Tamilnadu Theological Seminary
Arasaradi, Madurai - 16
Second Year, I Semester (2026-2027)
Subjcet: Homiletics
அருளுரையியல்
Professor: Rev. Dr. Ravi
25/06/2026
Homiletics
அருளுரையியல் என்றால் என்ன?
அருளுரையியல் என்பது அருளுரையின் கலை மற்றும் அறிவியலைக் கற்றுக்கொள்ளும் ஓர் பாடம்.
What is Homiletics?
Homiletics is the art and Science of Preaching.
Science: Desk work
- Context: Bibilical Context, Historical Context (Context of the Text)
- Exegisis
- Theological Reflections
- Approaches to the
- Moving to text to sermon
- Language
Art: Time of presentation/delivery of Preaching
- Practical side of Presentation.
- Coherence in formation
- Voice Modulation
- Faciel Expressen (Gesture, Mannarism)
- Eye Contact
- Emotional
Books:
அருளுரை இலக்கணம்
டாக்டர். ஐசாயா,
டாக்டர். ஆல்பர்ட் ஸ்டீபன்
Definitions of Preaching
i. மார்டீன் லூத்தர் Martinn Luther (கி.பி.1483-கி.பி.1546)
மாட்டீன் லூத்தர் அருளுரை கடவுளின் திருமொழி என்று சொல்லுகிறார். அருளுரையாற்றுவது கடவுளின் செயல்பாடு. அருளுரையின் வாயிலாக கடவுளின் மக்களவை, கடவுளை நேராக எதிர்கொள்ளுகிறது. அருளுரையில் கடவுள் இயேசு கிறிஸ்துவின் வழியாக, வரலாற்றின் வழியாக மனுக்குலத்திற்கு நிகழ்ந்த கடவுளின் மீட்பின் செயலை நினைவு படுத்துகின்றது. கடவுள் திருச்சபையில் இருக்கும் தம் மக்களோடு பேசி, அதற்கு இணையாக தனிப்பட்ட பற்றுறுதி மறுமொழியை எதிர்பார்க்கின்றார்.
ii. காரல் பாத் Karal Barth (கி.பி.1886-1968)
(சுவிட்சர் லாந்து நாட்டைச் சார்ந்தவர். ரோமர் மடிலின் விளக்கவுரையை முதல் முதலில் எழுதினார். அதிகார வர்க்கத்தை எதிர்த்து கேள்வி எழுப்பினார்)
“அருளுரை என்பது அழைக்கப்பட்டிருப்பவர் வழியாக திருமறையின் வார்த்தைகளை மனித வார்த்தைகளில் விளக்கி, அந்த வார்த்தைகளை கடவுளிடமிருந்து அவர்கள் கேட்க வேண்டியவைகளை தெரிவித்து, தற்கால சூழலுக்கு பொறுத்தமாக அமைத்து, திருச்சபைக்கு தெரிவிக்க கட்டளையிடப்பட்ட ஒன்று”
அருளுரை என்பது கடவுளின் கட்டளை (Preaching - Command)
iii. Philips Breoks (கி.பி. 1835-1893)
(அமெரிக்க நாட்டைச் சார்ந்த ஆயர். ஓ பெத்சகேமே சிற்றூரே என்ற பாமாலை பாடலை எழுதியவர். ஏழு பல்கலைக்கழகங்களில் அருளுரையைப் பற்றிய ஓர் கட்டுரையை (Lectures on Preacing) நடத்தினார். இந்த புத்தகம் உலக அளவில் பிரசித்திபெற்ற புத்தகமாக இன்று வரை உள்ளது)
அருளுரை என்பது ஒரு மனிதரால் மானுடத்திற்கு தன்னுடைய ஆழுமை வழியாக வாய்மையைத் தெரிவிக்கும் ஒரு தொடர்பியல்.
iv. W.E. Sangster (கி.பி.1900-1960)
(பிரிட்டிஸ் இவாஞ்சலிக்கல் இறையியலாளர்)
கடவுளின் தலையாய விருப்பத்தை உலகிற்குத் தெரிவித்தலே அருளுரையாக இருந்தது, இருக்கிறது, மேலும் என்றென்றும் இருக்கும்.
v. Alfred Stephen
(இந்திய அருளுரையாளர்)
அருளுரை என்பது கடவுளின் வார்த்தை. ஏனெனில் அது கடவுளின் நோக்கத்தில் பங்கேற்கிறது. இது கிறிஸ்துவால் தொடங்கப்பட்டது. கேட்பவர்களின் இருத்தலியலில் எதார்த்தத்துடன் உரையாடல் ரீதியாக தொடர்பு கொள்ளுகிறது.
மனிதர்கள் மேற்கொள்ளும் உரையாடல் தொடர்புகளை பிரதிபலிக்கிறது.
மீட்பிற்கும், விடுதலைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்.
vi. ஷ்லய மேக்கர்
(ஜெர்மன் நாட்டைச் சார்ந்தவர்)
திருச்சபை என்னும் அலைமோதும் கடலில் அருளுரை என்பது, பல அழைகளுள் ஒன்று. அருளுரை மட்டுமே முக்கியம் என்று சொல்ல முடியாது. கடவுளின் செயலை வெளிப்படுத்துவதற்கு பல்வேறு வழிகளில் அருளுரை ஓர் வழி (Tool).
அருளுரையின் வகைகள் (Types of Sermon)
அருளுரை மூன்று வகைபடும் (BTC)
- விவிலியம் சார்ந்த அருளுரைகள் (Bibilical)
- தலைப்புச் சார்ந்த அருளுரைகள் (Topical)
- சூழல் சார்ந்த அருளுரைகள் (Context)
I. விவிலியம் சார்ந்த அருளுரை (Bibilical)
- பகுதி சார்ந்த அருளுரை (Texual Sermon)
- பகுதியின் கருப்பொருள் சார்ந்த அருளுரை (Texual / )
- விளக்கவுரை, அகழ்வுரை சார்ந்த அருளுரை (Expository & Exegeticel)
- கருப்பொருள் சார்ந்த அருளுரை (Thematic Sermon)
- வாழ்க்கை வரலாறு அருளுரை (Biographycial Sermon)
- விவிலிய ஆய்வு அருளுரை (Bible Study)
- இறைவாக்கு அருளுரை (Prophatice Preaching)
- உவமை அருளுரை (Parabolic Preaching)
- அருஞ்செயல்கள் அருளுரை (Miracal Preaching)
II. தலைப்புச் சார்ந்த அருளுரைகள் (Topical)
- கோட்பாடுகள் சார்ந்த அருளுரைகள்
- வாழ்க்கைச் சூழல் சார்ந்த அருளுரை
- திருமுழுக்கு, திடப்படுத்தல், திருமணம்
- இல்ல, திருமங்களப் படைப்பு
- திருமண ஒப்பந்தம் (Marrage Engagment)
- நல்லடக்கம்
- விழாக்கள், வருகையின் காலங்கள் (Advent Sesion)
- அறுவடைக்கால அருளுரை
- உயிர்த்தெழுந்த திருநாள்
III. சூழல் சார்ந்த அருளுரை (Contaxt)
- விடுதலை அருளுரை
- தலித் விடுதலை அருளுரை
- பெண்ணிய விடுதலை அருளுரை
- சுற்றுச்சூழல் அருளுரை
- கருப்பின விடுதலை அருளுரை
- குழந்தைகளுக்கான பலியல் விடுதலை சார்ந்த அருளுரை
இவ்வாறு அருளுரையில் பல வகைகள் உண்டு.
10/07/2026
ஏன் அருளுரை அவசியம்? Purpose/Objectives in Preachings
i. கடவுளின் கட்டளை (God's Command)
அருளுரை கடவுளின் பிரதான கட்டளை
திருத்தூதுவர் பணிகள் 2:42
ii. G. Isaiah
Book: Preach the Word.
- அருளுரை என்பது எந்த சூழலிலும் பிற தொலை தொடர்பு ஊடகங்களுக்கு இணையானது அல்ல.
- அருளுரை என்பது மிகவும் வழிமையான தொடர்பு நிகழ்வு. எந்த காலத்துக்கும் அருளுரை ஏற்புடையது. முதல் உடன்படிக்கை முதல் இன்று வரை அருளுரை வழங்கப்பட்டு வருகிறது.
- Nothing can replace the power and the place of Pulpit.
iii. John Piper
- கடவுளின் மகிமையை வெளிப்படுத்துவதே அருளுரையின் முக்கிய நோக்கம்.
- கடவுளின் மகிமையை மானுட இருதயத்தில் விதைக்க வேண்டும்.
- மக்களுக்காக, திருச்சபைக்காக பணியாற்றக்கூடிய பன்பை அருளுரை வழங்க வேண்டும். (1 பேதுரு 4:10)
iv. C.H. Dodd
Kerygma & Didacha இவைதான் அருளுரையின் முக்கியம்
- Kerygma - Proclamation (கடவுளுளைப் பற்றிய அறியாதவர்களுக்கு அறிவித்தல்)
- Didacha - Instraetion/Teaching (திருச்சபையின் இருப்பவர்களுக்கு கற்றுக்கொடுத்தல்.
v. Clinard Broun
மக்களுடைய தேவை சார்ந்ததாக அருளுரை இருக்க வேண்டும்.
மக்களின் தேவை:
- மக்கள் அனைவரும் மீட்பு பெற வேண்டும்.
- அனைத்து இறை மக்களும் தனி மனித ஆன்மீக வாழ்வில் கவனமுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
- கடவுளின் சத்தியத்தில் (வாய்மை, உண்மை) ஒவ்வொரு நாளும் முதிர்ச்சியடையும் விதத்தில் நடத்தப்பட வேண்டும்.
- அனைவர் மத்தியில் நல் உறவை பேனக்கூடிய ஒன்றாக மக்களை உருவாக்க வேண்டும்.
- ஒவ்வொரு நாளும் ஒப்படைப்போடு (அர்ப்பம்) கடவுளின் திருப்பணியை செய்ய மக்களை உருவாக்க வேண்டும்.
- அன்றாடம் சந்திக்கின்ற பிரச்சனைகளில், சவால்களில், பாடுகளில் அவர்கள் ஆற்றுப்படுத்தப்படவும், வலிமை பெற்றுக்கொள்ளப்படவும், அவர்களாகவே தீர்வைக் காணும் விதத்தில் அருளுரை அமைய வேண்டும்.
அருளுரையைக் கேட்பவர்கள் கருத்து (feekback) மூன்று விதத்தில் இருக்கலாம்.
- ஏற்றுக்கொள்ளும் தன்மையுடையது. (Positive)
- ஏற்றுக்கொள்ள முடியாதது. (Negative)
- ஆயரின் பணி அருளுரையாற்றுவது. அவர் கடமையை அவர் செய்கிறார். நாம் நாமாகவே இருந்து கொள்ளுவோம். (Nutural)
Conclution
- படைப்பாளராம் கடவுள், மீட்பாளராம் கடவுள், தொடர் வழிபாட்டாளராம் கடவுள் அவர்களோடு ஒன்றித்து வாழ்வதற்கும், அந்த ஒன்றிப்போடு மக்களோடு இணைந்து வாழ்வதற்கும் திருச்சபை மக்களை உந்தித்தல்ல வேண்டும்.
- திருச்சபை ஒவ்வொரு நாளும் புனிதப்பட வேண்டும். தனிமனித புனிதமாக மாத்திரம் இல்லாமல், சமுதாயத்தில் புனிதத்தை கொண்டு வர வேண்டும்.
- அருளுரையைக் கேட்பவர், கேட்பவராக மட்டும் இல்லாமல், அதன்படி வாழ வேண்டும்.
அருளுரையில் சூழல் (Context in Preaching)
திருமறையின் அனைத்து பகுதிகளுக்கும் சூழல் அவசியம்.
1. உடனடிச் சூழல் (Immediate Context)
- முந்திய திருமொழிகளுக்கும், பின்வரும் திருமொழிகளுக்கும் தொடர்பு உள்ளது.
- ஒரே பொருள் தருகின்றதா? வேறு பொருள் தருகின்றதா?
- ஒரே நபரைப் பற்றி உள்ளதா? வேறு நபரைப் பற்றி உள்ளதா?
- இதில் ஆசிரியரின் நோக்கம் என்ன? யாருக்கு எழுதுகிறார்? ஏன் எழுதுகிறார்? எந்த சூழலில் எழுதுகிறார்?
- இந்த திருமொழிகளின் முடிவு என்ன? (மந்திருப்புதல், மீட்பு, விடுதலை)
2. Wider Context
- ஒரு குறிப்பிட்ட அருளுரைக்கான பகுதிக்கும் (Ex: Matthew 5:1-10), அந்த நூலுக்கும் (Ex: Matthew) ஏதேனும் தொடர்பு உள்ளதா?
- வரலாறு, கலாச்சாரம், சமூக அரசியல், பொருளாதார ஏற்றத்தாழ்வு நிலை பற்றி அந்த திருமறைப் பகுதியில் உள்ளதா?
- திருமறையின் ஒரு குறிப்பிட்ட பகுதியை படிக்கும்போது, ஆசிரியரின் நோக்கம் இந்த பகுதியில் உள்ளதா?
- இந்த திருமறைப் பகுதி அந்த சூழலில் உருவாகக் காரணம் என்ன?
- சூழலைப் புரிந்து நடப்பதற்கு ஆசிரியர் அறவுரை கூறுவார். தீமை, நன்மை, சரி, தவறு இதைக் குறித்த மறைமுகமாக ஆசிரியர் எழுதியிருப்பார்.
16/07/2026
UNIT-III
Sermon Alalysis/Evaluation
i. எந்த வகையான அருளுரை? (Analysis of the Topic?)
- திருமறை சார்ந்த அருளுரையா?
- திருமொழி சார்ந்த அருளுரையா?
- விளக்கவுரை அருளுரையா?
- வரலாற்று அருளுரையா?
- திருமொழியும், வரலாறும் சார்ந்த அருளுரையா?
- தலைப்பு சார்ந்த அருளுரையா?
- சூழல் சார்ந்த அருளுரையா?
என்று பார்க்க வேண்டும்.
எல்லா அருளுரைக்கும் திருமறை, தலைப்பு, சூழல் போன்ற அனைத்தும் தேவை. அப்படியானால், எந்தவகையான அருளுரை என்பதை எப்படி கண்டுபிடிப்பது.
அருளுரையாற்றுபவர் நான் இதைச் சார்ந்து தான் அருளுரையாற்றுப் போகிறேன் என்று சொன்னால் தான்,கேட்பவர்கள் தெரிந்து கொள்ள முடியும்.
ii. அருளுரை: அமைப்பு சார் பகுப்பாய்வு (Form of the Sermon)
a) தலைப்பு (Title) - அருளுரையில் தலைப்பு இருக்கிறதா?
- நேரடியான தலைப்பா?
- இறையியல் சார்ந்த தலைப்பா?
- கோட்பாடு சார்ந்த தலைப்பா?
- சூழல் சார்ந்த தலைப்பா?
தலைப்பு அருளுரையில் சரியாக கையாளப்பட்டுள்ளதா?
தலைப்பு அருளுரையைக் கேட்பதற்கு ஈர்த்ததா?
b) அறிமுகம் (Introduction)
- அறிமுகம் எவ்வாறு தொடங்கப்பட்டது?
- (கதை சொல்லுதல், எடுத்துகாட்டு, சொந்த அனுபவம், வரலாற்று சூழல் அறிவும், Jock மூலம்)
- அருளுரைக்கான அறிமுகம் அருளுரை உரையில் இருந்தது?
c) அருளுரையின் மையம் (Body of the Sermon)
- மையப்பகுதி எவ்வாறு துவங்கப்பட்டது?
- முதலாவது, இரண்டாவது என்று சொல்லுவதைவிட, தொடர்ச்சியாக பேசுவது நல்லது.
- மையப்பகுதியை தலைப்பிற்கு ஏற்றார்போல் இருந்ததா?
- திருமறையில் உள்ள கருத்துக்கள் வெளிக்கொண்டுவரப்பட்டதா?
