தமிழ்நாடு இறையியல் கல்லூரி
அரசரடி,மதுரை 625016
திறனாய்வுவழிபாடு -2025-2026
செம்பொருள் "பற்றுறுதியிலும் செயலிலும் ஒன்றிப்பு"
"Unity in Faith and Action"
நாள்: 2026 ஜனவரி 21 புதன்கிழமை
இடம்: கிறித்தரசர் வழிபாட்டு மனை
நேரம்: காலை 6.00 மணி
வழிபாடுநடத்துபவர்: திருமிகு.மணீஷ் குமார்.S
திறனாய்வுமாணவர்: திருமிகு.ஆல்ஃபின் சாம் சாலமோன்.K
திறனாய்வு ஆசிரியர்: திருமிகு.லிவிங்ஸ்டன் அற்புதராஜ். M
வாழ்த்தும் வரவேற்பும் (Greeting & Welcome)
மூவொரு கடவுளின் திருப்பெயராலே இத்திரனாய்வு வழிபாட்டிற்கு வந்திருக்கும் உங்கள் யாவரையும் அன்போடு வாழ்த்தி வரவேற்கின்றேன்.
வழிபட அழைப்பு (Call To Worship)
"எனக்குச் செவிகொடுங்கள், என்னிடம் வாருங்கள் கேளுங்கள் அப்பொழுது நீங்கள் வாழ்வடைவீர்கள். நான் உங்களுடன் ஓர் என்றுமுள உடன்படிக்கையைச் செய்துகொள்வேன் தாவீதுக்கு நான் காட்டிய மாறாத பேரன்பை உங்களுக்கும் காட்டுவேன்". எசாயா 55:3 என்றுஅழைக்கும் ஆண்டவரை வழிபாடுவோம் வாருங்கள்.
தொடக்க இறைவேண்டல் (Opening prayer)
எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக! (யோவான் நற்செய்தி 17:21) என்று ஒன்றிப்பை விரும்புகின்ற கடவுளே, இந்த புதிய நாளுக்காக உமக்கு நன்றி செலுத்துகின்றோம், இந்த காலைப் பொழுதில் இறையியல் குமுகாயமாக ஒன்றிணையவும், இந்த வழிபாட்டின் வழியாக நாங்கள் உம்மில் கொண்டுள்ள பற்றுறுதியை மீண்டும் உறுதி செய்யவும், உம்மோடும் படைப்புகளோடும், சக மனிதர்களோடும் உடைந்துள்ள ஒன்றிப்பை புதுபித்துக் கொள்ளநீர் எங்களுக்கு உதவி செய்யும். இவ்வழிபாட்டின் தொடக்கம் முதல் நிறைவு வரையிலும் உம் தூய இருத்தல் எங்களை ஆளுகை செய்யவேண்டும் என்று மீட்பர் இயேசு கிறிஸ்துவின் வழியாக வேண்டிக் கொள்கிறோம் எங்களை ஒன்றினைக்கின்ற கடவுளே. ஆமென்.
தொடக்கப் பாடல் (Opening song) பாமாலை 22
1 தூய.தூய்.தூயா! சர்வவல்ல நாதா!
தேவரீர்க் கெந்நாளும் சங்கீதம் ஏறுமே
தூய, தூய, தூயா! மூவரான ஏகா!
காருணியரே, தூய திரியேகரே!
2 தூய, தூய, தூயா! அன்பர் சூழநின்று
தெய்வ ஆசனமுன்னர் தம் கிரீடம் வைப்பரே.
கேரூபிம் சேராபிம் தாழ்ந்து போற்றப்பெற்று,
இன்றென்றும் வீற்றாள்வீர். அநாதியே!
3. தூய,தூய.தூயா! ஜோதிபிர காசா.
பாவக் கண்ணால் உந்தன் மாண்
பைக் காண யார் வல்லோர்?
நீரே தூய தூயர், மனோவாக்குக் கெட்டா
மாட்சிமை,தூய்மை.அன்பும் நிறைந்தோர்.
4. தூய, தூய, தூயா! சர்வ வல்ல நாதா!
வானம் பூமி ஆழி உம்மை ஸ்தோத்திரிக்குமே
தூய, தூய, தூயா! மூவரான ஏகா!
காருணியரே, தூய திரியேகரே!
