Type Here to Get Search Results !

Critic Service | Arun Kumar Beter | Theological Education: Making of the Faithful | இறையியல் கல்வி: நம்பிக்கைக்குரியவர்களாக்குதல் | Jesus Sam

தமிழ்நாடு இறையியல் கல்லூரி
அரசரடி, மதுரை 625016
திறனாய்வு வழிபாடு 2025-2026

செம்பொருள்
“இறையியல் கல்வி: நம்பிக்கைக்குரியவர்களாக்குதல்”
"Theological Education: Making of the Faithful"

நாள்: 2025 ஜீலை 09 (ஆனி – 25) புதன்கிழமை
இடம்: கிறித்தரசர் வழிபாட்டு மனை
நேரம்: காலை 6.00 மணி

விதைப்பவர்: திருமிகு. அருண்குமார் பீட்டர். S
களை எடுப்பவர்: திருமிகு.ஸ்டாலின்.R
பலன் தருபவர்: முனைவர். இவாஞ்சலின்.S


அமைதி நேர சிந்தனை...
சீர்திருத்த திருச்சபையின் அருட்பணியாளர் பர்தொலொமேயு சீகன்பால்கு (1682-1719)
PROVEST BARTHOLOMAUS ZIEGENBALG

இந்திய கிறிஸ்தவ வரலாற்றில் குறிப்பாக தமிழ்நாட்டில் மறக்க முடியாத நினைவுக் கூற வேண்டிய சிறப்பான நாள் 1706 ஜூலை 09 வெள்ளிக்கிழமை அன்று தரங்கையின் தாரகையாய் சீர்திருத்த திருச்சபையின் முதல் அருட்பணியாளர் பர்தொலொமேயு சீகன்பால்கு அவர்கள் இந்தியாவின் தரங்கம்பாடியில் காலடியெடுத்து வைத்த திருநாள் ஆகும்." சூரியனின் கதிரொளிகள் இந்தியா ஒளிரப் போகிறது” என்று அறிவித்துக் கொண்டிருந்தன. கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றிய குடி தமிழ் குடி என்பர். இப்படி சிறப்பு வாய்ந்த தமிழ்நாட்டில் ஜெர்மனியம், ஆங்கிலம், கிரேக்கம் எபிரேயம் மொழிகளில் புலமைப் சீகன்பால்குவுக்கோ தமிழ் தெரியாது. போன்ற பெற்ற

சிறு குழந்தைகளைப் போல மணலில் எழுதிப் பழகி தமிழ் மொழியை கற்றுக் கொண்டார். இரண்டு ஆண்டுகளில் சிறந்த பண்டிதரானார். அவர் இந்த உலகில் வாழ்ந்த நாட்கள் 36 வருடம் தான். ஆனால் தன்னுடைய குடும்பத்திற்கு நேரம் செலவிட்டதை விட தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்காக அதிகமாக தன்னை அர்ப்பணித்தவர். அதன் விளைவாக ஏழை எளிய பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடங்கள் விடுதிகள் உருவாக்கினார். அச்சுக்கூடம், புதிய ஏற்பாட்டு மொழிபெயர்ப்பு, இறையியல் கல்லூரி போன்றவற்றை உருவாக்கி செயல்படுத்தினார். அவர் கற்றுக் கொண்ட இறையியல் அவரை நாடு விட்டு நாடு சென்று அவரை பயன்படுத்தியது. "இறையியல் கல்வியை கற்றுக் கொண்டிருக்கிற நம்மை திருச்சபையும் சமுதாயம் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது. சிந்திப்போம் செயல்படுவோம்..”


வாழ்த்தும் வரவேற்பும் (Greeting and Welcome)
திரியேக கடவுளுக்கு மாட்சிமை உண்டாவதாக. ஆமென். அமைதியும் அருளும் நிறைந்த காலை பொழுதிலும் திறனாய்வு வழிபாட்டின் வழியாக கடவுளோடு உள்ள ஐக்கியத்தை வலுப்படுத்தும் படியாக வருகை தந்திருக்கிற உங்கள் அனைவரையும் மிகுந்த அன்போடு வாழ்த்துகிறேன், வரவேற்கிறேன். உங்கள் அனைவருக்கும் அன்பின் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

தொழுகைக்கு அழைப்பு: (Call to Worship)
"வானங்கள் இறைவனின் மாட்சியை வெளிப்படுத்துகின்றன. வான்வெளி அவர்தம் கைகளில் வேலைபாட்டை விவரிக்கின்றது" (திருப்பாடல்கள்19:1) என நம்மை ஒன்றுபடுத்தி, நெறிப்படுத்தி, பயன்படுத்துகிற கடவுளை படைப்புகளோடு இணைந்து நாம் நன்றி நிறைந்த நெஞ்சைத்தோடும், ஒப்படைப்புணர்வோடும் வாழ்த்தி வணங்கி வழிபடுவோம் வாருங்கள்.

