Type Here to Get Search Results !

Critic Service | Redemption in the Journey of Faith | பற்றுறுதிப் பயணத்தில் மீட்பு | ஏ.கமாலியேல் நிக்சன் | Jesus Sam

தமிழ்நாடு இறையியல் கல்லூரி
அரசரடி, மதுரை - 16.

திறனாய்வு வழிபாடு 2025 - 2026

செம்பொருள்:
பற்றுறுதிப் பயணத்தில் மீட்பு

Theme:
Redemption in the Journey of Faith

வழிபாடு நடத்துபவர்:
    திருமிகு.ஏ.கமாலியேல் நிக்சன்

திறனாய்வு மாணவர்:
    திருமிகு.மு.மனோ ஃப்ராங்க்ளின்

திறனாய்வு ஆசிரியர்:
    அருட்பணி.முனைவர்.ஹெ.ஆட்லின் ரெஜினாபாய்

நாள்: 05.11.2025 (புதன் கிழமை)
நேரம்: காலை 06:00 மணி
இடம்: கிறித்தரசர் வழிபாட்டுமனை


சிந்தனைக்கு...
மற்றவர் இன்புற்றிருக்க வேண்டும் என்பதற்காக தன்னை இல்லா தொழிக்கத் துணிவது தெய்விகத் துறவறம்.
- மேதகு வே.பிரபாகரன்.

பகுத்தறிவு நமது ஆன்மாவின் இடது கை விசுவாசம் அதன் வலது கை
- ஜான் டோன்.

விடியல் இன்னும் இருட்டாக இருக்கும் போது. ஒளியை உணரும் பறவை நம்பிக்கை.
- இரவீந்திரநாத் தாகூர்.

நம்பிக்கை உள்ளவருக்கு எந்த விளக்கமும் தேவையில்லை நம்பிக்கை இல்லாதவருக்கு எந்த விளக்கமும் சாத்தியமில்லை
- தாமஸ் அக்வினாஸ்.

நம்பிக்கை என்பது முகம் பார்க்கும் கண்ணாடி போன்றது அது உண்மையானவைகளையே பிரதிபலிக்கும்
- கமாலியேல் நிக்சன்.

வாழ்த்தும் வரவேற்பும் (Greetings and Welcome)
மூவொரு கடவுளின் திருப்பெயரால் இத்திறனாய்வு வழிபாட்டுக்கு வருகை தந்திருக்கும் உங்கள் யாவரையும் அன்புடன் வாழ்த்தி வரவேற்கிறேன்.

வழிபட அழைப்பு (Call to Worship)
"ஆண்டவர் இஸ்ரயேல் மக்களைச் சந்தித்து விட்டார் என்றும் அவர்களது துயரத்தைக் கண்ணோக்கி விட்டார் என்றும் மக்கள் கேள்விபட்ட போது குப்புற விழுந்து தொழுதனர்" (விடுதலை பயணம் 4:31) என்ற திருமொழியின் உண்மையை உணர்ந்தவர்களாக நம்முடைய பற்றுறுதியில் வாழும் கடவுளை வழிபடுவோம் வாருங்கள்.

தொடக்க இறைவேண்டல் (Opening Prayer)
அளவற்ற அருளாளரான எங்கள் ஆற்றல் மிக்க தூயக் கடவுளே, உம் திருவுளம் நிறைவேற்ற நாங்கள் மேற்கொள்ளும் இச்சிறிய வழிபாட்டின் வழியாக உம்மைப் போற்றுகிறோம், மாட்சிப்படுத்துகிறோம். உம்முடைய அனைத்து வழி நடத்துதலுக்கும், எழில் மிகு ஆற்றலை எங்களுக்கு அருளி பற்றுறுதியில் நிலைத்திருக்கச் செய்தமைக்காகவும், உமக்கு நன்றி செலுத்துகிறோம். அனைத்தையும் உம் பேரருளால் தகுந்த காலத்தில் எங்கள் தேவைக்கேற்ப அருள்வீர் என்பதில் பற்றுறுதி கொள்கிறோம். இவ்வழிபாட்டிலும் உம் இருத்தல் நிலையை வேண்டுகிறோம். அனைத்தையும் மீட்பர் இயேசு கிறிஸ்துவின் மூலம் வேண்டுகிறோம் எங்கள் அன்பின் நல்ல கடவுளே. ஆமென்.