பிழை உணர அழைப்பு (Call to confession)
"நான் உங்களோடு என்னோடு இணைந்து இணைந்து இருங்கள். இருப்பதுபோல கொடி நீங்களும் திராட்சைச் செடியோடு இணைந்து இருந்தாலன்றித் தானாக கனிதர இயலாது. அதுபோல நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றிக் கனிதர இயலாது. நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது".
(யோவான் 15:4,8) என்று ஒன்றிப்பின் மேன்மையை கற்றுத் தந்த இயேசு கிறிஸ்துவின் அன்புக்கு இனங்காமல் வாழ்ந்த நம் பிழைகளை மனத்தாழ்மையாய் அமர்ந்தவாரு அறிக்கை செய்வோம்.
பழை அறிக்கை (Confession of sins)
உடன்படிக்கையின் வழியாக உடன் இருக்கும் ஆண்டவரே! தாமே துன்புற்று சிலுவையின் வழியாக பகைமையை அழித்து இரு இனத்தவரையும் ஒருடலாக்கி கடவுளோடு ஒப்புரவாக்கினீர். ஆனால் கடவுளோடும், மனிதரோடும், படைப்புகளோடும் நல் உறவில் நிலைத்து நிற்க வேண்டிய நாங்கள் சாதி, சமயம், இனம், நிறம், பொருளாதார ஏற்றத்தாழ்வு போன்ற பிற்போக்குத் தனமான சிந்தனைகளினால் அடிமைப்பட்டு கிறிஸ்துவின் ஒருங்கிணைப்பின் சிலுவைக்கு பகைவர்களாய் வாழ்ந்ததை எண்ணி மனம் வருந்துகிறோம்.
(அமைதி)
யூதர் என்றும், கிரேக்கர் என்றும், அடிமைகள் என்றும், உரிமை குடிமக்கள் என்றும் ஆண் என்றும். பெண் என்றும் வேறுபாடு இல்லாமல், பற்றுறுதியினால் கிறிஸ்து இயேசுவோடு இனைந்துள்ள நாங்கள் யாவரும் ஒன்றாய் இருக்கிறோம் என்பதை அறிந்திருந்தும், பிற நாட்டவர். பிற மொழி பேசுபவர், பெண்கள், கைம்பெண்கள், ஆதரவற்றவர் கைவிடப்பட்டவர். ஏழைகள், மாற்றுத்திறனாளர். சபிக்கப்பட்டவர், நாகரீகமற்றவர். சுகாதாரமற்றவர் என்று பிரித்துப் பார்த்து, இவர்கள் மாண்பு சிதைய காரணமாக வாழ்ந்ததை எண்ணி மனம் வருந்துகிறோம்.
(அமைதி)
தொடக்ககால திருச்சபை மக்கள் தங்கள் உடைமைகளை ஒன்றாக வைத்து பகிர்ந்து பொதுவுடமை சமூகத்திற்கு சான்றாளர்களாய் இருந்ததை நாங்கள் அறிந்திருந்தும் தேவையில் உழல்வோர் எவரும் இல்லாத நிலை ஏற்பட எங்களுக்கானவைகளை பகிராமலும் சுரண்டல். பதுக்கல், வன்முறை. கொலைகள், இவைகளுக்கு எதிராக குரல் கொடுக்காமல் பொது உடமை சமூகத்தை மறந்து, உலகமயமாதல், தாராளமயமாதல், தனியார்மயமாதல், பொருள் முதல்வாதம், பாசிச உணர்வு இவைகளுக்கு அடிமைப்பட்டுபோன வாழ்வை எண்ணி மனம் வருந்துகிறோம்.
(அமைதி)
(நாம் நம்முடைய தனிப்பட்ட பிழைகளை அறிக்கை செய்வோம்)
பிழை மன்னிப்பின் உறுதி (Absolution)
நீங்கள் மனம் மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள். (மத்தேயு 3:8) அமைதிஅருளும் கடவுள் தாமே உங்களை முற்றிலும் தூய்மையாக்குவாராக. அவரே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வரும்போது உங்களுடைய உள்ளம், ஆன்மா, உடல் அனைத்தையும் குற்றமின்றி முழுமையாகக் காப்பாராக! உங்களை அழைக்கும் அவர் நம்பிக்கைக்குரியவர் (1 தெசலோனிக்கர் 5:23-24). அவர் நம் பிழைகளை மன்னித்து புது வாழ்வு அருளி நிலைவாழ்வுக்கு நேராய் வழி நடத்துவாராக ஆமென்.
