Type Here to Get Search Results !

இன்னிசை வழிபாடு 2024 | Peace Builders in a Conflicting World | Jesus Sam

தமிழ்நாடு இறையியல் கல்லூரி
அரசரடி, மதுரை 16.

கிறிஸ்து வருகை
இன்னிசை வழிபாடு - 2024

கருப்பொருள்:
"முரண்படு உலகில் அமைதியைக் கட்டுவோர்”

Theme:
"Peace Builders in a Conflicting World"


தேதி: 30.11.2024

கிழமை: சனிக்கிழமை

நேரம்: மாலை 6.00 மணி

கிறித்து வருகை இன்னிசை வழிபாடு – 2024
“முரண்படு உலகில் அமைதியைக் கட்டுவோர்”
"Peace Builders in a Conflicting World"
1. பவனி (Procession)
(தேவியல் இளையர் மூன்றாம் ஆண்டு)

2. இறைப்புகழ்
நமோ... நமோ... நமோ... நமோ... நமோ... நமோ... நமோ... நமோ...

பல்லவி
அமைதியின் அரசரே வருகவே
அன்பின் உருவே வருகவே
தாழ்மையின் உருவே வருகவே
தரணியின் மனுவே வருகவே

1. நீதியின் உருவே
நிமலரின் பிறப்பே வருகவே
எளியோரின் உறவே
மனிதரின் மகவே வருகவே
வருகவே நீர் வருகவே

நமோ... நமோ... நமோ... நமோ... நமோ... நமோ... நமோ... நமோ...

2. அகிலத்தைப் படைத்தவா வருகவே
அருளினைத் தருபவா வருகவே
அரூபியே வருக மகிபரே வருக

நமோ... நமோ... நமோ... நமோ... நமோ... நமோ... நமோ... நமோ...
நமோ... நமோ... நமோ... நமோ... நமோ... நமோ...நமோ... நமோ...

பண்: அறிவர். சி. விக்டர்
பாடல்: அருள்பணி. முனைவர். மார்கிரெட் கலைச்செல்வி



3. வரவேற்பு (Welcome)
அருள்பணி. முனைவர். மார்கிரெட் கலைச்செல்வி, கல்லூரி முதல்வர்

4. வழிபட அழைப்பு (Call to worship)
நாம் திகைத்து நின்ற சூழலில் வியத்தகு ஆலோசகராகவும், வலிமையிழந்து வாடியபோது நமக்கு வலிமைமிகு இறைவராகவும், உறவுகள் நம்மை விட்டுப் பிரிந்த போது என்றும் நம்முடன் பயணிப்பவராகவும், முரண்பட்ட சூழலில் மானுடத்திற்காக அமைதியின் வாழ்வை வாழ்ந்து காட்டிய அமைதியின் அரசராய், பாதை தெரியாமல் நின்றபோது பேரொளியாய் வந்து வழிநடத்தி வரும் நம் மூவொரு கடவுளை, நாம் அனைவரும் இணைந்து இந்த கிறித்து வருகையின் இன்னிசை வழிபாட்டில் உள்ளத்தால் ஒன்றித்து வழிபடுவோம் வாருங்கள்.

5. தொடக்க இறைவேண்டல் ( Opening Prayer)
அருள்பணி. முனைவர். ஐவி சிங்
அமைதியின் வாழ்வை வாக்குரைத்தவரும், அமைதி நிறைந்த வாழ்வை மானுடம் பெற்றுக்கொள்ள வேண்டி தம் சொந்த மைந்தரைத் தந்தவருமாகிய பெற்றவராம் கடவுளே, நீர் கொடுத்த இந்த மகிழ்ச்சி நிறைந்த நாளுக்காக நன்றி. சமயம், சாதி, பணம், ஆணவம், அடிமைத்தனம் போன்ற காரிருள் சூழ்ந்த போது திக்கற்று, அச்சத்துடன் இருந்தோம் அப்போது பேரொளியாய், அமைதியின் அரசராய்த் தோன்றி அனைத்து மக்களுக்கும் நற்செய்தியாய் வந்து எங்களை வரவேற்று அணைத்தீர் உமக்கு நன்றி படைக்கிறோம். கிறித்து வருகை இன்னிசை வழிபாட்டின் கூறுபாடுகளான திருமறைத் திருமொழிகள், பாடல்கள், நடனங்கள் வழியாக உண்மையான அமைதி என்னவென்று எண்ணிப்பார்க்க இந்த வழிபாட்டின் மூலம் முயன்றுள்ளோம். அமைதியிழந்து வாடும் மக்களுக்கு நாங்கள் முன்னெடுக்க வேண்டிய திட்டங்களையும், முயற்சிகளையும், எங்களுக்கு எடுத்துக் காண்பியும். எங்களுக்குள்ளாக இருக்கின்ற முரண்பாடுகளையும் எங்களுக்குச் சுட்டியருளும். இவ்வழிபாடு முழுவதிலும் உம் இருத்தல் நிலையை உணர்ந்துகொள்ள அருளைத் தாரும். இவையனைத்தையும் அமைதியின் வாழ்வை வாக்குரைத்துச் சென்ற இயேசு கிறித்துவின் வழியே வேண்டுகிறோம், எங்கள் வேண்டுதலைக் கேட்டருளும் பெற்றவராம் கடவுளே. - ஆமென்.

6. போற்றிப் பாடல் (Song of Praise)
(அவையோர் எழுந்து நிற்க)
1. மெய் பக்தரே, நீர் விழித்தெழும்பும்,
சந்தோஷமாய் இந்நாளை வாழ்த்திடும்;
இன்றைக்கு லோக மீட்பர் ஜென்மித்தார்,
விண்ணோர் இவ்விந்தையைக் கொண்டாடினார்,
கர்த்தாதி கர்த்தா மானிடனானார்
ரட்சணிய கர்த்தாவாகத் தோன்றினார்

2. இதோ! நற்செய்தி கேளும்; இன்றைக்கே
இம்மானுவேல் தாவீதின் ஊரிலே
பூலோக மீட்பராகப் பிறந்தார்,
எல்லாருக்கும் சந்தோஷம் நல்குவார்
என்றே ஓர் தூதன் பெத்லகேம் மேய்ப்பர்க்கே
இராவில் தோன்றி மொழிந்திட்டானே

3. அந்நேரம் வானோர் கூட்டம் மகிழ்ந்து
ஆனந்த பாட்டைப் பாடி இசைந்து
விண்ணில் கர்த்தாவுக்கு மா துதியும்
மண்ணில் நல்லோர்க்குச் சமாதானமும்
என்றல்லேலூயா பாடி வாழ்த்தினார்,
தெய்வீக அன்பின் மாண்பைப் போற்றினார்.

4. இச்செய்தி கேட்ட மேய்ப்பர் ஊருக்கு
அற்புத காட்சி காண விரைந்து,
யோசேப்புடன் தாய் மரியாளையும்
முன்னணைமீது தெய்வ சேயையும்
கண்டே, தெய்வன்பை எண்ணிப் போற்றினார்,
ஆனந்தமாய் தம் மந்தையேகினார்.

