தமிழ்நாடு இறையியல் கல்லூரி
அரசரடி, மதுரை - 16.
திறனாய்வு வழிபாடு 2025 - 2026
செம்பொருள்
வீழ்ச்சி: கடவுளின் நோக்கத்திலிருந்து விலகிச் செல்லுதல்
Fall: Moving Away from God's Purpose
நாள்: 04.02.2026 (புதன் கிழமை)
நேரம்: காலை 06:00 மணி
இடம்: கிறித்தரசர் வழிபாட்டுமனை
வழிபாடு நடத்துபவர்: திருமிகு.மே.நெல்சன்
திறனாய்வு மாணவர்: திருமிகு.வே.பெட்சி கமலி
திறனாய்வு ஆசிரியர்: அருட்பணி.வி.ஷீலா டைட்டஸ்
வாழ்த்தும் வரவேற்பும் (Greetings and Welcome):-
மூவொரு கடவுளின் திருப்பெயரால் இத்திறனாய்வு வழிபாட்டுக்கு வருகை தந்திருக்கும் வரவேற்கிறேன். உங்கள் யாவரையும் அன்புடன் வாழ்த்தி
வழிபட அழைப்பு (Call to Worship) :-
"நமது வலிமையாகிய கடவுளை மகிழ்ந்து பாடுங்கள், யாக்கோபின் கடவுளைப் புகழ்ந்து ஏத்துங்கள்" திருப்பாடல்கள் 81:1 என்ற திருமொழிக்கேற்ப நம் வாழ்வின் வலிமையாகவும், நாம் வீழ்ந்து போகும்போது தம் அருளால் நம்மை வழிவிலகாமல் பாதுகாப்பவருமான கடவுளை முழுமனதோடு வழிபடுவோம் வாருங்கள்.
தொடக்க இறைவேண்டல் (Opening Prayer) :-
அன்பும் அருளும் நிறைந்தவரே, இன்று உமது திருமுன் ஒன்றுகூடி நிற்கிறோம். ஆண்டவரே உமது திருவுளத்தைவிட எங்கள் விருப்பங்களை முன்னிலைப்படுத்திய எங்கள் எண்ணங்களையும், வார்த்தைகளையும், செயல்களையும் இந்த வேளையில் உமக்கு முன்பாகத் திறந்து வைக்கிறோம். அறிந்தும் அறியாமலும் உமது பாதையிலிருந்து விலகிச் சென்ற தருணங்களை எங்களுக்கு உணர்த்தும். உமது தூய ஆவியால் எங்கள் இதயங்களைத் தொட்டு, உண்மையான மனமாற்றத்திற்குள் எங்களை அழைத்துச் செல்லும். விலகிய பாதைகளிலிருந்து திரும்பி, உமது நோக்கத்தை மீண்டும் தேடி வாழ எங்களுக்கு தாழ்மையும் துணிவும் அளியும். இந்த வழிபாடு முழுவதும் எங்கள் மனங்கள் உமக்கே திறந்திருக்கும் படி நடத்தும். உமது வார்த்தை எங்களைத் திருத்தவும், உமது அன்பு எங்களை மீட்டெடுக்கவும் இந்த வேளையை உமது கைகளில் ஒப்புவிக்கிறோம். இவை அனைத்தையும் இறைமகன் இயேசு கிறிஸ்துவின் திருப்பெயராலே வேண்டுகிறோம் அன்பின் கடவுளே. ஆமென்.
போற்றிப்பாடல் (Song Of Praise) : பாமாலை எண் 9
1 பூலோகத்தாரே யாவரும்
கர்த்தாவில் களிகூருங்கள்
ஆனந்தத்தோடே ஸ்தோத்திரம்
செலுத்தி, பாட வாருங்கள்.
2 பராபரன் மெய்த் தெய்வமே
நாம் அல்ல அவர் சிஷ்டித்தார்
நாம் ஜனம், அவர் ராஜனே
நாம் மந்தை, அவர் மேய்ப்பனார்.
3 கெம்பீரித்தவர் வாசலை
கடந்து உள்ளே செல்லுங்கள்
சிறந்த அவர் நாமத்தை
கொண்டாடி, துதிசெய்யுங்கள்.
4 கர்த்தர் தயாளர், இரக்கம்
அவர்க்கு என்றும் உள்ளதே
அவர் அநாதி சத்தியம்
மாறாமல் என்றும் நிற்குமே.
5 விண் மண்ணில் ஆட்சி செய்கிற
திரியேக தெய்வமாகிய
பிதா, குமாரன், ஆவிக்கும்
சதா ஸ்துதி உண்டாகவும்.
