Type Here to Get Search Results !

Critic Service | What this Child is going to be? | இக்குழந்தை எப்படிப்பட்டதாக இருக்குமோ? | C.எசேக்கியேல் பிரசன்னக் குமார் | Jesus Sam

தமிழ்நாடு இறையியல் கல்லூரி
அரசரடி மதுரை-16

திறனாய்வு வழிபாடு 2025-2026

தலைப்பு
"இக்குழந்தை எப்படிப்பட்டதாக இருக்குமோ?”
"What this Child is going to be?"

நாள்: 29.10.2025 / புதன் கிழமை
நேரம்: காலை 06.00
இடம்: கிறித்தரசர் வழிபாட்டு மனை


வழிபாடு நடத்துபவர்
    திருமிகு.C.எசேக்கியேல் பிரசன்னக் குமார்

திறனாய்வு மாணவர்
    திருமிகு.S.மேத்யூ

திறனாய்வு ஆசிரியர் 
    அருட்பணி.V.ஷீலா


வழிபட அழைப்பு (Call to Worship)
"சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள் அவர்களை தடுக்காதீர்கள் ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே உரியது” (லூக்கா 18:16) என்று எடுத்துரைக்கும் இயேசு கிறிஸ்துவை மண்ணுலகத்திற்கு அருட்கொடையாக அளித்த நம் கடவுளை வழிபடுவோம் வாருங்கள்.

தொடக்க இறைவேண்டல் (Opening prayer)
"எங்களை நேசிக்கின்ற வல்லக் கடவுளே! பிள்ளைகள் ஆண்டவர் அருளும் செல்வம் மக்கட் பேறு அவர் அளிக்கும் பரிசில்" (திருப்பாடல்கள் 127:3) என்ற திருமொழியை உணர்ந்தவர்களாய் நீர் அளித்த செல்வங்கள் ஆகிய குழந்தைகளை எப்படிப்பட்டவர்களாக வளர்க்க வேண்டும் என்பதனை இவ்வழிபாட்டின் வழியாக எங்களுக்கு கற்றுத் தாரும். குழந்தைகளுக்கு நாங்கள் சிறந்த முன்மாதிரியாக செயல்படவும், இறையரசின் விழுமியங்களை முன்னிறுத்தி வாழவும் எங்களுக்கு அருள் புரியும். இந்த வழிபாடு துவக்கம் முதல் முடிவு வரை உம் தெய்வீக பிரசன்னத்தை நாங்கள் உணர்ந்திட துணை புரியும். இவை அனைத்தையும் இறைமகன் இயேசு கிறிஸ்துவின் வழியாய் வேண்டிக்கொள்கிறோம் அன்பின் ஆண்டவரே, ஆமென்.

தொடக்கப் பாடல் (Opening Song)
பாமாலை எண் : 240
1. என்னிடத்தில் பாலர் யாரும்
வர வேண்டும் என்கிறார்
இப்பேர்ப்பட்டவர் எல்லாரும்
வான ராஜ்யம் அடைவார்
என்று சொல்லி, நேசக் கையில்
இயேசு ஏந்தி அணைத்தார்
பாலர் அவரை உள்ளத்தில்
அன்பாய் எண்ணிப் போற்றுவார்

2. தாவீதின் குமாரனுக்கு
ஓசன்னா மா ஸ்தோத்திரம்
என்று பாடி, சீயோனுக்கு
நேரே சென்ற சமயம்
வாழ்த்தல் செய்த வண்ணம் நாமும்
வாழ்த்திப் பாடி, பக்தியாய்
இயேசுவை வணங்கி, என்றும்
ஸ்தோத்தரிப்போம் ஏகமாய்

3. பாலனாய் பிறந்த மீட்பர்
ராஜாவாக வருவார்
கூட வரும் தெய்வ தூதர்
மேகமீது தோன்றுவார்
நல்லோர் தீயோர் இயேசுவாலே
தீர்ப்படையும் நேரத்தில்
பாலர் போன்ற குணத்தாரே
வாழ்வடைவார் மோட்சத்தில்

பிழை உணர அழைப்பு (Call to Confession)
"தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே : தீயோர் சாக வேண்டும் என்பது என் விருப்பம் அன்று; ஆனால், அத்தீயோர்த் தம் தீய வழிகளினின்று திரும்பி வாழ வேண்டும் என்பதே என் விருப்பம். ஆகவே உங்கள் தீய வழிகளினின்று திரும்புங்கள்". (எசேக்கியேல் 33:14) என்ற திருமொழியை உணர்ந்தவர்களாயும், குழந்தைகளை கடவுளுக்கேற்ற முறையில் வளர்க்க தவறினதற்காகவும், நம் பாவங்களை கடவுளின் திருமுன் அறிக்கை செய்வோம் வாருங்கள்.

