HISTORY OF CHRISTIANITY FROM 1 to 10th Century
கிறிஸ்தவ வரலாறு 1 முதல் 18 நூற்றாண்டு வரை
4 Credits Paper
Sis. Blessy Notes
1. அறிமுகம்
வரலாறு என்றால் என்ன?
வரலாறு எனும் வார்த்தை ‘Historia’ எனும் கிரேக்க வார்த்தையிலிருந்து வருகிறது. Historia என்றால் inquiring (or) investigation என்று அழைக்கப்படுகிறது. வரலாற்றின் தந்தை என Herodofus அழைக்கப்படுகிறார். இவரது காலம் (484 - 430).
அறிவியல் பூர்வமானது, மனித நேயமிக்கது பகுத்தறிவு சார்ந்தது, சுய வெளிப்பாடுடையது என வரலாற்றின் தந்தை வரலாற்றை பற்றி கூறுகிறார். மேலும் இவர் கூறுவது வரலாறு மறைந்திருப்பதை வெளிக்கொண்டு வரும், தெளிவற்றதை தெளிவுபடுத்தும், பகுத்தறிவு சார்ந்து செயல்பட உதவும் எனவும் கூறினார்.
துசைடிடஸ் என்ற கிரேக்க அறிஞர் வரலாறு என்பது ”தனித்துவமான குறிப்பிடத்தக்க நிகழ்வுகளின் பதிவு” என்று கூறுகிறார்.
Dr. ராதாகிருஷ்ணன் கூற்றுபடி, “வரலாறு என்பது கடந்த காலத்தின் பதிவுமட்டுமல்ல, அது நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய எதிர்காலம்” ஆகும்.
அரிஸ்டார்டில் வரலாறு என்பது ”மாறாத கடந்த காலம்“ என்கிறார்.
கார்ல் மார்க்ஸ் என்பவர் வரலாறு என்பது வர்க்க போராட்டம் என்கிறார்.
E.H கார் அறிஞர் கூற்றுப்படி வரலாறு ஆசிரியர்களுக்கும் அவருடைய தேடலுக்கும் இடையில் நடக்கும் உரையாடல், கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் நடக்கின்ற முடிவில்லா உரையாடல் ஆகும்.
வரலாற்றின் தன்மை:
- இது மனிதர்களைப் பற்றி படிப்பது.
- காலத்தின் மாற்றத்தைப் பற்றி தெரிந்துகொள்வது.
- முக்காலங்களையும் உள்ளடக்கியது.
- பொருளாதார, சமூக, கலாச்சார சித்தாந்தங்களை உள்ளடக்கியது.
- வரலாறு திரும்ப திரும்ப கூறப்படும்.
- காலக்கட்டத்திற்கேற்ப மக்களை சிந்திக்க கட்டாயப்படுத்துகிறது.
- முழுமையான தகவலை நேரடியாகவோ மறைமுகமாகவோ தருகிறது.
வரலாற்று வரைவியல்: (Historiography)
வரலாற்று வரைவியல் என்பது வரலாற்றை முறையாக எழுதுவது ஆகும். ஒரு குறிப்பிட்ட தகவல்கள், மூலங்கள், நுட்பங்கள், அணுகுமுறைகளைப் பயன்படுத்தி வரலாற்றை ஆராய்வதாகும்.
எ.கா: இந்தியாவின் வரலாற்று வரைவியல்
கனடாவின் வரலாற்று வரைவியல்
வரலாற்று வரைவியல் முதன்முதலாக வாய்மொழி பாரம்பரியமாக இருந்தது. அறிவொளி காலக்கட்டத்தில் இதன் வளர்ச்சி தொடங்கியது. வால்ட்டர் என்பவர் கலை மற்றும் அறிவியல் சாதனைகளை விளக்கி எழுதினார். பிரெஞ்சு புரட்சி காலக்கட்டத்தில் பகுத்தறிவு சார்ந்து எழுதப்பட்டது. 20-ம் நூற்றாண்டிலிருந்து பொதுமக்களுக்கான வரலாறு எழுதப்பட்டது.
வரலாற்று வரைவியலின் வகைகள்:
a) முதல் வகை:
Cambridge கேம்பிரிட்ஜ் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை பற்றி படிப்பது
b) Nationalist
இந்துக்களின் ஆட்சி, கலாச்சாரம் இவற்றை புகழ்ந்து படிப்பது.
c) Marxist
பொருளாதார வளர்ச்சி, நிலபிரபுத்துவம், வர்க்க முரண்பாடுகள் பற்றி படிப்பது.
d) Subultern
இது 1980-களில் வந்த வார்த்தை. அடித்தள மக்களின் வாழ்க்கை வரலாற்றை படிப்பதாகும். இது ஜெர்மானிய வார்த்தை இதன் பொருள் Secondary importants. முதன் முதலில் இந்த வார்த்தையை பயன்படுத்தியவர் Antanio Gramsci, Italian Communist writer. மக்களின் வாழ்வு பாடல்கள் பழமொழிகள் கலாச்சாரம் இவற்றை அடிப்படையாகக் கொண்ட வரலாறு.
வரலாற்று ஆராதங்கள் (அ) மூலங்கள்:
வராற்று ஆதாரங்களின் மூலம் கடந்த கால நிகழ்வுகளை புரிந்து கொள்ளவும், அவற்றோடு சரிபார்க்கவும் அதிலிருந்து அதிகமாக கண்டுபிடிக்கவும் தெரிந்து கொள்ளவும் உதவுகிறது.
அடிப்படை வரலாற்றை தெரிய உதவும் துப்புக் கொடுக்கும் சான்றாகும்.
1) Primary Sources: (மூல தகவல்கள் அல்லது முதற்கட்ட தகவல்கள்)
இது அந்தந்த காலக்கட்டங்களின் தகவல்களாகும்.
எ.கா: நிகழ்வு, நேர்முகம், புகைப்படங்கள், பழைய பொருட்கள், சித்திரங்கள், நாணயங்கள், கட்டிடங்கள் etc…
2) Secondary Source: (இரண்டாம் கட்ட தகவல்கள்)
எ.கா: எழுத்துக்கள், புத்தகங்கள், ஆவணங்கள்.
3) மூன்றாம் கட்ட தகவல்கள் (Tertiary)
எ.கா: பாடப்புத்தகங்கள்
உலக வரலாறு:
உலக அளவில் உள்ள வரலாற்றைத் தெரிந்து கொள்வது.
எல்லைகளை கடந்து சமயங்கள், கலாச்சாரஙகள், சித்தாந்தங்கள், பொருளாதாரம், அரசியல் இவற்றை பொதுவாக தெரிந்து கொள்வது உலக வரலாறு ஆகும்.
கிறிஸ்தவ வரலாறு:
கிறிஸ்தவ வரலாறு என்பது கிறிஸ்தவ சமயம், கிறிஸ்துவ நாடுகள் அவர்களின் பல்வேறு பிரிவுகளை பற்றி பேசுவது. இயேசு கிறிஸ்துவை பற்றியும், நற்செய்தி எவ்வாறு பரவியது என்பதை பற்றியும், இறையரசு பற்றியும் தெரிந்து கொள்வது.
2. ஆரம்ப கால கிறிஸ்தவம்
ஆரம்ப காலத்தில் பாலஸ்தீனா கிரேக்கர்களின் ஆட்சி கட்டுப்பாட்டிலும், ரோமர்களின் ஆட்சி கட்டுப்பாட்டிலும் இருந்து வந்தது. கி.மு 300-ல் யூதர்களில் பலர் பாலஸ்தீனாவை விட்டு அலெக்சாந்திரியாவில் குடியேறினார்கள். இங்கு தான் எபிரெய மொழியிலிருந்து கிரேக்க மொழியில் எழுதப்பட்ட செப்துவஜிந்து என்ற திருமறை உருவானது. பின்னர் பாலஸ்தீனாவில் சீரியரின் ஆட்சி ஏற்பட்டது.
நான்காம் அந்தியோகஸ்
- நான்காம் அந்தியோகஸ் என்பவர் நாட்டின் ஐக்கியத்திற்கு ஒரே மொழியும், ஒரே நாகரீகமும், ஒரே மதமும் தேவை என்று கூறினார்.
- யூத சமயத்தை அழிக்க வேண்டுமென்று கூறினார்.
- ஓய்வு நாளை அனுசரித்தல், விருத்தசேதனம் ஆகியவற்றைத் தடுத்தார்.
- நியாயப்பிரமாண நூல்களை அழிக்க உத்தரவிட்டார்.
- யூதர்களுக்கு அருவருப்பான பன்றிகளை பலியிட கட்டளையிட்டார்.
- யூதர்களை பிறசமய வழிபாடுகளில் கலந்து கொள்ள கட்டாயப் படுத்தினார்.
எனவே மிகுந்த எதிர்ப்பு ஏற்பட்டது. இவர் இறப்புக்கு பின் எருசலேம் வழிபாட்டு மனை தூய்மை செய்யப்பட்டு மங்களப்படைப்பு திருநாள் கொண்டாடப்பட்டது.
அதன் பின்னர் பாலஸ்தீனாவில் ரோமர் ஆட்சி ஏற்பட்டது. ரோமர்களின் ஆட்சிதான் அக்காலத்தில் உலகம் என்று எண்ணப்பட்டு இருந்தது. இந்த அரசின் எல்லைக்கு வெளியிலிருந்தவர்கள் எல்லாம் நாகரீகம் அற்றவர் என்று கருதப்பட்டனர். எல்லா நாடுகளையும் இவர்கள் ஒன்றாக இணைத்தனர். ஒரே இராணுவ ஒழுங்கு அனுசரிக்கப்பட்டது. நாடுகளுக்கிடையே உள்ள போர் நிறுத்தப்பட்டு அமைதி நிலவியது. ஆனால் யூதர்களுக்கு சற்று குழப்பமான சூழல் காணப்பட்டது. ஏனென்றால், மேசியாவின் நம்பிக்கை பற்றிய காரணத்தால் குழப்பத்தில் இருந்தனர்.
ரோம ஆட்சிக்குட்பட்ட எல்லா நாடுகளிலும் சாலைப் போக்குவரத்து வசதி இருந்ததால் அறிஞர்கள், கவிஞர்கள், ஆசிரியர்கள், வணிகர்கள் போன்றவர்கள் எல்லா பகுதிகளிலும் பயணம் செய்தனர். பவுலை போன்ற திருத்தூதுவர்கள் பாலஸ்தீனாவிலிருந்து ரோமுக்கு எளிதாக சென்று வந்தனர். கிரேக்க மொழியை அனைவரும் அறிந்திருந்தனர். கிரேக்க நாகரீகம் ரோம அரசின் எல்லா பகுதிகளிலும் பரவியிருந்தது. சாக்ரடிஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்றோரின் கருத்துக்கள் (எண்ணங்கள்) எல்லாப் பகுதிகளிலும் பரவ ஆரம்பித்தது.
எப்பிக்கூரியர், சினிக்ஸ் இவர்களின் கொள்கைகள், கோட்பாடுகள் அதிகமாக பரவின.
எப்பிக்கூரியர் கொள்கை “மனிதர்கள் எப்போதும் கவலை்கு இடங்கொடாமல் மகிழ்ந்திருக்க வேண்டும்“
சினிக்ஸ் கொள்கை “எதிலும் குறைகளை கண்டு மனநிறைவை காணாதவர்கள். ஆனால் இவர்கள் நீதியை விரும்புகிறவர்கள்.
இதை தவிர மறைபொருள் சமயங்களும் இருந்தன. இவை இயற்க்கையின் நிகழ்வுகளுடன் தொடர்பு பட்டதாயிருந்தன.
எ.கா: இலையுதிர் காலம் உலகின் அழிவை கொண்டு வரும் என நம்பப்படுவது.
மறைபொருள் சமயத்தின் வகைகள்:
1) பிரிகிரியாவின் சமயம்
2) எகிப்தியரின் சமயம்
3) கோதியாரின் சமயம்
4) மித்ராவின் சமயம்
ரோமர்களின் ஆட்சியில் அறநெறி ஒழுக்கமும் ஆன்மீக வாழ்வும் அசுத்தமாக இருந்தது. உரோமையர் 1:18-32 திருமொழிகளில் அவை விளக்கப்பட்டுள்ளது. இவர்கள் காலக் கட்டங்களில் சினகாக் எனும் வழிபாட்டுத் தலங்கள் அமைக்கப்பட்டன. யூதர்கள் இருந்தால் அங்கு ஒரு சினகாக் அமைக்கப்பட்டிருக்கும்.
ஓய்வு நாளில் வழிபாடுகள், பாடல்கள், நன்றி மன்றாட்டு, அருளுரை ஆகியவை நடைபெற்றன.
சதுசேயர்:
யூதர்களில் சதுசேயர் எனும் பிரிவினர் உலக ஆடம்பரத்தில் வாழ்ந்து வந்தனர். சமய பற்று அதிகம் அவர்களிடத்தில் இல்லை. நியாயப்பிரமாணத்தை பற்றிக் கொண்டனர். உடல் உயிர்த்தெழுதலை அவர்கள் ஏற்கவில்லை. அரசியல் கட்சியாக செயல்பட்டனர். பொதுமக்களால் இவர்கள் அதிகம் விரும்பப்படவில்லை.
பரிசேயர்கள்:
மற்றொரு பிரிவினர் பரிசேயர். இவர்கள் சமய பற்று உள்ளவர்கள். இவர்கள் உயிர்த்தெழுதல் மற்றும் மேசியாவை பற்றிய நம்பிக்கை கொண்டிருந்தார்கள். நீதிச் சட்டத்தில் கூறப்பட்ட நியமங்களை அப்படியே கடைபிடிக்க வேண்டுமென்று வலியுறுத்துபவர்கள். இவர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தனர். இவர்களின் அரசியல் கட்சியினரல்ல, வருங்கால நியாயத்தீர்ப்பை நம்பினார்கள்.
எசேனியர்:
இவர்கள் கி.மு. 2-ம் நூற்றாண்டிலிருந்து வாழ்ந்ததாக கூறப்படுகிறார்கள். இவர்கள் துறவறம் செய்து வாழ்ந்திருந்தார்கள். இவர்கள் தான் இஸ்ரவேலரில் மீதியாக இருப்பவர்கள் என்று நம்பினார்கள். உடன்படிக்கையை வலியுறுத்தினார்கள். நான்கு மேசியாக்களை எதிர்நோக்கினார்கள். முழுக்கு முனிவர் யோவான் இந்த பிரிவினை சார்ந்தவர் என நம்பப்படுகிறது.
பாலஸ்தீனாவிலிருந்து யூதர்கள் வியாபார நோக்குடன் பல தூர இடங்களுக்கு சென்றனர். குறிப்பாக அலைக்சாந்திரியா, சின்ன ஆசியாவிற்கும் சென்றனர். அங்கும் பல யூதர்கள் இருந்தனர். இயேசு பிறந்த நேரத்தில் பாலஸ்தீனாவிலிருந்த யூதர்களை விட ஐந்து மடங்கு அதிக யூதர்கள் வெளி இடங்களில் வாழ்ந்து வந்தனர். இவர்கள் ஆங்காங்கே வழிபாட்டுக் கூடங்கள் அமைத்து திருமறையில் வெளிப்படுத்தப்பட்ட கடவுளை பற்றி போதித்தனர். யூதர்களின் சமய உணர்வு, கிரேக்க கலையின் வளர்ச்சி, ரோம பேரரசின் ஆட்சி இந்த காலக்கட்டங்களில் இயேசு கிறிஸ்து பிறக்கின்றார்.
