Tamilnadu Theological Seminary
Arasaradi, Madurai - 16
I Year First Term
Ministerial Formation
Formation of Christian Ministry
கிறிஸ்துவ திருப்பணியாளர்களின் திருப்பணி உருவாக்கம்
Sis. Janani Christina Notes (2025)
Kosuke Koyama:
கதை வழியாக இறையியல் சொல்பவர். மக்கள் இயற்கையோடு இணைந்து தான் கடவுளை பார்க்க முடியும். சுற்றி இருக்கிற காரியங்களில்,
ஏசாயா 3-ம் பிரிவு மித் - புனைவு - உண்மையை சொல்ல ஏற்படுத்திய கதை.
Tool = Bible - சரியாக பயன்படுத்த வேண்டும்.
திருப்பணி:
நான்கு ஆண்டுகளில் கற்றுக் கொள்வதல்ல திருப்பணி, வாழ்நாள் முழுவதும் கற்றுக் கொண்டே இருப்பது தான் திருப்பணி.
கிறிஸ்தவ திருப்பணியாளரின் திருப்பணி உருவாக்கத்தில் கிறிஸ்தவம்:
அடிப்படை - who am I?
நான் யார்? நான் எதற்காக திருப்பணிக்கு அழைக்கப்பட்டுள்ளேன்? இது நம்முடைய உருவாக்கம் அல்ல, கடவுள் நம்மில் நம்பிக்கை வைத்து அழைத்து கொண்டு வந்திருக்கிறார்.
திருப்பணியில் ஒப்படைப்பு மிகவும் அவசியமானது. மக்கள் அனைவரும் நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற மனநிலையில் நாம் திருப்பணி செய்ய வேண்டும். திருப்பணி என்பது ஒரு மகிமையான பணி.
We are worshiping community:
வழிபாடு, தொழுகை, பணிவிடை செய்தல்:
- நல்வழிப்படுத்துகின்ற ஒன்று வழிபாடு.
- மக்களுக்கு கடவுள் தந்த பணியை செய்தல் வேண்டும்.
- திருப்பணியாளர்களாகிய நாம் நல்வழிபட்டு, நல்வழிப்படுத்துகிறவர்கள்.
- கடவுளின் தன்மைகளை, நன்மைகளை அறிக்கையிடுதல்.
We are?
நாம் ஆய்வு செய்கிறவர்கள்:
- ஆலங்களுக்கு சென்று கேள்வி கேட்டு, தேடி, ஆய்வு செய்தல் வேண்டும்.
- புதிய புதிய பார்வைகளின் அடிப்படையில் ஆய்வு செய்தல் வேண்டும்.
- கடவுளை ஆய்வு செய்ய முடியாது. ஆனால் இறையியலை ஆய்வு செய்தல் வேண்டும். ஆன்மீகத்தை ஆய்வு செய்தல் வேண்டும்.
- ஆய்வு செய்தல் மூலமாக நான் மட்டுமல்ல மக்கள், திருச்சபை, சமுதாயம் ஆகியவற்றிற்கும் நன்மை பயக்கும். எ.கா: திருமறையில் பன்றி
எ.கா: 56 ஆண்டு கால பாரம்பரியம் கொண்ட நம் தமிழ்நாடு இறையியல் கல்லூரி தான் மகளிர் அருள்பொழிவு, சிறைச்சாலை அருட்பணி போன்ற திருப்பணிகளை முதன் முதலில் அறிமுகப்படுத்தியது.
சிந்தனையில் தாக்கத்தை ஏற்படுத்தும் படியான அருளுரைக்காக ஆய்வு செய்தல் வேண்டும்.
கனவு காணுகிறவர்கள்:
Cisionaries:
John Stott
ஜான் ஸ்டார்ட் என்பவர் சுமார் 66 ஆண்டுகள் ஒரே ஆலயத்தில் திருப்பணி ஆற்றினார். Living church. Life long convictions of a pastor (Book). அப்படியானால், அவருடைய திருப்பணி எவ்வாறு இருந்திருக்கும், அவருடைய அருளுரைகள் எப்படிப்பட்டதாக இருந்திருக்கம் என்று நாம் சிந்திக்க வேண்டும்.
ஆலயத்தில் நன்மை ஒன்று இருக்கிறது. அதை பின் தொடருங்கள். ஆலயத்தில் வாழ்வு ஒன்று இருக்கிறது. அதை பற்றி கொள்ளுங்கள்.
I have a dream for my church. திருச்சபையை குறித்த எனக்கு ஓர் கனவு இருக்கிறது.
1) திருமறையை சார்ந்த திருச்சபை
2) வழிபடும் திருச்சபை
3) பணிபுரியும் திருச்சபை
Waltter Bruggeman
இவர் பிரேசில் நாட்டைச் சார்ந்த இளைஞர்.
Prophetic Consciousness (இறைவாக்கு உள் உணர்வு)
தரிசனம் என்பது Orasis (முன்னோக்கி சிறப்பாக முயன்று செயல்படுதல்)
Intellectually rigorous கடினம்
Spiritual involved (ஆன்மீகம், சமூகம், சமயம் சார்ந்தது)
Theological hope (இறையியல் நம்பிக்கை)
காணாமல் போன காசுகளை தான் இன்றைய திருப்பணியாளர்கள் தேடுகிறார்கள். தேட வேண்டியது காணாமல் போன காசுகளை அல்ல, காணாமல் போன ஆடுகளை.
ஆயர்களைப் பற்றிய சிந்தனை ஏன் குறைந்து கொண்டு இருக்கிறது?
1) உயர் படி இயக்கம் (Carrirism)
2) பலி கொடுப்பது (Ritualism)
3) அடிப்படை வாதம் (Fundamentalism)
4) ஆன்மீக அடிப்படை வாதம் (Situal Fundamentalism)
5) மதவாதம் (Fanaticism)
6) மாற்றங்கள் வராதது (Endism)
திருப்பணியில் பிரச்சனைகளுக்கான காரணங்கள்:
- திருமறை விளக்கம் எப்படி இருக்கிறது? என்பது பற்றிய கவனமின்மை.
- திருப்பணியில் நாம் ஆடுகளை எப்படி மேய்க்கிறோம் என்கிற நோக்கம் இல்லாமல்.
- திருமறை விளக்கம் சரியாக புரிந்து கொள்ளப்படாமல் இருத்தல். Eg. Alter
- 1990 இல் இறையியல் மலர் (சாமுவேல் அமிர்தம்)
பேராயர் பயன்படுத்தும் கோள் எதற்காக பயன்படுத்தப்படுகிறது?
ஆடுகளுக்கு எட்டாத உயரத்தில் உள்ள இலைகளை பிடித்து கொடுக்க ஆடுகளுக்கு வழிகாட்ட பயன்படுத்தப்படுகிறது. மாறாக கோளை பயன்படுத்தி மக்களை அதிகாரம் செய்வதற்கு அல்ல. கைக்குட்டை மக்களின் கவலைகளை துடைக்க பயன்படுத்தப்படுகிறது.
ஆயர்கள் அனைவரும் மரியாளைப் போல திருப்பணி செய்ய அழைக்கப்பட்டவர்கள்.
Rosemary Redford Reuter
Dyanchand Carr:
- விடுதலைக்கு போராடியதில் சிறைக்கு சென்றவர்.
- உலகத்திலேயே மத்தேயு நற்செய்தி நூல் தான் முதலில் எழுதப்பட்டது என்று நிரூபித்தவர்களில் இவர் இரண்டாவது நபர். முதல் நபர் - Arvina P. Nirmal.
- பற்றுறுதியாளர்கள் அனைவரும் ஆயர்கள் தான்:
- அப்போஸ்தலனாகிய பவுலின் இறையியல் தான் மார்ட்டின் லூதரின் இறையியல்.
- திருப்பணியில் அனுதாபமும், அதிகாரமும் ஆபத்தானது.
- நாம் தொண்டு ஏற்பவர்கள் அல்ல, தொண்டு செய்கிறவர்கள்.
- Primary=Secondary=Tertiary
ஆயரிடமிருந்து நான் எதிர்பார்ப்பது என்ன?
1) அருளுரைக்கு முக்கியத்துவம்
2) எல்லாவற்றிலேயும் மக்களுக்கு முன்மாதிரியாக இருப்பது
3) அன்பு செலுத்துதல்
4) இறக்க குணம்
5) ஆறுதல்
6) உதவி செய்யும் குணம்
- தேவையோடு வரும் மக்களை நாம் அலைக்கழிப்பது தவறானது. நம்முடைய தனிப்பட்ட பிரச்சனைகளை, கோபங்களை, சண்டைகளை சபை மக்களிடம் ஒருபோதும் காண்பிக்க கூடாது.
