Type Here to Get Search Results !

December 2024 | Scripture Exam | Jesus Sam

BDI/CO3
20th December, 2024
Friday, Forenoon

TAMILNADU THEOLOGICAL SEMINARY
B.D. Second Term College Examination 2024-2025
CO3-Scripture

Total Marks: 100
Time: 3hours

1. பொருள் தருக.  15 x 1 = 15
1) மெரிபா
Answer: ஓரேப் என்ற இடத்தில் இஸ்ரயேல் மக்கள் வாதாடியதாலும், ஆண்டவர் தம்மோடு இருக்கிறாரா இல்லையா என்று சோதித்ததாலும் அவ்விடத்திற்கு “மாசா“ என்றும் “மேரிபா “என்றும் பெயர்.
    விடுதலைப்பயணம் 17:6,7

2) ஊரிம், தும்மீம்
Answer: கடவுளின் திருவுளத்தை அறிவதற்குக் குருக்கள் பயன்படுத்தும் இரு பொருட்கள்.
(அல்லது)
ஆரோன் திருத்தலத்திற்குள் செல்லும்போது மார்புப்பட்டை அணிந்திருக்க வேண்டும். மார்புப்பட்டையில் ஊரிம், தும்மீம் என்பவை இருக்கும். இது இஸ்ரவேல் மக்களின் தீர்ப்பை குறிக்கிறது.
    விடுதலைப்பயணம் 28:30

3) மன்னா
Answer: இது என்ன? (மான்கூ)
இஸ்ராயேல் மக்களுக்கு கடவுளால் வனாந்தரத்தில் கொடுக்கப்பட்ட உணவு
    விடுதலைப்பயணம் 16:15

4) கிப் ரோத் அத்தவா
Answer: பெருவிருப்புக் கொண்ட மக்கள் புதைக்கப்பட்ட இடம்.  (பேராசையின் கல்லறை)
    எண்ணிக்கை 11:34

5) மோலேக்
Answer: அம்மோனியர்களின் கடவுள்
    1 அரசர்கள் 11:7

6) கோடேஷ்
Answer: புனித இடம்

7) யோசுவா
Answer: கடவுள் பாதுகாப்பார் (கர்த்தர் மீட்பர்)
    யாத்திராகமம் 17:9

8) கொள்ளிவாய் பாம்புகள்
Answer: விஷப்பாம்புகள் (வெண்கலப்பாம்பை மோசே நிறுவினார்)
    எண்ணிக்கை 21:6-9

9) செக்கின்னா
Answer: கடவுளின் மகிமை அல்லது கடவுளின் இருத்தல் நிலை (பிரசன்னம்)

10) பெரித்
Answer: உடன்படிக்கை

11) தோரா
Answer: ஐந்தாகமம் (திருச்சட்டம்)

12) ஷெமா, இஸ்ரயேல்
Answer: இஸ்ராயேலே கேள்

13) மரத்தில் தொங்கவிடப்பட்டவர்
Answer: (சபிக்கப்பட்டவன்) சாவுக்கு ஏதுவான பாவம் செய்த மனிதன் சாகடிக்கப்பட்ட பின் அவனது பிணத்தை ஒரு மரத்திலே தொங்கவிட வேண்டும்.
    இணைச்சட்டம் 21:22,23

14) சாபத்து
Answer: ஓய்வு நாள் (ஏழாம் நாள்)
    விடுதலைப்பயணம் 16:22,23

15) சந்திப்புக் கூடாரம்
Answer: கடவுள் காட்சிதரும் இடம் (அல்லது) கடவுளை சந்திக்கும் இடம்.
    விடுதலைப்பயணம் 30:36


II. பொருத்துக. 10 x 1 =10
1) மோசே
Answer: 
என் (கடவுள்) வீடு முழுவதிலும் நம்பிக்கைக்குரியவர்
    எண்ணிக்கை 12:7
    
2) பாஸ்கா
Answer: முதல் மாதம் பதினைந்தாம் (பதினான்காம் நாள் மலை) நாள்
    எண்ணிக்கை 28:16

