தமிழ்நாடு இறையியல் கல்லூரி
அரசரடி, மதுரை-16
56-ஆவது கல்லூரி நாள் திருவிருந்து வழிபாடு
செம்பொருள்
"நிசேயாப் பற்றுறுதியை மறுஏற்புச் செய்தலும் பற்றுறுதிப் பயணத்தை உறுதி செய்தலும்"
2025 அக்டோபர் 28 செவ்வாய்க்கிழமை
இடம்: கிறிஸ்தரசர் வழிபாட்டு மனை
காலை: 9:00மணி
காலை: 9:00மணி
Tamilnadu Theological Seminary
Arasaradi, Madurai-16
56th Seminary Day Holy Communion Service
28.10.2025
Theme: "Re-Embracing The Nicene Creed and Affirming Our Faith Journey"
Place: Christ The King Chapel
Time: 9.00 a.m.
Time: 9.00 a.m.
56-ஆவது கல்லூரி நாள் திருவிருந்து வழிபாடு
செம்பொருள்
"நிசேயாப் பற்றுறுதியை மறு ஏற்புச் செய்தலும் பற்றுறுதிப் பயணத்தை உறுதி செய்தலும்"
2025 அக்டோபர் 28 செவ்வாய்க்கிழமை
இடம்: கிறிஸ்தரசர் வழிபாட்டுமனை
காலை 9.00 மணி
1. வளாக வலம்: (நுழைவாயிலிலிருந்து வழிபாட்டு மனை நோக்கி)
2. வாழ்த்து
நடத்துநர்: வாருங்கள்' ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்' நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள். நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்' புகழ்ப் பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம். (திருப்பாடல் -95:1-2)
திருஅவை: ஆண்டவரே நாங்கள் உம்மைப் போற்றுகின்றோம்
3. தொடக்க இறைவேண்டல் (Opening Prayer)
வரலாற்றின் ஆண்டவரே கடந்த ஐம்பத்தைந்து ஆண்டுகளாக திருச்சபைக்கான அருட்பணியாளரை பயிற்றுவிக்கும் பணியில் எங்களையும் பயன்படுத்தி வந்துள்ள உம் அருளுக்காக நன்றி கூறுகின்றோம். இந்த ஐம்பத்து ஆறாவது ஆண்டின் தொடக்க நாளில் உம் திருமுன் கூடிவர அருள்புரிந்திருக்கின்றீர் உம்மைப் போற்றுகின்றோம்.
இந்த வழிபாட்டிலே உம்மை முழு உள்ளத்தோடு போற்றவும் எங்களையே நாங்கள் உள் முகமாகத் திரும்பி பார்த்து எங்கள் தவறுகளை உணர்ந்து மனம் வருந்தி திருந்தி உம்முடனும், உடன் வாழ்வோரிடமும் நல் மனம் பொருந்தவும் இந்த வழிபாடு உதவிட அருள்புரிவீராக. எங்கள் கல்லான இதயத்தைக் கரைத்து தசையான இதயத்தைப் பெற்றிட உதவுவீராக. தூய ஆவியாரின் தொடர்ந்த உள்ளுதல் எங்களைப் பெலப்படுத்தட்டும். இவற்றை எம் மீட்பரும் உம் திருமைந்தருமாகிய இயேசு கிறிஸ்துவின் வழியே மிகுந்த தாழ்மையோடு மன்றாடுகின்றோம். எங்கள் அன்பு நிறைந்த கடவுளே! ஆமென்.