- ஒரு குழுவினரிடமும் ஒரு தனி நபரிடமும் பகை உணர்வு இருந்தால் அதை அருளுரையில் காண்பிக்க கூடாது.
- தனக்கு கீழ் பணி புரியும் பணியாளர்களிடம் (Sexton) ஆலயம் சார்ந்த வேலைகளை மாத்திரமே செய்ய சொல்ல வேண்டும். நம்முடைய சொந்த வேலைகளுக்காக அவர்களை பயன்படுத்தக் கூடாது.
- கடவுளின் திருப்பனியை செய்ய விரும்புவோரை உற்சாகப்படுத்தி திருப்பணியில் அவர்களை பயன்படுத்த வேண்டும்.
நாம் அடையாளத்தை உருவாக்குவது எப்படி?
நாம் அடையாளத்தை செயல்படுத்துவது எப்படி?
அநேக நேரங்களில் நாம் நம்மை தலைவர்களுடன் வைத்து அடையாளப்படுத்துகிறோம். சில நேரங்களில் பணக்காரர்களோடு நம்மை அடையாளப்படுத்துகிறோம். ஆயர் பணியை குறித்து ஒரு தெளிவான சிந்தனை அநேக ஆயர்களிடம் இன்று காணப்படுவதில்லை. ஆயர் பணி என்பது ஒரு சாதாரண வேலை அல்ல, அது சேவை என்பதை ஒவ்வொரு ஆயரும் புரிந்து கொள்ள வேண்டும்.
அநேக ஆயர்கள் அடிப்படை வாதம் மூலம் அடையாளப்படுத்தப் படுகிறார்கள்.
Sigmund Freud (I'd, Ego, Super Ego)
Id - idiot (முட்டாள்தனம்) நாம் ஒருபோதும் முட்டாள்களாக இருக்கக் கூடாது.
Ego - நான் என்ற தன்மை. தைரியம் மற்றும் ஆணவத்தை குறிக்கும்.
Super Ego - நான் மட்டும்தான் என்ற மனநிலையை குறிக்கும்.
ஆயர்களுக்கு Ego தேவை ஆனால் Super Ego இருக்கக்கூடாது.
- ஒவ்வொரு ஆயர்களும் பிரச்சினைகளை எப்படி கையாள வேண்டும் என்ற தெளிந்த மனநிலை கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
- அநேக ஆயர்கள் பிரச்சனைகளை கையாளாமல் பிரச்சனையாளர்களை கையாளுகிறார்கள். இது முற்றிலும் தவறானது.
ஒரு ஆயர் எப்படி பிரச்சினைகளை கையாள வேண்டும்?
- நம்மால் தீர்க்க முடியாத பிரச்சனைகள் என்று ஒன்றுமே இல்லை.
- திருச்சபையின் பிரச்சனைகளை உட்கார்ந்து பொதுவாக பேசினாலே தீர்த்து விட முடியும்.
- ஆள் தத்துவம் என்பது மனிதன் தன்னை யாரோடு அடையாளப்படுத்துகிறான் என்பதை காட்டுகிறது. (Personality)
- Positive thinking: ஒரு ஆயர் எல்லா சூழ்நிலைகளிலும் மகிழ்நோக்கு சிந்தனை உள்ளவராக இருக்க வேண்டும்.
- உருவாக்கும் சிந்தனை உடையவராக இருக்க வேண்டும்.
- ஆக்கபூர்வமாக (Critica) செயல்படும் சிந்தனை உள்ளவராக இருக்க வேண்டும்.
- Perseption: அனைத்து காரியங்களையும் உள்வாங்கி முடிவுகள் எடுக்கக் கூடியவராக இருக்க வேண்டும்.
- பார்வைகளில் தெளிவு வேண்டும். சரியான பார்வை வேண்டும்.
- மக்களின் சூழ்நிலையை கொண்டு சிந்திக்கும் திறன் உடையவராக இருக்க வேண்டும்.
- Negative thinking: ஆயர் என்பவர் துயர்நோக்கு சிந்தனை உள்ளவராக இருக்கக் கூடாது.
Memory - நினைவுகள்:
- நல்ல சிந்தனைகள் வேண்டும். சிந்தனைகள் ஒவ்வொரு நாளும் சரி செய்யப்பட வேண்டும்.
- Imagination: திருச்சபையை குறித்த கனவு காணும் நபராக, கற்பனைத் திறன் கொண்ட நபராக இருக்க வேண்டும்.
- Walter brogeman - Perfectic imagination
- Yah critical conciensness
- உலகில் சாதித்த பலரும் மிகச்சிறந்த சிந்தனையாளர்களாகவே இருக்கின்றனர்.
அருளுரையில் சிந்தனை:
- அருளுரையை தயார் செய்யும் போது நம்முடைய சிந்தனையை நாம் மாற்ற வேண்டும்.
- திருமறையின் ஆழமான இறையியலை புரிந்து கொண்டு சரியான முறையில் சிந்தித்து செயல்பட வேண்டும்.
- இறையியல் என்ன என்று பார்ப்பதற்கு முன் ஏன்? என்று பார்க்க வேண்டும்.
- Eg: God is Black, கடவுள் ஒரு ஆணும் அல்ல பெண்ணும் அல்ல.
ஆயர்பணியில் நாம் உருவாக்க வேண்டியவை:
திருச்சபையில் அதிகாரம் பெற்றவர் ஆயர்:
Paster administration:
ஆன்மீக வளர்ச்சி பணிகள்:
Pastor should be social spiritual of the Church:
Pastor should be Fesitiater:
Pastor should be Discipline:
கிறிஸ்தவ திருப்பணி:
திருச்சபை சார்ந்த பல்வேறு திருப்பணிகள்:
ஓய்வு நாள் பள்ளி உருவான வரலாறு:
இந்தியாவின் ஞாயிறு பள்ளி உருவான வரலாறு:
1818 ஆம் ஆண்டு செரம்பூர் என்ற இடத்தில் மூன்று மிஷினரிகள் ஒற்றுமையாய் பணி புரிந்தனர். அவர்கள்:
Hannah Marshman
William Marshman
William Ward
William Carry
வழிபாட்டை அழகாக்குவது எப்படி?
பெண்களை ஐக்கிய சங்கம்
ஞாயிறு பள்ளி
Administration - ஆளுமை
முடிவெடுத்தல் (ஆளுமை)
Recorda Maintaining:
திருச்சபையில் பாதுகாக்கப்பட வேண்டிய ஆவணங்கள்:
அசையும் சொத்துக்கள்:
அசையா சொத்துக்கள்:
அறிவு முதிர்ச்சி:
- நமக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்க வேண்டும்.
- ஆள் தத்துவம் மிகுந்தவராக காணப்பட வேண்டும்.
- திருச்சபை மக்கள் நம்மிடம் எதிர்பார்க்கும் காரியங்கள்:
- அருளுரையாற்றுவதில் வல்லமை உள்ளவராக இருக்க வேண்டும்.
- ஆளுமை திறமை கொண்டவராக இருக்க வேண்டும்.
- வழிபாடு செய்வதில் வல்லமை மிக்கவராக இருக்க வேண்டும்.
- பலதரப்பட்ட திறமைகள் உள்ளவராக இருக்க வேண்டும்.
- மக்களோடு தன்னை அடையாளப்படுத்தும் ஆயராக இருக்க வேண்டும்.
- திருச்சபையில் அநேக பிரிவினர் இருப்பார்கள் ஒரு சாராரை மாத்திரமே மையப்படுத்தி முடிவுகள் எடுக்கக் கூடாது.
- சமநிலையில், நீதிக்காக சான்றுபகர்பவராக இருக்க வேண்டும்.
- சமூக நீதிக்கும், நீதிக்கும் இடையேயான வேறுபாட்டை புரிந்து கொண்டு நடக்க வேண்டும்.
- நீதி என்பது அனைவரையும் சமமாக பார்ப்பது. (ஏழைகளையும் செல்வந்தர்களையும் ஒரே மாதிரி பார்ப்பது)
- சமூக நீதி என்பது விதிமுறைகளின் படி மக்களை நடத்துவது.
திருச்சபையில் அதிகாரம் பெற்றவர் ஆயர்:
Paster administration:
- பணத்தை கையாளுவதில் ஆளுமை திறமை வேண்டும்.
- திருச்சபையின் அனைத்து செயல்பாடுகளையும் கண்காணிக்க வேண்டும்.
