Type Here to Get Search Results !

திருமணத்தைக் கனப்படுத்துதல் | Honour Marriage | Jesus Sam

தமிழ்நாடு இறையியல் கல்லூரி
அரசரடி, மதுரை -16

திருமணத்தைக் கனப்படுத்துதல்
Honour Marriage

நாள்: 28-07-2024

நேரம்: மாலை 6.00 மணிக்கு

இடம்: கிறித்தரசர் வழிபாட்டுமனை

அருட்பணி G. ஞானபிரபு அண்ணன் கூட்டுறவுக் குழு

வழிபட அழைப்பு:
ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்! உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பெயரும் நலமும் பெறுவீர்! உன் இல்லத்தில் உன் துணைவியார் கனிதரும் திராட்சை கொடி போல் இருப்பார்: உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவ மரக்கன்றுகளை போல உம்மை சூழ்ந்திருப்பர். ஆண்டவருக்கு அஞ்சு நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பர் (தி.பா. 128) என்ற திருமொழிகளை நம் வாழ்வில் உறுதிப்படுத்தி நம்மோடு பயணிக்கும் கடவுளை இணைந்து தொழுவோம் வாருங்கள்

தொடக்க இறைவேண்டல்:
தொடக்க பாடல் - பாமாலை 216
1. ஏதேனில் ஆதி மணம்
உண்டான நாளிலே
பிறந்த ஆசீர்வாதம்
மாறாதிருக்குமே

2. இப்போதும் பக்தியுள்ளோர்
விவாகம் தூய்மையாம்
மூவர் பிரசன்னமாவார்
மும்முறை வாழ்த்துண்டாம்

3. கிறிஸ்துவின் பாரியோடே
எழும்பும் வரைக்கும்,
எத்தீங்கில் நின்றும் காத்து,
பேர் வாழ்வு ஈந்திடும்.

4. ஆதாமுக்கு ஏவாளை
கொடுத்த பிதாவே
இம்மாப்பிள்ளைக்கிப் பெண்ணை
கொடுக்க வாருமே

நடத்துபவர்: துணைவரும் துணைவியும் ஒருவருக்கொருவர் இன்பத்திலும் துன்பத்திலும் தங்கள் வாழ்நாள் முழுவதும் ஒருவருக்கொருவர் நட்பும் துணையும் ஊக்கமும் அளிக்க வேண்டும். கடவுள் தாமே படைத்து கிறிஸ்துவில் மீட்டுக்கொண்ட இயல்பான உணர்ச்சிகளை அவர் தம் தூய ஆவியால் வழிநடத்த உடன்பட வேண்டும் குழந்தைகளை பெற்றெடுத்து கடவுளின் மாட்சிமைக்கென்று கிறிஸ்து இயேசுவை பற்றிய அறிவில் அவர்களை வளர்த்திட வேண்டும் இவ்வாறு உயர்ந்த நோக்கங்களுடன் உறுதியான அடிப்படையில் மனுகுளம் நீடித்து வாழ திருமணம் ஏற்படுத்தப்பட்டுள்ளது


திருமணம்
இவ்விருவரும் இந்தத் தூய நிலைமையில் ஒன்றாக்கப்படுவதற்காக இங்கே வந்திருக்கின்றனர். ஆனால் உங்களில் யாருக்காவது திருச்சபையின் நியமப்படியும், தேசச் சட்டப்படியும் இவ்விருவருக்கும் திருமணம் நடத்தக்கூடாதென்று நியாயமான தடை ஏதாவது தெரியுமானால் அதை இப்பொழுதே தெரிவிக்கவேண்டும். இல்லா விட்டால் இனி இதைக் குறித்து ஒருக்காலும் ஒன்றுஞ் சொல்லக்கூடாது.

தடையொன்றுஞ் சொல்லப்படவில்லையானால் ஆயர் திருமணஞ்செய்ய வந்திருக்கும் இருவருக்கும் சொல்லுவது:
நீங்கள் இருவரும் திருமணத்தில் ஒன்றாய் இணைக்கப்படக் கூடாதபடி உங்கள் இருவரில் யாருக்காவது ஏதாவது காரணமிருந்தால், அதை இப்பொழுதே தெரிவிக்கக் கடவுள் முன்னிலையில் உங்கள் இருவருக்கும் கட்டளையிடுகிறேன்.