பிழை அறிக்கை (Confession of Sins)
பெற்றோர்களாகிய நாங்கள் எங்கள் பிள்ளைகளோடு அதிக நேரம் செலவிடாமலும், அவர்கள் மீது அக்கறையும், அரவணைப்பையும் காட்டாமலும் எங்களின் விருப்பு வெறுப்புகளை அவர்கள் மீது திணித்தும், பெரியவர்களை மதிக்க கற்றுக் கொடாமலும், இறைத் திட்டத்தின் படி வளர்க்காமலும் நாங்கள் உமக்கு நேராக தவறு இழைத்து விட்டோம். இத்தகைய தவறுகளை மன்னிக்க இறைவா உம்மிடம் மன்றாடுகிறோம்.

(இசை)

திருச்சபை என்பது கிறிஸ்துவின் உடலாய் இருக்கிறது. இருப்பினும் கிறிஸ்துவின் கண் கொண்டு சிறு பிள்ளைகளை காணாமல், அவர்களுக்கு முக்கியத்துவம் கொடாமல் திருச்சபையின் பொருளாதார வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் தருகிறோம். சிறு பிள்ளைகளின் ஆன்மீக வளர்ச்சியின் மீது நாட்டம் கொள்ளாமல் திருச்சபை பதவிகள் மீது நாட்டம் கொள்கிறோம். இப்படிப்பட்ட பாவங்களை உணர்ந்தவர்களாய் இறைவா உம்மிடம் அறிக்கை செய்கிறோம்.

(இசை)

குழந்தைகளின் முதல் கல்விக்கூடம் சமுதாயம் என்று அறிந்திருந்தும், அவர்களுக்கு நன்மைகளை கற்றுத் தர வேண்டிய நாங்களே குழந்தைகளை பணம் ஈட்டும் கருவிகலாக பார்த்து குழந்தை தொழிலாளர்களாகவும், பாலியல் கொத்தடிமைகளாகவும், பிறரிடம் கையேந்துபவர்களாகவும், வன்கொடுமைக்கு உள்ளாக்கியும், அவர்களுடைய வாழ்க்கையை சிதைத்து போட்டோம். இத்தகைய இழிநிலையை எண்ணி இறைவா உம்மிடம் எங்கள் பாவங்களை அறிக்கை செய்கிறோம்.

(நாம் நம்முடைய தனிப்பட்ட பிழைகளை அறிக்கை செய்வோம்)

பிழை மன்னிப்பின் உறுதி (Absolution)
“உன் குற்றப்பழி உன்னை விட்டு அகன்றது, உன் பாவம் மன்னிக்கப்பட்டது." (ஏசாயா 6:7) என்ற திருமொழிக்கேற்ப நம் பிழைகளை உண்மையாய் கடவுளிடம் ஒப்புக்கொண்ட நம்மை, கடவுள் பாவத்திலிருந்து நீக்கி நம்மை தூய்மைப்படுத்துவாராக. ஆமென்.

திருமறைப்பாடங்கள் (Scripture reading)
1. நீதித் தலைவர்கள் 13:1-14
(Judges 13:1-17)

2. எபேசியர் 6:1-4
(Ephesians 6:1-4)

3. தூய லூக்கா 1:54-66
(St. Luke 1:57-66)

சிறப்பு நிகழ்வு (Special Event)
சிறார்களின் நடனம்

அருளுரை (Sermon)
அருளுரை தலைப்பு: "இக்குழந்தை எப்படிப்பட்டதாக இருக்குமோ"

பற்றுறுதி அறிக்கை (Creed) (தழுவியது):
விண்ணையும் மண்ணையும் அதிலுள்ள அனைத்தையும் படைத்த வல்லமைமிகு கடவுளை நம்புகிறோம். விண்ணரசுக்கு சொந்தகாரர்களான குழந்தைகள் மீது அளவற்ற அன்பு செலுத்தும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவையும் நம்புகிறோம். அவர் தூய ஆவியாராலே கன்னி மரியாவிடம் கருக்கொண்டு பிறந்தார். பொந்தியு பிலாத்துவின் காலத்தில் பாடுபட்டு சிலுவையில் அறையப்பெற்று இறந்து அடக்கம் செய்யப் பெற்றுப் பாதாளம் இறங்கினார்.

