தென்னிந்திய திருச்சபை வழிபாட்டு முறை
TAMILNADU THEOLOGICAL SEMINARY
தொழுகை நடத்துபவர்: Mr.Biju S.Sam
நாள்: 06.02.2026
கர்த்தருடைய வழி சுழல்காற்றிலும் பெருங்காற்றிலும் இருக்கிறது; மேகங்கள் அவருடைய பாதத்துக்குள்ளாயிருக்கிறது. (நாகூம். 1:3b)
துதிப்பாடல்:
சத்தாய் நிஷ்களமாய்' ஒரு சாமிய' மும் இலதாய், சித்தாய்' ஆனந்தமாய்த் திகழ்கின்ற திரித்துவமே,
எத்தால் நானடியேன் கடைத்தேறுவன் என்பவந்தீர்ந்-து; அத்தா, உன்னையல்லால் எனக்கார் துணை, யாருறவே?
தொழுகை அழைப்பு:
கடவுள் உருவமற்றவர். அவரை வழிபடுவோர் அவரது உண்மை இயல்புக்கு ஏற்ப உள்ளத்தில்தான் வழிபடவேண்டும்.
படைகளின் ஆண்டவர் தூயவர், தூயவர், தூயவர்; மண்ணுலகம் முழுவதும் அவரது மாட்சியால் நிறைந்துள்ளது. வாருங்கள்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள். நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்.
இறைவேண்டல்:
ஞானப்பாடல்: (Jesus Loves Me This I Know)
1. இயேசு எந்தன் நேசரே,
கண்டேன் வேத நூலிலே;
பாலர் அவர் சொந்தந்தான்,
தாங்க அவர் வல்லோர்தான்.
இயேசு என் நேசர்.இயேசு என் நேசர்,இயேசு என் நேசர்,மெய் வேத வாக்கிதே.
2. என்னை மீட்க மரித்தார்.
மோட்ச வாசல் திறந்தார்.
எந்தன் பாவம் நீக்குவார்.
பாலன் என்னை ரட்சிப்பார்.
3. எந்தன் மீட்பர் இயேசுவே,
தாங்குவார் என்னருகே;
நேசனாய் நான் மரித்தால்
மோட்சம் சேர்ப்பார் அன்பினால்.
திருப்பாடல் : 3:1-8
1. ஆண்டவரே, என் எதிரிகள் எவ்வளவாய்ப் பெருகிவிட்டனர்! என்னை எதிர்த்து எழுவோர் எத்தனை மிகுந்து விட்டனர்
2. கடவுள் அவனை விடுவிக்கமாட்டார்' என்று என்னைக் குறித்துச் சொல்வோர் பலர்.
3. ஆயினும், ஆண்டவரே, நீரே எனைக் காக்கும் கேடயம்; நீரே என் மாட்சி; என்னைத் தலைநிமிரச் செய்பவரும் நீரே.
4. நான் உரத்த குரலில் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்; அவர் தமது திருமலையிலிருந்து எனக்குப் பதிலளிப்பார்.
5. நான் படுத்துறங்கி விழித்தெழுவேன்; ஏனெனில், ஆண்டவரே எனக்கு ஆதரவு.
6. என்னைச் சூழ்ந்திருக்கும் பல்லாயிரம் பகைவருக்கு நான் அஞ்சமாட்டேன்.
7. ஆண்டவரே, எழுந்தருளும்; என் கடவுளே, என்னை மீட்டருளும்; என் எதிரிகள் அனைவரையும் கன்னத்தில் அறையும்! பொல்லாரின் பல்லை உடையும்!
8. விடுதலை அளிப்பவர் ஆண்டவர்; அவர்தம் மக்களுக்கு ஆசி வழங்குவாராக!
பாவ அறிக்கை அழைப்பு:
அவர் முன்னிலையில் மலைகள் அதிர்கின்றன குன்றுகள் கரைகின்றன நிலமும் உலகம் அதில் குடியிருக்கும் அனைத்தும் அவர் முன்னிலையில் நடுநடுங்கின்றன
அவரது கடும் சினத்தை எதிர்த்து நிற்கக் கூடியவர் யார்?
நாகூம்.1: 5,6
பாவ அறிக்கை:
பாவ அறிக்கைப் பாடல்:
1. இந்த அருள் காலத்தில்
கர்த்தரே உம் பாதத்தில்
பணிவோம் முழந்தாளில்
2. தீர்ப்பு நாள் வருமுன்னே
எங்கள் பாவம் உணர்ந்தே
கண்ணீர் சிந்த ஏவுமே
பாவ மன்னிப்பின் உருதி:
நன்றி செலுத்துதலின் அழைப்பு:
அல்லேலூயா! தூயகத்தில் இறைவனைப் போற்றுங்கள்! வலிமைமிகு விண்விரிவில் அவரைப் போற்றுங்கள்!
