Type Here to Get Search Results !

Critic Service | United in Love | அன்பில் ஒருங்கிணைக்கப்படுதல் | ஜூலி ஜெபராணி | Jesus Sam

தமிழ்நாடு இறையியல் கல்லூரி
அரசரடி, மதுரை - 16.

திறனாய்வு வழிபாடு 2025 - 2026

செம்பொருள்: அன்பில் ஒருங்கிணைக்கப்படுதல்
Theme : United in Love

வழிபாடு நடத்துபவர்: திருமிகு.இரா.ஜூலி ஜெபராணி
திறனாய்வு மாணவர்: திருமிகு. ஆ.அலெக்ஸ் கிளிண்டன்
திறனாய்வு ஆசிரியர் : முனைவர்.எஸ்.இவாஞ்சலின்

நாள்: 20.01.2026 (செவ்வாய் கிழமை)
நேரம்: காலை 06:00 மணி
இடம்: கிறித்தரசர் வழிபாட்டுமனை


வாழ்த்தும் வரவேற்பும் (Greetings and Welcome)
மூவொரு கடவுளின் திருப்பெயரால் இத்திறனாய்வு வழிபாட்டுக்கு வருகை தந்திருக்கும் உங்கள் யாவரையும் அன்புடன் வாழ்த்தி வரவேற்கிறேன்.

வழிபட அழைப்பு (Invocation):-
"உன் கடவுளாகிய ஆண்டவர் மீது அன்பு பாராட்டு, அவரது குரலுக்குச் செவி கொடு, அவரையே பற்றிக்கொள்" (இணைச்சட்டம் 30:20) என்ற திருமொழியினை ஏற்று ஆண்டவர் மீது அன்பு செலுத்தவும், ஆண்டவரின் குரலுக்குச் செவி கொடுக்கவும், ஆண்டவரைப் பற்றிக் கொள்ளவும் அன்பில் ஒருங்கிணைந்தவர்களாய் ஆண்டவரை வழிபடுவோம் வாருங்கள்.

தொடக்க இறைவேண்டல் (Opening Prayer) :-
நாங்கள் வழி தவறி நடக்கும் பொழுது அதைக் கண்டித்து உணர்த்தி நல்வழிப்படுத்தும் நல்ல கடவுளே, நீர் தந்த இந்தப் புதிய நாளுக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். இன்றைய நாள் முழுவதும் உம் இருத்தல் நிலையை நாங்கள் உணர்ந்து கொண்டு செயல்பட உம் அருள் வேண்டி மன்றாடுகிறோம். வழிபாடு முழுவதும் உம் அருள்கரம் இருக்க வேண்டுகிறோம், எங்கள் எண்ணங்கள் சிதறாமல் நாங்கள் ஒன்றாய் இணைய இவ்வழிபாடு தூண்டுகோலாக அமைய உதவி செய்யும்படி ஒருங்கிணைத்தலை வலியுறுத்தும் உம் திருமகனாம் இயேசு கிறிஸ்துவின் வழியாய் வேண்டுகிறோம் எங்கள் பெற்றவராம் கடவுளே. ஆமென்.

போற்றிப்பாடல் (Song Of Praise):
யூபிலி அரசரடி புத்துயிர்ப் பாடல் எண் 53
பூமியில் வாழுற மக்களே எல்லாரும்
கூடியே வாருங்க கும்பிடலாம்
ஆரவாரத்தோட ஆனந்தமா பாட
ஆண்டவன் சந்நிதி சேர்ந்திடலாம்

1. கடவுள் ஒருவரே நமக்குத் தெய்வங்க அவர
விட்டாலுலகில் துணைவர் யாருமில்லீங்க
என்றென்றும் அவரு, எங்கள் தலைவரு
என்றே சத்தம் போட்டு கெம்பிரமா பாட
- பூமியில்

2. கடவுள் தானே நம்மையெல்லாம் படைச்சதந்த - நல்ல
இடையரவரு நாம் அவருட ஆட்டு மந்த
கையாலும் நெஞ்சாலும் என்னத்த செஞ்சாலும்
தெய்வத்தை நம்மால செஞ்சிட லாகுமோ
- பூமியில்

3. கடவுள் ரொம்ப நல்லவரு ஆமா நல்லவரு
கடலைப்போல ரொம்பவும் கிருபை
உள்ளவரு உள்ளவரும் அவர் நல்லவரும் அவர்
உள்ளே வாங்க பாட ஒத்துமைய கூட
- பூமியில்
பாடல்: ஜே.தியாப்பிலஸ் அப்பாவு

