனால் பாவம் நம்மிடம் இல்லை என்போமெனில் நம்மையே நாம் ஏமாற்றிக்கொள்வோம்: உண்மையும் நம்மிடம் இராது. (1 யோவான் 1:8) என்ற திருமொழிக்கேற்ப நம்முடைய பிழைகளை கடவுளிடம் அறிக்கை செய்வோம் வாருங்கள்.
10. பிழை அறிக்கை [Confession of Sin]
(அனைவரும் இணைந்து)
நாங்கள் உம்முடைய வழிபாட்டை உண்மையாய் செய்யாமல் எங்களுடைய பாரம்பரியத்தினாலும் பலவிதமான பிரிவினாலும் உம்முடைய வெளிப்பாட்டினை உணர்ந்து கொள்ள இயலாத நிலை எண்ணி மனம் வருந்துகிறோம். இறைவா.
செய்பாவம் நினைந்துநான் அழுகின்றேன் - அதைச்
செய்யாமல் இருந்திடப் பலமுமில்லை
மெய்யாக உம்துணை வேண்டுமையா (2) -எந்தன்
ஐயா நின்பிள்ளை நானல்லவா!
உம்முடைய வெளிப்பாட்டினைத் தவறாக புரிந்து கொண்டு, உம்முடைய வெளிப்பாட்டிற்காக திருத்தலங்கள் பலவற்றை வியாபாரமயமாக்கினதற்காக மனம் வருந்துகிறோம். இறைவா
உள்ளத்தில் நல்லெண்ணம் பல உண்டு - ஆனால்
வெள்ளத்தில் அடிபட்டுச் செல்லுகின்றேன்
உள்ளதை உம்மிடம் சொல்லிவிட்டேன் (2) - எந்தன்
உடலையே உமக்கெனத் தந்துவிட்டேன்
11. பிழை மன்னிப்பின் உறுதி: [Absolution]
ஆண்டவரின் இரக்கம் எத்துணைப் பெரிது! அவரிடம் மனந்திரும்பிவருவோருக்கு அவர் அளிக்கும் மன்னிப்பு எத்துணை மேலானது! (சீராக்கின் ஞானம் 17:29) என்ற திரு மொழிக்கேற்ப கடவுள் நம் பிழைகளை மன்னித்து கடவுளுடை வெளிப்பாட்டை உணர நமக்கு அருள் தருவாராக ஆமென்.
12. நன்றி செலுத்துவோம்: [Thanks giving]
வழிநடத்தும் வல்ல கடவுளே இந்த 2025- 2026 ஆம் ஆண்டு புதிய கல்வி ஆண்டில் நாங்கள் கற்றுக் கொள்ளும் படியாய் நடைபெற்ற புத்துயிர் கூடுகைக்காகவும் மூன்று நாள்கள் நடைபெற்ற பயிற்சி பட்டறை வகுப்புகளுக்காகவும் நாங்கள் கற்றுக் கொண்ட தகவுகளுக்காகவும் அதைச் சிறப்பான முறையில் வெளிப்படுத்த நீர் தந்த ஆற்றலுக்காகவும் அறிவுக்காகவும் இறைவா உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
13. மன்றாடுவோம்: [Intercession]
ஞானத்தின் ஊற்றாம் எங்கள் பெற்றவரே, இந்தப் புதிய கல்வியாண்டில் எங்களுடன் பயிலும் முதலாம் ஆண்டு நண்பர்களுடைய மரபு வழிபாடு, இரண்டாம் ஆண்டு நண்பர்களுடைய தமிழிசை வழிபாடு, நிறைவாண்டு நண்பர்களுடைய திறனாய் போன்ற அனைத்து வழிபாடும் எங்களுக்குச் சிறப்பாக அமைத்திட உம்முடைய ஆற்றலையும் அருளையும் தந்து உதவிட மன்றாடுகிறோம்.
