Tamilnadu Theological Seminary
Arasaradi, Madurai - 16
I Year First Term
Ministerial Formation
Formation of Christian Ministry
கிறிஸ்துவ திருப்பணியாளர்களின் திருப்பணி உருவாக்கம்
Sis. Blessy Notes (2024)
253- கிறிஸ்துவ திருப்பணியார் CRW David
1st Article – தாமஸ் தங்கராஜ்
- திருப்பணி என்ற சொல் திருச்சபை ஆற்ற வேண்டிய பணியைக் குறிக்கின்ற சொல்.
- திருச்சபையினால் ஆற்றப்படுகின்ற பணியே திருப்பணி.
இறைமக்களின் திருப்பணி:
- இயேசு திருப்பணிக்கென விடுத்த அழைப்பு அனைவருக்கும் விடுக்கப்பட்ட அமைப்பு.
- லூக்கா 10:1 பன்னிருவரை தனது சீடராக தேர்ந்தெடுத்த போதிலும் உலகில் பணி செய்ய செல்லுங்கள் என்று அவர்களை மட்டும் அனுப்பவில்லை. மற்றவர்களையும் அனுப்பினார். சுமார் 70 நபர்களை அனுப்பினார் என்று வாசிக்கிறோம். எனவே இறைமக்கள் அனைவரும் திருப்பணியாளர்களே.
- 1 பேதுரு 2:9 வசனத்தில் புனித பேதுரு இந்த திருமறை வாக்கியம் கடவுளின் செயல்கள் அல்லது நற்செய்தி பணியை மட்டும் குறிப்பிடுகிறது.
திருச்சபையின் திருப்பணி நற்செய்தி எடுத்துரைப்பது மட்டுமன்றி,
- நற்செயல்கள் புரிதல்
- கிறிஸ்துவின் பெயரில் பாடுபடுதல்
- குடும்ப வாழ்க்கையை அன்புடன் அமைத்தல்
- சமூக வாழ்வில் நேர்மையுடன் நடந்து கொள்ளுதல் ஆகிய பல பணிக்கூறுகளை பேதுருவே தொடர்ந்து அக்கடிதத்தில் குறிப்பிடுகின்றார்.
திருமுழுக்கினை பெற்ற அனைவரும் திருப்பணியாளர்கள்
- ரோமர் 6:11 கடவுளுக்கென்று வாழ / பணிபுரிய இறைமக்கள் அருள்வரம் அல்லது அருள் பொழிவு பெறுகின்றனர்.
- திடப்படுத்தல் திருப்பணிக்கான நியமணத்தை செயல்படுத்துகிறது. எனவே, திருமுழுக்கு, திடப்படுத்தல் அனைத்து சபையாரின் திருப்பணி நியமத்தை குறிக்கும் திருச்சடங்குகள் ஆகும்.
- திருப்பணியாளர் என்ற சொல் திருச்சபை தலைவர்களுக்கும், அருளுரைஞர்களுக்கும், திருச்சபையை நடத்துபவர்க்கும் மட்டும் பயன்படுத்த காரணம் என்ன? ஏன் இவ்வித கருத்து மாறாட்டம் நிகழ்ந்தது?
- திருச்சபை ஓர் இயக்கமாக துவங்கி கால ஓட்டத்தில் ஒரு நிறுவனமா வளர்ந்ததின் காரணமாக இக்கருத்து மாறாட்டம் நிகழ்ந்தது.
- புனித பவுலின் கடிதங்களில் திருச்சபை மக்கள் அனைவரும் பணியாளர் என்பது தெளிவாகிறது. எ.கா: 1 கொரிந்தியர் 12. ஆனால் பிற்காலத்தில் எழுந்த புதிய ஏற்பாடு நூல்கள் (எ.கா: தீமோத்தேயு, தீத்து) சற்று நிறுவன தோற்றத்தில் திருப்பணியை விளக்க துவங்கி விட்டன.
கி.பி. 325-க்கும் பின் கிறிஸ்துவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது. ஏனென்றால் சமயமும் நாடும் ஒன்றாகிவிட்டது.
Senate Syllabus Structure: Cluster
Ministerial Cluster
1. பொதுவான திருச்சபை
2. ஆற்றுப்பணி
3. வழிபாடு, அருளுரை
4. கிறிஸ்துவ கல்வி
5. தொடர்பியல்
திருப்பணி என்றால் என்ன?
திருப்பணியின் தன்மை:
1. நமது திருச்சபை இயேசு கிறிஸ்துவின் இறைவனின் திருப்பணியில் பங்கு பெறுவதாக இருக்கிறது.
2. அப்போஸ்தலர்கள் அல்லது சீடரின் திருப்பணியின் தொடர்ச்சியாக இருக்கிறது.
3. பல்வேறு வகைப்பட்ட திருப்பணியின் தொடர்ச்சியாக இருக்கிறது.
4. வாழ்வின் சூழல்களில் குறிப்பாக போராட்ட சூழல்களில் திருப்பணி அமைகிறது.
5. இறைவனின் இல்லத்தில் அவருடைய ஆட்சியை வெளிப்படுத்தும் பணியாக உள்ளது.
அழைப்பு:
உறுதிப்படுத்த திருமறை – திருச்சபை
தனிப்பட்ட வாழ்க்கை: உருவாக்கம்
- இறைவனின் குரலை சரியாக அடையாளம் காணுவது (இறைவனுக்கும் நமக்கும் உள்ள உறவு)
- Knowing yourself and knowing God.
- மனவள/உணவர்வுகள்
- புலனுணர்வு சார்ந்த முதிர்ச்சி
- உறவுகள் முதிர்ச்சி/ஒருவருடன் ஒருவர் தொடர்பில் முதிர்ச்சி
திருப்பணியின் சொல்லாக்கம்: (Pronounce)
திருப்பணி diaconia (Diakonas) – to Serve
Ministeruim (Latin)
இறைவனின் திருப்பணி:
தம்மிடமிருந்து தூரம் போன மக்களை தம்மிடம் மீண்டும் ஒப்புரவாக்க செய்வது தான் இறைத்திருப்பணி ஆகும். அதுவே இயேசுவின் திருப்பணி. இதில் தான் நாமும் பங்கு பெற்று உள்ளோம்.