தடையொன்றுஞ் சொல்லப்படவில்லையானால், இப்பொழுது மாப்பிள்ளையும் பெண்ணும் ஒருவருக்கொருவர் மாலையிடலாம் மாலையிட்டபின், ஆயர் ஏறெடுக்கும் ஜெபம்
சர்வ வல்லமையும் மிகுந்த இரக்கமுள்ள கடவுளே உம்முடைய உதவியின்றி நாங்கள் யாதொன்றையும் தகுந்த முறையில் செய்யத் திராணியற்றவர்கள். இவ்விருவரையும் உமது பராமரிப்பின்படி இங்கே அழைத்து வந்தீர். ஆதலால், இவர்களிருவரும் உம்முன் திருமண ஒப்பந்தத்தில் உடன்படவும், இவர்கள் கொடுக்கப்போகும் வாக்குறுதி களை உண்மையாய்ப் பாதுக்காக்கவும், உம்முடைய பேரருளை இவர்களில் பெருகச்செய்ய வேண்டுமென்று எங்கள் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் வழியாய் வேண்டிக்கொள்ளுகிறோம். ஆமென்.

ஆயர் மணமகனைப் பார்த்து சொல்வது:
____________ நீர் _____________ ஐ உம் மனைவியாக ஏற்றுக்கொண்டு அவரை மாத்திரம் பற்றிக் கொள்ளுவீரா?

ஆயர் மணமகளைப் பார்த்து சொல்வது:
___________ நீர் ___________ ஐ உம் கணவனாக ஏற்றுக்கொண்டு அவரை மாத்திரம் பற்றிக் கொள்ளுவீரா?

(பெற்றோராலோ, பாதுகாவலராலோ பெண் திருமணத்துக்காகக் கொடுக்கப்பட்டால் ஆயர் சொல்லுவது)

இவர்களை திருமணத்திற்கு இணைக்க முன்வருபவர்கள் யார்?

(தகப்பனார் அல்லது பாதுகாவலர் பெண்ணின் வலது கையை மாப்பிள்ளையின் வலது கையில் கொடுப்பார்)

கைகளைக் கோர்த்தபின் குரு சொல்ல, அவருக்குப்பின் மணமகன் சொல்லுவது

_________ ஆகிய நான் _________ ஆகிய உம்மை என் மனைவியாக ஏற்றுக்கொண்டு, இன்று முதல் நன்மையிலும் தீமையிலும் வாழ்விலும் தாழ்விலும், சுகத்திலும் சுகவீனத்திலும், மரணம் நம்மைப் பிரிக்கும்வரை, கடவுளுடைய தூய நியமப்படி, உம்மை நேசிக்கவும், காப்பாற்றவும், உமக்கு கீழ்ப்படியவும் வாக்குக் கொடுக்கிறேன்.

அவர்கள் இன்னும் கைகளைக் கோர்த்துக்கொண்டிருக்க குரு சொல்ல, அவருக்குப் பின் மணமகள் சொல்லுவது:
____________ஆகிய நான் _________ ஆகிய உம்மை என் கணவராக ஏற்றுக்கொண்டு. இன்று முதல் நன்மையிலும் தீமையிலும் வாழ்விலும் தாழ்விலும், சுகத்திலும் சுகவீனத்திலும், மரணம் நம்மைப் பிரிக்கும்வரை, கடவுளுடைய தூய நியமப்படி, உம்மை நேசிக்கவும். காப்பாற்றவும், உமக்குக் கீழ்ப்படியவும் வாக்குக் கொடுக்கிறேன்."

குரு: இவ்வாக்குறுதியைக் கடவுள் கேட்டார். நாமும் கேட்டோம்.

மோதிரங்களை ஆசீர்வதித்துக் ஆயர் ஏறெடுக்கும் ஜெபம்
இரக்கமுள்ள ஆண்டவரே இந்தத் மோதிரங்களை அளிப்பவரும், இதை அணிந்துகொள்ளுபவரும் ஒருவருக்கொருவர் உண்மையாயிருக்கவும், தங்கள் ஆயுள் முழுவதும் அன்பில் நிலைத்திருக்கவும் இம் மோதிரத்தை அணிந்துகொள்ளும் இம் மணமக்களை நீர் ஆசீர்வதிக்க வேண்டுமென்று ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் மூலம் வேண்டிக் கொள்ளுகிறோம். ஆமென்.