மூன்றாம்நாள் இறந்தோரிடையே இருந்து எழுந்தருளினார். விண்ணகம்ஏறி அனைத்து ஆற்றலும் பொருந்திய பெற்றவராம் கடவுளின் வலப்பக்கம் வீற்றிருக்கிறார். அவ்விடத்திலிருந்து உயிர் உள்ளவரையும் இறந்துவிட்டோரையும் நடுத்தீர்க்க வருவார்.

தூய ஆவியாரையும் நம்புகிறோம் பொதுவாக இருக்கிற தூய திருச்சபையும் தூயோரின் கூட்டுறவும் பிழைபொறுப்பும் உடல் உயிர்ப்பும் மெய்வாழ்வும் உண்டென்று நம்புகிறோம். ஆமென்.

நடத்துனர்: இந்தப் பற்றுறுதியில் உயிர் உள்ள வரைக்கும் நிலைத்திருக்க கடவுள் அருள் புரிவாராக.

அவை: ஆமென்.

நன்றியும் மன்றாட்டும் (Thanksgiving & Intercessory)
நன்றி செலுத்துவோம்
அன்பின் ஆண்டவரே! நேற்றைய தினத்தில் எமது கல்லூரியில் நடைபெற்ற 56-வது கல்லூரி நாள் நிகழ்வுகள் அனைத்த்தும் சிறப்பாக நடந்தமைக்காகவும், அந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டு சிறப்புரைகள் வழங்கிய ஈரோடு-சேலம் பேராயருக்காக நன்றி செலுத்துகிறோம். அவ்வுரைகளின் வழியாக எங்கள் இறையியல் சிந்தனைகளை மேலும் தெளிவுபடுத்தியதற்கு உமக்கு நன்றி படைக்கிறோம். இறைவா!

வழிநடத்தும் வல்ல கடவுளே! சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு தொடங்கிய பள்ளி குழந்தைகளுக்கான காலை உணவு திட்டத்திற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். இதன் வழியாக 20 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் மாநில அளவில் பயனடைந்து வருகிறார்கள். இந்த திட்டத்தினை செயல்படுத்தி, பள்ளி மாணவர்களின் கல்வி திறனை ஊக்குவித்ததற்காய், இறைவா உமக்கு நன்றி செலுத்துகின்றோம்.

மன்றாடுவோம்
சில தினங்களுக்கு முன்பு விழுப்புரம் அருகேயுள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியின் கழிப்பறையில் பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அக்குழந்தை மூச்சுத் திணறிக் கொல்லப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும், மன வேதனையும் அளிக்கிறது. இது போன்ற மனிதமற்ற செயல்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க இறைவா உம்மிடம் மன்றாடுகின்றோம்.

பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகள், சாலையோரங்களில் வாழுகின்ற குழந்தைகள், குழந்தை தொழிலாளர்களாக மாற்றப்பட்ட குழந்தைகள் இப்படி ஆதரவற்ற நிலையில் தவிக்கும் ஒவ்வொரு குழந்தைகளின் நன்மைக்காகவும், இச்சமூகத்தில் அவர்களின் வாழ்வு மேம்படவும் இறைவா உம்மிடம் மன்றாடுகின்றோம்.

ஆண்டவர் கற்றுத் தந்த இறைவேண்டல் (Lord's prayer)
விண்ணுலகிலிருக்கிற எங்கள் பெற்றவராகிய கடவுளே. உமது திருப்பெயர் தூயதெனப் போற்றப்பெறுக. உமது ஆட்சி வருக. உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக. இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளது போல எங்கள் குற்றங்களை மன்னியும். நாங்கள் சோதனைக்கு உட்படும்போது தீயோனிடமிருந்து எங்களை விடுவியும் ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றைக்கும் உமக்கே. ஆமென்.