இயேசு கிறிஸ்துவின் திருப்பணி:
- மனந்திரும்புதல் – புரட்சிகரமான பணி
- ஆறுதலின் பணி – மக்கள் தேவையை சார்ந்த பணி
- விடுதலையின் பணி – தியாகத் திருப்பணி
(நாசரேத்தூர் அறிக்கை இயேசு கிறிஸ்துவின் திருப்பணியின் சாராம்சமாயிருக்கிறது. லூக்கா 4:18)
இயேசுவில் இறைவனுடைய திருப்பணியில் பங்கேற்பது
1. முன்னுரை
2. சொல்லாக்கம்: (திருப்பணி) – Ministry
Ministry – Ministrium எனும் லத்தின் மொழியின் மொழிபெயர்ப்பாயிருக்கிறது. அதன் பொருள் சேவை புரிதல். அது மருத்துவத்துறை, அரசியல் துறைகளின் பயன்படுத்தப்படுகிறது. இச்சொல்லின் கிரேக்க பதம் diacouia .
3. இறைவனின் பரந்த திருப்பணி:
தொடக்க நூல் முதல் இறுதி வரை உள்ள பக்கங்களில் இறைதிருப்பணியின் சாராம்சம் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இது முழு மனுககுலத்தின் மீட்பு மற்றும் ஒப்புரவை மையமாகக் கொண்டுள்ளது. இறைமகன் இயேசு கிறிஸ்துவின் திருப்பணியில் அது உச்சத்தை அடைகிறது.
இயேசு கிறிஸ்துவின் வாழ்வும் திருப்பணியும் கிறிஸ்துவ திருப்பணியின் பொருளையும், நோக்கத்தையும் வரையறுக்கும் அடித்தளங்களாக உள்ளன. இயேசு கிறிஸ்துவை இவ்வுலகிற்கு அனுப்பின இறைவனின் திருப்பணி மனுக்குலத்தை மீட்டு தன்னுடன் ஒப்புரவாக்குதலை மையமாகக் கொண்டிருக்கிறது.
நாசரேத்து அறிக்கை: இயேசு கிறிஸ்துவின் திருப்பணியின் சாராம்சம்:
லூக்கா 4:18-ல் உள்ள நாசரேத்தூர் அறிக்கை இயேசு கிறிஸ்து உலகத்தில் ஆற்றின திருப்பணியின் நோக்கத்தையும் அதன் கூறுகளையும் தெளிவுபடுத்துகிறது.
(வசனத்திலிருந்து Hylight பண்ணவும்)
இயேசுவின் திருப்பணியின் இயல்புகள் அல்லது தன்மைகள்:
புரட்சிகரமான இயேசுவின் திருப்பணியில் பங்கேற்பது
- மலைப்பிரசங்கம் (மத்தேயு 5)
- திருச்சட்டம் (மத்தேயு 5),
- பரிசேயர், சதுசேயர் எதிர்ப்பு (லூக்கா 11:37-52),
- பரிசேயருக்கு ஐயோ! திருச்சட்ட அறிஞருக்கு ஐயோ!
அனைவரையும் உள்ளடக்கிய இயேசுவின் திருப்பணியில் பங்கேற்பது.
- மீனவர்கள் (மத்தேயு 4:18)
- சமாரியர்கள் (லூக்கா 10:28-37)
- பெண்கள் (யோவான் 8)
- தெழுநோயாளிகள் (லூக்கா 17:11-190
- வரி வசூல் செய்பவர் (லூக்கா 19)
- அந்த நரியிடம் போய் கூறுகள் (லூக்கா 13:33)
யூத சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட பாவிகள் என்று கருதப்பட்ட மக்கள் அனைவரையும் உள்ளடக்கிய திருப்பணியாக இயேசு கிறிஸ்துவின் திருப்பணி உள்ளது. சமாரிய பெண் (யோவான் 4)
இம்மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரிதண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன். பாவிகளோடு உணவு அறிந்துதல் (மத்தேயு 11:19)
இயேசு கிறிஸ்துவின் விடுதலை ஊழியத்தில் பங்கேற்பது. (லூக்கா 4:18, லூக்கா 13:11 கூனி)
இயேசு கிறிஸ்துவின் திருப்பணி மக்களை ஒடுக்கிய கட்டமைப்பகள் மற்றம் அமைப்புகளுக்கு சவால் விடும் திருப்பணியாக அமைந்தது.
மக்களை அமைதிப்படுத்தி ஒடுக்கிய தங்கள் அதிகாரத்தை’யும் ஆற்றலையும் பயன்படுத்திய சமய தலைவர்களையும் வெளிப்படையாக துணிவுடன் எதிர்த்தார். (லூக்கா 11:37-52)
இயேசு கிறிஸ்துவின் அற்புதங்கள், போதனைகள் அனைத்துமே சமுதாயத்தில் தாக்கத்தையும், மாற்றத்தையும் ஏற்படுத்தி விடுதலை சார்ந்த ஒன்றாக இருந்தது.
இயேசு கிறிஸ்துவின் தீர்க்கதரிசன திருப்பணியில் பங்கேற்பது (தேவாலயத்தை தூய்மைப்படுத்துதல்)
இயேசு கிறிஸ்துவின் திருப்பணியில் பங்கேற்பது (மத்தேயு 9:36, மாற்கு 1:410
இயேசு கிறிஸ்து தாழ்மையின் அல்லது தியாக திருப்பணியில் பங்கேற்பது.
இன்றைய சமுதாய சூழலில் திருப்பணி செய்வது என்பதை எழுதுவோம் அல்லது திருச்சபை சார்ந்தும் எழுதுவும்.