5. கெட்டுப்போனோரை மீட்ட நேசமாம்
உன்னத அன்பைச் சிந்தை செய்வோம் நாம்;
தம் ஜென்மமுதல் சாவுமட்டுக்கும்
அப்பாலன் செய்த தெய்வ வாழ்க்கையும்
அன்போடு தியானம் செய்துவருவோம்
நம் மீட்பர்பின்னே செல்ல நாடுவோம்
பாடல்: ஜான் பைரன்

(அவையோர் அமர்க)

7. திருமறைப் பாடம்:
ஏசாயா 11:1-4 (திருமிகு. இராஜசுதன்)

8. பாடல்: இத்தரைமீதினில்.....
இராகம் : சாவேரி
தாளம்: ஆதி தாளம்

பல்லவி
இத்தரைமீதினில் வித்தகனா யெழுந்த
உத்தமனே தோத்ரம்!

அனுபல்லவி
நித்தமென் னிருதயம் சுத்தமாக விளங்கச்
சித்தங்கொள்வாயென்மீது தத்தஞ்செய்தேனிப்போது
- இத்தரை

சரணங்கள்
1. தேனே, கனியே, என்றுந் திகட்டாத அமிர்தமே,
தீயனென் மனப்புண்கள் ஆற்றிடும் அவிழ்தமே,
வானே யிருந்துபுவி வந்தபெரும் பதமே,
மறவாது திருப்புகழ் வரைவேன் நிதம் நிதமே
- இத்தரை

2. கண்ணே மணியே உன்னைக் கண்டபின் விடுவேனோ?
காதலாய்ப் பவத்தில்வீண் காலம்பின் னிடுவேனோ?
விண்ணே உனைமறந்து வேறொன்றைத் தொடுவேனோ?
வேறு மார்க்கம் நடந்து வேதனைப் படுவேனோ?
- இத்தரை
பாடல்: சா. பரமானந்தம்

1. | மா கரி சரிக | மா பா ; க ம |
| பா த பா ம கம | பா தா ; ; | 
| சா நிதா பமா | நீத பாம கா |
| கமப மாகரி கரிசா ; |

2. ச்நிதபமக | மா ப தா || நிதபம கரி | கா ம பா ; |
| சாநிதாபமா | நீத பாம கா | கமப மாகரி | கரிசா ; ||

3. | சாச்ச் சாச்ச் | நிச்நிதபமகம |
| பாபப பாபப | பதபம கரி சரி |
| சரீம ரிமாப | மபாத பம கரி |
| கமப மாகரி கரிசா ; ; |

4. | சா நி த நீசா |, ரீ, மா, பா, தா  | 
| பா மா கா ரி |
| சரீம ரிமாப | மபாத | பமகரி |
| கமப மாகரி | கரிசா | ; ; |

5. மா கரி சரி கா | சரிக | ரிகம | கமப | மபத | பதநி |
தா ; பா ; | சரீம ரிமாப............

6. சாநிதாபமப | சரிகரி | கம பம |
| ,தாப, நித, ச்நி தபமப | (சரீமரிமாப)

7. [ | பப பப | கரிசரி | தததத பமகம | நிநிநிநி தபமப |
| தத நிநி சா | ]
| ச்நிதப | நிதபம | தபமக | பமகரி
| ஸா ஸ ரீ ரி | மாம பாப | தாத ஸாஸ நீ ஸா |
சா ச ரி | மா ம பா ப | தா த சா ச்நிச் | - 2
- இத்தரைமீதினில்

9. திருமறைப் பாடம்:
ஏசாயா 58:10-12
திருமிகு. மோனிகா (அருளகம்)

10. பாடல்: ஒத்துமையா நாம வாழ
பல்லவி
ஒத்துமையா நாம வாழ மேசியா பொறந்தாரு
ஊருக்கெல்லாம் சேதி சொல்லு இது தான் நல் திருநாளு
எல்லோரும் ஒண்ணு கூடி போடுங்க கும்மாளம்
நம்மோட சந்தோசத்தை பாட்டாக பாடுவோம்
வேத்துமைய ஒழிச்சுதானே ஒத்துமைய போற்றுவோம்
வன்முறை பூமியில அமைதிய கட்டுவோம்

அனுபல்லவி
ஆடி பாடி நீ கொண்டாடு
இது அன்ப போற்றும் திருநாளு
அமைதியின் அரசர் பொறந்தாரு
அவர் அன்பின் உருவாய் வந்தாரு

சரணம்
1. வன்மத்த மனதில் வைத்து வாழ்வதொரு வாழ்க்கையா?
அன்புநெறி காட்டத் தானே பொறந்தவரு இயேசையா
தன்ன போல பிறரை நேசி சொன்னவரும் அவர் தானே
நம்மோடு பாடுபட மனிதரா பொறந்தாரே
கிறிஸ்த்துமசு நாளுனு சொல்லி ஆடம்பர கொண்டாட்டம்
தேவையுள்ள எளியோருக்கு உதவி செய்ய மறந்துட்டோம்
நான் என்ற ஆணவத்த துறந்து நாம் வாழ்ந்தாலே
இந்த நல் பூமியிலே ஓர் சண்ட இருக்காதே
என்பத நாம் உணர்ந்து கொண்டாடுவோம்
இம்மானுவேலர நாம் பாடுவோம் - ஆடி பாடி நீ

2. தாவீதின் ஊருல தான் ஆண்டவரு பொறந்தாரு
எளியோரின் கோலமாக தொழுவத்தில் இருந்தாரு
அமைதியா வாழச் சொல்லி ஊரெல்லாம் திரிஞ்சாரு
எதிரிக்கும் அன்பு காட்டி சிலுவைய சுமந்தாரு
சாதி, மதம், பேதம் சொல்லி வன்முறைய தூண்டுறோம்
எல்லைகள் வைத்து நாமும் பிரிவினையை வளக்குரோம்
அண்டத்தை ஆண்டவரு அமைதியா வாழ்ந்தாரு
நீதியா வாழ்பவர தம் மக்கள் என்பாரு
என்பத நாம் உணர்ந்து கொண்டாடுவோம்
இம்மானுவேலர நாம் பாடுவோம் - ஆடி பாடி நீ

பாடல், பண்: திரு. டேனியல் மார்க்
தேவியல் இளையர் இரண்டாமாண்டு

11. திருமறைப் பாடம்: செப்பனியா 3:14-15
திருமிகு. நேசமணி

12. பிழை உணர அழைப்பு (Call to Confession)
அருள்பணி. க.லு.டே இராஜசேகரன்

13. பிழையறிக்கை (Confession of Sins)
அருள்பணி. க.லு.டே. இராஜசேகரன்
நடத்துநர்: உடன் பயணிக்கும் நல்ல கடவுளே, எங்களின் உடன் பயணிக்கும் அன்பு உறவுகள் இடையே முரண்பாடு எழும் வேளைகளில் அவர்கள் எங்களுடன் உடன் பயணியர் என்பதை மறந்து அவர்கள் மேல் எழும் வெறுப்புணர்வு, சினம், பொறாமை போன்ற பல தீமையான எண்ணங்களுக்கு வலு கொடுத்து அவர்கள் மேல் எதிர்மறையான எண்ணங்களை வளர்த்துக்கொண்ட தோழமையற்ற நிலையை எண்ணி மனம் வருந்துகின்றோம்.

அவை: ஆண்டவரே எங்களைப் பொறுத்தருளும்.

அருள்பணி. முனைவர். ஆட்லின் ரெஜினாபாய்
நடத்துநர்: அநீதிகள், அடிமைத்தனம், அடக்குமுறை, வன்முறை போன்றச் சமுதாய அநீதியால் அவதியுறும் மக்களை இருளின்றும் இறப்பின்றும் வாழ்வாம் ஒளியை ஒளிரச் செய்ய வேண்டிய நாங்கள் பல நேரங்களில் என் குடும்பம், என் வேலை, நான் என்று சிறு வட்டத்துக்குள் அடைத்துக் கொண்டு அதனைக் குறித்துச் சிறிதும் சிந்தியாமலும் செயல்படாமலும் வாழ்கின்ற தன்னலமான நிலையை எண்ணி மனம் வருந்துகின்றோம்.