தொடக்க இறைவேண்டல் (Opening Prayer)
“இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே” (விடுதலைப் பயணம் 3:14) என்று வாழ்வு தருகின்ற தூய கடவுளே நீர் அருளிய புதிய நாளின் நல்வாழ்வுக்காகவும், வழிபாட்டு சூழலுக்காகவும் உமக்கு நன்றி சொல்லுகிறோம். எங்களுடைய பற்றுறுதி வாழ்வை மேம்படுத்திக்கொள்ள அருள் தாரும். இறையரசின் விழுமியங்களுக்கு நேராக எங்களை நாங்கள் மாற்று உருவாக்கம் செய்து கொள்ள இந்த வழிபாடு எங்களுக்கு உதவியாக அமைய துணை புரியும். தொடக்க முதல் நிறைவு மட்டும் உம்முடைய இருத்தல் நிலையை உணர அருள்தாரும். இவை அனைத்தையும் இறைமகன் இயேசு கிறிஸ்துவின் வழியே மிகுந்த தாழ்மையுடன் வேண்டுகிறோம் நல்ல கடவுளே ஆமென்.

போற்றிப்பாடல்: (Song of Praise)
(போற்றிப் பாடல் பாட பெறும் பொழுது ஒளியேற்றல் நடைபெறும்)
வழி, வாய்மை,வாழ்வு எங்கள் அடித்தளமாகும்
வாழ்வு தேடுடும் வையம் எங்கள் பணிக்களமாகும்

வழிபாடு வாழ்வில் எங்கள் உயிர்நிலையாகும்
வானரசு வளர்ந்திடவே அது உரமாகும்.

பல்லவி
அரசரடி, தமிழ் இறையியல் இல்லம் கிறிஸ்(து)
அரசரடி பணியும் அன்பர்கள் இல்லம்

1. தனிவாழ்வும், திருப்பணியும், இறையியல் உணர்வும்
தகுமுறையில் மறை அறிந்து தினம் உருவாகும்
மனித நலம் மனதில் கொண்டுடு எழுந்திடுடும் தீரம்
மனமுவந்த ஈடுடூபாட்டால் கற்றிடுடூம் பாடம்

2. உள்ளோங்கி ஒடுங்காது உலகினைக் காணும்
உரங்கொண்ட தீமை பல ஒழித்திட முனையும்
உள்ளங்களில் இறையன்பை விதைத்திட விழையும்
உன்னதரின் ஊழியர்கள் உருப்பெறச் செய்யும்

பாடல், பண்:
இஸ்ரவேல் செல்வநாயகம்
ஜேம்ஸ் தியாபிலஸ் அப்பாவு

பிழை உணர அழைப்பு: (Call to Confession)
“உங்கள் குற்றங்கள் எவ்வளவு மிகுதியானது என்றும் உங்கள் பாவங்கள் எத்தனைக் கொடியவை என்றும் நான் அறிவேன்" (ஆமோஸ் 5:12) "உங்கள் பாவங்கள் போக்கப்படும் பொருட்டு மனம் மாறி அவரிடம் திரும்புங்கள்." (திருத்தூதர் பணிகள் 3:14) என்று நம் மீது இரக்கம் உள்ள கடவுள் நம்மை அழைக்கிறார்.கடவுளின் திருப்பணிக்கு என அர்ப்பணித்து செயல்பட வந்திருக்கிற நாம் நமது பிழைகளை கடவுள் திருமுன் மன தாழ்மையாய் அறிக்கை செய்வோம் வாருங்கள்.

பிழை அறிக்கை (Confession of sins)
(அனைவரும் இணைந்து அறிக்கை செய்வோம்)
கடவுளே இறையியல் கல்வி கற்றுக் கொடுக்கின்ற இறையரசின் விழுமியங்கள் ஆன நீதி, உண்மை, சமத்துவம், மக்களுக்கு தொண்டு செய்வது போன்றவற்றை எங்களுடைய வாழ்க்கையில் வெளிப்படுத்தாமல் மாறாக இறையியல் கல்வியை சுயநலத்திற்காகவும் தற்புகழ்ச்சிக்காகவும் பயன்படுத்தின இழி நிலையை எண்ணி மனம் வருந்தி மன்னிப்பு வேண்டுகிறோம் இறைவா!

(இசை)

இறைவா இறையியல் கல்வி எனும் குருத்துவ படிப்பு அருள் பொழிவு பெறுபவருக்கு மட்டும் குத்தகைக்கு கொடுக்கப்பட்ட படிப்பு என்று நினைத்து அருட்பணியாளராகிய நாங்கள் அழைப்பை மறந்தவர்களாய் அதிகாரத்தோடு செயல்பட்ட இழிநிலையை வேண்டுகிறோம் இறைவா! எண்ணி மனம் வருந்தி மன்னிப்பு

(இசை)

கடவுள் அனைவரையும் ஏற்றுக்கொள்கிறார், ஆனால் ஆணாதிக்க சிந்தையை கையில் எடுத்துக் கொண்டு திரு அவையின் பொது சொத்தான இறையியல் கல்வியை ஆண்கள் மட்டுமே கற்பதற்கு தகுதி உடையவர்கள் பெண் மக்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையை எண்ணி மனம் வருந்தி மன்னிப்பு வேண்டுகிறோம் கடவுளே! ஆமென்.

