நாட்டுப்புற இசை வழிபாடு
1. சனத்தை அழைக்கிறது:புதிய புத்துயிர் பாடல்
பூமியில் வாழுற மக்களே...
2. சாமி அழைக்கிறது
முன்பாட்டு: சனமெல்லாம் வந்திரிச்சி சண்டை சத்தம்
பூமியில் வாழுற மக்களே...
2. சாமி அழைக்கிறது
முன்பாட்டு: சனமெல்லாம் வந்திரிச்சி சண்டை சத்தம்
ஏதுமில்ல கடவுளே நீயும் வந்துவிடு, வந்துவிடு
எல்லாரும்: வந்துவிடு, வந்துவிடு
முன்பாட்டு: பங்காளி மொறையெல்லாம் - பாங்குடனே
முன்பாட்டு: பங்காளி மொறையெல்லாம் - பாங்குடனே
வந்திரிச்சு பாருலகைப் பெத்தவரே பரிவுடனே வந்துவிடு
எல்லாரும்: வந்துவிடு, வந்துவிடு
முன்பாட்டு: தண்ணி போட்டா மயக்கம் வரும் — அந்தத்
எல்லாரும்: வந்துவிடு, வந்துவிடு
முன்பாட்டு: தண்ணி போட்டா மயக்கம் வரும் — அந்தத்
தறுதலைக்கோ துன்பம் வரும்
சண்டை போட்டா பகை வரும்
கடவுளே ஒங்க கோவம் வரும்
எல்லாரும்: கோவம் வரும் கோவம் வரும்
முன்பாட்டு: ஒண்ணுபட்டா நீ வருவே
எல்லாரும்: கோவம் வரும் கோவம் வரும்
முன்பாட்டு: ஒண்ணுபட்டா நீ வருவே
ஒத்தாசை பண்ணிடுவே
கொண்ணுபோட்டோம் வேத்துமய
கோலமுடன் வந்துவிடு
எல்லாரும்: வந்துவிடு, வந்துவிடு
3. சாமிய வணங்குறது (பின்வாங்கிப் பாடுறது)
பெத்தவரே ஒலகத்தைப் படைச்சவரே - அம்மயப்பா
எல்லாரும்: வந்துவிடு, வந்துவிடு
3. சாமிய வணங்குறது (பின்வாங்கிப் பாடுறது)
பெத்தவரே ஒலகத்தைப் படைச்சவரே - அம்மயப்பா
அத்தனைக்கும் ஆண்டவரே ஒம்பாதம் வணக்கம்
மூத்தவரே, மீட்டெடுக்க வந்தவரே.- கன்னிமரி
பெத்தெடுத்த பாலகரே ஒம்பாதம் வணக்கம்
சுத்தத்திரு ஆவியாரே சூரியரே - ஒத்துமய
கத்துத்தரும் வாத்தியாரே ஒம்பாதம் வணக்கம்
ஆத்துக்குள்ள ஊத்துத்தண்ணி அன்பின்அருள் நாதா - பாவ
ஆத்துக்குள்ள ஊத்துத்தண்ணி அன்பின்அருள் நாதா - பாவ
ஊத்தைப் போக்கும் சீவதண்ணி அன்பின்அருள் நாதா
சுத்தநெய்யி பொங்கச் சோறு அன்பின்அருள் நாதா - பசியெ
நித்தம் போக்கும் சீவ சோறு அன்பின்அருள் நாதா
காத்துல நீ தென்னங்காத்து அன்பின்அருள் நாதா ஒலகம்
மொத்தத்துக்கும் வீசும் காத்து அன்பின்அருள் நாதா
முத்திப்போன சொரக்கா நாங்க அன்பின்அருள் நாதா – ஒடச்சி