3) யூபிலி
Answer: ஐம்பதாவது ஆண்டு
    லேவியர் 25:10

4) ஏழாம் ஆண்டு
Answer: நிலத்திற்கு ஓய்வு
    விடுதலைப்பயணம் 23:10,11

5) லேவியர்
Answer: ஆண்டவருக்குரியவர்கள்

6) ஐம்பதாம் நாள் விழா
Answer: பெந்தக்கோஸ்து
    லேவியர் 23:16
    திருத்தூதுவர் பணிகள் 2:1

7) சந்திப்புக் கூடாரம்
Answer: திராட்சரசம் மது குடிக்கக்கூடாது
    லேவியர் 10:9

8) நாதாபு அபிகூ
Answer: ஆரோனின் புதல்வர்கள் (தாய் எலிசாபா)
    விடுதலைப்பயணம் 6:23

9) உடன்படிக்கை கூடாரத்தை காவல் செய்ய வேண்டியவர்கள்
Answer: லேவியர்
    எண்ணிக்கை 1:53

10) மிரியாம்
Answer: காதேசில் இறந்து அடக்கம் செய்யப்பட்டவர்.
    எண்ணிக்கை 20:1

(ஐம்பதாவது ஆண்டு. ஆண்டவருக்குரியவர்கள், திராட்சரசம் மதுகுடிக்கக்கூடாது. லேவியர். என் வீடு முழுவதிலும் நம்பிக்கைக்குரியவர். ஆரோனின் புதல்வர்கள், முதல் மாதம் பதினைந்தாம் நாள். நிலத்திற்கு ஓய்வு, பெந்தக்கோஸ்து, காதேசில் இறந்து அடக்கம் செய்யப்பட்டவர்)

III. பொருத்துக. 10 x 1 = 10
1) யோசுவா
Answer: நூனின் மகன்
    யோசுவா 1:1

2) பாலாக்கு
Answer: சிப்போரின் மகன்
    எண்ணிக்கை 22:2

3) பிலயாம்
Answer: பெகோரின் மகன்
    எண்ணிக்கை 22:5

4) இரத்தம்
Answer: அழியாதபடி பாதுகாக்கனும்

5) ஆரோனின் கோல்
Answer: வாதுமைப் பழங்களை கொடுத்தது
    எண்ணிக்கை 17:8

6) கோகாத் வம்சம்
Answer: பிரித்தெடுக்கப்பட்டவர்

7) நாசீர்
Answer: கடவுளின் திருவுளத்தை அறிதல்

8) தபேரா
Answer: எரிந்து கொண்டிருப்பது
    எண்ணிக்கை 11:3

9) ஓர்மா
Answer: அழிவு
    எண்ணிக்கை 21:3

10) எல்தாதும், மேதாதும்
Answer: பாளையத்தில் இறைவாக்குரைத்தவர்கள்
    எண்ணிக்கை 11:26,27

(கடவுளின் திருவுளத்தை அறிதல், நூனின் மகன், தேசத்தை திட்டுப்படுத்தும். அழியாதபடி பாதுகாக்கனும், பெகோரின் மகன், வாதுமைப் பழங்களை கொடுத்தது. பிரித்தெடுக்கப்பட்டவர். சிப்போர் மகன், எரிந்து கொண்டிருப்பது, அழிவு, பாளையத்தில் இறைவாக்குரைத்தவர்கள்)


IV. பொருத்துக. 10 x 1 = 10
1) பாகால்
Answer: பெகோரின் தெய்வம்
    இணைச்சட்டம் 4:2

2) ஓரேப் மலை
Answer: உடன்படிக்கை மலை
    இணைச்சட்டம் 5:2

3) கெரிசிம் மலை
Answer: ஆசியை அறிவிக்கும் மலை
    இணைச்சட்டம் 11:29

4) ஏபால் மலை
Answer: சாபத்தை அறிவிக்கும் மலை
    இணைச்சட்டம் 11:29 

5) ஏதோமியர்
Answer: இஸ்ரயேலரின் சகோதரர்
    இணைச்சட்டம் 23:7

6) மோவாபு மலை
Answer: உடன்படிக்கை புதுப்பித்தல் மலை
    இணைச்சட்டம் 29:1

7) நியாய பிரமாணம்
Answer: துலக்கமாக எழுத வேண்டும்

8) இஸ்ரேல் ராஜா வைத்திருக்க வேண்டியது
Answer: நியாயப்பிரமாணம்

9) காத்
Answer: தனக்கான முதல் இடத்தை காத்துக்கொண்டவர்

10) அம்மோனியரும், மோவாபியரும்
Answer: திருப்பேழைக்குள் நுழைய தடை
    இணைச்சட்டம் 23:3