அவை: ஆண்டவரே எங்களைப் பொறுத்தருளும்.

நடத்துநர்: கிறித்து பிறப்பின் நற்செய்தி கொண்டாட்டங்கள் என்பது ஏழை எளியோர்களின் மீட்பு, சிறைப்பட்டோருக்கு விடுதலை, கைவிடப்பட்டோருக்கு ஆதரவு, வாழ்வு இழந்தோருக்கு வாசல் என்பதை உணராமல் அதை மறந்தும் மறுத்தும் திருச்சபை சார்ந்த சடங்காக எண்ணிக் கொண்டிருக்கின்ற இழிநிலையை எண்ணி மனம் வருந்துகின்றோம்.

அவை: ஆண்டவரே எங்களைப் பொறுத்தருளும்.

அருள்பணி. ஞானபிரபு
நடத்துநர்: அன்பின் கடவுளே, இறை மக்களாகிய நாங்கள் இறையரசின் விழுமியங்களான அன்பு, சமத்துவம், உடன் பிறப்பாண்மை, அமைதி, பகிர்வு போன்றவற்றைக் கட்டமைக்கும் இறை பணி புரியாத நிலை எண்ணி மனம் வருந்துகின்றோம். மேலும் இன்று வரையிலும் இவ்விழுமியங்களைச் செயல் வடிவம் செய்யாமல் சொல்லில் மட்டுமே வெளிப்படுத்திக் கொண்டிருக்கிற சோம்பேறித்தனத்திற்காக எங்களை மன்னியும்.

அவை: ஆண்டவரே எங்களைப் பொறுத்தருளும்.

முனைவர். கிறிஸ்டி பெமிலா
நடத்துநர்: சமயம், சாதியம், தேசியவாதம். பாலினப் பாகுபாடு, பொருளாதார ஏற்றத்தாழ்வு, ஏழைகளுக்கு எளியவர்களுக்கு எதிரான அரசியல், கல்வி சமத்துவம் இன்மை போன்றவையே அனைத்து தீமைகளுக்கும் வேராக இருக்கின்றது. அவ்வேர்களின் பிறப்பிடம் எங்களிடமிருந்து எழுகின்றது என்ற புரிதலை ஏற்றுக்கொள்ளாமல் இன்றளவும் இச் சமுதாயத் தீமைகளுக்கு நாங்கள் காரணம் அல்ல என்ற போலியான மனப்போங்கினையும் மாயையான அமைதி யையும் ஏற்படுத்துகின்ற எங்களை மன்னியும் இறைவா.

அவை: ஆண்டவரே எங்களைப் பொறுத்தருளும்.

அமைதி (வீணை இசை)
14. பிழை மன்னிப்பின் உறுதி (Absolution)
பேரருட்பணி. முனைவர். ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன்
அமைதியருளும் கடவுள் நீடிய பொறுமையும், மன உருக்கமும் உள்ளவர். அமைதியிழந்து வாழும் படைப்புகளுக்குக் கடவுளின் வழியில் பேரன்பும், பரிவுள்ளமும் கொண்ட பெற்றவராம் கடவுள் நம் நிலையினையும், பலவீனங்களையும் அறிந்திருக்கிறார். முரண்பாடுகளைக் களைந்து அமைதி நிறைந்த வாழ்வினை உறுதி செய்யும் உன்னதமான நம் பயணத்தில் தயக்கம், குற்றவுணர்வு இல்லாமல் நடக்க ஆற்றல் அருளுகின்றார். தம் ஒரே மகனின் ஏற்புடைய செயலால் அனைத்து படைப்புகளுக்கும் வாழ்வளிக்கும் விடுதலைத் தீர்ப்பாய் அனுப்பிய பெற்றவராம் கடவுள் தாமே நாம் அறிக்கைசெய்த பிழைகளைப் பொறுத்தருளி, எதிர்வரும் காலங்களில் நம்மைப் பண்படுத்தி, நீதியை நிலைநாட்டவும், அநீதிகளைச் சுட்டிக்காட்டி அமைதியை ஏற்படுத்தும் கருவிகளாய் வாழ நம்மை வழிநடத்துவராக. ஆமென்.

15. திருமறைப் பாடம்:
எசாயா 35:1-4 திருமிகு. வித்யா

16. பாடல்: வாழ்க்கையே போர்க்களமா?...
வாழ்க்கையே போர்க்களமா?
வாழ்வதே பெரும் வரமா?
வாழும் மண்ணிலே அமைதி இல்லையே
எங்கும் ஒலமே மனதில் பாரமே

சரணம்
1. அமைதியின் அரசராய் மண்ணிலே பிறந்தீரே
நீர் பிறந்த மண்ணிலும் அமைதியும் இல்லையே
போர்க்களம் பார்ப்பதும் உயிர் வாங்கிப் போவதும்
தினம் எங்கள் வாழ்க்கையாய் மாறிதான் போனதே
எங்களின் வாழ்க்கையும் மீட்புக்காய் ஏங்குதே
அமைதியாய் வாழவே உள்ளம் தான் தேடுதே
யார் வந்து மீட்பது? அமைதியைத் தருவது?

2. அமைதியை வழங்குவோர் கடவுளின் மக்களாம்
கடவுளின் மக்களே அமைதியை குலைப்பதா?
அன்புடன் ஏற்பதும் பரிவுடன் காப்பதும்
இறையரசின தன்மையே அதை நாமும் மறப்பதா?
உருக்குலைந்த உள்ளமும் இறைவரைத் தேடுதே
இறைசாயல் வேண்டியே இதயமும் ஏங்குதே
அமைதியின் அரசரே அமைதியைத் தாருமே
பாடல். பண்: அருள்பணி. ஷீலா

17. திருமறைப் பாடம்:
உரோமையர் 5:10
(செல்வி. சோஃபியா)

18. சிறார் பாடல்: அமைதியின் பாலன்....
அமைதியின் பாலன்
பாரினில் வந்தார்
பாலனாய் புவிதனிலே
மன்னவனாலே மண்ணுலகினிலே
மாட்சியும் நிறைந்திடுதே

1. நம்பினால் இறைவன் கைவிடமாட்டார்
நிச்சயம் காத்திடுவார்
முரண்படும் உலகில் எங்களின் வாழ்வை
அமைதியாய் மாற்றிடுவார்
அவரே எம் வாழ்வு, அவரே எம் மீட்பு
ஆண்டவர் அருகினில் இருப்பார்
எந்நாளும் அவர் பாதம் பணிந்திடுவோம்.
- அமைதியின்

2. இறைவரின் அரசின் முன் சுவை நாங்கள்
எங்களை ஏற்றிடுவீர்
எங்களின் உயிரும் எங்களின் மாண்பும்
வளம் பெற உழைத்திடுவீர்
சிறுவர் எம் வாழ்வை சிறப்பாய் கொண்டாட
சிறுமையின் பாலகன் பிறந்தார்
எந்நாளும் அவர் பாதம் பணிந்திடுவோம்
- அமைதியின்
பண்: அறிவர். சி. விக்டர்
பாடல்: அருள்பணி. ஷீலா

