தமிழ்நாடு இறையியல் கல்லூரி
அரசரடி, மதுரை -16
திறனாய்வு வழிபாடு
Theological Education: knowing and Doing Faith
நாள்: 10-07-2024
நேரம்: 8.00 மணிக்கு
இடம்: கிறித்தரசர் வழிபாட்டுமனை
வழிபாடு நடத்துபவர்: திருமிகு. சீ.டில்டன் பரமானந்தன்
திறனாய்வு மாணவர்: திருமிகு. ஏஞ்சலோ சாலமோன்
திறனாய்வு ஆசிரியர்: அருட்பணி. ஞா. ஞானபிரபு
வழிபட அழைப்பு: (Call to worship)
கடவுள் யாராக இருப்பார், என்பதை அறிந்து கொள்வதை விட; கடவுள் யாராக இருக்க மாட்டார், என்னும் புரிதலை வெளிக்கொனார்வதே இறையியல் கல்வியாக இருக்கின்றது. இத்தகைய இறையியல் கல்வியின் வாயிலாக அடிப்படைவாதத்தை உடைத்து, விடுதலையின் வழி நடத்தி; வாழ்வை உறுதிப்படுத்த உடன் பயணிக்கும் கடவுளை இணைந்து தொழுவோம் வாருங்கள்!
தொடக்க இறைவேண்டல்: (Opening Prayer)
உடன் பயணிக்கும் உண்மையாளரே, துன்பங்களில் துணை நிற்பவரே, இந்த காலை வேலைக்காக நன்றி செலுத்துகிறோம். இறையியல் கல்வி ஊடாய் உம்மை வெளிப்படுத்தி எங்களின் புரிதலைப் புத்தாக்கம் செய்து கொண்டிருக்கின்ற இந்த வேளையில், இவ்வழிபாட்டின் ஊடாய் எங்களோடு இணையும்படியாகவும்; இவ்வழிப்பாட்டின் அனைத்துக் கூறுபாடுகளிலும் உம் இருத்தல் நிலையை உணரவும் அருள்புரியுமாறு வேண்டுகிறோம். எங்கள் அனைவரின் சிந்தனைகளை சீர்படுத்தும், கூர்மைப்படுத்தும், உம்மை குறித்தான புரிதலை விரிவுப்படுத்த வேண்டுகின்றோம். இவை அனைத்தையும் இறைமகன் இயேசு கிறிஸ்துவின் திருப்பெயராலே வேண்டிக்கொள்கிறோம் உன்னத கடவுளே. ஆமென்.
தொடக்கப் பாடல்: (Praising song) பு.பாடல்கள் எண்: 53
பூமியில் வாழுற மக்களே எல்லாரும்
கூடியே வாருங்க கும்பிடலாம்
ஆரவாரத்தோட ஆனந்தமா பாட
ஆண்டவன் திருமுன் சேர்ந்திடலாம்
1. கடவுள் ரொம்ப நல்லவரு ஆமா நல்லவரு
கடலைப் போல ரொம்பவும் கிருபை உள்ளவரு
உள்ளவரும் அவர் நல்லவரும் அவர்
உள்ளே வாங்க பாட ஒத்துமைய கூட
ஜேம்ஸ் தியாப்பிலஸ் அப்பாவு (பரட்டை அண்ணன்)
2. பிழை உணர அழைப்பு: (Call to confession)
"யாரையும் தீயவன் என்று கூற வேண்டாம்.
நீ நல்லவன், இன்னும் நல்லவனாய் இரு என்று சொல்லுங்கள்”
- விவேகானந்தர்
என்னும் கூற்றுக்கு இணங்க, நல்லவர்களாகிய நாம் இன்னும் நல்லவர்கள் ஆகும் பொருட்டு. நாம் நம்முடைய பிழைகளை கடவுளிடம் உடன் மனிதர்களுடன் இணைந்து அறிக்கையிடுவோம்.
பிழை அறிக்கை: (Confession of Sin)
தலைமுறை தலைமுறையாக பின்பற்றி வருகின்ற. பழக்கம் என்பதற்காகவும், நம் முன்னோர்கள் சொல்லி விட்டார்கள் என்பதற்காகவும், பலரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது, மேன்மை படுத்த படுகின்றது என்பதற்காகவும், அடிப்படைவாதத்தையும், மேல் ஆதிக்கச் சிந்தனைகளையும்; பிடிவாதமான கருத்துகளையும்; பல சமயக் கோட்பாடுகளையும் சிந்தித்துத் தெளிவு பெறாமல், கேள்வி எழுப்பாமல், அவற்றை ஏற்றுக்கொண்ட இழிநிலையை எண்ணி மனம் வருந்துகின்றோம்.
