Type Here to Get Search Results !

Critic Service | Anpuraj | காணாமல் போன இரு மைந்தர் | The he lost Sons | Jesus Sam

தமிழ்நாடு இறையியல் கல்லூரி
அரசரடி, மதுரை-16


திறனாய்வு வழிபாடு

தலைப்பு:
காணாமல் போன இரு மைந்தர்
The he lost Sons

இடம்: கிறித்தரசர் வழிபாட்டு மனை
தேதி: 02-07-2025
நேரம்: 06:00

வழிபாடு நடத்துபவர்
P. அன்புராஜ்

திறனாய்வு மாணவர்
J. ஸ்டான்லி கால்டுவெல்

திறனாய்வு ஆசிரியர்
முனைவர் J. கிறிஸ்டி பெமிலா


வாழ்த்து:
(Werlcome)
பெற்றவர். மைந்தர், என்னுடைய திறனாய்வு தூய ஆவியாரின் வழிபாட்டிற்கு திருப்பெயராலே ஆமென். வந்துள்ள உங்கள் அனைவரையும் மூவொரு கடவுளின் திருப்பெயரில் அன்போடு வாழ்த்தி வரவேற்றுக் கொள்கிறேன்.

வழிபட அழைப்பு:
(Call to Worship)
ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்! மகிழ்ச்சி நிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள் (திருப்பாடல் 100:2) என்ற திருமொழிக்கு ஏற்ப ஆண்டவர் கொடுத்த இந்தப் புதிய நாளில் உடலாலும், உள்ளத்தாலும் ஆண்டவருக்குள் இணைந்து அன்பின் ஒப்புரவுக்குள் மூவொரு கடவுளை வழிபடுவோம் வாருங்கள்.

தொடக்க இறைவேண்டல்:
(Opening Prayer)
ஆண்டவரே, விடியற்காலையில் என் குரலைக் கேட்டருளும் வைகறையில் உமக்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருப்பேன் (திருப்பாடல் 5:3) என்ற திருப்பாடல் ஆசிரியர் காத்திருந்தது போல நாங்களும் உம் இருத்தல் நிலையை உணரவும், வாழ்வின் தேடுதலுக்கான புதிய ஆற்றலைப் பெறவும் இந்த அழகிய சிற்றாலயத்தில் கதிரவனின் வெளிச்சத்தில் பறவைகளின் ஓசைகளோடு இயற்கை சூழலில் உம்மை வழிபட காத்திருக்கிறோம். இவ்வழிபாட்டின் வழியே உம்மை மாட்சிப்படுத்தவும் உடனிருப்பை உறுதி செய்யவும் அருள் தாரும். இவை அனைத்தையும் வழிகாட்டியாம் எங்கள் இயேசு கிறித்துவின் வழியாய் வேண்டிக்கொள்கிறோம் எங்கள் பெற்றவராம் கடவுளே. ஆமென்.


தொடக்கபாடல்: (Opening Song)
கீர்த்தனை: 217
ஆதிதாளம்
அன்பே பிரதானம் சகோதர
அன்பே பிரதானம்

1. பண்புறு ஞானம் பரம நம்பிக்கை
இன்ப விஸ்வாசம் இவைகளிலெல்லாம்
- அன்பே

2. பலபல பாஷை படித்தறிந்தாலும்
கலகல வென்னும் கைம்மணியாமே
- அன்பே

3. என் பொருள் யாவும் ஈந்தளித்தாலும்
பணிய அன்பில்லால் பயனில்லை
- அன்பே

4. சாந்தமும் தயவும் சகல நற்குணமும்
போந்த சத்தியமும் பொறுமையுமுள்ள
- அன்பே
(ச.பே.ஞானமணி)

