Type Here to Get Search Results !

பேராயர் அசரியா வாழ்க்கை சரிதை | Bishop Azariah Life History | Jesus Sam

Study Methods 
பேராயர் அசரியா
  • இவர் தமிழ் மக்களால் அசரியா மத்திய சார் என்று அழைக்கப்படுகிறார்.
  • இவர் ஆங்கிலிக்கன் திருச்சபையின் முதல் இந்திய பேராயர் ஆவார்.
  • இந்திய மிஷனரி சங்கத்தை நிறுவியவர் இவரே.
  • ஆதிவாசி மக்கள் வாழும் மலைநாடுகளான தோரணக்கள் பகுதியில் அப்போஸ்தலன் என்று அழைக்கப்படுகிறார்.
  • அசரியாவின் இயற்பெயர் வேதநாயகம் சாமுவேல் அசரியா. இவர் 17.08.1874 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் நெல்லை மண்டலம் கீழ் கோடியில் உள்ள வெள்ளாளன் விளை என்ற கிராமத்தில் பிறந்தவர்.
  • தாயார் பெயர் ஹெலன்.
  • அசரியா தனது பள்ளி படிப்பை மெய்ஞானபுரம் போர்டிங் பள்ளியில் படித்தார்.
  • கல்லூரி படிப்பை சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் பயின்றார். இங்கு தான் இவருடைய பெயர் வி.எஸ்.அசரியா என்று வழங்கப்பட்டது.
  • கல்லூரி படிப்பை முடித்த ஆசிரியர் கிறிஸ்தவ வாலிபர் சங்கம் என்னும் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டு வாலிபர்களை கிறிஸ்துவுக்காக ஆதாயப்படுத்தினார். தன்னுடைய அயராத உழைப்பினாலும் முயற்சியினாலும் திறமையினாலும் தனது 22 ஆவது வயதிலேயே உலகப் புகழ் பெற்ற மனிதர்களுடன் தொடர்பு கொள்ளும் அளவிற்கு உயர்ந்தார்.
  • அசரியா அன்பு என்ற பெண்ணை மணந்தார் இவர்களின் திருமணம் ஜூன் 29 1898ல் நடைபெற்றது.
  • இந்தியாவிற்கு சுவிசேஷம் அறிவிக்க வெளிநாடுகளில் இருந்து பண உதவிகள் தேவையில்லை நாமே நற்செய்தியை அறிவிக்கலாம் என்ற நோக்கத்தில் குழுவாக இணைந்து ஜெபித்ததினால் ஆண்டவரின் ஆலோசனைப்படி 1903 ஆம் ஆண்டு திருநெல்வேலி இந்திய மிஷனரி சங்கத்தை உருவாக்கினார். இதன் முதல் செயலராக அசரியாவே பொறுப்பேற்றார்.
  • 1904 ஆண்டு சுவிசேஷ பிரபல்ய வர்த்தமானி என்ற பத்திரிக்கை இதழை ஆரம்பித்தார். எழும்பி பிரகாசி என்பதே அசரியாவின் எழுப்புதல் குரல் ஆகும்.
  • 1909ஆம் ஆண்டு டிசம்பர் 29ஆம் நாள் குரு பட்டம் படித்து முடித்தார்.
  • 1910 ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் நாள் எடின்பரோ என்ற இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற மாநாட்டில் அசரியா அவர்களின் அருளுரை உலக கிறிஸ்தவர்களை வெகுவாக அசைத்தது உயர்ந்தவர்கள் கீழ்நாட்டினர் தாழ்ந்தவர்கள் என்ற நிலையில் உடைத்து பேசினார்.
  • 1912 ஆம் ஆண்டு தோரணக் கல்லின் பேராயர் ஆகவும் சென்னை பேராயரின் உதவி பேராயராகவும் அபிஷேகம் பெற்றார்.
  • ஒரு இந்தியனுக்கு எத்தனை பொறுப்புகளாய் என்று ஐரோப்பிய மிஷனரிகள் ஆச்சரியப்படும் அளவிற்கு தன்னுடைய பொறுப்புகளை திறம்பட செய்தார் அசரியா.
  • பேராயர் பொறுப்பேற்ற ஆசிரியர் ஒடுக்கப்பட்டவர்களையும் ஏழைகளையும் தாழ்த்தப்பட்டவர்களையும் திருச்சபையில் கூட்டி சேர்த்தார். இதை விரும்பாத திருச்சபை தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இயேசு கிறிஸ்துவும் இந்த திருப்பணிகையே செய்தார் என்பது அவர்களுக்கு அசரியா கொடுக்கும் பதில் உரையாகும்.
  • அந்நாட்களில் அப்பங்களுக்கும் மீன்களுக்கும் அநேகர் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டனர் என்ற கருத்து பரவலாக நிலவி வந்தது. இக்கருத்து முற்றிலும் பொய்யானது என்று அசரியா வாதிட்டார். நாளொன்றுக்கு 60 பைசா ஊதியம் பெறும் இந்த ஏழை மக்களே திருச்சபையின் பராமரிப்பிற்கு உதவினர் என்று அசாரியா வாதிட்டார்.
  • தீண்டா சாதியினர் என்று அழைக்கப்படும் மக்களிடையே 85 சதவீதம் மக்கள் கல்வி அறிவில்லாத இருந்தார்கள். அவர்களுக்கு கல்வியை கற்றுக் கொடுத்து நற்செய்தி பணியில் அவர்களையும் இணைப்பேன் என்பதே அசரியாவின் குறிக்கோலாக இருந்தது.
  • காணிக்கை என்பது படைப்பதேயன்றி சேகரிக்கப்படுவதல்ல என்பது அசரியாவின் கருத்து. எனவே ஆலயத்தில் ஆங்காங்கே செம்புகள் வைத்து விரும்புகிறவர்கள் அதில் காணிக்கை படியுங்கள் என்றே அவர் கற்றுக் கொடுத்தார்.
  • 1914 ஆம் ஆண்டு தரங்கம்பாடியில் நடைபெற்ற மாநாட்டில் அசாரியா தன்னுடைய உரையை நிகழ்த்தினார். தென்னிந்திய திருச்சபை உருவாவதற்கான முதல் அடித்தளம் இந்த மாநாடு ஆகும்.
  • தென்னிந்திய திருச்சபை உருவாவதற்கு அயராது உழைத்தவர் பேராயர் அசரியா. ஆனால் தென்னிந்திய திருச்சபை உருவானதை அவரால் பார்க்க முடியவில்லை. 1947 ஆம் ஆண்டு தேசம் விடுதலை அடைந்த போது தென்னிந்திய திருச்சபை என்ற அமைப்பு உருவானது. தென்னிந்திய திருச்சபை செப்டம்பர் 27 ஆம் நாள் 1947 ஆம் நாள் உருவானது. ஆனால் பேராயர் அசாரியாவின் உடல்நல குறைவின் காரணமாக 1944 ஆம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார்.

Bibilyography:
ஆர். எஸ். ஜேக்கப், திருச்சபை திருத்தொண்டர்கள், சென்னை: ஜே.பி. ரூபன் பப்ளிகேஷன்ஸ், 2017

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.