ஆன்மீக வளர்ச்சி பணிகள்:
Pastor should be social spiritual of the Church:
- Spiritual agent
- Sunday school ministry. ஞாயிறு பள்ளி ஊழியத்தையும் கவனிக்க வேண்டும்.
- We are part of the develope the meeting.
- பெண்களைக் சங்கத்தையும் கவனிக்க வேண்டும்.
Pastor should be Fesitiater:
- ஒரு இலக்கை நியமித்து அதை நோக்கி முயற்சி செய்ய வேண்டும்.
- அந்த இலக்கிற்காக மக்களை உந்தி தள்ளுதல் வேண்டும்.
- திருச்சபையின் பொறுப்புகளில் தனது குடும்பத்தை ஈடுபடுத்தக் கூடாது.
- திருச்சபையின் பொறுப்புகளை அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்க வேண்டும். அதாவது அர்ப்பணிப்போடு திருப்பணி செய்பவர்களுக்கு பகிர்ந்து கொடுக்க வேண்டும்.
- காணிக்கை Account நோட்டை கையில் தொடக்கூடாது.
- அனைத்து காரியங்களையும் மக்கள் முன்னிலையில் நின்று செய்ய வேண்டும்.
Pastor should be Discipline:
- அனைத்து நபர்களையும் சமமாக பார்க்க வேண்டும், அனைத்து காரியங்களையும் சமமான முறையில் கையாள வேண்டும்.
- நம்பிக்கையில் உறுதியாக இருக்க வேண்டும்.
- நான் கடவுளின் பணியாளன் என்ற எண்ணத்தோடு கடவுளுக்கு பயந்து செயல்பட வேண்டும்.
- நான் கடவுள் அல்ல என்ற சிந்தை எப்பொழுதும் இருக்க வேண்டும்.
- நான் மாத்திரம் தான் சிறந்தவன் என்ற மனநிலையை விட்டுவிட வேண்டும்.
கிறிஸ்தவ திருப்பணி:
- திருப்பணி என்பது பணி செய்தலை குறிக்கிறது. ஏன் திருப்பணி என்று சொல்லுகிறோம் என்றால் கடவுளுக்கு பணி செய்வதால் திருப்பணி என்று அழைக்கிறோம்.
- தொண்டு ஏற்பது அல்ல, தொண்டு ஆற்றுவதே திருப்பணி.
- இயேசு கிறிஸ்து தான் செய்த திருப்பணியை தொடர்ந்து நிறைவேற்றுவதற்காக சிலரை ஆயராகவும் சிலரை திருப்பணியாளராகவும் தெரிவு செய்கின்றார்.
- திருப்பணியை திருச்சபைக்குள் மாத்திரம் அடக்கி வைப்பது தவறு.
- மருத்துவமனையில் நடைபெறுவதும் திருப்பணிதான்.
- கல்விப் பணியும் திருப்பணிதான். அனைத்து பணிகளிலும் நாம் திருப்பணி செய்ய முடியும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
திருச்சபை சார்ந்த பல்வேறு திருப்பணிகள்:
- ஆலயத்தை ஆராதனைக்கு ஆயத்தப்படுத்துவதும், ஆலயத்தை தூய்மைப்படுத்துவதும் திருப்பணிதான்.
- ஆராதனையில் ஒழுங்கும் கிரமமுமாக நடத்துவது ஒரு திருப்பணி.
- அருளுரையை நல்ல முறையில் ஆயத்தம் செய்து போதிப்பதும் திருப்பணி தான்.
- இறைவேண்டல் செய்வதும் திருப்பணி தான். நம்முடைய இறைவேண்டல்களில் மாற்றம் வேண்டும்.
- கல்வி பணியும் திருப்பணிதான்.
ஓய்வு நாள் பள்ளி உருவான வரலாறு:
- இங்கிலாந்து நாட்டில் 15 ஆம் நூற்றாண்டில் தொழில் புரட்சி உருவானது. தொழிலின் பெருக்கும் அதிகரித்தது.
- ஒரு நபர் வேலை செய்தால் வேலைக்கு ஏற்ற கூலியாக உணவு பொருட்களோ, தானியங்களோ கொடுக்கப்படும் இதுதான் அந்நாட்களின் வழக்கம்.
- 15 ஆம் நூற்றாண்டில் தொழில் புரட்சி ஏற்பட்ட போது தான், செய்யும் தொழிலுக்கு ஏற்ப ஊதியம் அதாவது சம்பளம் வழங்கப்பட்டது.
- அந்நாட்களில் வாரத்தில் ஆறு நாட்கள் வேலை இருக்கும் ஏழாம் நாள் ஓய்வு நாள். ஒரு நாட்கள் முடிந்த பின்பு ஒரு வாரத்திற்கான கூலி கொடுக்கப்படும்.
- முதல்முறையாக பணத்தை கையில் பார்த்த பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளையும் வேலைக்கு அனுப்பினால் அதிகம் சம்பாதிக்க முடியும் என்ற எண்ணத்தில் அவர்களையும் வேலைக்கு அனுப்பினர்.
- சிறுவர்களும் வேலை செய்து ஆறாம் நாள் பணத்தை கையில் பார்த்தவுடன் என்ன செய்வது என்று தெரியாமல் மது பழக்கத்திற்கு அடிமையாகினர்.
- தொழிற்சாலைகளை நடத்தும் முதலாளிகளே இந்த மதுக்கடையையும் நடத்தி வந்தார்கள்.
- எனவே சிறுவர்கள் சம்பாதிக்கும் அனைத்து பணங்களும் மீண்டுமாய் முதலாளிகளிடமே சென்றது (மதுக்கடை மூலம்).
- இது முதலாளி வர்க்கத்திற்கு பெரும் லாபத்தையும் கொடுத்தது.
- சிறுவர்கள் அனைவரும் ஓய்வு நாளில் மது போதையில் தங்களை அழித்துக் கொண்டிருப்பதை பார்த்த ரிபர்ட ராக்கிஸ் (Robert Raioks) என்பவர் அவர்களை அழைத்து அவர்களுக்கு சமூக நல்லொழுக்கங்களை கற்றுக் கொடுத்தார்.
- இப்படித்தான் உலகில் முதன் முதலில் ஞாயிறு பள்ளி என்ற முறை உருவானது.
- ஞாயிறு பள்ளி என்பது திருமறையை கற்றுக் கொடுப்பதற்காக அல்ல, சமூக நல்லொழுக்கங்களை கற்றுக் கொடுப்பதற்காகவே துவங்கப்பட்டது.
இந்தியாவின் ஞாயிறு பள்ளி உருவான வரலாறு:
1818 ஆம் ஆண்டு செரம்பூர் என்ற இடத்தில் மூன்று மிஷினரிகள் ஒற்றுமையாய் பணி புரிந்தனர். அவர்கள்:
Hannah Marshman
William Marshman
William Ward
William Carry
- இவர்கள் மூலமாகத்தான் இந்தியாவில் முதன்முறையாக ஞாயிறு பள்ளி, பெண்களுக்கான பள்ளி போன்றவை துவங்கப்பட்டன.
- பெண்களுக்கு எதிராக நடைபெறும் சதி என்னும் உடன்கட்டை ஏறுதல் போன்றவற்றை தடுக்க முதலில் குரல் கொடுத்தவர்கள் இவர்களே.
- பெண்களை அடிமைப்படுத்துவது சிறுவர்களை அடிமைப்படுத்துவது போன்றவற்றுக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள் இவர்களே.
- பெண் விடுதலைக்காக போராடவே செராம்பூரில் ஞாயிறு பள்ளி உருவானது.
- இந்திய மிஷனரி இயக்கத்தின் தந்தை என்று வில்லியம் கேரி அழைக்கப்படுகிறார்.
- சீகன் பால்க் இந்தியாவில் 1706-1717 வரை ஊழியம் செய்தார். இவருடைய ஊழிய பயணம் மிகக் குறுகிய நாட்களைக் கொண்டது.
- தமிழ்நாடு இறையியல் கல்லூரி 1969 ஆம் ஆண்டு உருவானது.
வழிபாட்டை அழகாக்குவது எப்படி?
பெண்களை ஐக்கிய சங்கம்
ஞாயிறு பள்ளி
Administration - ஆளுமை
- ஆளுமை என்பது கடவுளின் பரிசு அல்ல. ஒவ்வொரு ஆயர்களும் ஆளுமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
- ஆளுமை என்பது அதிகாரம் அல்ல. ஆளுமை என்பது சமூக நீதி சார்ந்து இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் ஆளுமை திறன் தோல்வியிலேயே முடியும்.
- ஆளுமையில் பணத்தை அதிகாரமாய் பயன்படுத்தக் கூடாது.
