Type Here to Get Search Results !

HOMILETICS | Hermeneutics | அருளுரையியலில் பொருள்கோள் இயல் | Assignment | Jesus Sam

HOMILETICS
தலைப்பு: அருளுரையியலில் பொருள்கோள் இயல்
Submitted by: Arun prakash, BD ll
Submitted to : Rev.Ravi Annan ,DPT of Homiletics

முன்னுரை:
பொருள்கோள் இயல் (Hermeneutics) என்பது திருமறையை விளக்கும் முறை ஆகும். Hermeneium என்ற சொல்லாடல் கிரேக்க சொல்லில் இருந்து வருகிறது. இதற்கு சொல் பொருள் விளக்கவியல், சொல் பொருள் விளக்குதல் என்பது பொருளாகும். இது Hermes என்ற கிரேக்க கடவுள் செய்திகளை கடவுளிடமிருந்து மனிதருக்கு கொண்டு வந்தார் என்பதால் Hermeneutics என்ற பெயர் வந்தது. Messenger of God செய்தியை சொல்பவர். சொற்பொழிபவர் பாதுகாவலர். ஒரு உண்மையை விளக்குவதற்காக Devine Truth இறை உண்மையை விளக்குதல் மற்றும் தெளிவுபடுத்துதல், புரிந்து கொள்வதற்கு மிக உண்மையாய் விளக்குதல் போன்ற பொருள்களும் உள்ளது.
"Hermeneutics may be defined as the science and art of Interpretation". Herms கிரேக்கு கடவுள் "எல்லாவற்றையும் புரிந்து கொள்ளக் கூடிய கடவுள்" இந்த வார்த்தையை திருத்தூதூர் பணிகள் 14:12 ல் பவுல் இந்த வார்த்தையை பயன்படுத்துகிறார். பொருள்கோள் இயல்/விளக்கவியல் பற்றியும் அதன் முறைகள் பற்றியும் திட்டக் கட்டுரையில் காண்போம்.

திருமறை விளக்குவதற்கான தேவை:
திருமறையை படித்து மட்டுமே புரிந்து கொள்ள முடியுமா? இதற்கான பதில் என்னவாக இருக்கும் என்றால்,ஆம் இல்லை என்று சொல்லலாம். கல்வி அறிவுள்ள ஒருவர் திருமறையை ஒர் இலக்கியமாக புரிந்து கொள்ளலாம். ஆனால் திருமறையின் தனிச்சிறப்புகளை புரிந்து கொள்ள திருமறை பொருள் கருதுகோள் முறை தேவை ஆகும். திருமறை இரட்டை ஆசிரியர் தன்மை உடையது. இது மனிதர்களால் எழுதப்பட்டாலும் தூய ஆவியின் தூண்டுதல் பேரில் எழுதப்பட்டுள்ளது. திருமறை உலகத்துடன் தொடர்புடைய கால அளவு, பண்பாடு,புவியியல், மற்றும் மொழி தொடர்பான விளக்கங்கள் ஆகியவை திருமறை பொருள் கருதுகோள் பற்றிய ஆய்வை நமக்கு தருகின்றன. திருமறை கடவுளுடைய வார்த்தையாக இருக்கின்றன என்பதால் அது வரலாற்றில் உள்ள மக்களுக்கு கடவுளுடைய வெளிப்பாடாக உள்ளது.

பொருள்கோள் இயல் பற்றி இடையிலாளர்களின் கூற்றுகள்:
Roy zuck
மனித ஆற்றல்களுக்கு அப்பாற்பட்ட செய்திகளை புரிந்து கொண்டு அதை விளக்கக்கூடிய ஆற்றல் கிரேக்க தத்துவத்தில் இருக்கிறது.

Bernard Ramn
திருமறையின் பகுதிகளை விளக்குவது கலை மற்றும் அறிவியல் ஆகும்.
அறிவியல்: கொள்கைகள் இருக்க வேண்டும்.
கலை: நோக்கம் இருக்க வேண்டும்.
திருமறையை விளக்க கொள்கைகளும் நோக்கங்களும் இருக்க வேண்டும்.