பிழையுணர அழைப்பு (Call to Confession) :-
"நாம் நம் பாவங்களை ஒப்புக்கொண்டால், அவர் நம் பாவங்கள் அனைத்திலிருந்தும் நம்மை விடுவித்து நம் பாவங்களை மன்னித்து, எல்லா அறமற்ற செயல்களிலுமிருந்து நம்மைத் தூய்மையாக்குவார்" ( 1 யோவான் 1:9) இறைவனின் வார்த்தை நம்மை குற்றம் சாட்ட அல்ல, குணப்படுத்தவும் மீட்டெடுக்கவும் அழைக்கிறது. கடவுளின் நோக்கத்தைவிட்டு விலகிச் சென்ற எண்ணங்களையும் செயல்களையும் இப்போது அவர் முன்பாக நேர்மையுடன் ஒப்புக்கொள்வோம்.
பிழை அறிக்கை (Confession of Sins) :-
அழைப்பாளர்
ஆண்டவரே, உமது நோக்கத்தைவிட்டு விலகிய எங்கள் வாழ்வை உம்முன் ஒப்புக்கொடுக்கிறோம்.
அனைவரும்
இரக்கம் புரிவீராக எங்களை மீட்டெடுக்கும், ஆண்டவரே.
அழைப்பாளர்
அன்பு செய்யத் தவறியதும் நீதி பேச மௌனமாக இருந்ததையும் உம்முன் வைக்கிறோம்.
அனைவரும்
எங்களை மன்னித்துப் புதிய பாதையில் நடத்தும், ஆண்டவரே.
அழைப்பாளர்
நம்பிக்கைக்குப் பதிலாக பயத்தைத் தேர்ந்தெடுத்த எங்கள் இதயங்களை உமது ஒளியால் நிரப்பும்.
அனைவரும்
உமது நோக்கத்தில் மீண்டும் நடக்க அருள் தரும். ஆண்டவரே.
நம்முடைய தனிப்பட்ட பிழைகளை அறிக்கை செய்வோம்
பிழை மன்னிப்பின் உறுதி (Absolution):-
பிழைகளை ஒப்புக்கொண்ட நாம் இப்போதே குற்ற உணர்ச்சியில் இல்லாமல், நம்பிக்கையிலும் மகிழ்ச்சியிலும் நிற்க அழைக்கப்படுகிறோம். ஆகையால், கிறிஸ்துவின் அன்பின் நிமித்தம் பிழைகள் மன்னிக்கப்பட்டு புதிய வாழ்வுக்கு அழைக்கப்பட்டுள்ள நாம் நம்பிக்கையோடும் தைரியத்தோடும் கடவுளின் நோக்கத்தில் நடக்க கடவுள் ஆற்றல் தந்து நடத்துவாராக, ஆமென்.
திருமறைப்பகுதிகள் (Scripture Readings) :-
நீதித்தலைவர்கள் 2: 7-22
Judges 2: 7-22
1 திமொத்தேயு 4:1-10
1 Timothy 4: 1-10
தூய லூக்கா 18:18-27
St.Luke 18:18-27
சிறப்பு நிகழ்வு
குறுநாடகம்
அருளுரை (Sermon) :-
தலைப்பு : "வீழ்ச்சி : கடவுளின் நோக்கத்திலிருந்து விலகிச் செல்லுதல்"
பற்றுறுதி அறிக்கை (Affirmation of Commitment):-
(திருத்தூதுவர் பற்றுறுதி அறிக்கையைத் தழுவியது)
விண்ணையும் மண்ணையும் படைத்த பெற்றவராகிய கடவுளை நம்புகிறோம். அவர்தம் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை நம்புகிறோம். விலகிய பாதைகளுக்குள் இறங்கி, எங்களை மீண்டும் கடவுளின் நோக்கத்திற்கு அழைத்த மீட்பரை நம்புகிறோம். அவர் தூய ஆவியாரால் கருவுற்று கன்னிமரியாவிடம் கருக்கொண்டு பிறந்தார். பொந்தியு பிலாத்துவின் காலத்தில் பாடுபட்டு சிலுவையில் அறையப்பெற்று இறந்து அடக்கம் செய்யப்பெற்றுப் பாதாளம் இறங்கினார். மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து நம்பிக்கை இழந்தவர்களுக்கு புதிய வாழ்வின் பாதையைத் திறந்தார்ர். விண்ணகம்ஏறி அனைத்து ஆற்றலும் பொருந்திய பெற்றவராம் கடவுளின் வலப்பக்கம் வீற்றிருக்கிறார். அவ்விடத்திலிருந்து உயிர் உள்ளோரையும், இறந்துவிட்டோரையும் நடுத்தீர்க்க வருவார். எங்களை உணர்த்தி திருத்தி கடவுளின் நோக்கத்தில் நடத்தும் தூய ஆவியாரை நம்புகிறோம். பொதுவாக இருக்கிற தூய திருச்சபையும், தூயோரின் கூட்டுறவும், பிழைபொறுப்பும், உடல் உயிர்ப்பும், மெய்வாழ்வும் உண்டென்று நம்புகிறோம். ஆமென்.