போற்றிப் பாடல் (SONG OF PRAISE) (ஒளியேற்றல்) (எழுந்து நின்று) கீ-8
4. மும்மை வாழ்த்து
நடத்துநர்: ஆதியந்தமில்லாதவரே, ஆனந்த சோதியே, ஆவிமயமானவரே, அம்மை - அப்பரே சரணம், சரணம், சரணம்
நடத்துநர்: முழுமுதற் கடவுளாம் முதல்வா
சபை: போற்றி
நடத்துநர்: பூமியில் வந்தெமைப் புரந்தவா
சபை: போற்றி, போற்றி
நடத்துநர்: ஆவியாய் அகத் துறைந் தாள்பவா
சபை: போற்றி, போற்றி, போற்றி
5. பிழை உணர அழைப்பு (Call to Confession)
(அமர்ந்தவாறு)
எனது பெயரைப் போற்றிடும் என் மக்கள் சிறுமையுற்று, தங்கள் பாவங்களிலிருந்து மனம் வருந்தி, இரந்து மன்றாடி, என் திருமுகத்தை நாடினால், வானகத்திலிருந்து அவர்களது மன்றாட்டுகளைக் கேட்டு அவர்கள் பாவங்களை மன்னிப்பேன்' அவர்களது நாட்டுக்கு நலன் அளிப்பேன் (2 குறிப்பேடு 7:14) என்று கூறும் ஆண்டவரிடம் நம் பிழைகளை உளமாற உணர்ந்து மனத்தாழ்மையாய் அறிக்கை செய்வோம் வாருங்கள்.
6. பிழையறிக்கை (Confession of Sin)
ஆண்டவரே எங்கள் செயல்களினால் எங்கள் வாழ்க்கையையே கெடுத்துப் போட்டிருக்கும் எல்லா நிலைகளையும் பொறுத்தருளிட உம்மை மன்றாடுகின்றோம். எங்களுடைய வெளிப்படையற்றத் தன்மையினாலும் பிறரை சீண்டிப் பார்க்கின்ற மனநிலையினாலும் இணைந்து வாழ்வது என்பதைக் கடினப்பாட்டிற்கு உட்படுத்தியிருக்கின்றோம். ஆண்டவரே எங்கள் உணர்வற்றத் தன்மையினால் பொறுப்பான்மையினால் பிறருடைய உணர்வுகளை மதிக்கத் தவறியிருக்கின்றோம் எங்களைப் பொறுத்தருள்வீராக.
எங்களைக் குறித்து நாங்களே எண்ணிப் பார்க்கும் போது எங்களுடைய கீழ்தரமான நிலையையும் எங்களுடைய அறுவருக்கத்தக்க தன்மையையும் பெலன் குன்றிய வாழ்வையும் எண்ணிப் பார்க்கின்றோம். எங்கள் மீறுதல்கள் எங்கள் மீட்பர் இயேசு கிறித்துவின் சிலுவை இறப்பினாலே பொறுத்தருளிக் கூடியவையாக இருக்கும் என்று எண்ணி உமக்கு நன்றி செலுத்துகின்றோம். ஆண்டவரே எங்கள் மீறுதல்களைக் குறித்து மெய்யான மனந்திரும்புதலைப் பெற்றிட உதவுவீராக.
ஆண்டவரே சிலுவையின் அடிவாரத்தில் எங்கள் மீறுதல்களின் சுமையை இறக்கி வைக்கவும் அவை உருண்டோடிப் போகவும் அருள்வீராக. தூய ஆவியின் வழியாக வரும் நாள்களில் நீர் விரும்பத்தக்க வாழ்க்கையை வாழ்வதற்கு வலிமை பெறச் செய்வீராக எங்கள் ஆண்டவர் இயேசு கிறித்துவின் வழியே எங்கள் மீறுதல்களை பொறுத்தருள மன்றாடுகின்றோம்.
- (வில்லியம் பார்க்ளே 1899-1972)
7. பிழை மன்னிப்பின் உறுதி (Absolution)
''என் பாவத்தை உம்மிடம் அறிக்கையிட்டேன்' என் தீச்செயலை நான் மறைத்ததில்லை' ஆண்டவரிடம் என் குற்றங்களை ஒப்புக்கொள்வேன்" என்று சொன்னேன். நீரும் என் நெறிகேட்டையும் பாவத்தையும் போக்கினீர். (திருப்பாடல்கள்: 32:5) என்பதற்கேற்ப கடவுள் தாமே நம் பிழைகளை மன்னித்து நமக்கு அமைதியையும், அருளையும் வழங்கி பற்றுறுதி வாழ்க்கையில் தொடர்ந்து வழி நடக்க அருள்புரிவாராக! ஆமென்.