3. முதல் நூற்றாண்டில் கிறிஸ்துவம்:
திருச்சபையை உருவாக்கினவர் இயேசு கிறிஸ்து. இவருடைய சீடர்களின் முழுக் கூட்டமே திருச்சபையாகும். பொதுவாக திருச்சபை பெந்தெகோஸ்தே நாளில் உருவானது என்கிறார்கள். எருசலேமில் மேல் வீட்டில் சீடர்கள் ஒன்றாக இருக்கும் போது தூய ஆவியார் இறங்கினார். இதுவே திருச்சபையின் பிறந்த நாள் ஆகும்.
எருசலேமில் மட்டும் கிறிஸ்தவர்களின் ஐக்கியம் அதிகமாக இருந்தது. பேதுரு, யோவான், திருத்தூதரின் முயற்சியால் அது வளர்ந்து கொண்டே வந்தது. (திருத்தூதர்கள் 2:47). கிறிஸ்தவர்களுக்கு துன்பங்கள் பெருகிய போது எருசலேமிற்கும் வெளியே கிறிஸ்தவம் பரவ ஆரம்பித்தது. குறிப்பாக ஸ்தேவான் கல்லெறிந்து கொல்லப்பட்ட பின்பு சமாரியாவிலும், அந்தியோகியாவிலும் கிறிஸ்தவம் அதிகமாக பரவியது. முதன் முதலில் கிறிஸ்தவம் என்ற பெயர் அந்தியோகியாவில் வழங்கப்பட்டது. பின்னர் கிறிஸ்தவம் பிற இன மக்களிடையே பரவியது. பேதுரு, பவுல், பர்னபா ஆகியோரின் மூலம் பல சபைகள் உருவாகின.
திருச்சபையின் முதல் மன்றமான எருசலேம் மன்றம் கி.பி. 49-ல் கூட்டப்பட்டது. இதில் விருத்தசேதனம், தீட்டு, தூய்மை, விக்கிரகாராதனை போன்ற காரியங்கள் விவாதிக்கப்பட்டு முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. வேறு சமயத்தினரை யூ சமய சடங்குகளை செய்ய சொல்லி கட்டாயப்படுத்துவது தேவையற்றது என தீர்மானிக்கப்பட்டது.
பேதுரு பிற இன மக்களிடையே நற்செய்தி பணி செய்து ரோம் நகரில் கி.பி. 64-ல் நீரோ மன்னனால் சிறையில் அடைக்கப்பட்டு இரத்த சாட்சியாய் மரித்தார்.
பவுல் மூன்று பயணங்கள் செய்து பல சபைகளை நிறுவினார். இவரும் நீரோ மன்னன் காலத்தில் சிரச்தேதம் செய்யப்பட்டார்.
திருத்தூதர் யோவான் எபேசுவை மையமாகக் கொண்டு பல சபைகளை நடத்தினார். பின்பு தொமித்தியன் அரசனால் பத்மூ தீவுக்கு நடத்தப்பட்டு பின்னர் எபேசுக்கு வந்து தனது 100-வது வயதில் மரணமடைந்தார்.
மத்தேயு, யூதா - எத்தியோப்பியா அரேபியா நாடுகளுக்கு சென்று நற்செய்தியை அறிவித்தார்கள்.
திருத்தூதர் தோமா தென்னிந்தியாவிலுள்ள கேரளாவிற்கு வந்து நற்செய்தி பணி செய்து ஏழு சபைகளை நிறுவி பல நம்பூதிரி பிராமண குடும்பங்களை கிறிஸ்தவராக்கினார். இவர் கி.பி 72-ல் பரங்கிமலையில் குத்திக் கொல்லப்பட்டார். அவரது உடல் மயிலாப்பூரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கிறிஸ்தவ சமயத்திற்கு ரோம அரசால் ஏற்பட்ட துன்பங்களுக்கு காரணங்கள்:
கிறிஸ்தவ சமய முறைகளைப் பற்றி ரோம அரசு தவறான எண்ணம் கொண்டிருந்தது.
எ.கா: திருவிருந்து
- கிறிஸ்தவர்கள் உருவ சிலைகளையோ கடவுள்களையோ வணங்கவில்லை.
- பேரரசை வணங்கும் பழக்கமில்லை. எனவே இவர்கள் நாத்திகர்கள் என்று எண்ணினார்கள்.
- கிறிஸ்தவர்கள் ஒரு தனிக்கூட்டமாக வாழ்ந்து வந்தனர். கிறிஸ்தவர்கள் பிறரோடு சேர்ந்து வாழாததால் ரோமர்களை வெறுத்தனர்.
- கிறிஸ்தவர்கள் இராணுவத்திலும் அரசியலிலும் சேராமல் ரோம அரசாங்க சட்டங்களுக்கும் அரியணைக்கும் தங்களை ஒப்புக்கொடுக்காமலும் இருந்தனர்.
- இவர்கள் பிற சமய வழிபாட்டுமனைகளில் பலியிடும் பொருட்களை வாங்காததால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு வழிபாட்டுமனைகள் மூடும் நிலையில் இருந்தன.
- போர், நிலநடுக்கம், பஞ்சம் போன்றவை கிறிஸ்தவர்களால் உண்டாகிறது என்ற எண்ணம் இருந்தது.
- ரோம அரசை கைப்பற்றி விடுவார்கள் என்ற எண்ணமும் இருந்தது.
- இவர்கள் பிடிவாத குணமுடையவர்கள். எனவே, தங்கள் பற்றுறுதியில் விடாப்பிடியாக நிலைத்திருப்பார்கள் என்ற எண்ணம் இருந்தது.
துன்பத்தை ஏற்படுத்திய அரசர்கள்:
- நீரோ
- வெஸ்பெசியன்
- தொமித்தியன்
கிறிஸ்தவர்களின் வாழ்வு முறை:
- தொடக்கக் காலத்தில் அனைவரும் ஒரு குடும்பம் போல் வாழ்ந்து வந்தனர் (திருத்தூதர் பணிகள் 2:44,45).
- ஒரே மனமுடையவர்ளாய் இருந்தனர்.
- அப்பம் பிடுவதிலும், பகிர்ந்து உண்ணுவதிலும், அன்பை வெளிப்படுத்தினார்கள்.
- பெண்கள் ஆண்களுக்கு சமமாக கருதப்பட்டனர்.
- குழந்தைகள் கடவுளின் ஈவாக எண்ணப்பட்டனர்.
- ஏழைகள் ஆதரிக்கப்பட்டனர். எருசலேம் சபையில் ஏழைகளையும், கைம்பெண்களையும் ஆதரிக்கும்படி ஏழு உதவிக்காரர் நியமிக்கப்பட்டார்கள் (திருத்தூதர் பணிகள் 6:5). ஸ்தேவான், தீமோ, பர்னா, நிக்கோலா….
- சபையில் தர்ம பணத்தில் இருந்து ஏழைகளுக்கும் அநாதைகளுக்கும் உதவி செய்யப்பட்டது.
- கிறிஸ்துவினிமித்தம் துன்பத்தை சகித்துக் கொண்டனர்.
- திருமுழுக்கின் மூலம் சபையில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
- சிறுபிள்ளைகளுக்கு திருமுழுக்குக் கொடுக்கும் பழக்கமும் இருந்தது.
- பெரும்பாலும் யூதர்களே கிறிஸ்தவர்களாக இருந்ததால் சனிக்கிழமைகளை ஓய்வுநாளாக அனுசரித்தனர்.
- யூத வழிபாட்டு மனைகளில் வழிபட்டனர்.
- இயேசு கிறிஸ்துவை பற்றிய உயிர் உள்ள அனுபவமே முக்கியம் பெற்றது.
- கிறிஸ்துவின் இரண்டாம் வருகை விரைவாக வருமென்று நம்பினர்.
- அப்போஸ்தலர்களால் வல்ல செயல்கள் செய்யப்பட்டன.
- அவர்களே சபைகளுக்கு தலைவர்களாயும் இருந்தார்கள்.
- அவர்களின் போதனைகள் மூலம் சபைகளை வளர்த்தனர்.
- அவர்களுக்கு உதவி செய்ய நற்செய்தி பணியாளர்கள் இருந்தனர்.
குறைகள்:
ஒருசில குறைவுகளும் காணப்பட்டது. ஏழைகள் சரியாக கவனிக்கப்படவில்லை, கடவுளின் பங்கை வஞ்சித்தல் (அனனியா, சப்பிராள்), பவுலும் பர்னபாவும் சண்டையிட்டுக் கொள்ளுதல், உணவினை குறித்த சிக்கல்கள், யூத பிற இனத்தவர் என்ற வேறுபாடு போன்றவையும் இருந்தன. ஆனாலும் நற்செய்தி அதிகமாக பரவி எருசலேம், அந்தியோகியா, எபேசு, கொரிந்து, சமாரியா, யோப்பா, லித்தா, செசரியா, லீஸ்திரா, தெர்பா, இக்கோனியா, கொலெசே, பிலிப்பி, கொரிந்து, லவோதிக்கேயா, சீப்புரு, யூதேயா, எகிப்து போன்ற இடங்களில் சபைகள் பரவின.
4. இரண்டாம் நூற்றாண்டு கிறிஸ்தவம்:
இதில் திருச்சபையின் ஆட்சி சற்று வளர்ந்து இருந்தது. பேராயர், மூப்பர், உதவிக்காரர், திருச்சபை பணியாளர் என்ற நிலை இருந்தன. திருத்தூதர் எழுதின நூட்களை பாதுகாக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே
- நான்கு நற்செய்தி நூல்களும்
- திருத்தூதர் பணி நூல்களும்,
- 13 திருமுகங்களும்
- வேறு சில திருமுகங்களும்
விவிலியத்தில் இடம் பெற்றன. கிறிஸ்தவர்கள் சகோதர அன்புடன் ஒற்றுமையாக இருந்தார்கள். படங்களிலும், ஓவியங்களிலும் கிறிஸ்தவர்களின் வாழ்க்கை தரத்தை வெளிப்படுத்தினார்கள். இரத்த சாட்சிகளாய் மரித்தவர்களுடைய கல்லறைகளில் கிறிஸ்துவுக்காய் பாடுபட்டவர் என்ற அடையாளம் காணப்பட்டது. நல்ல மேய்ப்பர், திராட்சக் கொடி, நங்கூரம், மீன், கிரீடம் போன்ற அடையாளங்கள் பயன்படுத்தப்பட்டன. திருமுழுக்கு பெற்றுக்கொள்பவர்க்கு போதனைகள் கொடுக்கப்பட்ட பின்பே திருமுழுக்குக் கொடுக்கப்பட்டது.
திருவிருந்து வழிபாடு பாவ அறிக்கையுடன் தொடங்கப்பட்டது. மன்னித்தலும் சமாதானம் பகிரப்படுதலும் இந்த காலக் கட்டங்களில் இருந்தது. பொருட்கள் காணிக்கையாக படைக்கப்பட்டன. அப்பமும் பழரசமும் சபையாரால் கொண்டுவரப்பட்டன. அவற்றை ஆசீர்வதித்து அதை பயன்படுத்தினர். 2-ம் நூற்றாண்டின் இறுதியில் தான் வழிபடும் மனைகள் கட்டப்பட்டன. கைகளைக் கழுவி சுத்தம் செய்த பின் உள்ளே நுழைந்தனர். படங்களோ ஓவியங்களோ இந்த நூற்றாண்டில் காணப்படவில்லை. வாரத்தின் முதல் நாளாகிய ஞாயிற்றுக் கிழமை தூய நாளாக அனுசரிக்கப்பட்டது. ஆனால் அது வேலை நாளாக இருந்தது. புதன் கிழமையும் வெள்ளிக்கிழமையும் உண்ணா நோன்பு நாளாக அனுசரிக்கப்பட்டது. இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாள் ஒரு பெரிய திருவிழாவாக கொண்டாடப்பட்டது. ஆனால் கிழக்கு மேற்கு சபைகளில் மாறுபட்ட தேதிகளில் கொண்டாடப்பட்டது. கிழக்கு சபைகள் நிசான் மாதம் 14-ம் தேதியில் கொண்டாடினர். மேற்கு சபைகள் அதே நிசான் மாதம் 21-ம் தேதியில் கொண்டாடினர். இரத்த சாட்சிகளின் மரண நாள் நினைவு கூறப்பட்டது.
இரண்டாம் நூற்றாண்டில் உள்ள அரசர்கள் பெயர் ஆதிரியான், கிரேஜன், மார்க்கஸ் அரிலியு, கமோடஸ். இவர்கள் காலக்கட்டங்களில் அநேகர் இரத்த சாட்சிகளாக மரித்தனர்.
5. மூன்றாம் நூற்றாண்டு கிறிஸ்தவம்:
இந்த நூற்றாண்டில் ஆயர்கள் பொது நிலையிலிருந்து வேறுபடுத்தப்பட்ட நிலையை அடைந்தனர். பொதுவாக கூறுகின்ற பாவ அறிக்கை தனிநபர் பாவ அறிக்கையாக, அதாவது தனிநபரிடம் கூறுகின்ற முறையாக ஏற்பட்டது. எனவே, ஆயர்கள் மணம் புரியாமல் இருந்தால் நல்லது என்ற சிந்தனையும் ஏற்படுகிறது. உலகில் உள்ள பேராயர்கள் சந்தித்து கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். இந்த நூற்றாண்டில் சபையில் சடங்குகள் முழுமையாக வளர்ச்சியடைந்தன.
எ.கா:
- திருமுழுக்கு பெறும்முன் இரண்டு நாட்கள் உண்ணா நோன்பு இருத்தல்,
- வெள்ளை ஆடை அணிதல்,
- ஆசீர்வதிக்கப்பட்ட எண்ணையை தலையில் ஊற்றுதல்,
- திருமுழுக்கு பெற்ற பின் தேனும், பாலும் உண்ணுதல்
போன்றவையாகும். இரத்த சாட்சிகளுக்கு இறைவேண்டல் ஏறெடுக்கும் பழக்கம் இருந்தது. தூயவர்களின் திருச்சின்னங்கள் மரியாதைக்குரியவையாக கருதப்பட்டன.
இந்த நூற்றாண்டில் கிறிஸ்தவர்களை துன்பப்படுத்திய அரசர்கள் செப்டிமஸ் செவரஸ், தேசியு, வலேரியன், அரிலீயன், டயோக்ளிசியன்.
6. நான்காம் நூற்றாண்டு கிறிஸ்தவம்:
இந்த நூற்றாண்டில் கிறிஸ்துவுக்கும் அரசுக்கும் ஒரு உறவு ஏற்பட்டது. அதே சமயம் சபைகளுக்குள் பல தவறான போதனை, திரிபுக் கொள்கைகள் உருவாக ஆரம்பித்தது. பலர் ஆயர் பணிக்கு விரும்பி வந்தனர். ரோம பேராயர்களுக்கு அதிகாரமும், சுயாதீனமும் இருந்தன. கிறிஸ்து பிறப்பு, சிலுவையில் அறையப்பட்ட தினம், உயிர்த்தெழுந்த தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. திருமுழுக்கு பெறாதவர்களுக்கு மீட்பு இல்லை என்ற கருத்து ஏற்பட்டது. திருத்தூதர் பற்றுறுதி அறிக்கை வடிவத்திற்கு வர ஆரம்பித்தது. திருச்சபை பாடல்கள் உருவாக ஆரம்பித்தன. நிசேயா பற்றுறுதி அறிக்கை இந்த நூற்றாண்டில் தான் எழுந்தது. பெரிய வழிபாட்டு மனைகள் கட்டப்பட்டது. பெத்லகேம், எருசலேம், ரோம் போன்ற நகரங்களில் பேரரசின் அரண்மனைகளை விட சிறப்பாக வழிபாட்டு மனைகளை கட்டினர்.