நாம் நம்முடைய தனிப்பட்ட பிழைகளை அறிக்கை செய்வோம்

பிழை மன்னிப்பின் உறுதி (Absolution)
"மேற்கினின்று கிழக்கு எத்துனை தொலைவிலுள்ளதோ அத்துணை தொலைவிற்கு நம் குற்றங்களை நம்மிடமிருந்து அவர் அகற்றுகின்றார்" (திருப்பாடல்கள் 103:12) என்று திருமொழியின் படி நம்மில் யாரெல்லாம் நாம் செய்த தப்பிதங்களுக்காய் உண்மையாய் மனம் வருந்தி வேண்டிக்கொண்டோமோ அவர்களையெல்லாம் மிகுந்த இரக்கமுள்ள கடவுள் பாவ மன்னிப்பை நமக்கு கட்டளையிட்டு அருளி நிலை வாழ்விற்கு நேராய் நம்மை வழி நடத்துவாராக ஆமென்.

திருமறைப் பாடங்கள் (Scripture Reading)
1. யோசுவா 4:1-9 (Joshua 4:1-9)

2. 1 தீமோத்தேயு 4 6:11-16 (1 Timothy 6:11-16)

3. தூய மத்தேயு 13:1-9 (St. Mathew 13:1-9)


சிறப்பு பாடல் (Special Song):
நான்காம் ஆண்டு நண்பர்கள் அனைவரும்
நாம் கொண்ட புரிதலை
இன்றோடு தொலைத்து
புதிய பார்வையில்
திருமறை படித்து (2)

திருமறை கூறும் இறையியல்
உலகத்தை உயிர்ப்பிக்கும் தொடர்பியல் (2)

1. படைப்பின் நோக்கம் புரிந்தது
பார்வை இன்றே தெளிந்தது
யார் இதை சொன்னது
எங்கே நடந்தது
இன்றோடு பொருத்திடு
உண்மை உரைத்திடு (2)
- திருமறை

2. கடவுளின் நோக்கம் புரிந்தது
சிந்தனை வடிவம் புதியது
வார்த்தையை ஆய்ந்திடு
பிழைகள் களந்திடு
ஆழம் விளக்கிடு
வாழ்வியல் பிரிந்திடு (2)
- திருமறை

3. புதிய பார்வையில் இறையியல்
இணைந்து கட்டுவோம் வாருங்கள்
ஏன் இது நடந்தது
எப்படி நடந்தது?
பின்புலம் தேடியே
பயணம் தொடர்ந்திடு 92)
- திருமறை

நாம் கொண்ட புரிதலை
இன்றோடு தொலைப்போம்
புதிய பார்வையில்
மீண்டும் படிப்போம் (2)

பாடல், பண் :கமாலியேல் நிக்சன்.ஏ. தேவியல் இளையர் IV

அருளுரை (Sermon)

பற்றுறுதி அறிக்கை: (Affirmation of faith)
பாடல் வழியாக (யூபிலி அரசடி புத்துயிர் பாடல் எண்: 305)
வானும் புவியும் வையகமும்
வனைந்த நல்ல பரனான
வானகத் தந்தையை நம்புகிறோம்

அவரொரே திருமகன் கன்னியிடம்
அனைவரின் நாதர் கிறிஸ்துவாய்
அவதரித்ததையும் நம்புகிறோம்

பிலாத்துவின் கீழவர் சிலுவையதில்
பெரும்பாடுகளுடன் இறந்தடங்கி
பெருங்குழி புகுந்ததை நம்புகிறோம்

உயிரோடெழுந்தார் மூன்றாம் நாள்
உயரே எழுந்து பரன் வலமே
உடனிருப்பதையும் நம்புகிறோம்.

உயிருள்ளோரும் இறந்தோரும்
உண்மையாம் தீர்ப்பை அடைந்திடவே
உறுதியாய் வருவார் நம்புகிறோம்

தூயாவி தூயோர் சபை உறவு
பாவ மன்னிப்பு உடல் உயிர்ப்பு
மெய் நிலைவாழ்வையும் நம்புகிறோம் .
- இசுரேல் செல்வநாயகம்
நடத்துனர்: நாம் பாடல் வழியாக அறிக்கை செய்த இந்த பற்றுறுதியில் உயிர் உள்ள வரைக்கும் நிலைத்திருக்க கடவுள் அருள் செய்வாராக.

அனைவரும்: ஆமென்

நன்றியும் மன்றாட்டும் (Thanks Giving and Intercessory Prayer)
நன்றி செலுத்துவோம்
1. அன்பின் கடவுளே எமது கல்லூரியின் அருட்பணித்திருப்பணி துறை வழியாக மாணவ நண்பர்களை திருச்சபை வழிபாடுகளில் பயன்படுத்தி பயிற்சி தருகின்ற ஒவ்வொரு ஆயர்பெருமக்களுக்காகவும், நிதி திரட்டல் பணிக்கு செல்கின்றபோது உதவி செய்கின்ற ஒவ்வொரு திருச்சபை மக்களுக்காகவும், ஆயர்மாருக்காகவும் இறைவா உமக்கு நன்றி சொல்லுகிறோம்.