மோதிரத்தை மாற்றிக்கொள்ளுதல்
(மோதிரத்தை அணிந்தபின் அதைப் பிடித்துக் கொண்டே ஆயர் சொல்ல, அவருக்குப் பின்னால் மாப்பிள்ளை சொல்லுவது)
உறுதியான நம்பிக்கைக்கும். நிலையான அன்பிற்கும் அடையாளமாக இந்த மோதிரத்தை உமக்கு அணிவிக்கிறேன். என்னுடைய சரீரத்தால் உம்மைக் கனப்படுத்துகிறேன். என் உலகச் சம்பத்து அனைத்தையும் உம்மோடு பகிர்ந்து கொள்ளுகிறேன்.

(மணமகனுக்குப் பெண் மோதிரம் அணிந்தால், அதை அணிந்தபின் ஆயர் சொல்ல, அவருக்குப்பின் பெண் சொல்லுவது)
உறுதியான நம்பிக்கைக்கும், நிலையான அன்பிற்கும் அடையாளமாக இந்த மோதிரத்தை உமக்கு அணிகிறேன். என்னுடைய சரீரத்தால் உம்மைக் கனப்படுத்துகிறேன். என் உலக சம்பத்து அனைத்தையும் உம்மோடு பகிர்ந்து கொள்ளுகிறேன்.

குருசெய்யும் அறிக்கை:
___________ உம் _____________ உம் கடவுளுக்கு முன்பாகவும். இந்தச் சபைக்கு முன்பாகவும் ஒருவருக்கொருவர் தங்கள் வாக்குறுதியை தெரிவித்திருக்கிறபடியால் இவர்கள் கடவுளுடைய நியாயமானபடியும் நாட்டின் சட்டப்படியும் கணவனும் மனைவியுமாய் இருக்கிறார்கள் என்று பெற்றவர் மைந்தன தூயஆவியின் திருபெயரினலே தெரிவிக்கிறேன் ஆமென்.

ஆகையால் கடவுள் இணைத்த இவர்களை மனிதன் பிரிக்காதிருக்கக்கடவன்

திருமறைப் பகுதி
1. மலாக்கி 02:01-08

2. 1 கொரிந்தியர் 13:10-18

3. மாற்கு 10:02-09

அருளுரை: திருமணத்தை கனப்படுதுதல்

பற்றுறுதி அறிக்கை: நிசேயா பற்றுறுதி அறிக்கை

திருப்பணிக் கொடை (கீர்த்தனை 434)
1. ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்த மிகவே
நேசா உதியும் சுத்தரே நித்தம் மகிழவே
வீசீரோ வானஜோதி கதிரிங்கே
மேசியா எம் மணவாளனே
ஆசாரியரும் வான் ராஜனும்
ஆசீர்வதித்திடும்
 - வீசீரோ

2. இம் மணமக்களோடென்றும் என்றென்றும் தங்கிடும்
உம்மையே கண்டும் பின்சென்றும் ஓங்கச் செய்தருளும்
இம்மையே மோட்சமாக்கும் வல்லவரே
இன்பத்தோடென் பாக்கி சூட்சமே
உம்மிலே தங்கித்தரிக்க
ஊக்கம் அருளுமே
 - வீசீரோ

3. ஒற்றுமையாக்கும் இவரை ஊடாக நீர் நின்றே
பற்றோடும் மீது சாய்ந்துமே பாரில் வசிக்கவே
வெற்றி பெற்றோங்கும் இவர் நெஞ்சத்திலே
வீற்றாளும் நீர் ஏசு ராஜனாம்
உற்றவான் ராயர் சேயர்க்கே
ஒப்பாய் ஒழுகவே
- வீசீரோ

(இறைவேண்டலும், ஆசியும்)


திருவிருந்து வழிபாட்டு முறைமை
மன்றாடுவோம்
அனைத்து ஆற்றலுமுடைய முடிவில்லாக் கடவுளே, திருச்சபையின் முழு உடலையும், உம் ஆவியால் வழிநடத்தித் தூய்மைப் படுத்துகிறவரை உம் திருச்சபையில் அனைத்து நிலையிலுள்ள மாந்தருக்காகவும் உம் முன்பாக நாங்கள் ஏறெடுக்கும் விண்ணப்பங்களையும் மன்றாட்டுகளையும் ஏற்றுக்கொள்ளும். ஒவ்வோர் உறுப்பினரும் தம்தம் அழைப்பிலும், பணிவிடையிலும், உண்மையோடும் கடவுள் நம்பிக்கையோடும் உமக்குப் பணிவிடைசெய்ய அருள்செய்ய வேண்டுமென்று எங்கள் ஆண்டவரும் மீட்பருமாகிய இயேசுகிறிஸ்துவின் வழியாக மன்றாடுகிறோம். ஆமென்.