(இசை)
இருமை பல நேரங்களில் நாம் உண்மை பொய் என்கின்ற கோட்பாடுக்குள்ளேயே பயணிக்கின்றவர்களாக இருக்கின்றோம். இதில் நாம் நிற்கும் நிலைப்பாட்டை ஒத்த கருத்தை வலுவூட்ட வாதாடுகின்றவர்களாக காணப்படுகின்றோம். ஆனால் பல நேரங்களில் உண்மை, பொய் இவற்றைத் தாண்டி உண்மைகளும், பொய்களும் உண்டு என்பதை சிந்திக்க மறந்த நிலையை எண்ணி மனம் வருந்துகின்றோம்.
(இசை)
ஒடுக்குதலுக்குள்ளாக்கப்பட்டவர்களின் வலிகள், கடினப்பாடுகள், நிலைப்பாடுகள் போன்றவற்றைப் பல நேரங்களில் ஒடுக்கப்படாதவர்களாகிய நாங்கள் எங்களுடைய எண்ணங்களிலிருந்து அவர்களின் தேவைகள், நிலைப்பாடுகள் வாழ்க்கை போன்றவற்றை விளக்குகின்றோம் அவர்களுக்கு எத்தகைய விடுதலை வேண்டும் என்று நம் நிலைப்பாட்டில் இருந்து கூறுகின்றோம். உண்மையிலேயே அவர்களுக்கு எத்தகைய விடுதலை வேண்டும் என்று அவர்களையே சிந்திக்க வைக்கத் தவறிய நிலையை எண்ணி மனம் வருந்துகின்றோம்.
(நாம் நமது தனிப்பட்ட பிழைகளை அறிக்கை செய்வோம்)
பிழைப் பொறுத்தருளலின் உறுதி: (Absolution)
விழிப்பாயிருந்து உன் இதயத்தை காவல் செய்; ஏனெனில் அதனின்று பிறப்பவை உன் வாழ்க்கையின் போக்கை உறுதி செய்யும் (நீதிமொழிகள் 4:34) திருமொழின் படி நம்முடைய சிந்தனைகள்தான் செயல் வடிவமாகின்றது. நம் சிந்தனைய மாற்றம் பெற்று சீர் பொருந்துமாயின் நம்முடைய செயல் சீறும் சிறப்புமாய் அமையும். ஆகவே நாம் மனம் மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் வெளிப்படுத்துவோம் நமக்கு இரக்கம் காட்டும் ஆண்டவர் நம் செயலை கண்டு மகிழ்ச்சியுற்று நிலை வாழ்வின் உறுதி அளித்து காப்பராக, ஆமென்.
திருமறைப் பாடம்: (Scripture Readings)
(Exodus) விடுதலைப்பயணம் 03:01-12
(2 Timothy) 2 தீமோத்தேயு 02:01-13
(John) யோவான் 12:20-26
சிறப்பு நிகழ்வு: (Special Event)
அருளுரை: (Sermon)
பற்றுறுதி அறிக்கை: (Affirmation)
1. விண்ணையும் மண்ணையும் படைத்தவராம்
கடவுள் ஒருவர் இருக்கின்றார்.
தந்தை, மகன், தூய ஆவியராய்
ஒன்றாய் வாழ்வாரை நம்புகிறேன்.
2. தூய ஆவியின் வல்லமையால்
இறை மகன் நமக்காய் மனிதரானார்
கன்னி மரியிடம் பிறந்தவராம்
இயேசுவை உறுதியாய் நம்புகிறேன்.
3. பிலாத்துவின் ஆட்சியில் பாடுபட்டார்
சிலுவையில் இறந்து அடக்கப்பட்டார்
மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்
இறப்பின் மீதே வெற்றி கொண்டார்.
4. விண்ணகம் வாழும் தந்தையிடம்
அரியணைக் கொண்டு இருக்கின்றார்
உலகம் முடியும் காலத்திலே
நடுவராய் திரும்பவும் வந்திடுவார்.
5. தூய ஆவியாரை நம்புகிறேன்
பாரினில் அவர் துணை வேண்டுகிறேன்
பாவ மன்னிப்பில் தூய்மை பெற்றுப்
பரிகார வாழ்வில் நிலைத்திடுவேன்.
6. திரு அவை உரைப்பதை நம்புகிறேன்
புனிதர்கள் உறவை நம்புகிறேன்
உடலின் உயிர்ப்பை நிலைவாழ்வை
உறுதியுடனே நம்புகிறேன்....ஆமென்.......