அவர்தம் வல்ல செயல்களுக்காய் அவரைப் போற்றுங்கள்! அவர்தம் எல்லையிலா மாண்பினைக் குறித்து அவரைப் போற்றுங்கள்!
நன்றி செலுத்துதல்:
நன்றி பாடல்:
நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள்
ஆலயம் கூடி வந்தோம்
துதி பலிகள் செலுத்தியே
நாங்கள் உம்மை போற்ற வந்தோம் (2)
கர்த்தர் செய்த நன்மைக்காக
நன்றி செலுத்த வந்தோம்
நம்மை மறவா அவர் கிருபை
எண்ணியே துதிக்க வந்தோம்
இறைவனின் இறைவேண்டல்:
நன்றிகளைப் படைத்த நாம் இறைமைந்தர் இயேசு கிறிஸ்து கற்றுத்தந்த மன்றாட்டை இணைந்து ஏறெடுப்போம்.
விண்ணுலகிலிருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக ! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக! இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளதுபோல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீயோனிடமிருந்து எங்களை விடுவியும். ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமக்கே. ஆமென்.
திருமறை பாடம் : நாகூம் 1:1-7
அருளுரை: Mr. Biju S. Sam
அப்போஸ்தலர் விசுவாச பிரமானம்
விண்ணையும் மண்ணையும் படைத்த அனைத்து ஆற்றலும் பொருந்திய தந்தையாம் கடவுளை நம்புகிறேன்.
அவர் தம் ஒரே மைந்தராகிய நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவையும் நம்புகிறேன் அவர் தூய ஆவியாராலே கன்னி மரியாவிடம் கருக்கொண்டு பிறந்தார். பொந்தியு பிலாத்துவின் காலத்தில் துன்புற்று சிலுவையில் அறையப்பெற்று இறந்து அடக்கம் செய்யப்பெற்றுப் பாதாளம் இறங்கினார். மூன்றாம் நாள் இறந்தோரிடையே இருந்து எழுந்தருளினார். விண்ணகம் ஏறி அனைத்து ஆற்றலும் பொருந்திய தந்தையாம் கடவுளின் வலப்பக்கம் வீற்றிருக்கிறார். அவ்விடத்திலிருந்து உயிர் உள்ளோரையும் இறந்து விட்டோரையும் நடுதீர்க்க வருவார்.
தூய ஆவியாரையும் நம்புகிறேன், பொதுவாக இருக்கிற தூய திருச்சபையும் தூயோரின் கூட்டுறவும் பாவமன்னிப்பும் உடல் உயிர்ப்பும் நிலைவாழ்வும் உண்டென்று நம்புகிறேன். ஆமென்.
கீர்த்தனை:
வாரா வினை வந்தாலும்,
சோராதே, மனமே;
வல்ல கிறிஸ்துனக்கு நல்ல தாரகமே.
சரணங்கள்
1. அலகை சதித்துன் மீது வலை வீசினாலும்
அஞ்சாதே, ஏசுபரன் தஞ்சம் விடாதே. - வாரா
2. உலகம் எதிர்த்துனக்கு மலைவுசெய்தாலும்,
உறுதி விட்டயராதே, நெறி தவறாதே. - வாரா
3. பெற்ற பிதாப்போல் உன் குற்றம் எண்ணாரே;
பிள்ளை ஆகில் அவர் தள்ளிவிடாரே. - வாரா
இறைவேண்டல்:
மகிமைக்கவி:
சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதி
திரியேக நாதனுக்கு சுபமங்களம்
பாரேறு நீதனுக்கு பரம பொற்பாதனுக்கு
நேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு
இறையாசி:
அனைத்து அறிவுக்கும் மேலான கடவுளின் நல்லுறவு உங்களோடு இருந்து, நீங்கள் கடவுளையும் அவருடைய மகனாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவையும் பற்றிய அறிவிலும், அன்பிலும் நிலைத்திருக்கும்படி, உங்கள் உள்ளத்தையும், எண்ணத்தையும் காக்ககடவது.
தந்தை, மைந்தர், தூய ஆவியாருமாகிய அனைத்து ஆற்றலும் உள்ள கடவுளின் ஆசி உங்களுடனே இருந்து எப்பொழுதும் உங்களோடு நிலைத்திருக்ககடவது. ஆமென்.
ஆயர்: ஆண்டவர் உங்களோடிருப்பாராக.
சபை : அவர் உம்மோடும் இருப்பாராக
ஆயர்: இறையமைதியோடு சென்று வாருங்கள்
சபை: இறைவனின் திருப்பெயரிலே ஆமென்.