முதல் வாழ்த்து
நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவினுடைய அருளும் கடவுளுடைய அன்பும், தூய ஆவியாருடைய கூட்டுறவும் நம் அனைவரோடும் எப்பொழுதும் இருப்பனவாக. ஆமென்.

அப்பம் பிடுதல்
குரு: இதோ உடன்பிறப்புகள் ஒருமித்து வாழ்வது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது. அனைவரும் ஒரே அப்பத்தில் பங்கு பெறுகிறபடியால், பலரான நாம் ஒரே அப்பமும் ஒரே உடலுமாய் இருக்கிறோம். நாம் holy

மக்கள்: நான் அவர் கூடாரத்தில் ஆனந்த பலிகளைச் செலுத்திக் கடவுளைப் புகழ்ந்து பாடுவேன்.


நல்லுறவு வாழ்த்து இங்கே கொடுக்கலாம்
ஆயர்: ஆம் இறைவா, நீர் தூயர், நீர் போற்றுதற்குரியவர், நீர் மனுக்குலத்தின் மேல் அருளால் அன்பு செலுத்தி, உம் ஒரே தனித்தன்மை பொருந்தின மகனாகிய இயேசு கிறிஸ்து எங்கள் தன்மையை ஏற்றுக் கொள்ளவும், சிலுவையில் இறந்து எங்களை மீட்டுக் கொள்ளவும். அவரைத் தந்தருளினீரே. அவர் சிலுவையில் ஒரே முறை தம்மைத் தாமே, ஒரேபடையலாக ஒப்புக்கொடுத்து, உலகனைத்தின் பாவங்களையும் தீர்ப்பதற்கு நிறைவும், முழுமையும், போதியதுமான படையலையும் காணிக்கையையும், கழுவாயையும் கொடுத்ததுமல்லாமல் தம் அருமையான இறப்பை என்றும் நினைவுறுத்தும் நினைப்பூட்டுதலை நிறுவி தாம் மீண்டும் வருமளவும் நாங்கள் அதைக் கடைப்பிடித்து வரும்படி, தம் தூய நற்செய்தியில் கட்டளையிட்டுள்ளாரே அவர் தாம் காட்டிக் கொடுக்கப் பட்ட அன்று இரவிலே அப்பத்தை எடுத்து, நன்றி செலுத்தி அதைப்பிட்டு அடியவர்களுக்குக் கொடுத்து, "நீங்கள் வாங்கி உண்ணுங்கள். இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என் உடல், என்னை நினைவு கொள்ளும்படி இதனைச் செய்யுங்கள்” என்றார்.

அப்படியே உணவு உண்ட பின்பு அவர் கிண்ணத்தை எடுத்து நன்றி செலுத்தி, அவர்களுக்குக் கொடுத்து “நீங்கள் அனைவரும் இதில் அருந்துங்கள். இது பாவமன்னிப்பு உண்டாகும்படி உங்களுக்காகவும், அனைவருக்காகவும் சிந்தப்படுகிற புதிய உடன்படிக்கைக்குரிய என் செங்குருதி. இதை அருந்தும் போதெல்லாம் என்னை நினைத்துக் கொள்ளும்டி இதைச் செய்யுங்கள்" என்று கூறினார்.

அவை: ஆம், ஆண்டவரே உம் இறப்பை நினைவு கூருகிறோம். உம் உயிர்த்தெழுதலைஅறிக்கையிடுகிறோம். நீர் மீண்டும் வரக் காத்திருக்கிறோம். கிறிஸ்துவே உமக்கே மாட்சி உண்டாவதாக.

ஆயர்: ஆதலால் இறைவா உம் மகனாகிய எங்கள் ஆண்டவரின் அரிய பாடுகளையும், இறப்பையும், மாட்சிமிக்க உயிருற்றெழுதலையும், விண்ணுக்கெழுதலையும், நினைவு கொண்டு உம் அடியார்களாகிய நாங்கள் அவருடைய கட்டளையின்படியே அவர் மீண்டும் வருமளவும் அவரை நினைவுகூர்ந்து இதனைச் செய்கிறோம். அவரில் நீர் எங்களுக்காக நிறைவேற்றின முழுமையான மீட்புக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம்.