19. திருமறைப் பாடம்:
கொலோசையர் 11:13-15
திருமிகு.மரகதம் (இன்ப இல்லம்)

20. பாடல்: ஊர் தூங்கும் நடு நிசியில்...
ஊர் தூங்கும் நடு நிசியில்
இறைப் பாலனாய்ப் பிறந்தீரே
மதி மங்கிய மனிதத்தில்
மகவாய் நீர் உதித்தீரே
இணையாய் சமமாய் வந்தீரே
ஈனவரின் இழிநிலை மாற்றிடவே, மாற்றிடவே

// ப த நி / சா / நி த // ப த நி / சா ; // - 2
/ சா, / நி த / நி ச் // நி ச நி / தா / ; // - 2
ம த ப / த நி / சா // மா, / கரி / சா // - 2
மா, / ப த நி ச் // ரீ ; / சா / ; // - 2

1. வறுமை தீர வளமாய் மாற
பகைமை தீர அமைதி பிறக்க
பாத்திரமாய் மாற்றும் எம்மை
சாதியும் பிளவும் மதவெறியும் விலகிட
வழிகாட்டும் நட்சத்திரம்

2. எளிமை கோலம் தாழ்மை உருவம்
ஈனர் இழிநிலை மாற்றவே
மருள் பகையை நீக்க வாரும்
முரண்களை களைந்திட அமைதியும் மலர்ந்திட
வழிகாட்டும் நட்சத்திரம்
பண்: அறிவர். சி. விக்டர்
பாடல்: ஓவியப்பாவை.
தேவியல் இளையர் நான்காமாண்டு

21. திருமறைப் பாடம்
1 யோவான் 4:7-9
1 John 4:7-9
(Miss. Ngathingchon)

22. பாடல்: கிராமத்துல வாழ்ந்துவறோம் தாங்க....
பல்லவி
கிராமத்துல வாழ்ந்துவறோம் தாங்க
ஒத்துமயா வாழ முடியலேங்க - நாங்க
ஊருக்குள்ளே பகையிருக்கு, பகையிருக்க வெறுப்பிருக்கு
நாங்க எல்லாம் சேந்து வாழ முடியல
- கிராமத்துல

சரணம்
1. கிராமத்துல சாமி கும்பிட முடியல
எங்களிடம் இருக்கும் பகையும் ஒழியல்
சாமிக்குத்தான் படையல் செய்ய முடியல நாங்க
ஒருலையில் ஒண்ணா சேந்து சமைக்கல
ஊருக்குள்ள பிளவிருக்கு, மனிதருக்கு மதம் பிடிச்சு
சாதி சமய பேதம் இன்னும் தீரல
மோதல் ரொம்ப பெருகிடுச்சு அமைதியும் தான்
தொலைஞ்சிருச்சு வாழ்க்க போற போக்கு ஒண்ணும் புரியல
- கிராமத்துல

2. மக்களோட பாரமெல்லாம் நீங்க
ஒத்துமயா சாமிகும்பிடதாங்க
வரவேணும் ஆண்டவரே நீங்க
எங்களுக்கு நல்ல சேதியாக
தீமைகள வேரறுக்க நீதிநெறி வழி நடக்க
பகையில்லாம காத்திடுமே சாமி
எத்திசையும் உலகினிலே இறையமைதி கொடுப்பவரே
எங்களையும் மாற்றிடுமே சாமி
பண்: அருள்பணி. ஷீலா
பாடல்: அருள்பணி. ஞானபிரபு

23. திருமறைப் பாடம்:
லூக்கா 2:10-14
திருமிகு. செல்வி

24. ஆங்கிலப் பாடல்: A LIGHT OF HOPE A SONG OF PEACE
1. We light a candle and we remember
There is hope in this world
There is hope We sing our heart song and we remember
There is peace in this world
There is peace ......

Chorus:
The days are getting colder
The nights are growing long
But there is warmth and wonder
A candle and a song.....

And so we shine and so we see
Till doubt and sorrow cease
A light of hope.... A song of peace

2. A single candle will light another
Spreading hope through this world
Spreading hope
We'll share our heart song
With one another
Singing peace to this world
Siging peace....

LOVE IS BORN THIS CHRISTIMAS NIGHT
1. On the wind a song is calling
Music from the stars above
Peace like gentle snow is falling
Wonders from a heart of love.

Chorus:
Alleluiah sing a new song
Sing a stars song clear and bright
Alleluia... Alleluiah
Love is born this christmas night.

2. In the night a song is ringing
Every valley echoes praise
Bringing joy the stars are singing
Filling hearts with golden grace

3. Come and gather every nation
Let all sounds of hatred cease
With one voice of jubilation
Fill the earth with hope and peace

25. திருமறைப் பாடம்
யோவான் 1:12-13
திருமிகு. ஏஞ்சலோ சாலமோன்

26. பாடல்
முரண்படும் உலகில்......

பல்லவி
முரண்படும் உலகில் இன்று
முற்போக்கன் இயேசு வந்து
அகிம்சையே யுத்தம் என்று
பிறந்தாரே மண்ணில் இன்று
அன்பின் மார்க்கம் வேண்டும் என்று
முழங்கிடவே தோன்றினார்

சரணம்
1. மகவே மவே மகவே மகவாய்
அழகே அழகே அழகே அழகாய்
விடுதலைக்காகவே ஒளியாய் வந்தவரே
ஒளியாய் உலகிலே விளங்கிடு என்றவரே
முரண்படும் உலகிலே அமைதியைத் தந்தவரே
அமைதியின் மானுடமாய் செயல்படு என்றவரே
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்
ஆனந்தம் சொல்லியே கூத்தாடுவோம்
- முரண்படும்

2. இறையே இறையே இறையே என்று
வழியாய் வாழ்வாய் மறையாய் இன்று
அநீதி வாழ்வையே துடைத்திட வந்தவரே
சமதள வாழ்வையே நீதி என்றவரே
சீர்கெட்ட உலகையே உனதாய் ஆக்கிடுமே
சீர்பட எங்களையும் கருவியாய் மாற்றிடுமே
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்
ஆனந்தம் சொல்லியே கூத்தாடுவோம்
- முரண்படும்
பண் : திரு. நெல்சன், ஈரோடு.
பாடல்: திருமிகு. ஐ.சபீனா, நான்காமாண்டு

27. திருமறைப் பாடம்
புலம்பல் 3:20-24
திருமிகு. மெர்லின்

28. பாடல்
பட்டி தொட்டி ஊரவிட்டு...
1. பட்டி தொட்டி ஊரவிட்டு
மாட்டுக்கொட்டில் வைக்கப்பொடப்பு
தீவனத் தொட்டி நம்ம சாமி பொறப்பு
அக்கம்பக்க இடையருக்கு அறிவிப்பு (மொத)

அச்சமெல்லாம் நீக்க நல்ல செய்தியாக
ஒசரத்துல மாட்சி மக்களுக்கு அமைதி

2. பெண்மாது பாதுகாப்பு
வங்காள கொலை வழக்கு
காயங்கட்டும் மருத்துவரின் குருதி சத்தம்
மெசியாவ வரவழைக்கும் தூதர் சத்தம் (தெய்வ)

சேவக்கோழி கூவ இருட்டிலிருந்து விடிய
இயேசு சாமி சொன்ன நீதி நின்று நிலவ - 2

3. ஏழ பாள மக்க(ள்) ஒழைப்பு
கொஞ்சநஞ்ச கூலிக்கு வித்து - 2
ஆதிக்க வர்க்கத்தால நாயி பொழைப்பு
நாமெல்லாம் ஒன்னாசேர அழைப்பு (செயல்பட)