Ex: 1) தனிப்பட்ட நோக்கு
2) திரு அவை நோக்கு
3) சமூதாய நோக்கு
ஆதி திருச்சபை சீடர்களை தொடர்ந்த திருச்சபையின் திருப்பணியில் நாம் எவ்வாறு பங்கேற்கிறோம்.
சீடர்களின் திரு்பணியின் தொடர் திருப்பணியான நம் திருப்பி எப்படி இருக்கிறது?
- கி.பி. 70.80 வரை ஆறுதலின் திருப்பணி (திருப்பணியில் பயம், குழப்பம், என்ற நிலையிலிருந்து உறுதியைப் பெறுகின்றனர்)
- கி.பி. 80-300/325 ஒப்புரவின் திருப்பணி
- அச்சுருத்தலின் திருப்பணி, குணப்படுத்துதலின் திருப்பணி
- கி.பி. 325-800 கான்ஸ்டான்டிநோபல் ரோமர் அரசர் காலத்தில் கிறிஸ்தவம் நிலையான சமயமாக மாறுகிறது. நிர்வாகமயமாகிறது மற்றும் புரட்டுகள் அதிகரிக்கிறது.
- கி.பி. 325-900 Aftei வழிநடத்துதலின் திருப்பணி
- கி.பி. 900-1200 சிலுவைப் போர்
- கி.பி. 1200 – 1400 (அல்லது) 1400 இருண்ட காலம் (மறுசீராய்வு செய்கின்ற திருப்பணி)
- கி.பி. 1545 – 1800 மறுமலர்ச்சிக் காலம் (மார்டின் லூதர் கிங்). மாற்றம், வழிநடத்துதல், ஒப்புரவு.
- கி.பி.1900-க்கு மேல் – Post Modern Society (பின் நவீன காலம்)
ஆதி திருப்பணியில் பல திருப்பணியின் பரிமாணங்கள்:
1) Koinonia ( ஐக்கியம்)
2) Teaching(Didache) போதனைகள்
3) Preaching (Kerygnio) அருளுரை
4) Witness (Marturia) சாட்சி
5) Service (Diakonia) சேவை
இவற்றை சரியாக செய்யும்போது திருச்சபை சரியாக இயங்கும்.
போராட்ட சூழலில் திருப்பணி:
திருப்பணி என்பது சூழலை சார்ந்த திருப்பணியாக இருக்க வேண்டும்.
(Contextual Ministry)
1) Koinonia ( ஐக்கியம்)
2) Teaching(Didache) போதனைகள்
3) Preaching (Kerygnio) அருளுரை
4) Witness (Marturia) சாட்சி
5) Service (Diakonia) சேவை
போராட்ட சூழலில் திருப்பணி
திருப்பணி என்பது சூழலைச் சார்ந்த திருப்பணியாக இருக்க வேண்டும்.
(Contextual Ministry)
சீடர்கள் மற்றும் ஆதிதிருச்சபை திருப்பணியின் தொடர்ச்சியாக நம் திருப்பணி:
முகவுரை:
- கூட்டுறவு திருப்பணியாக ஆதிதிருச்சபையின் திருப்பணி:
- திருத்தூதர் பணிகள் 2:42-ல் உள்ளது போல் ஆதி திருச்சபையினர் திருப்பணியாளர்களின் போதனைக்கும், கூட்டுறவிற்கும், அப்பம் பிட்குதலுக்கும் இறை வேண்டல் செய்வதற்கும் தன்னை அர்பணித்தார்கள்.
- ஆங்கில சொல்லான Felloship என்பதன் கிரேக்க பதம் Koinonia கூட்டுறவு எனும் பொருள் படுகிறது.
- ஆதி திருச்சபையின் கூட்டுறவு மனித பிரிவுகளை தகர்த்தெரிந்து பகிர்ந்து வாழ்வதற்கும் வளர்வதற்குமான ஒரு கூட்டுறவு. (1 கொரிந்தியர் 1:9, 1 யோவான் 1:3). அவர்களுடைய திருப்பணி கிறிஸ்துவில் ஒருவரையொருவர் ஊக்கப்படுத்தி நலிந்தவர்களையும், ஒடுக்கப்பட்டவர்களையும் ஆதரிக்கும் ஒன்றாக இருந்தது.
ஆதி திருச்சபையின் அருளுரை திருப்பணி: (Kerygma)
கிரேக்க பதமான Kerygma என்பது அருளுரை ஆற்றுவது அல்லது பிரகடனம் செய்யப்படுவது என்று பொருள்படும். ஆதி திருச்சபையன் திருப்பணிகளில் இது முக்கிய கூறு வகித்தது. ஆதி திருச்சபையின் அருளுரை திருப்பணி இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை, திருப்பணி, மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் ஆகியவற்றை முக்கிய கருப்பொருள்களாக கொண்டிருந்தது. இது ஆதி திருச்சபையின் பற்றுறுதிக்கான அடையாளமாக அதாவது அடித்தளமாக உருப்பெற்றது. (தீத்து 1:1-4, 2 தீமோத்தேயு 4:17, திருத்தூதர் பணிகள் 13:14-43, திருத்தூதர் பணிகள் 17:22-31)
ஆதித்திருச்சபையின் போதனை திருப்பணி: (didache)
Didache என்பது அப்போஸ்தலர்களின் அறிவுரைகள் அல்லது போதனைகளை குறிக்கிறது. திருத்தூதவர் தங்கள் அறிவுரையின் மூலம் திருச்சபையினருக்கு ஒரு வாழ்க்கை முறையை காட்டினர். இவை இயேசு கிறிஸ்துவின் போதனையின் தொடர்ச்சியாக மட்டுமல்ல நோன்பு, திருமுழுக்கு, திருவிருந்து குறித்த வழிமுறைகளையும் உண்டாக்கியதாக இருந்தது. திருமறையில் உள்ள பல நிருபங்கள், ஆதித்திருச்சபையினர் திருச்சபையின் வழிமுறைகளை விட்டு விலகிச் செல்லும் போது அவர்களை நேர்வழிப்படுத்துவதையும் வழிகாட்டுவதையும் நாம் காண்கிறோம். திருச்சபையில் பல்வேறு பின்னணியை சார்ந்தவர்கள் இருந்தபடியால் அவர்கள் பின்பற்றுவதற்கு சில விதிகளையும் ஒழுங்கு முறைகளையும் உருவாக்குவது அவசியமாக இருந்தது. இவை ஆதி திருச்சபையினரின் பற்று உறுதியையும், கூட்டுறவையும் நிலைப்படுத்தியது.