(கத்தோலிக் திருப்பலி முறைபடி)
நன்றி செலுத்துவோம்: (Thanks giving)
அன்பு நிறைந்த நல்ல கடவுளே.. திருமறையை நன்கு ஆராய்ந்து படிக்கவும்., இறையியல் தகவல்களைப் பெற்றுக் கொள்ளவும், பெற்றுக்கொண்ட தகவல்களை சமுதாயத்தில் பொருத்திப் பார்க்கவும்., நீர் கொடுத்த இந்த இறையியல் கல்விக்காக இறைவா உமக்கு நன்றி செலுத்துகின்றோம்
எங்கள் கல்லூரி சிறந்த முறையில் இயங்கி வருவதற்காகவும், கல்லூரியின் தேவைகள் சந்திக்கப்படுவதற்கு பணம் திரட்டுவதற்காக கல்லூரி எடுத்து வருகின்ற முயற்சிகளில் தொடர்ந்து உம் அருள் இருந்து வருவதற்காகவும். இறைவா உமக்கு நன்றி செலுத்துகின்றோம்.
மன்றாட்டு: (Intercession)
திருச்சியில் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் நாட்டுப்புற கலை பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் நாடகம், கரகாட்டம், சிலம்பாட்டம் முதலிய கலைகளில் 17 வயதுக்கு மேற்பட்ட எந்த வயதினரும் சேர்ந்து கொள்ளலாம். இந்தப் பயிற்சி மையத்தில் ஆண்டு கட்டணமாக ரூ.500 செலுத்தினால் போதுமானது என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார். இப் பயிற்சிகள் தொடர்ந்து நடைபெறவும் அழிந்து வரும் தமிழ் கலைகள் மீட்டுருவாக்கம் பெறவும் இறைவா உம்மிடம் மன்றாடுகின்றோம்.
தமிழகத்தில் ஒரு தலித் தலைவரான திருமிகு ஆம்ஸ்ட்ராங் அவர்களின் மரணம், தலித் மக்களிடையே அச்சத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது மேலும் இதுபோன்ற படுகொலைகள் நடைபெறாத வண்ணமும் அவருடைய குடும்பத்திற்கு ஆறுதலையும் தேருதலையும் தரும்படியாகவும், அவருடைய ஆன்மா அமைதி பெறவும் மன்றாடுகின்றோம் மேலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் சீர்படவும்., தலைவர்களும் பொதுமக்களும் பாதுகாப்பான முறையில் வாழவும், தமிழக அரசு முறையான செயல் திட்டங்களை மேற்கொள்ளவும் இறைவா உம்மிடம் மன்றாடுகின்றோம்.
ஆண்டவர் கற்றுத்தந்த இறைவேண்டல்: ( தழுவியது) (Lord's Prayer)
மண்ணுலகில் எங்களுடன் உடன் பயணிக்கும் பெற்றவராம் தூய கடவுளே உமது பெயர் உன் செயல்களினால் போற்றப்படுக உமது ஆளுகை வருக உமது திருவுளம் மண்ணுலகில் அனைத்து இடங்களிலும் நிறைவேறுக இன்று தேவையான உணவு எங்களுக்குத் தாரும் எங்களுக்கு அடுத்திருப்போரின் பிழைகளை ஏற்றுக்கொண்டு மன்னிப்பதுபோல எம் பிழைகளையும் ஏற்றும் மன்னித்தருளும் எங்களை சோதனைக்குட்படுத்தாதையும் தீயோனிடமிருந்து எங்களை விடுவியும் மண்ணில் விழுந்து வளர்ந்து பலன் கொடுக்கும் கோதுமை மணி என உமது ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமகே ஆமென்.'
ஒப்படைப்பு: (Dedication)
இறைவாழ்த்து: (Benediction)
தாம் யாராக இருக்க மாட்டார் இன்று இறையியல் கல்வி வழியாய் வெளிப்படுத்தி இருக்கின்றவராகவே இருக்கின்ற கடவுளின் அன்பும் கடவுள் முழுமையாக வெளிப்பட்ட மனிதராகிய இயேசு கிறிஸ்துவின் அருளும் அனைத்து நிலைகளிலும் நமக்கு வலுவூட்ட துணை நிற்கும் தூய ஆவியாரின் சிந்தையாளும் வழி நடத்துதலும் இன்று போல் என்றும் நம்முடன் நிலைத்திருப்பதாக ஆமென். ஆமென்.. ஆ...ஆ.. ஆமென்.