ஆற்றல் அளிக்கும் அன்பின் கடவுளே, நாங்கள் வாழுகின்ற நாட்டில் தொடர் விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன. அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தோரின் குடும்ப உறவுகளுக்காகவும் விபத்து நடைபெற்ற பகுதியில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்காகவும் உம்மிடம் மன்றாடுகிறோம். அவர்களுக்கு உம்முடைய ஆறுதலையும் அமைதியையும் கட்டளையிடம்படியாய் உம்மிடம் வேண்டிக் கொள்கிறோம்.
தொடர்ந்து உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் ஒரு குழந்தை உட்பட ஏழு பேர் உயிரிழந்து உள்ளனர். அவர்களுடைய குடும்ப உறவுகளுக்கு உம்முடைய பேரிரக்கத்தையும் ஆறுதலையும் கட்டளையிடும்படியாய் வேண்டிக் கொள்கிறோம் நல்ல கடவுளே. ஆமென்
14. ஆண்டவர் கற்பித்த இறைவேண்டல்: [Lord's Prayer]
விண்ணுலகிலிருக்கிற எங்கள் பெற்றவராகிய கடவுளே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக. உமது ஆட்சி வருக. உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவதுபோல் மண்ணுலகிலும் நிறைவேறுக. இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளது போல எங்கள் குற்றங்களை மன்னியும். நாங்கள் சோதனைக்கு உட்படும்போது. தீயோனிடமிருந்து எங்களை விடுவியும். ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமக்கே. ஆமென். (மத்தேயு 6:9-13)
15. ஒப்படைப்பு: [Dedication]
நம்மை நாம் ஒப்படைக்கும் வகையில் அருகில் இருக்கின்ற நண்பர்களின் கைகளைப் பிடித்து ஒரே மனத்தோடு திருச்சபைக்குச் செல்லயிருக்கின்ற நாம் நீதி நேர்மை சமத்துவம் போன்றவற்றை செயல்படுத்துகிறவர்களாய் கடவுளிடம் ஒப்படைப்போம். நம்மை
16. இறை வாழ்த்து: [Benediction]
தம் திருமைந்தனை நமக்குத் தந்து வெளிப்படுத்தின பெற்றவராகிய கடவுளின் அன்பும், விடுதலையின் வாழ்வுதரும் இயேசு கிறிஸ்துவின் அருளும், விடுதலைப் பணிக்கென்று நம்மை ஆற்றல் படுத்தும் தூய ஆவியாரின் வல்ல செயலும் இன்றும் என்றும் நம் அனைவரோடும் நிலைத்திருப்பனவாக. ஆமென்....
17. நிறைவுப் பாடல்: [Doxologyl பு.பாடல் 195
இயேசுவை வாழ்க்கையில் காட்டுங்களே
பேச்சில் அல்ல செயலில் நல்ல
இயேசுவை வாழ்வோராய்க் காட்டுங்களே (2)
1. ஆலயம் அருளுரை போதாதே
ஆசரிப்புக்களும் போதாதே
ஆண்டவர் தொழுவதின் வெளியிலுள்ளார்
ஆடுகள் தேடியே ஆவல் கொண்டே
- இயேசுவை
இசுரேல் செல்வநாயகம்
வழிபாடு நடத்துபவர்: வெளிபாட்டின் கடவுள் உங்களோடு இருப்பாராக
அவை: அவர் உம்மோடும் இருப்பாராக
வழிபாடு நடத்துபவர்: நீதியின் படி வாழ கடத்து செல்லுவோம்
அவை: கடவுளின் திருபெயரினாலே ஆமென்.
Gist in English
Revelation of God in Worship
Mark 3:1-6.
What is Worship?
Worship is the relationship and communication between God and humans.
It is a way in which God reveals Himself to us, and we respond to Him.
Biblical Meaning:
- In the Old Testament, the Hebrew word shachah means:
- Bowing down
- Offering sacrifices
- Serving God
- Reverent submission
- In the New Testament, worship involves:
- Serving God
- Devotion
- Acts of reverence
In the Old Testament, people worshipped by offering sacrifices for the forgiveness of sins and to maintain a good relationship with God.
The English word "worship" comes from "worthiness" or "worth-ship", indicating giving God the honor He deserves.