பசிச்ச வயித்த நிறப்ப அடிமை கயிற்ற அறுக்க
முரண்பாடெல்லாம் களைய அமைதி நிலை நாட்ட-2
பாடல், பண் : திரு. டேனியல் ராக்லாண்ட்
தேவியல் இளையர் நான்காமாண்டு

29. திருப்பணிக்கொடைப் பாடல் (Offertory Song) (எழுந்து நின்று)
பல்லவி
ஆதித் திருவார்த்தை திவ்விய
அற்புதப் பாலனாகப் பிறந்தார்;
ஆதந் தன் பாவத்தின் சாபத்தைத் தீர்த்திட
ஆதிரை யோரையீ டேற்றிட

அனுபல்லவி
மாசற்ற ஜோதி திரித்துவத் தோர் வஸ்து
மரியாம் கன்னியிட முதித்து
மகிமையை மறந்து தமை வெறுத்து
மனுக்குமாரன் வேஷமாய்,
உன்ன தகஞ்சீர் முகஞ்சீர் வாசகர்,
மின்னுச்சீர் வாசகர் மேனிநிறம் எழும்
உன்னதக் காதலும் பொருந்தவே சர்வ
நன்மைச் சொரூபனார், ரஞ்சிதனார்,

தாம், தாம், தன்னரர் வன்னரர்
தீம் தீம், தீமையகற்றிட
சங்கிர்த, சங்கிர்த, சங்கிர்த சந்தோ
ஷமென சோபனம்பாடவே இங்கிர்த,
இங்கிர்த, இங்கிர்த நமது இருதயத்திலும் எங்கும் நிறைந்திட
- ஆதி

சரணங்கள்
1. ஆதாம் ஓதி ஏவினர்;
ஆபிரகாம் விசுவாசவித்து,
யூதர் சிம்மாசனத்தாளுகை செய்வோர்
ஈசாய் வங்கிஷத்தானுதித்தார்.
- ஆதி

2. பூலோகப் பாவ விமோசனர்,
பூரண கிருபையின் வாசனர்,
மேலோக இராஜாதி இராஜன் சிம்மாசனன்
மேன்மை மகிமைப் பிரதாபன் வந்தார்
- ஆதி

3. அல்லேலூயா! சங்கீர்த்தனம்,
ஆனந்த கீதங்கள் பாடவே,
அல்லைகள், தொல்லைகள் எல்லாம் நீங்கிட
அற்புதன் மெய்ப்பரன் தற்பரனார்
- ஆதி
- வே. சாஸ்திரியார்

30. திருப்பணிக்கொடை இறைவேண்டல் (Offertory Prayer)
அருள்பணி. முனைவர். பீற்றர் சிங்

31. பாடல்
ஆயிரம் ஓவியம் 

பல்லவி
ஆயிரம் ஓவியம் விந்தையாய் சேர்ந்ததே
காவியம் போல் ஒரு ராத்திரி
வானமும் வையமும் மையிருள் போர்த்தியே
நீளமாய் நீண்டிடும் ராத்திரி
காலமும் ஏக்கமாய் காத்திருந்தது
காலத்தால் கண்களும் பூத்திருந்தது
வானகம் வந்திரங்குமாய்
அமைதியும் தான் விளங்குமாய்
- ஆயிரம்

சரணம்
1. புனித விதைகளை மனித மனங்களில்
விளைவிக்க விண்தாண்டி வந்தாய்
இதய இருளினை விரட்டி துறத்தவே
வாழ்வெங்கும் விளக்கேற்றித் தந்தாய்
உதயகீதமாய் விடியல் நாதமாய்
வார்த்தையானவர் நம் வாழ்வில் வந்ததால்
சொல்லவே வார்த்தைகள் இங்கு இல்லையே
- ஆயிரம்

2. நவீன உலகத்தில் உள்ள முரண்பாட்டையே
முதலாக முன்னாக எதிர்ப்பாய்
மனித மனங்களில் புது மகிழ்ச்சி பொங்குதே
மண்ணெங்கும் பூவாசம் வருதே
இறை மைந்தனாய் என இதயக் கூட்டினில்
இப்பூவின் அமைதியை நம் வாழ்வாக்கவே
வந்தீரே தந்தீரே புது வாழ்வையே
- ஆயிரம்
பண்: அருள்பணி. எர்னஸ்ட்
பாடல் : அருள்பணி. லிவிங்ஸ்டன்

32. திருமறைப் பாடம்
கொலோசையர் 1:15-23
திருமிகு. ஜெனித்

33. பாடல்
என்னாச்சு என்னாச்சு...

இஞ்சாரே இஞ்சாரே இஞ்சாரே ஓய் - 4

பல்லவி
என்னாச்சு என்னாச்சு சிப்பிரக்கா என்னாச்சு
இஞ்சாரே இஞ்சாரே இஞ்சாரே ஓய்
காலம் பொறந்திடுச்சு காரிருளும் நீங்கிருச்சு
இஞ்சாரே இஞ்சாரே இஞ்சாரே ஓய்
வந்து பிறக்கணுமே ஏற்பாடு எல்லாம் என்னாச்சு
இஞ்சாரே இஞ்சாரே இஞ்சாரே ஓய் -3

சரணம்
சிப்ரா:
மலை நாட்டுல நீங்க பொறக்க வேணுமே
மண்ணின் மக்களோடு பொறக்க வேணுமே
ஆனா பொறந்த மண்ண விட்டு விரட்டுறாங்களே
நிலத்தின் வளத்தை எல்லாம் சுரண்டுறாங்களே

இயேசு:
பூவாளக்கா வெளியே வந்து ஊஞ்சலாட வேணுங்களே
இஞ்சாரே இஞ்சாரே இஞ்சாரே ஓய்
புடவை இருக்குதா ஆடி பாக்க வேணுங்களே
புடவையில் தொட்டில் கட்டி நான் படுத்து தூங்கனுமே
இஞ்சாரே இஞ்சாரே இஞ்சாரே ஓய் -3

பூவாள்:
மணிப்பூருல ஒரு கூட்டம் இருக்குது
கட்டிக்கிட்ட புடவை கூட உருவ பாக்குது
எங்க மானமெல்லாம் அதிலே மறைஞ்சி இருக்குது
அது தெரிஞ்சும் கூட கூட்டம் உருவிபாக்குது

இயேசு:
சிப்பிராக்கா பூவாளக்கா நான் பொறந்தே ஆகணுமே
இஞ்சாரே இஞ்சாரே இஞ்சாரே ஓய்
இங்கு கூட நானும் பொறந்தே தான் ஆகணுமே
இஞ்சாரே இஞ்சாரே இஞ்சாரே ஓய்
என் தந்தை சொன்னத நிறைவேத்தி ஆகணுமே
இஞ்சாரே இஞ்சாரே இஞ்சாரே ஓய்
படைப்பெல்லாம் தன்னோட நிலைய இழந்து நிக்குதே
இஞ்சாரே இஞ்சாரே இஞ்சாரே ஓய் 3

மக்கள்:
நீங்க மனுவேலாய் உடனிருக்க மனமும் ஏங்குதே
இன்னும் மீட்புக்காக பல கூட்டம் காத்திருக்குதே
எங்க மனுவேலாய் நீரும் பிறந்திடுமே
மறந்த மனிதமெல்லாம் மீண்டும் மலர்ந்திடுமே.
பண்: திரு. ராக்லாண்ட் திரு. வாலன்டைன்
பாடல்: திரு. பால்பாண்டி

34 திருமறைப் பாடம்
எசாயா 9:6,7
திருமிகு. ஜெனிபர்

35. பாடல்
நல்ல காலம் பொறந்திருச்சு...