அவை: கடவுளே, எங்கள் ஆண்டவரே உம்மைப் போற்றுகிறோம். உம்மைப் புகழுகிறோம். உம்மை மாட்சிப்படுத்துகிறோம்

ஆயர்: இரக்கமுள்ள இறைவா நாங்கள் பிடுகிற அப்பம் கிறிஸ்துவினுடைய உடலின் கூட்டொருமைப்பாடாகவும், நாங்கள் வாழ்த்துகிற கிண்ணம் கிறிஸ்துவினுடைய செங்குருதியின் கூட்டொருமைப்பாடாகவும் இருக்கும்படி எங்களையும், நீரே தந்த இந்த அப்பத்தையும் திராட்சைச் சாற்றையும் உம் தூய ஆவியரால் தூய்மைப்படுத்த வேண்டுமென்று மிகுந்த தாழ்மையோடு வேண்டிக் கொள்கிறோம். நாங்கள் அனைவரும் எங்கள் ஆண்டவர் கிறிஸ்துவில் ஒன்றிணைக்கப்பட்டவர்களாகி நம்பிக்கையில் ஒருமைப்படவும், முதல்வராகிய அவருக்குள் அனைத்திலும் வளரவும், அருள்புரியும் அனைத்து ஆற்றலுமுள்ள தாயும் தந்தையாகிய உமக்கு அவர் வழியாக, அனைத்து மதிப்பும் மாட்சியும் என்றென்றைக்கும் உண்டாவதாக. ஆமென்.

நம் மீட்பராகிய கிறிஸ்து கற்பித்தபடி அவரில் நமக்கு அருளப்பட்டத் துணிவோடே சொல்லுவோம்.
விண்ணகத்திலுள்ள, எங்கள் பெற்றவரே உம் திருப்பெயர் தூயதெனப் போற்றப்படுக. உம் அரசு வருவதாக உம் திருவுளம் விண்ணுலகில் செய்யப்படுவது போல மண்ணுலகிலும் செய்யப் படுவதாக. இன்று எங்களுக்கு வேண்டிய உணவை இன்று எங்களுக்குத் தாரும். நாங்கள் கடனாலிகளுக்கு பொருத்தளியதுபோல் எங்கள் கடன்களை பொறுத்தருளும். எங்களைச் சோதனைக்குட்படும்போது தீமையினின்று எங்களை மீட்டருளும். ஆட்சியும், ஆற்றலும், மாட்சியும் என்றென்றைக்கும் உம்முடையவையே. ஆமென்."

எல்லாரும் அமைதியாய் இருக்கவும்

அனைவரும்
இரக்கமுள்ள கடவுளே எங்கள் நேர்மையை நம்பி நாங்கள் உம் விருந்தில் சேர எண்ணாமல் உம்முடைய அளவற்ற இரக்கத்தையே நம்பிச் சேருகிறோம். உம் திருமேடையின்கீழ் விழும் சிறு துண்டுகளை எடுத்துக் கொள்ள நாங்கள் தகுதி யானவர்கள் அல்லர். ஆனாலும் நீர் எப்பொழுதும் இரக்கங் கொள்கிற அழகுடைய மாறாத ஆண்டவராயிருக்கிறீர் ஆகையால் அருள்நிறைந்த கடவுளே, உம் அருமையான மகனாகிய இயேசு கிறிஸ்துவின் விலைமதியாத திருஉடலாலும், திருச்செங் குருதியினாலும், எங்கள் பாவமுள்ள உடலும், ஆன்மாவும் தூய்மையாகி எப்பொழுதும் நாங்கள் அவருக்குள்ளும் அவர் எங்களுக்குள்ளும் வாழ்வதற்கு ஏற்றவிதமாய் அவருடைய திருஉடலை உண்டு, அவருடைய திருச்செங்குருதியைப் பருக எங்களுக்கு அருள் செய்யும். ஆமென்.

குரு: நாம் பிடும் அப்பம் கிறிஸ்துவின் உடலின் கூட்டொருமைப்பாடல்லவா?

மக்கள்: உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற இறை ஆட்டுக்குட்டியே எங்களுக்கு இரங்கும்

உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற இறை ஆட்டுக்குட்டியே எங்களுக்கு இரங்கும்

உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற இறை ஆட்டுக்குட்டியே நல்லுறவை தாரும்

குரு: கிறிஸ்துவின், திருஉடலும், திருச்செங்குருதியுமாகிய திருவருட்சாதனத்தை நம்பிக்கையினால் பெற்றுக் கொண்டவர்களாகிய நாம் அவருக்கு நன்றி செலுத்துவோமாக.