முத்திப்போன சொரக்கா நாங்க அன்பின்அருள் நாதா – ஒடச்சி
வித்தெடுத்து வெதப்பவரு நீ அன்பின்அருள் நாதா
நெருஞ்சி முள்ளு வௌஞ்ச நிலம் - அன்பின்அருள் நாதா - எங்க
நெஞ்சைக் கொத்தி களையெடுப்பவர் நீயே அருள் நாதா
கருகிப்போன காணப்பயிறு அன்பின்அருள் நாதா - அதை
கருகிப்போன காணப்பயிறு அன்பின்அருள் நாதா - அதை
துளுக்கவைக்கும் வெவசாயி நீ அன்பின்அருள் நாதா
விருத்தியில்லா பருத்திக்காடு அன்பின்அருள் நாதா – அதை
வௌய வைக்கும் வெவசாயி நீ அன்பின்அருள் நாதா
ஏரெடுத்து வந்தவரே அன்பின்அருள் நாதா - ஒங்க
பேரெடுத்து போற்றி செய்யிரோம் அன்பின்அருள் நாதா
4. குத்தம் உணருறது
தனிப்பாட்டு:
4. குத்தம் உணருறது
தனிப்பாட்டு:
கஞ்சிக்கில்லாம சனம் காஞ்சி கெடக்கும்போது
அஞ்சி அஞ்சி சனம் அடிமையாயிருக்கும்போது
அநீதிய எதுத்துப் பேசாம எல்லாரும்
ஏத்துக்கிட்டிருக்கும்போது- நாங்க
ஏத்துக்கிட்டிருக்கும்போது- நாங்க
எல்லாரும்தானே/சாமி குத்தவாளி குத்தவாளி
(பின்பற்றி பாடுறது)
பெத்த தெய்வமே உன்னை விரோதிச்சிகுத்தம் செஞ்சோமே பாவ சேத்தில் விழுந்தோமே
சொந்த பந்தத்தை ஐயோ விரோதிச்சி
நிந்தை செஞ்சோமே நீச சேத்தில விழுந்தோமே
இருட்டில் நடந்து ஐயோ வெளிச்சம் துறந்து
திருட்டுத்தனமாய் பாவ தீயில் விழுந்தோமே
பெற்றவரேயின்னு ஒங்க பேரைச் சொல்லியும்
குற்றம் செஞ்சோமே பாவ குப்பையானோமே
யேசுநாதர் பேரால / இரக்கம் காட்டி மன்னிப்பாய்
நேசர் தூய ஆவிய / பேசவை மனசாட்சியாய்
உத்தமரே நின் சேவகம் நித்தம்செய்யவேணுமே
மத்தவரை மன்னிக்கும் மனசு வரவேணுமே
5. மன்னிப்புப் பெறுறது
ஒருவர்:
5. மன்னிப்புப் பெறுறது
ஒருவர்:
குத்தங்க எல்லாத்தையும் உண்மையா ஒணர்ந்து
மனசுநொந்து - (3) இறையே ஒங்ககிட்ட வந்தோமே
எல்லாரும்: ஒங்ககிட்ட வந்தோமே
எல்லாரும்: ஒங்ககிட்ட வந்தோமே
ஒருவர்:
நீங்க மன சிரங்கி, மனசிரங்கி - (3)
தந்த மன்னிப்பைப் பெத்துக்கிட்டோமே
எல்லாரும்: மன்னிப்பைப் பெத்துக்கிட்டோமே
6. பைபிள் படிக்கிறது
7. பைபிள விளங்கிக்கிறது
8. நம்பிக்கை உறுதி எடுக்கிறது
அண்ட சராசரங்கள் கண்டவை காணாதவை
எல்லாரும்: மன்னிப்பைப் பெத்துக்கிட்டோமே