- தவறுகளை திருத்துவதற்கான முயற்சிகளாகவே ஆளுமை இருக்க வேண்டும்.
- ஆளுமை குறிக்கோள்களை ஏற்படுத்தி தர வேண்டும்.
- முடிவெடுக்கும் ஆற்றல் ஆளுமையில் மிகவும் அவசியமான ஒன்றாகும்.
- மக்களின் பிரச்சினைகளை கேட்டு முடிவு என்னவென்று ஆலோசனைகள் கொடுக்க வேண்டும். நீதியின் பக்கமாகவே செயல்பட வேண்டும்.
முடிவெடுத்தல் (ஆளுமை)
- நான் எடுக்கின்ற முடிவு தனிமனிதனுக்காக எடுத்தால் அது தவறு.
- நான் எடுக்கின்ற முடிவு என்னைச் சார்ந்தவர்களுக்கு பயனளிக்குமானால் அது தவறு.
- நான் எடுக்கும் முடிவு அனைத்து மக்களுக்கும் நன்மை பயக்குவதாக இருக்க வேண்டும்.
Recorda Maintaining:
திருச்சபையில் பாதுகாக்கப்பட வேண்டிய ஆவணங்கள்:
- 1) குடும்ப அட்டை (Family Card)
- 2) பிறந்தநாள் குறிப்பேடு (Birthday)
- 3) திருமுழுக்கு குறிப்பேடு (Baptism)
- 4) திடப்படுத்தல் குறிப்பேடு (Conformation)
- 5) திருமண குறிப்பேடு (Marrage)
- 6) இறப்பு சான்றிதழ் குறிப்பிடுகிறது (Death)
- 7) தீர்மான குறிப்பேடு (Minit Note)
- அசையும் சொத்து (Movable Property)
- அசையா சொத்து (Immovable Property)
அசையும் சொத்துக்கள்:
- Minit Note (தீர்மானக் குறிப்பேடு)
- Receipt Book (ரசீது புத்தகம்)
- Bank Passbook (வங்கி கணக்கு புத்தகம்)
- Auditor Statment
- Voucher
- Bills
- வெள்ளி பாத்திரங்கள், சில்வர் பாத்திரங்கள், தங்க பாத்திரங்கள்.
- மேஜைகள், நாற்காலிகள், மின்விசிறிகள், மின்விளக்குகள், ஆலய அலங்கார மின்விளக்குகள், தொலை காட்சி பெட்டி, Etc...
அசையா சொத்துக்கள்:
ஆலயம் அமைந்துள்ள இடம்.
ஆலயத்திற்கென்று ஒதுக்கப்பட்ட இடங்கள்.
திருச்சபையின் சொத்துக்கள் அனைத்தும் கடவுளின் சொத்துக்கள் ஆகும்.
அதற்குரிய அனைத்து ஆவணங்களும் எல்லா நேரங்களிலும் சரியான முறையில் ஆயரிடம் இருக்க வேண்டும்.
திருச்சபையின் சொத்துக்களை பாதுகாப்பதும் பராமரிப்பதும் ஆயரின் கடமையாகும்.
சட்ட பிரச்சனைகள்:
ஆயர் ஆற்றுப்பணி (Pastor Counseling)
அதிகார ஆற்றுப்பணி: (Authoritative)
Ecclesia
ஆலயத்திற்கென்று ஒதுக்கப்பட்ட இடங்கள்.
திருச்சபையின் சொத்துக்கள் அனைத்தும் கடவுளின் சொத்துக்கள் ஆகும்.
அதற்குரிய அனைத்து ஆவணங்களும் எல்லா நேரங்களிலும் சரியான முறையில் ஆயரிடம் இருக்க வேண்டும்.
திருச்சபையின் சொத்துக்களை பாதுகாப்பதும் பராமரிப்பதும் ஆயரின் கடமையாகும்.
சட்ட பிரச்சனைகள்:
- ஒவ்வொரு ஆயரும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அறிந்து வைத்திருக்க வேண்டும்.
- தென்னிந்திய திருச்சபையின் சட்ட ஒழுங்குகளை குறித்தும் அறிந்திருக்க வேண்டும். (The Constitution of Church of South India)
- திருமண்டிலத்தின் சட்டங்களை ஆயர் அறிந்து வைத்திருக்க வேண்டும்.
- திருமண சட்டங்களை அறிந்து வைத்திருக்க வேண்டும்.
ஆயர் ஆற்றுப்பணி (Pastor Counseling)
- ஆயருடைய திருப்பணிகளில் மிக முக்கியமான திருப்பணி ஆற்றுப்பணி ஆகும். One of the very important ministry.
- ஆற்றுப்பணி என்பது ஆறுதல் படுத்தும் பணி மட்டுமல்ல ஆற்றும் பணியாகும். அதாவது ஆற்றல் படுத்தும் பணியாகும்.
- மக்கள் பல்வேறு பிரச்சனைகளோடு ஆயரை சந்திக்க வரும்போது, அவர்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்ல முடியவில்லை என்றாலும் பிரச்சனைகளை காது கொடுத்து கேட்கும் பொறுமை ஆயர்களுக்கு வேண்டும்.
- மக்கள் ஆயர் மீது உள்ள நம்பிக்கையின் பொருட்டே ஆயரிடம் தனிப்பட்ட அந்தரங்கமான பிரச்சனைகளை சொல்லுகிறார்கள். ஆயர்கள் அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தக் கூடாது. அருளுரைகளில் இவர்களின் பிரச்சனையை சொல்லக்கூடாது.
- மக்கள் தங்களுடைய பிரச்சனைகளை எப்படிப்பட்ட உணர்வுகளோடு சொல்லுகிறார்களோ அதே உணர்வுகளோடு பிரச்சனைகளை கேட்கும் மனநிலையில் ஆயர் இருக்க வேண்டும்.
- மக்கள் தங்களுடைய பிரச்சனைகளை சொல்லும்போது மொபைல் போன் பயன்படுத்துதல் வேறு ஒருவருடன் பேசுதல் என்ற அஜாக்கிரதை நிலையில் இருக்கக் கூடாது.
- மக்கள் தங்களுடைய பிரச்சனைகளை சொல்லும்போது மறுமொழி சொல்ல வேண்டும். மறுமொழிகள் மிகவும் குறுகியதாக, சுருக்கமான வார்த்தைகள் கொண்டதாக இருக்க வேண்டும்.
- நம்முடைய மறுமொழி வார்த்தைகள் மக்களின் மனதில் நம்பிக்கையை உருவாக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.
அதிகார ஆற்றுப்பணி: (Authoritative)
- ஆயர் ஒருபோதும் தன்னுடைய பொறுப்பை மறுத்தல் கூடாது.
- ஆயர்கள் மக்களுக்கு துணை செய்கிறவர்களாக, மக்களோடு இணைந்து பயணிக்கிறவர்களாக இருக்க வேண்டும்.
- ஒரு மனிதனை மனிதனாக உருவாக்குவது ஆயரின் பணியாகும்.
- திருச்சபையின் குடும்பங்களில் எவரேனும் ஒருவருடைய வீட்டில் திடீர் இழப்புகள் ஏற்பட்டால், அவர்களோடு அடையாளப் படுத்துகிறவர்களாக ஆயர்கள் இருக்க வேண்டும். அவர்களுடைய துக்கத்தில் ஆயர்களும் பங்கு பெற வேண்டும்.
- நம்முடைய குடும்ப பிரச்சினைகளில் ஆயரும் பங்கேற்கிறார் என்பதை சபையார் உணர வேண்டும்.
- ஆயர் என்பவர் திருச்சபை உழியத்தை மாத்திரம் அல்ல சமூக பணியையும் செய்ய வேண்டும். (Pastor as a social worker)
Ecclesia
- Ecclesia என்றால் சொல் ஒரு சபை அல்லது ஒரு கூட்டம் என்று பொருள்.
- Ecclesia என்ற சொல் கிறிஸ்தவத்தை குறிக்கும் சொல்லோ ஒரு சமயத்தை குறிக்கும் சொல்லோ அல்லது. பிற்காலத்தில் சபையை குறிப்பதற்காக இச்சொல் பயன்படுத்தப்பட்டது.
- இயேசு கிறிஸ்து திருச்சபையை உருவாக்கவில்லை. இயேசுவின் காலத்தில் திருச்சபை என்ற அமைப்பே இல்லை.
- இயேசு கிறிஸ்து தொழுகைக் கூடங்களுக்கே சென்றார். தொழுகை கூடத்தை இயேசு கிறிஸ்து உருவாக்கவில்லை, அது யூதர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.
- இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த பின்பு தான் திருச்சபை என்ற அமைப்பு உருவானது. இயேசு கிறிஸ்து உயிர்த்தெழவில்லை என்றால் திருச்சபை இல்லை. இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்ததால் மட்டுமே திருச்சபை உருவானது.
- அப்படியானால் திருச்சபைக்கான அடையாளமாக திறந்திருக்கின்ற கல்லறையை தான் நாம் வைத்திருக்க வேண்டும். ஆனால் திருச்சபையின் அடையாளமாக நாம் சிலுவையை பயன்படுத்துகிறோம்.
- சிலுவை என்பது இயேசு கிறிஸ்துவின் பாடுகளை குறிக்கிறது. திருச்சபையானது பாடுகளின் கூடே செல்லக்கூடிய ஒன்று என்பது இச்சிலுவை காட்டுகிறது.
- ஆரம்ப நாட்களில் திருச்சபை ஆங்காங்கே இல்லங்களில் நடைபெற்றது. திருச்சபைகென கட்டிடங்கள் இல்லை.
- ரோம பேரரசர் கான்ஸ்டன்டைன் என்பவர் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட பின்பே திருச்சபை கட்டிடங்களாக உருவாயின.
- எருசலேம் தேவாலயத்தை மையமாகக் கொண்டு, கிறிஸ்தவர்களும் தங்களுக்கென கட்டிடங்களை உருவாக்க ஆரம்பித்தனர்.
- புதிய ஏற்பாட்டில் திருச்சபைக்கு கொடுக்கப்பட்ட பெயர்கள் பல இருக்கின்றன.
- திருச்சபை கடவுளின் உடல் (1 கொரிந்தியர் 15:12,13)
- திருச்சபையின் ஒரு குமுகாயம் என பவுல் கூறுகிறார். (Church is a Community)
- சீர்திருத்த திருச்சபையின் தந்தை என்று அழைக்கப்படும் மார்ட்டின் லூதர் தனது ஆன்மீக தந்தையாக பவுல் அடிகளாரை தெரிந்து கொள்ளுகிறார். பவுல் அடியாரின் போதனைகளே, மார்ட்டின் லூதரின் சீர்திருத்தத்திற்கு அடித்தளமாய் அமைந்தது.
- திருச்சபை கிறிஸ்துவின் மறு உருவம். திருச்சபை தூய்மையானது அல்ல. தூய்மையாக்கப்பட வேண்டிய ஒன்று.
- உலகில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் திருச்சபையிலும் உண்டு. காரணம் திருச்சபை உலகில் தான் உள்ளது.
- தற்போது மாத்திரம் அல்ல திருச்சபை உருவான ஆரம்ப நாட்களிலுமே பிரச்சனைகள் இருந்தது.
- திருத்துவது பணிகள் 5-ம் பிரிவில் பணத்தைக் குறித்த பிரச்சனை ஏற்பட்டதை பார்க்கிறோம். (அனனியா, சப்பிராள்)
- கிரேக்க பெண்களுக்கு பந்தி விசாரிப்பில் பிரச்சனை ஏற்பட்டதை திருத்துவது பணிகளில் வாசிக்கிறோம்.
- இயேசு கிறிஸ்துவை போலவே திருச்சபைக்கும் பாதுகாப்பு இல்லை. பிரச்சனைகளின் ஊடாய் திருச்சபை உலகில் செயல்பட்டு தான் ஆக வேண்டும்.
- திருச்சபையானது ஏழைகளுக்கானதாகவும், பணக்காரர்களுக்கானதாகவும், கடவுளை ஏற்றுக் கொள்பவர்களுக்கானதாகம், கடவுள் இல்லை என்று சொல்பவர்களுக்கானதாகம் இருக்க வேண்டும்.
- Ecclesia Perfect - திருச்சபை எல்லாருக்கும் ஆன பொதுவானது.
- உலகத்தின் மீட்புக்காக திருச்சபை.
- திருச்சபை ஒரு குமுகாயமாக இயங்க வேண்டும். இயேசு கிறிஸ்து திருச்சபையில் இல்லை. உலகத்தில் தான் கிறிஸ்து இருக்கிறார்.
- சமய கூடுகை அல்ல, சமூக அரசியல் கூடுகை.
இயேசுவின் திருப்பணி:
- சமயத்தில், சமுதாயத்தில் உள்ள தீமைகளை மாற்ற வந்தவர் இயேசு.
- இயேசு ஒரு புதிய சமயத்தை உருவாக்க வரவில்லை.
- இயேசு கிறிஸ்துவின் மரணத்திற்குப் பின்பு உருவானது தான் திருச்சபை.
- திருச்சபை இயேசு கிறிஸ்துவின் பணியைத் தொடர வேண்டும்.
- திருச்சபை என்பது அதாவது கிறிஸ்தவம் என்பது இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் சமயம் ஆகும். எனவே தான் சிலுவையை அடையாளமாக வைத்திருக்கிறோம்.
திருப்பணி எப்படி இருக்க வேண்டும்?
- கிறிஸ்துவின் திருப்பணியில் அனைவரும் பங்குபெற வேண்டும்.
- திருப்பணி என்பது ஒரு சேவை.
- வழிபாடு முடிவடைந்த உடன், சென்று வாருங்கள் என்று நாம் சொல்லுகிறோம். அதை கடவுளுக்கு சேவை செய்ய (திருப்பணி செய்ய) சென்று வாருங்கள் என்ற சொல்லுவதுதான் சரி.
- மத்தேயு நற்செய்தி நூலில் இயேசு கிறிஸ்துவின் மூன்று வித போதனைகள் இடம் பெற்றுள்ளன. அவை:
- 1. மலைப்போதனை
- 2. சமவெளிப்போதனை
- 3. கடலோரப் போதனை
- எந்த சூழலில் எப்படி போதிக்க வேண்டும் என்பதை இயேசு கிறிஸ்து அறிந்து வைத்திருந்தார்.
- மக்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் போதித்தார்.
- உவமைகள் வழியே கடவுள் (இயேசு) போதித்தார். உவமைகள் என்பது கட்டுக்கதைகள் அல்ல, அந்த சூழலுக்கு ஏற்ப, அவர்களி்ன் மனநிலையை அறிந்து இயேசு போதித்தார்.
- இயேசு கிறிஸ்துவின் பணி சமயம் சார்ந்த பணி அல்ல, எல்லா மக்களுக்குமான பணியாகவே இருந்தது.
திருப்பணிக்கும், அருட்பணிக்கும் இடைப்பட்ட வித்தியாசம்:
- திருச்சபையின் திருப்பணிகளில் அருட்பணியும் ஒன்று.
- கொலோசெயர் 4:11-ல் கடவுளின் உடன்பணியாளர்கள் என்று வாசிக்கிறோம். அது திருப்பணியாளர்களையே குறிக்கிறது.
- திருப்பணி என்பது கடவுளுக்கு எதையாவது செய்வது, இறைவருகையைக் குறித்து மற்றவருக்கு அறிவிப்பதைக் குறிக்கிறது.
- திருப்பணி - பற்றுறுதியினால் நாம் பெற்றுக்கொண்ட அருட்கொடை.
- திருமுழுக்கு பெற்றவர்கள் செய்யும் பணி திருப்பணி.
- புதிய ஏற்பாட்டில் கண்காணிப்பாளர், மூப்பர், சேவை செய்பவர் என்ற அமைப்பு இருப்பதை பார்க்க முடியும். இவைகளே பிற்காலத்தில் பேராயர், ஆயர், டீக்கன் என்று சபைகளில் மாற்றப்பட்டது.
- பல்வகை திருப்பணி முறைகள் அடிப்படையில் பணிகள் அமைக்கப்பட்டன.
- பேராயர், ஆயர், நற்செய்தியாளர், ஆசிரியர் இவர்கள் அனைவருமே திருப்பணியாளர்களே.
- கிறிஸ்துவின் திருப்பணி இயேசு கிறிஸ்துவின் மனுஉருவேற்றலின் பணியிலிருந்து துவங்குகிறது.
- கடவுள் இயேசு கிறிஸ்துவை திருப்பணியாளராக அனுப்புகிறார். எனவே தான் இயேசு கிறிஸ்துவின் திருப்பணி கடவுளின் திருப்பணியாக இருந்தது.
- இயேசு கிறிஸ்துவை திருப்பணியாளராகிய இயேசு கிறிஸ்து என்று அழைக்கலாம்.
- Pastor என்ற சொல் முதல் உடன்படிக்கை நூலில் (பழைய ஏற்பாடு) உருவாக்கப்பட்டது.