பல்லவி
நல்ல காலம் பொறந்திருச்சு தில்லாலங்கடி ஏலோ
தில்லாலங்கடி ஏலோ
நம்ம மரியம்மா மனசு வைக்க
அம்மையப்பன் அன்பு வைக்க
நல்ல காலம் பொறந்திருச்சு
தில்லாலங்கடி ஏலோ

சரணம்
ஓல குடிசையில் இருந்து கிடந்த ஓட்டையில
வெளிச்சமொன்னு ஊடுருவி வந்திருக்குது - ஆமா
இயேசு சாமி வடிவில அது வந்திருக்கு
ஏழ சனத்துக்கு சொந்தமொன்னு வந்திருக்கு
ஒறவாக வாழ்ந்திடவே வந்திருக்குது - ஆமா
இயேசு என்னும் ஒடம்பொறப்பா வந்திருக்குது - 2
எல்லா நாளும் இனி நல்லாகுமே
எல்லா ஊரும் இனி ஒறவாகுமே - 2
இயேசு சாமி பொறந்ததால்
வம்பு தும்பு எல்லாம் திண்டாடுமே
- நல்ல காலம்

2. பொண்டு புள்ளைங்க எல்லாம்
தல நிமிந்து நிக்கனுன்னு மரியம்மா வயித்துலதான்
பொறந்து வந்தாரு - ஆமா
பெண் குலத்த காக்கவே எறங்கி வந்தாரு
சாதிக்கொடுமையில்ல ஓரத்துல தள்ளி வெச்ச
மக்களின் மானம் காக்க பொறந்து வந்தாரு - ஆமா
நட்ட நடுவில் வெக்க இயேசு பொறந்து வந்தாரு
பொல்லா சாதிப்பேயி பயந்தோடுமே
பந்தா பண்ணும் கூட்டம் பறந்தோடுமே
இயேசு சாமி பொறந்ததால்
நீதி நியாயம் எங்கும் தல தூக்குமே
- நல்ல காலம்
பாடல், பண்: அருள்பணி. அகஸ்டி ஞான காந்தி

36. அருளுரை (Sermon)
பேரருள்பணி. முனைவர். ஆனந்த ராஜ் இராயப்பன் செல்லையா
பேராயர், தெ.இ.தி கன்னியாகுமரி பேராயம்

37. நன்றி (Thanks giving)
அருள்பணி. முனைவர். டென்சன் எக்டர்
நடத்துநர்:
வாழ்வின் நம்பிக்கையை இழந்து அமைதிக்காக ஏங்கி நின்ற மக்களுக்கு அமைதியின் இளவரசராக வந்த இம்மானுவேலரே இந்த நாளிலும் உம் வருகையை மகிழ்வுடன் நாங்கள் கொண்டாடிட நீர் கொடுத்த எல்லா வாய்ப்புகளுக்காக நல்ல காலச் சூழ்நிலைக்காக கிறித்து வருகை இன்னிசை வழிபாட்டிற்காக...

அவை: ஆண்டவரே உமக்கு நன்றி படைக்கிறோம்.

நடத்துநர்:
நீர் தந்த அமைதி நிறைந்த இந்த உலகை அமைதியற்றதாக மாற்றின முரண்களை எங்களுக்கு உணர்த்தி எங்களை புதுப்பிக்க வாய்ப்பு அளித்த உம் பேரன்பிற்காக....

அவை: ஆண்டவரே உமக்கு நன்றி படைக்கிறோம்.

திருமிகு. பால்துரை
நடத்துநர்:
முரண்பாடுகள் நிறைந்த சமுதாயத்தில் அமைதியை உருவாக்கிட இவ்வுலகில் உதித்தவரே அமைதி உள்ள சமுதாயத்தை கட்ட எங்களை தெரிந்து கொண்ட உம்முடைய இரக்கத்திற்காகவும் கல்லூரி வழியே நாங்கள் யாவரும் இணைந்து பெற்றுவரும் நல்ல விழுமியங்களுக்காகவும்...

அவை: ஆண்டவரே உமக்கு நன்றி படைக்கிறோம்.

முனைவர். இவாஞ்சலின்
நடத்துநர்:
படைப்பாளரே, எங்களின் தேவையை அறிந்து ஒவ்வொரு நாளும் வழி நடத்தி வருகிறீர். மழையின்மையால் அமைதியற்று காணப்பட்ட எங்கள் வேளாண்மை செழிக்கவும், குடிநீர் பற்றாக்குறை தீரவும் காலச் சூழலுக்கு ஏற்ற நல்ல மழையை ஏற்ற காலத்தில் தந்து மகிழ்ச்சியடைய செய்த, உம் அன்பை உணர்ந்து நன்றி படைக்கிறோம்.

அவை: ஆண்டவரே உமக்கு நன்றி படைக்கிறோம்.

38. மன்றாட்டு (Intercession)
முனைவர். இவாஞ்சலின்
நடத்துநர்:
போர்களினாலும் இயற்கை பேரிடர்களினாலும் சமய, இன மோதல்களினாலும் அரசியல் காழ்ப்புணர்ச்சியினாலும் ஒடுக்கு முறைகளினாலும் தங்களின் வாழ்வினையும் உறவுகளையும் உடைமைகளையும் இழந்து தவிக்கின்ற மக்களின் வாழ்வு அமைதி நிலை பெற்றிட இறைவா உம்மிடம் மன்றாடுகிறோம்.

அவை: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

திருமிகு. பிளஸ்ஸி ஜார்ஜினா
நடத்துநர்:
அருளும் ஆற்றலும் நிறைந்த நல்ல கடவுளே உலகெங்கிலும் உள்ள திருச்சபைகளில் அமைதியும் நீதியும் நிலவிடவும் திருச்சபையின் ஆயர்களும் இறைமக்களும் உம் வருகையின் உண்மையான நோக்கத்தை உணர்ந்து ஏழைகள் அனாதைகள் கைவிடப்பட்டோர் நோயினால் வருந்துவோர் சிறைச் சாலையில் இருப்போர் நீதிக்காகப் போராடித் துன்புறுவோர் ஆகியோருக்கு உதவியாகவும் உற்றத் துணையாகவும் இருந்திட ஆற்றலும் அருளும் தாரும்.

அவை: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

திருமிகு. லிவிங்ஸ்டன் அற்புதராஜ்
நடத்துநர்:
இழந்து போன அமைதியை படைப்புகள் அனைத்திற்கும் மீட்டுத் தர குமாரனை அனுப்பித் தந்த பெற்றவராம் கடவுளே, அதிகாரம்,சமயம், இனம் போன்றவற்றை முன்வைத்து இஸ்ரயேல் பாலஸ்தீன பகுதிகளிலும், உருசியா உக்ரைன் நாடுகளின் பகுதிகளிலும், மணிப்பூர் மாநிலத்தில் நடை பெறுகிற வன்முறை சூழல் மாறவும், பாதிக்கப்பட்ட மக்களின் அமைதிக்காகவும், பதற்றமற்ற இயல்பான வாழ்வு வாழவும் அருள்புரிய வேண்டுமென்று மன்றாடுகின்றோம்.