2. அனைவரையும் வழி நடத்தும் நல்ல கடவுளே எமது கல்லூரியில் பெண்கள் மற்றும் பாலின கல்வித் துறையின் சார்பாக பெண்ணிய பார்வையில் பற்றுறுதி புரிந்து கொள்ளுதல் என்னும் தலைப்பில் இரண்டு நாட்கள் (07.07.2025 08.07.2025) நடைபெற்ற கருத்தரங்கு நல்ல முறையில் நடைபெற்றதற்காகவும் எம்முடன் பயிலும் மாணவிகளும், பெண் அருட்பணியாளர்களும் அதில் கலந்து கொண்டு பல நல்ல தகவல்களை பெற்றுக் கொண்டதற்காகவும் இறைவா உமக்கு நன்றி செலுத்துகின்றோம்.

மன்றாடுவோம்
1. ஞானத்தின் ஊற்றாம் நல்ல கடவுளே. செராம்ப்பூர் பல்கலைக்கழக குழுமத்தில் இணைப்பில் இருக்கின்ற 65 இறையியல் கல்லூரிக்காகவும், அதில் பணி செய்கின்ற முதல்வர், பயிற்றுவிப்போர், பயில்வோர், புதிதாக பொறுப்பேற்றிருக்கும் பதிவாளர் அருட்பணி.முனைவர்.ராபர்ட்சன் செல்வம் ஆகிய அனைவருக்கும் உம்முடைய ஆற்றலையும், பாதுகாப்பையும் தந்து உதவிட மன்றாடுகிறோம் இறைவா.

இவை அனைத்தையும் இறைமகன் இயேசு கிறிஸ்துவின் வழியே மிகுந்த தாழ்மையோடு வேண்டுகிறோம் நல்ல கடவுளே, ஆமென்.

ஆண்டவர் இயேசு கிறிஸ்து கற்பித்த மன்றாட்டு: (Lord's Prayer)
விண்ணுலகிலிருக்கிற எங்கள் பெற்றவராகிய கடவுளே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக. உமது ஆட்சி வருக உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவதுபோல் மண்ணுலகிலும் நிறைவேறுக. இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளது போல எங்கள் குற்றங்களை மன்னியும். நாங்கள் சோதனைக்குட்படும் போது, தீயோனிடமிருந்து எங்களை விடுவியும். ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமக்கே. ஆமென்.

ஒப்படைப்பு (Dedication)
நம்மையே நாம் கடவுளிடத்தில் ஒப்படைப்போம். வரலாற்றை கற்றுக் கொடுக்கின்ற, கட்டமைக்கின்ற, வாழ்வை உறுதிப்படுத்துகின்ற, இறையியல் கல்வியை எங்களுடைய வாழ்வை வாழ்வில் செயல்படுத்த,பிறருக்கு கற்றுக் கொடுக்க இறைவா எங்களையே உம்மிடம் ஒப்படைக்கிறோம் ஆமென்.

இறை வாழ்த்து (Benediction)
நாம் வாழுகின்ற சூழல்கள் வழியாய் இறையியலின் பரிமாணங்களை நாள்தோறும் கற்றுக் கொடுக்கும் கடவுளின் அன்பும், கற்றுக்கொண்ட தகவல்களை சமுதாய மாற்றத்தின் பற்றுறுதிக்கு நேராய் வழிநடத்திச் செல்ல ஆற்றல் தரும் இயேசு கிறிஸ்துவின் அருளும், இறையியல் விழுமியங்களை தலைமுறை தலைமுறையாய் பறை சாற்ற துணை புரியும் தூய ஆவியாரின் திரு உறவும் நம் அனைவரோடும் இன்றும் என்றும் நிலைத்திருப்பதாக ஆமென்

நிறைவு பாடல்: (Closing Song)
யூபிலி அரசரடி புத்துயிர் பாடல் எண்: 324
இறையியல் பயணம் தொடர்வோம் - திரு
மறைவழி நின்றே பயில்வோம்

சூழல்கள் தொடுத்திடும் வினாக்கள் நம்
சிந்தைக்கு துணைதரும் சவால்கள்
ஏழைகள் எழுப்பிடும் கேள்விகள்
நம் இறையியல் திசைவழி காட்டிக
- இறையியல்

1. திருச்சபை,வாழ்வினில் இறையியல் - சீர்
திருத்தமே வழங்கிடும் வாழ்வியல்
பொருத்தமாய் பணிதனைப் புரிந்திட நல்
புதுமைகள் படைத்திடும் இறையியல்
 - இறையியல்

2. விடுதலை வாழ்வினை நினைத்தே - நல்
வீரமாய் செயல்படும் இறையியல்
நடுநிலை துறந்தே நலிந்தவர் - தம்
நலனையே நாடிடும் இறையியல்
- இறையியல்

பாடல், பண் மெ.தாமஸ் தங்கராஜ்

நன்றி அறிதலான இருதயத்தோடு அனைவரும் இணைந்து சொல்லுவோம்
"என் உயிரே ஆண்டவரை போற்றிடு என் முழு உள்ளமே அவரது திருப்பெயரை ஏத்திடு என் உயிரே ஆண்டவரை போற்றிடு அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே. ஆமென்."

அனுப்புதல் (Sending Out)
நடத்துனர்: கடவுள் உங்களோடு இருப்பாராக

அவை: அவர் உம்மோடும் இருப்பாராக

நடத்துனர்: இறையியல் கல்வியின் வழியாய் பற்றுறுதி சமுதாயத்தை உருவாக்க புறப்பட்டு செல்வோம்

அவை: கடவுளின் திருப்பெயராலே ஆமென்.