இக்காலக்கட்டங்களில் அநேகர் கிறிஸ்தவராக மாறினார்கள். சபைகளின் எண்ணிக்கை அதிகரித்தது. அதே சமயம் பெயர் கிறிஸ்தவர்களும் அதிகமாக இருந்தனர். பல இடங்களில் சிலை வழிபாடு நடைபெற்ற இடங்கள் கிறிஸ்தவ வழிபாட்டு மனையாக மாறின.
மிலன் கட்டளைப் படிவம்: கான்ஸ்டன்டைன் (Edit of Milan)
ரோம பேரரசர் காண்ஸ்டன்டைன் கலேரியஸ் - மாக்சென்சியன் என்கிற அரசரோடு போரில் ஈடுபட்டார். இதில் கான்ஸ்டன்டைனின் படைவீரர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தனர். கான்ஸ்டன்டைன் வானில் ஒரு காட்சி கண்டார். வானில் சிலுவைக் காட்சியைக் கண்டார். “இதனால் வெற்றி பெறு“ என்ற சிந்தனை அவரின் உள்ளத்தில் எழுந்தது. கி.பி. 312-ல் (பொது ஊழி) நடைபெற்ற போரில் மெல்வியன் பாலம் எனும் இடத்தில் நடைபெற்ற போரில் காண்ஸ்டன்டைன் வெற்றி பெற்றார். மார்க்சென்சியன் போரில் தோல்வியுற்று மரணமடைந்தார். ரோமின் மேற்கு பகுதி கான்ஸ்டன்டைன் வசமாயிற்று. இதன் பின் கான்ஸ்டன்டைன் கிறிஸ்தவராக மாறினார். இவர் கிழக்கில் ஆட்சி நடத்திய லிசினியஸ் என்பவரோடு இணைந்து பொது ஊழி 313-ம் ஆண்டு ஒரு கட்டளைப் படிவத்தை வெளியிட்டார். அதற்கு மிலன் கட்டளை படிவம் என்று பெயர் (Edict of Milan). இதன் அடிப்படையில் கிறிஸ்துவ சமயம் அரசு சமயம் (State Religion) ஆயிற்று. கி.பி. 323-ல் லிசினியஸ் கான்ஸ்டன்டைனிடம் தோற்றார். ரோம் முழுவதுமாக கான்ஸ்டன்டைன் வசமானது. இவர் காலத்தில் கிறிஸ்தவர்களுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டது. அவர்களிடமிருந்து பிடுங்கப்பட்ட சொத்துக்கள் திரும்பி கொடுக்கப்பட்டன. முதல் கிறிஸ்தவ பேரரசர் இவரே.
காண்ஸ்டன்டைன் காலத்தில்.
- ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது.
- படைவீரர்களின் கேடகங்களில் “XP" என்ற கிரேக்க எழுத்துகள் பொறிக்கப்பட்டன. (XP - கிறிஸ்து என்பதைக் குறிக்கிறது)
- அடிமைகளை சிலுவையில் அறைந்து கொல்லும் பழக்கம் நிறுத்தப்பட்டது.
- சிறு குழந்தைகளை தூக்கி வீசுகின்ற பழக்கத்தை தடுத்து நிறுத்தினார்.
- அனாதை குழந்தைகளுக்கு அரசே ஆதரவு அளித்தது.
- கடனை செலுத்த முடியாதவர்கள் மீது தீக்குறியிடல் தடுத்து நிறுத்தப்பட்டது.
- திருமணம் செய்யாமல் இருக்க செலுத்த வேண்டிய வரி நீக்கப்பட்டது.
- சமூகத்தில் கிறிஸ்தவர்கள் செல்வாக்கோடே காணப்பட்டனர்.
- அரசின் நிதியிலிருந்து திருச்சபைகளுக்கு நன்கொடைகள் வழங்கப்பட்டன.
- சிற்பக்களை ஆரம்பமானது.
- கிறிஸ்தவ ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர்.
- சிலை வணக்கம் தடுத்து நிறுத்தப்பட்டது.
- பிற சமய வழிபாட்டு ஸ்தலங்கள் கிறிஸ்தவ வழிபாட்டு மனைகளாக மாற்றப்பட்டன.
நான்காம் நூற்றாண்டில் துறவறம்:
துறவறம் வளரக் காரணங்கள்:
- இந்த நூற்றாண்டில் கிறிஸ்துவம் அதிகமாக பரவியதால் மக்களிடையே பற்றுக் குறைய ஆரம்பித்தது.
- பலர் தங்களை விசுவாசத்திற்காக சாட்சி பகிர துன்பம் தேவையென ஒப்புக்கொடுத்தனர். இதன் மூலம் உடலை வருத்த ஆரம்பித்தனர்.
- கி.பி. 313-க்கு பின் கிறிஸ்தவர்களுக்கான துன்பக்காலம் முடிவடைந்தது. எனவே ஆவியில் அனலற்ற வாழ்வு வாழ்ந்தனர். இவ்வுலக பற்று அதிகமாகக் காணப்பட்டது. பலர் பெயர் கிறிஸ்தவர்களாக இருந்தனர். பலர் தவறான காரணங்களுக்காக கிறிஸ்தவத்தைத் தழுவினர்.
- ஆண்டவரின் இரண்டாம் வருகையைக் குறித்து எதிர்பார்ப்பு அதிகமாக இருந்ததால் பலர் பாலை வனங்களிலும் குகைகளிலும் தங்கி காத்திருந்தனர்.
- அலெக்சாந்திரியாவின் கல்வி சாலையில் “உன்னை அறி“ என்ற கிரேக்கத் தத்துவம் அதிகமாக பரவியதால் மக்கள் தன்னை வெறுப்பதன் மூலம் மெய்யுணர்வை அடைய முடியும் என்று கருதினர்.
- கிறிஸ்துவின் போதனையான மத்தேயு 16:24 தன்னைத் தான் வெறுத்து… இந்த வசனங்கள் துறவறத்தைக் கடைபிடிப்பதாலே ஆண்டவரைப் பின்பற்ற முடியும் என்று எண்ணி துறவறத்தை மேற்கொண்டனர்.
- பாலை நிலங்களும் குகைகளும் தீய சக்திகளின் இருப்பிடம் என எண்ணப்பட்டதால் அவைகளை வெற்றி கொள்ள துறவறம் பின்பற்றினர்.
- சபைகளிலும் நாட்டிலும் கட்டுப்பாடுகள் இல்லாததால் பலர் துறவறம் என்ற கட்டுப்பாட்டின் மூலம் கடவுளோடு தொடர்புக் கொண்டனர்.
- கிறிஸ்தவர்களின் அறவாழ்வு மிகவும் மோசமாக இருந்ததால் அவற்றிலிருந்து விலகி தனிமையில் வாழ்வது சிறந்ததெனக் கருதினர்.
துறவிகளின் மூன்று பிரிவுகள்:
1) தனித்து வாழ்ந்த துறவிகள்:
இவர்கள் பாலை நிலங்களிலும் குகைகளிலும் வாழ்ந்தனர்.
எ.கா:
1) அந்தோணி:
இவர் எகிப்தில் பிறந்தவர். தம் உடைமைகளில் ஒரு பாகத்தை தம் சகோதரிக்குக் கொடுத்து விட்டு மீதியை ஏழைகளுக்கும் கொடுத்துத் துறவியானார். தன்னுடைய 35-ஆம் வயதில் ஒரு பாழடைந்தக் கோட்டைக்குள் நுழைந்து இருபது ஆண்டுகளாய் ரொட்டி, தண்ணீரை உட்கொண்டு வாழ்ந்தார். பின்னர் அவ்விடத்தை விட்டு வெளியேறி பல போதனைகள் செய்தார். பலர் இவருடைய சீடர்களாக மாறினார்கள்.
2) சீயோன்:
இவர் ஒரு குகையில் தமது வலது காலைக் சங்கிலியால் கட்டிக்கொண்டு வாழ்ந்து வந்தார். இந்த சங்கிலி காலில் படாமல் இருக்க தோலினால் ஆன ஒரு பட்டையைச் சுற்றியிருந்தார். அதில் மூட்டைப்பூச்சிகள் இருந்தன. அதை கூட அவர் தடைசெய்யவில்லை. இவர் 40 முழம் உயரமுள்ள ஒரு தூணின் உச்சியில் வாழ்ந்து வந்தார். அதிலிருந்து விழாதிருக்க ஒரு கூடு செய்து வைத்திருந்தார்.
3) பியோர்:
இவர் 50 ஆண்டுகளாக தம் உறவினர்களைக் காணாமல் வாழ்ந்து வந்தார். அவருடைய சகோதரியைக் காண மறுத்து கண்களை மூடிக்கொண்டார்.
4) அப்பல்லோ:
தந்தையின் இறுதிசடங்கில் கலந்துக் கொள்ள மறுத்தார்.
5) சிரொயெஸ்:
தூக்கம் வராதபடிக்கு ஒரு செங்குத்தான பாறையில் வசித்து வந்தார்.
2) குழுக்களாய் வாழ்ந்தத் துறவிகள்:
இதை அறிமுகப்படுத்தியவர் எகிப்தைச் சேர்ந்த பக்கோமியஸ். இவர் நைல் நதிக் கரையில் ஒரு துறவி மடத்தை நிறுவினார். அதில் சிறுசிறுக் குழுக்களாய் துறவிகள் வாழ்ந்து வந்தனர். அங்கு சில சட்டதிட்டங்களையும் பின்பற்றினர். ஒரேவிதமான ஆடைகளை அணிந்தனர். கூட்டு வழிபாட்டில் பங்கு பெற்றனர். லெந்து நாட்களில் 5 நாட்களுக்கு ஒரு முறை உணவு உட்கொண்டனர். இவருடைய மரணத்திற்கு பின் பல இடங்களில் ஆண்களுக்கான துறவி மடங்களும் பெண்களுக்கான துறவி மடங்களும் தோன்றின.
3) நிறுவினத் துறவிகள்:
இதை நிறுவியவர் பேசில். ஊர் சிசேரியா. இவர்கள் வழிபாட்டிலும் உணவு உட்கொள்வதிலும் சேர்ந்தே வாழ வேண்டும். உடலை வருத்திக் கொள்வதற்குப் பதில் பணி செய்வதில் கவனம் செலுத்தினர். மக்கள் அதிகமாக இருக்கும் பகுதிகளுக்கு அருகில் தங்கியிருக்க வேண்டும். துறவி மடங்களில் நூலகங்கள் அதிகமாக இருந்தன. அதில் இருந்த அறிவைப் பெற்றுக் கொண்டு சிறந்த மாணவர்களை உருவாக்கினார்கள்.
நன்மைகள்:
- உலக சிந்தையில் அதிகமாக கவரப்பட்ட திருச்சபைகள் தங்களைத் திருத்திக்கொண்டன.
- துறவி மடங்களில் அறிவு பெருக்கமும் கல்வி வளர்ச்சியும் ஏற்பட்டது.
- சிறந்த ஆயர்களையும் பேராயர்களையும் உருவாக்கியது.
திரிபு கோட்பாடுகள்
கிளமண்ட் மற்றும் அலெக்சாண்டர் இதை அதிகமாக எதிர்த்தவர்
1. அறிவுநெறிக் கோட்பாடு:
அறிவுநெறிக் கோட்பாடு என்பது கிரேக்கத் தத்துவத்திலிருந்து வந்த கோட்பாடு ஆகும். கிரேக்க வார்த்தையான “NOSIS” என்றால் ஞானம் என்று பொருள். கிரேக்கத் தத்துவ ஞானிகளான பிளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்றவர்கள் தங்களுடைய தத்துவத்தில் ஞானத்தை அதிகமாக முக்கியத்துவப்படுத்தினர். இந்த போதனைகள் திருச்சபையையும் பாதித்தன. இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டுகளில் இக்கொள்கை திருச்சபையை அதிகமாக பாதித்தது. பல தத்துவ ஞான நூல்களிலிருந்து பல போதனைகளைத் திரட்டி கிறிஸ்து போதனைகளோடு இணைத்துப் போதித்தனர்.
தீமோத்தேயு, தீத்து நிருபங்களில் யூத சமய அறிவு நெறிக் கோட்பாட்டிற்கான எச்சரிப்பு வசனங்களைக் காணலாம். (2 தீமோத்தேயு 2:8,9, 2 தீமோத்தேயு 3:14-16).
மனித புலங்களால் எளிதாக அடைய முடியாத ஞானத்தை அடையும் பொழுது மனித ஆன்மா இந்த பருப்பொருளான உலகத்திலிருந்து விடுதலைப் பெறுகிறது. உலகம் நேரடியாக கடவுளால் படைக்கப்பட்டது அல்ல. சிறுசிறு இடைநிலைக் கடவுள்களால் உருவாக்கப்பட்டது. இக்கோட்பாடும் 3-ம் நூற்றாண்டுகளில் திருச்சபையை பலமாகப் பாதித்தது.
இவர்களின் மூன்று பிரிவு:
1) சீரிய அறிவுநெறிக் கோட்பாடுகள்
2) எகிப்திய அறிவு நெறிக் கோட்பாடுகள்
3) பொந்து அறிவு நெறிக் கோட்பாடுகள்
1) சீரிய அறிவு நெறிக் கோட்பாடுகள்:
சீமோன், டேனியன், பார்டைசான் ஆகிய தலைவர்கள் இருந்தனர்.
சீமோன்
சீமோன் [(மாயவித்தைக்காரணாகிய சீமோன்) திருத்தூதர் பணிகள் 8-ம் அதிகாரம்] கூறுவது, எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு சக்தி உண்டு, அதோடு ஒரு பெண்சக்தியும் உண்டு. இந்த பெண் சக்தியின் மூலம் தான் தூதர்களும் தலைமைத் தூதர்களும் படைக்கப்பட்டன. இவர்கள் இந்த உலகில் தீமையை உண்டுப் பண்ணி பெண் சக்தியை விண்ணிற்குப் போகவிடாமல் பூமியிலேயே இருக்க செய்து விட்டனர். இந்த சக்தி சீமோனில் தோன்றி அவருக்குள் வெளிப்பட்டது.
டேனியன்
டேசியன் என்பவர் கடவுள் உன்னதமானப் படைப்பாளி அல்ல, இவருக்குக் கீழானக் கடவுள் ஒருவரே உலகத்தைப் படைத்தார். இவர் எழுதிய நூல் ”டியா தெஸ்சரான்” இந்நூலில் நான்கு நற்செய்தி நூல்களில் வருகின்ற தாவீதின் குமாரன் இயேசு கிறிஸ்து என்கிற பதத்தை எடுத்துவிட்டு ஒன்றாய் தொகுத்து அல்லது இணைத்து வெளியிட்டார். பல சீரிய சபைகளில் இந்நூல் பயன்படுத்தப்பட்டு வந்தது.
சீரிய பிரிவில் பாம்மை வணங்கியவர்களும் உண்டு. இவர்களை நாகப்பக்தர் என்று அழைத்துக் கொண்டனர்.
காயீனர் என்ற பிரிவு காயீனைப் போன்றத் தீய மனிதர்கள் உலகத்தின் மீட்பைத் தள்ளிப் போட்டதால் மனுக்குலம் மீட்படைய பல்வேறு அனுபவங்கள் அவசியம் என்றுப் போதித்தனர்.
2) எகிப்திய அறிவு நெறிக் கோட்பாடு:
இதற்கு தலைவர்கள் வேலன்டினஸ், பேசிலிடஸ், எப்பிபேனஸ்.