- ஒரு அருளுரைக்கு ஒரு மையக்கருத்து (focus) மட்டுமே இருக்க வேண்டும். (எ.கா: நம்பிக்கை என்றால், நம்பிக்கையை மட்டுமே மையப்படுத்த வேண்டும்)
- ஒரு கருத்தை வழியுறுத்த எத்தனை நிகழ்வுகள் கூறப்படுகிறது என்று பார்க்க வேண்டும்.
- மையப்பகுதிக்கு எவ்வளவு நேரம் எடுத்துக்கொண்டார். நேர மேலான்மை மிகவும் முக்கியம்.
- அருளுரை எளியை முறையில் மக்களை சென்றடையும் விதத்தில் அமைய வேண்டும்.
d) நிறைவு (conclusion)
- அருளுரை நிறைவுப்பகுதி வந்து விட்டது என்று மக்களுக்கு சொல்ல வேண்டும்.
- இதுவரை சொன்னதை ஒருமுறை நினைவூட்டலாம்.
- நிறைவுரை குழப்பத்தோடு இருக்கக்கூடாது.
- நிறைவுரையில் புதிய கருத்துக்களை கொண்டு சேர்க்கக்கூடாது.
iii. Content of the Sermon
- தலைப்பு இருக்கிறது, அதற்கு ஏற்ற திருமொழிகள் உள்ளது. இதைதக்கொண்டு கருத்துக்களை (Content) நாம் உருவாக்க வேண்டும்.
- அருளுரை குறிப்புகள் செய்யப்பட்ட Exegesis முறையில் இருந்ததா?
- அருளுரையில் ஒரு சொல் முக்கியமானதாக இருந்தால், அதைப்பற்றிய விளக்கம் கொடுக்க வேண்டும்.
- இறையியல் பிரதிபலிப்புகள் இருந்ததா?
- எந்தவகையான காலக்கட்ட இறையியலுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது?
- திருச்சபை தந்தையர்களின் காலத்தில் எவையெல்லாம் மையப்படுத்தப்பட்டது. திரித்துவம், இறை மகன், தூய ஆவியார்.
- காரல் பார்த் இறையியல் - திருமறையை கேள்வி கேட்பது தவறு.
- லியோ இறையியல் - கேள்வி கேட்கலாம்.
- விடுதலை இறையியல் - கேள்வி கேட்பதைவிட, விடுதலைக்காக போராட வேண்டும்
- சூழல் இறையியல் - சூழல்களின் அடிப்படையில் இறையியல் உருவாக்கப்பட வேண்டும்.
- ஒருவரின் அருளுரை எந்த காலத்தைப் பொருத்தது என்பதை அவரின் அருளுரையிலிருந்தே நாம் காண முடியும்.
23/07/2026
Analysis of the Content
Content to Creat
- i. Exegesis: Text + Theme + Topic
- திருமறையைப் படிப்பதற்கு பல முறைகள் உண்டு.
- திருமறையைப் படிக்கும்போது தலைப்பு சார்ந்து படிக்க வேண்டும். அப்பகுதியை Exegesis செய்ய வேண்டும்.
- அருளுரையின் திருமறைப் பகுதியை அகழ்வுரை செய்ய வேண்டும்.
- ii. Exesesis: ஒரு அருளுரை என்பது ஆழ்ந்த அகழ்வுரையின் அடிப்படையில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
- ஒரு புதிய கருத்தை திருமறைப்பகுதிக்குள் இணைக்கப்படுகிறதா? திருமறைப்பகுதியில் உள்ள மறந்த கருத்தை வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளதா என்று பார்க்க வேண்டும்.
- iii. Word Study: இந்த திருமொழியில் உள்ள இச்சொல்லுக்கு கிரேக்க சொல் என்ன உள்ளது? எபிரெயச் சொல் என்ன உள்ளது? இந்த சொல்லை அக்காலத்தில் ஏன் பயன்படுத்தினார்கள்? எந்த சூழலில் பயன்படுத்தினார்கள் என்று பார்க்க வேண்டும்.
- இவை அனைத்தும் திருமறைப் பகுதியையும், தலைப்பையும் இணைக்கக்கூடியதாக இருக்க வேண்டும்.
- Theological Commantrys: Raymond E. Broun
- Evangalical Commantary: Matthew Hendry
- எந்த இறையியல் கருத்தை மையமாக வைத்து திருமொழியை விளக்க முற்பட்டுள்ளார்.
- Patristice Theology: 'Pater-Fsits
- கி.பி. 1-400 ஆண்டுகள் திரிபுவாத கோட்பாடுகள் வந்தது. இக்கால திருச்சபையின் தந்தைகள் திரிபுவாத கொள்கைகளுக்கு திருமறை சார்ந்து விளக்கம் கொடுத்தார்கள்.
- பாரம்பரிய திருச்சபையும், கத்தோலிக்க திருச்சபையும் சாக்கிரமெந்துகளில் முற்றிலும் வேறுபடுகிறது.
- பாரம்பரியத் திருச்சபையினர், கத்தோலிக்கத் திருச்சபையில் திருவிருந்து எடுக்க முடியாது.
- அருளுரையில் இறையியலின் அழுத்தம் சரியாக கையாளப்பட்டுள்ளதா?
- பயன்படுத்தப்பட்ட இறையியல் கண்ணோட்டத்தின் கூறுபாடுகளை அடையாளம் காண முடிந்ததா? ஒவ்வொரு இறையியலுக்கும் சில கூறுபாடுகள் இருக்கிறது.
- விடுதலை இறையியலுக்கு சில கூறுபாடுகள் உள்ளது? பெண்ணிய இறையியலுக்கு சில கூறுபாடுகள் உள்ளது? எந்த அருளுரையும் இறையியல் கண்ணோட்டம் சார்ந்த அணுகுமுறை மையமாக இருந்ததா?
- திருமறை, இறையியல், சூழல் (Bibilical, Theological, Contextual) இவற்றிற்கு இணைப்பு உள்ளதா? என்று பார்க்க வேண்டும்.
- அருளுரையை அமைக்கும்போது, எந்த மாதிரி அமைக்கப்பட்டது, கேள்வி எழுப்புதல், கவிதை நடை, அருளுரைக் குறிப்பிற்கு எந்த மாதிரியைப் பயன்படுத்துவது என்று சிந்திக்க வேண்டும்.
- அருளுரைக்கு ஆயத்தம் செய்த அனைத்தையும் வரிசையாக முறைப்படுத்தி சொன்னாரா? சொல்லப்பட்டதா?
- Von Rad - OT Theologian
- Analysis of the Communicating of the Sermon
- Voice (குரல் ஏற்ற இறக்கம்)
- Jester (உடல் பாவனை)
- Appeariece (தோற்றம்)
- Language (மொழிநடை)
- Time Keeping (நேர மேலான்மை)
- Analysis of the Relavent
30/07/2026
Homiletics and Hermeneutics
Homiletics - பொருள்கோள் இயல்
Hermeneutics - Interpretation
Luke 24:27John 1:42; 9:9Hebrew 7:2
- இந்த திருமொழிகள் எப்படி விளக்குவது என்பதில் Hermonion என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
- இச்சொல்லின் ஆரம்பம் "Hermes" ஆகும்.
- Hermes என்பது கிரேக்க கடவுள். கடவுள் என்ன சொல்லுகிறாரோ, அதை மக்களுக்கு விளக்குபவர் தான் Hermes.
- Roy Zuke: மானுட புரிந்துகொள்ளுதலுக்கு அப்பார்பட்ட செய்தியை விளக்குபவர் தான் Hermes.
- Bernard Ramn: பொருள்கோல் ஓர் அறிவியல் மற்றும் கலை. இதை கொண்டு தான் திருமறைப் பகுதியைப் புரிந்து கொள்ள முடியும். (Hermeneutics is the Sience and Art. by wich meaning of the Bibilical text Deternubed).
- திருமறையின் பொருள்களை உணர்ந்து கொள்வதற்கு சில கொள்கைகள் வழிவகை செய்கின்றன.
- Hermeneutics: Hermeneutics is the Art and Sience of Preaching.
- Homelitics: Homelitics is the Art and Sience of Interpretation.
- Sience: அறிவியல் கொள்கையை தீர்மானிப்பது அல்ல. திருமறைப் பகுதியின் பின்னால் உள்ள ஆதாரங்களை தொடர்புபடுத்தி, உண்மையை கொண்டு வரும் வழிமுறை ஆகும்.
- Art: It is an Art. It is Also art principals or rules can never be apply mecanicaly but involuve the Skill of the Interpretation.
- பாடல் இலக்கியம்
- இறைவாக்கு இலக்கியம்
- உரைநடை இலக்கியம்
- உவமை இலக்கியம்
Approches/School of Bibilical Interpretation
Eight (8) Approches:
1. உருவக முறை விளக்கம் (Allegorical Method)
2. அறநெறி சார்ந்த விளக்கம் (Moral/Ethical Method)
3. சூழல் சார்ந்த விளக்கம் (Contextual Method)
4. நேரடி விளக்கம் (Litteral Method)
5. விளக்கமளிக்கும் செயல்முறை விளக்கம் (Interpretive Process Method)
6. கண்ணோக்கு விளக்கமுறை (Perspective/Explanation Method)
7. விடுதலை சார்ந்த விளக்கம் (Libaration Method)
8. நவீன காலத்திற்கு பின்வரும் காலத்து விளக்கம் (Post Modern Interpretive Method)
விடுதலை சார்ந்த விளக்கத்திற்குள் இன்னும் பல பிரிவுகள் உள்ளன
- தலித் விடுதலை
- கருப்பின விடுதலை
- குழந்தை விடுதலை
- பெண்கள் விடுதலை
1. உருவக விளக்கமுறை (Allegorical Method)
உருவக விளக்கமுறை என்பது ஒவ்வொரு திருமறைப் பகுதிக்கும் வரலாறு, கலாச்சார, சமூக, அரசியல் பார்வை இருக்கும். இதை விட்டுவிட்டு, அனைத்து திருமறைப் பகுதிகளுக்கும் ஆன்மீக அடையாளத்தில் (ஒழுக்கம்) பொருள்கான முயல்வது தான் இந்த முறை.
Ex: நல்ல சமாரியன் உவமை. சமாரியன் - இயேசு. விழுந்து கிடந்தவர் பாவி. உதவாத பரிசேயர், சதுசேயர் - சாத்தான். சத்திரம் - (Origan)
Ex: பத்து கண்ணிகைகள். எண்ணை - பரிசுத்த ஆவியார் என்று விளக்கம் கொடுப்பார். எண்ணை கொண்டு வந்தவர்கள் புத்திசாளிகள். எண்ணை கொண்டு வராதவர்கள் புத்தி இல்லாதவர்கள் என்று விளக்கம் கொடுப்பது. மணவாளன் ஏன் தாமதமாக வரவேண்டும்?
2. அறநெறி சார்ந்த விளக்கம் (Moral/Ethical Method)
ஒரு திருமறைப் பகுதியை விளக்கும்போது, மானுட மாம்பு சார்ந்து, நீதி சார்ந்து, பொருள் புரிந்துகொள்வது அவசியம். இப்படி விளக்கும்போது அனைத்து பின்னனிங்களையும் ஆய்வு செய்து, அந்த திருமறைப் பகுதியின் பொருளை (சமத்துவம், நீதி) வெளிக்கொண்ர வேண்டும்.
அறநெறி விளக்க முறைக்கு வரலாறு அவசியம் இல்லை.
எ.கா: கண்ணகி மதுரையை எரித்தால். நீதி தவறிய மன்னன் இது மட்டுமே இந்த விளக்க முறையில் அவசியம். அந்த மன்னர் யார்? எங்கு ஆட்சி செய்தார்? என்ற விவரம் தேவையில்லை.
எ.கா: 5 அப்பம், 2 மீன். 5000 பேர் சாப்பிட்டார்கள். கொடுத்தால் ஆசீர் கிடைக்கும். பகிர்ந்தல் (Sharing), தியாகம் (Sacrifice), அனைவரும் வாழ சிறுவன் பரிந்தான் (Living to Sethenes) போன்ற அறநெறி கருத்து உள்ளது.
3. சூழல் சார்ந்த விளக்கம் (Contextual Method)
திருமறைப் பகுதியின் செய்தி மற்றும் தற்கால சூழல் ஆகிய இரண்டு பார்வைகளையும் ஒன்றிணைப்பதே இந்த அணுகுமுறையின் நோக்கம்.
எ.கா: 3000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தார். அவருக்கு ஆண்டவர் செய்தவற்றை, எனக்கு நான் எப்படி உரிமையாக்க முடியும். இரண்டு சூழலையும் பொருத்திப் பார்ப்பது. (Hearer's Context)
4. நேரடி விளக்கம் (Litteral Method)
இந்த அணுகுமுறையை வரலாற்று, இலக்கிய பகுப்பாய்வு முறை (Historical grammatical Method) என்றும் அழைப்பர். அனைத்து அனுகுமுறைகளுக்கும் இந்த அணுகுமுறை தான் அடிப்படை.
நேரடியான விளக்கம் கொள்ளும் ஒரு முயற்சி தான் இந்த முறை.
எ.கா: மனம் திரும்புங்கள் இறையரசு சமீமபாய் இருக்கிறது. அனைத்து கால சூழலிலும் இந்த திருமொழி நிகழ்காலத்தைக் குறித்ததாகவே இருக்கிறது. இந்த திருமொழியில் இவை வெளிப்படையாகவே உள்ளது.
31/07/2026
4.1 Historical - Critical Method
William Tailor:
திருமறையின் துள்ளியமான புரிதலுக்கு, இலக்கண வரலாற்று ஆய்வு முறையை விட வேறு எந்த விளக்கக்கூறுகளும் முக்கியமானது அல்ல.
திருமறை மனித மொழியில் எழுதப்பட்டு இருப்பதால், எழுதப்பட்டதை சரியாக புரிந்துகொள்ள வரலாறு, மொழி நடை, இலக்கண அமைப்பு இவைகளைப் புரிந்து கொள்ளுவது அவசியம்.
5. விளக்கமளிக்கும் செயல்முறை விளக்கம் (Interpretive Process Method)
- மரியாளின் பாடல் ஏன் இயேசு கிறிஸ்துவின் பிறப்பிற்கு முன்பாக வைக்கப்பட்டுள்ளது?
- முதல் உடன்படிக்கையில் அன்னால் பாடிய பாடலை ஆசிரியர் இங்கே வைக்கிறார்.
- ஒவ்வொரு திருமறைப் பகுதிக்கும் ஒரு அனுமானம் நாம் வைத்திருப்போம்.
- விடுதலைப்பயணம் நூலை எடுத்துக்கொண்டால், மோசேயின் விடுதலைப் பணியை, இயேசு கிறிஸ்துவின் விடுதலைப் பணியோடு நாம் ஒப்பிடுகிறோம். ஆனால் இருவரும் வாழ்ந்த காலம் வேறு வேறு.
- ஒரு திருமறைப் பகுதியை நாமாக ஒரு பார்வையில் பார்த்து, அனுமாதித்து பேசுவது தான் விளக்கமளிக்கும் செயல்முறை விளக்க முறைமை.
- பல நேரங்களில் திருமறையே ஒரு பகுதிக்கு விளக்கங்களைக் கொடுக்கும். முதல் உடன்படிக்கை நூலில் சொல்லப்பட்ட ஒரு செய்தியை, புதிய உடன்படிக்கை நூலில் நிறைவு செய்வதாக காட்டும்முறை.
6. கண்ணோக்கு விளக்கமுறை (Perspective/Explanation Method)டு
திருமறைப் பகுதியை குறிப்பிட்ட கண்ணோட்டத்தோடு படிப்பது.
- தலித் பார்வை
- பெண்கள் பார்வை
சமுதாயத்தில் புரையோடிப்போல சில தகவுகள் உள்ளன. அவை நம்மையாகவும், தீமையாகவும் இருக்கலாம். அதை கடவுளின் பார்வையில், திருமறை வெளிச்சத்தில் நன்மைக்காக கொண்டு செல்லும் முறை தான் இந்த கண்ணோக்கு விளக்க முறை.