ஆதி திருச்சபையின் திருப்பணியான சேவை திருப்பணி (Diakonia):
Diakonia என்னும் சொல்லின் பொருள் சேவை புரிவது என்பதாகும். சமுதாயத்தில் வறியவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், உடல் நலக்குறை உள்ளவர்கள் போன்றவருக்கு செய்யும் திருப்பணி இறைவனுக்கு செய்யும் திருப்பணியாக கருதப்பட்டது. ஆதித்திருச்சபையினர் தங்கள் உடைமைகளையும் செல்வங்களையும் சொத்துக்களையும் அனைவருடனும் பகிர்ந்து வாழ்ந்தனர்.
திருத்தூதர் பணிகள் 2:41,42
திருத்தூதர் பணிகள் 4:32,35
2 கொரிந்தியர் 8,9
ஆதித்திருச்சபையின் சாட்சி திருப்பணி (Marturia):
Marturia எனும் கிரேக்க சொல்லின் பொருள் சாட்சி பகிர்வது ஆகும். இது சொற்களினால் சொல்லப்படும் அல்லது அறிவிக்கப்படும் திருப்பணி மட்டுமல்லாமல் செயலின் வாயிலாகவும், தங்கள் வாழ்வின் வாயிலாகவும் பற்றுறுதியை அறிவிப்பதாகும். தனது பற்றுறுதிக்காக கல்லெறிந்து கொல்லப்பட்ட போதிலும் உறுதியாக நின்று முதல் குருதி சாட்சியாக மரித்தேவனை நாம் திருத்துதுவரில் காண்கிறோம். பேரரசர் வழிபாட்டினை கட்டாயப்படுத்திய ரோம பேரரசின் கீழ் ஆதி திருச்சபை பல அச்சுறுத்தல்களுக்கும் துன்புறுத்தலுக்கும் உள்ளானது. அக்கால கட்டத்தில் சாட்சியின் திருப்பணி முக்கிய பங்கு வகிக்கிறது.
ஒரு திருப்பணியாளராக நம்மிடம் எந்தெந்த தன்மைகள் காணப்பட வேண்டும்?
திருமறையில் திருப்பனியின் பரிமாணங்கள்:
1) இறைவாக்கினர்
2) அரசர்: இசக்கியா, சிதேக்கியா
3) ஆசாரியர் (10 Mark)
4) ஞானி - சாலொமோன்
OLKOUMENE - Ecumenical (ஒன்றாக இருத்தல்)
இறையரசின் தன்மைகளை அல்லது பண்பியல்களை நம்முடைய திருப்பணியில் நாம் எப்படி வெளிப்படுத்த வேண்டும்? (20 Marks)
(இறையரசு - வேதத்தில் தேடி எழுதவும்)
போராட்ட சூழல்களில் கிறிஸ்தவ திருப்பணி:
(Christian ministry in contrest)
முன்னுரை:
கிறிஸ்தவ திருப்பணி ஒரு குறிப்பிட்ட சமூக, மத, சமுதாய சூழலில் நடைபெறுகிறது. இச்சூழல்களின் தாக்கத்தைக் கொண்ட நபர்களிடையே இத்திருப்பணி நடைபெறுகிறது.
கிறிஸ்துவின் நற்செய்தி மக்களுக்கு அவர்களது சொந்த சூழலுக்கு பொருத்தமானதாக இருக்க வேண்டும். எனவே மக்கள் வாழும் வெவ்வேறு சூழல்களை புரிந்து கொள்வதும் அதற்கேற்ப திருப்பணியை கட்டமைப்பதும் அவசியம். திருப்பணியானது மக்களை அடக்கி ஒடுக்கும் சூழல்களில் இயங்கவில்லை (Dignamic) என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
கிறிஸ்தவ திருப்பதியில் சூழலின் முக்கியத்துவம்:
கிறிஸ்தவ திருப்பணியின் தேவை மற்றும் செயல்பாடுகள் ஆகியவற்றை சூழல்கள் வரையறுக்கின்றன. இத்தகைய சூழல்களில் இருந்தே புறக்கணிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, போராடும் மக்களின் குரல் வெளிப்படுகின்றன. இத்தகைய நிலை மாற குணப்படுத்தல், பராமரித்தல், மாற்றுருவாக்கம் செய்தல் போன்ற திருப்பணிகள் தேவைப்படுகின்றன. திருப்பனையானது இவர்களின் வாழ்வில் மற்றும் குரல்களில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும். இது இம்மக்களுக்கு நம்பிக்கையையும் அதிகாரத்தையும் அளிக்கும் திருப்பணியாக உருவெடுக்கிறது.
போராட்ட சூழலில் இறைவன்:
ஒடுக்கு முறையில் கூக்குரலிடும் மக்களின் குரலை கேட்டு அவர்களின் வாழ்வில் மாற்றத்தை கொண்டு வரும் விடுதலை திருப்பணியாக இறைப்பணி இருப்பதை திருமறை வெளிப்படுத்துகிறது. (விடுதலைப் பயணம் 3:7,8)
இறைவாக்கினர்கள் வாயிலாக இறைவன் துன்பப்படுகிறவர்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் நம்பிக்கையின் விடுதலையின் செய்திகளை பறைசாற்றுகிறார். மேலும் ஆதிக்க வர்க்கத்தினரின் அநீதிகளை எடுத்துரைத்து கண்டிக்கும் கண்டனத்தை வெளிப்படுத்தும் செய்தியாகவும் அவை இருந்தன.