திருமறைப் பாடங்கள் (Scripture reading)
1. யோசுவா 4:1-11
Joshua 4:1-11
2. திருத்தூதர் பணிகள் 4:32-37
Acts 4:32-37
3. தூய மாற்கு 6:32-44
Mark 6:32-44
சிறப்பு நிகழ்வு (Special Event)
அருளுரை (Sermon)
தலைப்பு: பற்றுறுதியிலும் செயலிலும் ஒன்றிப்பு. (unity in faith and action)
திருத்தூதர் பற்றுறுதி அறிக்கை - தழுவியது (Affirmation faith)
அனைத்துப் படைப்புகளையும் படைத்து ஒற்றுமையிலும், சமத்துவத்திலும் நடத்துகின்ற ஒரே கடவுளை நம்புகிறோம். பொது உடமை சமுகத்தை கற்றுத் தந்த கடவுளின் ஒரே மைந்தர் இயேசு கிறிஸ்துவை நம்புகிறோம்.நம் அனைவரையும் மீட்க தூய ஆவியால் கன்னி மரியாவிடம் கருக்கொண்டு பிறந்தார். சமூக ஏற்றத் தாழ்விற்கு எதிராக போராடியதால் ஆதிக்க வர்க்கத்தால் சிலுவையில் துன்புற்று மரித்தார். மூன்றாம் நாளில் மரணத்தை வென்றார். விண்ணகம் ஏறி அனைத்து ஆற்றலும் பொருந்திய பெற்றவராம் கடவுளின் நடுவே வீற்றிருக்கிறார். அவ்விடதிலிருந்து அநீதி இழைப்போரை நடுதீர்க்கவருவார். தூய ஆவியாரையும் நம்புகிறோம். பொதுவாக இருக்கிற தூய திருச்சபையும், தூயோரின் கூட்டுறவும், பிழைப்பொறுப்பும், உடல் உயிர்ப்பும் மெய் வாழ்வும் உண்டென்று நம்புகிறோம் ஆமென்.
நன்றி (Thanks Giving)
- வாழ்வளிக்கும் வல்லக் கடவுளே, சென்னை தி.நகரில் தூய்மைப் பணிசெய்யும்போது கிடைத்த ரூபாய் 45 லட்சம் மதிப்புள்ள நகைகளை தூய்மை பணியாளர் "பத்மா" என்பவர் காவல் துறையிடம் ஒப்படைத்ததன் விளைவாக, பண ஆசை நிறைந்த உலகில் நேர்மையுடன் மனிதநேயத்தை வெளிப்படுத்தியதற்காக இறவைா உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
- சமய வேறுபாடுகளைக் களைந்து அனைவரும் தமிழர் திருநாளைக் கொண்டாடியதற்காகவும், திருச்சபைகளில் இதை முன்னெடுத்ததற்காகவும் இறைவா உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
மன்றாட்டு (Intercessory)
அன்பும் இரக்கமும், நீதியும் நிறைந்த கடவுளே, நீர் எல்லா மக்களையும் ஒரே குடும்பமாகப் படைத்தவர். மலைகளுக்கும், நிலங்களுக்கும், நீரே ஆண்டவராக இருக்கிண்றீர். திருப்பரங்குன்றம் தொடர்பான பிரச்சினைகளால் கலங்கும் எங்கள் சமூகத்தை உமது கரங்களில் ஒப்படைக்கிறோம். பிளவுகளால் காயமடைந்த மனங்களை ஆற்றும், பகை, அச்சம், தவறான புரிதல் ஆகியவற்றை அகற்றி, உண்மையின் ஒளியைப் பரப்பும். வன்முறையைக் கைவிட்டு, உரையாடலின் வழியில் நடக்க எங்கள் அனைவருக்கும் ஒரு மனதை தாரும். ஆட்சியாளர்கள், நீதித் துறையினர், சமூகத் தலைவர்கள் ஆகியோர் நீதியுடனும் நேர்மையுடனும், செயல்பட உமது ஆவியை அருளும். திருப்பரங்குன்றத்தைச் சுற்றிவாழும் அனைத்து சமயத்தினருக்கும். சமூகத்தினருக்கும் அமைதியில் வளர உமது அருளைதாரும் "அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்" (மத்தேயு 5:9) என்ற உமது வார்த்தைப் போல. நாங்கள் அமைதியின் கருவிகளாக மாற எங்களை ஆற்றல்படுத்தும், பிளவை சீர்படுத்தி, ஒன்றிப்பைத் தாரும். இவை அனைத்தையும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக வேண்டிக் கொள்கிறோம் எங்கள் நல்ல கடவுளே. ஆமென்.