Terry
அறிவியல்:திருமறைப் பகுதியின் சிந்தனைகளை விளக்கக்கூடிய ஒன்று விளக்கவியல்.
கலை: திருமறைப் பகுதியின் யோசனைகளை இன்றைய சூழலுடன் பொருத்தி பார்ப்பதாகும்.

Augustine of Hippo
திருவிவிலியத்தின் தெளிவில்லாத திருமொழிகளை, தெளிவான திருமொழிகளின் வெளிச்சத்தில் விளக்க வேண்டும்.

சொற்பொருள் என்பதே அனைத்து விளக்கங்களுக்கும் அடித்தளம், தொடக்க புள்ளி மற்றும் அடிப்படை ஆகும்.

Martin Luther
திருவிவிலியம் தானே தன்னை விளக்குகிறது.
திருவிவிலியத்தின் உண்மையான பொருள், அதில் சொல்லப்பட்ட எளிய (சொற்பொருள்) பொருளே ஆகும்.

John Calvin
ஒரு விளக்குனரின் முதல் கடமை – ஆசிரியர் உண்மையில் சொல்வதை அவ்வாறே சொல்ல விட வேண்டும்; அவர் சொல்ல வேண்டுமென்று நாம் நினைப்பதைச் சேர்க்கக் கூடாது.

Friedrich Schleiermacher
ஒரு உரையைப் புரிந்துகொள்வது என்றால், அதை எழுதியவரின் மனதைப் புரிந்துகொள்வதாகும்.

Hans-Georg Gadamer
ஒரு உரையைப் புரிதல் என்பது வெறும் மீளுருவாக்கம் அல்ல; அந்த உரைக்கும் வாசகருக்கும் இடையே நடக்கும் உரையாடல் ஆகும்.

Paul Ricoeur
ஒரு குறியீடு சிந்தனையை உருவாக்குகிறது.
விளக்கம் என்பது உரைகளில் மறைந்திருக்கும் அர்த்தத்தைத் திறந்து காட்டும் செயல் ஆகும்.

அருளுரையியல் பொருள்கோள் இயல்:
பொருள்கோள் இயல்
பொருள்கோள் இயல் என்பது திருமறையின் உரைகளை சரியான முறையில் விளக்கும் அறிவியல்/முறை.

திருமறையின் அர்த்தத்தை அறிதல் ஆகும்.

திருமுறை பகுதியின் பொருள், சூழல், ஆசிரியரின் நோக்கம், மொழி, வரலாறு ஆகியவற்றை ஆய்வு செய்து “உரை என்ன சொல்லுகிறது?” என்பதைக் கண்டறிதல் ஆகும்.

Hermeneutics இல்லாமல் Homiletics இருந்தால் அருளுரையானது தனிப்பட்ட கருத்து, தவறான போதனை ஆகிவிடும்.

எடுத்துக்காட்டு
வரலாற்று சூழல்:
Text: யோவான் 10:11 – “நான் நல்ல மேய்ப்பன் யூதர்களுக்கு மேய்ப்பன் = ராஜா, வழிநடத்துபவர்.

இயேசு தன்னை உண்மையான, தியாகமுள்ள மேய்ப்பனாக காட்டுகிறார்.

அருளுரையியல்
அருளுரையியல் என்பது அந்த விளக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அருளுரையாக மாற்றும் கலை ஆகும்.

அந்த அர்த்தத்தை அருளுரையாக மாற்றும் முறையாகும்.

அதே கண்டறிந்த பொருளை, இன்று வாழும் மக்களுக்கு “இது எவ்வாறு பொருந்துகிறது?” என்று அருளுரை வடிவில் தெரிவிக்கும் கலை கலையாகும்.அந்த பொருளை வாழ்க்கையில் பயன்படுத்தக் கூடிய செய்தியாக வழங்கும் முறையாகும்.

