Type Here to Get Search Results !

CSI மூன்றாம் வழிபாட்டு முறைமை | Church of South India Third Service | Jesus Sam

தென்னிந்தியத் திருச்சபை
மூன்றாம் வழிபாட்டு முறைமை


வாழ்த்தும் வரவேற்பும் [Greetings]
பெற்றவர், மைந்தர், தூய ஆவியாரின் திருப்பெயராலே. ஆமென்.
இந்த நாளின் மரபு வழிபாட்டிற்கு வருகை தந்துள்ள உங்கள் அனைவரையும் மூவொரு கடவுளின் திருப்பெயராலே அன்போடு வாழ்த்தி வரவேற்கிறேன்.
I greet and welcome you all for this traditional service in the name of our Triune God.

(இந்த வழிபாடு தென்னிந்திய திருச்சபை மூன்றாம் வழிபாட்டு முறைமையை பின்பற்றி நடைபெறும்)

தொடக்க இறைவேண்டல் (Opening Prayer)
(எல்லாரும் எழுந்து நிற்க, வழிபாடு நடத்துபவர் தம் சொந்த சொற்களால் இறைவேண்டல் செய்வார்)
(ஆண்டவரை நோக்கி வேண்டிக்கொள்வோம்)
(Let us Pray)
எங்கள் தாயும் தந்தையுமாகிய கடவுளே, நீர் தந்த இந்த புதிய நாளுக்காக, புதிய நாளின் காலைப் பொழுதிற்காக உமக்கு நன்றி படைக்கிறோம்.  சென்று போன நாட்கள் முழுவதும் கண்ணின் மணி போல் எங்களைக் பாதுகாத்து, இந்த புதிய நாளைக் காணச் செய்த உம்முடைய தயவுக்காக நன்றி செலுத்துகிறோம்.  இந்த நேரத்திலும், உமது பாதத்தில் அமர்ந்து, உம்மை வழிபட நீர் தந்த வாய்ப்பிற்காய் உமக்கு நன்றிகளை ஏறெடுக்கிறோம்.  சகோதரர் ஒன்றுபட்டு வாழ்வது எத்துணை நன்று, எத்துணை இனியது! என்ற திருமொழிக்கிணங்க, சகோதரத்துவ ஐக்கியத்தோடு, உம்மை நோக்கிப் பார்க்க நீர் கொடுத்த வாய்ப்பிற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். இந்த வழிபாட்டின் தொடக்கம் முதல் நிறைவு மட்டுமாய் உம்முடைய இருத்தல் நிலையை நாங்கள் உணர்ந்து கொள்ள அருள் தாரும்.  இவையனைத்தையும் இறைமகன் இயேசு கிறிஸ்துவின் வழியாய் இறஞ்சுகிறோம் எங்கள் பெற்றவராம் கடவுளே. ஆமென். 

ஒரு பாடல் (Praising the Song)
(கடவுளை போற்றுவதற்கு உதவியாக கிறிஸ்து சபை பாமாலைகளில் 267--வது பாமாலை, போற்றும் போற்றும் புண்ணிய நாதரைப் போற்றும் என்ற பாடலை நாம் யாவரும் எழுந்து நின்று பாடுவோம்)

1. போற்றும், போற்றும்! புண்ணிய நாதரைப் போற்றும்!
வானோர் கூடிப் பாடவும் இன்பமாய்,
பாரிலேயும் நாம சங்கீர்த்தனம் செய்ய;
மாந்தர் யாரும், வாரும் ஆனந்தமாய்.
நேச மேய்ப்பன் கரத்தில் ஏந்துமாறு
இயேசு நாதர் நம்மையும் தாங்குவார்;
போற்றும், போற்றும்! தெய்வ குமாரனைப் போற்றும்!
பாதுகாத்து நித்தமும் போஷிப்பார்.