குரு தனித்தோ அல்லது அவையோடு சேர்ந்தோ சொல்வது
அனைத்து ஆற்றலுமுடைய கடவுளே, பெற்றவராகிய விண்ணகக் கடவுளே, உம் அன்பு மகனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவுக்குள். எங்களை உம் பிள்ளைகளாக ஏற்றுக்கொண்டு அவரின் விலைமதியாத. திருவுடலும், திருச்செங்குருதியுமாகிய ஆன்மிக உணவால் எங்களைச் சேர்த்து இருக்கிறீர். எங்கள் பாவங்களை மன்னித்து முடிவில்லா வாழ்வினை எங்களுக்கு உறுதிமொழிந்துள்ளீர். அளவிடப்படாத இந்த நன்மைகளுக்காக, உமக்கு நன்றி செலுத்துகிறோம். உடலும் ஆன்மாவுமாகிய எங்களைத் தூய்மையும் வாழ்வுமுள்ள படையலாக உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம். இது நாங்கள் செய்யத் தகுந்த ஒழுங்கான வழிபாடு. நாங்கள் இந்த உலகத்திற்கு ஏற்ற பாவனை புரியாமல், உம் நன்மையும், முழுமையான திருவுளம் எப்படிப்பட்டது என்பதைப் பகுத்தறியத்தக்கதாக. எங்கள் மனம் புதிதாகிறதினாலே. எங்களையே மாற்றிக்கொள்ள அருள்புரியும். கடைசியில் நாங்கள் உம் தூயவர்கள் அனைவரோடும் உம் முடிவில்லா அரசின் மகிழ்ச்சியை அடையத்தக்கதாக, இவ்வுலகத்தில் உமக்குக் கீழ்ப்படிந்து, நடக்க எங்களுக்கு அருள் செய்யும், உம்மோடும். தூய ஆவியாரோடும் ஒரே கடவுளாய், எக்காலத்திலும் வாழ்ந்து அரசாளுகிற எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாய் இவற்றை வேண்டிக் கொள்கிறோம்.

மக்கள்: ஆமென். எங்கள் கடவுளுக்குப் போற்றுதலும் மாட்சியும், அறிவும். நன்றியும். மதிப்பும், ஆற்றலும், வலிமையும், எக்காலத்தும் உண்டாவதாக. ஆமென்

இறைவாழ்த்து:
அனைத்து அறிவுக்கு மேலான கடவுளின் நல்லுறவு உங்களோடு இருந்து நீங்கள் கடவுளையும் அவர் மகனாகிய நம் தலைவர் இயேசு கிறிஸ்துவையும் பற்றிய அறிவிலும் அன்பிலும் நிலைத்திருக்கும் படி உங்கள் உள்ளத்தையும் எண்ணத்தையும் காக்கப்படுவது

தந்தை மகன் தூய ஆவியாருமாகிய அனைத்து ஆற்றல் பொருந்திய கடவுளுடைய இறைவாழ்த்து உங்களுடனே இருந்து எப்பொழுதும் உங்களோடு நிலைத்திருக்கக்கடவது ஆமென்.

நிறைவு பாடல் : பு.பாடல் 205
கல்யாணமாம் கல்யாணம்
கானாவூரு கல்யாணம்
கர்த்தர் இயேசு கனிவுடனே
கலந்து கொண்ட கல்யாணம் - ஆ..ஆ.ஆ..

1. விருந்தினர்கள் விரும்பியே
அருந்த ரசமும் இல்லையே
அறிந்த மரியாள் அவரிடம்
அறிவிக்கவே விரைந்தனள்
- கல்யாணமாம்

2. கருணை வள்ளல் இயேசுவும்
கனிவாய் நீரை ரசமதாய்
மாற்றி அனைவர் பசியையும்
ஆற்றி அருளை வழங்கினார்
- கல்யாணமாம்

3. இல்லறமாம் பாதையில்
இல்லை என்னும் வேளையில்
சொல்லிடுவீர் அவரிடம்
நல்லறமாய் வாழுவீர்
- கல்யாணமாம்

(திருமண விருந்து மாந்தோப்பிலே வழங்கப்படும் அனைவரும் கலந்துகொள்ளவும்)

நன்றி...

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.