8. சிறப்புப் பாடல் (Special Song by BD Final Year Students)
நான்காமாண்டு மாணாக்கர்
9. திருமறைப் பாடங்கள் (Scripture Readings)
10. சிறப்புப் பாடல் (Special Song by Seminary Staff Members)
கல்லூரிப் பணியாளர்கள்
11. வரவேற்பு (Welcome)
அருள்பணி. முனைவர். மார்கிரேட் கலைச்செல்வி
முதல்வர், தமிழ்நாடு இறையியல் கல்லூரி
12. சிறப்புப் பாடல் (Special Song by M.Th Students)
முதுநிலை மாணாக்கர்
13. அருளுரை (Sermon)
பேரருட்பணி. முனைவர். ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன்
ஆட்சி மன்றத் தலைவர், தமிழ்நாடு இறையியல் கல்லூரி.
பேராயர், தென்னிந்தியத் திருச்சபை, மதுரை - இராமநாதபுரம் பேராயம்
14. பற்றுறுதி அறிக்கை நிசேயாப் பற்றுறுதி அறிக்கை
விண், மண், காணக்கூடியவை, காண இயலாதவை, ஆகிய எல்லாவற்றையும் படைத்திருக்கிற அனைத்து ஆற்றலும் பொருந்திய தாயும் தந்தையுமாகிய ஒரே கடவுளை நம்புகின்றோம்.
ஒரே ஆண்டவராய் கடவுளின் ஒரேபேரான மைந்தராய் இருக்கும் இயேசுகிறிஸ்துவை நம்புகிறோம். அவர் உலகங்கள் உருவாவதற்கு முன்னரே தம் தந்தையினால் பிறப்பிக்கப் பெற்றார். தெய்வத்தில் தெய்வம் அவர். ஒளியில் ஒளி அவர். மெய்க்கடவுளில் மெய்க்கடவுளவர். உண்டாக்கப் பெற்றவரல்லர், பிறப்பிக்கப் பெற்றவர். பெற்றவராகிய கடவுளின் ஒரே தன்மை கொண்டவர். எல்லாவற்றையும் உண்டாக்கினவர். மனிதராகிய நமக்காகவும் நமக்கு மீட்பு உண்டாகவும் விண்ணகத்திலிருந்து இறங்கித் தூய ஆவியாராலே கன்னிமரியாவிடம் உருவாகி மனிதர் ஆனார். பொந்தியு பிலாத்துவின்
காலத்தில் சிலுவையில் அறையப்பெற்றுத் துன்புற்று அடக்கம் செய்யப்பெற்றார். மறைச் சொற்கள் கூறியவாறே மூன்றாம் நாள் உயிருற்றெழுந்து விண்ணகம் ஏறி, தாயும் தந்தையுமாகிய கடவுளின் வலப்பக்கம் வீற்றிருக்கின்றார். வாழ்ந்திருப்போரையும் இறந்தோரையும் நடுத்தீர்க்க மாட்சியுடனே திரும்பவும் வருவார். அவர் அரசுக்கு முடிவு கிடையாது.
ஆண்டவராய் வாழ்வினைத் தருபவராய் தாய் தந்தையாகிய கடவுளிடமும் மைந்தரிடமும் இருந்து புறப்படுகின்றவராய், தாயும் தந்தையுமாகிய கடவுளோடும் மைந்தரோடும் தொழுது போற்றப் பெறுபவராய், இறைவாக்கினர் வழியே உரைத்தவராகிய தூய ஆவியாரை நம்புகிறோம். ஒரே தூய பொதுவான திருத்தூதுவர் திருச்சபை உண்டென்று நம்புகிறோம். பிழை பொறுத்தருளலுக்கு என்று ஏற்படுத்தப்பெற்ற ஒரே திருமுழுக்கை அறிக்கையிடுகின்றோம். மரித்தோர் உயிர்பெற்று எழுதலும் மறுமைக்குரிய வாழ்வும் உண்டாகும் என்று காத்திருக்கின்றோம். ஆமென்.