2. போற்றும், போற்றும்! புண்ணிய நாதரைப் போற்றும்!
பாவம் போக்கப் பாரினில் ஜென்மித்தார்;
பாடுபட்டுப் பிராணத் தியாகமும் செய்து
வானலோக வாசலைத் திறந்தார்.
மா கர்த்தாவே, ஸ்தோத்திரம் என்றும் என்றும்!
வாழ்க, வாழ்க, ஜெகத்து ரட்சகா!
அருள் நாதா, மாசணுகா பரஞ்சோதி,
வல்லநாதா, கருணை நாயகா!

3. போற்றும், போற்றும்! புண்ணிய நாதரைப் போற்றும்!
விண்ணும் மண்ணும் இசைந்து பாடவும்;
போற்றும், போற்றும், மீட்பர் மகத்துவமாக
ஆட்சிசெய்வார் நித்திய காலமும்;
ஏக ராஜா, மாட்சிமையோடு வந்து,
இயேசு ஸ்வாமி, பூமியில் ஆளுமேன்;
லோகம் எங்கும் நீதியின் செங்கோலை ஓச்சி
ஜோதியாகப் பாலனம் பண்ணுமேன்.

கடவுளைத் தொழல்
(தொடர்ந்து நாம் நின்றவாறே கடவுளைத் தொழுவோம், வழிபடுவோம் வாரீர் நூலில் 80-ம் பக்கம்)

நடத்துனர்: நன்றியோடு அவர்தம் திருவாயில்களில் நுழையுங்கள், புகழ்ப்பாடலோடு அவர்தம் முற்றத்திற்கு வாருங்கள், அவருக்கு நன்றி செலுத்தி, அவர் பெயரைப் போற்றுங்கள்.

அவை: ஏனெனில், ஆண்டவர் நல்லவர், என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு, தலைமுறை தோறும் அவர் நம்பத்தக்கவர். (திருப்பாடல் 100:4,5)

நடத்துனர்: வாருங்கள், தாள்பணிந்து அவரைத் தொழுவோம், நம்மை உருவாக்கிய ஆண்டவர் முன் முழந்தாளிடுவோம்.

அவை: அவரே நம் கடவுள், நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள், நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள். இன்று அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம். (திருப்பாடல் 95:7)

நடத்துனர்: ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக் கூடியவர் யார்?

அவை: கறைபடாத கைகளும், மாசற்ற மனமும் உடையவர், பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர், வஞ்சக நெஞ்சோடு ஆணையிட்டுக் கூறாதவர்.

நடத்துனர்: எங்கள் தலைவரும் கடவுளுமாகிய உம்மிடத்தில் இரக்கமும் மன்னிப்பும் உண்டு. நாங்களோ உம்மை எதிர்த்து நின்றோம். எங்கள் கடவுளாகிய ஆண்டவர் தம் ஊழியர்களான இறைவாக்கினர் வழியே தம் திருச்சட்டங்களை அளித்து அவற்றின் வழியில் நடக்குமாறு பணித்தார். (தானியேல் 9: 9-10)

அவை: கடவுளுக்கேற்ற பலி, நொறுங்கிய நெஞ்சமே: கடவுளே, நொறுங்கிய ஒடுங்கிப்போன நெஞ்சத்தை நீர் அவமதிப்பதில்லை. (திருப்பாடல் 51:17)

நடத்துனர்: பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். (மத்தேயு 11:25)

அவை: நான் புறப்பட்டு என் பெற்றவரிடம் போய், 'பெற்றவரே, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்' என்பேன். (லூக்கா 15:18)

அனைவரும்: என் கற்பாறையும், மீட்பருமான ஆண்டவரே, என் வாயின் சொற்கள் உமக்கு ஏற்றவையாய் இருக்கட்டும். என் உள்ளத்தின் எண்ணங்கள் உமக்கு உகந்தவையாய் இருக்கட்டும். (திருப்பாடல் 19:14)