ஆண்டவர் கற்பித்த இறைவேண்டல் (Lord's Prayer)
விண்ணுலகிலிருக்கிற எங்கள் பெற்றவராகிய கடவுளே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக. உமது ஆட்சி உமது வருக. திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல் மண்ணுலகிலும் நிறைவேறுக. இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளது போல எங்கள் குற்றங்களை மன்னியும். நாங்கள் சோதனைக்கு உட்படும்போது. தீயோனிடமிருந்து எங்களை விடுவியும். ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமக்கே. ஆமென்.
ஒப்படைப்பு (Dedication)
இறைவாழ்த்து (Benediction)
படைப்புகள் அனைத்தும் ஒன்றிணைந்து வாழ்வதை விரும்புகின்ற படைப்பாளராம் கடவுளின் அன்பும், தாமே துன்புற்று சிலுவையின் வழியாக பகைமையை அழித்து இரு இனத்தவரையும் ஓருடலாக்கி கடவுளோடு ஒப்புரவாக்கின இயேசு கிறிஸ்துவின் அருளும், ஒன்றிப்பின் தூதர்களாக நம்மை ஆற்றல் படுத்தும் தூய ஆவியாரின் வழி நடத்துதலும் நம் அனைவரோடும் இன்றும் என்றும் நிலைத்திருப்பதாக. ஆமென்..
நிறைவுபாடல் (Closing Song)பு.பாடல் எண்: 201
பல்லவி
இறைவனின் பணியில்
இன்றைய உலகில்
இறைமக்கள் நாமே
இணைத்திடுவோமே
1. சமயங்கள் பலவாய் இருந்திடும் உலகில்
சாந்தமாய் பிறரை ஏற்றுமே வாழ்வோம்
இமயமாய் பிரிவினை எழுந்திடும் வேளை
இறையதின் பெயரில் இணைந்திட முயல்வோம்
- இறை
2. சாதியின் கொடுமை ஒழிந்திட உழைப்போம்
சமத்துவ நெறியில் இணைந்துமே வாழ்வோம்
பாதி மனிதராய் ஒடுக்கப்பட்டோரின்
பாடுகள் நீங்க போராடிடுவோம்
- இறை
மெ.தா.த/மா.ஞா
நன்றி அறிதல் உள்ளத்தோடு யாவரும் இணைந்து சொல்லுவோம்:
என் உயிரே ஆண்டவரே போற்றிடு என் முழு உள்ளமே அவரது திருப்பெயரை ஏத்திடு என் உயிரே ஆண்டவரைப் போற்றிடு அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே ஆமென். (தி.பா 103:1-2)
அனுப்புதல் (Sending Out)
நடத்துனர்: மானுடத்தை ஒன்றிணைத்து வழி நடத்தும் ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
திருஅவை: அவர் உம்மோடும் இருப்பாராக
நடத்துனர்: கிறிஸ்துவின் சிந்தையோடு பற்றுறுதியிலும் செயலிலும் பன்முக தன்மை கொண்ட சமுகத்தை ஒன்றிணைக்க உலகிற்குள் புறப்பட்டுச் செல்வோம்.
திருஅவை: ஆண்டவரின் திருப்பெயராலே. ஆமென்.
Thank You
Gist in English
INTRODUCTION
One of the many challenges that the Christian Church has faced throughout its history has heen the attempts to unify Christianity.
From its earliest days, the Church was divided into the Western Roman Church and the Eastern Orthodox Church of Alexandria.