30 எயோன்கள் இவ்வுலகில் உண்டென்றும் இவைகளுக்குள்ளே குழப்பம் இருந்ததால் 16-ஆம் ஜோடி உண்டாக்கப்பட்டது. அது கிறிஸ்துவும் தூய ஆவியரும் என்று போதித்தார். மனிதர்களில் மூன்று வகை உண்டு. அவை:
i) சட மனிதர்,
ii) மனோதத்துவ மனிதர்,
iii) ஆவிக்குரிய மனிதர்.
i) முதல் வகை மனிதர் அதாவது சடமனிதர் மீட்கப்பட முடியாது.
ii) மனோதத்துவ மனிதர் மற்றவர் உதவியினால் மீட்கப்பட்ட முடியும்.
iii) ஆவிக்குறிய மனிதர் ஏற்கனவே மீட்கப்பட்டார்கள்.
பேசிலிடஸ்:
கிறிஸ்து பாடுபட்டது வெறும் தோற்றமே. கிறிஸ்து கல்வாரிக்குப் போகும் போது சிரேனே ஊரானாகிய சீமோன் அவர் சிலுவையை எடுத்துக்கொண்டு அவருக்குப் பதிலாக அறையப்பட்டார்.
3) பொந்து அறிவு நெறிக் கோட்பாடு:
இதன் தலைவர் மார்சியன். இவர் பழைய ஏற்பாட்டின் கடவுள் பழிவாங்கும் கடவுள். அவர் யூதர்களின் கடவுள். நீதி சட்டத்தை வழங்கிய கடவுள். எனவே, கிறிஸ்தவர்கள் பழைய ஏற்பாட்டுக் கடவுளையும் பழைய ஏற்பாட்டையும் தள்ளிவிட வேண்டும். கிறிஸ்து ஒரு தோற்றி வெளிப்பாடு அவருக்கு பிறப்போ வளர்ச்சியோ மரணமோ கிடையாது. புதிய ஏற்பாட்டில் கிறிஸ்துவை மனிதர் என்று கூறும் எல்லா பகுதிகளையும் எடுத்துவிட்டு ஒரு புதிய நூலை உருவாக்கினார். இதில் லூக்கா நற்செய்தி நூலையும், பவுலின் 10 திருமுகங்களையும் சேர்த்திருந்தார்.
இதன் தவறுகள்:
- கடவுளைப் பற்றி பல தவறான எண்ணங்கள் புகுத்தப்பட்டன. இக்கடவுள் எல்லாவற்றிற்கும் மேலானவர் அல்ல என்றும், உலகத்தைப் படைத்தவர் அல்ல என்றும் புரிந்து கொண்டனர்.
- கடவுளிடமிருந்து ஏயோன்கள் புறப்பட்டது என்பது திருமறைக்கு விரோதமானது.
- கிறிஸ்து ஒரு தோற்றம் என்பது தவறான கருத்து.
- மீட்பு என்பது பாவத்திலிருந்து தான் அறிவிலிருந்து அல்ல, ஆனால் அவர்கள் இதை தவறாக புரிந்து கொண்டனர்.
- மூன்று வகை மனிதர் என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது ஆகும்.
- இவ்வுலகம் தீமையானது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது ஆகும்.
திருச்சபையில் இதன் தாக்கங்கள்:
- இந்த தீயப்போதனைகளை எதிர்த்து உண்மையை நிலைநாட்ட பல நூல்கள் எழுதப்பட்டன. கெஸ்டின் மார்ட்டையர், கிளமெண்ட் அலெக்சாந்திரியா, தெர்த்துல்லியன், ஐரேனியஸ், ஹிபோலிட்டஸ் ஆகியோர் எதிரித்து பல நூல்களை எழுதினர்.
- மாசியன் நூலை வெளியிட்டபோது திருச்சபை பற்றுறுதிக்குத் தேவையான நூல்களை வெளியிட்டது.
- அப்போஸ்தலர் போதனைகளைக் கொண்ட சபைகளே கத்தோலிக்க சபைகள் என அழைக்கப்பட்டன.
முடிவுரை:
இயேசு கிறிஸ்துவையும் அவருடைய போதனைகளையும் மையமாகக் கொள்ள வேண்டும். கடவுளே படைப்பாளர். கிறிஸ்து மெய்யான மனிதர், மெய்யான கடவுள் ஆதாரம் அல்ல. மீட்பு என்பது பாவத்திலிருந்து மட்டுமே. கிறிஸ்துவில் வைக்கும் நம்பிக்கையே மீட்புக்கு முக்கியமானது. கிறிஸ்துவ சமயம் எல்லோர்க்கும் உரியது.
2. அரியு கோட்பாடு: (5 Mark Question)
இயேசுவின் தெய்வத் தன்மையை கேள்வியாக்கினார்
அரியு என்பவர் நான்காம் நூற்றாண்டில் அலெக்சாந்திரியாவில் இருந்த பாதிரியார் ஆவார். இயேசுவின் தெய்வீகத் தன்மையை இவர் மறுத்தார். இயேசு கிறிஸ்து தந்தையாகிய கடவுளைப் பற்றி நேரடியாக அறிந்திருக்கவில்லை. இவர் மற்ற படைப்புகளைப் போன்றவர். கடவுளின் தன்மை என்பது அவருடைய பட்டப் பெயர் ஆகும். லோகாஸ் என்ற வார்த்தையை இவர் எடுத்துப் பயன்படுத்துகிறார். இவருடைய நூல்கள் தலியா, பான்குவெட், கடவுள் நித்தியமானவர். ஆரம்பம் இல்லாதவர் உண்மையானவர். சாவாமையுடையவர். அவருடைய இயல்பு பகிர்ந்துக் கொடுக்கக் கூடியதல்ல.
வார்த்தைக்கு ஒரு ஆரம்பம் இருந்திருக்க வேண்டும். அவர் (இயேசு) இல்லாதக் காலம் ஒன்று இருந்தது. “There was time when he is not”. இவர் நீதிமொழிகள் 2:22, திருப்பாடல்கள் 2:36, உரோமையர் 8:29, கொலோசெயர் 1:15. இந்த வசனங்களைப் பயன்படுத்தி இந்த கருத்துக்களை விளக்கினார். இவர் பொது ஊழி 321-ல் குற்றவாளியாக தீர்ப்பு இடப்பட்டு சபையிலிருந்து விலக்கப்பட்டார்.
3. அப்பொல்லினேரியனிஸம் கோட்பாடு:
அப்பொல்லினேரியஸ் என்பவர் கிறிஸ்து ஒரு முழு மனிதர் அல்ல. இயேசு கிறிஸ்து பாவம் செய்ய இயலாதவராக இருந்தார். அவரில் மனித சிந்தைக்கு பதிலாக தெய்வீக வார்த்தை குடியிருந்தது. இவர் கிறிஸ்துவின் மனிதத் தன்மையைத் தவிர்க்கிறார். இவர் லவோதிக்கேயாவின் ஆயர் ஆவார்.
4. மானிக்கேயமிசம் கோட்பாடு:
இதை மானி என்பவர் தோற்றுவித்தார். 3-ம் நூற்றாண்டில் பெர்சியாவில் தோற்றுவிக்கப்பட்டது. இது ஒரு இருமைக் கோட்பாடு ஆகும். நன்மைக்கும் தீமைக்கும் இடையிலுள்ள போராட்டமே இருளுக்கும் ஒளிக்கும் உள்ள போராட்டம் ஆகும்.
5. நெஸ்தோரியனிசம் கோட்பாடு:
நெஸ்தோரியஸ் என்பவர் தோற்றுவித்தார். இவர் அந்தியோகியாவைச் சார்ந்தவர். இவர் கான்ஸ்டான்டி நோபலின் பேராயர் ஆவர். இயேசு கிறிஸ்து யார் என்பதை இவர் விளக்குகிறார். கிறிஸ்துவின் இயல்பு மனித இயல்பே என்கிறார். கிறிஸ்துவின் மனிதத் தன்மை தெய்வீகத் தன்மை தனித்தனியானது. இயேசு கிறிஸ்து இறைத் தன்மையோடு பிறக்கவில்லை. பிறந்த பின்பு தான் இறைத்தன்மைக்கு உயர்த்தப்பட்டார்.
Christokos – கிறிஸ்துவைத் தாங்குபவர் மரியாள் கிறிஸ்துவின் தாய் என்கிறார். எபேசு, கால்சிதோன் மன்றங்கள் இதை கடுமையாக எதிர்த்தன. நெஸ்தோரியஸ் சபைக்கு புறம்பாக்கப்பட்டு எகிப்திற்கு நாடு கடத்தப்பட்டார்.
6. மொந்தேனுக் கொள்கை: (5 Mark Question)
இக்கோட்பாட்டை மொந்தேனு என்வர் தோற்றுவித்தார். சின்ன ஆசியாவில் இக்கொள்கை தோற்றுவிக்கப்பட்டது. 2-ஆம் நூற்றாண்டில் இக்கொள்கையை ஏற்படுத்தினார். கடவுளின் வெளிப்படுத்துதல் திருத்தூதுவர் காலத்துடன் முடிவடையவில்லை. முழுமையாகவும் இல்லை. முழுமையான வெளிப்படுத்துதல் இனிவரும் காலத்தில் தான் இருக்கும். கடவுள் இக்காலத்தில் நேரடியாகப் பேசுவார். தூய ஆவியார் மொந்தேனுவிடம் பேசுகிறார் என்றும் கூறினார். இவருடைய அடியார்கள் அவரே தூய ஆவியார் என்று கூறினார்கள். இவருடைய குழுவில் பிரிஸில்லா, மேக்ஸ்மில்லா என்ற இரு பெண்கள் இடம்பெற்றிருந்தனர். இவர்கள் இருவரும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள். கிறிஸ்துவின் இரண்டாம் வருகை விரைவில் இருக்கும் என்றும், பிரிகியாவில் உள்ள பெப்பூசா என்ற நகரில் இருக்குமென்றும் போதனைக் கொடுக்கப்பட்டது. பலர் தங்கள் சொத்துக்களை விற்று பெப்பூசா நகரில் துறவறம் மேற்கொண்டனர். எனவே மொந்தேனு இயக்கத்தின் தலைமையிடமாக பெப்பூசாவாக மாறியது. மொந்தேனுவின் இறப்பிற்குப் பின் இவரைப் பின்பற்றியவர்கள் அதிகமாக துன்புறுத்தப்பட்டனர். சிலர் அவருடைய வழிபடுமனைகளில் கூடி தங்களுக்கு தாங்களே தீ வைத்துக் கொண்டு மாண்டனர்.
இவர் உபதேசத்தால் திருச்சபையில் ஏற்பட்ட தாக்கங்கள்:
1. தூய ஆவியார் தங்களுக்கு மட்டுமே அருளப்பட்டிருப்பதாகக் கூறினார்கள். இதனால் ஆவியரின் அருட் கொடைகளைப் பற்றி பல தவறான புரிதல்கள் ஏற்பட்டன.
2. இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை குறித்து திட்டமாகக் கூறுவது இயலாது.
3. திருமணம் கண்டிப்பாக கூடாது என்பதை எதிர்த்தனர்.
4. அருட்பொழிவுப் பெற்றவர்கள் மட்டுமே அருளுரைகள் வழங்க வேண்டும்.
5. புதிய ஏற்பாட்டில் இருக்க வேண்டிய நூல்களைத் திட்டமிடுதலின் அவசியத்தை திருச்சபை உணர்ந்தது.
நான்கு பொது மன்றங்கள்:
(Eunumical Councils)
இறையியல் சிக்கல்களை விவாதிக்க இந்த மன்றங்கள் உருவாக்கப்பட்டன.
1) நிசேயா மாமன்றம் - கி.பி. 325
2) கான்ஸ்டாண்டி நோபல் - கி.பி. 381
3) எபேசு - கி.பி. 431
4) கால்சிதோன்- கி.பி. 451
1) நிசேயா மாமன்றம்: (கி.பி. 325)
கான்ஸ்டாண்டைன் I என்ற அரசர் இந்த மன்றத்தை கூட்டினார். இது திருச்சபையின் முதல் பொது ஆலோசனை சங்கம் ஆகும். இந்த மன்றமானது கி.பி. 325 ஆண்டு மே 20 முதல் ஜூன் 19 வரை நடைபெற்றது. ஏறத்தாழ 300 பேராயர்கள் பங்கேற்றனர்.
அறியுக் கொள்கை அங்கு வாதிடப்பட்டது. கிறிஸ்துவின் தெய்வீக தன்மையை வெளிக்காட்டுவதற்கு வார்த்தை என்ற சொல்லுக்கு பதிலாக குமாரன் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. "தந்தையின் ஒரே தன்மையுடையவர்" என்ற வாசகமும் சேர்க்கப்பட்டது. இம்மன்றத்தில் இயேசுவின் தெய்வீகத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டது.
அரியுவின் போதகம் தவறென தீர்ப்பிடப்பட்டது. அவர் சபையில் இருந்து விலக்கப்பட்டார். அவரது நூல்கள் சுட்டரிக்கப்பட்டன. இம்முடிவுகளை எடுப்பதற்கு பேராயர் அலெக்சாண்டர் அவரது உதவியாளர் அதனாசியஸ் போன்றவர்கள் உதவி செய்தனர்.
இம்மன்றத்தில் வேறு காரியங்களும் ஆலோசிக்கப்பட்டன. உயிர்த்தெழுந்த திருநாள் ஞாயிற்றுக்கிழமையில் கொண்டாடப்பட வேண்டும் என்றும், பேராயர் திருநிலைப்படுத்துதலுக்கு மூன்று பேராயர்கள் இருக்க வேண்டும் என்றும், ஆண்டிற்கு இரண்டு மன்றங்கள் நடத்த வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
2) கான்ஸ்டான்டி நோபல் (கி.பி. 381)
இம்மன்றமானது கி.பி. 381 இல் கான்ஸ்டாண்டி என்ற இடத்தில் கூடியது. இதில் நிசேயா பற்றுறுதி அறிக்கை உறுதி செய்யப்பட்டது. நாம் இப்போது திருச்சபைகளில் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பற்றுறுதி அறிக்கை இங்கு தான் முடிவு செய்யப்பட்டது.
இம்மன்றத்தை தியோடோசியஸ் I என்பவர் கூட்டினார். தீமோத்தேயு அலெக்ஸாண்ட்ரியாவில் இருந்தும், மெடிட்டஸ் அந்தியோகியாவிலிருந்தும், கிரகோரி நாசியான்னஸிலிருந்தும், நெட்டோரியல் கான்ஸ்டாண்டி நோபலில் இருந்தும் வந்து இந்த மன்றத்தை தலைமை தாங்கினார்கள்.
இதில் 150 நபர்கள் கலந்து கொண்டனர். இதில் மாசிதோனியாக் கொள்கை கண்டனம் செய்யப்பட்டது. அப்பொல்லினேரிய கொள்கையும் தவறான தீர்ப்பிடப்பட்டது. மேலும் இம்மன்றத்தில் கான்ஸ்டாண்டி நோபல் ரோம அரசுக்கு அடுத்ததாகவும் மூன்றாவதாக அலெக்சாந்திரி யாவும் நான்காவதாக அந்தியோகியாவும் இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
a) ரோம்
b) கான்ஸ்டாண்டி நோபல்
c) அலெக்சாந்திரியா
d) அந்தியோகியா
3) எபேசு மன்றம் (கி.பி. 431)
எபேசு என்ற இடத்தில் கி.பி. 431-ல் இந்த மன்றம் நடைபெற்றது. இம்மன்றத்தை தியோடோசியஸ் II என்கிற பேராயர் தலைமை தாங்கினார். இதில் 150 பேராயர்கள் கலந்து கொண்டார்கள். சிரில் என்கிற பேராயர் நெஸ்தோரியசின் போதனைகளை சுட்டிக்காட்டி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். ஆனால் ஒரு சில பேராயர்கள் நெஸ்தோரியஸ்க்கு ஆதரவும் தெரிவித்தனர். ஆனால் நெஸ்தோரியஸ் குற்றம் சாட்டப்பட்டு எகிப்துக்கு நாடு கடத்தப்பட்டார். பெலேஜியஸ் எஸ் கொள்கையும் இதில் விவாதிக்கப்பட்டது.