மன்றாடுவோம் (Prayer)
(மன்றாடுவோம்)
நடத்துநர்: அனைத்து ஆற்றலும் பொருந்திய கடவுளே, நாங்கள் எங்கள் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் வழியாக உம் திருமுன் எங்கள் வணக்கத்தையும் நன்றியையும் செலுத்த வந்திருக்கிறோம். எங்கள் மீறுதல்களை உண்மையாக அறிக்கை செய்யவும், மற்றவர்களுக்காகவும் எங்களுக்காகவும் மன்றாடவும் உதவி செய்யும். உம் திருச்சொற்களை நாங்கள் கேட்கும்போது உம் அன்பின் பெருமையை மிக உண்மையாக அறிந்து கொள்ளவும், உம் அருளின் கனிகளை எங்கள் வாழ்வில் காட்டவும், அருள்புரிய வேண்டும் என்று எங்கள் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் வழியாக வேண்டிக் கொள்கிறோம். ஆமென்.

பிழை உணர்தல்: (Confession of Sins)
(கடவுளின் திருமுன்னிலையில்  கூடியிருக்கிற நாம் நம்முடைய பிழைகளை உணருவோம்)
நடத்துனர்: பாவம் நம்மிடம் இல்லை என்போமென்றால், நம்மையே நாம் ஏமாற்றிக் கொள்வோம். உண்மையும் நம்மிடம் இராது. மாறாக நம் பாவங்களை நாம் ஒப்புக் கொள்வோமென்றால் கடவுள் நம் பாவங்களை மன்னித்துக் குற்றம் அனைத்திலிருந்தும் நம்மைத் தூய்மைப்படுத்துவார். ஏனெனில் அவர் நம்பிக்கைக்குரியவர், நேர்மையுள்ளவர். (1 யோவான் 1:8,9)

நம் தலைமைக் குரு நம்முடைய வலுவின்மையைக் கண்டு இரக்கம் காட்ட இயலாதவர் அல்லர்; மாறாக எல்லா வகையிலும் நம்மைப் போல சோதிக்கப்பட்டவர் எனினும் பாவம் செய்யாதவர். (எபிரேயர் 5 :15)

(சற்று நேர அமைதிக்குப்பின் அனைவரும் சேர்ந்து அறிக்கை செய்வது)

(நாம் ஆண்டவருக்கு விரோதமாய் செயல்பட்டு, நம்முடைய சிந்தனைகளினாலும், செயல்களினாலும், கடவுளை காயப்படுத்தின பிழைகளை உணர்ந்தவர்களாக பின்வரும் பிழை பொறுத்தருளலுக்குரிய அறிக்கையை சேர்ந்து ஏறெடுப்போம்)
(Let us Confess our Sins)
அனைவரும்: கடவுளே, உமது பேரன்புக்கேற்ப எங்களுக்கு இரங்கும். உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப எங்கள் குற்றங்களைத் துடைத்தருளும். எங்கள் தீவினை முற்றிலும் நீங்கும்படி எங்களைக் கழுவியருளும். எங்கள் பாவம் அற்றுப்போகும்படி எங்களைத் தூய்மைப்படுத்தியருளும். ஏனெனில் எங்கள் குற்றங்களை நாங்கள் உணர்கிறோம். எங்கள் பாவம் எப்போதும் எங்கள் மனக்கண்முன் நிற்கின்றது. உமக்கு எதிராக நாங்கள் மீறுதல் செய்தோம். உம் பார்வையில், தண்டனைத் தீர்ப்பில், நீர் மாசற்றவராய் விளங்குகின்றீர். கடவுளே தூயதோர் உள்ளத்தை எம்முள்ளே படைத்தருளும். உறுதிதரும் ஆவியைப் புதுப்பிக்கும் ஆவியை எம்முள்ளே உருவாக்கும். உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எங்களுக்கு அளித்தருளும், தன்னார்வ மனம் தந்து எங்களைத் தாங்கியருளும். (திருப்பாடல் 51:1-4, 10,12)