15. சிறப்புப் பாடல் (Special Song by Faculty)
ஆசிரியர் குழு
16. அறிவிப்புகள் (Announcement)
17. திருப்பணிக்கொடைப் பாடல் (Offertory Song)
(எழுந்து நின்று)
கீர்த்தனை எண்: 11
வந்தனம், வந்தனமே!
தேவ துந்துமி கொண்டிதமே! - இது
வரையில் எமையே வளமாய்க்
காத்த எம்துரையே, மிகத்தந்தனம்.
1 சந்ததஞ் சந்ததமே, எங்கள் தகுநன்றிக்
கடையாளமே, நாங்கள்
தாழ்ந்து வீழ்ந்து சரணஞ்
செய்கையில் தயைகூர், சுரர்பதியே.
2 சருவ வியாபகமும் எமைச் சார்ந்து
தற்காத்ததுவே, - எங்கள்
சாமி, பணிவாய் நேமி துதிபுகழ்
தந்தனமே நிதமே!
3. சருவ வல்லபமதும் எமைத்
தாங்கினதும் பெரிதே - சத்ய
சருவேசுரனே, கிருபாகரனே,
உன் சருவத்துக்குந் துதியே.
4. உன்தன் சர்வ ஞானமும்
எங்களுள்ளிந்
திரியம் யாவையும் - பார்த்தால்
ஒப்பே தருங் காவலே
உன்னருளுக்கோ
தரும் புகழ் துதி, துதியே.
5. மாறாப் பூரணனே, எல்லா
வருடங்களிலும்
எத்தனை - உன்றன்
வாக்குத் தவறாதருளிப் பொழிந்திட்ட
வல்லாவிக்குந் துதியே.
18. திருப்பணிக்கொடை இறைவேண்டல் (Prayer for Offertory)
19. நன்றி இறைவேண்டல் (Thanksgiving Prayer)
(அமர்ந்த நிலையில்)
திருஅவை: அன்புடைய இறைவா முழு விடுதலைக்கு நேராக வழி நடத்துகின்றவரே கடந்த ஐம்பத்தைந்து ஆண்டுகளாக எங்கள் பற்றுறுதிப் பயணத்தில் உம் திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவை முழுமை நலம் சார்ந்து விடுவிக்கின்ற ஒருவராக புரிந்து கொண்டு அவர் வழியில் இறையியல் கல்வி பயில்வோரும், பணிபுரிவோரும் சென்றிட இடமளித்திருப்பதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
திருஅவை: அன்புடைய இறைவா நிசேயா மன்றத்தின் வழியாக கடந்த ஓராயிரத்து எழுநூறு ஆண்டுகள் உலகத் திருச்சபைக்காக இடர்பாடுகள் வந்த போதும் இணைந்து நடந்திட அருள் புரிந்திருப்பதற்காக நன்றி கூறுகின்றோம்.
திருஅவை: அன்புடைய இறைவா தமிழ்நாடு இறையியல் கல்லூரியின் வளாகப் பற்றுறுதிப் பயணத்தில் தொடர்ந்து ஒத்துழைப்பையும் உதவிகளையும் செய்து நலவுரைகள் கொடுத்து வருகின்ற ஆற்காடு லுத்தரன் திருச்சபை, தமிழ் சுவிசேட லுத்தரன் திருச்சபை, தென்னிந்தியத் திருச்சபை களுக்காகவும், பேராயர்மாருக்காகவும், ஆயர் மாருக்காகவும், இறை திருச்சபை மக்களுக்காகவும் நன்றி செலுத்துகின்றோம்.