பிழையுணர அழைப்பு (Call to Confession) :-
"உங்கள் அன்பு கள்ளமற்றதாய் இருப்பதாக, தீமையை வெறுத்து நன்மையையே பற்றிக் கொள்ளுங்கள்" (உரோமையர் 12:9) என்ற திருமொழியின் உண்மையை உணர்ந்தவர்களாய், தீமையை வெறுக்கிறவர்களாய் இந்நாள்வரை நாம் பிறருக்கு எதிராக செய்த தீமைகளைக் கள்ளமில்லாமல் கடவுளிடம் அறிக்கை செய்வோம் வாருங்கள்.

பிழை அறிக்கை (Confession of Sins):- (அனைவரும் ஒன்றினைந்து)
ஒருங்கிணைப்பின் முக்கியத்துவத்தை உணராது சாதி சமய பாலின பொருளாதாரம் போன்றவற்றைக் காரணங்களாக வைத்து, எங்களிடையே நாங்கள் கொண்டுள்ள பிளவுகளை உருவாக்குகின்ற மனப் போங்கை எண்ணி மனம் வருந்துகிறோம் இறைவா.

அமைதி

அன்பினை முன்வைக்காமல் வெறுப்பினை மனதுக்குள் நிறுத்தி உமது கட்டளைகளை விட்டு விலகிச் சென்ற எம் இழிநிலை எண்ணி மனம் வருந்துகிறோம் எங்கள் அன்பு இறைவா.

அமைதி

பிற படைப்புகளின் மேல் அன்பு காட்டாமல், அவற்றோடு ஒருங்கிணைத்து செல்லாமல் மற்ற படைப்புகள் மேல் நாங்கள் செய்கின்ற வன்முறையை எண்ணி மனம் வருந்துகிறோம் எங்கள் இறைவா.

(நம்மைப் பிறரோடு அன்பில் ஒருங்கிணையாமல் தனித்துச் செயல்பட வைக்கும் நம்முடைய தனிப்பட்ட பிழைகளை அறிக்கை செய்வோம்)

பிழை மன்னிப்பின் உறுதி (Absolution) :-
"தன் குற்றப் பிழைகளை மூடி மறைப்பவரின் வாழ்க்கை வளம் பெறாது அவற்றை ஒப்புக்கொண்டு விட்டுவிடுகிறவர் கடவுளின் இரக்கம் பெறுவர்” (நீதி 28:14) என்பதை உணர்ந்தவர்களாய் நாம் அறிக்கை செய்த நம்முடைய பிழைகளை நமக்கு மன்னித்து அன்பை மையமாகக் கொண்டு ஒருமையுடன் வாழவும் மீண்டும் குற்றம் செய்யாமல் நல்வழியில் நடக்க, கடவுள் தாமே நம்மை பாதுகாத்து வழிநடத்துவராக  ஆமென்.

திருமறைப்பகுதிகள் (Scripture Readings) :-
இணைச்சட்டம் 4:1-10
Deuteronomy 4:1-10

1 கொரிந்தியர் 1:10-18
1 Corinthians 1:10-18

தூய யோவான் 15:11-17
St. John 15: 11-17

சிறப்பு நிகழ்வு (நாடகம்)

அருளுரை (Sermon) :-
தலைப்பு: "அன்பில் ஒருங்கிணைக்கப்படுதல்"