Scripture References:
- Isaiah 58: True worship is about living righteously and caring for others.
- John 4:24: True worship must be in spirit and truth.
Theological Perspective:
- Martin Luther said:
"Worship is hearing God's Word and responding to it with faithful commitment."
Revelation of God
- In the Old Testament, people believed that God's presence and revelation were connected to specific covenantal places or settings (e.g., the Tabernacle or Temple).
- In the New Testament, especially under the New Covenant, God reveals Himself through Jesus Christ not only through His words, but also through:
- His actions
- His miracles
- His silence
- His healing
- His suffering and compassion
John 1:14
"The Word became flesh and lived among us. We have seen His glory, full of grace and truth."
This verse affirms that Jesus is the visible revelation of God's glory.
Theological Insight - Karl Barth
- Karl Barth teaches that God's full and final revelation is in Jesus Christ.
- It is not merely through ideas or words, but through the person and work of Christ.
The section invites us to reflect:
Is Jesus revealed only as a healer, or in what other ways does He reveal God to us? This leads to deeper understanding of who Jesus is and how He manifests God's presence among people especially in moments of suffering and need.
1. God's Revelation Among the Oppressed:
In Mark 3:1-3, Jesus enters the synagogue again. The Pharisees are watching. They are not focused on worship but on finding fault.
- According to Jewish law, the Sabbath had become burdened with rigid rules:
- Lighting lamps was forbidden
- Trading or carrying objects was restricted
- People were excluded from certain synagogue roles unless they were "ritually fit"
In this context, people with disabilities or differences were made to sit on the margins of the synagogue, far from the center.
Jesus calls the man with the withered hand to stand in the center.
Why?
- Jesus challenges the societal and religious practice of marginalizing the weak, especially in sacred spaces.
- He intentionally brings the oppressed to the center of worship to demonstrate that God's presence is with the excluded, not just the privileged.
Contemporary Application
- Even today, many worship spaces reflect exclusion based on caste, class, ability, or social status.
- These exclusions reflect capitalist and power-driven systems, not Gospel. the
- Jesus disrupts this pattern by bringing the marginalized to the center. offering freedom and justice as part of true worship.
2. Christ Revealed for the Sake of Justice
In Mark 3:4, Jesus challenges the Pharisees with a crucial question: "Is it lawful on the Sabbath to do good or to do harm, to save life or to kill?"Through this question, Jesus exposes the hypocrisy of the religious leaders. They had turned God's law into a rigid system that prioritized rules over human life.
- During Jesus' time, Jewish leaders created exclusive laws in the name of holiness, especially within worship spaces.
- These laws denied dignity and justice to many, including people from lower classes or those with illnesses or disabilities.
- For example, even if someone was dying, healing them on the Sabbath was prohibited by strict interpretations of the law.
Jesus Breaks the System, In Mark 3:5, Jesus tells the man to stretch out his hand. This act of healing becomes a revelation of justice.
- The stretching out of the hand becomes a symbol of dignity and power.
- Often in society, people with disabilities or from lower castes are forced to hide their identity out of shame or exclusion.
- Jesus reverses this by restoring the man's freedom, dignity, and equality in front of everyone.
Social Reflection
- The message parallels modern social injustices such as caste discrimination, exclusion, and denial of power to the marginalized.
- Like Dr. B.R. Ambedkar, who symbolically "extended his hand" for justice and equality in India, Jesus does the same for the oppressed.
- God's revelation through Jesus is not just spiritual-it is also social, granting justice and shared dignity.
In summary, Jesus reveals God by restoring justice, confronting oppressive systems, and bringing the excluded into full human dignity. Christ Revealed for the Sake of Justice
Reflection on Today's Worship Context
Even in our present-day church worship settings, discrimination exists in various forms such as:
- Male dominance
- Caste-based divisions
- Economic inequality
- Gender discrimination
- Social exclusion
In such a context, we must seriously reflect on this question: "How is God's revelation truly taking place in our worship today?"
The challenge is to ensure our worship is inclusive, just, and aligned with the God who reveals Himself among the marginalized and oppressed.