கிறிஸ்து இயேசுவின் திருப்பணியும் இதனை மையமாகக் கொண்ட ஒன்றாக அமைந்திருந்தது. லூக்கா 4:18 நாசரேத்துர் அறிக்கை.
பல்வேறு சூழல் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் வாழ்க்கை போராட்டங்கள்.
பொருளாதார சூழல்: வறுமையும் உலகமயமாக்கலும்.
பணம் படைத்தவர்களுக்கும் வறியவர்களுக்கும் இடையேயான இடைவெளி அதிகரித்து வரும் உலகில் நாம் வாழ்ந்து வருகிறோம். இந்தியா போன்ற நாடுகளில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் அதிக அளவில் உள்ளனர். 20% மேல் தட்டு மக்கள் உலகில் 80% செல்வத்தினை பெற்றிருக்கிறார்கள். மீதம் உள்ளவர்கள் ஒவ்வொரு நாளும் தங்கள் வாழ்வாதார வழிகளை தேடி போராடுகிறார்கள். பொருளாதாரக் கொள்கைகள் ஏழைகளை கொள்ளை அடிப்பதின் வாயிலாக சந்தை முதலாளிகளுக்கு சாதகமாக கட்டமைக்கப்பட்டுள்ளன.
சூழல் மற்றும் சூழலுக்கான திருப்பணி:
அரசியல் சூழல்: அதிகார துஷ்பிரயோகமும் ஊழலும்
ஜனநாயக அரசு என்று பெருமை பாராட்டினாலும் அரசியல் நிர்வாகத்தின் ஒவ்வொரு நிலையிலும் ஊழல் நிலவுகிறது. தங்களுடைய தனிப்பட்ட வளர்ச்சிக்கும் மற்றும் தங்கள் சார்ந்த குழுவின் வளர்ச்சிக்கும் மக்களால் அளிக்கப்பட்ட அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார்கள்.
கலாச்சார சூழல்: சாதி மற்றும் பாலின பாகுபாடு
இந்தியா ஒரு பன்முகத் தன்மை கொண்ட நாடு. இதை நாம் கொண்டாடுவதற்கு பதிலாக இப்பன்முகத்தன்மையை வேற்றுமையை ஏற்படுத்தும் ஒன்றாக பார்க்கிறோம். அதன் அடிப்படையில் மக்களை உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று வேறுபடுத்தி சாதி அடிப்படையில் பாலின் அடிப்படையிலும் பெரும்பான்மையினரை இழிவாக பார்க்கும் நிலை நிலவுகிறது. பெண்களுக்கு எதிராக குடும்ப வன்முறை, கூட்டு பாலியல் பலாத்காரம், பெண் சிசுக்கொலை போன்றவை பெண்களை சமத்துவம் மற்ற முறையில் நடத்துகிறார்கள் என்பதை தெளிவாக காட்டுகின்றன. ஆணாதிக்க இயல்பும், நடத்தையும் சமுதாயத்தின் ஒவ்வொரு பாதையிலும் காணப்படுகிறது. கடவுள் மனிதனை தம் சாயலிலே படைத்தார்.
சமய சூழல்: அடிப்படை வாதமும், பயங்கரவாதமும்
பல நூற்றாண்டுகளாக பாரத தேசம் அதாவது இந்திய மண் பல்வேறு சமயங்களை வரவேற்று இருக்கிறது. இருப்பினும் சமயம் மக்களிடையே பிரிவுகளையும், மோதல்களையும் தூண்டுவதற்கான கருவியாக பயன்படுத்தப்படுகிறது. அமைதியையும், நல்லிணக்கத்தையும் அளிக்கும் மக்களிடையே வேற்றுமையை ஏற்படுத்துகிறது.
போர் மற்றும் வன்முறைச் சூழல்:
- உக்ரைன் ரஷ்யா போர்
- இஸ்ரேல் பாலஸ்தீனம் போர்
திருப்பணியில் எவ்வாறு செயல்படுத்த முடியும்?
தனி வாழ்க்கை?
சமுதாயம்?
இறையரசு: இறை ஆளுகை (Oikomene)
எவ்வாறு இறையரசின் மக்களாக திருப்பணியை தொடர்கிறோம்?
இறையரசுக்கு முக்கியமான காரியம்:
1) மனம் திரும்புதல்
2) நம்பிக்கை கொள்ள அழைப்பு
3) மாற்றத்திற்கான அழைப்பு
மனிதரின் அடிப்படை உரிமைகளை பொறுத்தவரையில் பால், இனம், நிறம், சமூக நிலை, மொழி, சமயம் ஆகியவை காரணமாக பாகுபாடு காட்டும் எந்த முறையையும் அது சமூக அடிப்படையில் இருந்தாலும் சரி, பண்பாடு அடிப்படையில் எழுந்தாலும் சரி நாம் அவற்றை வெறுத்து ஒதுக்க வேண்டும்.