7. Liberation Based under Pretation Method
- விடுதலை இறையியலுக்கு அடிப்படை விடுதலைப்பயணம் (Exodus) நூல்.
- விடுதலை இறையியலின் தந்தை குஷ்டாவோ குட்டேரியஸ்
- முதலில் பொருளாதார விடுதலை இறையியல்
- நிறம் சார்ந்த விடுதலை இறையியல்
- சாதியம் சார்ந்த விடுதலை இறையியல்
- பெண்ணிய விடுதலை இறையியல்
- தலித் விடுதலை இறையியல் (இந்தியா)
- சூழல் சார்ந்த இறையியல்
- சிறுவர் இறையியல்
- அமெரிக்கா போன்ற நாடுகளில்நிர வேறுபாடு, பொருளாதார வேறுபாடு இன்றும் காணப்படுகிறது.
- பொருளாதார பிரச்சனை, பெண்களுக்கு எதிரான பிரச்சனை, நிறம் சார்ந்த பிரச்சனை உலகம் முழுவதும் இருக்கிறது.
- தலித் விடுதலை இறையியலின் தந்தை AP நிர்மல். நாங்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள். பெண்களின் கடினப்பாகள் ஒரு புறம் என்றால், தலித் பெண்களின் கடினப்பாடுகள் இரண்டு மடங்காக உள்ளது.
- ஒவ்வொரு இறையியல் உருவாவதற்கு பின்பும், அந்த மக்களின் பாதிப்புகள் மறைந்திருக்கிறது.
- சிறுவர் இறையியல் - இஸ்ரவேல் செல்வநாயகம் (தமிழ்நாடு இறையியல் கல்லூரியினால் முன்மொழியப்பட்டது)
- குழந்தைகளைக் கடத்திச் சென்று, உடல் உறுப்புகளுக்காக, ஆபாச படங்களுக்குப் பயன்படுத்துவது, பிச்சை எடுக்க வைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுத்துகிறார்கள்.
- திருமறையில் கடவுள் ஒரு விடுதலையாளர். புதிய உடன்படிக்கையில் இயேசு கிறிஸ்து ஓர் இறையியளலர்.
- லூக்கா 4:16-18 நாசரேத்தூர் அறிக்கை (எசாயா நூலிலிருந்து எழுக்கப்பட்டது) (ஏசாயா 61:1-3)
8. நவீன காலத்திற்கு பிந்தைய கால விளக்கவுரை (Post-Modern)
- இறையியலை பல இறையியளாலர்கள் சொல்லியிருந்தாலும், அவை காலத்திற்கேற்ப மாறுபடும்.
- ஒருவர் உருவாக்கிய இறையியலை மட்டுமே பேசாமால், நம்முடைய சூழலுக்கான இறையியலை நாம் தான் உருவாக்க வேண்டும்.
- நம்முடைய இறையியலை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது அல்ல. சிலர் ஏற்றுக்கொள்ளுவர், சிலர் ஏற்றுக்கொள்ள மாட்டர், சிலர் கேலி செய்வர்.
- ஒரு திருமறைப் பகுதியின் பொருள் அந்த திருமறைப் பகுதியில் உள்ளதா? இல்லை படிப்பவர் அந்த பொருளை உட்புகுத்துகிறாரா? அருளுரையில் இவராக ஒரு கருத்தை திரித்து சொல்லுகிறாரா? என்று பார்க்க வேண்டும்.
- திருமறையை இன்றைய நவீனவாதிகள் இன்றை கால சூழலுக்கு ஏற்றார்போல், மானுட வாழ்வை வழப்படுத்துவது,
- வாழ்வியலும் திருமறை அறநெறியும் ஒன்றாக இருக்க வேண்டும்.
- வாழ்வியலுக்கு பயன்பரும் வகையில் திருமறையை மக்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும்.
Principal of Biblical Interpretation (Importent Question)
- விளக்கவியலின் பொருள்களைக் கற்றுக்கொள்வதினால் மட்டுமே, சிறந்த திருமற விளக்கவியளாலரா யஇயதக
- ஒரு ஆயர் திருமறை விளக்கத்தின்கோட்டுபாட்டு கெல்கை அடிப்படையில்
- திருமறையை புரிந்துகொள்ளுதல் என்பது ஒரே நாளில் நிகழ்வது கடினம். இதுஒரு Long Process.
John Stoff (மூன்று கொள்ளைகள்)
i. Principle of Simplicity
- திருமறைப் பகுதியின் இயல்பான உணர்வைப் பெருதல்.
- திருமறைப் பகுதியின் தெளிவான பகுதியைப் புரிந்துகொண்டால் வேறு எதையும் தேட வேண்யடிய அவசியம் இல்லை.
- எளிமையான முறையில் மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்
ii. Principal of History
- எந்த ஒர திருமறைப் பகுதியாக இருந்தாலும், அதனை வரலாறு, புவியியல், காலாச்சாரம் போன்ற ஆதாரங்களோடு புரிந்து கொள்ள வேண்டும்.
- இசைவுக் கோட்பாடு அல்லது நல்லிணக்கக் கோட்பாடு.
- ஒவ்வொரு திருமறையையும் நாம் விளக்கும்பேது, அந்த செய்தி திருமறையில் வேரு எங்காவது இருக்கும்.
- திருமறையை ஒரு முழு அலகாக (Section) விளக்க, இந்த நல்லிணக்க கோட்பாட்டு முறை பயன்படுத்தப்படுகிறது.
1. நேரடியான விளக்க விதிமுறைகள் (The Litteral Interpretation Principle)
- திருமறை திருமொழியின் நேரடி பொருள், இயல்பான அறிவுக்குப் பொருத்தமாக இருக்கும்போது, வேறு பொருளைத் தேட வேண்டாம்.
- ஒவ்வொரு சொல்லையும், முதன்மை வடிவமான பொருளாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
- ஒரு நூல் ஆசிரியர் உரை ஒன்றை உருவாக்க மொழியைப் பயன்படுத்துகிறார். அந்த திருமறைப் பகுதியைக் கையாளும்போது, பயன்படுத்தப்பட்டுள்ள சொற்களை அடையாளம் காண்பதற்கும், ஒரு வாக்கியத்தில் அவை எவ்வாறு தொடர்பு படுத்தப்பட்டுள்ள உள்ள என்பதற்கும் அருளுரையாளர் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் Rando/ph.
- வாக்கியம் என்பது முழுமையான சொற்களைத் தரும் தொகுப்பு.
- திருமறைப் பகுதியை விளக்குபவர், திருமறை ஆசிரியர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்த சொற்களின் பயன்பாட்டிலோ, அல்லது அவற்றின் பொருளிலோ மாற்றங்கள் ஏற்பட்டிருந்தால், தற்போதைய பயன்பாட்டையும், பொருளையும் அவர் கவனத்தில் கொள்ள வேண்டும்.
- எ.கா: ஆவி (Sprit). இந்த சொல் திருமறையில் பல முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே, அது எந்தவகையான சூழல் என்பதைக் கவனித்து அதற்கு ஏற்ப பொருள்களை நாம் கண்டுபிடிப்பது அவசியம்.
- தமிழ் திருமறையில் பல மொழிபெயர்ப்புகள் உள்ளன. (Ex: Hendry Bower, மோனகன், இராஜரீகம், திருவிவிலியம்) ஆங்கிலத் திருமறையில் எண்ண முடியாத அளவு மொழிபெயர்ப்புகள் உள்ளன. இந்த மொழிபெயர்ப்புகள் மூல மொழியோடு ஒத்துப்போகுமா? என்றால், அது கேள்விக்குறிதான்.
- மூல மொழியில் உள்ள சொற்களின் பொருள், அவற்றின் இலக்கணம், வாழ்க்கை அமைப்பு, சூழல் போன்றவற்றை ஆராய்வது அவசியம்.
2. சூழல் சார்ந்த விதிமுறைகள் (Contextual Principle)
- திருமறைப் பகுதியோடு இணைந்து வருவது தான் சூழல் சார்ந்த (Contextual) பகுதி.
- Immidite Context, Passage Context, Around Context
- திருமறைப் பகுதியும், சூழலும் அந்த நூலின் (மத்தேயு, மாற்கு....) நோக்கத்திற்கு ஒத்திருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
- H.H York and Berk Decker - இலக்கியம், குறிப்பாக திருமறை நூல்களைப் புரிந்துகொள்ள சூழல் மிகவும் முக்கியம். சூழலைப் புரிந்துகொண்டால் தான் ஆசிரியரின் உண்மையான நோக்கத்தை நாம் அறிய முடியும்.
- மேடை அருளுரையாளர்கள் பலர் சூழலைப் பார்ப்பதே இல்லை. (Evangalizt)
- அருளுரையாளரும், மக்களும் திருமறைப் பகுதியின் வரலாற்றுப் பின்னணியத்தை கவனத்தில் கொள்வது அடிப்படை ஆதாரம் (Basic Principal).
- ஒவ்வொரு திருமறைப் பகுதியின் செய்தியும், ஆசிரியர் காலம், படிப்பவரின் சூழல், யார்? யாருக்கு? ஏன்? எதற்கு? என்று படிக்க வேண்டும்.
- கலாச்சார, சமயம் சார்ந்த பின்னனிகளை புரிந்துகொள்வது அவசியம்.
- யூத திருமணம், பஸ்கா பண்டிகை, விருத்தசேதனம் போன்றவற்றிற்கு சமயம் சார்ந்த வரலாறு என்ன?
- பஸ்கா பண்டிகை யூதர்களின் விடுதலைத் திருநாள். இதை இன்று திருச்சபையில் அன்பின் விருந்து ஐக்கிய விருந்து என்று அனுசரிக்கிறார்கள்.
- யூதர்கள் விருதசேதனம் பண்ண வேண்டும் என்பது திருமறை சட்டம். இதற்கு மாறாக பவுல், புற இன மக்கள் உங்கள் இருதயத்தை விருத்தசேதனம் பண்ணுங்கள் என்று சொல்லுகிறார்.
3. படிப்படியான வெளிப்பாட்டுக் கோட்பாடு (The Progresive Revelation Principle)
- திருமறையில் கடவுளின் வெளிப்பாடு இயல்பாகவே படிப்படியாக அமைந்திருக்கிறது. (எபிரெயர் 1:1)
- இயேசு கிறிஸ்து கடவுளின் இறுதி வெளிப்பாடு. கிறிஸ்துவில் கடவுளின் வெளிப்பாடு.
- படைப்பு, நீதித்தலைவர்கள், ஆசாரியர்கள், வாக்கு, இறைவைாக்கினர் இப்படி பலர் மூலமாக கடவுள் தம்மை வெளிப்படுத்தினார்.
- எபேசியர் 3:1-6 திருச்சபை பற்றிய முக்கிய கோட்பாடுகளை குறிப்பிடுகிறார்.
- இறையியலாளர்கள், இயற்கையின் வாயிலாக வெளிப்படும் இறைவனின் பொதுவான வெளிப்பாட்டையும், இயேசு கிறிஸ்துவின் வாயிலாக வெளிப்படும் சிறப்பு வெளிப்பாட்டையும் (Unick Revelation) வகைபடுத்தியுள்ளனர்.
- முதல் உடன்படிக்கை, புதிய உடன்படிக்கையில் வெளிப்படுத்தப்பட்டு உள்ளது. புதிய உடன்படிக்கை, முதல் உடன்படிக்கையில் மறைந்து உள்ளது. இவை திருச்சபையின் தொடக்ககால தலைவர்களின் கருத்து.
13/08/2026
4. திருமறையின் இசைவுக் கோட்பாடு (The Harmony of the Scripture)
- திருமறையைக் கொண்டே திருமறையை விளக்கும் முறை. (Analogy of the Scripture)
- திருமறையின் ஒரு உண்மையைப் புரிந்துகொள்ள இயலாத போது, அது குறித்து தெளிவுபடுத்தும் திருமறையின் பிற பகுதிகளை நாடுவது சிறப்பாக (அறிவுப்பூர்வமாக) இருக்கும்.
- திருமறையின் திருமொழிகளுக்கு இடையிலான முரண்பாடுகள் போல தோன்றுபவற்றை தீர்த்துக்கொள்ள திருமறை பொருள் விளக்கக் கோட்பாடுகளை சரியாக பயன்படுத்த உதவும்.
- Grant R. Osborn: Hermonutical Spiral என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
- திருமறை சிக்கல் நிறைந்தது. அதை சரியாக புரிந்துகொள்ள, விளக்க Hermonutic உதவுகிறது.
- திருமறையின் கோட்பாடுகளை (Bibilical Doctrince) ஒரே திருமொழியை மையமாக வைத்து புரிந்துகொள்ள முடியாது. மாறாக, அந்தக் கருத்தைப் பற்றிக் கூறும் வேறு திருமொழியையும் வைத்துப் பார்க்க வேண்டும் என்று Grant R. Osborn கூறுகிறார்.
5. இலக்கிய வகைகளின் அடிப்படையில் திருமறையை விளக்குவதற்கான கோட்பாடுகள் (The Genre Principles)
- திருமறையில் பல இலக்கிய வகைகள் உண்டு. அவை: வரலாறு, உரைநடைகள், இலக்கியங்கள், பாடல்கள், அப்போகரிப்பா, நற்செய்தி, நிருபங்கள், உவமைகள்.
- வரலாற்று நூல்களுக்கு சில ஒழுங்கு உண்டு, பாடல்களுக்கு ஒரு ஒழுங்கு உண்டு. எந்த பிரிவு என்ற அறிந்து கொண்டால் தான், அதன் அடிப்படையில் நாம் அதை படிக்க முடியும்.
- Yark and Deot Decter: விடுகதைகள்: ஒவ்வொரு நூலின் ஆசிரியரும் தேர்ந்தெடுத்துள்ள வடிவம் மற்றும் வகையை முழுமையாக புரிந்து கொள்ள அருளுரைஞருக்கு அவற்றைப்பற்றிய ஆழ்ந்த புரிந்து கொள்ளுதல்தேவை.
- Stein: இலக்கிய வகை: ஒற்றொன்றையும் விளங்கிக் கொள்ள, அதற்கான விளக்க விதிகளை அறிந்திருப்பது அவசியம்.
- கவிதைகள், பாடல்கள்: திருமறையில் உள்ள பாடல்கள் அனைத்திற்கும் யூதர்களே ஆசிரியர்கள். யூதக் கவிதைகள் தங்களுக்கே உரிய சிறப்புப் பண்புகளைக் கொண்டவை.
- தமிழர்களுக்கு திருக்குறள் சிறந்த இடம் பிடித்துள்ளது. அதைப் புரிந்து கொள்ள விளக்க உரைகள் தேவை. அதைப்போலவே திருமறையில் உள்ள பாடல்களும்.
- திருமறையில் ஒருவர் பாடலை மற்றவர்கள் பாடியிருப்பார்கள். அதற்கான காரணம் என்ன என்று ஆராய வேண்டும்.
- உதாரணம்: அன்னாளின் பாடலை மரியாள் பாடியிருக்கிறார்கள். இருவரும் வாழ்ந்த காலம் வேறு வேறு.
- இறைவாக்கினர் இல்லாத காலத்தில் அன்னாளின் பாடல் சிறந்த இறைவாக்கினரான சாமுவேலை உருவாக்கினது. மரியாளின் பாடல் அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டு இருந்த மேசியாவை உருவாக்கியது.
- பாடல்களில் உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
- உருவக மொழிநடை, உருவகப் பேச்சின் பரவளான பயன்பாடு ஆகியவை கவிதை வடிவத்தின் மற்றொரு சிறப்பம்சம்.
- எ.கா: வெள்ளையடிக்கப்பட்ட கல்லரை. ஒன்றுக்கும் உதவாதவர் என்பதை சுட்டிக்காட்ட, கல்லரையை இயேசு பயன்படுத்துகிறார்.