நன்றி மன்றாட்டு (Thanks Giving and Intercessory) :-
நன்றி செலுத்துவோம் (Prayer of Thanksgiving):
- அன்பு நிறைந்த கடவுளே, உமது நோக்கத்திலிருந்து விலகிய போதும் எங்களை கைவிடாததற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். எங்கள் தவறுகளை கணக்கிடாமல், மனமாறும் இதயங்களை ஏற்றுக்கொண்டு, மன்னிப்பின் உறுதியைத் தந்ததற்காக உமக்கு நன்றி கூறுகிறோம்.
- எங்களைத் திருத்தும் உமது வார்த்தைக்காக, எங்களை மீண்டும் அழைக்கும் உமது அன்புக்காக, புதிய தொடக்கத்தை அளிக்கும் உமது அருளுக்காக நன்றியோடு உம்மை போற்றுகிறோம்.
மன்றாடுவோம் (Prayer of Intercession & Commitment):
- அன்பான ஆண்டவரே, இன்று நாங்கள் உறுதி செய்த வார்த்தைகள் வெறும் சொற்களாக இல்லாமல், எங்கள் வாழ்வாக மாற உமது தூய ஆவியால் எங்களை நடத்தும். படிப்பிலும், தேர்வுகளிலும், முடிவெடுப்புகளிலும், உறவுகளிலும் உமது நோக்கத்தைத் தேடி நடக்க எங்களுக்கு ஞானம் அளியும்.
- விழுந்தால் எழுந்து நிற்க ஆற்றல், வெற்றி பெற்றால் பணிவு எங்களுக்கு தாரும். எங்கள் வாழ்க்கையின் மூலம் உமது அன்பும் நீதியும் இந்த உலகில் வெளிப்பட எங்களை உமது கருவிகளாகப் பயன்படுத்தும். இதையெல்லாம் எங்களை மீட்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பெயராலே பணிவோடும் நம்பிக்கையோடும் வேண்டுகிறோம். ஆமென்.
ஆண்டவர் கற்பித்த இறைவேண்டல் (Lord's Prayer):-
விண்ணுலகிலிருக்கிற எங்கள் பெற்றவராம் கடவுளே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக உமது ஆட்சி வருக உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவதுபோல மண்ணுலகிலும் நிறைவேறுக இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளதுபோல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும், தீயோனிடமிருந்து எங்களை விடுவியும். ஆட்சியும், வல்லமையும், மாட்சியும் என்றென்றும் உமக்கே. ஆமென். (மத்தேயு 6:9-13).
ஒப்படைப்பு (Dedication):-
பறை இசை
இறைவாழ்த்து (Benediction):-
இரக்கம் நிறைந்த பெற்றவராம் கடவுள், தேடி அழைக்கும் அன்பால் என்றும் நம்மை அணைத்துக் கொள்ளட்டும். விலகிய பாதைகளிலிருந்து திரும்பி நடக்கத் துணிவு அளிக்கும் இயேசு கிறிஸ்துவின் அருள் நம் வாழ்வை வழிநடத்தட்டும். சரியானதை உணர்த்தி, உண்மையின் பாதையில் நடத்தும் தூய ஆவியாரின் ஆற்றல் நம் அனைவரோடும் இன்றும் என்றும் இருப்பதாக. ஆமென்.
நிறைவுப் பாடல் (Closing Song) :- கிறிஸ்து சபை பாமாலை பக்கம் எண்:195
கர்த்தர் தந்த ஈவுக்காக
என்றென்றைக்கும் தோத்திரம்
விண்ணோர் மண்ணோர் கூட்டமாக
பாடுவார் சங்கீர்த்தனம்.
மீட்கப்பட்ட யாவராலும்
ஏக தேவரீருக்கே
ஆரவாரமாய் என்றைக்கும்
தோத்திரம் உண்டாகவே
நன்றி அறிதல் உள்ளத்தோடு யாவரும் இணைந்து சொல்லுவோம்:
என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு!
என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு!
என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு!
அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! ஆமென்.
(திருப்பாடல்கள் 103:1,2)
அனுப்புதல் (Commissioning):-
நடத்துநர்: கடவுள் உங்களோடு இருப்பாராக
திருஅவை: அவர் உம்மோடும் இருப்பாராக
நடத்துநர்: கடவுளின் விருப்பத்திற்கேற்ப நடப்போம் என்ற மனநிறைவோடு கடந்து செல்வோம்
திருஅவை: கடவுளின் திருப்பெயராலே ஆமென்.