6. பைபிள் படிக்கிறது
7. பைபிள விளங்கிக்கிறது
8. நம்பிக்கை உறுதி எடுக்கிறது
அண்ட சராசரங்கள் கண்டவை காணாதவை
அத்தனையும் படைச்சவரு ஒருவரேயின்ணு நாங்க
நம்பிக்கையுறுதி கொண்டோம் – இந்த
செகத்திலுள்ளவர் பகைத்து வந்தாலும்
பற்றுறுதியை விட்டிடிவே மாட்டோம்
சருவ வல்லவரோட ஒரேபுள்ள எங்க
குருவேசு கிறிஸ்துநாதர் ஆண்டவரே ஆண்டவரவரு
திருச்சித்தம் நெறவேத்த பரிசுத்த ஆவியாரால
மரியாள் கன்னிகையவள் மகவாய்ப் பிறந்தாரின்னு
– நம்பிக்கை
பொந்திபிலாத்து ஆண்ட அந்தக் காலத்தில் இரத்தம்
பொந்திபிலாத்து ஆண்ட அந்தக் காலத்தில் இரத்தம்
சிந்த சிலுவையேறி நிந்தையும் பாடும் பட்டு
நொந்து மரித்தடக்கம் ஆகிப் பாதாளம் ஏகி
விந்தையாய் மூணாம் நாளில் உயிரோடெழுந்தாரின்னு
- நம்பிக்கை
ஒத்துமயவளக்க சுத்த ஆவியாருண்டு
- நம்பிக்கை
ஒத்துமயவளக்க சுத்த ஆவியாருண்டு
உத்தம வழிபோகும் ஒரே பொது சபையும்
குத்தத்துக்கு மன்னிப்பும் செத்தவர் உயிர்ப்பதும்
சுத்த சனத்துறவும் நித்திய வாழ்வும் உண்டு
- நம்பிக்கை
9. காணிக்கைப் பாட்டு
10. திருவிருந்து ஆரம்பிக்கிறது
(முன்பாட்டு)
ஒடம்பொறவிக ஒண்ணுகூடிஒரு உலையில் வாழும்போது இருக்குதே நன்மை இன்பம்
பறக்குதே துன்பமெல்லாம்
(எல்லாரும் பின்வாங்கி பாடுறது)
இயேசுவே / உத்தம குரு சாமியேஅப்ப ஒங்க சீடருங்க கூட இருந்ததுபோலவே /
இப்ப / எங்க கூட இருக்கணுமே
இந்தச் சாப்பாட்டை நாங்க பள்ளயம் பிரிச்சி /
பகுந்து தின்னும்போது / உங்க திருமொகம் காட்டணுமே
பெத்தவர் சாமியோடும் / பரிசுத்த ஆவியோடும்
எப்போதும் கடவுளாக இருந்து/நாட்டாமை செய்றிகளே,/ ஆமென்.
முன்பாட்டு:
அதனால நாங்க / எல்லாருமா சேந்து,/ எல்லாருக்கும்
சோறு போடுற / ஒரே தெய்வீக வெவசாயியான / உங்களை /
சுத்த,/ பரிசுத்த,/ அதிசுத்த/ ஒரே சாமியே யின்னு
எல்லாரும்:
எல்லாரும்:
போற்றிப் புகழுறோம் பெத்தவரே
பாதம் பணியிறோம் உத்தமரே
முன்பாட்டு:
முன்பாட்டு:
பெத்தவரான பரிசுத்தரே/ எல்லா சக்தியும்
கொண்ட ஒரே சாமியே/
கொண்ட ஒரே சாமியே/
ஒங்கள தெனந்தோறும்/
எல்லா எடத்துலேயும் கும்புடுறது தானே
எங்க கடமை/அதானே எங்களுக்கு