ஒப்படைப்பு (Dedication)

இறை வாழ்த்து (Benediction)
குழந்தை என்னும் செல்வத்தை நமக்கு அருட்கொடையாக அளித்த கடவுளின் அன்பும், குழந்தைகளை அன்போடு அரவணைக்கும் மைந்தராகிய இயேசு கிறிஸ்துவின் அருளும், பாதுகாத்து வழிநடத்தும் தூய ஆவியாரின் கூட்டுறவும், அனைவரோடும் இருந்து நம்மை பாதுகாத்து வழி நடத்துவதாக. ஆமென். நம்

நிறைவு பாடல் (Closing Song)
புத்தெழுச்சிப் பாடல் எண்: 370
இயேசுவை வாழ்க்கையில் காட்டுங்களே
பேச்சில் அல்ல செயலில் நல்ல
இயேசுவை வாழ்வோராய் காட்டுங்களே

1. ஆலயம் அருளுரைப் போதாதே
ஆசரிப்பும் இனிப் போதாதே
ஆண்டவர் தொழுத்தின் வெளியிலுள்ளோர்
ஆடுகள் தேடியே ஆவல் கொண்டே
- இயேசுவை

2. வாய்ச் சொல்லில் நேசித்தல் மா எளிதாம்
வாய்மை செயலுள்ளோர் நல் அன்பராம்
உன்னதர் இயேசுவின் அரசுயர
ஒளி உப்பாய் உலகினில் இலங்கிடுவோம்
- இயேசுவை
S. இஸ்ரயேல்

நன்றியுள்ள இருதயத்தோடு அனைவரும் இணைந்து சொல்வோம்
என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு!
என் முழு உள்ளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு!
என் உயிரே ஆண்டவரைப் போற்றிடு!
அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே. ஆமென்.
(திருப்பாடல்கள் 103:1-2)

அனுப்புதல் (Sending Out)
நடத்துனர்: கடவுள் உங்களோடு இருப்பாராக

அவை: அவர் உம்மோடும் இருப்பாராக

நடத்துனர்: குழந்தைகளை கடவுளின் திட்டத்தின் பங்காளர்களாக உருவாக்கப் புறப்பட்டு செல்வோம்

அவை: கடவுளின் திருப்பெயராலே ஆமென்

இவ்வழிபாட்டில் கலந்துகொண்ட, உதவி செய்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்,

தட்டச்சு உதவி:
திருமிகு.மனோ ஃப்ராங்க்ளின்.


Gist In English
What this Child is going to be?
Who are children? Children are divine blessings and gifts from God.
  • Legally, anyone under the age of 18 is considered a child.
  • From a biblical perspective, in Matthew 18:3, Jesus Christ says, "Unless you change and become like little children, you will never enter the kingdom of heaven."
The concern and compassion about what kind of child this will be can truly come only from the parents.

The primary responsibility of raising a child in the right way lies with the parents.

Sigmund Freud, known as the father of psychoanalysis, stated that parents play a significant role in a child's psychological development, and that the bond children form with their parents shapes how they relate with others later in life.

When a child grows up with good nutrition, quality education, and secures a good job, achieving success on a global and economic scale, there can be no greater joy for the parents.

On the contrary, if a child fails to gain an education, deviates from discipline, and is unable to succeed in life, that same child can become a burden to the parents. this concern weighs heavily on their hearts.

At the same time, parents should not impose their personal likes and dislikes on their children.

Children must be allowed to think for themselves.

Renowned American author Lois Lowry said, "Children have the right to believe they can change the world."

Professor Austin O'Malley of the University of Notre Dame said, "Children are like uncut diamonds" pure, precise, and unblemished.

According to the United Nations, India ranks first among countries with the largest child population.

As per a UNFPA report, 24% of India's population are children that is 350 million children.

The National Family Health Survey states that of these children, 8% are orphans or without parental care that's over 30 million children living without protection or support. Only 500,000 children are in recognized shelters; the rest are under extended family care or are living on the streets, in poverty, begging, or under the control of criminal exploiters.

Reasons for the rise in such orphaned children include
1. Parents lacking basic means to raise the child, leading to abandonment.
2. Children born from illicit relationships being rejected.
3. Children abducted from their parents.