திருஅவை: அன்புடைய இறைவா தமிழ்நாடு இறையியல் கல்லூரியின் வரலாற்றில் பணியாற்றிய, பணியாற்றி வருகின்ற முதல்வருக் காகவும் பேராசிரியர்மாருக்காகவும் பணியாளர் யாவருக்காகவும் திருப்பணிகளுக்கென்று பயின்றுகொண்டிருக்கின்ற மாணாக் கருக்காகவும் நன்றி படைக்கின்றோம். கடந்த ஐம்பத்தைந்து ஆண்டுகளாக எம்மை வழிநடத்தின உம் இரக்கத்துக்காக நன்றி செலுத்துகின்றோம்.
20. மன்றாட்டு (Intercession)
வழிநடத்தும் வல்லக் கடவுளே, தமிழ்நாடு இறையியல் கல்லூரியின் ஐம்பத்தாறாவது கல்லூரி நாளில் நாங்கள் அனைவரும் ஒரு மனத்தோடு மன்றாடுகின்றோம். இந்தப் புதிய ஆண்டிலும் எங்கள் கல்லூரியின் நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் எடுக்கின்ற எல்லா முன்னெடுப்புகள், வகுக்கின்ற எல்லாத் திட்டங்களிலும் உம்முடைய அருளும், வழிநடத்தலும் வேண்டி உம்மிடம் மன்றாடுகின்றோம். வரும் ஆண்டுகளில் இறையியல் கற்கும் மாணவர் பலர் ஆர்வத்துடன் எமது கல்லூரியில் சேர்ந்திட உந்துதல் தந்திட உம் அருள்வேண்டி மன்றாடுகின்றோம்.
திருஅவை: வழிநடத்தும் வல்ல கடவுளே தமிழ்நாடு இறையியல் கல்லூரிக் குமுகாயமாக எங்களது பற்றுறுதி பயணத்திலும் இறையியல் பயணத்திலும் எப்பொழுதெல்லாம் சோர்ந்து போகின் றோமோ ஆற்றலற்று நலிவடைந்து போகின்றோமோ அப்பொழுதெல்லாம் உம்முடைய பேரிரக்கமும் ஆற்றலும் எங்களைத் தாங்கி வழிநடத்த உம் அருள் வேண்டி மன்றாடு கின்றோம்.
திருஅவை: வழிநடத்தும் வல்ல கடவுளே, தங்கள் வாழ்க்கை நிலையற்றது என்பதை உணராமல் நிலையற்ற வாழ்க்கையில் தன்மை தன்னலம் போட்டிகள் பொறாமைகள் சாதியம் ஆகிய வற்றால் எங்கள் அமைதியை இழந்து நிற்கின்றோம். மற்றவர் களின் அமைதியைக் குறைக்கின்றவர்களாகவும் மாறி இருக்கின்றோம் நாங்கள் எங்கள் நிலையற்ற தன்மையை உணர்ந்து கொள்ளவும் அமைதியை வழங்குகிறவர்களாய் மாறவும் உம் அருள் வேண்டி மன்றாடுகின்றோம்.
திருஅவை: வழிநடத்தும் வல்ல கடவுளே நாங்கள் வாழும் உலகில் நம்பிக்கையின் ஒளியும் நல்லெதிர்பார்ப்பின் ஒளிக்கீற்றும் ஒளிர்வது போன்று தோன்றுகின்றன. ஆனால் இவை தன்னல நாட்டங்கள் மறைவான திட்டங்கள் போன்றவற்றை உள்ளாக வைத்து வருகின்றவையோ என்கின்ற ஐயம் பல வேளைகளில் எழுகின்றது. எங்களது ஐயம் அகற்றி நல்ல எதிர்பார்ப்புடன் உம்முடன் இணைந்து ஆக்கம் தரும் செயல்களில் ஈடுபடவும் துன்பங்கள் வரும்போதும் துவளாது எம் ஆண்டவரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி நடக்கவும் ஊக்கம் பெற்றிட உம் அருள் வேண்டி மன்றாடுகின்றோம்.