- திருப்பாடல்கள், இனிமைமிகு பாடல்களில் இவற்றை அதிகம் பார்க்க முடியும்.
- உருவ மொழிநடை, உருவகப் பேச்சக்களில் பரவான பயன்பாடு கவிதை வடிவத்தின் மற்றொரு சிறப்பம்சம். எபிரெய கவிதைகள் எண்ண இணையாக்கத்தின் அடிப்படையில் அமையும்.
14/08/2026
"Qoheleth" - கவிதைகள்
- திருப்பாடல்கள்
- நீதிமொழிகள்
- சபை உரையாளர்
- இனிமை மிகு பாடல்கள்
- சாலொமோனின் ஞானம்
- சீராக்கின் ஞானம்
எபிரெய கவிதைகளின் மூன்று அடிப்படை வகைகள்
1. பொருள் ஒப்புமை இணைநடை (Synoonymous Parablism)
2. முரண் இணைநடை (Antithetic Parablism)
3. கூட்டு இணைநடை (Synthetic Parablism)
1. பொருள் ஒப்புமை இணைநடை (Synoonymous Parablism)
ஒரு திருமறைப் பகுதியில் (ஒரு திருமொழியில்) முதல் வரியில் (முதல் பகுதியில்) உள்ள சிந்தனை இரண்டாவது, மூன்றாவது முறை திரும்பத் திரும்ப வரும்.
எ.கா: திருப்பாடல்கள் 1:1, 24:1, 148:2
ஒரே பொருளுள்ள செய்தி மீண்டும், மீண்டும் இடம் பெறும்.
2. முரண் இணைநடை (Antithetic Parablism)
திருமறைப் பகுதியின் முதல் பகுதி (முதல் வரி) அதே பொருளில் வராமல், தலைகீழாகவோ, முரண்பாடாகவோ வரும்.
எ.கா: திருப்பாடல்கள், ஞான இலக்கியங்கள்
- துன்மார்க்கர் - நீதிமான்
- ஏழையர் - செல்வர்
- பாவிகள் - தூயர்கள் (புனிதர்கள்)
3. கூட்டு இணைநடை (Synthetic Parablism)
ஆசிரியர் ஒரு சிந்தனையை மீண்டும், மீண்டும் சொல்லுவார். நேரடியாகவும், மறைமுகமாகவும், உவமைகள் மூலமாகவும் சொல்லுவார். எப்படி சொன்னாலும், பொருள் ஒன்றே.
இந்த மூன்று அடிப்படை வகைகளுக்கும் திருப்பாடல், நீதிமொழிகள் உதாரணமாக கூறலாம் என்று ஏசாயா, ஜெர்மன் ஆஸ்பான், குரூஸ் மலினா போன்றோர் சொல்லுகிறார்கள்.
Stein
திருமறை ஆசிரியர்கள் (ஞான இலக்கியங்களின் எழுத்தாளர்கள்) சித்திரத் தன்மை வாய்ந்த, உணர்ச்சிகரமான மொழியைப் பயன்படுத்தி, தங்களின் எண்ணங்களை வெளிப்படுத்த முற்பட்டுனர்.
இவர்கூற்றப்படி எபிரெய கவிதைகளுக்கு மேலும் இரண்டு பிரிவுகள் உள்ளன.
4. Acrostice
ஒவ்வொரு நூலின் முதல் எழுத்து (திருமொழியின் முதல் எழுத்து) கடைசி எழுத்துக்கள் அகரவரிசைப்படி எழுதப்பட்டு இருக்கும்.
எ.கா: திருப்பாடல்கள் 119,9,10,25, புலம்பல்
5. சாபமிடும் திருப்பாடல்கள் (Impricatory Psalm)
சாபம்: ஒருவர் செய்யும் அநீதியை, தீமையை தட்டிக்கேட்க இயலாதபோது, யாரும் தனக்கு ஆதரவு குரல் கொடுக்காத சூழலில் சாபம் இடுவார்கள். (காரணமில்லாமல் இட்ட சாபம் பதிக்காது)
(வீட்டைக் கல்லில் மோதியடிக்கிறவன் பாக்கியவான், அவன் வீடு பட்சிக்கக்கடவது) திருப்பாடல்கள் 3,12,35,139
ஆசிரியரின் கசப்பு, தன்னை நியாயப்படுத்திக் கொள்ளும் நோக்கம் (ஏக்கம்) இவைகளே கவிதையாக வெளிப்படுகின்றன.
இந்த ஆதங்கத்தின் கடைசி வெளிப்பாடு, மன்றாட்டு (கடவுளிடம் முறையிடுதல்)
கவிதை பொருள்கோள் கோட்பாடு (Hermenutic Principal of Poetey)
- திருப்பாடல்கள், திருமறையின் கவிதைகள் அனைத்தும் வழிபாட்டு மன்றாட்டுகள் என்று Walter Proke Man கூறுகிறார்.
- 1. திருமறையின் பாடல்களை தனித்தனியாக அல்லாமல், சிந்தனை அளவுகளின் அடிப்படையில் பொருள் உணருவது.
- 2. திருமறையின் பாடல்கள் அனைத்திற்கும் ஒரு வரலாற்றுச் சூழல் உண்டு. அந்த வரலாற்றுச் சூழலை அருளுரையாளர் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.
- திருப்பாடல்கள் எட்டு (8) வகைகலாகப் பிரிக்கப்படுகிறது.
- Book: செ. ராசா. திருப்பாடல் ஓர் அறிமுகம்.
- 3. அரசவைத் திருப்பாடல்: அரசர் வழிபாட்டு மறைக்கு வரும்போது, அரசர் அரண்மனைக்கு செல்லும்போது பாடப்படும் பாடல்.
- 4. இஸ்ரவேலர்களுக்கு கடவுள் மட்டுமே அரசர். சவுலை அருள்பொழிவு செய்யும்போது, தளபதி என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது.
- 5. அபாரமான கலைத்திறன், தனித்துவமான இணைத்தன்மை, படிமங்களின் அலகினை கவனித்து பொருள் விளக்க வேண்டும்.
- 6. ஒவ்வொரு பாடலுக்குள்ளும் பல செய்திகள் உள்ளன.
- எ.கா: ஒரு திருப்பாடலை எடுத்துக்கொண்டால் முதல் மூன்று திருமொழிகள் ஒரு செய்தியையும், 4-7 வரை உள்ள திருமொழிகள் வேறு ஒரு செய்தியையும் சொல்லும்.
- திருப்பாடல்கள் 31:1-5 உதவி கோறுதல்
- 6-8 பாக்கள் - நம்பிக்கை
- 9-13 பாக்கள் - முறையிடுதல்
- கருத்துக்கள் மாறுபடும், ஆனால் சூழல் மாறுபடாது.
7. கவிதைகள், பாடல்கள் புதிய உடன்படிக்கையிலும் (NT) உண்டு
முதல் உடன்படிக்கை, புதிய உடன்படிக்கை இரண்டையும் இணைத்து பார்க்கும்போது, சமுதாயம் சார்ந்த கருத்தா? தனி மனிதன் சார்ந்த கருத்தா என்று பார்க்க வேண்டும்.
Assignment
1. அருளுரையின் வகைகள்: ஏதேனும் ஒன்றை ஆயத்தப்படுத்த விதிமுறைகள்
1. அருளுரையின் வகைகள்: ஏதேனும் ஒன்றை ஆயத்தப்படுத்த விதிமுறைகள்
2. சூழல் சார்ந்த இறையியலும், அருளுரையும்: பெண் விடுதலை அருளுரை
3. அருளுரைக்கான அகழாய்வு
4. அருளுரையும், பொருள்கோள் இயலும் (Hermonutics - Homolitics)
Genre
அருளுரை 5 defenition
5. திருச்சபை ஆண்டு (Church Year) மற்றும் திருமறைப் பகுதி, அருளுரைக் கூறுபாடுகள்
Note: 5-6 பக்கம்
10 Footnote
10 Bibiliography
Group 5
Samuel, Glady, Jeba Kumar, Praveen
20/08/2026
ஞான இலக்கியங்கள் (Wisdom Litterature)
- திருமறையில் மிகவும் குறைந்த அளவே அறியப்பட்டிருக்கிற வகைகளில் இந்த ஞான இலக்கியங்களும் உண்டு.
- Ex: யோபு, நீதிமொழிகள், சபை உரையாளர்.
- Ex: சீராக், சாலொமோனின் ஞானம் - அப்போகரிப்பா நூல்கள்
- ஞான இலக்கியங்களிலிருந்து சொப்ப அருளுரைகளே தயார் செய்யப்பட்டுள்ளன.
- ஞான இலக்கியங்களிலிருந்து அருளுரையாற்றப்பட்டாலும், அந்த திருமொழிகள் பெரும்பாலும் தவறாகவே கையாளப்பட்டுள்ளன.
- வெருமனே, மதச்சார்பற்ற வாழ்க்கை முறையை ஆதரிப்பதாக மாறிவிட்டது.
- இவ்வுலகம் சார்ந்ததாக மட்டுமே அருளுரையாற்றப்படுகிறது.
- George Fohrer: உலகை வசப்படுத்தவும், வாழ்க்கையின் பல்வேறு சிக்கல்களையும், வாழ்க்கையை முழுமையாக கையாளவும் மேற்கொள்ளப்படும் விவேகமான, நம்மால் நன்கு பரிசீலிக்கப்பட்ட அனுபவம் வாய்ந்த திறமையான செயல்பாடு.
- உலக துன்பம், பிரச்சனை, கவலைகளிலிருந்து மனிதன் தப்ப முடியாது. இவற்றின் மத்தியில் எப்படி மனிதன் வாழ வேண்டும் என்று ஞான இலக்கியங்கள் கற்றுக்கொடுக்கிறது.
- ஞானத்தின் இலக்கு என்பது கடவுளின் படைப்புகளை முறையாக பயன்படுத்துவதும், நிகழ்கால வாழ்வை அவரது பராமரிப்பில் மகிழ்ச்சியாக இருப்பதுமே ஆகும்.
- எனவே, ஞான இலக்கியங்கள் உலகை மையமாக வைத்து வாழ்வதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்கிற தவறான புரிந்து கொள்ளுதல் உண்டு.
- ஞான இலக்கியங்கள் ஒவ்வொரு மனிதனுடைய வாழ்விலும், மிகப்பெரிய மதிப்புமிக்க மாற்றத்தை உருவாக்குவதற்கான ஓர் இலக்கிய வகை ஆகம்.
- திருமறையில் ஞான இலக்கியங்கள் என்பது புதிதாக உருவான ஒன்று அல்ல.
- பண்டைய கால சமயங்கள் அனைத்தும் மனிதருடைய வாழ்வு சார்ந்த பிரச்சனைகளை சமாளிக்க முயல்வதால், அதன் விளைவாக ஞான இலக்கியங்கள் தோன்றின.
- Religion in Life: வாழ்விற்கு சமயம் ஏன்?
- நிச்சயமில்லாத இந்த உலகத்தில், கடவுள் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ளுவார் என்ற நம்பிக்கையைக் கொடுப்பது தான் சமயம்.
- ஞான இலக்கியங்களில் சமயங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
- எகிப்து, மொசப்பத்தாமியா பகுதிகளில் அவர்களுக்கான ஞான இலக்கியங்களைக் கைக்கொண்டு இருந்தனர். இவர்களிலிருந்து இஸ்ரவேலர்கள் தங்களுக்கான சில மாற்றங்களைச் செய்து, அவற்றில் யாவே இறையியலைச் சேர்த்து ஞான இலக்கியங்களை மறுவுறுவாக்கம் செய்தனர்.
- சுமேரியா, பாபிலோனின் ஞான இலக்கியங்கள் மிகப்பழமையான ஆசிய ஞான இலக்கியங்கள் ஆகும்.
- ஞான இலக்கியங்கள் அனைத்தும் கடவுள் ஒருவரே என்று சொல்லுகிறது.
ஞான இலக்கிய அருளுரை
1. ஞானத்தின் எல்லை
- ஞானத்திற்கு எல்லைகள் உண்டு என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். ஞானம் இருந்தும், அது முறையாக பயன்படுத்தப்படும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.
- எ.கா: கிழக்கு நாட்டு ஞானி என்று சாலொமோன் அழைக்கப்பட்டாலும், கடவுளிடமிருந்து தூரம் போனதிலிருந்து அவரது ஞானம் அவருக்கு உதவவில்லை.
- கீழ்ப்படிதலுடன், கடவுளுடைய விருப்பத்திற்கு உட்படுத்தப்படும்போது மட்டுமே ஞானம் தனது சரியான நோக்கத்தை அடைகிறது.
2. திருமறையின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிட்டு புரிந்து கொள்ள வேண்டும்.
ஒன்றை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு ஒரு கோட்பாட்டை உருவாக்குவது சரியல்ல.
3. ஞான இலக்கியங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டால், அவைகள் பொருள் சார்ந்த வாழ்க்கை முறையை நியாயப்படுத்தக்கூடும். ஆனால், சரியாக பயன்படுத்தப்பட்டால், அன்றால் வாழ்க்கைக்குத் தேவையான நடைமுறை ஆலோசனைகளை கொடுக்கும்.
எ.கா: பொருள்கள் மட்டுமே ஆசீர்வாதம் (Meterial Blessing) என்று ஞான இலக்கியங்கள் கூறும். ஆனால், உண்மையில் அது மட்டுமே ஆசீர்வாதம் அல்ல.
4. விதிகளாகவோ, வாக்குறுதிகளாகவோ ஞான இலக்கியங்களை நாம் கருதக்கூடாது. அவை, மனித நடத்தையைப் பற்றிய வெளிப்பாடுகள் ஆகும். எனவே, அறநெறி சார்ந்த வாழ்விற்கான வழிகாட்டுதலாகவே ஞான இலக்கியங்களைப் பார்க்க வேண்டும்.
5. ஞான இலக்கியங்கள் திருமறைக்கு மட்டுமே தனித்துவமானது அல்ல. மற்ற சமய, கலாச்சார நூல்களிலும் ஞான இலக்கியங்கள் உண்டு. அப்படியானால், மற்ற சமய ஞான இலக்கியங்களும், திருமறையின் ஞான இலக்கியங்களும் ஒன்று அல்ல. நம்முடைய ஞான இலக்கியங்கள் வெறும் மனித ஞானத்தோடு தொடர்புடையது மட்டும் அல்ல, நம்முடைய ஞான இலக்கியங்கள் தூய ஆவியாரின் வழிநடத்துதலின் பெயரிலும், திருமறையின் வெளிப்பாடும் (Revalation of Scripture) சார்ந்த ஒன்று என்று Stein கூறுகிறார்.
6. ஞான இலக்கியங்களில் இருந்து வரும் அருளுரைகள், கிறிஸ்துவே கடவுளின் ஞானம் என்று பவுல் கூறுகிறார். அப்படியானால், ஞானத்தின் ஆசிரியர் இயேசு கிறிஸ்து என்று Roland E. Murophy கூறுகிறார்.
7. ஞான இலக்கியங்களை அருளுரையாற்ற முயற்சிக்கும்போது, ஒவ்வொரு திருமொழியிலும் (அருளுரைக்கான பகுதி) பொதிந்திருக்கின்ற (மறைந்திருக்கின்ற) அனுபவம், ஞானம் இவற்றை பகுப்பாய்வு செய்து பார்க்க வேண்டும்.
இவை வாழ்வின் அனுபவத்திலிருந்து சொல்லப்படுகிறதா? கடவுளின் வெளிப்பாட்டால் சொல்லப்படுகிறதா? என்று பகுப்பாய்வு செய்து பார்க்க வேண்டும்.
8. திருமறையின் ஒட்டுமொத்த சூழலின் அடிப்படையிலும், குறிப்பாக அது அடங்கியிருக்கும் பிரிவு, திருமொழி சார்ந்தும் நாம் பார்த்து அருளுரையாற்ற வேண்டும்.
9. கிறிஸ்துவின் போதனை, புதிய உடன்படிக்கை நூலின் மற்ற ஆசிரியரின் கருத்துக்களோடு அறநெறி சார்ந்தவைகளோடு உற்றுநோக்க வேண்டும்.