வழிபாட்டில் கலந்து கொண்ட, எனக்கு உதவி செய்த நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
அட்டைப் படம் வரைந்து கொடுத்த அருட்பணி.கெர்சோம் லார்சன் அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
FALL: MOVING AWAY FROM GOD'S PURPOSE
INTRODUCTION
The entire history of the Bible is not only the story of man's relationship with God, but also the moments of separation from that relationship and the resulting falls. The first moment when Adam and Eve departed from God's word is recorded in the Bible as the first fall in human history. That departure was not only a violation of the commandments, but also an event in which man separated himself from God's purpose.
The departure and fall are not just a story of individual sin. They are a historical fact that affects a society and a generation. At the same time, the mystery does not end with this fall. The mercy of God, which seeks out departed humanity, rings out in every age as a call for redemption. The central question of this sermon is how we hear that call in the context of our lives today and respond to it, returning to our purpose.
Theologian Paul Delick says, "The ultimate concern that man has for directing his life is what he considers most important above all else. That becomes his god. When there is no true God in that place, man strays from God's purpose."
To deviate from God's purpose is not to reject God completely, but rather to ignore God's way and choose our own way, even though we know God. The focus of today's sermon is to recognise this state and call us back into God's purpose.
1. Deviated path (Judges 2:7-22)
God sends man into this world with a clear purpose. That purpose is to know Him and live according to His will. But that purpose is not fulfilled. Life goes astray when we forget. This passage of Scripture simply shows us the true state of a society that has strayed from God's purpose.
During the time of Joshua and the elders who traveled with him, the people of Israel worshipped the Lord faithfully. They had seen the miracles God performed with their own eyes. They had the experience of being freed from Egypt and living in the Promised Land. That generation knew God. They remembered God's works.
But after Joshua and that generation died, a new generation arose who did not know God. The works of God were not told to them, or if they were told, they did not remember them. This was the first step away from God's purpose.
They abandoned God's way of life and choose their own way, abandoning God's purpose and going after the ways of the world.
2. Changed allegiance (1 Timothy 4:1-10)
God calls man to abide in truth and life, but when man departs from that call, life loses its authenticity and becomes merely an outward religious belief. First Timothy chapter four clearly warns of the dangers of departing from God's purpose. False teachings are those that restrict people, such as not getting married and avoiding certain foods. People have viewed as sinful what God created for good. This is completely contrary to God's purpose, because His will is that all of God's creation be accepted with gratitude. The purpose of religion is not to subdue man. It is to lead a life of rights, but when we abandon the truth and live by rules, the life of faith becomes a burden. The desire to please God turns into the fear of pleasing men. This is the sign of a life that has strayed from God's purpose. Paul gives Timothy an important piece of advice. to grow and be trained in godliness. He advises us to do this. Paul finally says that we labor for this hope. We suffer for it.
Because the one we trust in is the living One who is the Savior of all men. This is the center of God's purpose, not to control men, not to live in fear, but to live in hope. This section also calls us to think today. Are we eating the true word of God? Or are we trapped in the religion that man has created? We must examine it.
3. Missed purpose (Luke18:18-27)
A man came to Jesus and asked, "What must I do to be called a good teacher?" His life seemed outwardly righteous. He followed the commandments, was respected in society, and had wealth. But God was not at the center of his life. He had possessions. This is where the departure from God's purpose slowly unfolds.
Here, Jesus is rejecting wealth. What he is pointing out is the place of control in man's life. God's purpose is for man to choose God above all else. But that man was reluctant to choose God over his possessions. He went away in great sorrow. He thought he had not rejected God, but he could not put God first. This was a departure from God's purpose.
We seek God. But this passage invites us to consider whether we are putting something else at the center of our lives. Staying in God's purpose is not about keeping the fire as a part of our lives.
Conclusion:
Deviation from God's purpose does not always appear as an obvious sin. Sometimes it occurs by forgetting God, sometimes by changing the truth, and sometimes by putting something else first rather than God.
As theologian Karl Barth says, when a person accepts God as the Lord of their life, they truly live as a person. But when a person does not listen to God and uses only their own knowledge and experience as a guide, they stray from God's purpose.
Are we living, forgetting God? Are we choosing convenient teaching over the true Word of God? Are we putting something else at the center of our lives rather than God? Only honest answers to these questions will keep us in God's purpose.
Living in God's purpose is a complete life. It is a life lived mindfully. It is a life that truly exists. It is a life that trusts God above all else. God is calling us to that life today. How are we going to respond to that call?
Translated By
Mr.Manish Kumar S, BD IV.