திருஅவை: வழிநடத்தும் வல்ல கடவுளே தமிழ்நாடு இறையியல் கல்லூரியிலும் பிற இறையியல் கல்லூரிகளிலும் இறையியல் பயிற்சியும் அருள்பணி பயிற்சியும் பெற்று அருள்பணியிலும் திருப்பணிகளிளும் தங்களை இணைத்துக் கொண்டுள்ள உம் ஊழியர்களுக்காக மன்றாடுகின்றோம். இவர்களனைவரும் தங்கள் சொல்லாலும் செயலாலும் வாழ்வாலும் கிறிஸ்துவின் வாழ்வியல் விழுமியங்களுக்குச் சான்று பகிர்ந்து வாழ்வதினாலே இறை மக்களும் தங்கள் சான்று பகரும் வாழ்வில் உம்முடன் நடப்பதற்கு எடுத்துக்காட்டுகளாகத் திகழ்ந்திட உதவுவீராக பயிற்சி அளிக்கும் நாங்களும் எங்கள் சொல் செயல் வாழ்வு ஆகியவற்றால் நாங்கள் கற்பிப்பதற்கு ஏற்ற வகையில் எடுத்துக்காட்டுகளாக வாழ்ந்திட உம் அருள் வேண்டி மன்றாடு கின்றோம்.
21. திருவிருந்து (Holy Communion)
மன்றாடுவோம்
அனைத்து ஆற்றலுமுடைய முடிவில்லாக் கடவுளே, திருச்சபையின் முழு உடலையும், உம் ஆவியால் வழிநடத்தித் தூய்மைப்படுத்துகிறவரே உம் திருச்சபையில் அனைத்து நிலையிலுள்ள மாந்தருக்காகவும் உம் முன்பாக நாங்கள் ஏறெடுக்கும் விண்ணப்பங்களையும் மன்றாட்டுகளையும் ஏற்றுக்கொள்ளும். ஒவ்வோர் உறுப்பினரும் தம்தம் அழைப்பிலும், பணிவிடையிலும், உண்மையோடும் கடவுள் நம்பிக்கையோடும் உமக்குப் பணிவிடை செய்ய அருள்செய்ய வேண்டுமென்று எங்கள் ஆண்டவரும் மீட்பருமாகிய இயேசுகிறிஸ்துவின் வழியாக மன்றாடுகிறோம். ஆமென்.
நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவினுடைய அருளும் கடவுளுடைய அன்பும், தூய ஆவியாருடைய கூட்டுறவும் நம் அனைவரோடும் எப்பொழுதும் இருப்பனவாக. ஆமென்.
அப்பம் பிடுதல்
குரு: இதோ உடன்பிறப்புகள் ஒருமித்து வாழ்வது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது. நாம் அனைவரும் ஒரே அப்பத்தில் பங்கு பெறுகிறபடியால், பலரான நாம் ஒரே அப்பமும் ஒரே உடலுமாய் இருக்கிறோம்.
மக்கள்: நான் அவர் கூடாரத்தில் ஆனந்த பலிகளைச் செலுத்திக் கடவுளைப் புகழ்ந்து பாடுவேன்.
நல்லுறவு வாழ்த்து இங்கே கொடுக்கலாம்
தாயும் தந்தையுமாகிய தூய கடவுளே, உம் அருளின்கீழ் இருப்பதற்குப் புதியதும், வாழ்வுமான வழியை, உம் அருமையான மகனின் உதிரத்தினால் எங்களுக்கு உண்டு பண்ணிணீரே. நாங்கள் தகுதியற்றவர்களாக இருப்பினும், அவர் வழியாக உம்மிடத்தில் வருகிறோம். எங்களையும் இந்தக் காணிக்கைகளையும், உம் திருப்பெயரின் மாட்சிக்கென்று ஏற்றுப் பயன்படுத்தும்படியாகத், தாழ்மையோடு வேண்டிக் கொள்கின்றோம். வானத்திலும், பூமியிலும் உள்ள அனைத்தும் உம்முடையவை. உமது கைகளிலிருந்து வாங்கி உமக்குக் கொடுக்கிறோம். ஆமென்.