போற்றிப்பாடல் (Song Of Praise)
எங்கும் நிறைந்த இறையவரே - உம்
அருள்மிகு ஆற்றலைப் போற்றுகிறோம்
அடியவர் வாழ்வினில் நீர் செய்த
அரும் அடையாளங்கள் நினைந்தே என்றும்.
- எங்கும் நிறைந்த

ஆண்டவரே உம்மைப் போற்றுகிறோம்
பற்றுறுதியைப் பறை சாற்றுகிறோம்
அருள் வளம் அளித்திடும் உம் பெயரால்
உளமாற தூய உள்ளத்துடன்
- எங்கும் நிறைந்த

உலக துன்பங்கள் சூழ்ந்திடினும்
உம்மில் நிலைப்பதில் விடுதலையாம்
எளிய மக்களின் இறைமகனாம்
இயேசு கிறிஸ்துவின் வழியாக
- எங்கும் நிறைந்த

பாவ உலகில் கிடந்த எம்மை
பாவநாசராம் கிறிஸ்துவினால்
முழுவதுமாய் எம்மை மீட்கின்ற
தூய ஆவியின் துணையுடனே
- எங்கும் நிறைந்த

நாங்கள் கொண்டுள்ள நம்பிக்கையில் - உம்
திருவுளம் நிறைவேற வாழ்ந்திடவே
அருளும் அமைதியும் செழித்தோங்கும் - உம்
திருமொழிகளையே போற்றுகிறோம்.
- எங்கும் நிறைந்த
பாடல் வரிகள்: ஏ.கமாலியேல் நிக்சன்
பண்: தேவப்பிதா என்றன் மேய்ப்பன் அல்லோ
(கீர்த்தனை பாடல் பண் )

பிழையுணர அழைப்பு (Call to Confession)
"தம் தவறுகளை உணர்ந்து கொள்பவர் யார்தாம்? என் அறியா பிழைக்காக என்னை மன்னியும்". (திருப்பாடல்கள் 19:12) என்கிற திருமொழியை ஆதாரமாக கொண்டு நம் பிழைகளை அறிக்கை செய்து கடவுளின் இரக்கத்தையும் பிழைப் பொறுத்தருளையும் பெற்றுக் கொள்வோம் வாருங்கள்.

பிழை அறிக்கை (Confession of Sins)
ஆயர்: இரக்கம் மிகுந்த ஆண்டவரே நீர் எங்களுக்குச் செய்த நன்மைகளை மறந்து எங்கள் பற்றுறுதி வாழ்வில் நிலையில்லாமல் இருக்கின்ற சூழலை உணராது, உம் திருவுளத்தின் படி உமக்குச் சான்று பகர்கின்ற வாழ்வு வாழாத நிலையை எண்ணி மனம் வருந்துகிறோம்

திருஅவை:
குணப்படு பாவி தேவ கோபம் வரும் மேவி
இப்போ குணப்படுப் பாவி

ஆயர்: 
திருமறையின் திருமொழிகளை பற்றில்லாமல் படித்ததினால் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளாமல் உம்மைப் பற்றி தவறான முறையில் கற்பித்தும், பற்றுறுதி பயணத்தில் நாங்கள் உண்மை, நீதியைப் பின்பற்றாமலும் பிறருக்கும் வழி விடாமலும் தடையாய் இருக்கின்ற எங்கள் மனநிலையை எண்ணி வருந்துகிறோம்.

திருஅவை
குணப்படு பாவி தேவ கோபம் வரும் மேவி
இப்போ குணப்படுப் பாவி

(நாம் நமது தனிப்பட்ட பிழைகளை அறிக்கை செய்வோம்)

பிழை மன்னிப்பின் உறுதி (Absolution)
"உன் குற்றங்களைக் கார்மேகம் போலும், உன் பாவங்களைப் பனிப் படலம் போலும் அகற்றிவிட்டேன். என்னிடம் திரும்பி வா நான் உனக்கு மீட்பளித்து விட்டேன்" (எசாயா 44:22) என்கிற கடவுள் தாமே நம் குற்றங்களையும் மன்னித்து மீட்பாராக. ஆமேன்

திருமறைப்பகுதிகள் (Scripture Reading)
எசாயா 30:15-19
எபேசியர் 6:10-17
தூய யோவான் 4-46-53

சிறப்பு நிகழ்வு (Special Event): (அனைவரும் அமர்ந்திடுக)

அருளுரை (Sermon)
தலைப்பு: "பற்றுறுதிப் பயணத்தில் மீட்பு"