பிழைமன்னிப்பு (Absolution)
(பிழை மன்னிப்பின் உறுதியை பெற்றுக் கொள்வோம்)
நடத்துனர்: இரக்கமுள்ள ஆண்டவரே, உம்மிடத்தில் பற்றுறுதி கொண்டுள்ள மக்களாகிய நாங்கள், எல்லா மீறுதல்களும் நீங்கித் தூய்மையாவதற்கும், அமைதியான மனத்தோடே உமக்கு ஊழியம் செய்வதற்கும், எங்கள் மீறுதல்களுக்கு உம் பொறுத்தருளலையும், எங்களுக்கு அமைதியையும் அருளிச் செய்திட வேண்டுமென்று, எங்கள் மீட்பர் இயேசு கிறிஸ்துவின் வழியாக வேண்டிக் கொள்ளுகிறோம். ஆமென்.
(யாவரும் அமர்ந்திருந்து திருமறைப் பாடம் படிக்கக் கேட்போம்)

திருமறைப்பாடம் (Scripture Reading)
i) இந்த மரபு வழிபாட்டிற்கென்று படிக்கும்படியாக கொடுக்கப்பட்ட திருமறைப் பகுதி ஓசேயா இறைவாக்கினர் நூல் 5-ம் பிரிவு 13-ம் திருமொழி முதல் 6-ம் பிரிவு 11-ம் திருமொழி முடிய.
ஓசேயா 5-ம் பிரிவு 13-ம் திருமொழி முதல் 6-ம் பிரிவு 11-ம் திருமொழி முடிய
ii) The given text for today is From the Book of Hosea Chapter 5 Verse 13 to Chapter 6 Verse 11.
வேற்று நாட்டுடன் செய்த மதியீனமான உடன்படிக்கை
13. எப்ராயிம் தன் பிணியைக் கண்டுகொண்டான்; யூதா தன் காயத்தை உணர்ந்து கொண்டான்; எப்ராயிம் அசீரியாவில் புகலிடம் தேடி, யாரேபு அரசனுக்கு ஆளனுப்பினான். ஆனால், உங்களைக் குணமாக்கவோ, உங்கள் காயங்களை ஆற்றவோ அவனால் இயலாது.
14. ஏனெனில், நான் எப்ராயிமுக்குச் சிங்கத்தைப் போலவும், யூதாவின் வீட்டாருக்குச் சிங்கக்குட்டியைப்போலவும் இருப்பேன்; நான், நானே அவர்களைக் கவ்விப் பிடிப்பேன்; தூக்கிக்கொண்டு போவேன்; விடுவிப்பவன் எவனுமே இரான்.
15. தங்கள் குற்றத்திற்கான பழியை ஏற்று, என்னைத் தேடி வரும்வரை, நான் என் இடத்திற்குத் திரும்பிப் போய்விடுவேன். தங்கள் துன்பத்திலே அவர்கள் என்னைத் தேடுவார்கள்.
1. “வாருங்கள், ஆண்டவரிடம் நாம் திரும்புவோம்; நம்மைக் காயப்படுத்தியவர் அவரே, அவரே நம்மைக் குணமாக்குவார்; நம்மை அடித்து நொறுக்கியவர் அவரே, அவரே நம் காயங்களைக் கட்டுவார்.
2. இரண்டு நாளுக்குப் பிறகு நமக்குப் புத்துயிர் அளிப்பார்; மூன்றாம் நாளில் நம்மை எழுப்பி விடுவார்; அப்பொழுது நாம் அவர் முன்னிலையில் வாழ்ந்திடுவோம்.
3. நாம் அறிவடைவோமாக, ஆண்டவரைப்பற்றி அறிய முனைந்திடுவோமாக; அவருடைய புறப்பாடு புலரும் பொழுதுபோல் திண்ணமானது; மழைபோலவும், நிலத்தை நனைக்கும் இளவேனிற்கால மாரிபோலவும் அவர் நம்மிடம் வருவார்” என்கிறார்கள்.
4. எப்ராயிமே! உன்னை நான் என்ன செய்வேன்? யூதாவே! உன்னை நான் என்ன செய்வேன்? உங்கள் அன்பு காலைநேர மேகம் போலவும் கதிரவனைக் கண்ட பனிபோலவும் மறைந்துபோகிறதே!
5. அதனால்தான் நான் இறைவாக்கினர் வழியாக அவர்களை வெட்டி வீழ்த்தினேன்; என் வாய்மொழிகளால் அவர்களைக் கொன்று விட்டேன்; எனது தண்டனைத் தீர்ப்பு ஒளிபோல வெளிப்படுகின்றது.
6. உண்மையாகவே நான் விரும்புவது பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகின்றேன்; எரிபலிகளைவிட, கடவுளை அறியும் அறிவையே நான் விரும்புகின்றேன்.
7. அவர்களோ ஆதாம் என்ற இடத்தில் உடன்படிக்கையை மீறினார்கள்; அங்கே எனக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தார்கள்.
8. கிலயாது கொடியோர் நிறைந்த நகர்; அதில் இரத்தக்கறை படிந்துள்ளது.
9. கொள்ளையர் கூட்டம் வழிப்போக்கருக்காகக் காத்திருப்பது போல் குருக்களின் கூட்டம் செக்கேமுக்குப் போகிற வழியில் காத்திருந்து கொலை செய்கின்றது; கொடுமையன்றோ அவர்கள் செய்வது!
10. இஸ்ரயேல் குடும்பத்தாரிடம் மிகக் கொடிய செயலொன்றை நான் கண்டேன்; அங்கே எப்ராயிமின் வேசித்தனம் இருந்தது, இஸ்ரயேல் தீட்டுப்பட்டிருந்தது.
11. யூதாவே! உனக்கும் அறுவடைக்காலம் ஒன்று குறிக்கப்பட்டிருக்கின்றது. நான் என் மக்களை நன்னிலைக்குத் திரும்பக் கொணரும் போது,
(படிக்கும்படியாக கொடுக்கப்பட்ட திருமறைப்பாடம் படித்து முடிந்தாயிற்று.  கடவுளுக்கே மாட்சி உரித்தாகுக)