வழிபாட்டில் கலந்து கொண்ட, உதவி செய்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்....

தட்டச்சு உதவி : திருமிகு.மு.மனோ ஃப்ராங்க்ளின், தேவியல் இளையர் - IV

அருளுரை
தலைப்பு
இறையியல் கல்வி: நம்பிக்கைக்குரியவர்களாக்குதல்
“Theological Education: Making of the Faithful”

திருமறை பகுதி
    யோசுவா 4:1-9
    I தீமோத்தேயு6:11-16
    மத்தேயு 13:1-9

இந்த வழிபாட்டிலே ஐக்கியப்பட்டு இருக்கிற உங்கள் அனைவரையும் மீண்டும் ஒரு விசை அன்புடன் வாழ்த்தி வரவேற்கிறேன். இந்த நாளில் நாம் அனைவரும் சிந்திக்கும்படியாக கொடுக்கப்பட்ட தலையங்கமானது. “இறையியல் கல்வி நம்பிக்கைக்குரியவர்களாக்குதல்” “Theological Education making of the faithful” நாம் வாழ்கின்ற உலகில் கல்வி என்பது மிக முக்கியமான ஒன்றாகும். அதுவும் கிறிஸ்தவ வாழ்வில் இறையியல் கல்வி என்பது பற்று உறுதி சார்ந்து அசைக்க முடியாத அவசியமான தேவையான ஒன்றாகும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்தியாவில் முதன் முதலில் இறையியல் கல்லூரியை 1716 ஆம் ஆண்டு அக்டோபர் 16-ல் தமிழ் மொழியில் தரங்கம்பாடியில் பர்த்தலோமேயு சீகன்பால்க் அவருடைய நண்பர் புளூச்சோ இணைந்து ஆரம்பித்தனர். அதனுடைய நோக்கம் எல்லா மக்களும் தமிழ் மொழியில் இறையியலை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதாகும்.

மார்ட்டின் லூதர் கிங் கூறும்போது, இறையியல் கல்வியின் நோக்கம் மனிதனை ஆழமாகவும் விமர்சன பார்வையிலும் சிந்திக்க தூண்டுவது என்கிறார்.

கார்ல் பார்த் கூறும்போது இறையியல் கல்வி என்பது "புரிதலைத் தேடும் நம்பிக்கை" என்றும் இறையியல் திருச்சபைக்கு சேவை செய்ய வேண்டும் என்றும், இயேசு கிறிஸ்து வழியாக கடவுளின் வெளிப்பாட்டில் அடித்தளமாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இறையியல் கல்வி மாணவர்களை அறிவுசார் அறிவுக்கு மட்டுமல்ல, கடவுளுடன் ஆழமான சந்திப்பிற்கு இட்டுச் செல்ல வேண்டும் எனக் கூறுகிறார்.

திமோத்தி டென்னோ என்பவர் இறையியல் கல்வி என்பது வெறுமனே அறிவை குவிப்பது மட்டுமன்று மாறாக இறைவனுக்கும் இறை மக்களுக்கும் உண்மையான தொண்டாற்றுவதற்கு ஏற்ப இதயத்தையும் மனதையும் வடிவமைப்பது என்கிறார்.

இறையியல் (Theology) என்ற வார்த்தை Theos மற்றும் Logos என்ற இரண்டு கிரேக்க சொற்றொடரை உள்ளடக்கியது ஆகும்.Theos என்றால் கடவுள் அல்லது இறைவன் என்றும். Logos என்றால் வார்த்தை என்றும் பொருளாகும். இறைவனையும் அவருடைய வார்த்தையும் படிப்பது தான் இறையியல் என்பதை நாம் அறிவோம். இந்த இரண்டு கூட்டு வார்த்தைகள் சொல்வது என்னவென்றால் கடவுள் யார, அவரின் தன்மை செயல்பாடு என்ன?, அவரைப் பற்றி அறிந்து கொள்வது இறை வார்த்தைகளை அறிவிப்பது , நம்புவது போன்றவற்றை உள்ளடக்கியது ஆகும். மேலும் இறையியல் கல்வி ஒருவரின் உள்ளத்தில் அபபக்தியை அகற்றி உள்ளத்தில் அகத் தெளிவை உண்டாக்கும். மேலும் ஒருவரை கடவுளிடம் நம்பிக்கைக்கு உரியவராக மாற்றுகிறது.

காரல் பார்த் கூறும்போது இறையியல் அனைத்தும் திருமறையை அடித்தளமாக கொண்டுள்ளது. இயேசு கிறிஸ்துவின் வாழ்வும் போதனையும் திருமறையை அடித்தளமாகக் கொண்டிருக்கிறது என்கிறார்.

இந்திய இறையாளர் எத்தென்னா கூறும்போது எந்த இறையிகளும் திருமறையை வறட்சி ஆக்கிட முடியாது என்கிறார்.

மேலும் கடவுளின் செயல்பாடுகளை சூழல் சார்ந்து பல்வேறு கண்ணோட்டத்தில் புரிந்து கொள்ளவும் புரட்டு உபதேசங்களில் இருந்து தற்காத்துக் கொள்ளவும் இறையியல் கல்வி உதவுகிறது.