10. இவை எல்லாவற்றிற்கும் மேல், நாம் அருளுரையாற்றும் மக்களின் வாழ்க்கை சூழலுக்கு பொருத்தமாக இணைத்து அருளுரையாற்ற வேண்டும்.
வாழ்க்கை சூழல் இடத்திற்கு இடம் மாறுபடும்.
பவுல் எல்லா வீடுகளுக்கும் சென்று உண்வு உண்ண வேண்டும் என்று ஒரு இடத்தில் சொல்லுவார். எல்லாருக்கும் விருத்தசேதனம் தேவையில்லை, யூதன் விருத்த சேதனம் பண்ணினால் போதும்.
ஒரு கருத்து, ஒரு பழக்கம் ஒரு இடத்தில் நடைமுறையில் இருக்கும்போது, அதை பாவம் என்று நம்மால் சொல்ல முடியாது.
21/08/2026
இறைவாக்கு இலக்கியம் Prophetic Literature
- திருமறையில் நான்கில் ஒரு பகுதி இறைவாக்கு நூல்களாக இருக்கின்றன. சுமார் 22 சதவீத இறைவாக்கு பகுதிகள் உள்ளன.
- சுமார் 500 ஆண்டு கால வரலாற்றை உள்ளடக்கியது.
- இஸ்ரவேலைக் குறித்த இறைவாக்கு மட்டும் அல்ல, மற்ற நாடுகளைக் குறித்த இறைவாக்குகளும் திருமறையில் உள்ளது.
இறைவாக்கினர் யார்?
- Three Hebrew Word: Hozeh, Roeh, Nabi
- Hozeh - A Seer (Vissionary, தரிசனம் காண்பவர்)
- Roeh - A Seer (Vissionary, தரிசனம் காண்பவர்)
- Nabi - மற்றொருவரின் முன்னால் நின்று பேசுபவர். யாவே கடவுளோடு பேசுபவர்.
- கடவுளின் சார்பாளராகவும், மக்களின் சார்பாளராகவும் இறைவாக்கினர்கள் செயல்படுவர்.
- கடவுளின் வாக்கு இதுவே {Koh Amar Yahweh (Hebrew) (Thus Says the Lord)} என்பது இறைவாக்கினர்களின் முக்கிய கூற்று.
- Forth Teller - எதிர்காலத்தை சொல்லுபவர். எனது செயல்பாடுகள், சூழலைப் பார்த்து, என்னுடைய எதிர்காலத்தைச் சொல்லுபவர்.
- எ.கா: ஏழைகளை ஒரு ஜோடு செருப்பிற்கு விற்கிறாய், எலும்புகளையும் நீ விடுவது இல்லை. இஸ்ரவேல் நாட்டின் பாசான்களே என்று திருமறையில் இறைவாக்கு உரைத்திருக்கிறார்கள்.
- Fore Teller - முன்னறிவிப்பவர்.
- எ.கா: அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுபவர்கள்.
இறைவாக்கு நூல்களின் பொருள்கோள் கருவி (Hermenutical Tool)
Point 1
- அருளுரைக்காக தெரிவு செய்யப்பட்ட திருமறைப் பகுதியின் தன்மையைத் தீர்மானிக்க வேண்டும். அது ஒரு இறைவாக்காக இருந்தால், அதற்கான நிறைவேற்றத்தை திருமறைப் பகுதிகளில் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.
- அது கவிதையாக, பாடலாக இருந்தால் பாடல்களை (Poetry) எப்படி அருளுரையாற்றுவோமோ இந்த விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
- அது குறியீட்டு (Symbalic) செயல்களாக இருந்தால், அந்த செயலின் பொருளின் மீது கவனம் செலுத்த வேண்டும்.
- உருவகமாக சொல்லப்பட்டால் அந்த உருவகம் (Image) எதைக் குறிக்கிறது என்று பார்க்க வேண்டும்.
- எ.கா: தலை - வெண்கலம், கால் - களிமண்.
- உருவகங்களை விளக்கப்படுத்தும் போது தெளிவான விளக்கம் வேண்டும்.
Point 2
- இறைவாக்கு நூல்களில் கிறிஸ்துவை மையமாக்க கொண்ட கருத்துக்களை கவனமாக கையாள வேண்டும்.
- எல்லா இறைவாக்கு நூல்களிலும் கிறிஸ்துவின் வெளிப்பாட்டை நாம் பார்க்க முடியும். மீட்பர் இயேசு, ராஜாவான இயேசு என்ற இரண்டையும் பார்க்க முடியும்.
- Hebrew - மேசியா
- Greek - கிறிஸ்து
- நம்பிக்கை கொடுப்பதற்காக கடவுள் வருவார் என்ற செய்தியை இறைவாக்கு நூல்கள் கொடுக்கிறது.
- வானமும் பூமியும் உள்ளது, புதிய வானம் புதிய பூமி வரும் என்று சொல்லப்பட்டுள்ளது.
- அரசு இருக்கிறது, விண்ணரசு வர வேண்டும் என்று உள்ளது.
- நீதி, சமத்துவம், அன்பு இப்போது உள்ள அரசிடம் இல்லை. எனவே, நீங்கள் எங்கள் அரசு அல்ல. எங்களுக்கான மேசியா, அரசர் வருவார் என்று நம்பிக்கை கொடுத்தவர்கள் இறைவாக்கினார்கள்.
Point 3
- அருளுரையின் வடிவத்தையும், மனநிலையையும் மூல உரையின் வடிவம் மற்றும் மனநிலைக்கு ஏற்ப நியாயமான அளவிற்கு மாற்றி ஆயத்தம் செய்ய வேண்டும்.
03/09/2026
Theology for Preaching
1. Patristic Theology
Dogma
Apologetics
Pater, Patre - Father
Latin - PaterGreek - Patre
Patristic - Chruch Father
திருச்சபை தந்தையரின் காலம் (Patristic Period) (கி.பி. 100-450)
கிழக்குப்பகுதி: அத்தனாசியஸ், ஜான் கிரிஸ்தோஸ்தம், ஆரிகன் - கிரேக்க மொழி பேசும், கிழக்கு பகுதியில் வலிமை வாய்ந்தவர்கள்.
மேற்கு (Westin): இலத்தின் மொழி பேசுபவர்கள். அகஸ்டின் ஆப் கிப்போ, தெர்த்துள்ளியன், செயிண்ட் அம்புரோஸ், செயிண்ட் ஜெரோம்.
Dogma - Doctrines
- திருச்சபை தந்தையர் உருவாக்கின கோட்பாடுகள்
- பாவம், மீட்டு, விடுதலை குறித்த கோட்பாடுகள் உருவாக்கப்பட்டது.
- மொந்தேனு - ஞானக் கோட்பாடு. மனித அறிவு மட்டுமே போதும்.
- அரியு கோட்பாடு - கிறிஸ்து ஒரு மனிதனே. அவர் கடவுள் அல்ல.
- அரியுவின் கோட்பாடு மூலமாகவே நிசேயா மாமன்றம் உருவானது. (பற்றுறுதி உருவாக்கப்பட்டது)
- மூன்று பற்றுறுதி அறிக்கை
- திரித்தூதுவர் பற்றுறுதி அறிக்கை
- நிசேயா பற்றுறுதி அறிக்கை
- அத்தனாசியஸ் பற்றுறுதி அறிக்கை
- திருச்சபைத் தலைவர்களின் கருத்துக்களை, இது தான் சரி என்று ஆதாரங்களை கொடுப்பவர்கள்.
- திருச்சபைத் தலைவர்களின் கோட்பாடுகளை எதிர்த்துபல திரிபுக் கோட்பாடுகள் உருவானது. திரிபுக்கோட்பாடுகளை உருவாக்குபவர்களுக்கு, திருச்சபைத் தலைவர்களின் கருத்துக்ளே உண்மையானது என்று சொல்லுபவர்கள் தான் இவர்கள்.
திருச்சபைத் தந்தையர் காலத்தில் இருந்த முக்கிய இறையியல் கருத்து (Theological Themes of Patristic Period)
i. திரித்துவம்
- மூவொருக் கடவுளைப் பற்றிய கோட்பாடுகள்.
- யூத காலத்திற்கு பின்பு, திரித்தூதுவர் காலம் வந்தது.
- இயேசு கிறிஸ்துவோடு வாழ்ந்த சீடர்களின் காலம் தான் திரித்தூதுவர்களின் காலம்.
- திரித்தூதுவர்களின் காலத்திற்கு பின்பு, திருச்சபைத் தலைவர்களின் காலம் உருவாகிறது.
- ஓரிறைக் கோட்பாட்டை பின்பற்றி மக்கள், கிறிஸ்து உயிர்த்தெழுந்த பின்பு, திரித்தூதுவர்களின் காலத்தில் கிறிஸ்துவையும் கடவுளாக ஏற்றுக்கொண்டார்கள்.
- கிறிஸ்துவும் கடவுள் என்று உறுதிப்படுத்த அனைத்து சீடர்களும் கொலை செய்யப்பட்டார்கள்.
- இதை உறுதிப்படுத்த திருச்சபைத் தலைவர்கள் கிறிஸ்துவும் கடவுள் என்று சொல்லும் கோட்பாடுகளை உருவாக்கினார்கள்.
- இதன் அடிப்படையிலேயே பெற்றவர், கிறிஸ்து, தூய ஆவியார் என்ற திரித்துவக் கடவுள் என்ற நிசேயா பற்றுறுதி அறிக்கை உருவானது.
ii. கிறிஸ்தியல்
- அதனாஸியஸ் போன்ற தலைவர்கள் இயேசு கிறிஸ்து எவ்வாறு கடவுள் மற்றும் மனிதத்தன்மை உடையவராக இருந்தார் என்று விளக்கினார்.
- Dualistic Idda of God and Christ.
- கிறிஸ்து கடவுளுமானவர், மனிதருமானவர்.
- கடவுளின் மீட்புத் திட்டம் கிறிஸ்துவில் நிறைவேறுகிறது.
iii. திருமறை விளக்கங்கள் (Scriptural Interpretations)
- Study of Theology.
- இறையியல் செய்திகள் வெறும் கோட்பாடுகள் மட்டும் அல்ல. அவை வழிபாட்டில், அருளுரையில் மானுட மீட்பிற்கான தொடர் செயல்பாட்டை வழியுறுத்த வேண்டும்.
- இறையியல் என்பது கடவுளின் பண்பையும், அன்றாட மானுடத்தின் பண்பையும் சரியாக எடுத்துச் செல்வது ஆகும்.
- திருமறை விளக்கங்கள் சூழல் சார்ந்ததாக, மக்களோடு இணைந்ததாக இருக்க வேண்டும்.
- Exeses மிகவும் முக்கியமானது.
- திருச்சபைத் தலைவர்களின் காலத்தில், கிறிஸ்துவை மையமாகக் கொண்டே அனைத்து விளக்கவுரைகளும் எழுதப்பட்டது.
- அருளுரை உணர்ச்சியைத் தூண்டும் விதத்தில் இருப்பதைவிட, நடைமுறை வாழ்வோடு இணைந்ததாக, கிறிஸ்துவை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும்.
- அந்தியோகியா, அலெக்சாண்ரியா - இறையியல் கருத்துக்கள் அதிகம் வாதிடப்பட்ட இரண்டு முக்கியப் பட்டணங்கள்.
- அந்தியோகியா - Allegorical, Typlogycal முறைகள் பேசப்பட்டது.
- அருளுரையில் திரித்தூதுவர்களின் நம்பிக்கையே வெளிப்பட வேண்டும்.
- நம்ப இயலாத விளக்கங்களை மக்களிடம் சொல்லுவது தவறு.
- திருமறை அடிப்படை மிகவும் முக்கியம், திரித்தூதுவர்களின் நம்பிக்கை மிகவும் முக்கியம்.
iv. திருச்சபை மற்றும் திருவருட்சாதனம் (Ecclesiology and Sacriament)
- திருச்பை ஓர் மணவாட்டி. கிறிஸ்து மனவாளன்.
- Body fo Christ
- மனவாட்டி - மணவாளன் (Bride - Bridegroom)
- திருச்சபைத் தந்தையர்கள் திருவருட்சாதனமாக திருமுழுக்கை மட்டுமே நம்பினார்கள்.
- திருமுழுக்கை மறுபிறப்பு என்று நம்பினார்கள். (ReBirth)
- கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில் மரணத்தில் பங்குபெறுதல்.
v. மீட்பியல் (Soteriology)
- கிறிஸ்துவின் மனுவுருவேற்றல் என்பது வீழ்ச்சியடைந்த மானுடத்திற்கு மிகவும் முக்கியமானது.
10/09/2026
Theology and Preaching
புதிய மரபுவழி இறையியல் (New Orthadox Theology)
Karl Barth
- தொடக்க கால தாராள இறையியல் (Liberal Theology) எதிர்மறையாக பேசியவர்.
- (Liberal Theology: கடவுளின் பண்புகளைப் புரிந்து கொள்ள மனித பகுப்பாய்வு கொண்டு புரிந்து கொள்ளலாம் என்பது தான் Liberal இறையியல்)
- மனித அறிவால் கடவுளின் செயல்களையும், பண்புகளையும் விளக்க முடியாது என்று வாதிட்டவர் காரல் பாத்.
- எமில் புருனர், ஸ்லைமாக்கர் போன்றோர் தாராள இறையியலைப் (Liberal Theology) பேசினார்கள்.
- 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் இறையியல் வட்டாரங்களில் பெரும் பங்கு வகித்தவர் காரல் பாத்.
- பாரம்பரியக் கிறிஸ்தவக் கோட்பாடுகளை புதிய வழியில் மீண்டும் அறிவுருத்தியவர் இவர்.
- காரல்பாத்தின் அருளுரைக்கான வரைவிளக்கம்
- “அருளுரை என்பது அழைக்கப்பட்டிருப்பவர் வழியாக திருமறையின் வார்த்தைகளை மனித வார்த்தைகளில் விளக்கி, அந்த வார்த்தைகளை கடவுளிடமிருந்து அவர்கள் கேட்க வேண்டியவைகளை தெரிவித்து, தற்கால சூழலுக்கு பொறுத்தமாக அமைத்து, திருச்சபைக்கு தெரிவிக்க கட்டளையிடப்பட்ட ஒன்று”
- தாராளவாத இறையியலின் மானுட மையவாதத்தை நிராகரித்தல் என்பது தான் இவரின் முக்கிய இறையியல் அழுத்தம்.
- மனிதப் பகுத்றிவு, தார்மீக அனுபவ முன்னேற்றம் அடிப்படையில் கடவுளை நாம் புரிந்துகொள்ள முடியும் என்று தாராள இறையியலாளர்கள் நம்பினார்கள்.
- தாராள இறையியல் கடவுளின் உண்மையான இறையியலை சிதைக்கிறது என்று காரல் பாத் கூறுகிறார். இது கிறிஸ்துவை கடவுளின் வெளிப்பாடாக மறுப்பது தாராள இறையியல் என்று கூறுகிறார்.
- ஒவ்வொரு இறையியலும் மானுடத்தின் அறிவுக்கொண்டோ, வெளிப்படையான அறநெறி வாழ்வைக் கொண்டோ கடவுளைப் புரிந்து கொள்ள முடியாது.
- கடவுளின் செயல்பாட்டைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால், கிறிஸ்துவின் செயல்பாட்டைப் புரிந்துகொள்ள வேண்டும்.
- கிறிஸ்து கடவுளின் செயல்பாட்டாரளாக, வெளிப்பாடாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
- கடவுளுக்கு ஓர் இறையான்மை உண்டு. (நாட்டின் இறையான்மை போன்று). அந்த இறையான்மையைக் கடவுள் நமக்கு வெளிப்படுத்தினால் மட்டுமே புரிந்துகொள்ள முடியாது. நம்முடைய யூகத்தினாலும், அறிவினாலும் புரிந்து கொள்ள முடியாது.