2. பிழை உணர அழைப்பு:
(Call to realise our sin)
தம் குற்றப் பழிகளை மூடி மறைப்பவரின் வாழ்க்கை வளம் பெறாது: அவற்றை ஒப்புக்கொண்டு விட்டுவிடுகிறவர் கடவுளின் இரக்கம் பெறுவார். (நீதிமொழிகள் 28 :13) என்ற திருமொழிக்கு ஏற்ப நாம் நம் குற்றங்களை உண்மையாய் உணர்ந்தவர்களாக அவர் முன் எந்த ஒளிவும் மறைவும் இல்லை என்பதை மனதில் கொண்டு எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து அறிகிற நம் கடவுளிடத்தில் நமது பிழைகளை அறிக்கைசெய்வோம் வாருங்கள்.

பிழையறிக்கை:
(Confession of sins)
நாம் நம்முடைய பிழைகளை அறிக்கை செய்யும் வண்ணமாக பின் வருகின்ற பாடலை இணைந்து பாடுவோம்

பாவத்தின் பாரத்தினால்
தவித்திடும் பாவி என்னை
நின் கிருபை பிரவாகத்தால்
தேற்றிடும் ஏசு நாதா (2)

1. கெட்ட குமாரனைப் போல்
துடனாய் அலைந்தேன் அப்பா
நின் அன்பை உணராமல்
துரோகம் நான் செய்தேனே (2)

(நாம் நம்முடைய தனிப்பட்ட பிழைகளை அறிக்கை செய்வோம்)

மன்னிப்பின் உறுதியைபெற்றுக்கொள்வோம்:
(Absolution)
அவர்களது தீச்செயலை நான் இரக்கத்தோடு மன்னித்துவிடுவேன். அவர்களுடைய பாவங்களை இனிமேல் நினைவுகூர மாட்டேன் (எபிரேயர் 8 : 12) என்று கூறும் ஆண்டவர் தாமே உண்மையாய் உணர்ந்து அறிக்கை செய்த நம் பிழைகளை மன்னித்து தீமையை விட்டு விடும் துணிச்சலையும் பகுத்தறிவையும் ஆற்றலையும் தந்து அவரின் அன்பின் உடன்படிக்கைக்குள்ளாக நம்மை வழி நடத்துவாராக. ஆமென்.

திருமறைப் பாடங்கள்:
(Scriptur Reading)
1. தொடக்க நூல் 17:1-9
    (Genesis 17:1-9)

2.1 பேதுரு 5: 6-11
   (1 Peter 5: 6 11)

3. துய லூக்கா 15:11-24
   (St. Luke 15: 11-24)

சிறப்புநிகழ்வு: (Special Event)

அருளுரை: (Sermon)

திருத்தூதர் பற்றுறுதி அறிக்கை: (தழுவியது)
விண்ணையும் மண்ணையும் படைத்த அனைத்து ஆற்றலும் பொருந்திய தாயும் தந்தையுமாகிய கடவுளை நம்புகிறோம் அவரது ஒரே மைந்தரும் வாழ்வை இழந்தோருக்கு வாழ்வை உறுதி செய்யும் சிறந்த வழி காட்டியுமாகிய நம் தலைவர் இயேசு கிறித்துவை நம்புகிறோம். அவர் தூய ஆவியாராலே கன்னி மரியாவிடம் கருகொண்டு பிறந்தார் நியாயப்பிரமாணத்தையும் பாரம்பரியங்களையும் மட்டும் கடைப்பிடித்து மனிதம் சமத்துவம் ஆகியவற்றை தவற விட்டவர்களை சுட்டிக்காட்டியதற்காக பொந்தியு பிலாத்தின் காலத்தில் பாடுபட்டு சிலுவை மரணம் ஏற்று அடக்கம் செய்யப்பெற்று பாதாளம் இறங்கினார். காணாமல் போனவர்களையும் உரிமை இழந்தமக்களுக்கு ஊக்கம் அளிக்கவும், நம்பிக்கை உண்டாக்க மூன்றாம் நாள் இறந்தோரிடையே இருந்து எழுந்தருளினார். விண்ணகம் ஏறி அனைத்து ஆற்றலும் பொருந்திய பெற்றவராம் கடவுளின் வலப்பக்கம் வீற்றிருக்கிறார். அவ்விடத்தில் இருந்து உயிர் உள்ளவரையும் இறந்துவிட்டோரையும் நடுத்திர்க்க வருவார் தூய ஆவியாரை நம்புகிறோம். அனைத்து மக்களுக்கும் பொதுவாக இருக்கிற தூய