இந்த சிறிய அறிமுகத்தோடு இந்த நாளின் அருளுரையானது மூன்று குறுந்தலைப்பின் கீழ் நாம் சிந்திக்க இருக்கிறோம். முதலாவது,

1. இறையியல் கல்வி: வரலாற்றைக் கற்றுக்கொடுக்கிறது
நாம் படிக்க கேட்ட நற்செய்தி பாடம் மத்தேயு பிரிவு 13:1-9. இந்த பகுதியில் அதே நாளில் என்பது ஓய்வு நாளை குறிப்பதாகும். வீட்டிலிருந்து கடலோரத்தில் அமர்ந்தார் என்பது கலிலேயா கடல் என்பதை குறிக்கிறது. மக்கள் பெருந்திரளாய் கூடி வரும் பொழுது படகில் ஏறி போதிக்கத் தொடங்குகிறார். பொதுவாக கடற்கரை மீனவர்களின் படகு தான் இயேசு கிறிஸ்துவின் அருளுரை மேடையாக இருந்தது. மக்கள் பெருந்திரளாய் கூடி வந்த சூழலில் விதைப்பவர் உவமையைப் பற்றி பேசுகிறார். கிரேக்க மொழியில் பேரபோல் Parabole என்னும் சொல் தமிழில் உவமை என மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. உவமை என்று மொழிபெயர்க்கப்பட்ட இந்த சொல் இயேசு கிறிஸ்துவின் தாய் மொழியான அரமேய மொழியில் மாஷால் என்ற சொல்லாகும். பொதுவாக இயேசு கிறிஸ்து அவருடைய வாழ்க்கை சூழலில் இறையரசு பற்றிய உண்மைகளை எளிய மக்கள் தம்முடைய சீடர்கள் எளிதில் புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் உவமைகளை , உதாரணங்களை பயன்படுத்துவார்.

பெரும்பாலும் இயேசு கிறிஸ்து கூறிய உவமைகள் அன்றைய சமய சமூக பொருளாதார நாகரீக பண்பாட்டுச் சூழல் வாழ்வியல் சார்ந்தவையாக காணப்பட்டது. உவமைகள் ஓர் உண்மையை அன்றாட வாழ்வில் சூழலில் விளக்கும் தொடர்பியல் முறையாகும். இறையரசின் மறை பொருளை விளக்கும் ஊடகமே உவமைகளாகும். உவமைகள் தொடர்ந்து சிந்திக்க தூண்டுகின்றன, நமக்கு சவால் விடுகின்றன. மாற்று சிந்தனைகள் மாற்றத்திற்கு நேராகவும் வழி வகுக்கின்றன.

இங்கு கூறப்படுகிற விதைப்பவர் உவமை பாலஸ்தீன விவசாய முறை ஒட்டி எழுந்த உவமையாகும். இங்கு விதைத்த பிறகு நிலத்தை உழுவார்கள். இங்கு விதைப்பவர் உவமையில் விதை என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். விதை வெளியில் உயிர் அற்றதைப் போல் அசைவில்லாமல் காணப்பட்டாலும் அதற்குள் மிகப்பெரிய ஆற்றல் மறைந்துள்ளது. சேகுவாரா கூறும்போது விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை என்று கூறுவார். இங்கு நிலத்தின் தன்மைகளை வெவ்வேறு நிலைகளில் வேறுபடுத்தி காட்டினாலும் மாறாக விதை என்பது இறைவனைப் பற்றியக் கல்வி, நிலம் என்பது மக்களின் உள்ளம். இறையரசின் விதை எல்லா இடங்களிலும் விதைக்கப்படுகிறது மாறாக இறையரசின் மதிப்பீடுகளான நீதி உண்மை சமத்துவம் போன்றவை ஆகும். இறையரசின் விதைகள் உயிர் தன்மை பெற்று ஆற்றல் பெற்று பல மடங்காக பலன் தர வேண்டும் என்பதை இந்த பகுதி உணர்த்துகிறது.

சில நேரங்களில் இப்படிப்பட்ட தகவல்களை செயல்பாடுகளை வெளிப்படுத்த வேண்டிய நாம் வழியருகே கற்பாறை முட்செடி ஆகிய இடங்களில் வளரக்கூடிய விதைகள் எந்த பிரச்சனைகளை சந்திக்கின்றதோ அதேபோல நாமும் உலக இடர்பாடுகள் சிற்றின்பங்கள் புரட்டு உபதேசங்கள் ஆகியவை நம்முடைய வளர்ச்சியை பாதிக்கின்றது. சில மக்களுடைய மனநிலை கடவுளுடைய வார்த்தையை ஏற்றுக் கொள்ள முடியாத செயல்படுத்த முடியாத நிலையில் இருக்கிறார்கள். ஆனால் அனைத்து இடர்பாடுகள் மத்தியிலும் தங்களுடைய பற்று உறுதி வாழ்வில் இறையரசின் தகவுகளை வெளிப்படுத்துகின்ற மக்கள் முடிவில்லா பலன்களை தந்து கொண்டே இருக்கிறார்கள். கடவுளுடைய விழுமியங்களை அனுதினமும் கற்றுக் கொண்டிருக்கிற நாம் செயல் வடிவில் விளைச்சலை கொடுக்க கடவுள் விரும்புகிறார். மேலும் இறையியல் கல்வி மக்களை நம்பிக்கைக்கு உரியவர்களாகவும், மேலும் மக்களை பற்றுறுதி வாழ்வின் வளர்ச்சி படிநிலைகளில் வாழ்வை உறுதிபடுத்திக் கொள்ள உதவுகிறது. இரண்டாவதாக,