- இந்த அறிவை கிறிஸ்துவைன் மூலமாக நாம் காண முடிகிறது.
இயேசுக் கிறிஸ்துவில் கடவுளின் வெளிப்பாடு
- கடவுளைப் பற்றிய அறிவு மனிதத் தேடலிலிருந்து அல்ல, கடவுளின் சுய வெளிப்பாட்டில் இருந்து வருவது. இந்த வெளிப்பாட்டின் உறுதி கிறிஸ்துவில் இருக்கிறது.
- கடவுளும் மானுடமும் சந்திக்கின்ற ஒரு இடம் கிறிஸ்து.
- கடவுளின் வார்த்தையை மூன்று வகையான செயல்பாடுகளால் காட்டுகிறார்.
- 1. வெளிப்படுத்தப்பட்ட வார்த்தை: இயேசு கிறிஸ்துவில் வெளிப்படுத்தப்பட்ட வார்த்தை. இயேசு தான் கடவுளின் இறுதி வடிவம். கடவுளின் இறுதி வடிவம் மட்டும் அல்ல, கடவுளின் மையச் செயல்பாட்டின், தொடர்பாளர் கிறிஸ்து. (யோவான் 1)
- 2. எழுதப்பட்ட வார்த்தை: கடவுளைப் பற்றி இயேசுவின் வழியாக நாம் அறிந்துகொள்ள வேண்டும் என்றால், திருமறை நமக்கு மிக மிக அவசியம். கடவுளின் ஒட்டுமொத்த பண்புகளும் திருமறையில் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. தூய ஆவியானவர் வழியாக பேச தேர்ந்தெடுக்கும்போது கடவளின் வார்த்தை.
- 3. அறிவிக்கப்பட்ட வார்த்தை: அருளுரை என்பது தெய்வீக சந்திப்பின் நிகழ்வு. அந்த அருளுரையில் கடவுளை நாம் சந்திக்கலாம். ஏனென்றால், அருளுரையில் சொல்லப்படும் ஒவ்வொரு வார்த்தையும் கடவுளைப் பற்றியது. கடவுள் பேசுகிறார் என்பதே இவரின் முக்கியமான இலக்கணம்.
இயற்கை இறையியல் நிராகரிப்பு (Natural Theology)
- செயிண்ட் அகஸ்டியன்: கடவுளின் சிறப்பு வெளிப்பாடன்றி, அனைத்து மானுடத்தாலும் கடவுளை சுய அறிவு கொண்டு அறியலாம் என்பது இயற்கை இறையியல்.
- காரல் பாத்: கிறிஸ்துவின் கடவுளின் வெளிப்பாடன்றி, இயற்கையில் கடவுளைப் பற்றிய அறிவு நமக்கு இல்லை.
- இந்த வெளிப்பாட்டை நமக்குத் தருவது திருமறை மட்டுமே.
கடவுளின் செயல் மற்றும் அருள் (கிருபை)
- அருளை மையமாகக் கொண்டதே காரல் பாத்தின் புதிய மரபு வழி இறையியல்.
- Sola Cracya - மனிதனின் பிழைகளை கடவுளின் அருளால் மட்டுமே நீக்க முடியும் என்கிறார் காரல் பாத்.
- மனிதனின் முயற்சியினால் பிழை மன்னிப்பைப் பெற்றுக்கொள்ள முடியாது.
- பிழைகளை கடவுளுக்கு எதிரான கிளர்ச்சியாக காரல் பாத் பார்க்கின்றார்.
- கடவுளும் இறை மக்களும் சந்திக்கின்ற ஓர் நிகழ்வு தான் அருளுரை.
- உயிருள்ள கடவுள் மானுடத்தை எதிர்கொள்ளுவதற்கான ஒரு வழியே அருளுரை.
- அருளுரையில் நாம் கடவுளைப் பற்றி சொல்லுகிறோம் என்பது அல்ல, அருளுரையின் மூலமாக கடவுளே பேசுகிறார் என்பது தான் காரல் பாத்தின் கூற்று. Preaching is a Event.
- Christ Center Focuse: ஒவ்வொரு அருளுரையும் கிறிஸ்துவை மையமாக வைத்து நிறைவேற்றப்பட வேண்டும். காரணம், நற்செய்தி (Gospel) அங்கு தான் உள்ளது.
- கிறிஸ்துவில் ஏற்பட்ட கடவுளின் வெளிப்பாடு, மீட்பு, ஆசி, விடுதலை இவைகளை கிறிஸ்து மூலமாகவே பெறுகிறோம்.
திருமறையும் அருளுரையும்
- அருளுரை என்பது கடவுளின் செயல்பாட்டின் ஒரு தொடர்பியல் என்றால், அதை நமக்குக் கூறுவது திருமறை தான். திருமறையில் உள்ள அனைத்து செய்திகளும் கடவுளே நமக்குப் பேசுவதைப்போல நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- மனிதர்களைக் கொண்டு கடவுள் திருமறையை எழுதினாலும், உண்மையான ஆசிரியர் கடவுளே. திருமறையில் இருந்து அருளுரையாற்றாமல், இறையியலாளர்களின் கருத்துக்களை மட்டும் சொல்லி அருளுரையாற்ற முடியாது.
- திருமறை அருளுரையில் முதல் இடம் பிடிக்க வேண்டும்.
கடவுளின் இறையான்மையை உணர்த்துவது
- கடவுளின் முழுமையான பிரதிநிதித்துவம் மற்றும் விடுதலையை வழிறுதுத்த வேண்டும்.
- மனித யூகத்தின் அடிப்படையில் கடவுளின் செயல்களை நாம் அறிந்து கொள்ள முடியாது.
அருளுரையாளரின் பணிவும், பொறுப்பும்
- அருளுரையாளர் ஒரு தாழ்மையான அருள்பணியாளராக இருக்க வேண்டும்.
- அருளுரையின் வார்த்தைகள் கடவுளே பேசும் வார்த்தயாக இருந்தாலும், அருளுரையாளர் ஒரு கருவி மட்டுமே.
- அருளுரையாளரின் பொறுப்பு: ஆயத்தம், ஒப்படைப்பு, நோக்கம் தேவை.
- நோக்கம் இல்லாத அருளுரையாளர் சமுதாயத்திற்கு பயன்படக்கூடியவராக இருக்க முடியாது.
- திருமறைக் கால இறைவாக்கினர்கள் சூழலை மையமாகக் கொண்டு பேசினார்கள்.
- மனித அனுபவம், கடவுளுடைய மானுடத்திற்கான நோக்கம் இவை கடவுளின் பார்வையில் பார்க்க வேண்டும்.
- கடவுள் மனிதனை படைத்த நோக்கம், கடவுளின் செயல்பாட்டை செய்ய வேண்டும் என்பதற்காகவே.
- இறைவாக்கு இயல்பு அருளுரையாளருக்கு இருக்க வேண்டும். (Preachinng Shoud be Profectic Nature).
11/09/2026
பெண்ணிய இறையியல் (Feminist Theology)
பெண்ணிய இறையியல் என்பது திருச்சபையின் மரவு வழி சமயங்கள், திருமறைகள் இவைகளை ஆணாதிக்க மற்றும் அடக்குமுறை சார்ந்து புரிந்துகொள்ளப்பட்ட கடவுளை பெண்ணிய விடுதலை சார்ந்து மறுகட்டுமானம் செய்வது.
- பெண்ணிய அடிமைத்தனம் எல்லா இடத்திலும் உண்டு. திருச்சபை, சமுதாயம், நிறுவனம்.
- பெண்ணிய அடிமைத்தனத்திற்கு திருமறை முக்கியமான ஓர் காரணம். ஏனென்றால், திருச்சபையிலும், திருச்சபையில் போதிக்கப்படும் திருமறையும் ஆணாதிக்க சிந்தனையை அதிகமாக கொண்டுள்ளது.
- பெண்களுக்கான சமத்துவம், உரிமை, நலன் சார்ந்த பார்வை சயங்களிலும், ஆன்மீக வாழ்விலும் ஒன்றும் இல்லை.
- 1960-களில் விடுதலை இயக்கங்கள் உருவாகின. இந்த அமைப்புகளில் பெண்களுக்கான முழு நலன் குறித்த அக்கரை (சிந்தை) உருவானது.
- The Women Bible: Elisabeth Cady Standon என்பவர் தான் 1895-ஆம் ஆண்டு The Women Bible என்ற திருமறையை எழுதினார்கள்.
- திருமறையின் பல மொழிபெயர்ப்புகள்: Teen's Bible, Childrens Bible, Green Bible, Justice Bible.
- Green - Eco Bible
- Justice - ஏழைகள் ஒடுக்கப்படுவதைக் குறித்த திருமறை
- Beyord God the Father என்ற நூலை Mary Daly என்பவர் எழுதினார்.
- ரோஸ்மேரி (Rosmary Reuther Radfar) என்பவர் Sexism And God Talk என்ற நூலை எழுதினார்.
- In Memory of Her என்ற நூலை எலிசபெத் பிளோரன்சா எழுதியுள்ளார்.
- ஆணாதிக்க அமைப்பு முறைகளை திறனாய்வு செய்தல் (Critique of Patriarchy): திருச்சபைக்குள்ளும், சமுதாயத்திற்குள்ளும், திருமறையிலும் ஆணாதிக்கம் உள்ளது.
- எலிசபெத் பிளோரன்சா என்பவர் Politics of Meaning Idea (நீ அனைத்தையும் சந்தேகக் கண்களோடே பார் என்பது தான் இவரின் கூற்று). ஆண் சிறந்தவர் என்றும் பெண் தாழ்வானவர் என்றும் திடீர் என்று உருவானது அல்ல.
- God Beyond Gender: கடவுளை ஆணாக பார்க்கும் பார்வை திருமறையில் உள்ளது. கடவுள் தந்தை, அரசன் என்ற பார்வையில் தான் திருமறை காட்டுகிறது.
- கடவுளை ஆணாகப் பார்க்கும் பார்வையை மாற்ற வேண்டும். பொதுவான மொழிநடையில் கடவுளைின் பெயரைப் பயன்படுத்த வேண்டும். எ.கா: தாயும் தந்தையுமான கடவுள்.
- கடவுள் வாழ்வின் ஆதாரமாய் இருக்கிறார். வாழ்வுக்கு ஆணும், பெண்ணும் முக்கியமானவர்கள். பாலினத்தையும் தாண்டி கடவுளை நாம் பார்க்க வேண்டும்.
- Re-Imaging Sin and Grace: பாவத்தைக் குறித்தும் கிருமையைக் குறித்தும் புதிய சிந்தனையோடு அனுக வேண்டும். பாவம், பெருமை என்பது பல நேரங்களில் ஆண்களிடம் இருந்தே உருவாக்கிறது.
- பாவத்திற்கு ஏவாள் செய்த பிழையே காரணம் என்று சொல்லுவது பெரிய தவறு. (இஸ்லாம் சமயத்தில் இது அதிகமாக உள்ளது)
- பெண்களை பாவத்தின் பிறப்பிடமாகவும், இச்சையின் அடிப்படையாகவும் இன்றும் பார்க்கப்படுகிறார்கள்.
- ஏவாள் மட்டுமல்ல, ஆதாமும் பாவம் செய்தான் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
- Redeting Christology: கிறிஸ்தியலை மறுகட்டுமானம் செய்தல். கிறிஸ்து ஒரு ஆண். எனவே, கிறிஸ்து ஆண்களுக்கு ஆதரவாகவே செயல்படுவார் என்ற கருத்து உண்டு. கிறிஸ்துவிலும் தாயின் பண்புகள் உள்ளது. எ.கா: இயேசு அழுதார், பரிதாபப்பட்டார்.
- Woment Experians as the Norms: பெண்களின் அன்றாட வாழ்வின் கடினப்பாடுகளில் இருந்து தான் அவர்களை அறிய முடியும். பெண்கள் இரண்டாம் பட்சத்தில் பார்க்கப்படுபவர்கள். ஆண்களுக்கு நிகரானவர்கள் அல்ல.
- சமயம், சமுதாயம், பணியாற்றும் இடங்கள் என்று அனைத்து இடங்களிலும் பெண்களின் ஆண்களை விட மதிப்பு குறைந்தவர்களாகவே பார்க்கப்படுகிறார்கள்.
- பெண்களுக்கே இவ்வளவு பாடுகள் என்றால், தலித் பெண்களுக்கு இதைவிட கொடுமைகள் நடந்தேருவதைப் பார்க்க முடிகிறது.
- பெண்களின் வாழ்வியல் ஆதாரமே பெண்ணிய விடுதலைக்கு அடிப்படை ஆதாரம்.
- Christian Tradition: திருமறையை திறனாய்வுக் கண்ணோட்டத்தில் படிக்க ணே்டும். ஆண்கள் திருமறையை தங்களுக்குச் சாதகமாகவே விளக்கியுள்ளார்கள். எனவே திருமறையின் சமுதாய மாற்றத்திற்கான சிந்தனைகளை நாம் மரபு சார்ந்து பார்ப்பது தவறு.
- ஏனெனில், அடக்குமுறைகளுக்கும், ஒடுக்கு முறைகளுக்கும் திருமறை ஒரு கருவியாகவே உள்ளது.
- ஆண்ரோ சென்ரிக் விளக்க முறையிலிருந்து, புதிய முறையில் திருமறையை விளக்க வேண்டும்.
- Rosmary Reuther Radfar: பெண்ணிய இறையியல் என்பது ஆணாதிக்கத்தை கேள்வி கேட்கும் ஒரு இறையியல்.
- பெண்ணிய இறையியல் என்பது ஒரு மாற்றுக் கலாச்சாரத்தை ஏற்படுத்தும் ஒரு குமுகாயம். (Alternative Tradition)
- பெண்களின் வாழ்வியல் மறுகட்டுமானத்திற்கான தேடல் இருக்க வேண்டும்.
- Letty M Raussel: பெண்களின் வாழ்க்கை அணுபவத்திலிருந்து தான் திருமறையை நாம் பார்க்க வேண்டும். இறையியல் என்பது ஓர் கருத்துருவாக்கம். இந்த கருத்தியலே நம்மை செயல்பாட்டிற்கு நேராக நம்மைத் தள்ளுகிறது.
- இந்த கருத்து பெண்களுக்கு விடுதலை கொடுக்கக்கூடிய, பெண்களை இணைத்து செல்லும் வழியாக இருக்க வேண்டும்.
- Prophetic Principles: முதல் உடன்படிக்கை, புதிய உடன்படிக்கை அனைத்தும் ஆணாதிக்க சூழலில் எழுதப்பட்டது. இவை சமயத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. எனவே, ஆண்கள் பெரியவர்கள், பெண்கள் தாழ்ந்தவர்கள் என்ற பார்வை வந்துவிட்டது. எனவே, திருமறையை பெண்ணிய பார்வையில் பார்க்க வேண்டும் என்றால், இறைவாக்கினர் பார்வையில் பார்க்க வேண்டும்.
- எங்கே மக்கள் ஒடுக்கப்படுகிறார்களோ, அங்கே அவர்களை உயர்த்துவதற்காக, விடுவிப்பதற்காக கடவுள் செயல்பட்டார். (தனிமனிதன், குமுகாயம்)
- பெண்களை ஒதுக்கவதை நாம் ஏற்றுக்கொள்ளக்கூடாது. அப்படி ஏற்றுக்கொண்டால், கடவுளின் ஒரு பாதியை நாம் இழந்துவிடுகிறோம்.
- நான்கு முக்கிய வழிமுறைகள்
- திருமறையில், இறைவாக்கு நூல்களில் கடவுள் ஒடுக்கப்பட்டவர்களின் சார்பாளராக செயல்படுகிறார்.
- அதிகார வர்க்கத்தை திறனாய்வு பார்வையில் பார்க்க வேண்டும்
- புதிய காலம் வரும் என்ற நம்பிக்கையை இறைவாக்காளர்கள் கொடுத்திருக்கிறார்கள். (மேசியா) புதிய வானமும், புதிய பூமியும் ஏன் தேவை, இந்த அதிகாரம் சரியாக இல்லை. புதிய அதிகாரம் நமக்குத் தேவை என்று புதிய நம்பிக்கையை இறைவாக்கினர்கள் கொடுத்தார்கள்.