Homiletics இல்லாமல் Hermeneutics இருந்தால் திருமறை விளக்கம் புத்தகத்துக்குள் மட்டுமே இருக்கும், பற்றுறுதியாளர்களின் வாழ்க்கைக்கு சென்றடையாது.

"இயேசு கிறிஸ்து நம்முடைய வாழ்க்கையை கவனிக்கும் மேய்ப்பன்.”
“அவர் நமக்காக தியாகம் செய்தார், அதுபோல் நாமும் பிறருக்காக வாழ வேண்டும்.”

Hermeneutics → Homiletics:
1. திருமறை பகுதி தெரிவு செய்தல்
திருமறையில் இருந்து ஒரு பகுதியையோ அல்லது ஒரே கருத்துக்களை கொண்ட பகுதிகளை தெரிவு செய்ய வேண்டும்.

2. அருளுரைக்கான அகழ்உரை
மூல மொழி, வரலாறு, இலக்கிய வகை, சூழல், ஆசிரியர் கொடுக்கும் விளக்கம் அடிப்படையில் திருமறை பகுதியை அகழ்உரை செய்து, திருமறை பகுதிகளை விளக்க வேண்டும்.

3. இறையியல் அடித்தளம்
திருமறை பகுதியானது இறையியல் அடிப்படையாகக் கொண்ட அமைய வேண்டும். மனித இறப்பு நிலையில் மற்றும் கலாச்சாரத்தில் இருந்து எழுகின்ற வினாக்களுக்கு கிறிஸ்தவ நற்செய்தி மூலமாக கொடுக்கின்ற பதிலுரையாக சிறையில் அடித்தளம் அமைய வேண்டும்.

4. Application (Homiletics)
திருமறை பகுதியை , இறையியல்களை கேட்பவர்களின் வாழ்க்கைச் சூழ்நிலைக்கு ஏற்ப தொடர்புபடுத்த வேண்டும்.

5. Communication (Homiletics)
திருமறை பகுதியை அருளுரையாக எளிமையாகவும் சக்தியாகவும் மக்களை சென்றடையும் வகையில் தொடர்பு படுத்த வேண்டும். மக்களுக்கு புரியும் வகையில் மக்களுடைய மொழிநடையில் தொடர்பு படுத்த வேண்டும்.