- இஸ்ரவேல் மக்களுக்கும் ஆயர்கள் இருந்தார்கள்.
- ஆயர்கள் அனைவருமே திருப்பணியாளர்களே.
- திருப்பணி என்பது அருட்பொழிவு பெற்றவர்களுக்கு மாத்திரம் உரிமை உண்டு என்பது அல்ல. அனைவருக்குமே திருப்பணி செய்ய கடமைப்பட்டவர்கள்.
- திருப்பணியாளர்கள் எல்லாவற்றையும் சரியாய் செய்ய வேண்டும் என்பதற்காக அவர்களுக்கென்று ஒரு பொறுப்பு அதாவது அருட்பொழிவு (Ordination) கொடுக்கப்படுகிறது.
- Ordination அருட்பொழிவு என்பது ஒரு முடிவு அல்ல. அது ஒரு துவக்கமாக இருக்க வேண்டும்.
- இறைமக்கள் தான் திருப்பணிக்கு அடிப்படை.
- திருப்பணி என்பது கடவுளின் அழைப்பைப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.
திருப்பணியில் நாம் இப்போது பின்பற்றம் முறை:
- மேற்கத்திய திருப்பணி முறைகளைத் தான் நாம் பின்பற்றி வருகிறோம். எனவே, சூழல் சார்ந்த வழிபாட்டு முறை, பண்பாடு சார்ந்த வழிபாட்டு முறை, சமூகம் சார்ந்த வழிபாட்டு முறைகளாக நம்முடைய வழிபாட்டு முறைகள் மாற்றப்பட்ட வேண்டும்.
- வழிபாட்டு முறைமைகளை நாம் இந்தியமயமாக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். நம்முடைய வழிபாடு இந்தியமயமாக்கப்பட வேண்டும் என்ற கோட்பாடு பல ஆண்டுகளாக கோட்பாடாகவே இருக்கிறது.
சூழல் மயமாக்குதல்:
- கிறிஸ்தவம் ஐரோப்பிய பாத்திரத்தில் கொண்டுவரப்பட்டது. அது இன்னும் இந்தியப் பாத்திரத்திற்கு மாராமல் இருப்பது தான் வேதனையளிக்கிறது. இன்னும் ஐரோப்பிய பாத்தித்தில் தான் நாம் கிறிஸ்தவத்தை அருந்திக்கொண்டிருக்கிறோம்.
- இந்தியர்களின் வழிபாட்டு முறைமை இந்தியமயமாக்கப்பட வேண்டும் என்று முதல் முதலில் குரல் கொடுத்தவர் சாது சுந்தர் சிங்.
- அதனைத் தொடர்ந்து சஞ்சையா, சக்கரை, அப்பாசாமி போன்றவர்களும் வழிபாடு இந்தியமயமாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
- வாழ்வின் மரம் ஐரோப்பிய தொட்டியில் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டது. அந்த ஐரோப்பிய தொட்டியை உடைத்த, மரத்தை இந்திய மண்ணில் நடவேண்டியது நம் கடமை.
- இன்று நம்முடைய வழிபாட்டு முறைமை, அருட்பணி, திருப்பணி அனைத்துமே மேற்கத்திய முறைமைப் படியே அமைந்துள்ளது.
- 1910-ம் ஆண்டு The Book of Commen Prayerr என்ற புத்தகம் வெளிவந்தது.
- மேற்கத்திய பாடல்களைத் தான் நாம் இன்றும் ஆலயங்களில் பாடிக்கொண்டிருக்கிறோம். (அநேக திருச்சபைகளில் இந்தியர்களால் இயற்றப்பட்ட கீர்த்தனைகளை விட, மேற்கத்தியர்களால் இயற்றப்பட்ட பாமாலைகளே பாடப்படுகின்றன)
அடிப்படைவாதம்:
- எந்த அடிப்படைவாதத்தை விட்டு நாம் வெளியே வந்தோமோ, அது கிறிஸ்தவத்திற்குள்ளும் வந்துவிட்டது. அவை: நாள் பார்த்தல், நேரம் பார்த்தல், அற்புதங்கள், சாதி பார்த்தல், பொறுளாதார ஏற்றத்தாழ்வு, ஆண் ஆதிக்கம்.
- பெண்களுக்கு ஒரு சில பொருப்புகள் மட்டுமே சபைகளில் கொடுக்கப்படுகிறது. அனைத்து பொறுப்புகளும் ஆண்களிடத்தில் தான் உள்ளது.
- அனைத்து திருப்பணிகளும் காணிக்கையை மையமாக வைத்தே இயங்குகின்றன.
- பொருளாதார அதிகாரம், நிர்வாக அதிகாரம், சடங்காச்சார அதிகாரம்.
மதவாதம்:
- என்னுடைய கடவுள் தான் உண்மையான கடவுள். மற்றவர்களின் கடவுள் பொய்யான கடவுள் என்ற எண்ணம், சமய மக்களால் உண்டாக்கப்பட்டது.
- கிறிஸ்தவம் ஒரு சமயம் அல்ல. பின்நாட்களில் கிறிஸ்தவம் ஒரு சமயமாக உருவாக்கப்பட்டது. என்னுடைய சமயம் உண்மையானது, மற்ற சமயங்கள் பொய் என்று சொல்லுவது தவறு.
- கிறிஸ்தவர்கள் மற்ற மதத்தைப் பற்றி என்ன பேசுகிறார்கள் என்பதை விட, மற்ற மதத்தினர் கிறிஸ்தவத்தைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
- இந்து சமயம் என்பது வேறு, இந்துத்துவா என்பது வேறு.
திருமறை அழைப்பு:
- திருமறையின் ஆரம்பம் முதல் முடிவு வரை கடவுள் பல்வேறு மனிதர்களை அழைத்திருக்கிறார். அழைப்பு என்பது பொதுவானது. அவற்றை நேரடி அழைப்பு, மறைமுக அழைப்பு என இரண்டு பிரிவுகளாக பிரிக்கலாம்.
- ஆதாம், ஏவாள், காயீன், நோவா, ஆபிரகாம், etc.... போன்ற மனிதர்களை கடவுள் அழைத்திருக்கிறார்.
- அழைப்பு வார்த்தைகளினால் மட்டும் அல்ல, அடையாளங்கள் மூலமாகவும் கடவுள் சிலரை அழைக்கிறார்.
- ஒவ்வொரு அழைப்பிற்கும் ஒவ்வொரு நோக்கம் உண்டு.
- சிலர் நோக்கத்தைக் கண்டுபிடித்து, நோக்கத்திற்கேற்ப திருப்பணி செய்கிறார்கள்.
- சிலர் கடைசிவரை நோக்கத்தை அறிந்துகொள்ளாமலேயே திருப்பணி செய்கிறார்கள்.
- சிலர் சில காலம் மாத்திரம் அழைப்பிற்கு உண்மையுள்ளவர்களாய் இருந்துவிட்டு, பின்வாங்கிப்போய்விடுகிறார்கள்.
- ஆண்களை மாத்திரம் அல்ல, கடவுள் பெண்களையும் அழைக்கிறார். (மிரியாம், தெபொராள், உல்தாள்)
- திருமறையில் கடவுள் அநேகரை மறைமுகமாக அழைத்திருக்கிறார்.
- கடவுள் மோசேயை வா என்று அழைக்கிறார்.
- அழைப்பைப் பெற்ற மோசே கடைசி வரை உண்மையுள்ளவராக, ஒழுக்கமுள்ளவராக வாழ்ந்தார்.
- அழைப்பு மிகவும் கடினமானது. வாழ்நாளின் இறுதிவரை அழைப்பில் நிலைத்திருக்க வேண்டும்.
- மோசேயின் அழைப்பு, தானியேலின் அழைப்பு வெளிப்படையான அழைப்பு ஆகும்.
திருப்பணிக்கு திருச்சபை மாதிரிகள்:
- நாம் கடவுளுக்கு பணி செய்கின்றோம் என்ற சிந்தனையில் திருப்பணியைத் தொடங்க வேண்டும்.
- திருப்பணியில் கடின உழைப்பு தேவை.
- Be Honesty - நேர்மை
- Be Faithful - நம்பிக்கை
- Be Prayerful - இறைவேண்டல்
- Be Honour the Seniors - மூத்தவர்களை மதித்தல்
- பற்றுறுதியை செயல்வடிவமாக்க வேண்டும்.
புதிய ஏற்பாட்டில் பவுலின் அழைப்பு:
- கடவுளுக்கு பணி செய்ய அழைக்கப்படுகிறோம்.