According to the 2023 NCRB data, crimes against girl children have increased by 42% in India.

India ranks 128th in child safety for girls. 

In such a harsh environment, many children become child labourers or get pulled into criminal activities like theft, murder, trafficking, and violence.

To support such children and those in juvenile detention, the Sunday School Movement was born.

In 1780, in Gloucester, England, Robert Raikes founded the first Sunday School, aiming to teach reading, basic education, and biblical values to children. This movement helped keep children away from crime and gave child laborers a chance to learn it became a social revolution.

1. Children as Instruments of God's Deliverance (Judges 13:1-14)
This part is titled "Children as Instruments of Deliverance," based on Judges 13:1-14.

Between the time of Moses/Joshua and Prophet Samuel, Israel had no king.

In that period, God appointed judges to lead Israel, but the people repeatedly disobeyed God. As a result, God handed them over to the Philistines for 40 years.

During this time, a child is born to that Manoah and his wife from Zorah child is Samson.

The name Samson comes from the Hebrew word "Shimshon", derived from "Shemesh", meaning Sun.

In this oppressive time, God intervenes directly, choosing a woman and her child to bring deliverance.

The angel of the Lord appears to Manoah's barren wife and gives her a divine message along with specific instructions:

1. Do not drink wine.
2. Do not consume alcohol.
3. Do not eat anything unclean.
4. No razor shall touch the child's head.

These were Nazirite requirements "Nazir" in Hebrew means consecrated or set apart.

Samson was dedicated to God even before birth.

The angel reveals God's plan to the woman:

"He will begin to deliver Israel out of the hands of the Philistines."

So, the question "What kind of child will this be?" is answered even before the child is born.

God clearly reveals His plan to the mother.

Manoah shows deep concern for the unborn child and prays to God:

"God, please teach us what we are to do with the child who will be born."

Likewise, every parent must reflect on how to raise their child in the fear of God and in alignment with God's plans. Only then will God use them as tools for deliverance.

2. Children as Recipients of God's Strength (Luke 1:57-66)
During the reign of King Herod, Judea was under Roman rule with heavy oppression and taxation. The Jewish people were divided and longed for the coming of the Messiah.In this setting, Zechariah, from the priestly line of Abijah, and his wife Elizabeth, both descendants of Aaron, have a child John the Baptist.

"John" in Hebrew is Yohanan, meaning "God has been gracious."As in the Old Testament, here too God uses a woman and her child as signs of redemption.

Luke gives prominence to women in his Gospel:

1. He mentions that Elizabeth recognized a truth no one else knew: "The mother of my Lord" (Luke 1:43).
2. He notes that Jesus was served by female disciples (Luke 8).

Zechariah and Elizabeth name the child John. breaking cultural tradition.Zechariah submits to God's plan "Zechariah initiating God's plan" and his mouth is opened.

Everyone wonders: "What kind of child will this be?"And they saw that God's hand was with him.

3. Children Who Walk in God's Will (Ephesians 6:1-4)
Apostle Paul, writing to the Ephesian church, gives moral instructions to both children and parents.

"Children, obey your parents in the Lord, for this is right... Fathers, do not exasperate your children, but bring them up in the training and instruction of the Lord." (Ephesians 6:1-4). Paul teaches parents not to irritate or provoke children, but to lovingly correct and guide them.In today's world, parental attention is often lacking especially due to mobile culture and social media.

As a result, parents may remain unaware of the child's mistakes until it's too late. Paul emphasizes raising children with godly discipline and teaching. This echoes Proverbs 22:6 "Train up a child in the way he should go, and when he is old he will not depart from it."

Conclusion
During the third year of our village stay program, four of my classmates and I lived in Valayapatti. Local children would visit our home. One day, they invited us to their temple festival. Out of courtesy, we but the way those children hosted us left a lasting impression. went

Their hospitality was genuine and heartfelt a lesson on how children should be raised.

Children's development depends not only on parenting but also on the social environment around them.

Psychologist Erik Erikson said
"Children's minds are deeply involved in the world around them. Their first school is their society."

If we show the same concern and dedication shown by the parents of Samson, John the Baptist, or Prophet Samuel, then our children too can become:
  • Instruments of God's deliverance
  • Recipients of God's hand
  • Followers of God's will

May God bless these words.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.