பாடல் (Song)
(அருளுரைக்கு ஆயத்தமாக கண்களை மூடி ஆண்டவரை நோக்கிப் பார்ப்போம்)
ஒன்றுமில்லை நான் ஐயா
உம்மாலன்றி ஒன்றும் செய்யேன்
அன்று சீஷர்க்களுக்களித்த ஆவியால்
இன்றே அடியேனை நிரப்பும்

அருளுரை (Sermon)
இறை வேண்டல்
என் கற்பாறையும் மீட்பருமான ஆண்டவரே! என் வாயின் சொற்கள் உமக்கு ஏற்றவையாய் இருக்கட்டும்; இங்கே கூடியிருக்கும் அனைவரின் எண்ணங்களும் உமக்கு உகந்தவையாய் இருக்கட்டும்.  அர்ப்பணும், நீசனுமான பயனற்ற பணியாளன் நான், அடியேனை தற்பரன் எடுத்து பயன்படுத்தும், எங்களோடு நீர் பேசும், மீட்பர் பாதம் பணிந்து கெஞ்சுகிறோம், நல்ல கடவுளே. ஆமென்.
>>>>>>>>>>>>>>
Gist in English
3 points we are going to discuss.
1. First point is: I Can do Everything:
Forgetting the Lord, and asking help to the enemy.
Hosea 5:13 Says Ephriam asked help to assyria, But, the King is notable to cure you, or heal your wounds.
2. Second point is: Fake Repentance:
Hose 6:1 - Says, Come let us, return to the Lord. But, it is not a true repentance.
3. Last point is: Fake love towards Lord:
Hosea 6:4 - Says, Lord Saying that, your love is, like a morning clouds, like the dew that goes away early.
 