உவமைகளின் மூலம்
இறைவனின் திருப்பணிக்கான அழைப்பை எவ்வாறு உறுதி செய்து கொள்ளுதல். (மத்தேயு 22:1-14)
அழைப்பை சரியாக உறுதி செய்து கொள்ள வேண்டும்
1) திருமறை சார்ந்து
2) திருச்சபையின் அங்கீகாரம்
3) தனிப்பட்ட பட்டறிவு
திருமறை சார்ந்த அழைப்பு:
1) இறைவனின் இடைபடுதல்
2) அறிமுகம் சொற்கள்
3) அழைப்பின் நோக்கம்
4) மறுப்பு
5) நம்பிக்கை வார்த்தை (Reassurance)
அழைப்பு சொல்லாக்கம்
Kaleo (Greek)
Quara (Hebrew)
1) தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்
2) பெயர் சொல்லி அழைப்பது
3) குறிப்பிட்ட பணிக்கான அழைப்பு
அழைப்பின் பலம்:
1) எளிதில் மன்னிக்கும் பண்பு
2) observation எளிதில் புரிந்து கொள்ளும் மனப்பான்மை
3) மன தைரியம் உண்டு
அழைப்பின் பலவீனம்:
1) யாரிடமும் நெருக்கமாக உறவு வைத்துக் கொள்ள மாட்டேன்
2) எதையும் வெளிப்படையாக பேச மாட்டேன்
3) சீக்கிரத்தில் மனம் உடைந்து போவேன்
ஆன்மீக செயல்பாடுகள்:
நம்மை நாம் புரிந்து கொள்ள வேண்டும் இறைவனையும் புரிந்து கொள்ள வேண்டும்
இறைவேண்டல்:
Precarious (Latin)
நோன்பு: ஏசாயா 58-ல் உண்மையான நோன்பு வழிபாட்டை குறித்து பார்க்க முடியும்.
ஆன்மீக வளர்ச்சி:
உணர்வு சார்ந்த முதிர்வுகள்
அறிவு சார்ந்த உணர்வுகள்
தவறான புரிதல்கள்:
1) எனக்கு நெருங்கினவர்கள் என்னை அன்பு செய்ய வேண்டும் நான் செய்யும் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
2) மதிப்புள்ளவராக வாழ எதையாவது சாதிக்க வேண்டும். எந்த தவறும் செய்யக்கூடாது. வெற்றி பெற வேண்டும்.
3) மனிதர்கள் சரியான காரியங்களை மட்டுமே செய்ய வேண்டும். அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். குற்றம் சொல்ல வேண்டும்.
4) நான் விரும்பும் வண்ணமாக என் வாழ்க்கையில் காரியங்கள் நிகழ வேண்டும். இல்லை என்றால் பொறுத்துக் கொள்ள முடியாது.
5) என்னுடைய துக்கத்திற்கு காரணமாக இருப்பது என்னை சுற்றி இருப்பவர்கள் தான். என்னால் ஒன்றும் செய்ய முடியாது.
6) எல்லாவற்றிலும் பயத்துடனே இருந்தால் அனைத்தும் சரியாய் நடக்கும் என்று புரிதல்.
7) வாழ்வின் கடின பாடுகளை பொறுப்புகளை முடிந்த வரையில் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அவை வாழ்வில் துன்பங்களை ஏற்படுத்தும்.
8) அனைவரும் தங்களை விட வலியவரை சார்ந்திருக்க வேண்டும்.
9) என்னுடைய வாழ்வின் சிக்கல்களுக்கு என்னுடைய கடந்த கால நிகழ்வுகளே காரணம்.
10) அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வு கண்டிப்பாக உண்டு. தீர்வுக்கான முடியவில்லை என்றால் அது மோசம் என்று நினைப்பது.
11) வாழ்க்கையில் அசோகரிகமே இருக்கக் கூடாது. எப்போதும் ஒரேமாதிரி இருக்க வேண்டும் என்று நினைப்பது.
12) மற்றவர்கள் துன்பப்படும் போது சோகமாக இருக்கும் போது நானும் துக்கமாக இருக்க வேண்டும்.
ஆன்மீக உருவாக்கத்திற்கான செயல்பாடுகள்:
(உங்களை அறிதல்/ இறைவனை அறிதல்)
1) கடவுளை அறிந்து கொள்ளுதல் உங்களை அறிந்து கொள்ளுதல்:
கிறிஸ்தவ திருச்சபையாளர் உருவாக்கத்தில் உறவுகள் முக்கிய பங்கு வகுக்கின்றன. திருப்பணியாளனவர் இறைவனுடன் நிலையான, உறுதியான உறவினை கொண்டிருப்பதும், அதேபோல் சக மனிதனுடனான உறவிலும் வெளிப்படுவதும் இன்றியமையாதது. தனது குறைபாடுகளையும், வலிமைகளையும் அறிந்திருப்பதும் அவைகளை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் பெற்றவராய் இருப்பதுமே திருப்பணியில் திருப்பணியில் முதிர்ச்சியை நோக்கி நம்மை உயர்த்தும். எனவே, ஒரு திருப்பணியாளருக்கு தம்மை குறித்த, பிறரை குறித்த, இறைவனை குறித்த புரிதலும் உறவும் அவசியம்.
2) கடவுளை அறிந்து கொள்ளுதல்:
முதலாம் உடன்படிக்கை நூலில் "யதா" என்னும் எபிரேய சொல்லின் பொருள் தெரிந்து கொள்ளுதல், அறிந்து கொள்ளுதல் என்பதை உணர்த்தும் வார்த்தைகளாக பயன்படுத்தப்படுகிறது. இது மேலும் கற்றுக் கொள்வதும், நம்புவதும், ஏற்றுக் கொள்வதும், செயல்பட தயாராக இருப்பதும், பார்ப்பதும் போன்ற பொருள்களை விளக்கும் சொல்லாகவும் இருக்கிறது. எபிரேய மொழியில் அறிவை விட அறிவதற்கான முயற்சி/செயல் மையப்படுத்தப்படுகிறது. இறைவனை அறிந்து கொள்வது என்பது அவருடன் நெருக்கமான உறவை கொண்டிருப்பதை குறிக்கிறது. இது இறைவனுடன் ஒன்றிணைந்து இருக்க வேண்டும் என்ற விருப்பத்தையும் அவருக்கு செவி சாய்த்து அவரது திருவுள சித்தத்தின்படி செயல்படுவதற்கு தயாராக இருப்பதையும் குறிக்கிறது. இந்த உறவானது பற்றுறுதி, அன்பு, நம்பிக்கை மற்றும் தொடர்பு ஆகியவற்றை கொண்டிருக்கிறது. நம் திருப்பணூயிலும் இறைவனுடன் இத்தகைய உறவினை கொண்டிருப்பது அவசியம். திருப்பணியின் பக்கங்கள் இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையேயான உறவை வெளிப்படுத்துகிறதாக இருக்கிறது.