- ஒவ்வொரு சமயத்திலும் சில ஒழுங்குகள், விதிமுறைகள் உள்ளன. எ.கா: பெண்கள் திருவிருந்து கொடுக்கக்கூடாது. இவற்றை மறுகட்டுமானம் செய்ய வேண்டும்.
How to Interprate
i. Hermenutics of Suspicion
சந்தேகத்தின் பொருள்கோள் இயல்: திருமறையின் பொருளை உணருவதற்கு, இதைக் கடவுள் சொல்லியிருப்பாரா என்று பார்க்க வேண்டும். பெண்களை தங்கள் வாழ்வாதாரத்திலிருந்து விலக்குகிற, ஒதுக்குகிற விளக்கங்களை சந்தேகக்கண்ணோடு பார்க்க வேண்டும்.
இருமைவாதம் திருமறையில் அதிகம் உள்ளது.
- ஒலியும் இருளும் - பெண்கள் காரிருளைக் கொண்டு வருபவர்கள்
- உடலும் ஆவியும் -
- அதிகாரமும், அதிகாரமின்மையும் - பெண்கள் அதிகாரம் அற்றவர்கள்
ii. Hermenutics Resistance
iii. Hermenutics Retiwel
iv. Hermenutics Trust
17/09/2026
அகழ்வுரை (Exegesis)
- ஒரு அருளுரையாளர் திருமறைப் பகுதியின் பொருளைக் கண்டுபிடிக்க வேண்டுமானால், அகழ்வுரை செய்திருக்க வேண்டும். இதன் அடிப்படை நோக்கம் திருமறைப்பகுதியின் பொருளை வெளியே கொண்டு வருவது. (To Lead, To Discover)
- அழ்வுரை செய்யாமல் அருளுரையின் செய்தியை நாம் கட்டமைக்க முடியாது.
- அகழ்வுரை செய்தவற்கு திருமறை நமக்கு
- திருமறையின் ஒவ்வொரு பகுதிகளும் மூன்று உலகங்களைக் குறிக்கிறது. அவை:
- The World Behind the Text
- The World of the Text
- The World infront of the Text
- அகழ்வுரைக்கு இந்த மூன்று முறைகளும் மிகவும் எளிய முறையாகும்.
- இந்த மூன்று உலகத்தில் முதல் உலகமான The World Behind the Text என்பதிலிருந்து துவங்க வேண்டும்.
- ஒரு திருமறைப் பகுதியின் பின்ணிய உலகம் Historical Criticism, Source Criticism, Form Criticism, Redaction Criticism, Social Scientific Reading.
- ஒரு திருமறைப் பகுதியின் செய்தியைக் கண்டுபிடிக்க,அந்த திருமறைப் பகுதியின் வரலாற்றுப் பகுதி, எங்கே இருந்து எடுக்கப்பட்டு இருக்கிறது, ஏன் இதை அருரையின் வடிவத்திற்குள் கொண்டுவந்திருக்கிறார்கள், எது அவசியமானதோ அதை வைத்துவிட்டு, மற்றவற்றை விட்டுவிடுவது (Editting Word), அக்கால கலாச்சாரம், கூழல் போன்றவற்றை ஆராய்வது.
Louis Berkhof
- கடவுளுடைய வாக்கு ஒரு சூழலை மையமாகக் கொண்டு தான் இருக்கும். கடவுள் பேசுவதறாக திருமறையில் சொல்லப்படும் அனைத்திற்கும் ஒரு சூழல் உண்டு.
- எ.கா: வரலாற்றுச் சூழல், அரசியல் சூழல், பொருளாதார சூழல்.
- Source Criticism: செய்தியை ஆசிரியர் எங்கே இருந்து பெற்று, எங்கே சொல்லுகிறார். Q Source, Luken Source.
- JEDP - பெண்டடூக்கைப் புரிந்து கொள்ள JEDP அவசியம்.
- J - Jaswist
- E - Elohist
- D -
- P -
- இஸ்ரவேல் மக்கள் தங்களுக்கு அரசன் வேண்டும் என்று சாமுவேலிடம் கேட்டார்கள்.
- அந்திய நாட்டில் அரசர்கள் இருந்ததால், இஸ்ரவேலர்கள் கடவுளிடம் அரசர் வேண்டும் என்று கேட்டார்கள்.
- இதில் Source என்பது மற்ற நாடுகள் (எகிப்து).
- பலி செலுத்தும் முறை இஸ்ரவேலர்களின் பாரம்பரியமாக இருந்தாலும், பலியிடுவதையும் வேறு நாட்டு மதங்களிலிருந்து தான் இஸ்ரவேலர்கள் திருடி தாங்கள் வழிபாட்டில் பயன்படுத்தினார்கள்.
- Redaction Criticism: It is the study of Thearitical Significiance editorial. Editor அந்த பகுதியை வலிமைப்படுத்த கருத்துக்களை செதுக்குவார்.
- Social Sientific Method: திருமறைப் பகுதி எந்த சமுதாய பிண்ணனி கொண்டதாக இருக்கிறது என்பதைப் படிக்க வேண்டும்.
ii. The Word of The Text
- எல்லா Litterary திறனாய்வும் வந்துவடும்.
- இது திருமறைப் பகுதி எந்த இலக்கிய வகையைச் சார்ந்தது என்று கண்டுடிபக்க வண்டும்.
- கதையா, பாடலா, அப்போகரிப்பாவா என்று கண்டுபிடிக்க வேண்டும்.
iii. The World infront of the Text
- யார் உடனடியாக கேட்பவர்கள்.
- யார் யாரைப் பற்றி எழுதுகிறார் என்பதை அறிய வேண்டும்.
- இதன் பின்பு தான் இதன் அப்படிடையில் ஆசிரியர் யாருக்குச் சொல்லுகிறார்? ஏன் சொல்லுகிறார்? என்பதை ஆராய முடியும்.
- இங்கு தான் அருளுரையின் மைய நோக்கத்தை கொடுக்க வேண்டும்.
- Evangalical Preaching, Convertion Preaching, Liberative Purpose (விடுதலை), Edification Purpose (பிழைகளை சுட்டிக்காட்டுதல்), Doctrinal Preaching இதில் எந்த விதத்தில் நாம் பேசப் போகிறோம் என்று கண்டறிய வேண்டும்.
- திருமறைப்பகுதிக்கு முன்னும், பின்னும் உள்ள சூழல் என்ன என்பதைப் பார்க்க வேண்டும். (Imidiate Context - உடனடிச் சூழல்)
- அருளுரைப்ப குதி எந்த நூலில் உள்ளதோ, அந்த நூலின் நோக்கம் என்ன என்று பார்ப்பது. (அகன்ற சூழல் - Wider Context)
இவ்வாறு அகழ்வுரை செய்ததற்கு பின்பு தான் இறையியல் பிரதிபளிப்பிற்கு (Theological Reflection) நாம் வர வேண்டும்.
இறையியலாக்கம் செய்வது
- வரலாற்றில் செயல்படுகிற கடவுளை, அவரின் பண்புகளை நாம் அறிந்து இறையியலாக்கம் செயல்பட வேண்டும்.
- கடவுள் அந்த மக்களை என்ன செய்ய சொன்னார்.
- கடவுள் எப்படி செயல்பட்டார்.
- அதனால், மக்கள் வாழ்வில் ஏற்பட்ட மாற்றம் என்ன? என்று ஆராய்வது தான் இறையியல்.
- Books: இறையியலாக்கம்.
- கடவுள் இந்த திருமறைப்பகுதில் தன்னை எப்படி வெளிப்படுத்துகிறார் என்பதையும், அவரின் விருப்பம் என்ன என்பதையும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
- இந்த செய்தி, கடவுளின் ஒட்டுமொத்த திட்டத்திற்கு வெளிப்படுத்துகிறதா? என்று பார்க்க வேண்டும்.
- வரலாற்றுச் சூழலையும் சார்ந்து
- ஏன் இறையியல் பார்வையில் பார்க்க வேண்டும் என்றால், இது கடவுளின் சொற்கள்.
- 66 நூல்களையும் Canan முறையில் வரிசைப்படுத்தி, ஒட்டுமொத்த திருச்சபையும் இதை அங்கிகரித்திருக்கிறது.
18/09/2026
Theologies for Preachings
தலித் இறையியல் Dalit Theology
- இந்தியாவில் தலித் மக்களின் வாழ்வியல் அணுபவத்திலிருந்து உருவானது தலித் இறையியல்.
- தல் (Dal) என்றால் நசுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட என்று பொருள்.
- இந்தியாவில் அதிகமான தலித் மக்கள் வாழ்கிறார்கள்.
- இந்தியத் திருச்சபையிலும் தலித் மக்களே அதிகம் இருக்கிறார்கள்.
- இந்திய அரசியலமைப்புச் சட்டம் தீண்டாமையை ஒரு குற்றமாகக் கருதினாலும், தலித் மக்கள் நாள்தோறும் ஒடுக்கப்படுவதை நாம் மறுக்க முடியாது.
- திருமறையை தலித் மக்களுக்கான நலனுக்கான பார்வையில் படிப்பதற்கு இறையியல் கல்லூரியில் ஓர் முன்னெடுப்பு இடம் பெற வேண்டும். (Re Reading of the Bibilical Concept)
- ஏ.பி. நிர்மல், ஜேம்ஸ் ஏன் மேசி (James Eearl Massy), பேராயர் தேவசகாயம், டாக்டர் மோகன் லால்பீர் (TTS Principal), தியாப்பிலஸ் அப்பாவு என்கிற பரட்டை (TTS), பிரவீன் வீ.எஸ். பிரம்முல்லா (CSI Synod EMS Organisation).
- தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் உள்ள தலித் ஆதார மையம் என்ற அமைப்பு மூலம் திருமறையை தலித் பார்வையில் படிக்கவும், செயல்படவும் இந்த மையம் செயல்பட்டு வருகிறது.
- 1970-80களில் தலித் இறையியலின் வளர்ச்சியடைந்தது.
- தலித் இறையியல் பற்றிய பல நூல்கள் உண்டு. (TTS-DRC)
- ஒடுக்கப்பட்டவர்களுக்கான விடுதலையாளராக கடவுளைப் பார்க்கும் பார்வை.
- எகிப்து இஸ்ரவேலர்களின் ஒடுக்கப்பட்டபோது, இஸ்ரவேலர்களோடு கடவுள் தன்னை இணைத்துக்கொள்ளுகிறார். (விடுதலைப் பயணம் 1)
- அடிமைத்தனம் கடவுளுக்கு ஏற்புடையது அல்ல. அடிமைச் சங்கிலிகளை உடைப்பவர் கிறிஸ்து.
- தலித் இறையியல் கிறிஸ்துவை தலித் அனுபவங்களோடு பார்க்கிறது.
- தம் சொந்த மக்களோடு வந்தார். அவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
- நிராகரிக்கப்பட்டவர்.
- அநீதியினால் துன்புறுத்தப்பட்டவர்.
- நகருக்கு வெளியே கொலைசெய்யப்பட்டவர்.
- தீட்டானவர்கள் என்று கருதப்பட்ட மக்களை தொட்டவர்.
- ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தமையால் சிலுவையில் அறையப்பட்டார்.
- கிறிஸ்துவில் கடவுள் மக்களுக்காக செயல்படுகிறார்.
- பிராமணிய சாதிய அமைப்பை வினா எழுப்புதல். சாதி அமைப்பிற்கு இந்து சமய வர்ணாஸ்ரமமே காரணம். தலித் மக்கள் அந்த பிரிவுகளுக்குள் வரவில்லை என்று சொல்லுகிறார்கள்.
- இந்து சமயம் தலித் மக்களை மனிதனாகவும் கருதவில்லை.
- சாதி அமைப்பு இந்தியாவில் அசைக்க முடியாத, ஆணி வேராக இருக்கிறது.
- இந்தியக் கிறிஸ்தவ இறையியல் ஆதிக்க மக்களால் எழுதப்பட்டது. (வெங்கல் சக்கரை, செஞ்சையா)
- இந்திய தலித் மக்கள் தலித் பார்வையில் நாம் வினா எழுப்ப வேண்டும் என்று குரல் கொடுத்தார்கள்.
- இயேசு கிறிஸ்து மக்களின் விடுதலைக்காக மண்ணில் பிறக்கிறார்.
- கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட திருச்சபையும் சாதி அமைப்பிற்குள்ளேயே இருக்கிறது.
- தலித் மக்களின் துன்ப வரலாறு, நிந்தனை, அவமானம் போன்றவற்றை தலித் விடுதலைக்கு முக்கிய ஆதாரமாக பார்த்தார்கள்.
- தலித் விடுதலை என்பது கல்விவிடுதலை மட்டும் அல்ல. வாழ்வியல், சமுதாய விடுதலைக்கான மாற்றமே தலித் விடுதலை.
- திருமறையில் ஆண், பெண் வேறுபாடு உள்ளது. சாதிய வேறுபாடு உள்ளது.
- திருமறையில் கடவுளை அறியாத மன்னர்களும் அனைவரையும் சமமாக நடத்தியிருக்கிறார்கள். எகிப்தியர்களுக்கு ஆடு மேய்ப்பவர்கள் அருவெறுப்பு என்றாலும், யாக்கோபின் சகோதரர்களுக்கு பார்வோன் ஆடு மேய்க்க அனுமதி கொடுத்தார்.
- பலநூறு ஆண்டுகளாக இந்த அடிமைத்தனம் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது.
- கடவுளின் சாயலை மீண்டும் எண்ணிப்பார்த்தால் தான், இதை உடைக்க முடியும். (ஆணென்றும் இல்லை, பெண்ணைன்றும் இல்லை, அடிமையென்றும், சுயாதீனனம் என்றும் இல்லை)
- கடவுளுடைய சாயலை சிதைக்கும் மனுக்குலத்தோடு, கடவுள் இருப்பதில்லை.
- எனவே தான் கடவுள் மானுட அவதாரம் எடுத்து, ஒடுக்கப்படுகிற மக்களோடு தன்னை இணைத்துக்கொள்ளுகிறார்.
- தலித் இறையியல் மீட்பை தனிமனித மீட்பாக பார்க்காமல், சாதிய ஒடுக்குமுறையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமுதாய, அரசியல், பொருளாதார முறையில் விடுதலை கிடைப்பதையே மீட்பு என்று பேசுகிறார்கள்.
- DRC - தலித் பார்வையில் அருளுரையியல், பெண்ணியமும், தலித்தியலும் என்ற புத்தகம் உள்ளது.
- ஐசக் கதிர்வேல் - தலித் பார்வையில் அருளுரையியல்
- பேராயர் தேவசகாயம் - Dalit Frointiers.
- இந்த இரண்டு நூல்களும் திருமறையை தலித் பார்வையில் புரிந்து கொள்ள ஆதாரமாக இருக்கிறது.
- மோகன் லால் பீர், கம்பர் மாணிக்கம் - தலித்தியமும், அரசியலும்
- ஜெயச்சித்ரா - தலித் இறையியல் (Artical)
- Contextual Theolody: சூழல் மற்றும் தலித் வாழ்வியல் (விடுதலை) பொருத்தமான செய்திகளை தலித் அருளுரையாளர்கள் முதல் பொருள்கோளியல் முறையாக முன்வைக்கிறார்கள்.
- கடவுள் ஒடுக்கப்பட்ட மக்களோடு இருக்கிறார் (விடுதலைப் பயணம்).
- தலித் கிறிஸ்து.
- அநீதியைக் கண்டித்தல், அநீதியை எதிர்த்தல். அநீதியை எதிர்ப்பது கடவுளின் பண்பு. கடவுள் நீதியுள்ளவர். அநீதிக்கு துணை நிற்பவர் அல்ல. தீண்டாமை இருக்குமானால், அதை அம்பலப்படுத்தி, மனம்திரும்புதலுக்கு ஏற்ப வழிநடத்த வேண்டும்
- தலித் கண்ணோட்டத்தில் திருமறையை விளக்குவது.