திருச்சபையையும் தூயவரின் கூட்டுறவும் பிழை பொறுப்பும் உடல் உயிர்ப்பும் மெய் வாழ்வும் உண்டென்று நம்புகிறோம். ஆமென்.

நன்றியும் மன்றாட்டும்:
(Thanks Giving & Intercession)
[அமர்ந்தநிலையில்]

நன்றிசெலுத்துவோம்:
1) பாதுகாக்கும் கடவுளே கடந்த மாதம் முழுவதும் எங்களை பாதுகாத்ததற்காகவும் புதிய மாதத்தை காணசெய்வதற்காகவும் இறைவா உமக்கு நன்றி செலுத்துகிறோம்.

2) சென்னையில் காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையிலும், பயணிகளுக்கு கூடுதல் வசதி வழங்கும் வகையிலும் மின்சார பேருந்துகளை தழிழக அரசு கொண்டு வந்ததற்காக இறைவா உமக்கு நன்றி படைக்கிறோம்.

மன்றாடுவோம்:
1) எங்கள் நலனில் அக்கறை கொள்ளும் நல்ல கடவுளே இன்றைக்கு பல இளைஞர்கள் மது மற்றும் கஞ்சா போன்ற பல்வேறான போதைப் பொருளுக்கு அடிமையாகி தங்களுடைய வாழ்வை இழக்கின்றார்கள். எனவே அவர்கள் அத்தீய பழக்கத்திலிருந்து விடுபடவும் அவர்கள் வாழ்வு நலம் பெறவும் இறைவா உம் அருள் வேண்டி மன்றாடுகிறோம்.

2) தெலுங்கானா மாநிலம் மாவட்டத்தில் சங்கர்ரெட்டி ரசாயன் தொழிற்சாலையில் ஊழியர்கள் பணியில் இருந்தபோது பாய்லர் வெடித்து 10 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களை இழந்துவாடும் குடும்பத்தார் அமைதிபெறவும் அரசின் மூலம் அவர்களுக்கு நிதி உதவி கிடைக்கவும் இது போன்ற பிரச்சனைகள் நடக்காமல் இருக்க இறைவா உம்மிடம் மன்றாடுகிறோம்.

3) சுகமளிக்கும் நல்ல கடவுளே! நம்முடன் பயிலும் நான்காம் ஆண்டு மாணவர் பொன் சாம் அவர்களுடைய தாயாருக்கு நாளைய தினத்தில் அறுவை சிகிச்சை நல்ல முறையில் நடக்கவும் சுகத்துடன் இருக்கவும் மன்றாடுவோம்.

ஆண்டவர் கற்பித்த இறைவேண்டல்:
(Lords Prayer)
விண்ணுலகிலிருக்கிற எங்கள் பெற்றவராகிய கடவுளே, உமது திருப்பெயர் தூயதென போற்றப்பெறுக, உமது ஆட்சி வருக, உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவதுபோல மண்ணுலகிலும் நிறைவேறுக. இன்று தேவையான உணவை எங்களுக்கு தாரும். எங்களுக்கு எதிராக குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளது போல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களை சோதனைக்கு உட்படுத்தாதையும் தீயோனிடமிருந்து எங்களை விடுவியும். வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமக்கே, ஆமென். ஆட்சியும்