பற்றுறுதி அறிக்கை (Affirmation of Faith):-
(திருத்தூதுவர் பற்றுறுதி அறிக்கையைத் தழுவியது)
ஆண்டான் அடிமை என்றில்லை அனைவரும் ஒன்று என்று விடுதலை வாழ்வை வழங்கிய விடுதலையாளராம் கடவுளை நம்புகிறோம், தம் அன்பைக் கற்பிப்பதோடு நிறுத்தாமல் தம் வாழ்விலும் செயல்படுத்திக் காட்டிய உம் திருமகனாம் இயேசு கிறிஸ்துவை நம்புகிறோம், அவர் பெண்களையும் மீட்புத் திட்டத்தில் இணைக்க தூய ஆவியாராலே கன்னி மரியாவிடம் கருக்கொண்டு பிறந்தார், அன்பினால் அனைவரையும் ஒருங்கிணைத்ததற்காக பொந்து பிலாத்துவின் காலத்தில் பாடுபட்டு சிலுவையில் அறையப் பெற்று பாதாளம் இறங்கினார். மூன்றாம் நாள் மக்களைப் பிரித்து வைக்கும் ஆற்றல்களை வேரறுக்க உயிரோடு மீண்டும் எழுந்தார். விண்ணகம் ஏறி அன்பின் உருவான கடவுளின் அருகில் உள்ளார். அவ்விடத்திலிருந்து மக்களை ஒருங்கிணைக்க விடாமல் செயல்படுபவர்களை நடுத்திருக்க மீண்டும் வருவார். வாழ்வளிக்கும் தூய ஆவியாரை நம்புகிறோம், திருச்சபை பிளவுகள் உள்ளது என்பதையும், ஒருநாள் அனைவருக்கும் பொதுவான திருச்சபை உருவாகும் என்பதையும் நம்புகிறோம். மக்களிடையே பிளவுகள் வேறுபாடுகள் களைந்து அனைவரும் கிறிஸ்துவின் அன்பினால் ஒருங்கிணைக்கப்பட்ட வாழ்வும் உண்டென்று நம்புகிறோம். ஆமென்.

நன்றி மன்றாட்டு (Thanks Giving and Intercessory):-
நன்றி செலுத்துவோம்:
  • ஒவ்வொரு நாளும் எங்களை உருவாக்கும் படைப்பின் கடவுளே, உம் அன்பின் வழியாய் எங்களை உருவாக்கிக் கொண்டிருப்பதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
  • இன்றைய நாளின் வழிபாட்டின் மூலம் பிரிவினை கூடாது கிறிஸ்துவின் அன்பினால் பிளவுகளைச் சரி செய்து நிலைத்திருந்து கனி தர வேண்டும் என்று உணர்த்தியதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
  • கடந்த நாள்களில் சமத்துவப் பொங்கல் வழிபாட்டினை நன்முறையில் நாங்கள் நடத்த நீர் செய்த அருளுக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
  • பிற சமய பற்றுறுதியாளர்களை நாங்கள் ஏற்றுக்கொண்டு, அவர்களை எங்களோடு அன்பினாலும், அவர்களுடைய கோட்பாடுகளையும் ஏற்றுக் கொள்ள எம் கல்லூரியின் வழியாக இப்பருவத்தில் முதல் ஒருங்கிணைந்த கருத்தரங்கு நன்முறையில் நடந்ததற்காகவும் அதன்வழியில் நாங்கள் பெற்றுக் கொண்ட தகவுகளுக்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
  • சுகமளிக்கும் வல்ல கடவுளே, எங்களோடு பயிலும் 4ஆம் ஆண்டு மாணவர் திருமிகு.ஜான் பிரேம்குமார் அண்ணன் அவர்களின் இரண்டாவது மகள் மருத்துவமனையிலிருந்து நலம் பெற்று வீடு திரும்ப நீர் தந்த ஆற்றலுக்காக இறைவா உமக்கு நன்றி செலுத்துகின்றோம்.

மன்றாடுவோம்:
  • சமத்துவத்தை விரும்பும் நல்ல கடவுளே, இன்றைய காலத்தில் திருச்சபையிலும் சமுதாயத்திலும் உள்ள ஏற்றத்தாழ்வுகளை களைத்து உம் அன்பினால் அனைவரையும் ஒருங்கிணைத்து வேற்றுமை எண்ணங்களை ஒழித்து ஒற்றுமையுடன் செயல்பட உம் அருள் வேண்டி மன்றாடுகிறோம்.
  • அன்பே உருவான கடவுளே, 2026 இல் நடைபெற இருக்கின்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் மூலமாக மக்களிடையே பிரிவினை ஏற்படாதபடி தேர்தல் நன்முறையில் நடக்கவும், உம்மை வழிபடத் தடையில்லாத அரசு உருவாகவும் உம் அருள் வேண்டி மன்றாடுகிறோம்.
  • வழிநடத்தும் நல்ல கடவுளே, நான்காம் ஆண்டு மாணாக்கர் தங்களுடைய ஆய்வுக் கட்டுரையினை நன்முறையிலும் குறித்த காலத்துக்குள்ளாக எழுதி ஒப்படைக்க உம் வழிநடத்தல் வேண்டுமாய் உம்மிடம் மன்றாடுகிறோம்.