அகன்ற சூழல்:
அகன்ற சூழல், மற்றொரு பக்கத்தில் அருளுரை ஆற்றுவதற்கென்று கொடுக்கப் பெற்றுள்ள பகுதி இடம் பெறுகின்ற நூலின் வரலாற்றுப் பின்னணி, பண்பாட்டுப் பின்னணி, சமுதாய அரசியல் பின்னணி, பொருளாதாரப் பின்புலம் ஆகியவற்றையும் அந்த நூலின் நோக்கம், குவியம் ஆகியவற்றையும்,கொடுக்கப் பெற்றிருக்கும் பகுதியின் நிலை என்ன என்பதையும் பார்க்க வேண்டும். அந்த நூல் எந்தப் பின்னணியில் எழுதப்பெற்றது என்பதைப் பார்க்கும்போது அதன் ஆசிரியர் எதிர்கொண்ட சூழல் தெரியவரும். அக்காலத்து நிலவிய பழக்கவழக்கங்கள் தெரியவரும். எத்தகைய நிலைகள் பெருவழக்காக இருந்தன என்பது தெரியும். அந்தச் சமுதாயத்தை ஆளுகை செய்ய கருதுவோர்கள் பற்றிய புரிதல் கிடைக்கும். அகன்ற சூழல் எப்படியாவது அந்த நூலின் இலக்கிய வகை மீது தன் தாக்கத்தைச் செலுத்தியிருக்கும். அந்தச் சூழலுக்குரிய தம் மறுமொழியையோ, அதைப் படிப்பவருக்கு அருளுரையையோ, எவ்வாறு நடந்திட வேண்டும் என்கின்ற செய்தியையோ, ஒரு சமுதாயச் சூழலை எவ்வாறு அணுகிட வேண்டும் என்பது பற்றியோ, அந்த நூலாசிரியர் தந்திருப்பார். அக்காலத்தில் நிலவியிருந்த தீமையான சூழல்களிடமிருந்து ஒருவர் தம்மைக் காத்துக் கொள்வது எவ்வாறு என்பதை அவர் அந்த நூலில் விளக்கியிருப்பார். ஒரு நூல் எந்தக் காலத்தில் எழுதப் பெற்றதோ அந்தக் காலத்து நிலவிய சமுதாயத்தவரின் வாழும் மரபுகளை வெளிப்படுத்தும் பதிவாக அகன்ற சூழல் அமையும். வாழும் மரபுகள் என்பன பண்பாடு, பற்றுறுதி, கோட்பாடுகள், பழக்கவழக்கங்கள் போன்றவற்றின் தாக்கத்தையும் பெற்று, அவற்றை வெளிப்படுத்துவனவாகவும் இருக்கும். இது திருநூல் பகுதியைப் பற்றுறுதி மரபின் வரைவுச் சட்டத்துக்குள் வைத்திடச் செய்கின்றது. இணைந்த நிலையில் கோட்பாடுகளுடனும் பொருந்தி நிற்கும் கிறிஸ்தவர் தம் பற்றுறுதியை வாழ்வின் வழிமுறையாகக் கொண்டு, அதனைப் பின்பற்றுகின்றனர். பற்றுறுதி மரபுகள் என்பன ஒருவரின் வாழ்வு சமயம் கண்ணோக்கு ஆகியவற்றைப் பற்றி அவர் என்ன பார்வை வைத்திருந்தாரோ அதனை வெளிப்படுத்தும். பார்வை உறுதிப்பாட்டுக்கு இட்டுச் செல்லும், உறுதிப்பாடு பற்றுறுதிக்கும், பற்றுறுதி தனியொருவரின் பற்றுறுதிக்கும் ஒரு சமுதாயத்தவரின் பற்றுறுதி, மரபுகளுக்கும் இட்டுச் செல்லும், அந்தச் சமுதாயத்தின் எழுத்துகள் மீது அந்தச் சமுதாயத்துப் பற்றுறுதி மரபுகள் தம் தாக்கத்தைச் செலுத்தும். அகன்றசுழல் அந்த மரபுகளைப் பற்றிய புரிந்து கொள்ளுதலை மேம்படுத்துவதாக அமையும்.

திருமறை விளக்கத்திற்கான அணுகுமுறைகள்:
1. உருவக விளக்க முறை:
திருமறை பகுதியில் அதனை எழுதியவர் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தில் எழுதியிருப்பார். அதனை யாருக்கு எழுதிகிறாறோ அவர்கள் குறிப்பிட்ட ஒன்றை செய்ய வேண்டும் என்று அவர் எதிர்பார்த்திருப்பார். எழுதியவருடைய பிண்ணணியம் ஒன்று இருக்கும் அந்த பிண்ணனியத்தின் அப்படையில் இதனை எழுதியிருப்பார்.

எடுத்துக்காட்டு: மகிழ்ச்சியாருங்கள் என்று பவுல் எழுதியிருப்பார். அதன் பிண்ணணியம் வரலாற்று, சமூதாயம், பொருளாதார, அரசியல், இறையியல் பிண்ணணியம் ஆகியவை அவருக்கு உந்துதலை கொடுத்து இவைகளை எழுதியிருப்பார். இந்த உலகத்தின் அடிப்படையில் எழுதுகிறவர்கள் பவுல், மத்தேயு அல்லது பழைய ஏற்பாட்டு எழுத்தாளர்கள் யாராயிருந்தாலும் அவர்களுக்கு ஒரு உலகம் இருக்கிறது அந்த நோக்கத்தின் அடிப்படையில் எழுதுகிறார்கள். அவர்கள் சொல்லுகின்ற காரியத்தை விட அதன் பின்பாக ஒரு முக்கியமான அர்த்தம் உள்ளடங்கியிருக்கும். பழைய ஏற்பாட்டில் இறைவாக்கினர் ஒரு காரியத்தை சொல்லியிருப்பார் என்றால் அதற்கு பின்பாக இருப்பதை அறிந்து விளக்க வேண்டும்.
ஒரு திருமறைப் பகுதியில் கீழ் குறிப்பிட்டவை காணப்படும்.