பற்றுறுதி அறிக்கை (Affirmation of Faith)
பாடல் வடிவில் (திருத்தூதுவர் பற்றுறுதி அறிக்கையைத் தழுவியது)
விண்ணையும் மண்ணையும் எம்மையும் படைத்த
முழுமுதற் கடவுளை நம்புகிறோம்
கன்னி மரி வழி கடவுளின் மைந்தர்
இயேசு கிறிஸ்துவை நம்புகிறோம்

பேதம் களைய நீதியும் நிலைக்க
பிலாத்துவின் காலத்தில் பாடுகள் அடைந்து
சிலுவையில் மரித்ததும் கல்லறை புகுந்ததும்
கடவுளின் திருவுளம் நம்புகிறோம்

மூன்றாம் நாளில் உயிரோடெழுந்தீர்
விண்ணுக்குயர்ந்து பரன் வலம் அமர்ந்து
உலகம் வேண்டும் அமைதி அருள
அநீதியைக் களைவீர் நம்புகிறோம்

உயிருடன் இருப்போர் இறந்தவர்
யாவரும் உறுதியாய் தீர்ப்பு அடைந்திடுவர்
தூயாவி உறவும் தூயோர் சபையும்
மன்னிப்பும் உயிப்பையும் நம்புகிறோம்
பாடல்: ஏ.கமாலியேல் நிக்சன்
பண்: கந்த சஷ்டி கவசம்

நன்றி மன்றாட்டு (Thanks Giving and Intercessory)
நன்றி செலுத்துவோம்
எல்லா நிலைகளிலும் எங்களை ஆற்றல் படுத்துகிற வல்லக் கடவுளே, நாங்கள் வாழும் இந்திய சூழலில் பல்வேறு சமய பிரிவினைகள் அரசியல் சூழ்ச்சிகள் எங்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தாலும், உம் பேராற்றலினால் எங்களை வழிநடத்தி தொடர்ந்து உம் மீது பற்றுறுதிக் கொண்டு வாழ ஆற்றல் தந்தமைக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம்.

இந்த ஆண்டு பருவ காலத்தில் இந்நாள்வரைத் தமிழ்நாட்டில் மிதமான மழையைத் தந்து நீர்வளத்தினைப் பெறுக செய்தமைக்காகவும், இயற்கை இடர்பாடுகளினால் எங்களுடைய வாழ்வாதாரம் காத்தமைக்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறோம். பாதிக்கப்படாமல்

மன்றாடுவோம்
பேராற்றல் நிறைந்த நல்ல கடவுளே, எங்கள் கல்லூரியில் இம்மாதம் 29-ஆம் நாள் நடைபெறவிருக்கின்ற கிறிஸ்து வருகை இன்னிசை வழிபாடு திட்டமிட்டுள்ளபடி சிறந்த இறையியல் தகவுகள் கொண்ட பாடல்களோடு அமைந்திடவும், பங்கேற்றுப் பாடல்களைப் பாடவிருக்கின்ற மாணாக்கருக்கு உம் பேராற்றலை அருளி இன்னிசை வழிபாடு முழுவதும் உம் இருத்தல்நிலை மிகுந்திருக்க, உம் வருகையை எதிர்நோக்கி மன்றாடுகிறோம்.

பருவகால மழையினாலும் புயலினாலும் இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் மோந்தா புயலினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளிலும், உலக அளவில் ஜமைக்கா, கியூபா நாடுகளில் மெலிசா புயல்காற்றினால் ஏற்பட்டுள்ள பேரழிவினாலும் பாதிக்கப்பட்டுத் தங்கள் இருப்பிடங்களை இழந்து தவிக்கிற மக்களுக்காக உம்மிடம் மன்றாடுகிறோம், உம் பேரிரக்கத்தினால் மீட்டுப் பாதுகாத்திட இறைவா உம்மிடம் இறைஞ்சுகிறோம்.

இவை அனைத்தையும் இறைமகன் இயேசுகிறிஸ்துவின் வழியாக வேண்டுகிறோம் எங்கள் அன்பின் நல்ல கடவுளே.ஆமென்.

ஆண்டவர் கற்பித்த இறைவேண்டல் (Lord's Prayer)
விண்ணுலகிலிருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக, உமது ஆட்சி வருக, உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவதுபோல மண்ணுலகிலும் நிறைவேறுக, இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும், எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளதுபோல, எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும், தீயோனிடமிருந்து எங்களை விடுவியும். ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமக்கே. ஆமென். (மத்தேயு 6:9-13)

ஒப்படைப்பு (Dedication)

இறைவாழ்த்து (Benediction)
(அனைவரும் எழுந்து நிற்கவும்)
ஆயர்:  ஆண்டவர் நம்மோடிருப்பாராக

திருஅவை: அவர் உம்மோடும் இருப்பாராக

ஆயர்: ஆண்டவர் நம்மை வாழ்த்தி, நம்மைக் காப்பாராக

ஆண்டவர் தம்முடைய திருமுகத்தை நம்மேல் ஒளிரச் செய்து, நம்பேரில் அருள்புரிவாராக

ஆண்டவர் தம்முடைய முகத்தை நம்மேல் ஒளிரச்செய்து, நமக்கு அமைதி தந்தருளுவாராக 'ஆமென்'. ஆமென்'ஆமென்'.