நீதி/ அதனாலே
எல்லாரும்:
எங்க கடமை/அதானே எங்களுக்கு
நீதி/ அதனாலே
எல்லாரும்:
போற்றிப் புகழுறோம் பெத்தவரே
பாதம் பணியிறோம் உத்தமரே
முன்பாட்டு:
முன்பாட்டு:
ஒங்க மகனும்/ எங்க ஒரே தலைவருமான/
இயேசுகிறிஸ்து மூலமா/ நீங்க
இயேசுகிறிஸ்து மூலமா/ நீங்க
அண்டசராசரங்களையும் படைச்சி/ எங்களையும்
ஒங்க சாயலா படைச்சீங்க/ நாங்க பாவத்துல
விழுந்த போது/எங்களை மீட்டெடுத்தீங்களே, அதனாலே
எல்லாரும்:
போற்றிப் புகழுறோம் பெத்தவரே
எல்லாரும்:
போற்றிப் புகழுறோம் பெத்தவரே
பாதம் பணியிறோம் உத்தமரே
11. விருந்தை ஆசி செய்கிறது
முன்பாட்டு:
11. விருந்தை ஆசி செய்கிறது
முன்பாட்டு:
ஆமய்யா (அம்மா) பெத்தவரே நீங்க சுத்தரய்யா,
பரிசுத்தரய்யா ஒங்க ஒரே புள்ளியான இயேசுவை
தந்து எங்களை மீட்டெடுத்த தெய்வமய்யா
ஒரே தெய்வமய்யா
எல்லாரும்:
எல்லாரும்:
ஆமா தெய்வமய்யா ஒரே தெய்வமய்யா
முன்பாட்டு:
முன்பாட்டு:
அவரைக் காட்டிக்கொடுத்த அன்னிக்கி ராத்திரி
ஒணவை எடுத்து தோத்திரஞ் சொல்லி ஆசி செஞ்சி
பகுந்து குடுத்து எல்லாரும் வாங்கி சாப்புடுங்க இது
ஒங்களுக்காக குடுக்கப்பட்ட என் உடம்பு மெய்யா திரு உடம்பு
எல்லாரும்:
எல்லாரும்:
ஆமா உம் உடம்பு மெய்யா திரு உடம்பு
முன்பாட்டு:
என்னை மறக்காமலிருக்க
முன்பாட்டு:
என்னை மறக்காமலிருக்க
தெனந்தெனம் செய்யுங்கயின்னாரே
இப்படி சாப்பிட்ட பொறவு குடிக்கிற பாத்திரத்தை
இப்படி சாப்பிட்ட பொறவு குடிக்கிற பாத்திரத்தை
எடுத்து தோத்திரம் சொல்லி ஆசி செஞ்சி
எல்லாரும் இதை குடிங்க இது பாவகுத்தத்தை
எல்லாரும் இதை குடிங்க இது பாவகுத்தத்தை
போக்கிறதுக்காக எல்லா சனத்துக்காகவும் நான்
சிந்திய என் இரத்தம் மெய்யா திரு இரத்தம்
எல்லாரும்:
ஆமா உம் இரத்தம் மெய்யான திரு இரத்தம்
எல்லாரும்:
ஆமா உம் இரத்தம் மெய்யான திரு இரத்தம்
முன்பாட்டு:
என்னை மறக்காமலிருக்க
என்னை மறக்காமலிருக்க
தெனந்தெனம் செய்யுங்கயின்னாரே
ஒங்க சாவையும் உயிர்த்தெழுந்ததையும் மறக்க முடியுமா?
நன்றி நன்றி பலகோடி நன்றி இயேசு சாமி
நீங்க திரும்பவும் வரணுமே ஆமென்
இந்த விருந்து ஒங்க சதைதானே ஐயா?