(ஆசியை அறிவிக்கும் மலை. பெகோரின் தெய்வம். இஸ்ரயேலரின் சகோதரர். உடன்படிக்கை மலை. சாபத்தை அறிவிக்கும் மலை, உடன்படிக்கை புதுப்பித்தல் மலை, துலக்கமாக எழுத வேண்டும். கடவுளின் திருப்பேழைக்குள் நுழைய தடை. நியாயப்பிரமாணம். தனக்கான முதல் இடத்தை காத்துக்கொண்டவர்)

V. கோடிட்ட இடத்தை நிரப்புக (45 x 1 = 45)
கேள்வி எண் 1
காது கேளாதோரைச் ___________, பார்வையற்றோரை _________ , உன் கடவுளுக்கு ________ நான் ஆண்டவர் (லேவியர் 19:14)
Answer: சபிக்காதே, இடறச் செய்யாதே! அஞ்சி நட.
(காது கேளாதோரைச் சபிக்காதே! பார்வையற்றோரை இடறச் செய்யாதே! உன் கடவுளுக்கு அஞ்சி நட. நான் ஆண்டவர்!)


கேள்வி எண் 2
உங்கள் நாட்டில் நீங்கள் பயிரிட்டதை அறுவடை செய்யும் போது _________  சிந்திக்கிடக்கும் கதிரையும்  திராட்சத்தோடத்தில் பின்னறுப்பு வேண்டாம். ______  அவற்றை _________ விட்டுவிட வேண்டும் நானே _________ . (லேவியர் 19:9.10)
Answer: வரப்பு ஓரக்க கதிரை அறுக்க வேண்டாம், சிந்திக்கிடக்கும் பழங்களைப் பொறுக்க வேண்டாம், எளியோருக்கும், அன்னியருக்கும், உங்கள் ஆண்டவராகிய கடவுள்! 
(9. உங்கள் நாட்டில் நீங்கள் பயிரிட்டதை அறுவடை செய்யும்போது, வரப்பு ஓரக் கதிரை அறுக்கவேண்டாம். சிந்திக் கிடக்கும் கதிரையும் பொறுக்க வேண்டாம்;
10. திராட்சைத் தோட்டத்தில் பின்னறுப்பு வேண்டாம்; சிந்திக் கிடக்கும் பழங்களைப் பொறுக்க வேண்டாம். அவற்றை எளியோருக்கும் அந்நியருக்கும் விட்டுவிட வேண்டும். நானே உங்கள் ஆண்டவராகிய கடவுள்!)


கேள்வி எண் 3
உங்கள் நாட்டில் தங்கியிருக்கும் _______ உங்களிடம் தங்கும் _______ உங்கள்
_________ இருக்க வேண்டும். உங்கள் மீது ___________ போல அவர் மீதும் அன்பு கூருங்கள். ஏனெனில் எகிப்தில் ________ நானே _________ (லேவியராகமம் 19:33,34)
Answer: அன்னியருக்குத் தீங்கிழைக்காதே!, அந்நியர், நாட்டில் பிறந்தவரைப் போல், நீங்கள் அன்புக்கூறுவது, நீங்களும் அன்னியர்களாய் இருந்தீர்கள், உங்கள் கடவுளாகிய ஆண்டவர்!
(33. உங்கள் நாட்டில் தங்கியிருக்கும் அந்நியருக்குத் தீங்கிழைக்காதே!
34. உங்களிடம் தங்கும் அந்நியர் உங்கள் நாட்டில் பிறந்தவரைப் போல் இருக்க வேண்டும். உங்கள் மீது நீங்கள் அன்புகூர்வது போல் அவர் மீதும் அன்புகூருங்கள். ஏனெனில், எகிப்தில் நீங்களும் அந்நியர்களாய் இருந்தீர்கள்; நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்!)