அவை: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

39. ஆண்டவர் கற்பித்த இறைவேண்டல் (Lord's Prayer)
திருமிகு. லிவிங்ஸ்டன் அற்புதராஜ்
விண்ணகத்திலுள்ள, எங்கள் பெற்றவரே உம் திருப்பெயர் தூயதெனப் போற்றப்படுக. உம் அரசு வருவதாக எம் திருவுளம் விண்ணுலகில் செய்யப்படுவது போல மண்ணுலகிலும் செய்யப்படுவதாக. இன்று எங்களுக்கு வேண்டிய உணவை இன்று எங்களுக்குத் தாரும் எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் பொறுத்தருளியதுபோல் எங்கள் கடன்களை எங்களுக்குப் பொறுத்தருளும். நாங்கள் சோதனைக்குட்படும்போது தீமையினின்று எங்களை மீட்டருளும். ஆட்சியும், ஆற்றலும், மாட்சியும் என்றென்றைக்கும் உம்முடையவையே.

40. அறிவிப்பும் பரிசு வழங்குதலும் (Announcement and Distribution of Prize)
அருள்பணி. முனைவர். மார்கிரெட் கலைச்செல்வி, கல்லூரி முதல்வர்

41. நிறைவு இறைவேண்டல் (Closing Prayer)
அருள்பணி. ஷீலா
அமைதி அருளும் எங்கள் மூவொரு கடவுளே, உம் செயல்களை எண்ணி நன்றி படைக்கிறோம். கிறித்துவின் உடலின் அங்கங்களாக உள்ள நாங்கள் ஓர் குடும்பத்தின் மக்களாய் இணைந்து வார்த்தையாக இருந்து மானிடனாய் உருவேற்ற உம் மகனின் வருகையை அனைவருக்கும் இந்த இடத்திலே பறைசாற்றியிருக்கிறோம். பேராசையினாலும், தன்னலப் போங்கினாலும், ஆதிக்க எண்ணங்களினாலும் முரண்பட்டுச் சிதைந்துள்ள படைப்புகளுக்கு அமைதியின் வாழ்வை உறுதி செய்யக்கூடிய மனப்பக்குவத்தை தாரும். எங்களின் வழியாகவும், வாழ்வாகவும், வாய்மையாகவும் இருந்து செயலாற்ற வேண்டுமென்று உம்மிடம் மன்றாடுகிறோம். சமநிலைச் சமுதாயத்தை உருவாக்க எங்கள் அனைவரையும் எடுத்துப் பயன்படுத்தும். இவ்வழிபாடு முழுமையும் உம் இருத்தல் நிலையை வெளிப்படுத்தியமைக்காய் உமக்கு நன்றி படைக்கிறோம். இவையனைத்தையும் படைப்புகள் அனைத்திற்காகவும் மண்ணுலகில் வந்து முன்மாதிரியாக வாழ்ந்து காட்டிய மானுடமகன் இயேசு கிறித்துவின் திருப்பெயரை முன்னிட்டு வேண்டுகிறோம் எங்கள் பெற்றவராம் கடவுளே, ஆமென்.

42. இறைவாழ்த்து (Benediction)
முரண்கள் பல நிறைந்த சூழலில் நம்முடன் தம்மை இணைத்துக் கொண்டு உடன் பாடுபடும் பெற்றவராம் கடவுள் அன்பும், இப்புவியில் நீதி, உண்மை, சமத்துவம் நிறைந்த அமைதியை நிலைநாட்ட மானுட மகனாய் மண்ணுலகில் வந்த இயேசுகிறித்துவின் அருளும், தன்னலமற்ற மானுடமாய் வாழ நம்மை உரமூட்டி வாழச் செய்யும் தூய ஆவியாரின் கூட்டுறவும், நம் அனைவரோடும் அனைத்து நாள்களிலும் நின்று நிலவுவனவாக. ஆமென்.

43. நிறைவுப் பாடல் (Closing Song)
1. ஒப்பில்லா - திரு இரா!
இதில்தான் மா பிதா
ஏக மைந்தனை லோகத்துக்கு
மீட்பராக அனுப்பினது
அன்பின் அதிசயமாம்
அன்பின் அதிசயமாம்.

2. ஒப்பில்லா - திரு இரா!
யாரையும் ஆளும் மா
தெய்வ மைந்தனார் பாவிகளை
மீட்டுவிண்ணுக்குயர்த்த, தம்மை
எத்தனை தாழ்த்துகிறார்!
எத்தனை தாழ்த்துகிறார்!

3. ஒப்பில்லா - திரு இரா!
ஜென்மித்தார் மேசியா,
தெய்வ தூதரின் சேனைகளை
நாமும் சேர்ந்து, பராபரனை
பூரிப்பாய் ஸ்தோத்தரிப்போம்
பூரிப்பாய் ஸ்தோத்தரிப்போம்.
- Joseph F Mohr

44. மங்களப் பாடல் (Doxology)
பல்லவி
சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம்;
ஆதி திரி யேசு நாதனுக்கு சுபமங்களம்

அனுபல்லவி
பாரேறு நீதனுக்கு பரம போற்பாதனுக்கு
நேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு
- சீர்

சரணங்கள்
1. ஆதி சரு வேசனுக்கு ஈசனுக்கு மங்களம்;
அகிலப் பிர காசனுக்கு. நேசனுக்கு மங்களம்;
நீதி பரன் பாலனுக்கு நித்திய குணாலனுக்கு
ஓதும் அனுகூலனுக்கு உயர் மனுவேலனுக்கு
- சீர்

2. மானாபி மானனுக்கு, வானனுக்கு மங்களம்;
வளர் கலைக் கியானனுக்கு, ஞானனுக்கு மங்களம்;
கானான் நல் தேயனுக்குக் கன்னிமரிசேயனுக்கு,
கோனார் சகாயனுக்குக் கூறு பெத்த லேயனுக்கு
- சீர்

3. பத்து லட்ச ணத்தகளுக்குச் சுத்தனுக்கு மங்களம்;
பரம பதத்தனுக்கு நித்தனுக்கு மங்களம்;
சத்திய விஸ்தாரனுக்குச் சருவாதிகரனுக்கு
பத்தர் உப காரனுக்குப் பரம குமாரனுக்கு
- சீர்
பாடல்: வேதநாயகம் சாஸ்திரியார்

45. வாழ்த்துப் பாடல் (Wishes Song)
ஐயா உங்களுக்கு அம்மா உங்களுக்கு
கிறிஸ்மஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள் - 2
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

பாடகர்க் குழுவினர்
முதலாம் ஆண்டு மாணாக்கர்
1 அ. அருண் பிரகாஷ்
2 யோ. பிளஸ்சி
3 இரா. கேர்லின் பிரின்ஸி
4 லி. கார்லி கிரஸண்ட் ராஜ்
5 பி. மோ. டயமண்ட் லாயல் மனோவா
6 மு. கிரேஸ் ஸ்டென்சியா
7 தீ. இம்மானுவேல்
8 க. இம்மானுவேல்
9 தே. ஐன்ஸ்டின் கேபா
10 ஞா. ஜெ. ஜேஸன் ஞானக்குமார்
11 ர. ஜெபராஜ் எபனேசர்
12 எஸ். பி. கிப்ட்சன் நிர்மல் சிங்
13 ஹ. ஜாய்ஸ் ராஜாமணி
14 ஜெ.ப. மனோஜ் குமார்
15 பா. மேஷாக்
16 பொ. பிரகாஷ் ஞானசேகர்
17 பி. பிரின்ஸ்
18 ச. ரவீந்திான்
19 ஜா. ரெனோ ஜூனியா
20 பி. சாம் ஆஸ்டின் ஜெபஸ்
21 அ. சாம் கமலேசன்
22 ம. சாம் பிரகாஷ்
23 இரா.இராஜேஷ் குமார்
24 உ. சரன்
25 ஆ, சீத்தாலெட்சுமி
26 ரா. வில்சன் பிரேம்குமார்
27 ஜோ. ஆலன் கிளேயர்
28 அ. எலிஜா பிரின்ஸ்
29 ஜே. சுகீர்தி மலர்
30 சா. ஜோஷ்வா டேனியல்