அனுதினமதில் நிலைத் திருந்திட அருள்புரி
இயேசய்யா எங்க இரட்சக பெருமானே
இந்த விருந்து ஒங்க இரத்தந்தானே ஐயா
இந்த விருந்து ஒங்க இரத்தந்தானே ஐயா
அனுதினமதில் நிலைத் திருந்திட அருள்புரி
மேசியா இயேசு கிறிஸ்து பெருமானே
மொத்தத்தில் இதுயெல்லாம் நீங்கதானே ஐயா
அனுதினமதில் நிலைத் திருந்திட அருள்புரி
இயேசய்யா எங்க இரட்சக பெருமானே
12. இயேசுநாதர் கத்துத்தந்த செபம்
வானத்தில் வாழுகிற பெத்தவரே இறைவா – உம்
12. இயேசுநாதர் கத்துத்தந்த செபம்
வானத்தில் வாழுகிற பெத்தவரே இறைவா – உம்
பேர் விளங்க வேணும் எங்க விடுதலை வரவேணும்
நீதியற்ற ஆட்சி வேணாம் பெத்தவரே இறைவா - ஓந்
நேமையுள்ள ஆட்சி வேணும் உத்தமரே இறைவா
வானத்தில ஒனது சித்தம் கொடிபறப்பதுபோல - எங்க
வானத்தில ஒனது சித்தம் கொடிபறப்பதுபோல - எங்க
ஒலகத்திலும் நடக்க வேணும் பெத்தவரே இறைவா
ஒத்துமயா ஒரு ஒலையில் சேந்து தின்னும் சோறு
ஒத்துமயா ஒரு ஒலையில் சேந்து தின்னும் சோறு
நித்தநித்தம் கெடைக்கணுமே பெத்தவரே இறைவா
குத்தங்களை நீ மன்னிச்ச பெத்தவரே இறைவா அப்டி
குத்தங்களை நீ மன்னிச்ச பெத்தவரே இறைவா அப்டி
மத்தவங்களை குத்தங்களை மன்னிச்சிட்டோம் இறைவா
சேத்துக்கள்ள மடிந்தழியும் நாத்துபோல நாங்க - பேய்
சேத்துக்கள்ள மடிந்தழியும் நாத்துபோல நாங்க - பேய்
சோதனையில் வீழ்ந்திடாம காத்திடுவாய் இறைவா
ஆட்சியுடன் அதிகாரமும் பெத்தவரே இறைவா
ஆட்சியுடன் அதிகாரமும் பெத்தவரே இறைவா
கீர்த்தியெல்லாம் ஒங்களுக்கே தந்திடுறோம் இறைவா
ஆமா ஆமென் ஆமா ஆமென் உத்தமரே இறைவா
ஆமா ஆமென் ஆமா ஆமென் உத்தமரே இறைவா
அநாதியாக ஆமென் ஆமென் பெத்தவரே இறைவா
13. விருந்து பரிமாறுறது
வாங்க எல்லாரும் தயாரா இருக்குது!
14. திருவிருந்துப் பாடல்
13. விருந்து பரிமாறுறது
வாங்க எல்லாரும் தயாரா இருக்குது!
14. திருவிருந்துப் பாடல்
பல்லவி
திருவிருந்து விடுதலை தந்திடும் அருமருந்துஅனுபல்லவி
மந்திரமாயமில்ல மரிச்சவரை நெனச்சிதந்திடும் விருந்துமல்ல சாத்திர சடங்குமல்ல
சரணங்கள்
1. சொந்தமுயற்சியாலே வந்திடும் மீட்புமல்லதந்திரமாக தெய்வ அருள்பெறும் லஞ்சமல்ல
2. அன்னைக்கி மேலறையில் ஆசானாம் இயேசு சாமி
2. அன்னைக்கி மேலறையில் ஆசானாம் இயேசு சாமி
அனைத்துநோய் போக்கிடவே அரைச்சி வச்ச நல்மருந்து
3. நித்திய வாழ்வு தரும் உத்தம காயகல்பம்
3. நித்திய வாழ்வு தரும் உத்தம காயகல்பம்
பத்தியம் பகை மறந்து பகுந்து தின்னும் சோறு தானே
15. வேண்டிக்கிறது: (ஏவப்பட்டவங்க செபம் பண்ணலாம்)
15. வேண்டிக்கிறது: (ஏவப்பட்டவங்க செபம் பண்ணலாம்)
16. ஆசி பகுந்துக்கிறது (பின்பற்றிப் பாடுவது)
பெத்தவராம் சாமியால வரும்/
பெத்தவராம் சாமியால வரும்/
ஒடம்பொறப்பு ஒறவும் அன்பும்/
உத்தமரேசு தந்த/ ஒரு ஓலை விருந்தான அருளும்/
சுத்தராம் ஆவியார் தரும்/ ஒத்துமையும் அறிவும்
நித்தநித்தம்/நம்ப எல்லாரோடுங்கூட/நிலவிட வேணுமே./
ஆமென்.
ஆமென்.

.jpg)