In the 16th century AD, following the German Reformation of Martin Luther, known as the Schmalkalden Reformation, the Western Church split from the Roman Catholic Church into the Reformed Church. The Reformation has since led to various schisms, and many sects still exist within the Reformed Church today
In the early 20th century, the South Indian United Church (SIUC) was formed in South India by the merger of Presbyterian, Congregational, and traditional churches. The International Missionary Conference held in Edinburgh in 1910 was a major milestone. This was followed by the 1919 Tharangambadi Missionary Conference and the 1920 Lambert Bishops' Conference. As a result, in 1947, the four traditions of churches in South India, Anglican, Methodist, SIUC (Presbyterian and Congregational), came together to form the United Church of South India. One of the initiatives taken at the heginning of the 20th century, when efforts were being made for church unity, was the "Week of Prayer for Christian Unity". The "8 Days for Church Unity" (unity octave) is observed every year as a week of prayer for eight days from the feast of St. Peter's Epistle on the 18th of January to the feast of St. Paul's Conversion on the 25th. The Sunday between these eight days is observed as the Sunday of Church Unity. The word ecumenism in English is derived from the Greek word 'Oikomene'. 'Oikos' means family. Ecumenism is the identification of the Church as a family in Christ. According to the calendar of the Church of South India this year, the theme for reflection on this Sunday of the Church's Unity is "Unity in Faith and Action".
God calls us to unity. He wants our unity. He unites us all as His children. Therefore, unity is something that pleases God. Because the God we worship is a triune God. Therefore, Giod wants unity in us. More specifically. He wants unity in our commitment and action.
Commitment and action are related to each other. We cannot receive commitment without action, just as we cannot receive it without commitment. Therefore, the two are related to each other This commitment and action will increase when we receive our changes and express them in our lives. When we work together through our commitment and action, God brings about a change not only in our individual lives, but also in the society to which we belong the Church to which we belong
1. Unity brings remembrance-
Faith is not possible with mere words Rather, true unity is born only when faith is shared and acted upon together. The people worked together to bring about remembrance It was only when they worked together that they were able to cross the Jordan. God calls the people of Israel to remember in many situations. For example, under the leadership of Moses, God brought the people who were in slavery to become a nomadic people Similarly, under the leadership of Joshua. God brings the nomadic people to become a settled people Therefore, God has acted to build faith, to bring unity. It reveals God's faith and action What we learn through these is that this section is a place where we can share this memory with future generations and reveal how God worked in the lives of the people of Israel when the people worked together in commitment and action.
2. Unity brings a communal society
What the early Church teaches us through this passage is that action without faith is incomplete. Similarly, faith without action loses its meaning. This is how all the people who believed in the early Church were of one heart and one soul. Only when we are of one mind can we create a community of common possessions. First, that unity must be found in our hearts It was as a result of that unity that was found within them that they did not consider everything their own, but had kept everything in common. The most important reason for their unity was their faith in the risen Christ; this was the reason why they did not have any interest in their belongings and created a communal society. In the context we are living in today, are we single-minded? Are we creating a communal society? Or are we creating a selfish society? In many ways, we seek to accumulate for ourselves.
3. Unity brings sharing
When we are united in our faith and action, it brings about sharing. How can we bring about sharing? It is when we are concerned about others. Action brings sharing. When unity grows, when we share with those in need in society, then unity is created. Unity is expressed through shared action. Whose sharing was the main reason. "The action of a child" means that the Lord Jesus Christ asks his disciples how many loaves they have. Go and see. They also look and say that they have five loaves and two fish. This is what the child gives As a price for giving. everyone comes forward to give. All those present were those who heard what the Lord Jesus Christ said. But no one came before giving, because. No one has the common thought of Jesus Christ Except for that little child, this challenge for us is that when the thoughts of Jesus Christ are within us. We can create a community of sharing. Sharing must first start with us. We expect sharing from others in many ways We forget that in ourselves. This section reveals to us that when we work together, we can bring about sharing. Moreover, the true sign of love is not only sharing food, but the "people's hearts were transformed" is seen to be the greatest sign of love They may have come from different backgrounds. They may have had different cultures. But the Lord Jesus Christ makes everyone sit on the green grass. Through this, the Lord Jesus Christ creates a new society. A society without distinction, a society without rich and poor, a society without power and the weak.
CONCLUSION
What kind of unity is our unity in this context, that we are living in? Is it unity to improve the lives of others, or is it unity to destroy the lives of others? In these three parts that we were asked to read, there was a unity to improve the lives of others, and it was to ensure the lives of others. It was to prioritize social interests. Everyone had a common thought, through which equality was created, through which humanity was created, through which unity is created. Our unity should disturb society. We should disturb the social evils happening in society. We should disturb the ruling class, we should protest against casteism, manslaughter, sexual violence against women and girls, and for that, we should work together. But how is our unity, it is only for destroying the lives of others. In many instance we express unity only in the clothes we wear, but do we express unity in our hearts? When we express unity in our hearts, we can eliminate the evils that exist in this society.