நிறைவுப் பாடல் (Closing Song)
இறைவரிடம் கையேந்துங்கள்
அவர் இல்லையென்று சொல்லுவதில்லை
பொறுமையுடன் கேட்டுப் பாருங்கள்
அவர் பொக்கிஷத்தை மூடுவதில்லை
இல்லையென்று சொல்லும் மனம் இல்லாதவர்
ஈடு இணையில்லாத கருணையுள்ளவர்
இன்னல் பட்டு எழும் குரலைக் கேட்கின்றவர்
எண்ணங்களை இதயங்களைப் பார்க்கின்றவர்
- இறைவரிடம்

ஆசையுடன் கேட்பவர்க்கு அள்ளித் தருபவர்
அல்லல் துன்பம் துயரங்களைக் கிள்ளி எறிபவர்
பாசத்தோடு யாவரையும் பார்க்கின்றவர்
பாவ ங்களைப் பார்வையினால் மாய்க்கின்றவர்
அல்லல் படும் மாந்தர்களே அயராதீர்கள்
ஆண்டவரின் பேரருளை நம்பி நில்லுங்கள்
அவரிடத்தில் குறை அனைத்தும் சொல்லிக் காட்டுங்கள்
அன்பு நோக்குத் தருகவென்று அழுது கேளுங்கள்
- இறைவரிடம்
- நாகூர் ஹனிபா

நன்றி அறிதல் உள்ளத்தோடு யாவரும் இணைந்து சொல்லுவோம்
என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு!
என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு!
என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு!
அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! ஆமென்.
(திருப்பாடல்கள் 103:1,2)

பராபரனுக்கு தோத்திரம்

வழிபாட்டில் கலந்துக் கொண்ட உங்கள் யாவருக்கும், எனக்கு உதவி செய்த பேராசிரியர்கள், மாணவ சகோதர சகோதரிகள் உங்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகள்..


TOPIC:'REDEMPTION IN THE JOURNEY OF FAITH'
Last September, we, the final year students, undertook a multi-faith study tour. Based on the experiences gained through that tour, we will study the given sacred texts and try to deliver a sermon on the topic of 'Recovery in the Journey of Faith'. My sermon will be topic-specific.

Faith is not specific to a particular religion because all religions are built on Faith. Faith is not only placed in God. It is also placed on those who perform mighty deeds in the name of God. Normally, we place our trust in our fellow human beings. We cannot explain in depth the Faith we place in an invisible force more than the trust we place on things that we directly see, because feelings cannot be seen with the eyes.

"If you don't believe in yourself, you can't believe in God," says Swami Vivekananda. Therefore, Faith must be established deep in our hearts.

God stores immense power in our minds and personalities and works through them, says APJ Abdul Kalam, That is known as Faith.

"Loyalty is a living, courageous trust in the grace of God. It is so firm that a man would lay down his life for it a thousand times." - Martin Luther

With these messages, let us consider the passages from the Holy Scriptures under three subheadings.

I. FAITH MEANS WAITING (ISAIAH-30:15-19)
The prophet Isaiah uses God's word to reassure the people of Judah. When King Sennacherib conquered and captured the fortified cities of Judah, many of the Jewish people who did not trust in God fled to the Egyptians. In this situation, God, through the prophet Isaiah, seeks to give hope and protection to those who are fleeing from Him. God says, "I will exalt you among the conquerors."

Many people who are discouraged and do not want to listen to the word of God are running away, thinking that their brother will survive. The purpose of the prophet Isaiah is that, others will be warned when they see and hear that the Lord is placing the people who have been faithful to the word of God until the end and have defeated their enemies in the place where they were waiting. Like a flag on a mountain and a symbol of Faith on a hill, the Lord is placing them in a high place.

God says if you return to me you will find freedom and peace.

God never wants or accepts the decisions of humans, because God, who knows the fragility of our Faith, says through the prophet Isaiah, "The Faith of the people who violate my word will be destroyed.