2. இறையியல் கல்வி: வாழ்வை உறுதிப்படுத்துகிறது
நான் படிக்க கேட்ட முதலாம் உடன்படிக்கை நூலில் யோசுவா 4:1-9 வரை உள்ள திருமறை பகுதியில் இஸ்ரேல் மக்கள் சித்திமிலிருந்து புறப்பட்டு யோர்தானை கடக்கும் படியாக வருகிறார்கள். உடன்படிக்கை பேழையைத் தூக்கிச் சென்ற குருக்களின் பாதங்கள் பட்ட உடனே உலர்ந்த தரையாக மாறுகிறது. யோர்தானில் இருந்து எடுக்கப்பட்ட 12 கற்களை இஸ்ரேல் குலத்திற்கு ஒருவராக எடுத்து சுமந்து சென்று எரிகோவின் கிழக்கு பகுதியில் 12 கற்களை நாட்டினர். இந்த பகுதியில் வரக்கூடிய இந்த நிகழ்வு அவருடைய வருங்கால சந்ததியினருக்கு முன்மாதிரியான அடையாளமாக இருக்கிறது.

கடவுள் வரலாற்றில் எவ்வாறு செயல்பட்டார் கடவுளை பேச்சியை பற்று உறுதி அடுத்த தலைமுறையினருக்கு கடத்தப்படுகிறது. நாம் புரிந்து கொள்கிற கடவுளை பற்றிய புரிதல்கள் நம்முடைய வருங்கால இரண்டாம் தலைமுறையினருக்கு முன்மாதிரியாக செயல்பட வலியுறுத்துகிறது. கடவுளின் செயல்பாட்டு இறையியல் கல்வி ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும். வருங்கால தலைமுறையினருக்கு இறையியல் கல்வியானது வரலாற்றில் கடவுளுடைய செயல்பாட்டை கற்றுக் கொடுக்க தூண்டுகோலாக அமைய வேண்டும். மூன்றாவதாக,

3. இறையியல்: வாழ்வைக் கட்டமைக்கிறது
திருமுக பகுதியான 1 தீமொத்தேயு 6:11-16 பகுதியில் திருத்தூதர் பவுல் தீமொத்தேயுவை கடவுளின் மனிதனாகிய நீ என்று குறிப்பிடுகிறார். இங்கு திருத்தூதர் பவுல் அறிவுறுத்துகிற காரியம் என்னவென்றால் பொருள் ஆசை, பண ஆசை போன்ற காரியங்களில் இருந்து விலகி இறையரசின் முன் சுவையான விழுமியங்களான நீதி இறை பற்று நம்பிக்கை மன உறுதி பணிவு ஆகியவற்றை நாடி தேட வேண்டும் அவற்றை செயல்படுத்த வேண்டும் என அறிவுறுத்துகிறார். பற்றுறுதி வாழ்வு என்னும் போராட்டத்தில் ஈடுபடு என்பது ஒருவர் தன்னைத்தானே பயிற்சிக்கு உட்படுத்தி கட்டுப்பாட்டோடு பயின்று போட்டிக்கு தயாராகும் வீரருக்கு ஒப்பாகும். இறையியல் கல்வியானது பற்றுறுதி வாழ்வில் இறையரசின் விழுமியங்களை கட்டமைப்பதற்கும் வாழ்வை மாற்று உருவாக்கம் செய்வதற்கும் உந்து சக்தியாக இருக்கிறது.

மூன்றாம் ஆண்டு சிற்றுவாழ் திட்டத்தில் குசவண்குண்டு கிராமத்தில் அந்த மக்கள் அனைவரும் தங்களுடைய வாழ்க்கையில் பெற்றுக்கொண்ட நன்மைகளை இன்றும் அவர்கள் பறைசாற்றி வருகின்றனர் அது என்னவென்று சொன்னால் நம்முடைய தமிழ்நாடு இறையியல் கல்லூரியின் மூலமாக பெத்தேல் பண்ணை என்ற நிறுவனத்தின் வழியாக அந்த பகுதி மக்கள் தங்களுடைய வாழ்க்கையிலே வாழ்வதற்கு அடிப்படைத் தேவைகளை பெற்றிருக்கிறார்கள். இன்று நாங்கள் இந்த பகுதியில் வாழ்கிறோம் எங்களுக்கு இருப்பிடம் இருக்கிறது கல்வி இருக்கிறது எங்களுடைய தலைமுறை இருக்கிறது என்று சொன்னால் அதற்கு ஒரே காரணம் பெத்தில் பண்ணை என்று அவர்கள் கூறுகிறார்கள் ஆக தமிழ்நாடு இறையியல் கல்லூரியின் மூலமாக அங்கு இறையியல் கல்வியானது கடவுளுடைய விழுமியங்களை மக்கள் மத்தியிலே செயல்படுவோம் ஆக்கியது செயல்படுத்தியது ஆகவே அந்த மக்கள் அனைவரும் பற்றுறுதி உடையவர்களாகவும், நம்பிக்கைக்கு உரியவர்களாகவும் மாற்றப்பட்டு இருக்கிறார்கள்.