4) கால்சிடோன் மன்றம்: (கி.பி. 451)
இம்மன்றம் அக்டோபர் 8-ஆம் தேதியில் இருந்து நவம்பர் 1-ம் தேதி வரை நடைபெற்றது. இம்மன்றத்தில் 520 பேரார்கள் கலந்து கொண்டனர். பேராயர் மார்சியன் இம்மன்றத்தை கூட்டினார். இம்மன்றத்தில் கிறிஸ்துவின் இறை தன்மையும், மனிதத் தன்மையும் குறித்து விவாதிக்கப்பட்டது. யூத்திகு என்பவர் இவ்வாக்குவாதத்தை ஆரம்பித்து வைத்தார். இதில் ரோம பேராயரான லியோ I எல்லா கருத்துக்களை சுருக்கி "கிறிஸ்தவ கோட்பாட்டு சுருக்கம்" என்ற அறிக்கையை வெளியிட்டார். கிறிஸ்துவின் மனிதத் தன்மையும், தெய்வீக தன்மையும் எந்தவித குழப்பமும் பிரிவும் இல்லாமல் இசைந்திருக்கின்றன. இயேசு கிறிஸ்து மெய்யான கடவுளும், மெய்யான மனிதனும் ஆவார் என உறுதி செய்யப்பட்டது. இம்மன்றத்தில் நீசேயா பற்றுறுதி அறிக்கை மீண்டும் உறுதி செய்யப்பட்டது.
இடைக்காலம்:
கி.பி. 451 முதல் 1517 வரை உள்ள காலம் இடைக்காலம் என்று அழைக்கப்படுகிறது. இந்தக் காலகட்டங்களில் ஐரோப்பாவில் கிறிஸ்தவம் அதிகமாக பரவ ஆரம்பித்தது. பல துறைகளில் மறுமலர்ச்சி ஏற்பட்டது. குறிப்பாக கல்வியில், இறையியல் சிந்தனைகளில் மறுமலர்ச்சி ஏற்பட்டது. துறவற இயக்கமும் அதிகமாக வளர்ந்தது. ஐரோப்பாவில் பல துறவற மடங்கள் தோன்றின. துறவிகள் பெரும்பாலான நாடுகளில் கிறிஸ்தவத்தை பரப்பினர். தியாகம், தூய்மை, கீழ்ப்படிதல் போன்ற பண்புகளை கிறிஸ்தவர்கள் பின்பற்றினர்.
கி.பி 451-க்கு பின் திருச்சபையில் பல பிரிவுகள் ஏற்பட்டன.
- ரோமைத் தலைநகராகக் கொண்டு மேற்கு பிரிவாகவும்,
- கான்ஸ்டன்டி நோபலை தலைநகராகக் கொண்டு கிழக்கு பிரிவாகவும் பிரிக்கப்பட்டது.
கிழக்குப் பிரிவு பல்வேறு காலகட்டங்களுக்கு பின் வீழ்ச்சியுறத் தொடங்கியது. மேற்குப் பிரிவு வலுப்பெற்று போபின் ஆதிக்கம் வலுப்பெற்றது. இதில் வேறுபாடுகள் (கிழக்கு/மேற்கு) அதிகமாகி 1054-ல் கிழக்கு மேற்கு சபைகள் நிரந்தரமாக பிரிந்தன.
சபைகள் கிழக்கு மேற்காக பிரிய காரணங்கள்:
- பேராயர் டையோக்ளிசியன் கி.பி. 286-இல் ரோமை 2 பிரிவாகப் பிரித்தார். இது நிரந்தர பிரிவுக்கு அஸ்திபாரமானது.
- பேரரசர் கான்ஸ்டன்டைன் கான்ஸ்டான்டி நோபல் என்னும் நகரத்தை ஏற்படுத்தினார். இது அவரது மரணத்திற்கு பின்னர் இரண்டாக பிரிவதற்கு காரணமாயின.
- கிழக்கு சபை கிரேக்க மொழியையும், மேற்கு சபை இலத்தின் மொழியையும் வழிபாட்டு மொழியாக கொண்டிருந்தன.
- நான்கு மன்றங்களில் உள்ளவர்களும் தங்களுடைய கருத்துக்களை எதிரெதிராகவே தெரிவித்தனர்.
- கிபி 381 இல் நடந்த கான்ஸ்டான்டி நோபல் மன்றத்தில் ரோமுக்கு முதலிடமும் கான்ஸ்டான்டி நோபலுக்கு இரண்டாம் இடமும் கொடுக்கப்பட்டது. எனவே அவர்கள் ரோமுக்கு கீழ்ப்பட்டு இருக்க விரும்பவில்லை.
- சபை பழக்கவழக்கங்களிலும் வேறுபாடுகள் இருந்தன.
- கிழக்கு சபையில் நெஸ்தோரிய கொள்கை அதிகமாக பின்பற்றப்பட்டது. மேற்கு சபைகளில் நிசேயா பற்றுறுதி அதிகமாக பின்பற்றப்பட்டது.
- மேற்கு பகுதியில் போப் ஆண்டவரின் ஆளுகை அதிகமாக இருந்தது. கிழக்கு சபைகளில் பேராயர் ஆளுகை செலுத்தினார்.
- போப் எல்லாவற்றையும் ஆளுகை செய்ய குறிப்பாக பேரரசையும் ஆளுகை செய்ய நினைத்தார்.
- நிசேயா பற்றுறுதி அறிக்கையில் தூய ஆவியர் தந்தையிடமிருந்தும் மகனிடம் இருந்தும் புறப்படுகிறவர் என்கிற வார்த்தை சேர்த்ததை கிழக்கு சபையினர் ஏற்றுக்கொள்ளவில்லை.
- கிழக்கு சபைகளில் கல்வி மற்றும் கலையில் முன்னேற்றம் ஏற்பட்டன. இங்கு வேற்று நாட்டு மக்கள் குடியேறியது மறுமலர்ச்சி ஏற்பட காரணமாய் இருந்தது. ஆனால் மேற்கில் வளர்ச்சி குறைவாக காணப்பட்டது.
- பேரரசர் மூன்றாம் லியோ காலகட்டத்தில் கிழக்கு சபைகளில் பிரச்சனைகள் ஏற்பட்டு கிழக்கு சபை பலவீனமடைந்தன. போப் 9-ம் லியோ காலகட்டத்தில் நிரந்தரமாக மேற்கு கிழக்கு பிரிவு ஏற்பட்டது. இப்பிரிவு சிலுவைப் போர்களுக்கு வழி நடத்தியது.
சிலுவைப் போர் (1095-1272)
11 முதல் 13 ஆம் நூற்றாண்டின் கடைசியில் நடத்தப்பட்ட ராணுவ நடவடிக்கை அல்லது நடத்தப்பட்ட போர்கள் தான் சிலுவைப் போர்கள். புனித நகரமாக கருதப்பட்ட எருசலேம் நகரையும் பிற இடங்களையும் முஸ்லிம் ஆட்சியாளர்களிடமிருந்து மீட்டுக் கொள்ளவும் அவர்கள் ஆக்கிரமிப்புகளுக்கு தடை போடவும் இவை நடத்தப்பட்டது. கி.பி. 1086-ல் கிறிஸ்தவர்கள் மிகவும் கொடுமைப்படுத்தப்பட்டனர். தேவாலயங்கள் குதிரைலாயங்களாக மாற்றப்பட்டன. எனவே கிறிஸ்தவர்கள் மன்னர்கள் மததலைவர்கள் சிலுவை அணிந்து போர் செய்தனர். கிபி 1073-ல் பாலஸ்தீனாவை துருக்கியர் கைப்பற்றினர். அங்கு புனித பயணமாக சென்றவர்களுக்கு இடறல்கள் துன்பங்கள் ஏற்பட்டது. துருக்கியரை அங்கிருந்து துரத்தவும் சிலுவைப் போர்கள் ஏற்பட்டது. சிலுவை அணிந்து போரிட்டதால் சிலுவைப் போர் எனப்பட்டது.
காரணங்கள்:
- சிலுவை போரில் பங்கு பெற்றால் பாவமன்னிப்பு கிடைக்கும் என்று ஓர் உறுதி கொடுத்தனர். எனவே இதில் பங்கு பெற்றனர்.
- இஸ்லாமியர்களால் கிறிஸ்தவ சமயத்திற்கு வந்த இழுக்கை போக்க உறுதி ஏற்று இதில் பங்கு பெற்றனர். இது கடவுளின் சித்தம் என்று நம்பினர்.
- ஐரோப்பாவில் உணவு பஞ்சம் அதிகமாக இருந்ததால் இதில் பங்கு பெற்று உணவு பஞ்சத்தை தீர்த்துக் கொண்டனர்.
- வாணிகத்தில் ஈடுபட்டிருந்த இத்தாலியர்களுக்கு வாணிகத்தை வளர்க்க இதை பயன்படுத்திக் கொண்டனர்.
- இது திருப்போர் என்றும் அதில் பங்கு பெற்றால் பாவ மன்னிப்பு கிடைக்கும் என்றும், அதில் மறித்தால் பாக்கியம் கிடைக்கும் என்று கருதினர்.
- சிலர் கொள்ளையடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் கலந்து கொண்டனர்.
- நினைவுச் சின்னங்களை சேகரித்தல், புனித பயணங்கள் ஆகியவற்றில் மக்களுக்கு ஆர்வம் அதிகமாக இருந்தது.
- சிலுவை போரில் ஈடுபட்டவர்களுக்கு சிறையில் இருந்து விடுதலை கிடைத்தது.
- பீட்டர் எனும் துறவி ஊர் ஊராக சென்று மக்களை உற்சாகப்படுத்தினார்.
- போப் இரண்டாம் அர்பன் என்பவர் கிறிஸ்துவின் பெயரால் போர் தொடுக்கும் எண்ணத்தை முதன் முதலில் மக்கள் மனதில் புகுத்தினார்.
முதலாம் சிலுவைப் போர்: கி.பி.1096
கி.பி. 1096 இல் போப் இரண்டாம் அர்பன் நாள் துருக்கியருக்கு எதிராக தொடங்கப்பட்டது. இப்போர் உயர் குடி மக்களாலேயே நடத்தப்பட்டது. சிலுவை படையினர் அந்தியோகியாவையும் எருசலேமையும் கைப்பற்றினர். எருசலேமில் லத்தின் அரசு நிறுவப்பட்டது. இதன் பாதுகாப்புக்காக இரண்டு படை வீரர்கள் நியமிக்கப்பட்டனர். ஹாஸ்பிட்டலர்ஸ், டெம்ப்ளார் ஹாஸ்பிட்டர்ஸ் என்பது எருசலேமில் நிறுவப்பட்ட துறவிகள் குழு ஆகும்.
நோயற்ற பயணிகளுக்கு உதவுவதற்காக சார்லிமேன் என்கிற அரசினால் ஏற்படுத்தப்பட்டவர்கள் டெம்ப்ளார் நாட்டை பாதுகாக்கவும், பாலஸ்தீனா நாட்டிற்கு பயணம் செய்பவர்களை பாதுகாப்போடு கூட்டிச் செல்லவும் இவர்கள் பயன்படுத்தப்பட்டனர்.
இரண்டாம் சிலுவை போர்: கி.பி.1147
இது கி.பி.1147-ல் தொடங்கப்பட்டது. பிரென்ஸ் அரசனாகிய ஏழாம் லூயியும், ஜெர்மானிய அரசனாகிய மூன்றாம் கோன்றாட்-ம் சிலுவைப் போரை தொடங்கினார்கள். இவர்கள் தமஸ்கோவை கைப்பற்ற முயல்களில் தோல்வி அடைந்தனர். கி.பி.1187-ல் பாலஸ்தீனாவையும், எருசலேமையும் கிறிஸ்தவர்கள் இழந்தனர். சிலுவைப் போர் மாபெரும் தோல்வியில் முடிந்தது.
மூன்றாம் சிலுவை போர்: கி.பி.1189
மூன்றாம் சிலுவை போர் கி.பி.1189-ல் தொடங்கப்பட்டது. இஸ்லாமிய தளபதி சலாவுதீன் எருசலேமில் லத்தின் அரசாங்கத்தை முடிவடைய செய்தார். எனவே பிரடெரிக் பார்பரோசா என்ற அரசரும் பிரான்ஸ் அரசர் பிலிப்பு II, இங்கிலாந்து அரசர் ஈச்சார்டு I-ம் போர் தொடுத்தனர். ஆனால் அவர்கள் வெற்றி பெறவில்லை.
நான்காம் சிலுவை போர்: கி.பி.1212
கி.பி. 1212 ஆம் ஆண்டு ஐரோப்பாவைச் சார்ந்த இளைஞர்களும் சிறுவர்களும் எருசலேமின் மீட்கும் நோக்கோடு புறப்பட்டனர். இதில் பிரென்ஸை சேர்ந்த ஸ்டீபன் என்ற இளைஞரும், ஜெர்மனியை சார்ந்த நிக்கோலஸ் என்பவரும் வழிநடத்தி சென்றனர். இவர்கள் இத்தாலியை சேர்ந்தவுடன் பிடிபட்டு எகிப்தில் அடிமைகளாக விற்கப்பட்டனர். இது குழந்தைகளின் சிலுவைப்போர் என்றும், நான்காம் சிலுவை போர் என்றும் அழைக்கப்பட்டது.
ஐந்தாம் சிலுவைப் போர்: கி.பி.1228
ரோம பேரரசனாகிய இரண்டாம் பிட்ரிக் கி.பி.1222 இல் போர் செய்தார். இவர் எகிப்தில் இருந்து சுல்தானோடு உடன்படிக்கை செய்து எருசலேம், பெத்லகேயும், நாசரேத் போன்ற இடங்களை பெற்றுக் கொண்டார். ஆனால் மீண்டும் அவ்விடங்களை இழந்தனர்.
ஆறாம் சிலுவை போர்: கி.பி.1250
பிராஸின் ஒன்பதாம் லூயி என்பவர் இப்போரை நடத்திச் சென்றார். ஆனால் அவர் கைதியாகப் பிடிபட்டு நோயினால் இறந்து போனார். இது கி.பி. 1250 இல் நடைபெற்றது.
ஏழாம் சிலுவை போர்: கி.பி.1271
ஏழாம் சிலுவைப்போர் கி.பி.1271 ஆம் ஆண்டு நடைபெற்றது. முதலாம் எட்வர்ட் இங்கிலாந்து அரசர் இதை நடத்தினார். இதுவும் தோல்வியில் முடிந்தது. கிறிஸ்தவர்கள் பாலஸ்தீனாவை இழந்தனர்.
இதன் விளைவுகள் / தாக்கங்கள்:
நன்மைகள்:
- இப்போது நான் கிழக்கு மேற்கு என்ற பிரிவு நீங்கி பொதுவான எண்ணம் உண்டானது.
- கிறிஸ்தவ நாகரீகம் மத்திய ஐரோப்பாவில் பரவியது.
- இப்போர்களுக்கு சென்று உயிருடன் திரும்பி வராத உயர் குடி மக்களின் சொத்துக்கள் அரசிடம் சென்றடைந்தது.
- வாணிகமும் தொழிலும் வளர்ச்சி அடைந்தன.
- சுற்றுலாத்துறை, கல்வித்துறையில் மேம்பாடு ஏற்பட்டன.
- போப் உயர்ந்த அதிகாரியாக மாறி அரசர்கள் அவர்களுக்கு கீழ்ப்பட்டிருந்தனர்.
- பிற சமய இணக்கம் ஏற்பட்டது.
- துறவிகளால் அருளுரை முறைகள் பரவின.