Isaiah 30:16-17 The prophet Isaiah says that if the people who disregard God's warnings repent and wait faithfully, the Lord will wait to show them mercy.

Countless people, across languages and religions, come to Nagoor Dargah, a place of faith for the people of Islam, seeking God's blessings.

They wait for many days in the belief that God will provide, but will the people wait without receiving good? The Lord is a God of righteousness, says the prophet. The faith of those who wait in faith at the Nagore Dargah of the Liberation of God and are healed confirms this to us. We must understand that God does not look at times, but looks at the right times.

II. FAITH MEANS BEING CONNECTED (EPHESIANS 6:10-17)
A warrior wears various protective armor all over his body to strengthen his defense, but if he has no strength in his heart, no determination, can he fight with strength? So does the Apostle Paul. To gain spiritual strength, we must strengthen our soul with the Word of God, which is what enriches our Faith. Paul says that struggles and suffering are certain in that Faith.

The Apostle Paul says that true devotion to God's Word is to overcome all of them, and that our faith in God's Word will enable us to fight and win not only against people but also against all circumstances.

The arrows of criticism are flying at all those who have a true Faith to the true God, the weapons of grace. To overcome these, God says, put on the belt of righteousness and the breastplate of righteousness. Therefore, taking the gospel of peace and the shield of hope, with which you can quench all the fiery darts of the evil one is possible. Take salvation as your head and the word of God as the sword of the Holy Spirit, for the scriptures say that we will be strengthened with the strength and power by the words of the Lord.

Their faith was evident in the gathering of people from different religious and cultural backgrounds at the Velankanni Shrine, one of the Roman Catholic Church's shrines. They garland the idols of the gods there. light candles, buy metal ornaments, and walk a mile on their knees, believing that everything we want can be obtained from God. Rather than believing in other religions, they believe in the power of God and are united in their Faith.

According to the advice of Saint Paul, be united with God and be strengthened in your Faith by the strength and power which God gives, through which you can receive redemption and liberation.

III. FAITH MEANS BEING PERSISTENT. (JOHN 4:46-53)
The evangelist John illustrates the power of Faith by describing the situation of a royal official who is heartbroken and regretful because his son is sick and about to die. The royal official has power, military power, and all the financial resources, but he does not have the power to heal his son.

The miracle of Jesus, who turned water into wine at the wedding at Cana, demonstrated not only the power of God but also the power of God's word through his first miracle.

The community built on faith through the Gospel, then awaits the coming of Christ. Saint John emphatically records that it remains a community with a deep conviction that we have salvation.

A Gentile official is looking forward to Jesus' arrival and asks him to come to his house, he was confident that Jesus will heal his son.

To confirm his faith, Jesus tests his faith by saying, "Unless you see signs and wonders, you will not believe." The official states his position that he will come before my son dies. Here his Faith is being confirmed.

The theological emphasis built on the "word" is very profound when Jesus Christ, who respected the confidence of the government official who said, "You can," said, "Go, your son will live."

Martin Luther King Jr. said, "Faith is taking the first step in faith, even if you don't see the whole staircase." Not everything happens before our eyes. The son of a government official who left without being pressured to come with him, with deep faith in Jesus.

The ashrams we saw in Tiruvannamalai, their activities, and the devotion people have towards them were all astonishing. Not only the Faith of the foreigners who have been waiting there for many years, but also the people who have believed in the life activities of people who have expressed the characteristics of God without focusing on a specific God, and through that, they have connected with God. God does not live in the temples, but in the hearts of people.

CONCLUSION
Across religions, wherever deliverance and redemption are needed, God works through words. Words are the foundation of the glorious signs of Jesus Christ and the people's Faith to them.

"Liberation theology is rooted in the core of the community of faith and has biblical foundations.

The liberation journey in the Old Testament and the early Christian communities and their experiences in the New Testament are the foundations," says liberation theologian Gustavo Gutiérrez.

Redemption in the journey of faith is the central theme of all religions, with their God, liberation, and redemption as their central doctrine.

All three Biblical texts are the centre of the word of God and guide people seeking liberation through it to find salvation, God is for everyone, so

When we analyse our allegiance to God's Word rather than to religion, tradition, culture, modernity, or goodness, God is omnipresent. God will provide salvation, not religions.

Especially as we have kept our faith with Christ will analyse the nature of God and the words of the Scriptures, based on the foundations of the Scriptures and our witnessing lives, and in interfaith dialogue, we will build in our minds that God is the Savior and Justice of all creation..

Translated By
Mr.Manishkumar.S BD IV

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.