இரண்டாம் ஆண்டு மாணாக்கர்
1 எ. ஜேமி ஜெபராஜ்
2 து. ஜெரோம் ராஜா
3 பெ. ஷெல்ட்டன்
4 தி. காட்வின் சத்ய ஜேம்ஸ்

சிறப்பு பயிற்சி மாணாக்கர்
1 து. ஜாக்சன் பிங்ஸ்

இணையர் இறையியல் கல்வி மாணாக்கர்
1 ஆர். சுஜா ஷைனி லீலா
2 தோ.சு.அபிதா தோமஸ்
3 ஜா. ரோஸ்லின் ஷைனி
4 ஜெ. சிந்தியா எஸ்தர் ராணி
5 பி. இசபெல்லா எஸ்தர்

Name of English Choir Team
1 R. Ngathingchon,
2 Lhaineihoi
3 Zuali
4 Giraja
5 Evangeline M. Payini
6 Lianchchunga
7 Impty
8 Senfield
9 Godwin Joyson
10 Merlin S
11 Seikhulet
12 Nguljemhao

வளாகக் குழந்தைகள்
1 ஆஷிகா
2 அனுகிரகா
3 ஆக்னஸ் எலிசபத்
4 அமேரியோ டைட்டஸ்
5 சோபியா ரட்சணிய குமாரி
6 ஜிம் கால்டுவெல் மோசஸ் .ஜெ
7 தேஜஸ் லாஜி சாக்கோ
8 ஜோவன்னா ஜாய்
9 லெவினா கிறிஸ்லின்
10 அஜய்
11 சா. அ. ப்ரஜித் ஜாஸ்பர்
12 ஜா. ஜெஸினா
13 எ. பிரார்த்தனா பாலின் கண க
14 ஆ. ஜூடி பிரைசி
15 ஆ. மாக்சி ஜோர்டன்
16 சு. யாழினியன்

நாட்டியக் குழுவினர்
1 சு. ஜான் சக்தி
2 து. சாமுவேல் பெனிஸ்டன்
3 பி. பிரவின்
4 பி. ஓவியப்பாவை
5 இ.சபீனா
6 ஜோ.காட்சன் ஆசீர்
7 எ. பிளஜ்வின் யாபேஸ்
8 தி. ஆகா
9 ஞா. சாமுவேல்
10 தே. கிளாடிஸ்
11 ஜெ. குளோரி தேவசெயல்
12 த. தியாகராஜன்
13 ச. ஜோஸ்வா
14 சே. பவுல் தினகரன்
15 சே. தியாகு
16 ர. விவன் குமார்
17 பொ. ரம்யா
18 ஜெ. ஜெஸ்வின்
19 ர. செல்வின் ஜெபசிங்
20 வி. டேனியல் மார்க்
21 காட்சன் பால்

வளாகக் குடும்பத்தினர்
1 ஆ. அமாரியோ டைட்டஸ்
2 சு. ஜெயா ஜெரோலின்
3 ஜா. நித்தய பிரியா
4 ௧. பிளஸ்ஸி
5 மை. ஜெனிபர்
6 ஜூடி பிரைசி
7 பா. பிரீத்தி பிரவீன்
8 சு. சரஸ்வதி

இசைக்கருவிகள் இசைப்போர்
இசைவிசைப்பலகை
வி. சாலஸ் வேலண்டைன் ஜோசஃப்
எ. ஜெப்ரி எல்லீஸ்
மோ. சுவீட்சன் பிரசன்னா கிருபாகரன்

நரம்பிசைக் கருவி
ஐ. டேனியல் ராக்லண்ட்

இசைப்பலகை
ர. பிரின்ஸ் தாம்சன்
பா. காருண்யா ஒபதியா பால்

புல்லாங்குழல்
தே. லீவன் சிங்

தபேலா
அமேரியோ டைட்டஸ்

பாடகர்க் குழு பயிற்றுநர்
அருள்பணி. வி. ஷீலா
அருள்பணி. அகஸ்டி ஞான காந்தி
அறிவர். விக்டர்
முனைவர். ஜான்சன் கிறிஸ்துதாஸ்
திருமிகு. க. ஞா. நெல்சன்

நாட்டியக் குழு பயிற்றுநர்:
அருள்பணி. ஜீவரத்தினம்
திருமிகு. ஜான் சக்தி

பாட்கர்க் குழு பொறுப்பாளர்
அருள்பணி. முனைவர். ஐவி சிங்
அருள்பணி. வி. ஷீலா

ஒளிப்படம், நேரடி ஒளிபரப்பு ஆவணமாக்கல்
திருமிகு. மலைச்சாமி
திருமிகு. அருண் டே. டேனியல்
திருமிகு. சாது சுதர்சன்
திருமிகு. சாம் கில்பர்ட்

கூண்டு விளக்கு ஆயத்தப்பொறுப்பு
அருள்பணி. முனைவர். பீற்றர் சிங்
நான்காமாண்டு மாணாக்கர்

ஒலி, ஒளி அமைப்பு
திருமிகு.கலைச்செல்வன்
திருமிகு. மலைச்சாமி குழுவினர்

இருக்கைப் பொறுப்பு
அருள்பணி. முனைவர். ஐவி சிங்
அருள்பணி. முனைவர். டென்சன் எக்டர்
திருமிகு. லிவிங்ஸ்டன்
இரண்டாமாண்டு மாணாக்கர்

தேநீர் விருந்தோம்பல்
முனைவர். கிறிஸ்டி பெமிலா
திருமிகு. பிளஸ்சி ஜார்ஜினா

விருந்தினர் வரவேற்பு
அருள்பணி. க.லு.டே இராஜசேகரன்

ஊர்வலம்
அருள்பணி. ஞானபிரபு
மூன்றாமாண்டு மாணாக்கர்

அழைப்பிதழ் ஆயத்தம்
திருமிகு. தாமஸ்,
திருமிகு. ஏஞ்சலோ சாலமோன்
திருமிகு. சாது சுதர்சன்
திருமிகு. ஜெமி ஜெபராஜ்

தட்டச்சு உதவி
திருமிகு. வைரமாலா

வழிபாடு ஒருங்கிணைப்பு
அருள்பணி. முனைவர். மார்கிரெட் கலைச்செல்வி
அருள்பணி. வி. ஷீலா
அருள்பணி. முனைவர். டென்சன் எக்டர்
திருமிகு. ஜெனித் (வழிபாட்டுமனைச் செயலர்)
திருமிகு. பால்துரை

இன்னிசை வழிபாட்டுக்கு
வருகை தந்திருக்கும் அனைவருக்கும்
எங்கள் இதயம் கனிந்த
கிறிஸ்து வருகை, கிறிஸ்து பிறப்பு,
புத்தாண்டு வாழ்த்துகள்!
- கல்லூரிக் குடும்பத்தினர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.