கேள்வி எண் 4
என் ________ உங்கள் _________ நிறுத்துங்கள். அவற்றை உங்கள் கைகளில் _________, உங்கள் _________ அவை அடையாளபட்டமாக இருக்கட்டும். நீங்கள் அவற்றை உங்கள் __________ நீங்கள் வீட்டில் இருக்கும்போதும், _______ அவற்றை பேசுங்கள் (இணைச்சட்டம் 11:18,19).
Answer: வார்த்தைகளை, நெஞ்சிலும் நினைவிலும், அடையாளமாகக் கட்டிக் கொள்ளுங்கள், கண்களுக்கிடையே, பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுங்கள், பயணம் செய்யும்போதும், படுக்கும் போதும், எழும்போதும். 
(18. எனவே, என் வார்த்தைகளை உங்கள் நெஞ்சிலும் நினைவிலும் நிறுத்துங்கள். அவற்றை உங்கள் கைகளில் அடையாளமாகக் கட்டிக் கொள்ளுங்கள். உங்கள் கண்களுக்கிடையே அவை அடையாளப் பட்டமாக இருக்கட்டும்.
19. நீங்கள் அவற்றை உங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுங்கள். நீங்கள் வீட்டில் இருக்கும்போதும், பயணம் செய்யும்போதும், படுக்கும் போதும், எழும்போதும் அவற்றைப் பேசுங்கள்.)


கேள்வி எண் 5
மனிதர் ________ மட்டுமன்று. மாறாக __________ .(இணைச்சட்டம் 8:3)
Answer: அப்பத்தினால், கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் உயிர்வாழ்கின்றார்.
(மனிதர் அப்பத்தினால் மட்டுமன்று, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் உயிர்வாழ்கின்றார்.)


கேள்வி எண் 6
வறியவரும் எளியவருமான _________ உன் இனத்தாராயினும் சரி அல்லது உன் நாட்டில் உன் _______ அவரைக் _________ . (இணைச்சட்டம் 24:14)
Answer: கூலியாள், நகர்வாயிலுக்குள் உள்ள அந்நியராயினும் சரி, கொடுமைப்படுத்தாதே.
(வறியவரும் எளியவருமான கூலியாள்கள், உன் இனத்தாராயினும் சரி அல்லது உன் நாட்டில் உன் நகர்வாயிலுக்குள் உள்ள அந்நியராயினும் சரி, அவரைக் கொடுமைப்படுத்தாதே.)


கேள்வி எண் 7
அவரது கூலியை ___________ விடு, கதிரவன் ________ கொடு, ஏனெனில் அவர் வறியராய் இருப்பதால் ___________. இல்லையெனில் உனக்கெதிராக ஆண்டவரை நோக்கி __________ அப்போது அது உனக்குப் _________ . (இணைச்சட்டம் 24:15)
Answer: அந்தந்த நாளில் கொடுத்து, மறையுமுன்னே, அவரது பிழைப்பு அதில் அடங்கியுள்ளது, முறையிடுவார், பாவமாகும்.
(அவரது கூலியை அந்தந்த நாளில் கொடுத்துவிடு. கதிரவன் மறையுமுன்னே கொடு. ஏனெனில், அவர் வறியவராய் இருப்பதால், அவரது பிழைப்பு அதில் அடங்கியுள்ளது. இல்லையெனில், உனக்கெதிராக ஆண்டவரை நோக்கி முறையிடுவார். அப்போது அது உனக்குப் பாவமாகும்.)