நிறைவாக இறையியல் கல்வியானது நம்மை பற்றுறுதி வாழ்விற்கு நேராக நம்மை வழிநடத்துகிறது. அது கடவுளுடைய விழுமியங்களை அறிந்து கொண்டிருக்கிற நாம் செயல்படுத்தும் பொழுது புரட்டு உபதேசங்களுக்கு விலகும் பொழுது அது நிச்சயமாக பன்மடங்கு பலனை கொடுக்கும்.

நம்முடைய இறையியல் கல்லூரியும், நான்கு ஆண்டு இறையியல் பயிற்சியில் தனிநபர் உருவாக்கம், திருப்பணி உருவாக்கம், இறையியல் உருவாக்கம் ஆகிய பயிற்ச்சிகளின் வழியாக இறையியல் கல்வியை நமக்குத் தருகிறது.

Gist In English
"Theological Education: Making of the Faithful"
Scripture Portion
    Joshua 4:1-9
    1 Timothy 6:11-16
    Matthew 13:1-9

INTRODUCTION
I greet and welcome you all who are gathered here for this critic service. The topic given to us for reflection on this day is "Theological Education making of the faithful" Education is one of the most important thing in the world. There is no doubt that theological education is an indispensable and unshakable necessity in the Christian life.

The first theological college in India was founded on 16 October 1716 at tranquebar in Tamil by Bartholomew ziegenbalg and his friend Heinrich plutschau. Its aim was to make theology available to all people in Tamil language.

Martin Luther King said that the purpose of "Theological education is to encourage man to think deeply and critically".

"Karl Barth" said that Theological education is "faith in search of understanding" and that theology should serve the Church and be grounded in the revelation of God through Jesus Christ. Theological education should not only prepare students for intellectual knowledge but also lead them to a deeper encounter with God.

'Timothy Tenno' says that "Theological education is not merely the

accumulation of knowledge, but rather the shaping of the heart and mind for true service to God and His people".

The word Theology is a combination of two Greek words, 'Theos' and 'Logos'. 'Theos' means God or Lord. 'Logos' means Word. We know that theology is the study of God and his Word. These two words combines the word says who God is, what is His character and work? Knowing Him includes declaring the word of God. Believing, etc. And theological education removes that devotion in one's heart and creates inner clarity in the heart. And it makes one worthy of trust in God.

"Karl Barth says that all theology is based on Scripture. He says that the life and teachings of Jesus Christ are based on Scripture."

"As the Indian theologian Etenna says, No God can make the Holy Scriptures dry."

Furthermore, theological education helps us to understand God's actions from different perspectives depending on the context and defend ourselves from false teachings.

With this brief introduction, we will consider today's sermon under three subheadings.

1. Theological Education: Affirming Life
The Gospel we heard Matthew 13:1-9. In this passage, the word "on the same day" refers to the Sabbath. The word "he sat down by the sea" refers to the Sea of Galilee. When a large crowd gathered, he got into a boat and began to teach. Usually, the boat of the fishermen on the coast was the platform for Jesus Christ's sermon. In the context of a large crowd, he speaks about the parable of the sower. The word "Parabole" in Greek is translated as "parable" in Tamil. The word translated as "parable" is the word "mashaal" in Aramaic, the native language of Jesus Christ. Generally Jesus Christ used parables and examples in the context of his life with the aim that the ordinary people and his disciples should easily understand the truths about the kingdom of God.

Most of the parables told by Jesus Christ were related to the religious, social, economic, cultural, and environmental. Parables are a method of communication that explains a truth in the context of everyday life. Parables are the medium that explains the hidden meaning of the kingdom of God. Parables constantly provoke us to think and challenge us. Alternative thoughts pave the way for change.

2. Theological education: Teaches history
In the first book of the covenant, Joshua 4:1-9, the people of Israel set out from Sittimand crossed the Jordan. The dry ground became dry as soon as the feet of

the priests carrying the Ark of the Covenant touched it. Each tribe of Israel took 12 stones from the Jordan and carried them and set up 12 stones on the east side of Jericho. This event that could happen in this area is a sign for future generations.

How God has acted in history is passed down from generation to generation. The God we understand about the future that urge us to act as a role model for our future generation. Theological education of God's action must be carried from one generation to another. Theological education should serve as an incentive for future generations to learn about God's action in history. Theological education of God's work should be carried from one generation to another.

3. Theology: Structuring Life
In the first part of the book, 1 Timothy 6:11-16, the Apostle Paul addresses Timothy as a man of God. Here, the Apostle Paul advises that we should avoid material things and the love of money and pursue the values that are pleasing to the kingdom of God, such as Righteousness, Godliness, Faith, Fortitude, and Humility. Engaging in the struggle of a life of devotion is like a warrior who trains himself, and prepares for a competition. Theological education is the driving force for building the values of the kingdom of God in a life of devotion and transforming one's life.
- Translated
By
Mr.Manishkumar.S BD-IV

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.