(இவை அனைத்தையும் அன்பில் எங்களை ஒருங்கிணைக்கும் இயேசு கிறிஸ்துவின் வழியாய் ஏறெடுக்கிறோம் நல்ல கடவுளே. ஆமென்.)

ஆண்டவர் கற்பித்த இறைவேண்டல்
(Lord's Prayer) - (தழுவியது)
ஒன்றிப்பை விரும்பும் எங்கள் பெற்றவராகிய கடவுளே, நாங்கள் செய்யும் அன்பின் செயல்களால் உமது திருப்பெயர் தூயதெனப் போற்றப் பெருக, உம்முடைய அன்பின் ஆட்சி வருக, அன்போடு அனைவரையும் ஏற்றுக்கொள்ளும் உமது திருவுளம் இம்மண்ணுலகில் நிறைவேறுக, உணவை வீணடிக்காமல் பகிர்ந்து உண்ணும் நினைவை எங்களுக்குத் தாரும், எங்களை நீர் மன்னித்து, வாழ்வளிப்பது போல நாங்களும் பிறருடைய குற்றங்களை மன்னிக்க வேண்டும் என்ற உணர்வைத் தாரும். நாங்கள் மற்றவரைச் சோதனைக்கு உட்படுத்தாதபடி அன்போடும் ஒருங்கிணைப்போடும் செயல்பட எங்களைத் தூண்டியருளும். தீய செயல்களில் இருந்து எங்களை விடுவியும். ஆட்சியும் மாட்சியும் என்றென்றைக்கும் உமக்கே. ஆமென்.

ஒப்படைப்பு (Dedication) :-

இறைவாழ்த்து (Benediction)
(அனைவரும் எழுந்து நிற்க) :-
அனைவரையும் ஒருங்கிணைப்புக்கு உட்படுத்தும் கடவுளின் அன்பும், தம்முடைய வாழ்வில் குற்றம் செய்தவரையும் நண்பர்களாக ஏற்றுக் கொண்டு வாழ்வளித்த கிறிஸ்துவின் அருளும், நம்மை ஒருமைப்பாட்டிற்குள் வளரத் தூண்டும் தூய ஆவியாரின் கூட்டுறவு நம் அனைவரோடும் இன்றும் என்றும் நின்று நிலவுவனவாக. ஆமென்.

நிறைவுப் பாடல் (Closing Song) :-
கீர்த்தனை எண் : 217
அன்பே பிரதானம் சகோதர
அன்பே பிரதானம்

என் பொருள் யாவும் ஈந்தளித்தாலும்
பணிய அன்பில்லால் பயனதிலில்லை

சாந்தமும் தயவும் சகல நற்குணமும்
போந்த சத்தியமும் பொறுமையுமுள்ள

புகழிறு மாப்பு பொழிவு பொறாமை
பகைய நியாயப் பாவமுஞ் செய்யா

சினமடையாது தீங்கு முன்னாது
தினமழியாது தீமை செய்யாது

சகலமுந் தாங்கும் சகலமும் நம்பும்
மிகைபட வென்றும் மேன்மை பெற்றோங்கும்
பாடல்: ச.பே.ஞானமணி

நன்றி அறிதல் உள்ளத்தோடு யாவரும் இணைந்து சொல்லுவோம்:
என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு!
என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு!
என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு!
அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! ஆமென்.
(திருப்பாடல்கள் 103:1,2)

அனுப்புதல் (Commissioning) :-
நடத்துநர்: அன்பினால் ஒருங்கிணைப்பை ஏற்படுத்திய கடவுள் நம் உள்ளங்களில் குடிகொள்வாராக.
திருஅவை: ஆம், அவர் நம்மை அன்பில் ஒருங்கிணைக்கச் செய்வாராக

நடத்துநர்: அன்பே உங்கள் வாழ்வுக்கு ஆணிவேரும், அடித்தளமுமாய் இருப்பதாக
திருஅவை: கடவுளின் திருப்பெயராலே ஆமென்.

(வழிபாட்டில் கலந்து கொண்ட உங்கள் யாவருக்கும், எனக்கு உதவி செய்த பேராசிரியர்கள், மாணவ சகோதர சகோதரிகள் உங்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றி..)


United in Love
Introduction:
Being united in love is a noble act that removes divisions and unites everyone This is an act that each of us should remember.

Philosopher and theologian Nicholas Woltersdorff argues that diverse ideas such as justice, art, and worship are ultimately united by the unifying principle of love, and that this affirms the Fifure/Image of God.