இறைவனை முழுவதுமாக அறிந்து கொள்வது, அறிவை பெறுவது சாத்தியமற்றது. அது இறைவனை ஒரு வரையறுக்கப்பட்ட ஒரு பொருளாக மாற்றி விடும். எனினும் இறைவன் தாம் மனிதனுடன் கொண்டிருக்கும் உறவில் தம்மை வெளிப்படுத்துகிறவராய் இருக்கிறார்.
3) உங்களை அறிந்து:கொள்ளுதல்
நம்மை நாமே அறிந்து கொள்ளுதல்:
திருப்பணியை சிறந்த முறையில் ஆற்ற ஒருவர் தனது சொந்த திறமைகளையும், குறைபாடுகளையும் அறிந்து கொள்வது பேருதவியாக இருக்கும். ஒருவர் தம்மை அறிந்து கொள்ளும் பொருட்டு தம்மை படைத்த இறைவன் வாயிலாக முயற்சியை எடுப்பது மேற்கொள்வது இன்றியமையாதது ஆகும். ஜான் கால்வின் இறைத்தன்மையை சிந்திக்காமல் எந்த ஒரு மனிதனும் தன்னைப் பற்றிய உண்மையான அறிவை/புரிதலை அடைவது இயலாத காரியம் என்று கூறுகிறார். இறைவனுடனும், பிறருடனும், தன்னுடனும் ஒரு நெருக்கமான உறவில் வளர உதவும் ஆன்மீக செயல்முறைகளும்/மரபுகளும் திருச்சபையால் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. அவைகள்:
1) இறைவேண்டல்
2) மன்றாட்டு
3) நோன்பு
4) திருச்சட்டங்கள்
இறைவேண்டல் என்பது கடவுளின் விருப்பத்தை மாற்றுவதில்லை, மாறாக கடவுளின் விருப்பத்திற்கு நேராக மன்றாடுபவரை மாற்றுகிறது என்பது சாது சுந்தர் சிங் கூற்று.
யோவான் 17 இயேசு கிறிஸ்துவின் இறைவேண்டல்.
இறைவேண்டல்:
இறைவேண்டல் (Prayer) என்னும் சொல் லத்தின் சொல்லான "Precari" எனும் வினைச் சொல்லிலிருந்து வரையறுக்கப்பட்டது. இது இறைஞ்சுவது அல்லது கெஞ்சுவது என பொருள்படும். கிறிஸ்தவ இறைவேண்டல் நம் வாழ்வில் நாம் உணரும் இறைவனின் இருத்தல் நிலை நம்முடைய பதில் செயலாக கருதப்படுகிறது. நாம் எவ்வாறு இறைவனுடன் தொடர்பு கொண்டிருக்கிறோம் என்பதை விளக்கும் ஒன்றாகவும் இருக்கிறது.
இறைவேண்டல் என்பது இறைவனுடன் தொடர்பு கொள்வது. இது இருவழி தொடர்பாக இருக்கிறது. இறைவனுக்கு செவி சாய்ப்பதையும் நாம் இறைவனுடன் உரையாடுவதையும் இது உள்ளடக்குகிறது. நாம் வாழ்வில் எதிர்கொள்ளும் துன்பங்களிலும், இன்பங்களிலும், வாழ்வின் நோக்கத்தையும், பொருளையும் உணர்ந்து கொள்ள இது உதவுகிறது. வாழ்வின் ஆதாரமான இறைவனை நோக்கி வழிநடத்துகிறது. அமைதியையும் ஆறுதலையும் இறைவனின் நிறைவான இருத்தல் நிலையையும் உணர உதவுகிறது.
திருமறையில் பல்வேறு விதமான இறை வேண்டல்களை நாம் காணலாம்:
1) கடவுளைப் போற்றுதல்
2) நன்றி செலுத்துதல்
3) பிழை உணர்தல்
4) மன்றாடுதல்
ரோமர் 8:26
தொடக்கநூல் 18:22,23
விடுதலைப் பயணம் 33:11
எபேசியர் 6:18
1 தெசலோனிக்கேயர் 1:2
எபேசியர் 1:16
யோவான் 15
மத்தேயு 26:41
உறவுகள் சார்ந்த முதிர்ச்சி: (5 Mark)
உறவு சரியாக இருக்க வேண்டுமானால் கீழ்க்கண்ட வழிமுறைகள் தேவை:
1) உண்மை
2) நம்பிக்கை
3) புரிதல்
4) விட்டுக் கொடுத்தல்
5) அன்பு
6) உறுதியாக இருத்தல்
7) அர்ப்பணிப்பு
விமர்சனம் பாராட்டு ஆகிய இரண்டையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இருக்க வேண்டும்.
நம்பிக்கையை ஒருபோதும் தவறாக பயன்படுத்தக் கூடாது. நம்பிக்கையை வளப்படுத்த வேண்டும்.
உண்மை, நீதி, நேர்மை நியாயத்தில் நிலையாக இருக்க வேண்டும்.
நம்மிடையே வேறுபாடுகளை ஏற்படுத்திக் கொள்ளாமல், அனைவருடனும் ஒப்புரவாக இருக்க வேண்டும். அனைவரையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும்.
திருப்பணியாளர்களுக்கும் ஆறுதல் தேவை: (20 Marks)
Super Human Syndrome
Bum Out
1) அனைத்தையும் என்னால் செய்ய முடியும் என்ற மனநிலை இருக்கக் கூடாது.
2) ஓய்வு மிக முக்கியம். இறைவனும் ஓய்ந்திருந்தார்.
3) குடும்பத்தையும் சரியாய் நடத்த வேண்டும்
4) சக தேர்வு பணியாளர்களின் உணர்வுகளையும் புரிந்து கொள்ள வேண்டும்.