- மானுட மாண்பு, விடுதலைக்கான செயல்பாட்டில் பங்குபெறுவது.
- சமத்துவத்திற்கான செயல்பாடுகளை நாம் முன்னெடுப்பது. சமத்துவத்துக்கான அடையாளத்தை உறுதிப்படுத்துதல், அதிகார பங்களிப்பு, ஏற்றுக்கொள்ளுதல்.
மார்டீன் லூத்தர்
- காலம்: கி.மு. 1483-1546
- மார்டீன் லூத்தர் அருள்பொழிவு பெற்றவர்.
- இறையியல் பேராசிரியர்.
- 10,000 அருளுரைகள் கொடுத்துள்ளார்.
- அருளுரையின் முக்கிய அழுத்தம் “திருப்பணிக்கான அழைப்பு”
- முக்கிய நான்கு கோட்பாடுகள்: திருமறை மட்டுமே, நம்பிக்கை மட்டுமே, அருள் மட்டுமே, அனைத்து பற்றுறுதியாளர்களும் திருப்பணியாளர்களே.
- விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான். - போப், திருச்சபை மன்றங்கள் நம்மை விடுவிப்பது இல்லை. கடவுள் மட்டுமே நம்மை விடுவிப்பவர்.
- ரோமன் கத்தோலிக்கத்தில் சபை மாமன்றம் மிகவும் அதிகாரம் நிறைந்த ஒன்று.
- நம்பிக்கை மட்டுமே: மீட்பு என்பது ஓர் இலவசப் பரிசு. இவற்றை நற்கிரியைகளினாலோ, மனித முயற்சியினாலோ, பணத்தினாலே பெற முடியாது. கிறிஸ்துவின் சிலுவை மரணத்தையும், உயிர்த்தெழுதலையும், திரியேகக் கடவுளையும் நம்ப வேண்டும்.
- திருமறை மட்டுமே: மார்டீன் லுத்தரின் அனைத்துக்கோட்பாடுகளுக்கும் திருமறையே முக்கியம். திருமறையில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் கடவுளின் வாக்குகள். திருமறையிலிருந்து அருளுரையாளர் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் கடவுளே பேசுகிறர்.
- அருள் மட்டுமே: Law and Gospel. Good and Evil. ஒவ்வொரு மனிதனுடைய குற்றத்திற்கும் சட்டத்தின் படி அவன் குற்றவாடி. நற்செய்தியின்படி அனைத்து குற்றவாளிகளுக்கும் மீட்பு இலவசமாக கிடைக்கிறது.
- திருமறையைப் படித்து, அதற்கான தன்டனைச் செயல்களை அறிந்திருக்க வேண்டும். தண்டனையிலிருந்து விடுதலை பெற பணம், பொருள், தியாம் தேவையில்லை.
- கடவுளிடம் வருவதற்கு இடைத்தரகர்கள் தேவையில்லை.
24/09/2026
அருளுரையின் புதிய தன்மை/நடைமுறை (New Trends in Preacing)
அருளுரை மூன்று வகைபடும் (BTC) Types of Sermon
- விவிலியம் சார்ந்த அருளுரைகள் (Bibilical)
- தலைப்புச் சார்ந்த அருளுரைகள் (Topical)
- சூழல் சார்ந்த அருளுரைகள் (Context)
இதைத்தாண்டிய புதிய அணுகுமுறைகள், போக்குகள் அருளுரை அமைப்பில் உள்ளன.
- அருளுரையை எவ்வாறு திறனாய்வு செய்வது/ அருளுரையை எவ்வாறு கட்டமைப்பது (Sermon Analysis/Sermon Construction)
- Exprimental Preaching
- சிறார்கள் அருளுரை (Children's Preaching)
- ஆருளுரை மேடையில் பெண்கள் (Women in the Pulpit)
சிறார்கள் அருளுரை (Children's Preaching)
- சிறார் அருளுரை என்பது வழிபாட்டில் சிறார்களுக்கான முக்கியத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது.
- வழிபாட்டில் அருளுரையின்போதும், திருவிருந்திலும் இன்றைய திருச்சபையில் முன்னுரிமை கொடுப்பது இல்லை.
- குழந்தைகள் அருளுரை என்பது ஒட்டுமொத்த திருஅவையோடு சிறார்களையும் இணைத்து அவர்களுடைய மாண்பை, முக்கியத்துவத்தை அவர்களுக்கும் திருஅவைக்கும் கற்றுக்கொடுப்பது, அறிவிப்பது ஆகும்.
- சிறார்கள் என்றால் 3 முதல் 9 வயது வரை உள்ளவர்கள். அல்லது 12 வயதுக்குட்பட்டவர்கள் என்று திருச்சபை வரையறுக்கிறது.
- இன்றை அளவில் அருளுரையில் நாம் பயன்படுத்தும் சொற்கள், உவமானங்கள் சிறார்கள் புரிந்துகொள்ளும் விதத்தில் இல்லை.
- அருளுரையில் சிறார்களைப் பற்றி அதிகபடியாக 5 நிமிடங்கள் பேசலாம் என்று டேவிட் ஐங் (David NG) கூறுகிறார்.
- கடவுளுக்கும், திருச்சபைக்கும் குழந்தைகள் எப்படிப்பட்டவர்கள் என்பதை சிறார் அருளுரையில் வழியுறுத்த வேண்டும்.
- அருளுரையில் சிறார்களுக்கு கட்டளைகள் மட்டுமே கொடுக்கப்படுகிறது. பொய் சொல்லாதே, இதைச் செய், இதைச் செய்வது கடவுளுக்கு அறுவறுப்பானது என்பது மட்டுமே போதிக்கப்படுகிறது.
- சிறார்களுக்கான அருளுரையில் இதுபோன்ற கட்டளைகள் இருப்பதைவிட, சிறார்களைக் கடவுள் எப்படிப் பார்த்தார், கிறிஸ்து எப்படிப் பார்த்தார் என்ற விதத்தில் நம்முடைய அருளுரை இருக்க வேண்டும்.
- இயேசுவின் காலத்தில் பெண்களையும், சிறார்களையும் பொது அவையில் அனுமதிக்கவில்லை. அவர்கள் சாட்சி (Eye Widness) சொல்வதற்கு தகுதியற்றவர்கள்.
- சிறார்களை கடவுளின் வரமாக பார்த்தாலும், ஆண் குழந்தைக்கு வேறு அணுகுமுறையும், பெண் குழந்தைக்கு வேறு அணுகுமுறையும் இருந்திருப்பதைப் பார்க்க முடிகிறது.
- இயேசு கிறிஸ்து தனது அருளுரையில் சிறார்களைப் போல் நீங்கள் மனம் திரும்புங்கள் என்று, சிறார்களை பெரியோருக்கு இயேசு முன் மாதிரியாகக் காட்டுகிறார்.
- சிறார்களைப் பற்றி கடவுளின் வாக்குகள் (விவிலியம்) என்ன கற்றுக்கொடுக்கிறது என்பதை அருளுரையாளர் அறிந்திருக்க வேண்டும்.
- ஒப்புமை செய்திகள், கடினமான மொழிநடை, ஒத்த செயல் போன்றவற்றை சிறார்கள் அருளுரையில் தவிர்க்க வேண்டும்.
அருளுரை மேடையில் பெண்கள் (Women in the Pulpit)
- Women in the Pulpit என்பது Feminist Preaching இவை இரண்டும் ஒன்றே.
- இந்திய சூழலில் பெண்கள் வழிபாடு நடத்துவதற்கும், அதற்கான வாய்ப்புகளும் எப்படி உள்ளது?
- பெண்ணிய விடுதலை பற்றி அருளுரை மேடையில் பேசும்போது, அது பெண்களுக்கு மட்டுமா? ஒட்டுமொத்த திருச்சபைக்குமா?
- அனுதின வாழ்வில் பெண்கள் வாழ்வின் அனுபவங்கள் (Experions)
- கடவுள் பார்வையில் பெண்கள்.
- வழிமுறைகள் (Principles என்ன?
- இது ஒரு சாராருக்கா? ஒட்டு மொத்த சமுகத்திற்காக?
- கடவுள் பற்றி பேசிய திருமறைப் பெண்.
கதை வடிவ அருளுரை (Narrative Preaching)
- Euigene Louly: கதை வடிவ அருளுரை என்பது கருத்துக்களின் வரிசை முறை, ஒரு கதைக்கலத்தின் வடிவத்தைக் கொண்டிருப்பதோடு, அருளுரையாளரின் முக்கியக் கருத்தை வெளிப்படுத்துவதில் ஒரு திட்டமிட்ட தாமதத்தை உள்ளடக்கியிருக்கும் ஓர் அருளுரை அமைப்பு.
- கதை வடிவ அருளுரை என்பது நீண்ட கதையாகவோ (திருமறைக் கதையோ, வாழ்வியல் சம்பந்தப்பட்ட கதையோ) கதைக் களத்தின் மையத்திற்கு (Concept) அழுத்தம் கொடுப்பதாக இருக்க வேண்டும்.
- Bibilical Narrative Sermon: முழுவதும் திருமறை Biographical முறையைப் பயன்படுத்தலாம்.
25/09/2026
அருளுரையாக்கத்தின் படிநிலைகள்
- திருமறைப் பகுதி + தலைப்பு
- அகழ்வுரை (Exesegs) -
- The World Behind the Text
- The World of the Text
- The World infront of the Text
- இறையியலாக்கம் (It Comes form Interpretation)
- Illustralme Sources (சிறு பாடல், குட்டிக் கதை)
- எந்தவகையான அருளுரை வடிவம் (Sermon Form)
- (எடுப்பு, தொடுப்பு, முடிப்பு மிகவும் முக்கியமானது)
- நோக்கம் (Purpose of the Sermon) - Contextual
- அருளுரை வடிவம் (Sermon Form)
படிநிலைகள்
- மன்றாட்டு
- திருமறைப் பகுதியை தெளிவு கிடைக்கும் வரை படித்தல்
- உடநடி மற்றும் அகன்ற சூழல்
- அகழ்வுரை வழியாக திருமறைப் பகுதியின் பொருளைக் கண்டுபிடித்தல்
- அகழ்வுரை அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்ட மையக்கருத்தை திருமறையின் பிறப் பகுதிகளிலிருந்து அறிந்து கொள்ளுதல்
- திருமறைப் பகுதியின் இறையியல் அழுத்தம் என்ன என்பதைக் கண்டுபிடித்தல்
- சிறந்த இறையியல் கருத்து மற்றும் திருமறைப் பகுதி சார்ந்து தலைப்பை மறுவடிவமைத்தல் (Restructure)
- அருளுரையைக் கேட்போரின் சூழல், திருமறைப் பகுதியின் அழுத்தம், கேட்போரின் பட்டறிவுக்கு ஏற்ப விளக்கிக் கூற வேண்டும்
- இறையியலாக்கம் செய்தல்
- திருமறை என்ன சொல்லுகிறது
- அப்பகுதி வாழ்வியலை என்ன காட்டுகிறது
- இன்றைய சூழலில் எவ்வாறு பயன்படுத்துவது என்பதை இறையியலாக்கம் செய்ய வேண்டும்.
- அருளுரையின் நோக்கம் - அருளுரைக்கு ஒரே நோக்கம் மட்டுமே இருக்க வேண்டும்.
- அருளுரைக்கு அழுத்தம் மற்றும் மெருகேற்றுவதற்கு பொருத்தமான எ.கா-கள் மற்றும் பாடல்களைத் தெளிவு செய்தல்.
- நோக்கத்தை மையமாகக் கொண்டு அருளுரை அமைப்பை தெரிவு செய்தல் (Sermon Form) (எ.கா: விடுதலை)
- நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு ஏதுவாக அருளுரையை வடிவமைக்க வேண்டும். உவமை அருளுரை, உரையாடல் அருளுரை, கதை வடிவ அருளுரை, குறுந்தலைப்பு அருளுரை
அருளுரை வடிவம் (Sermon Form)
சிறந்த அருளுரைக்கு முறையான ஒழுங்குபடுத்துதல் இருக்க வேண்டும்.
Sydney Gradenus
- Moder Preacher என்ற நூலை எழுதியவர்.
- அருளுரையின் வடிவம் திருமறையின் செய்திக்கு மறுவடிவம் தருகிறது என்று சொல்லுகிறார்.
- கேட்போரின் மறுமொழியை உறுதிசெய்கிறது.
- ஆர்வத்தைத் தூண்டுகிறது.
- இணைந்து பயணிப்பதற்கு உந்து சக்தியாக அமைகிறது.
1. தலைப்பு
2. முகப்பு
3. மையப்பகுதி
4. நிறைவு
(எடுப்பு, தொடுப்பு, முடிப்பு)
தலைப்பு என்பது அருளுரையின் மொத்த செய்தியை சுருக்கமாக சொல்லும் ஒன்று.
அறிமுகம்
- ஆர்வத்தைத் தூண்ட வேண்டும்.
- அருளுரையின் கருத்துக் குவியம் இருக்க வேண்டும்.
- விவிலியப் பகுதி, தலைப்பு இவற்றை இணைத்து எப்படி அருளுரையாற்றப்போகிறோம்.
- அறிமுகம் பாடல், சிறுகதை போன்ற வடிவில் துவங்கலாம்.
- அறிமுகம் மக்களை ஆயத்தப்படுத்தக்கூடிய ஒன்றாக இருக்க வேண்டும்.
மையப்பகுதி
- அருளுரையின் தலைப்பில் உள்ள சிக்கல்களை கண்டுபிடிக்கும் வகையில் இருக்க வேண்டும்.
- எ.கா: முதியோர் ஞாயிறு என்றால், முதியோருக்கு ஏற்படும் பிரச்சனைகள் என்ன?
- இந்த அருளுரையில் கடவுளின் விருப்பம் என்ன?
- மானுட வாழ்வில் அது தரும் அழுத்தம் என்ன என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்.
- அருளுரையின் கருப்பொருளில் இருக்கின்ற இன்றைக் கால சிக்கலை கடவுளின் விருப்பத்தோடு ஒன்றினைத்து, அதை நிறைவேற்றுவதற்கான செயல்பாட்டு நடைமுறைகளை மக்களுக்குச் சொல்ல வேண்டும்.
- மையப்பகுதியில் இறையியல் செய்திகளை, மக்களுடைய அன்றாட வாழ்வின் பயன்பாட்டிற்காகப் பயன்படுத்த வேண்டும்.
- அருளுரையின் மையப்பகுதி முழுமை நலனில் அக்கரையுள்ள வாழ்வுக்கு ஏதுவாக திருஅவையை நடத்துவதற்குப் பயன்பட வேண்டும்.
முடிவுரை
- அருளுரையில் கூறப்பட்ட கருத்துக்களை சீரமைத்து சுருக்கமாகக் சுருவது
- இறைமக்கள் எவ்வாறு பதிலுரை செய்ய வேண்டும். வாழ்வில் கடைபிடிக்க வேண்டும் என்று முடிவெடுப்பதற்கான உந்து சக்தியாக இருக்க வேண்டும்.
- மக்கள் ஆர்வமாக கவனித்துக்கொண்டு இருக்கும்போது, அருளுரையை முடித்துவிட வேண்டும்.
- புதிய கருத்துக்கள் நிறைவுப் பகுதியில் வரக்கூடாது.
- அறிமுக நேரத்தைவிட, முடிவுரை நேரம் மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
(உவமை அருளுரை, உரையாடல் அருளுரை, கதைவடிவ அருளுரை, கற்பனை வடிவ அருளுரை போன்ற அருளுரைகளில் இந்த முறையைப் பயன்படுத்த வேண்டியதில்லை)
Importent Questions:
- அருளுரையின் வகைகள்
- பொருள்கோள் இயலின் விதிமுறைகள்
- Illastriation
- அருளுரையியல் என்றால் என்ன?
- கிறிஸ்தவ அருள்பணியில் எவை எவை உண்டு?