ஒப்படைப்பு (Dedication)
[பாடல் வாயிலாக நாம் நம்மை ஒப்படைப்போம்]
அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய்
அற்புதநாதா உம் கரத்தில்
அனைத்தும் உமக்கே சொந்தம் என்று
அன்பரே என்னையே தத்தம் செய்தேன்

பல்லவி
அனைத்தும் கிறிஸ்துவுக்கே -எந்தன்
அனைத்தும் அர்ப்பணமே என்
முழு தன்மைகள் ஆவல்களும்
அனைத்தும் கிறிஸ்துவுக்கே


இறைவாழ்த்து (Benediction)
குரு: கர்த்தரானவர் உங்களோடிருப்பாரக

அவை: அவர் உமதாவியோடும் இருப்பாராக

குரு: கர்த்தரானவர் உன்னை ஆசீர்வதித்து உன்னை காப்பாராக. கர்த்தரானவர் தமது திருமுகத்தை உன் மேல் பிரகாசிக்கசெய்து உன்னிடம் கிருபையுள்ளவராயிருப்பாராக. கர்த்தரானவர் தமது திருமுகத்தை உனக்கு பிரசன்னமாக்கி உனக்கு சமாதானம் (+) தந்தருள்வாராக

அவை: ஆமென் ஆமென் ஆஆஆஆ... ஆமென்


நிறைவுப் பாடல் (Closing Song)
கீர்த்தனை: 77
ஆதிதாளம்
பல்லவி
சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் அதி
திரியேக நாதனுக்குசுபமங்களம்

(அ.ப)
பாரேறு நீதனுக்கு பரம பொற்பாதனுக்கு
நேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு
- சீர் இயேசு

1. ஆதி சரு வேசனுக்கு ஈசனுக்கு மங்களம்
அகிலப் பிரகாசனுக்கு நேசனுக்கு மங்களம்
நீதிபரன் பாலனுக்கு நித்திய குணாலனுக்கு
ஓதும் அனுகூலனுக்கு உயர் மனுவேலனுக்கு
வே. சாஸ்திரியர்

அனுப்பதல் (Sening Out)
நடத்துனர்: கடவுள் உங்களோடு இருப்பாராக

அவை: உன்னோடு இருப்பாராக

நடத்துனர்: இறை அமைதியோடு சென்று வாருங்கள்

அவை: கடவுளின் திருப்பெயராலே ஆமென்

என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உள்ளமே அவரது திருப்பெயரை ஏத்திடு! என் உயிரே! ஆண்டவரை போற்றிடு ! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! ஆமென்.


என்னுடைய திறனாய்வு வழிபாட்டில் கலந்து கொண்ட, உதவி செய்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.



Gist in English
The Lost Two Sons (Luke 15:11-32)
Basically two separate truths. These truths may be parallel or contradictory to each other. This trait called dualism has covered many portions of the Holy Scriptures. Dualism is a doctrine that separates the mind and the body. This Greek-influenced dualism that is mentioned in this part of the Holy Scriptures that we have heard has also infiltrated this parable. Of the two sons, we portray only one son as bad. Today I will look at these two sons in the list of lost sons.

It centres on the crisis of a broken relationship between a person and God. A person living without God is like a younger son who runs away to a distant land. But the older brother who lives at home with his father is no better. He is like a religious person who has misunderstood the nature of God and has no meaningful relationship with God. The older son does not show love to his father. He struggles, perhaps unsuccessful, to forgive his brother. He cannot share his father's joy at the return of the runaway.

While the biblical accounts tend to emphasize the faults of the prodigal son, the dramatic scenes in this story of broken family relationships show that both the elder and younger brothers are equals, both have needs, and both are lost, but they are lost in different ways.

The parable of a loving father who had two sons, one of whom displeased his father by doing evil and withdrew himself from the love of his father. and the other son being good withdrew himself from the love of his father. In both cases the sons were separated from their father, and the relationship between them and him was broken. They did not love their father.

The parable is divided into two parts. The first part focuses on the younger son, who accepts his father's invitation and joins in the celebration that has been arranged to welcome him home. The second part focuses on the older son, who is also invited to the feast.