கேள்வி எண் 8
உன் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் __________ . நிரந்தரக் குடியற்ற அரமேயரான என் தந்தை __________ இறங்கி சென்றார். அங்கு மக்கள் சிலருடன் _______ . ஆனால் அங்கேயே ________ திரளான மக்களினத்தைக் கொண்டவர் ஆனார். (இணைச்சட்டம் 26:5,6)
Answer: அறிக்கையிட்டுக் கூறவேண்டியது, எகிப்து நாட்டுக்கு, அந்நியராய் இருந்தார், பெரிய, வலிமைமிகு.
(5. நீ உன் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் அறிக்கையிட்டுக் கூறவேண்டியது: ‘நிரந்தரக் குடியற்ற அரமேயரான என் தந்தை எகிப்து நாட்டுக்கு இறங்கிச் சென்றார். அங்கு மக்கள் சிலருடன் அந்நியராய் இருந்தார். ஆனால், அங்கேயே பெரிய, வலிமைமிகு, திரளான மக்களினத்தைக் கொண்டவர் ஆனார்.
6. எகிப்தியர் எங்களை ஒடுக்கினர்; துன்புறுத்தினர்; கடினமான அடிமை வேலைகளை எங்கள்மீது சுமத்தினர்.)


கேள்வி எண் 9
தம் வலிய _________ , அடையாளங்களாலும் _________ ஆண்டவர் எங்களை எகிப்திலிருந்து புறப்பட செய்தார். (இணைச்சட்டம் 26:8)
Answer: கரத்தாலும், ஓங்கிய புயத்தாலும், அஞ்சத்தக்க பேராற்றலாலும், அருஞ்செயல்களாலும்.
(தம் வலிய கரத்தாலும், ஓங்கிய புயத்தாலும், அஞ்சத்தக்க பேராற்றலாலும், அடையாளங்களாலும், அருஞ்செயல்களாலும் ஆண்டவர் எங்களை எகிப்திலிருந்து புறப்படச் செய்தார்.)


கேள்வி எண் 10
நீ அவருடைய __________ கடைப்பிடிப்பதில் கருத்தாயிருந்தால் அவர் கூறியபடியே நீ அவருக்குச் __________ இருப்பாய் என்றும், அவர் உருவாக்கிய எல்லா மக்களினங்களிலும், ________ உன்னையே உயர்த்துவார் என்றும், அதனால் உன் கடவுளாகிய ஆண்டவரின் ________ நீ இருப்பாய் என்றும் ஆண்டவர் இன்று உனக்கு வாக்களித்துள்ளார்.
Answer: கட்டளைகளைக், சொந்தமான மக்களினமாய், புகழிலும், பெயரிலும், மாட்சியிலும், தூய மக்களினமாய், 
(18. நீ அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிருந்தால், அவர் கூறியபடியே நீ அவருக்குச் சொந்தமான மக்களினமாய் இருப்பாய் என்றும்,
19. அவர் உருவாக்கிய எல்லா மக்களினங்களிலும், புகழிலும், பெயரிலும், மாட்சியிலும் உன்னையே உயர்த்துவார் என்றும், அதனால் உன் கடவுளாகிய ஆண்டவரின் தூய மக்களினமாய் நீ இருப்பாய் என்றும் ஆண்டவர் இன்று உனக்கு வாக்களித்துள்ளார்.)


கேள்வி எண் 11
ஆண்டவர் ________ உன்னைக் காப்பாராக. ஆண்டவர் _______ ஒளிரச்செய்து, _______ ஆண்டவர் ________, உனக்கு __________ . (எண்ணிக்கை 6:24-26)
Answer: உனக்கு ஆசி வழங்கி, தம் திருமுகத்தை உன்மேல், உன்மீது அருள் பொழிவாராக!, தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி, அமைதி அருள்வாராக
(24. ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக!
25 ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச்செய்து உன்மீது அருள் பொழிவாராக!
26. ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக!)


கேள்வி எண் 12
செலோபு காதின் புதல்வியரான _______,  _______,  _______,  _______,  _______,   ஆகியோர்.
Answer: மக்லா, திர்சா, ஒக்லா, மில்கா, நோவா
(செலோபு காதின் புதல்வியரான மக்லா, திர்சா, ஒக்லா, மில்கா, நோவா ஆகியோர் தங்கள் தந்தையாரின் சகோதரர் புதல்வரையே மணந்தனர்.)

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.