1. அறநெறி நோக்கம் காணப்படும்
2. ஆவிக்குரிய, ஆன்மீக நோக்கம் இருக்கம்
3. சமுதாயம் நோக்கம், வாழ்க்கை முறை சார்ந்த சூழல் இருக்கும்.

2. அறம் சார்ந்த முறை:
ஒரு திருமறை பகுதியில் கீழ் குறிப்பிட்டவை காணப்படும்.
1. அறநெறி நோக்கம் காணப்படும்.
2. ஆவிக்குரிய, ஆன்மீக நோக்கம் இருக்கும்.
3. சமுதாய நோக்கம், வாழ்க்கை முறை சார்ந்த சூழல் இருக்கும்.

இந்த மூன்று நோக்கங்களோடு கூட திருமறை பகுதிகள் எழுதப்படும். இவைகளை கண்டுபிடித்து அதன் அடிப்படையில் விளக்க வேண்டும்.
திருமறைப் பகுதியை விளக்கும்போது ,
1. திருமறையில் சொல்லப்படும் செய்தி.
2. நம்முடைய அனுபவத்தின் அடிப்படையில் அறம் சார்ந்து விளக்க வேண்டும் .

3. சூழல் சார்ந்த விளக்கம்:
திருமறைப் பகுதியை ஒரு பகுதியில் வாழும் மக்களின் சூழல், கலாச்சாரம் சார்ந்து விளக்கும் முறை சூழல் சார்ந்த விளக்குமாகும்.
சூழல் அடிப்படையில் விளக்கும்போது,
1. சூழல் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களின் மனநிலை என்ன என்பதை அறிய வேண்டும்.
2. குடும்பம் சார்ந்த பாதிப்பு
3. பொருளாதாரம் சார்ந்த பாதிப்பு
4. சமுதாயம் சார்ந்த பாதிப்பு
5. கலாச்சாரம் சார்ந்த பாதிப்பு
6. ஆவிக்குரிய பாதிப்பு
ஆகியவை என்ன என்பதை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
கடவுளை நம்பி அவருடன் நெருங்கி வாழ்ந்திருக்கிறார்கள். இவர்களின் பற்றுறுதி என்ன ஆனது. இது போன்ற கேள்வி மக்களுக்கு இருக்கும். அந்த பற்றுறுதிக்கு பதில் கொடுக்கும் வண்ணம் பற்றுறுதியை நிலைநிறுத்தும் வண்ணம் விளக்க வேண்டும். ஒவ்வொரு காரியங்களின் உண்மைகளை அறிந்து விளக்கவேண்டும்.

4. விடுதலை சார்ந்த விளக்கங்கள்:
விடுதலை காண இறையியல் என்பது நீதி சார்ந்தும், சமத்துவம் சமூகம் சார்ந்தும், மாந்த வாழ்வு சார்ந்து அமைய வேண்டும். இதை சார்ந்த விளக்கமுறை விடுதலை விளக்கமுறை ஆகும்.
திருமலை பகுதிகளை விடுதலைறையில் சார்ந்து விளக்குவது விடுதலை அருளுரை முறையாகும்.

5. வரலாற்று இலக்கண முறை:
William: திருமறையை துல்லியமாக புரிந்து விளக்குவதற்கு இலக்கண வரலாற்று முறையை விட வேறு சிறந்த முறைமை முக்கியமானதாக அமையாது.
திருமறை பகுதியில் விளக்கும் போது அதனுடைய இலக்கண முறை , வரலாற்று சூழல், நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து விளக்க வேண்டும்.