The elder son would have been happy if the younger son who had done wrong had been punished. The elder son might have lived without doing wrong only because of the consequences of the wrong doing. Therefore, this man, who had that principle, could not accept what his father had done.

The idea that those who have done wrong should be punished has prevailed over the idea that those who have done wrong should come back. The reason for that is that we think that there should be a difference between those who have done wrong and those who have not done wrong. Another reason for the elder son's anger is that this one who has done wrong deserves so much more respect than I who live righteously. It is clear from this. This one did not do wrong only because of expectations, but not because of love for his father.

At the beginning of the parable, the younger son is portrayed as selfish and completely disrespectful to his father. He treats his father as if he were already dead by demanding his share of the property. He squanders everything in a luxurious life, despising himself.

The turning point of the story comes when he finds himself helpless and ponders his situation. He thinks of his father and is convinced that his father will accept him back.

He is not yet interested in a personal relationship with his father, but decides to use him to survive. He wants to maintain his independence by being a worker. This way he does not have to seek compromise or develop any kind of
proper relationship with his father or his brother. All he wants is to be guaranteed something to eat and he leaves.

Then the focus shifts to the father. It is the father's love that causes the son to repent. The father has always been looking for his son. He longs for him to return. He sees him while he is still far away, and he is filled with compassion. It is this compassion that changes the son's attitude.

The father sets aside his existence and runs across the village, eager to save him before any of the other villagers can hurt him

This expression of unconditional love inspires the younger son to true repentance as what the son did to his father threatens the basic social fabric of village life. For the first time, we see the beginning of a true son-father relationship. The father's love shows him that the not the lost possession but relationship is what matters most.

(Covenant of love with father) refers to the covenant of love made with the father. It is based on trust in a relationship.

It also represents a bond of commitment to love and support each other. It can be between a guru and a disciple in a family relationship, or even between God and man.

The Father confirms the covenant of love with the Son through a sign.

1. Royal robe: symbolizes identity.
In those days, families had their own special clothes. It belonged to the father. It belonged to the most important member of the family, to wear on the most important occasion.

He came with nothing... He came in rags.. He came filthy.. Clothing is no just in the Scripture. it is a symbol of man today. Through this clothing metaphor we understand that we should put on righteousness as our clothing.

2. Ring: symbolizes Authority.
When Joseph was crowned ruler of Egypt, Pharaoh publicly confirmec Joseph's new authority with his ring.

The ring became the central symbol of King Artaxerxes' giving the law to the Jewish people. So the ring symbolizes authority.

3. The sandals: represents responsibility.
When a person becomes a slave, his sandals are taken off. (Isa 20:1-2) when they regain their freedom, their sandals are and will be recovered. (2 chronicles 28:15). The father did not ask anything about the lost property, nor dic he grieve. Not even the slightest movement occurred. Because the father considered repentance to be better than money. The return of the younger sor was not a big news, but the fact that he had repented was great. Therefore, to renew the relationship, the father confirms the relationship through identification.

The essence of this covenant of love is the Old Testament we heard about in Genesis, where God calls Abraham and makes a covenant. This is the basis for the covenant He makes with the people of Israel. Just as the ring, the sandals, anc the royal robe became symbols of relationship, circumcision is performed as a symbol of the covenant between God and Abraham. God transforms this into a symbol. The people of Israel are known throughout history by this symbol.

Before focusing on man's relationship with God, covenant was part of the human experience of society. Humans are bound by agreements and contract among themselves. There were agreements within the group and between equa individuals who wanted to help each other. Thus there are many types o
agreements such as peace covenant, brotherly covenant, friendship covenant, and marriage covenant There are agreements between unequals that promise protection to the weak and the weak cooperate with the strong to work.

There are agreements between unequal's that are based on identities. We will work in the Church to connect the missing relationships that exist around us in society.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.