திருத்தூதுவர் பற்றுறுதியறிக்கை: (Creed)
(அருளுரையைக் கேட்ட நாம், அனைவரும் எழுந்து நின்று நம்முடைய பற்றுறுதியை திருத்தூதுவர் பற்றுறுதி அறிக்கையின் வழியாக உறுதிமொழிவோம்)
விண்ணையும் மண்ணையும் படைத்த அனைத்து ஆற்றல் பொருந்திய பெற்றவராகிய கடவுளை நம்புகிறோம்.

அவர்தம் ஒரே மைந்தராகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவையும் நம்புகிறோம். அவர் தூய ஆவியாராலே கன்னி மரியாவிடம் கருக்கொண்டு பிறந்தார். பொந்தியு பிலாத்துவின் காலத்தில் பாடுபட்டு சிலுவையில் அறையப்பெற்று, இறந்து, அடக்கம் செய்யப்பெற்றுப், பாதாளம் இறங்கினார். மூன்றாம் நாள் இறந்தோரிடையே இருந்து எழுந்தருளினார். விண்ணகம் ஏறி அனைத்து ஆற்றலும் பொருந்திய பெற்றவராம் கடவுளின் வலப்பக்கம் வீற்றிருக்கிறார். அவ்விடத்திலிருந்து உயிர் உள்ளோரையும், இறந்து விட்டோரையும் நடுத்தீர்க்க வருவார்.

தூய ஆவியாரையும் நம்புகிறோம். பொதுவாக இருக்கிற தூய திருச்சபையும், தூயோரின் கூட்டுறவும், பிழைபொறுப்பும், உடல் உயிர்ப்பும், மெய்வாழ்வும் உண்டென்று நம்புகிறோம். ஆமென்.
(நாம் அறிக்கை செய்த இந்த பற்றுறுதியில் உயிர் உள்ள வரைக்கும் நிலைத்திருக்க கடவுள் துணை செய்வாராக. ஆமென்)

நன்றி செலுத்துதலும் இறைவேண்டலும் (Intercession):
(நாம் அமர்ந்த நிலையில் நன்றிகளையும், மன்றாட்டுக்களையும் ஏறெடுப்போம்)
நன்றி இறைவேண்டல்:
நன்றி செலுத்துவோம்
1) வாழ்வளிக்கும் வல்ல கடவுளே இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுக்கு விண்வெளி மையத்தில் ஆய்வுகளை நல்ல முறையில் நிறைவு செய்யவும் 14 நாட்கள் பயணத்தை நிறைவு செய்யவும் நல்ல முறையில் பூமி திரும்புகிறதற்கு நீர் செய்த அருளுக்காக இறைவா உமக்கு நன்றி செலுத்துகிறோம்.

2) வழிநடத்தும் வல்ல கடவுளே மருத்துவத்துறையில் தமிழ்நாடு சிறந்து விளங்குவதற்காகவும் இந்திய நாட்டிலேயே தமிழ்நாடு சுகாதாரத்துறையில் முன்னணியில் இருப்பதற்காகவும் இறைவா உமக்கு நன்றி செலுத்துகிறோம்.

மன்றாடுவோம்:
(தொடர்ந்து மன்றாடுவோம்)
1) பாதுகாக்கும் வல்ல கடவுளே, அடிக்கடி விமானங்களில் ஏற்படும் கோளறுகள், விபத்துகள் போன்றவை சரிசெய்யபடவும், இது போன்ற தொடர் விபத்துகள் நிகழாமல் மக்கள் பாதுகாப்பான பயணங்கள் மேற்க்கொள்ளவும் இறைவா உம்மிடம் மன்றாடுகிறோம்.