- பவுலைப்போல கடினமாக திருப்பணி செய்தவர் இரண்டாம் உடன்படிக்கையில் (புதிய ஏற்பாடு) எவரும் இல்லை.
- பவுலைப்போல பாடுகளை ஏற்றுக்கொண்டவரும் எவரும் இல்லை. (1 கொரிந்தியர் 11:23-27)
- பவுலிடம் உண்மைத் தன்மை காணப்பட்டது.
- பவுல் தனது பற்றுறுதியை செயல்வடிவமாக்கியவர்.
- பவுலின் திருப்பணி நமக்கு முன்மாதிரியான திருப்பணி ஆகும்.
திருப்பணியாளரின் உருவாக்கம்:
- ஆன்மீக உருவாக்கம். ஆன்மீகம் என்பது பரவல நிலை அல்ல.
நம்மை அறிதல் (Knowing one Self)
- நான் எதற்காக அழைக்கப்பட்டிருக்கிறேன்?
- என் பணி எப்படிப்பட்ட பணி?
- அதை செய்ய நான் தகுதியுள்ளவனா?
- அதை நான் எப்படி செய்ய வேண்டும்?
- நான் மோசேயைப் போல பேசத்தெரியாதவன் என்ற கடவுளிடம் என்னை ஒப்புக்கொடுக்க வேண்டும்.
கடவுளை அறிதல் (Knowing God):
- கடவுளை நான் எந்த இடத்தில் வைத்திருக்கிறேன்?
- கடவுளின் அனுபவத்தைப் பெற்றிருக்கிறேனா?
கடவுளின் அனுபவத்தைப் பெறுவதற்கான வழிகள்:
- திருமறையை படிப்பதன் மூலம் கடவுளோடு உள்ள அனுபவத்தை பெற முடியும். (Reading of the Scripture)
- தனிப்பட் இறைவேண்டல் செய்வதன் மூலம். (Personal Prayer)
- திருமறையை தியானிப்பதன் மூலம். திருமறையை தியானித்து புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
- வழிபாடுகளில் கலந்துகொள்வதன் மூலம். (Worship - Spritual Experience)
- ஒரு நாளில் ஒருவேலையாவது இறைவேண்டல் செய்யும் அனுபவம் வேண்டும்.
உணர்வு முதிர்ச்சி (Emotional Mechurity)
- எனது உணர்வுகளை நானே உருவாக்குவதும், உணர்வுகளை புரிந்துகொள்வதும், நிர்வகிப்பதும், அதை தகுந்த முறையில் பயன்படுத்துவதுமே உணர்வு முதிர்ச்சி.
- அதனோடு அன்பு, கருணை, இரக்கம், பொறுப்பு ஆகியவை அடங்கும்.
உணர்வுகளின் பண்புகள்:
தன் உணர்வு (Self Emotion)
- என்னுடைய உணர்வுகளுக்கு நான் கட்டுப்படாமல், என்னுடைய உணர்வுகளை நான் கட்டுப்படுத்தும் முதிர்ச்சி எனக்கு வேண்டும்.
- என்னுடைய பெலனையும், பெலவீனங்களையும் புரிந்து கொள்வது உணர்வு முதிர்ச்சி.
- நம்மை நாமே சீர்படுத்துவது உணர்வு முதிர்ச்சி. (Self Regulation)
- கோபம் வரும்போது, கோபத்தைக் கையாளக் கற்றுக்கொள்ள வேண்டும்.
- கருணை உள்ளம் கொண்டவராக இருக்க வேண்டும்.
- மற்றவர்களின் நிலையை புரிந்துகொள்ள வேண்டும்.
- என்னுடைய சொல்லும், செயலும் பிறரை எப்படி காயப்படுத்துகிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
- தவறுகளை ஒப்புக்கொண்டு பிறரை பழித்து பேசாமல் இருக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
- என்னுடைய முடிவுகளுக்கு நானே பொறுப்பேர்க்க வேண்டும்.
- கருத்துவேறுபாடுகளை தவிர்க்காமல், மோதல்களை தவிர்க்க கற்றுக்கொள்ள வேண்டும்.
- எல்லாம் நாம் நினைத்தவாறு உடனடியாக நடக்க வேண்டும் என்று எண்ணக்கூடாது. பொறுமையோடு இருக்க வேண்டும்.
- எல்லாவற்றையும் குறித்த விரிவான பார்வை வேண்டும்.
- கோபம் வரும் சூழ்நிலைகளில், பதில் சொல்லுவதை விட்டு, அந்த இடத்தைவிட்டு கடந்து செல்ல பழக வேண்டும்.
எதிர்மறைக் கருத்துக்களை எப்படி கையாளுவது?
- எதிர்மறை உணர்வுகளை புரிந்துகொள்ள வேண்டும். இவர் கோபத்தில் பேசுகிறார், துக்கத்தில் பேசுகிறார், கண்ணீரோடு பேசுகிறார் என்று புரிந்துகொள்ள வேண்டும்.
- எதிர்மறை உணர்வு என்பது அவர்களின் அனுபவத்தை புரிந்துகொள்ளுதல். அனுவபங்களை கவனமாக கையாள வேண்டும். அதற்கான காரணத்தை அறிந்து கொள்ள வேண்டும்.
- எதிர் எண்ணங்களைக் கேள்விக்குறியாக மாற்ற வேண்டும்.
- எதிர் எண்ணங்களே தவறான எண்ணங்களாக மாற்றப்படுகிறது.
- புறங்கூறுதலை கேட்காமல் இருக்க வேண்டும்.
- எண்ணங்களை யாரேனும் சொல்வதை வைத்து உருவாக்காமல், நேரடியாக நம் அனுபவங்களைக் கொண்டு செயல்பட வேண்டும்.
- நம்பிக்கையுள்ள மனிதர்களிடம் மட்டுமே பேச வேண்டும்.
- நான் என்ன உணருகிறேன்? ஏன் இந்த உணர்வுகள் வருகிறது? இந்த உணர்வு தேவையா? என்ற கேள்விகளுக்கு விடை தேட வேண்டும்.
- சுகாதாரமான முறையில் பிரச்சனைகளை தீர்க்கும் முறைகளை உண்டாக்க வேண்டும்.
- அழுத்தங்களை உடற்பயிற்சி செய்தல், தியானம் செய்தல், மூச்சு விடுதல் போன்ற பயிற்சிகளை கொண்டு மேற்கொள்ள வேண்டும்.
- உணர்வு பலத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
- முடியாதவற்றை முடியாது என்றும் சொல்ல பழக வேண்டும்.
- உதவி கேட்க தயங்க வேண்டாம். உதவி கேட்பது பலவீனம் அல்ல.
- தாழ்மை (Humility) என்பது அறிவு முதிர்ச்சியின் வெளிப்பாடு.
- பகுத்தறிவு அறிவு முதிர்ச்சியாகும்.
- பாரபட்சமின்றி முடிவெடுப்பது அறிவு முதிர்ச்சி.
- தனிப்பட்ட, மேலோட்டமான தகவல்களைத் தாண்டி, உண்மையான புரிந்து கொள்ளுதல் அறிவு முதிர்ச்சி.
- எல்லாம் எனக்கு தெரியும் என்று சொல்வதைவிட, என் அறிவிற்கும் ஓர் எல்லை உண்டு என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
- கற்றுக்கொள்கின்ற தாழ்மை. நான் அதிகமாகக் கற்றுக்கொள்ளும் போதெல்லாம், எனக்கு ஒன்றும் தெரியாது என்று நான் உணருகிறேன் என்கிறார் சாக்ரட்டிஸ்.
- புதிய காரியங்களை கற்றுக்கொள்ளும் ஆர்வம் வேண்டும்.
- குழப்பங்களை ஏற்கும் மனிநிலை வேண்டும்.
- எல்லா காரியங்களிலும், சூழ்நிலைகளிலும் உள்ள மற்ற பக்கங்களையும் பார்க்க வேண்டும்.
- மாறுபட்ட இரண்டு கருத்துக்களை ஒரே நிலையில் கொண்டு சிந்திக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
- தன்னைப் பற்றிய ஆய்வு வேண்டும். என்னுடைய சிந்தனையை, கருத்துக்களை நான் திறனாய்வு செய்ய வேண்டும்.
- விவாதங்களுக்கு மரியாதை கொடுக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
பண்புகள்:
- திறந்த மனப்போங்கு
- பகுத்தறிவு (திறனாய்வு) செய்தல்
அறிவு முதிர்ச்சியை எவ்வாறு வளர்த்துக்கொள்ள வேண்டும்?
- நல்ல நூல்கள் புதிய சிந்தனைகளைத் தூண்டும்.