6. கண்ணோக்கு விளக்கு முறை:
திருமுறை பகுதியை படிக்கும் போது எந்த திருமுறை பகுதியையும் சூழல் சார்ந்த விளக்கத்திற்கு பயன்படுத்தலாம்.
நம்முடைய கண்ணோட்டம் அடுத்தவர் வாழ்வின் நலனுக்கான கண்ணோட்டமாக இருக்க வேண்டும் அடுத்தவர் வாழ்வை உடைப்பதற்கான கண்ணோட்டமாக அமையக்கூடாது என்பதை ஒவ்வொரு அருளுரையாளரும் கருத்துக் கொள்ள வேண்டும்.
நம்முடைய கண்ணோக்கத்தை எப்படி வைத்திருக்கிறோம் என்பதில் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். கண்ணோக்கு அடிப்படையில் செய்யப்படும் விளக்கம் விடுதலையின் விளக்கமாக இருக்கிறது. விடுதலை என்பது கண்ணோக்கு சார்ந்து அனுபவத்தின் அடிப்படையில் அமைந்திருக்கிறது.

விடுதலையை கண்ணோக்கம் மையமாக வைத்து விளக்கும் முறையில்,
1. நீதியை கருவியாக பயன்படுத்தலாம்.
2. விடுதலையை மையமாக வைத்து
3. சமத்துவத்தை அடிப்படையாக வைத்து. (எல்லாரும் சமத்துவமாக இருக்கவேண்டும்)
4. மாண்பை குறித்து என்ன சொல்கிறது என்றதன் அடிப்படையில்
5. கூடிவருதல் (சமுதாய வாழ்வு, சமத்துவ வாழ்வு)
ஆகியவற்றின் அடிப்படையில் திருமறை பகுதியை நாம் விளக்க வேண்டும்.

7. நவீன காலத்திற்கு பின்வரும் விளக்க முறை:
இந்த முறையில் ஒரு திருமறைப் பகுதியை எடுக்கும் போது அதன் அர்த்தத்தை எழுதியவர் கொடுக்கிறாரா, அந்த பகுதி என்ன அர்த்தம் கொடுக்கிறது, அதனை வாசிக்கிறவர் என்ன அர்த்தம் கொடுக்கிறார், அருளுரை ஆற்றுகிறவர் கொடுக்கிற அர்த்தமா என்பதை பொறுத்த அருளுரை அமைகிறது.
இந்த காலக்கட்டத்தின் மக்கள் திருமறையை எப்படி பார்க்கிறார்கள் என்பதை மையமாக வைத்து திருமறை பகுதியை விளக்க வேண்டும். அவர்கள் வாழ்க்கையை குறித்த புரிதல் என்ன என்பதை கண்டுபிடிக்க வேண்டும். நற்செய்தியை குறித்த புரிதல் என்ன என்பதை கண்டுபிடிக்க வேண்டும். என்ன என்பதை கண்டுபிடித்து விளக்க வேண்டும்.

முடிவுரை:
அருளுரைக்கான பொருள்கோள் இயல் என்பது திருமறையின் உண்மையான அர்த்தத்தை (Hemeunitics) கண்டறிந்து அதனை கேட்போரின் வாழ்வில் பொருத்தமாகவும், மாற்றம் உண்டாக்குமாறும் (Hemilitics) அறிவிப்பதாகும். இதன் மூலம் அருளுரை உண்மையும் உயிரும் நிறைத்த கடவுளின் வார்த்தையாகிறது. அந்த கடவுளின் வார்த்தை ஆனது மக்களின் மனதில் சென்று மக்கள் பற்று உறுதியில் வளர நிலைத்திருக்க காரணமாக அமைகிறது. பொருள்கோள் இயல் இல்லாமல் அருளுரை இல்லை . அருளுரை இல்லாமல் பொருள்கோளியில் இல்லை.

நூலோதி:
Stephen Alfred, அருளுரை பணிநூல். Madurai : Eindruck Publishers, 2024.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.