Theologian W.H. Griffith Thomas says that love is the main force that unites Christians, despite differences in beliefs or practices.

As liberation theologian Gustavo Gutierrez says, love is not just talk, it must take the form of action

Theologian John Wesley says that unity in love means Christians living together with one another In my view, being united in love means accepting everyone and being committed to a moral life without discrimination

1. Love that teaches and the harbinger of unity.
In this passage, Moses performs three functions that create unity: encouraging or teaching "Hear, O Israel" was always important in ancient times. This phrase is used to emphasize the importance of teaching the truth. (Deuteronomy 5:1, 6:4, 9:1, Proverbs 4:10) The word "teaching" first appears in the book of Deuteronomy

When we see in verses 1 and 2, he says, "I will teach you the commandments of the Lord, and you shall follow them" Because here he is creating a community of people to unite, that is, he is bringing together those who are separated and teaching them to dissolve their divisions and unite

Secondly, he makes you remember.
In verses 3 and 4, he reminds the people of what God did to them. Your eyes have seen what the Lord did to you at Peor. Peor is the place where the Lord destroyed the god Baal and declared the true God, Yahweh, and the nature of His worship. You have principles and wisdom that are unique to you, reminiscent of the Mount Sinai experience, the Ten Commandments, and the revelation of God.

Thirdly, he gives advice,
When we look at the previous context of this event, Moses is forbidden to go to the land of Canaan, but Israel is not, and he advises that when you go into a new culture and a country with religious and social commitments, you should walk according to the principles you have received. Through this, he advises other people to realize how we and God live together.

By observing your laws and your unity, the Israelites were a sign of their wisdom, and this act set them apart. Proverbs 6-9 The righteous commandments Up until then, the laws of the Babylonian lawyer Hammurabi had been the only laws in the Middle East. (Deuteronomy 4:9-10) But here the people are given a new law, which is wiser and more accurate than other laws. The scattered people are being urged to come together as one body, remember their history, and make a covenant with the present and future generations to keep it.

He brought people from all walks of life together and through this, he teaches unity. He teaches and establishes unity, and God also establishes unity among people through our principles.

Today, we too have forgotten the commandments given to us by God at various levels and have. divisions within ourselves, we are divided on grounds of race, gender, caste etc. We too have forgotten the love of God and have failed to raise our children. God's call to us today is to remember His commandments and establish unity. That too in the way of love.

2. Love that unites divisions despite condemnation:
Paul, having learned of the divisions that had arisen in the city of Corinth through the household of Chloe, writes a letter to the church, humbly and later condemning the divisions, and he writes about what they are using to create divisions, and he also condemns them. The reasons for the divisions seen there were immoral acts, temple prostitutes, party mentality, and devotion to baptism.

The people who baptize without baptism are forming parties in their names, and this is what the Chloe family first wrote to Paul to try to reconcile the divisions they had created in the church. Paul wrote to the church at Corinth to condemn this, with the aim of uniting the church

Paul condemns those who read the concept of salvation through baptism and forget the unmlyng love of Christ and live by giving importance only to baptism, trying to unite divisions through the love of Christ. When St. Augustine says, even if everyone does wrong, it is wrong, and even if no one does right, it is right. We should keep this in mind and compare it with Paul, forgetting what Christ said, they create divisions by ignoring the fact that Christ and Christians are one

This is the love of Christ John 15.9-17
1. Abiding in love
2. In keeping the commandments
3. In loving others
4. In giving the best love for friends

He says. The love of Christ helps us to overcome divisions 15 17 Paul here rebukes the people of the Corinthian church, realizing that if we abide in the love of Christ, we will bear the fruits of love and that the fruit of that love has been made by Christ to abide in faith He calls on them to be united in love as one mother.

Today, we too, in the Reformed Churches, the Spiritual Church, and the Roman Catholic Church, are rooted in divisions, keeping our own separate rituals and doctrines, and we create many divisions within ourselves, putting forward the love of Christ. These three liturgical lessons that we have heard to read also emphasize. Unity in love

In the first book of the covenant, in Deuteronomy 4. Moses teaches children to observe the principles and to practice them in love for God and people.

In the Second Testament, Paul addresses the church in 1 Corinthians 1, where they are healed of divisions and united in love.

The Gospel lesson is that Christ gives his life to all, creating unity in love.

So what we must keep in mind today is to overcome divisions and to focus on the love of Christ and to remain in it.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.