- நினைவுச் சின்னங்களையும், புனித இடங்களையும் உயர்வாக கருதினர்.
- சிலுவை போரில் பங்கு பெற்றவர்களுக்கு, பண உதவி செய்தவர்களுக்கு, தங்கள் சார்பில் வேறு ஒருவரை அனுப்பியவர்களுக்கு பாவமன்னிப்பு கொடுக்கப்பட்டது.
- கிறிஸ்தவ மக்கள் தங்கள் வாழ்க்கையை சீர்தூக்கி பார்த்து தங்களை சரி செய்து கொண்டனர்.
- மேற்கத்திய நாடுகளில் இது துறவரத்தை வளர செய்தது.
தீமைகள்:
- படை பலத்தால் வலுக்கட்டாயமாக கிறிஸ்தவத்தை பரப்பலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது.
- இஸ்லாமியர்களுக்கு கிறிஸ்தவ சமயத்தின் மீது வெறுப்பை உண்டு பண்ணியது.
- போரினால் எதிரிகளின் கிணறுகளுக்கு நஞ்சை செலுத்தினார்கள்.
- ஆயிரக்கணக்கான சிலுவை வீரர்கள் பிளவை வியாதியினால் மரணம் அடைந்தனர்.
திருச்சபை சீர்திருத்தத்தின் முன்னோடிகள்:
1) ஜான் விக்ளிப்:
ஜான் விக்ளிப் என்பவர் சீர்திருத்தத்தின் முன்னோடியாக கருதப்படுகிறார். இவர் இங்கிலாந்தில் கி.பி.1330 இல் பிறந்தார். ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றார். சிறந்த அருளுரையாளராகவும், விவிலிய விளக்க உரையாளராகவும் விளங்கினார். இவருடைய கூர்மையான அறிவினால் போப் ஐந்தாம் கிளமெண்ட் என்பவர் இங்கிலாந்து அரசின் வரி தொகையை விக்கிளிப்பின் மூலமாக பெற்றுக் கொண்டார். மூன்றாம் எட்வர்ட் அரசரோடும், பாராளுமன்றத்தோடும் சேர்ந்து போராடி போப்புவின் அதிகாரத்தை எதிர்த்தார். போப்புவின் வரம் பெற்ற அதிகாரத்தையும் சொத்துக்களையும் எதிர்த்து தம்முடைய போதனைகளை பரப்பினார். போப்பு அந்தி கிறிஸ்து எனவும், கடவுளுக்கு மட்டுமே பாவத்தை மன்னிக்கும் அதிகாரம் உண்டு எனவும் விவரித்தார். திருமறையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். அதுவே அனைத்திற்கும் ஆதாரம் என போதித்தார். இவரின் போதனைகளையும் பின்பற்றுகிறவர்களை "லோலார்டுகள்" என அழைத்தனர். இவர்கள் செருப்பு அணியாமல் வெறும் கால்களோடு பாடல் வழியாக விக்ளிபின் போதனைகளை பரப்பினார்கள். போப் ஆறாம் அர்பன் விக்ளிப்யை பழிவாங்க எண்ணினார். ஆனால் விக்ளிப் நோயுற்று மரித்து விட்டார். பல ஆண்டுகளுக்குப் பின் அவருடைய கல்லறையில் இருந்து எலும்புகளை எடுத்து சாம்பலாக்கி ஆற்றில் கரைத்தார்.
2) ஜான் ஹஸ்:
இவரும் திருச்சபை சீர்திருத்தவாதிகளில் ஒருவர். பொகிமியாவில் கி.பி.1372-ல் பிறந்தவர். இறையியல் கல்வி கற்றவர். பின்னர் ஆயராக நியமிக்கப்பட்டார். பல்கலைக்கழகத்தில் தத்துவத் துறையில் ஆசிரியராகவும் பணியாற்றினார். இவர் திருமறையை ஆழ்ந்த கற்றுக் கொண்டவர். விக்ளிப் எழுதிய சீர்திருத்த நூல்களையும் கற்றுத் தேர்ந்தவர். பொகிமியாவில் அவற்றை பரவ செய்தவர். எனவே போப் அவரை ரூமுக்கு விசாரணைக்கு அழைத்தார். இவரின் ஆடைகளை கழற்றி தலையில் குல்லா ஒன்று வைத்து அதில் "முரண் கோட்பாட்டாளரின் கழகத் தலைவன்" என்று எழுதப்பட்டிருந்தது. இவரை மின்கம்பத்தில் சங்கிலியினால் கட்டி விறகு கட்டைகளை அடுக்கி எரித்தனர். இவர் தம் கண்களை வானத்துக்கு நேராக ஏறெடுத்து, ஆண்டவர் இயேசுவே நீர் மீட்டுக்கொண்ட எனது ஆவியை உமது கைகளில் ஒப்புவிக்கிறேன் என்றார். பின் தமக்கு தீமை செய்தவர்களை மன்னிக்குமாறு உரத்த சத்தமாய் ஒரு பாடலை பாடி தம் உயிரை விட்டார்.
சீர்திருத்தத்திற்கான காரணங்கள்:
- கிபி 14-ஆம் 15-ஆம் நூற்றாண்டுகளில் அறிவியல் வளர்ச்சி பெற்றது. புதிய கண்டுபிடிப்புகள் பல வெளியே வந்தது. இது பல புரட்சிகரமான விளைவுகளை ஏற்படுத்தியது.
- கல்வி மற்றும் அறிவியலில் மறுமலர்ச்சி ஏற்பட்டதால் வாணிகமும் வளர்ச்சி அடைந்து பயணங்களை மேற்கொண்டனர். இதனால் பழமையான பழக்க வழக்கங்களும் சட்ட திட்டங்களும் கேள்விக்குறியாயின.
- ஜான் கூடன்பர்க் என்பவர் அச்சு இயந்திரத்தை கண்டுபிடித்ததால் புதிய எண்ணங்கள் திருச்சபையை சென்றடைந்தன. எனவே பார்வை விரிவடைந்து மக்கள் கேள்விகளை எழுப்பினர்.
- போப் ஆட்சியின் தவறுகள் மக்களுக்கு வெட்ட வெளிச்சமாயின. போப் பேதுருவின் பிரதிநிதிகள் என்றும், தெய்வத்தன்மை வாய்ந்த அதிகாரம் உடையவர்கள் என்றும் என்னப்பட்டதை கேள்வி கேட்க ஆரம்பித்தனர்.
- அருட்பொழிவு பெற்றவர்கள் சாதாரண மக்களை விட மேலானவர்களாக எண்ணினர்.
- சபையின் சொத்துக்கள் மேல் போப் தம் விருப்பம் போல் உரிமை கொண்டாடலாம் என்ற நிலைமை இருந்தது.
- சபையின் எல்லா வருமானங்களிலும் பத்தில் ஒரு பகுதி போப்பின் கருவூலத்திற்கு சென்றது.
- முதல் ஆண்டு விலை பலன்கள் கட்டாயமாக போப்புவிற்கு அனுப்பப்பட வேண்டும் என்ற நிலை இருந்தது.
- ஆயர்களுக்குரிய உதவித்தொகை போன்றவற்றிலும் இருந்து போப்புவிற்கு ஒரு பகுதி கொடுக்க வேண்டியிருந்தது.
- சட்டங்களை மீறுபவர்களிடமிருந்து வரி வாங்கப்பட்டது. இதன் மூலம் போப்புவிற்கு ஏராளமான பணம் குவிந்தது.
- பதவிகள் பணத்திற்காக விற்கப்பட்டன.
- பாவமன்னிப்பு சீட்டு விற்பனை ஐரோப்பா முழுவதும் பெருகு இருந்தது.
- பணம் இல்லை என்றால் திருமணம், அடக்கம் போன்றவை இல்லை. மேலும் மேல் உலகிற்கும் செல்ல முடியாது என்ற நிலை இருந்தது.
- ரோம் நகரம் ஒரு புனித பயண இடமாக மாறி பல மூட நம்பிக்கைகளால் மக்கள் அடிமைப்படுத்தப்பட்டனர்.
- பயணம் செய்ய முடியாதவர்களுக்காக பதிலிகளும் ஏற்படுத்தப்பட்டன.
- திரு தூதுவரின் வழிபாட்டு இடங்களை தரிசிப்பவர்களுக்கு போப்புவினால் பாவ மன்னிப்பு வழங்கப்பட்டது.
- ஐரோப்பாவில் திருச்சபைகளின் பலம் குறைந்து பல இடங்களில் அரசுகள் அதிகாரம் செலுத்தினர்.
- கல்வி அறிவு, மறுமலர்ச்சி, அறிவு வளர்ச்சி, பகுத்தறிவு சிந்தனைகளால் மனிதர்களின் பார்வைகள் விரிவாயின.
- திருமறையும், ஆன்மீக வாழ்வை பலப்படுத்தும் நூல்களும் அதிகமாக பெருகி சீர்திருத்த கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்த்தது.
ஜெர்மனின் சீர்திருத்தம்:
மார்ட்டின் லூத்தர்: (கி.பி.1483-1546)
கி.பி.1483 நவம்பர் 10ல் ஐஸ்லேபன், ஜெர்மனி என்னும் இடத்தில் பிறந்தவர் மார்டின் லூத்தர். செல்வாக்கு மிக்க குடும்பத்தில் இவர் பிறந்தார். இளமையில் நரகம், தூதர்கள், பிசாசு, ஆவிகள் போன்றவற்றில் நம்பிக்கை கொண்டவராய் இருந்தார். ரோமன் கத்தோலிக்க திருச்சபையை சார்ந்து இருந்ததால் கன்னி மரியாள், திருச்சபை தூதர், தூயவர்கள் இவர்களின் இறை வேந்தலில் அதிகமாக நம்பிக்கை கொண்டிருந்தார். கி.பி.1501-ல் எர்பர்ட் என்கிற பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தத்துவத்தில் தலைசிறந்த மாணவராகவும், இசை கலைஞராகவும் பல விருதுகள் பெற்றார். கி.பி.1555-இல் வழக்கறிஞராக பணி செய்ய சட்டம் படித்தார். இந்தக் காலகட்டங்களில் அவருடைய உடலும் உள்ளமும் மிகவும் பலவீனம் அடைந்திருந்தது. அவருக்கு பல ஆன்மீகப் போராட்டங்கள் ஏற்பட்டன.
இதற்கான காரணங்கள்:
- அவருடைய உற்ற நண்பனின் மரணம் அவரை மிகவும் பாதித்தது.
- எர்பர்ட் பல்கலைக்கழகத்தில் மாணவனாக இருந்த போது ரத்த நரம்பு ஒன்று வெட்டப்பட்டது. இதனால் மரண பயத்தை அவர் சந்தித்தார்.
- லாங்க் என்ற அவருடைய நண்பர் துறவியானது அவருடைய சிந்தனைகளை தூண்டினது.
- பல்கலைக்கழகத்திலும் அதன் சுற்றுப்பகுதியிலும் தொற்று நோய் ஏற்பட்டபோது வருங்கால வாழ்க்கையை குறித்து அதிகமாக சிந்தித்தார்.
- கி.பி.1505-ல் ஜூலை 2-ல் இவருக்கு தமஸ்கு அனுபவம் ஏற்பட்டது. மான்ஸ்பெல்ட்லிருந்து எர்பர்ட்க்கு போகும்போது இடியுடன் கூடிய மின்னல் வந்ததால் அவர் தரையில் விழுந்தார். அப்போது அவர் "புனித அன்னாளே என்னை மீட்டு விடும் நான் ஒரு துறவியாவேன்" என்றார். இவ்வாறு கி.பி.1505 இல் ஜூலை 16-ல் நண்பர்களிடம் விடைபெற்று கொண்டு எர்பர்ட்லிலுள்ள அகஸ்தியன் துறவி மடத்திற்கு சென்று துறவியானார். அங்கு சென்ற பின் தூய அகஸ்டின் நூல்களை அதிகமாக படித்து பாவம், அருள் பற்றி அதிகமாக தெரிந்து கொண்டார். கி.பி.1506-இல் துறவியாக திருநிலைப் படுத்தப்பட்டார். கி.பி.1507-ல் ஆயராக அருள்பொழிவு பெற்றார். இவர் இறையியலையும், அகஸ்டின் நூல்களையும், தாமஸ் அக்குவினாஸ் அவருடைய நூல்களையும் அதிகமாக படித்தார். பின்னர் விட்டன்பர்க் பல்கலைக்கழகத்தில் இறையியல் கற்பிக்க அவர் நியமிக்கப்பட்டார்.
- இதற்கு உறுதுணையாக இருந்தவர் ஸ்டாப்பிட்ஸ் என்னும் ஆசிரியர் ஆவார். இவர் திருமறையை ஆழ்ந்து கற்பித்தார். இதனால் ரோமர் 1:14 இந்தத் திருமொழி இவருக்குள் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது. கிரியைகளினால் அல்ல கடவுளிடம் வைக்கும் முழு நம்பிக்கையே மனிதனை நீதிமானாக மாற்றும் என்பதை புரிந்து கொண்டார். இதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள அதிகமாக விரும்பி பல சொற்பொழிவுகளையும் அருளுரைகளையும் ஆற்றினார். இவருடைய புகழ் ஜெர்மனியிலும், மேற்கு ஐரோப்பாவிலும் அதிகமாக பரவியது. தன்னுடைய அருளுரைகளில் திருச்சபையின் அவலங்களையும், சீர்திருத்தத்தின் அவசியத்தையும் வலியுறுத்தினார். மேலும் பாவ மன்னிப்பு சீட்டு விற்பனைக்கு எதிராக அருளுரை செய்தார். எனவே இவருக்கும் ரோமன் கத்தோலிக்க திருச்சபைக்கும் பெரிய இடைவெளி ஏற்பட்டது. பலர் இவரை பெரிய எதிரியாக பார்க்க ஆரம்பித்தனர். கி.பி.1517-ல் ஆகஸ்ட் 31-ல் விட்டன்பர்க் பல்கலைக்கழகத்தோடு இணைந்து இருந்த சகல புனிதர்களின் வழிபாட்டு கட்டிடத்தின் கதவில் தன்னுடைய 95 விவாத குறிப்புகளை எழுதி தொங்கவிட்டார்.
- மறுநாள் சகல புனிதர்களின் திருநாளில் வந்திருந்த அனைவரும் அவற்றை வாசித்தனர். லூத்தரின் விவாத குறிப்புகள் ஜெர்மன் மற்றும் லத்தின் மொழியில் அச்சிடப்பட்டு பல இடங்களுக்கு அனுப்பப்பட்டன.
- இவர் "பாவ மன்னிப்பின் சலுகையும் குறித்த ஒரு அருளுரை" என்ற துண்டு பிரதியையும், தீர்மானங்கள் என்ற துண்டு பிரதியையும் வெளியிட்டு போப்புவின் அதிகாரத்தை எதிர்த்து திருச்சபை சீர்திருத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். பாவ மன்னிப்பு சீட்டினால் பாவ மன்னிப்பை வழங்க முடியாது. போப்புவிற்கு பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் இல்லை. கடவுள்தான் அதிகாரம் உடையவர். கிறிஸ்து மெய்யான மனந்திரும்புதலையே விரும்புகிறார் என்றும் போதித்தார்.
- "ஜெர்மனியில் கிறிஸ்துவ உயர் குடியினருக்கு ஒரு சிறந்த கடிதம்",
- "திருச்சபையின் பாபிலோனிய சிறையிருப்பு",
- "கிறிஸ்தவனின் சுயாதீனம்", "துறவற உறுதிமொழிகள்"
- போன்ற ஆய்வுக் கட்டுரை புத்தகங்கள் மூலம் தன் சீர்திருத்த கருத்துக்களை பரப்பி வந்தார்.