2) ஞானத்தின் ஊற்றாம் நல்ல கடவுளே கல்வி வளர்ச்சி நாளாகிய இன்றைய தினத்தில் அனைத்து மக்களுக்கும் நிறைவான கல்வி கிடைக்கவும், அதன் வழியாக மாற்றுறுருவாக்க சமுதாயத்தை உருவாக்க அனைவருக்கும் உமது ஆற்றலை தந்து உதவிட இறைவா உம்மிடம் மன்றாடுகிறோம்.

இவை அனைத்தையும் இறைமகனே இயேசு கிறிஸ்துவின் வழியே வேண்டிக் கொள்கிறோம் அன்பின் கடவுளே. ஆமென்.

ஆண்டவர் கற்பித்த மன்றாட்டு (Lord's Prayer)
(நன்றியையும், மன்றாட்டையும் ஒன்று திரட்டி ஆண்டவர் இயேசு கிறிஸ்து கற்பித்த இறை வேண்டலை இணைந்து ஏறெடுப்போம்)
(Let us say our Lord's Prayer)
விண்ணுலகிலிருக்கிற எங்கள் பெற்றவராகிய கடவுளே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக. உமது ஆட்சி வருக. உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவதுபோல் மண்ணுலகிலும் நிறைவேறுக. இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளது போல எங்கள் குற்றங்களை மன்னியும். நாங்கள் சோதனைக்கு உட்படும்போது. தீயோனிடமிருந்து எங்களை விடுவியும். ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமக்கே. ஆமென்.

ஒப்படைப்போம்: 
நம்மை நாமே கடவுளிடம் அமைதியாக ஒப்படைப்போம்.


இறைவாழ்த்து (Benediction)
(இறை வாழ்த்து பெற்றுக்கொள்வோம்)
(Let us resive the Benediction)
நம் மீட்பர் இயேசுகிறிஸ்துவின் அருளும், கடவுளின் அன்பும், தூய ஆவியாரின் திருவுறவும், நம் ஒவ்வொருவரோடும் நின்று நிலவுவனவாக. ஆமென்.

இறைமாட்சிப்பாடல் (Doxology)
(வழிபாட்டின் நிறைவுப் பாடலாக கிறிஸ்தவ கீர்த்தனைகளில் 320-வது கீர்த்தனை, மங்களம் சதா ஜெய மங்களம் வேதா என்ற பாடலை நாம் யாவரும் எழுந்து நின்று பாடுவோம்)

மங்களம் சதா ஜெய – மங்களம் வேதா
எங்கள் துங்கமங்களர்க்கு – மங்களம் சதா

1. அணைத்துக்காத்தவா – உல – கனைத்தும் படைத்தவா
இணையில்லா பிதாவுமக்கு மங்களம் சதா

2. யேசுநாயாகா – எம் – நேசநாயகா
மாசில்லாத சுதனுமக்கு மங்களம் சதா

3. ஞானவாரியே – திரு – வானமாரியே
ஆனந்தசுத்தாவியுமக்கு மங்களம் சதா

(நன்றி அரிதலான இருதயத்தோடு அனைவரும் இணைந்து சொல்லுவோம்)
என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு!
என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! (திருப்பாடல்கள் 103:1,2)

நடத்துனர்: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.

சபை: அவர் உம்மோடும் இருப்பாராக.

நடத்துனர்: இறை அமைதியோடே சென்று வாருங்கள். 

சபை: கடவுளின் திருப்பெயராலே. ஆமென்.

இந்த நாளின் மரபு வழிபாட்டிற்காக இறை வேண்டல் செய்த, உழைத்த, ஆலோசனைகள் வழங்கிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன். 
குறிப்பாக எனக்கு உதவி செய்த நண்பர்களுக்கு நன்றி சொல்லுகிறேன்.

இந்த நாள் இனிய நாளாய் அமைய வாழ்த்துகள்!

GOD BLESS YOU ALL!!

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.