- அர்த்தமுள்ள உரையாடல்கள் (இறையியல் உரையாடல்)
- நம்முடைய சிந்தனைகளை பதிவு செய்தல் வேண்டும்.
- சவாலான சிந்தனையை அணுக வேண்டும்.
- சிந்திக்க வேண்டும். சிந்தனையில் வளர வேண்டும். அறிவை செயல்படுத்துவதே ஞானம்.
- அறிவு முதிர்ச்சி என்பது எல்லாம் எனக்கு தெரியும் என்பது அல்ல. எனக்கு ஒன்றும் தெரியாது. இன்னும் அதிகமாக கற்க வேண்டும். வளர வேண்டும் என நினைக்க வேண்டும்.
உறவு முதிர்ச்சி: (Mechiority of Relative)
- பிறருடன் உள்ள தொடர்பில் மரியாதை, பொருப்பான்மை வேண்டும். இது நம்பகத்தன்மையை உருவாக்கும்.
- உறவுகளுக்கிடையே சுகாதாரமான தொடர்பு வேண்டும்.
- சிந்தனைகளையும், எண்ணங்களையும் மரியாதையுடன் வெளிப்படுத்த வேண்டும்.
- பிறரைக் காயப்படுத்தாமல் பேச வேண்டும்.
- உணர்வுகளை கட்டுப்படுத்தும் திறன் வேண்டும். கோபம், வேதனை.
- கோபத்தால் பேசும் பேச்சுக்கள் உறவுகளை முறிக்கும்.
- அனுதாபத்தைத் தேடுவது உறவை வளர்க்காது.
- உறவுகளின் உணர்வுகளை நேர்மையாக கையாழுவது மிக அவசியம்.
- கோபத்தை வெளிப்படுத்துவது முட்டாள்தனம்.
- கோபம் வரும் சந்தர்ப்பங்களில் அமைதியாக (Silent) இருப்பது நாம் முதிர்ச்சியடைந்த நிலையைக் குறிக்கிறது. (Silent is most powerful Meturity)
- உறவு முறை எல்லைகளுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்.
- தவறுகளை ஒப்புக்கொள்ள வேண்டும். மன்னிப்புக் கேட்க வேண்டும்.
- மற்றவர்களுக்கு என்ன தேவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
- நம்பிக்கையும், நேர்மையும் உறவை உருவாக்கும்.
- சிக்கல்களை சரியாக கையாள வேண்டும்.
- இரண்டு பிரிவினருக்கிடையே வாக்கவாதம் என்றால், யார் வெற்றி பெற்றார் என்று சொல்லுவது முதிர்ச்சியல்ல. அந்த பிரச்சனை முடிவுபெற்றதா என்பதை ஆராய வேண்டும்.
- ஆழமான சிந்தனைகள் மூலம் உறவை வளர்க்க முடியும்.
- அனைவரின் அரிவுரைகளையும், ஆலோசனைகளையும் கேட்க வேண்டும்.
- முதிர்ச்சியை தகுந்த முறையில் வெளிப்படுத்த வேண்டும்.
திருப்பணியில் ஒருவரோடு ஒருவர் கொள்ளும் தொடர்பு:
- மக்களை பாராட்டவும், ஊக்கப்படுத்தவும் வேண்டும்.
- மக்களின் பாடுகளில் உடன் இருக்க வேண்டும்.
- இரக்க குணத்தோடு மக்களை பார்க்க வேண்டும்.
- மக்களின் நண்பராக இருக்க வேண்டும்.
- சமூக நீதி அடிப்படையில் ஒருமைப்பாடு.
- சுரண்டலின் உறவாக இருக்கக்கூடாது.
- நீதியற்ற எல்லைகளைத் தாண்டிச் செல்ல வேண்டும்.
- பொறுப்பான்மை, நேர்மையுடன் இருக்க வேண்டும்.
- பிரச்சனைகளை தீர்ப்பவர்களாக இருக்க வேண்டும்.
- விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
- நாகரீகமற்ற வலுவற்ற காரியங்களை மேற்கொள்ள வேண்டும்.
Alternative (மாற்று)
உருவாகி வரும் திருப்பணி முறைகள்:
திருப்பணி அமைப்புகளில் மாற்றம்
Letty Russel, Round Table
திருப்பணியில் இறையியளாளர்களும் பங்காளர்கள்
ஆக்கில்லா, பிரிஸ்கில்லாவோடு இணைந்து பவுல் திருப்பணியாற்றினார்.
திருப்பணியில் அனைவரும் நண்பர்கள்
பொறுப்பை பங்கிட்டு கொடுப்பது (Team Work)
இறைவாக்கு திருப்பணிகளின் உருவாக்கம்:
- தீர்க்கமாக உறுதியாக இறைக்காட்சியை சொல்பவர்களே தீர்க்கதரிசிகள்.
- இறைவாக்கு என்று சொல்லுவதைவிட தீர்க்கதரிசனம் என்று சொல்லுவது மிகவும் பொறுத்தமாக இருக்கும்.
- தரிசனம் Orasis என்ற கிரேக்க சொல்லிலிருந்து வந்தது.
- தீர்க்கதரிசனம் என்பது உண்மையை உண்மையாய்ப் பேசுவது.
- அநீதியான பாவமான சமூக பழக்கவழக்கங்களை, அமைப்புகளை திறனாய்வு செய்வது.
- திருச்சபையின் அமைப்புகளையும், நம் நிறுவனங்களையும் நாம் திறனாய்வு செய்வது தான் திருப்பணி.
- படைப்பைப் பற்றிய கரிசனையும் திருப்பணியில் தேவை.
- உலகத்தைப் பற்றிய நம்முடைய தவறான பார்வையையும் திறனாய்வு செய்ய வேண்டும்.
ஆயர்கள் பாதுகாப்பைப் பெற்றுக்கொள்கிறவர்கள்:
- ஆயரும் ஒரு மனிதனே. அவருக்கும் சில தேவைகள் உண்டு.
- ஆயருக்கும் ஒரு குடும்பம் இருக்கிறது என்பதை ஆயர் உணர்ந்து கொள்ள வேண்டும்.
- ஆயர்கள் குடும்பத்தையும் தங்களையும் பராமரிக்க வேண்டும்.
- மக்கள் தங்களை வந்து சந்திக்கும் வாய்ப்பை ஆயர்கள் உருவாக்க வேண்டும்.
- திருச்சபையில் உதவிக் குழுவை வைத்திருக்க வேண்டும்.
Important Questions
20 Mark Questions:
1. கிறிஸ்தவ திருப்பணியை எவ்வாறு புரிந்துகொள்வது?
2. இன்றைய கிறிஸ்தவ திருப்பணியை பற்றி திறனாய்வு செய்க?
3. இன்றைய திருச்சபையை பற்றிய திறனாய்வு?
4. திருப்பணியில் உணர்வு, அறிவு முதிர்ச்சி.
10 Mark Questions:
1. ஆயர் ஆழுகை முறை (நிர்வாகம்)
2. ஆயரின் அழைப்பும், அற்பணிப்பும்.
3. திருப்பணியின் மாற்றுமுறைகள்.
4. ஆயரின் அருட்பொழிவு திருப்பணி முறைகள்.
5. பல்வகை திருப்பணிகளில் ஆயரின் பங்கு
6. ஆயரின் ஆன்மீக உருவாக்கம்.
5 Mark Questions:
1) ஆயர் ஒரு மேய்ப்பர்?
2) ஆயர் ஆற்றுப்பணி?
3) திருப்பணி உருவாக்கத்தில், இறைவேண்டலும், இறையியல் கல்வியும்.
4) இறைவாக்குத் திருப்பணி
5) ஆயரின் அடையாளம் (எடுத்துக்காட்டான வாழ்க்கை)
6. ஆயரின் சமூக ஈடுபாடு
Assignment:
1) திருப்பணி உருவாக்கத்தில் திருவிவிலியம்
2) திருப்பணி உருவாக்கத்தில் இறையியல்
3) திருப்பணி உருவாக்கத்தில் நான்
4) திருப்பணி உருவாக்கத்தில் என் குடும்பம்
5) திருப்பணி உருவாக்கத்தில் திருச்சபை
6) திருப்பணி உருவாக்கத்தில் சமுதாயம்
7) திருப்பணி உருவாக்கத்தில் இறையியல் கல்லூரி
இந்த தலைப்புகளில் ஏதேனும் ஒரு தலைப்பை எடுத்து 8-10 பக்கங்களுக்கு மிகாமல் கட்டுரை எழுத வேண்டும்.
Bibliography, Footnote எழுத வேண்டும்.
சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 15/10/2025 (புதன்)