- கி.பி.1521 இல் ஜனவரி 28 இல் பேரரசன் சார்லஸ் V ஐந்தாம் வெர்மஸ் ஒரு மன்றத்தை கூட்டி லூத்தரை அழைத்து தம் நிலைப்பாட்டை கூற கேட்டுக் கொண்டனர். கி.பி.1521 ஏப்ரல் 18 இல் லூதர் தம் திருமறையை கையில் ஏந்தி, தம் போதனைகளை கைவிட மறுத்து, "வேறொன்றும் செய்ய திறனில்லேன்" இங்கு நிற்கின்றேன், கடவுளே எனக்கு உதவி செய்யும், ஆமென்..
- I cannot to otherwise: here I stand God help me. Amen. என்று கூறினார்.
- போப் 10- லியோ லூதரை முரண் கோட்பாட்டாளர் என்றும் அவரது நூல்களை சுட்டெரிக்க வேண்டும் என்றும் தனது கொள்கைகளை 60 நாளில் கைவிடாவிட்டால் அவருக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார். வெர்ம்ஸ் மன்றம் லூத்தரின் நூல்களை வாசிக்க தடை விதித்தது. அவருக்கு யாரும் புகலிடம் கொடுக்கக் கூடாது என்று உத்தரவிட்டனர். கி.பி.1521 டிசம்பர் 25ல் சீர்திருத்த திருச்சபையின் முதல் திருவிருந்து வழிபாட்டை லூத்தர் நடத்தினார். திரு விருந்து நடத்தும் போது ஆயர் ஆடை எதுவும் அணியவில்லை. வேறு சில சடங்குகளையும் அவர் கைவிட்டு எல்லோருக்கும் அப்பமும், திராட்சை ரசமும் வழங்கினார். மேலும் வழிபாட்டு மனதில் உள்ள உருவங்களையும், படங்களையும் தகர்த்தினார். கி.பி.1525 இல் கேத்தரீன் வொன் போரா என்ற பெண் துணைவியை திருமணம் செய்தார். ஒரு வழிபாட்டு ஒழுங்கு முறையை உருவாக்கினார். 32 பாடல்கள் அடங்கிய பாடல் புத்தகத்தையும் வெளியிட்டார். திருமணம் திருமுழுக்கு வழிபாட்டு முறைகளை மாற்றி அமைத்தார். திருவிருந்து பொருண்மை மாறா கொள்கை என்பதை கடைப்பிடித்தார். அப்பமும், ரசமும் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் என்று கூறினார். திரு விருந்தை நடத்துவது ஆயர் அல்ல கடவுளே என்று கூறினார். திருச்சபையும் அரசும் வேறு வேறு. எனவே திருச்சபை அரசு தொடர்பான செயல்களில் அடங்கியிருக்க வேண்டும் என்றார். கி.பி.1529 இல் பெரிய ஞான உபதேசம், சிறிய ஞான உபதேசம் போன்ற நூல்களை வெளியிட்டார். ஜெர்மனியில் தென்பகுதியில் இருந்த மக்கள் லூத்தரின் சீர்திருத்த கருத்துக்களுக்கு எதிராக இருந்தனர்.
- எனவே, சார்லஸ் V ஸ்பேயர்ஸ் என்ற இடத்தில் ஒரு மாமன்றத்தை கட்டினார். அதில் ரோமன் கத்தோலிக்க ஒழுங்கு முறைகளை எல்லா இடங்களிலும் பின்பற்ற வேண்டும் என்று கூறினார். இதை சீர்திருத்த சிந்தனை ஆதரவாளர்கள் எதிர்த்தனர். கி.பி.1529 ஏப்ரல் 19 இல் ஸ்பேயர்ஸ் மன்ற தீர்ப்புகளை எதிர்த்து எதிர் மறுக்கிறார்கள் Protestants என்ற பெயரை பெற்றனர். லூத்தரின் நண்பரான பிலிப் மெலாங்தன் லூத்தரின் ஆக்ஸ்பெக் அறிக்கையை வாசித்து, அதில் 21 அறிக்கையை லூத்தரின் விதிகளாக ஏற்றுக் கொண்டனர். அது லூத்தரின் கிறிஸ்தவர்களுக்கு அடிப்படையான விதிமுறைகள் ஆகும். கி.பி.1546 பிப்ரவரி 16 இல் இவர் பெரிதும் சுகவீனமடைந்து தந்தையே உன் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன் என்று மரணம் அடைந்தார். இவரது மரணத்திற்குப் பின் ஜெர்மனியில் தொடங்கிய சீர்திருத்தம் சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கும் பரவியது.
சுவிட்சர்லாந்தில் சீர்திருத்தம்: 1484-1531
- உல்ரிங் சுவிங்லி என்பவர் சுவிட்சர்லாந்தில் சீர்திருத்தத்தை தொடங்கி வைத்தார். இவருடைய பிறப்பு கி.பி.1484. இவர் லூத்தர் எழுதிய பல நூல்களைப் படித்து புதிய சிந்தனைகளை பெற்றுக் கொண்டார். இவர் வசித்த பகுதியில் கொள்ளை நோய் பரவி பலர் மடிந்தனர். இதில் சுவிங்லி பாதிக்கப்பட்டார். மரண தருவாயில் இருக்கும் போது ஆண்டவரின் சேவைக்கு தம்மை ஒப்படைத்தார். இவர் ரோம சபையை விட்டு பிரிந்து, சீர்திருத்த கருத்துக்களை ஏற்றுக் கொண்டார்.
- பாடல்கள் பாடுவதிலும் அருளுரை வழங்குவதிலும் வல்லவராகத் திகழ்ந்தார். திருமறையை அடிப்படையாகக் கொண்டு அதற்கு மாறுபாடான எல்லாவற்றையும் வெறுத்தார். ஆன்மீக நிலையை அதிகமாக வலியுறுத்தினார். தூய ஆவியானவர் மனிதர்களிடம் நேரடியாக செயல் ஆற்ற கூடியவர் என கருதினார். ஆன்மீக வாழ்விலும், அரசியல் வாழ்விலும் மறுவாழ்வு தேவை என்று உணர்த்தினார். இவர் பழைய ஏற்பாட்டின் இறைவாக்கினர் போன்று பணி செய்தார். இவர் கடவுளின் தெரிந்தெடுத்தலையும், முன்குறித்தலையும் முதன்மையாக கருதினார். திருச்சபையின் அதிகாரத்தை விட நற்செய்தியின் அதிகாரத்திற்கு முக்கியத்துவம் தந்தார்.
- போப்புவின் அதிகாரம், தூயவரை வணங்குதல், பண்டிகைகள், புனித பயணங்கள், துறவற ஒழுங்குகள், திருமணம் செய்யாமல், பாவ மன்னிப்பு சீட்டு இவை மனிதர்களின் முயற்சிகளே ஆகும். திருமறையில் இதற்கு ஆதாரம் இல்லை என்று வாதிட்டார். 1523 சிறிய கிறிஸ்தவ அறிமுகம் என்ற நூலை வெளியிட்டார். தனது சீர்திருத்த கருத்துக்களை பரப்பினார். அநேக பள்ளிக்கூடங்கள் ஏற்பட ஊக்குவித்தார். இவர் 1531 மரணம் அடைந்தார்.
பிரென்சில் சீர்திருத்தம்:
ஜான் கால்வின் என்பவர் இதை செய்தார். இவர் 1509 இல் பிறந்தார். புத்தி கூர்மையுடையவராகவும் உறுதியான பண்புடையவராகவும் இருந்தார். திருமறையையும் லூத்தரின் சிந்தனைகளையும் ஆழ்ந்து கற்றார். "கிறிஸ்தவ சமயத்தின் சட்டமூலத் தொகுப்பு" என்னும் நூலின் மூலம் சீர்திருத்த கிறிஸ்தவர்கள் ரோமோ கிறிஸ்தவர்களை விட உண்மையான கிறிஸ்தவர்கள் எனக் கூறினார். பிரென்சில் மட்டுமல்ல ஜெனிவாவிலும் இவர் தனது கருத்துக்களை பரப்பினார். இங்கு போதகர், உபதேசிகர், மூப்பர், உதவி காரர் என்ற புதிய சபை ஆட்சி திட்டத்தை அறிமுகப்படுத்தினார். 1559 இல் ஒரு பல்கலைக்கழகத்தை ஜெனிவாவில் ஏற்படுத்தினார். அது இறையியல் கல்விக்கு பெயர் பெற்ற கழகமாய் இருந்தது. இவர் திருமறையை முக்கிய ஆதாரமாகக் கொண்டார். கிறிஸ்தவர்களின் உரிமையை அதிகமாக வலியுறுத்தினார். சபைக்கும் அரசுக்கும் அதிக வேறுபாடு உண்டு எனக் கூறினார். முன்னுறுதி கோட்பாட்டை வலியுறுத்தி சிலர் மீட்புக்காகவும், சிலர் நிலையான தண்டனைக்காகவும் தெரிவு செய்யப் பட்டுள்ளனர் என்றார். ஒருமுறை மீட்கப்பட்டோர் நிலையாக மீட்கப்பட்டோர் ஆவார்கள். அவர்கள் கடவுளின் அருளிலிருந்து விழுந்து போக முடியாது என்பது இவரது கருத்து. இவர் 1564 இல் மரணம் அடைந்தார்.
இங்கிலாந்தில் சீர்திருத்தம்:
ஹென்றி VIII இவர் இங்கிலாந்தில் அரசராக இருந்தபோது போப் X-ம் லியோ இவருக்கு பற்றுறுதியின் பாதுகாவலர் என்ற பட்டத்தை சூட்டினார். ஆனால் இவர் ஆன்போலின் என்ற பெண்ணை இரண்டாம் திருமணம் செய்து கொள்ள முயன்ற போது போப் தடுத்தார். எனவே போப்பை எதிர்த்து சீர்திருத்த கருத்துக்களை பரப்பினார். தாமஸ் கிராம்வெல் என்னும் சீர்திருத்த ஆதரவாளரை அமைச்சராக்கினார். தாமஸ் கிரான்மர் என்பவரை முதன்மைப் பேராயராக திருநிலைபடுத்தினார். போப் கிளமெண்ட் VII ஐ சபை விளக்கம் செய்து போப்புவிற்கு பதிலாக அரசன் திருச்சபைக்கு தலைவரானார். துறவி மடங்கள் கலைக்கப்பட்டு சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டன. இவர் காலத்தில் "பத்து பொது விதிகள்" என்ற விதிகளை வெளியிட்டு திருச்சபைகளிலே அவற்றை பின்பற்ற செய்தார்.
ஹென்றி VIII-ன் இறப்பிற்குப் பின் அவருடைய மகன் எட்வர்டு அரசரானார். இவர் சீர்திருத்தக் கொள்கையை உடையவர். எனவே சீர்திருத்த சபையில் மாற்றங்கள் பல ஏற்பட்டன. குறிப்பாக வழிபாட்டிற்கென பொதுவாக ஓர் இறைவேண்டல் நூல் வெளியிடப்பட்டது. வழிபாடுகளில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் தவறினால் தண்டனை உண்டு என்றும் அறிவிக்கப்பட்டது.
இவருக்குப் பின் அவருடைய மகள் மேரி அரசியானார். இவர் ரோம சபையின் ஆதரவாளர். எனவே ரோமா ஆட்சியை நடைமுறைப்படுத்தினார். இவர் காலகட்டத்தில் சீர்திருத்த கருத்துக்களை ஆதரிப்பவர்களை சுட்டெரித்தார். பலர் ரத்த சாட்சியாக மரித்தனர். எனவே இந்த மேரியை (Bloody Mary) என்றும் அழைத்தனர்.
இவருக்குப் பின் ஹென்றி VIII-ன் மற்றொரு மகள் எலிசபெத் அரசியானார். இவர் காலகட்டத்தில் மீண்டும் சீர்திருத்த சபை உயிரோட்டம் பெற்றது. இங்கிலாந்தில் ஏற்பட்ட சீர்திருத்த சபை தான் "ஆங்கிலிகன் சபை" என்று அறியலாயிற்று.
ஹென்றி VIII-ன் இறப்பிற்குப் பின் அவருடைய மகன் எட்வர்டு அரசரானார். இவர் சீர்திருத்தக் கொள்கையை உடையவர். எனவே சீர்திருத்த சபையில் மாற்றங்கள் பல ஏற்பட்டன. குறிப்பாக வழிபாட்டிற்கென பொதுவாக ஓர் இறைவேண்டல் நூல் வெளியிடப்பட்டது. வழிபாடுகளில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் தவறினால் தண்டனை உண்டு என்றும் அறிவிக்கப்பட்டது.
இவருக்குப் பின் அவருடைய மகள் மேரி அரசியானார். இவர் ரோம சபையின் ஆதரவாளர். எனவே ரோமா ஆட்சியை நடைமுறைப்படுத்தினார். இவர் காலகட்டத்தில் சீர்திருத்த கருத்துக்களை ஆதரிப்பவர்களை சுட்டெரித்தார். பலர் ரத்த சாட்சியாக மரித்தனர். எனவே இந்த மேரியை (Bloody Mary) என்றும் அழைத்தனர்.
இவருக்குப் பின் ஹென்றி VIII-ன் மற்றொரு மகள் எலிசபெத் அரசியானார். இவர் காலகட்டத்தில் மீண்டும் சீர்திருத்த சபை உயிரோட்டம் பெற்றது. இங்கிலாந்தில் ஏற்பட்ட சீர்திருத்த சபை தான் "ஆங்கிலிகன் சபை" என்று அறியலாயிற்று.
பெண்களின் முன்னேற்றத்தில் அருட்பணி சங்கங்களின் பங்களிப்பு:
கல்வி பணி:
19-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தியாவுக்கு வந்த கிறிஸ்தவ அருட்பணி சங்கங்கள் கல்வி, மருத்துவம், சமூக முன்னேற்றம் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தி பல்வேறு சீர்திருத்தங்களை செய்தனர். குறிப்பாக பெண்களுக்கு முதன் முதலில் கல்வி வாய்ப்பு இவர்கள் மூலமாகவே கிடைத்தது. Protestant அருட்பணி இயக்கங்கள் பெண் கல்வியின் தேவையை அதிகமாக உணர்ந்து இருந்தனர். நற்செய்தியாளர்களும் அவர்கள் துணைவியாரும் பெண் பிள்ளைகளுக்காக கல்விக் கூடங்களை தொடங்கினர். கிராமப்புற பள்ளிக்கூடங்களை திறந்து பெண் கல்விக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் அன்னாள் மார்ஸ்மேன் (Hannah Maishmen). செல்வி. மேரி ஆன்கூக் என்பவர் 1821-ல் பெண் பிள்ளைகளுக்கான பள்ளிக்கூடங்களில் நிறுவினார். கி.பி. 1870-க்கு பிறகு தான் இந்தியாவின் பல பகுதிகளில் பெண்களுக்கான கல்விக்கூடங்கள் தொடங்கப்பட்டது. எடுத்துக்காட்டு: சாராள் தக்கர் கல்லூரி, இசபெல்லா தோபார்ன் கல்லூரி, சென்னை கிறிஸ்தவ கல்லூரி (WCC).
கோபாலக் கிருஷ்ண கோகலே போன்ற சமூக சீர்திருத்தவாதிகள் இந்த கிறிஸ்தவ நிறுவனங்களைப் பார்த்து இந்து சமூகத்தில் பெண் கல்வியை வலியுறுத்தினர். கி.பி.1821-ல் செரம்பூர் திருப்பணி அமைப்பு குழந்தைகளுக்கான பள்ளியை நிறுவியது.