நிறைவு பாடல்: (Closing Song) பு.எண்: 324
இறையியல் பயணம் தொடர்வோம் - திரு
மறைவழி நின்றே பயில்வோம்
விடுதலை வாழ்வினை நினைத்தே - நல்
வீரமாய் செயல்படும் இறையியல்
நடுநிலை துறந்தே நலிந்தவர்-தம்
நலனையே நாடிடும் இறையியல்
- மெ.தாமஸ் தங்கராஜ்
அனுப்புதல் (Sending Out)
நடத்துநர்: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக
அவை: அவர் உம்மோடும் இருப்பாராக
நடத்துநர்: இறையியல் கல்வியை கற்ற நாம் அதைச் செயல்படுத்த கடந்து செல்வோம்
அவை: ஆண்டவருக்கே மாற்றி உரித்தாக
Gist in English
Introduction:
The relationship between faith, deeds, and theological education, emphasizing the importance of understanding about God and their nature. Faith is defined as an emotional experience rather than relying on knowledge or arguments. Theology, derived from the Greek word "theos + logos" (meaning "word about God"), Education is derived from Latin word Educare, which means to reveal the hidden. Theological education means revelation of word of God.
Theological Education: Knowing the call
The above passage highlights three main points: Moses' call, his vision, and God's identification with the sufferers. The Israelites were suffering, and God, remembering the covenant with their forefathers, stood with the oppressed. Exodus 2:11-15 explains why God chose Moses, emphasizing Moses' empathy for the oppressed and his desire for justice and liberation. Moses' experience, including witnessing the burning bush, symbolizes the Israelites' unwavering faith despite their suffering.
Theological education should focus on understanding the emotions and context of people, crucial for every theologian. God sees, hears, and knows the suffering of people and walks with them towards liberation. The call for Moses is not just God's initiative but also a response to the people's cries for liberation. In today's context, societal oppression including government, power, marginalized which led the people's call for God's intervention, and we are called to ministry and we must be attuned to the vision and hearing of sufferers.
True theological education involves understanding the suffering and injustice faced by oppressed people, which leads to a pursuit of justice. By understanding the people, ont understands the God who liberates them.
Theological Education: Commitment to all
This epistle, written during the final days of Paul's life, serves as a heartfelt advice to Timothy. Paul urges Timothy to remain steadfast as a testimony for Jesus, to fulfill his pastoral duties, and to be a role model in all situations. This book is a pastoral epistle, it emphasizes the importance of self-denial, concern for others, and exemplary conduct. The mission given by God to Paul is now entrusted to Timothy, who must pass it on to the people.
II Timothy 2:1-13 is divided into two main sections: verses 1-7, which discuss being a good soldier of Jesus Christ, and verses 8-13, which focus on the role of Jesus Christ. The first two verses contain Paul's advice to Timothy, encouraging him to strengthen himself by the grace of Jesus Christ, similar to God's reassurance to Moses in Exodus 3:12. Paul highlights two essential characteristics for those called to God's mission: the ability to teach others and faith in God. Paul asserts that individuals with these traits can be effective missionaries.
Verses 3-7 talk about a soldier, sportsperson, and farmer to illustrate the qualities needed for commitment to the mission:
1. Soldier: A soldier sacrifices his life for his faith, remains focused and committed, and works for commitment rather than survival. Paul uses the soldier to symbolize unwavering dedication.
2. Sportsperson: A sportsperson lives a regulated life, works hard, and is oriented towards victory. They adhere to moral regulations and rules, understanding that breaking them results in losing the victory.
3. Farmer: A farmer exemplifies hard work and reaps rewards through diligence. Similarly, a theologian gains rewards through committed and ethical gospel work.
In verses 8-13, Paul begins with the genealogy of Jesus Christ through David, emphasizing Jesus' universal connection to all ethnicities. This section can be divided into three parts, addressing the human and divine nature of Jesus Christ, the persecution for the gospel, and the necessity for the gospel to be Christ-centered. Paul insists that those who do not believe in God cannot be a missionary. He elaborates on the essential traits for a good missionary: commitment, ethics, hard work, and understanding one's mission, faith status, and also required for the present context.
The practice of theological education encompasses the characteristics of a soldier, sportsperson, and farmer, requiring hard work, techniques, strategies, deep commitment, and intense practice. It is a continuous process aimed at fostering commitment, a regulated life, hard work, and a justice-centered God's reign, affirming life.
Theological Education: Life in Destruction
This incident is a Johannine special. Here some of the Greeks who came to celebrate the Passover wanted to see Jesus. It is observed that they wanted to discern, perceive Jesus. Earlier Jesus raised Lazarus from the dead and here he's using the wheat parable. Through this we can understand that dying for the sake of others is not death at all. Having selfish way of lifestyle is the death of the society. Losing ourselves for the sake of others and having social concern is a life sustaining value. This must be acquired by the theological education.
Conclusion
All the three portions insist us to commit ourselves towards social resurrection. So in our seminary we are not only learning by books but to engage with the people and learning from the people. The second year off-campus program, third year village dwelling program taught us the values of sustaining a communal life and faith. As life and faith should go together. So the paradigm shift of understanding redemption from personal experience to social experience is what we need today in our context.
May God bless these words. Amen