5 Mark Important Questions:
1) கிறிஸ்தவ திருப்பணி ஆதிசீடர்களின் தொடர் திருப்பணி
2) இறையரசு
3) அழைப்பு
4) உருவாக்கம்
5 Mark Questions:
உள்ளடக்கம்:
1) சொல்லாக்கம்
2) விளக்கவுரை (திருமறை பகுதியில் இருந்து யாரேனும் ஒரு நபரை குறித்து விளக்க வேண்டும்)
10 Mark Questions:
உள்ளடக்கம்
1) சொல்லாக்கம்
2) விளக்கம்
3) திறனாய்வு
10 Mark Important Questions:
1) அழைப்பை திருமறை சார்ந்து எழுதுக
2) உணர்வு சார்ந்த முயற்சி
3) கூட்டுறவு வழிபாடு, இறைவேந்தல், நோன்பு
4) திருப்பணியாளர்களின் தனிப்பட்ட தேவைகள்.
20 Mark Questions:
உள்ளடக்கம்:
1) முன்னுரை
2) மூன்று ஆசிரியர்களின் பெயர்கள்
3) திருமொழிகள்
4) திறனாய்வு/எனது பார்வை
5) முடிவுரை
திருமுழுக்கு:
உள்ளான அருள் ஏற்பு அனுபவத்திற்கு வெளிப்படையான அடையாளங்கள் திருவருட்சாதனங்களே திருமுழுக்கும் திருவிருந்தும்.
Baptiso என்னும் கிரேக்க சொல்லிலிருந்து வந்தன. இதன் பொருள் முழுக்குதல் தோய்த்தல் என்பதாகும்
20 Marks important Questions:
1) திருப்பணியின் அழைப்பு என்றால் என்ன? திருமறையில் திருப்பணியின் அழைப்பு.
2) ஆன்மீக உருவாக்கத்திற்கு உதவுவது.
உங்களை அறிதல்/இறைவனை அறிதல்
a) இறைவேந்தல் என்றால் என்ன? சொல்லாக்கம்
தனிப்பட்ட உருவாக்கத்திற்கு எவ்வாறு உதவுகிறது
b) நோன்பு
c) திருமறை தியானம்
3) உணர்வுகளின் முயற்சி:
a) அடையாளம் காணுதல்
b) ஆராய்தல்
c) வெளிப்படுத்துதல்
d) வெற்றியின் விளைவு
உங்களின் உணர்வை புரிதல் வெளிப்படுத்துதல் அடுத்தவரின் உணர்வை புரிதல்.
4) அறிவாற்றல் சார்ந்த முதிர்ச்சி தவறான
a) புரிதலை தவிர்த்தல்
b) ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கருத்து உண்டு என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்
அழைப்பு:
லூதர் மற்றும் கால்வின் - "கடவுளுடைய சித்தத்தின்படி செய்வதே திருப்பணி"
கால்வினுக்கான அழைப்பு:
ஆன்மீகத்தையோ உளவியல் வேறுபாடுகளையோ குறிக்கவில்லை. ஆனால் அன்றாட வாழ்வில் இறைவனின் மொத்த உரிமை கோரல்.
ரிச்சர்ட் நியூர்: (இறையியலாளர்)
A) கிறிஸ்தவராக இருப்பதற்கான அழைப்பு
B) இரகசிய அழைப்பு
C) வருங்கால அழைப்பு
D) திருச்சபை அழைப்பு
Niebhur
நாம் கடவுளுக்கு சேவை செய்ய அழைக்கப்படுவதற்கு முன் நாம் கடவுளுடன் உறவில் இருக்க அழைக்கப்படுகிறோம்.
யோவான் 15:5 நான் திராட்சை செடி நீங்கள் கொடிகள் என்று இயேசு சொல்லுகிறார்.
பென் பேட்டர்சன்:
பென் பேட்டர்சன் கடவுளின் அழைப்பை பற்றி கூறும் போது கடவுளின் கட்டாய உணர்வாகவும் மற்றும் வன்முறை உணர்வாகவும் கூட உள்ளது என்கிறார்.
எரேமியா 20:9
எரியும் நெருப்பு போல் என் எலும்புகளில் உணர்கிறேன்.
1 கொரிந்தியர் 9:16
நான் சுவிசேஷத்தை அறிவிக்காவிட்டால் எனக்கு அய்யோ!
அறிவாற்றல் முதிர்ச்சி
ஒரு குருவானவராக உடல் மற்றும் உளவியல் நல்வாழ்வு தேவை.
அறிவியல் முதிர்ச்சி என்பது
1) இறைவனின் திருப்பணி
2) ஆதி சீடர்களின் தொடர் திருப்பணி
3) அழைப்பு
4) இறையரசு
5) ஆன்மீக செயல்பாடு
அறிவாற்றல் சார்ந்த முதிர்ச்சி:
1) திருப்பணியாளர்களுக்கு உளவியல் சார்ந்த முதிர்ச்சி மிக அவசியம்.
2) அனுபவத்திலும் முதிர்ச்சி மிக அவசியம்.
3) தம்மைப் பற்றியும் மற்றவர் பற்றி சுற்றி உள்ள உலகத்தார் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றியும் புரிதல் வேண்டும்.
4) மனிதரின் பல பிரச்சனைகளை ஒரு நபர் எப்படி உணர்கிறார் அல்லது சிந்திக்கிறார் என்பதை தொடர்புடையதாக இருக்க வேண்டும்.
5) அறிவுகளை வளர்த்துக் கொள்வது தனிநபர் பிரச்சனைகளை சுற்றியுள்ளவர் பிரச்சனைகளை புரிந்து கொண்டு சரி செய்வது.
6) ஒரு நபரின் உணர்ச்சி மற்றும் அறிவாற்றல் நல்வாழ்வுடன் தொடர்புடையது.
7) சரியான முடிவுகளை திறம்பட எடுக்க உதவுவது.
8) தனிப்பட்ட குணங்களை சார்ந்தது (சகிப்புத்தன்மை, பொறுமை)