மருத்துவப் பணி:
பெண்களின் மருத்துவ தேவைகளில் முதலில் வெளிக்கொண்டு வந்தவர்கள் செனானா அருட்பணியாளர்களே. அமெரிக்க மெதடிஸ்ட் அருட்பணி சங்கம் தான் முதன் முதலில் பெண் மருத்துவரை இந்தியாவிற்கு அனுப்பியது. அவர் பெயர் கிளாரா ஸ்வெயின். இவர் 1874 இல் வட இந்தியாவில் ஒரு மருத்துவமனையை நிறுவினார். அமெரிக்க மூப்பர் ஆளுகை அருட்பணி சங்கம் சாரா சேவர்டு என்பவரை அலகாபாத்தில் மருத்துவப் பணி செய்ய அனுப்பியது. இச்சங்கங்கள் அனைத்தும் இணைந்து 1880 முதல் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பல மருத்துவமனைகளை கட்டினர். மைசூர், ஹாசன் போன்ற இடங்களில் இவர்களுக்காக பல மருத்துவமனைகள் கட்டப்பட்டன. கி.பி.1864 இல் CMS (Church Missionary Society) மூலமாக இந்தியாவின் வடமேற்கு பகுதிகளில் இஸ்லாமிய பெண்களுக்காக பல மருத்துவமனைகளை திறந்தனர். மருத்துவப் பணிக்கு பயிற்சி பெற்ற மருத்துவரும், செவிலியரும் பிற பணிகளுக்கும் தேவைப்பட்டதால் மருத்துவக் கல்லூரிகளும், செவிலியர் பயிற்சி நிறுவனங்களும் நிறுவப்பட்டது. Dr. Edith Brown ஈடித் பிரௌன், செல்வி. கிரின் பீல்டும் 1894 இல் லூதியானாவில் கிறிஸ்தவ பெண்களுக்கான வட இந்திய மருத்துவ பள்ளியை தொடங்கினர். அமெரிக்க ஆற்காடு அருட்பணி சங்கத்தை சார்ந்த ஐடா எஸ். ஸ்காடர் என்பவர் வேலூரில் பெண்களுக்கான ஒரு மருத்துவப் பள்ளியை தொடங்கினார். இது தற்போது வரை இந்தியாவின் புகழ்பெற்ற மருத்துவக் கல்லூரியாக விளங்குகிறது.
சமூகப் பணிகள்:
1) சிறார் (குழந்தை பலி)
கி.பி.1802 இல் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த வெல்லெஸ்லி பிரபு என்பவர் சாகர் தீவிலும், பிற இடங்களிலும் குழந்தைகளை மூழ்கடித்தோ, சுறாக்களுக்கு இறையாக்கியோ கொல்லப்படும் வழக்கத்தை தடை செய்தார். இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் வில்லியம் கேரி என்பவர். வில்லியம் கேரி தன்னுடைய இதழ்களில் இத்தீய பழக்கத்தை கண்டித்து பல கட்டுரைகள் எழுதி கி.பி.1801 இல் ஒரு அறிக்கையை சமர்ப்பித்தார். இதன் அடிப்படையில் இதனை தடை செய்தனர்.
2) உடன்கட்டை ஏறுதல் (சதி):
வில்லியம் கேரி, ஜாஷ்வா மார்ஷ்மேன் தங்களுடைய வாரப் பத்திரிக்கையான சமச்சார் தர்பன் டி ப்ரெண்ட் ஆப் இந்தியா என்ற பத்திரிக்கையில் இறந்த கணவரின் சிதையில் அவரின் மனைவியை உயிருடன் எரிக்கும் பழக்கத்தை எதிர்த்து குரல் எழுப்பினார். இதன் விளைவாக இராஜாராம் மோகன் ராய் போன்றவர்களும் அதற்கு எதிராக குரல் கொடுத்தனர். கி.பி.1829 வில்லியம் பெண்டிங் பிரபு இச்சதி பழக்கத்தை தடை செய்து ஆணைப் பிறப்பித்தார்.
3) தேவதாசி முறை:
இது இந்து சமயத்தில் பரவலாக இருந்த ஒரு முறையாகும். இதன்படி பெற்றோர் தங்கள் பெண் குழந்தையை கடவுளுக்கு அர்ப்பணம் செய்வர். அக்குழந்தை ஆலயங்களில் வளரும். இக்குழந்தை தேவதாசி எனப்பட்டது. Protestant அருட்பணையாளர்களில் ஒருவரான ஏமிகார்மைக்கேல் என்பவர் இதை ஒரு சமூக தீமையாகக் கண்டார். இவர் 1895-இல் இங்கிலாந்து திருச்சபையின் செனானா அருட்பணி சங்கத்தின் மூலம் அருள் பணியாளராக இந்தியாவில் பணி செய்தார். டோனாவூர் என்னும் பகுதியில் பணி செய்து கொண்டிருந்தபோது பண்ணை விலை என்ற கிராமத்திற்கு அருகில் ஏழு வயது பெண் குழந்தை கோவிலில் இருந்த தேவதாசி முறையில் இருந்து மீட்கப்பட்டது. ஏமி மற்றும் அவரோடு உடன் இருந்த பணியாளர்கள் இவ்வாறு இருந்த தேவதாசி குழந்தைகளை மீட்க ஆரம்பித்தனர்.
இதனால் பலமுறை இவர்கள் நீதிமன்றங்கள் செல்ல வேண்டி இருந்தது. இப் பெண்களின் மோசமான நிலையை தன் எழுத்துக்கள் மற்றும் புத்தகம் வாயிலாக வெளியிட்டார். பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு தேவதாசி முறை சட்ட விரோதமானது என அறிவிக்கப்பட்டது. கி.பி.1926 இல் டோனாவூர் தோழமை குழுவை உருவாக்கினார். இதில் தேவதாசி முறையில் இருந்து மீட்கப்பட்ட பெண் குழந்தைகள், கைவிடப்பட்ட சிறுவர்கள் சேர்க்கப்பட்டு வாழ்வு பெற்றனர்.
4) தோள் சோலைப் புரட்சி: 1859
திருவிதாங்கூர் பகுதியைச் சேர்ந்த சாணார் பெண்கள் இடுப்புக்கு மேல் ஆடை அணியக்கூடாது என்ற விதியை உயர் சாதியினர் விதித்திருந்தனர். இங்கு பணி செய்து கொண்டிருந்த LMS நற்செய்தி பணியாளர்கள் இந்த இழிநிலையை கண்டனர். சார்லஸ் மீட் என்ற அருட்பணியாளர் இந்தப் பெண்கள் உடலின் மேல் பகுதியில் ஆடை அணிய உதவி செய்தார்கள். இதனைக் கண்ட மேல் சாதி மக்கள் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். இதற்கு தோள் சிலை புரட்சி என்று பெயர். சென்னை மாநில ஆளுநர் G.E. டிரவெல்லியம் இதில் தலையிட்டு திருவிதாங்கூர் அரசு ஒரு ஆணை பிறப்பிக்க உத்தரவிட்டார். இதனால் கி.பி.1859 இல் அரசு ஒரு ஆணை பிறப்பித்து இப்பெண்கள் குப்பாயம் என்கின்ற மேலாடையை அணிய அனுமதி வழங்கியது.
5) கைம்பெண்கள் மறுமலர்ச்சி:
இந்திய பெண்களின் விடுதலைக்கு பண்டித இராமாபாய் என்பவர் அதிகமாய் செயல்பட்டார். அக்காலகட்டத்தில் பெண்கள் குழந்தை பருவத்தில் தன் தந்தையையும், இளமைப் பருவத்தில் தம் கணவனையும், முதுமை பருவத்தில் மகனையும் சார்ந்து இருக்க வேண்டிய சூழல் இருந்தது. அறிவு சார்ந்தும் உடல் சார்ந்தும் பெண்களை ஒதுக்கி வைத்திருந்தனர். பெண் சிசுக்கொலை, சதி, பர்தா முறை மூலம் பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தனர். இச்சூழலில் பண்டித இராமாபாய் கைம்பெண்களின் விடுதலைக்கு பல்வேறு பணிகளை செய்தார்.
இவர் தந்தை அனந்த சாஸ்திரி மராட்டிய பிராமண வகுப்பைச் சார்ந்தவர். ஆனால் இவர் தந்தை சற்று முற்போக்கான சிந்தனை உடையவர். தம் மனைவிக்கு சமஸ்கிருத மொழியை கற்றுக் கொடுத்தார். இதனால் சிறு வயதில் இருந்தே சமஸ்கிருத ஸ்லோகங்களை மனப்பாடமாக ஒப்பித்தார். பின் கி.பி.1876-1877 களில் ஏற்பட்ட பஞ்சத்தில் தன் பெற்றோரையும் சகோதரியையும் இழந்தார். தன் சகோதரன் சீனிவாசகன் என்பவருடன் கல்கத்தா சென்றடைந்தார். அங்கிருந்தபோது ஒரு சில கிறிஸ்தவர்களுடனும் பிரம்ம சமாஜத்துடனும் தொடர்பு ஏற்பட்டது. சில நாள்களில் அவருடைய சகோதரரும் இறந்து விட்டார். பின்னர் பிற ஜாதியைச் சார்ந்த வங்காள வழக்கறிஞர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். 19 மாதங்களுக்கு பிறகு அவர் கணவரும் காலமானார். கைக்குழந்தையுடன் மகாராஷ்டிரா திரும்பி அங்கு தம்மை பிராத்னா சமாஜத் அமைப்புடன் சேர்த்துக்கொண்டு சமுதாய சீர்திருத்தங்களை செய்தார். இக்காலத்தில் அங்கு நெகேமியா கோரே என்பவரை சந்தித்து அவர்களுடைய அருளுரையால் கவரப்பட்டார். இவரிடம் திருமுழுக்கு பெற்று கிறிஸ்தவராக மாறினார். இவர் இராமாபாய்க்கு பல ஆலோசனைகளை வழங்கினார். இதன் பின்னர் இங்கிலாந்து சென்று "தூய கன்னி மரியாளின் சகோதரிகள்" என்ற அமைப்போடு தொடர்பு கொண்டு தன்னுடைய படிப்பை முடித்தார். மேலும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் சென்று குழந்தைகளுக்கான கல்வி முறையையும், கைவினைப் பொருட்கள் செய்வதிலும் பயிற்சி பெற்றார். அங்கிருக்கும் போது இந்திய பெண்களை குறித்து உரையாற்றினார். "உயர் சாதி இந்து பெண்" என்ற புத்தகத்தை வெளியிட்டார். அங்கு தேவையான நிதி உதவி பெற்றுக்கொண்டு மும்பையில் கி.பி.1889இல் சுரதா சதன் என்ற இல்லத்தை துவங்கினார். இதற்கு இந்து சமய தலைவர்கள் பலர் இவருக்கு ஆதரவு கொடுத்தனர். பின்னர் இதனை மும்பையில் இருந்து புனேவுக்கு மாற்றினார். அதில் பஞ்சத்தினால் பாதிக்கப்பட்ட பிள்ளைகள் பலரை சேர்த்து அவர்களுக்கு உணவு உடை வழங்கினார். இவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் முக்தி என்ற மற்றொரு அமைப்பை துவங்கினார். நிதி உதவிக்காக மீண்டும் அமெரிக்கா சென்றார். அங்கிருந்து உதவி பெற்று முக்தி ஒரு பெரிய அமைப்பாக வளர்ந்தது. பெற்றோரை இழந்த பெண் குழந்தைகளும் கையும் பெண்களும் அதிகமாக எதில் சேர்ந்தனர். இதில் பால்
i) பண்ணை தொழில்,
ii) துணி நெசவு தையல்,
iii) கயிறு திரித்தல்
போன்ற கைத்தொழில்களின் வாயிலாக பெண்கள் வேலை வாய்ப்பை பெற்றுக் கொண்டனர். அதில் பலர் தானாக கிறிஸ்தவராக மாறினர். இந்திய அரசு அவருக்கு "பண்டிதை" என்ற பட்டத்தை வழங்கி சிறப்பித்தது. இந்தப் பட்டம் அதற்கு முன்னர் எந்த பெண்ணிற்கும் வழங்கப்படவில்லை. இந்திய கைம்பெண்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தையும் முன்னேற்றத்தையும் இவர் ஏற்படுத்தினார்.
கடுந்தூய்மைப் பிரிவினர் (Puritinism):
இவர்கள் சீர்திருத்தக் கொள்கையை பின்பற்றியவர்கள் ஆவார்கள். இவர்கள் இங்கிலாந்தில் தங்களுடைய சிந்தனைகளை பரப்பினார்கள். ஜான் கால்வினின் "தெரிந்து கொள்ளப்பட்டது" என்ற சிந்தனையை முன் வைத்தனர். கடவுளால் நியமிக்கப்பட்டவர்கள் மட்டுமே மீட்பை அடைய முடியும் என்று நம்பினர். ரோமன் கத்தோலிக்க சபை பின்பற்றின மூட நம்பிக்கைகளை அகற்றி தூய்மைப்படுத்தினர். ஆயர்கள் அணியும் சிறப்பான ஆடைகளை அணிவதை எதிர்த்தனர். இங்கிலாந்து அரசி எலிசபெத்தின் காலத்தில் இவர்களுக்கு பலத்த எதிர்ப்பு ஏற்பட்டது. எனவே இதில் பலர் பின்வாங்கினர். பலர் சபை ஆளுகை முறையை பின்பற்றினர்.
பக்தி இயக்கம் (Paitism):
இதைத் தொடங்கியவர் ஜெர்மனியை சேர்ந்த பிலிப் ஜேக்கப் ஸ்பீனர். இவர் ஜெர்மனியில் கிறிஸ்தவ மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக ஒரு குழுவை ஏற்படுத்தினார். உண்மையான கிறிஸ்தவத்தை வாழ்க்கையில் காட்டவும், திருமறையை முறையாக கற்றுக் கொள்ளவும், ஒவ்வொரு நாளும் இறைவேண்டல் செய்யவும் வலியுறுத்தினார். இதனால் கேளிக்கை வாழ்வில் இருந்து விலகி அதிகமான உணவினை தவிர்த்து வாழவும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த இயக்கம் லைப்சிக் போன்ற நகரங்களுக்கு பரவியது.
A.K. பிராங்கே என்பவர் தான் இதற்கு தலைவராக இருந்தார். இவர் ஹல்லே பல்கலைக்கழகத்தில் இறையியல் பேராசிரியராக இருந்தார். இவர் தம் மாணவர்களுக்கு அருட்தொண்டு நற்செய்திபணி வாஞ்சையை ஏற்படுத்தினார். இதனால் கிட்டத்தட்ட 60 நற்செய்தியாளர்கள் உலகத்தின் பல பகுதிகளுக்கு சென்றனர். அதில் பர்தலொமேயு சீகன் பால், ஹென்றி ப்ளூட்சோவ், கிறிஸ்டியன் பிரரெடிக், சுவாட்ஸ் போன்றோர் இந்தியாவிற்கு வந்தனர்.
பெரிய எழுச்சி (The Great Awekneing)
அமெரிக்க நாடுகளின் காலனியால் நடைபெற்ற சமய புத்தெழுச்சி இயக்கம். ஜோனத்தான் எட்வர்ட்ஸ், ஜார்ஜ் ஒயிட் பீல்டு, கில்பர்ட் டென்டென்ட் இவர்களின் தலைமையில் இந்த இயக்கம் ஏற்பட்டது. பகுத்தறிவு வாதம், சம்பிரதாயம், சடங்குகள் போன்றவற்றை எதிர்த்து ஏற்பட்ட இயக்கம் இதுவாகும்.
வியக்கம் பக்தி வாழ்வையும் சுய விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது. இது நான்கு கால கட்டமாக நடந்தது.
1) 1732 - 1740 (I Phase)
2) 1800 - 1840 (II Phase)
3) 1850 - 1900 (III Phase)
4) 1960 - 1970 (IV Phase)