அனைவரும் மன்றாடுவோம்
இயேசுவே தகுதியுடைய தலைமை குருவே நீர் உம் அடியவர்கள் நடுவில் இருந்தது போலவே எங்கள் நடுவிலும் வந்து, அப்பத்தைப் பிடுகையில் எங்களுக்கு உம்மை வெளிப் படுத்தியருளும். நீரே பெற்றவரோடும், தூய ஆவியாரோடும், எந்தக் காலமும் ஒரே கடவுளாக வாழ்ந்து அரசாளுகிறீர்.
குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
மக்கள்: அவர் உம்மோடும் இருப்பாராக.
குரு: நம் உள்ளத்தை உயர்த்துவோமாக.
மக்கள்: நம் உள்ளத்தைக் ஆண்டவரிடத்தில் உயர்த்துகிறோம்.
குரு: நம் ஆண்டவராகிய கடவுளுக்கு நன்றி செலுத்தக்கடவோம்.
மக்கள்: அப்படிச் செய்வது தகுதியும் நீதியுமாயிருக்கும்.
குரு: ஆண்டவரே, பெற்றவராகிய தூய கடவுளே அனைத்து ஆற்றலுமுடைய முடிவில்லா இறைவா, நாங்கள் எந்தக் காலத்திலும், எந்த இடத்திலும் உமக்கு நன்றி செலுத்துவது, தகுதியும், நீதியும், எங்களுக்குத் தலையாய கடமையுமாய் இருக்கிறது.
உம் மகனும், எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக நீர் வானத்தையும், பூமியையும் அவற்றிலுள்ள அனைத்தையும் உண்டாக்கினீர். மனுக் குலத்தையும், உம் போலவே உண்டாக்கினீர். மனுக்குலம் பாவத்தில் விழுந்தபோது புதிய படைப்பின் முதற்பலனாக நீர் மனுக்குலத்தை மீட்டுக்கொண்டீர்.
மக்கள்: ஆதலால் தூதரோடும், தலைமைத் தூதரோடும் விண்ணக சபையனைத்தோடும், நாங்கள் உம் மாட்சிமையுள்ள திருப்பெயரைப் புகழ்ந்து மேன்மைப்படுத்திப், படைத்திரளின் கடவுளாகிய ஆண்டவரே, நீர் தூயர், தூயர், தூயர் வானமும் பூமியும், உம் மாட்சியால் நிறைந்திருக்கின்றன. உயர்ந்தவராகிய உமக்கே மாட்சி உண்டாவதாக என்று இடைவிடாமல் உம்மைப் போற்றுகின்றோம். கடவுளின் திருப் பெயரினாலே வந்தவரும் வருகிறவருமான போற்றுதலுக்குரியவர் உயர்நிலைகளில் வாழ்க எனப் போற்றப்படத் தக்கவர்.
குரு: ஆம் இறைவா, நீர் தூயர், நீர் போற்றுதற்குரியவர்,நீர் மனுக்குலத்தின் மேல் அருளால் அன்பு செலுத்தி, உம் ஒரே தனித்தன்மை பொருந்தின மகனாகிய இயேசு கிறிஸ்து எங்கள் தன்மையை ஏற்றுக் கொள்ளவும், சிலுவையில் இறந்து எங்களை மீட்டுக் கொள்ளவும், அவரைத் தந்தருளினீரே. அவர் சிலுவையில் ஒரே முறை தம்மைத் தாமே, ஒரே படையலாக ஒப்புக்கொடுத்து, உலகனைத்தின் பாவங்களையும் தீர்ப்பதற்கு நிறைவும், முழுமையும், போதியதுமான படையலையும் காணிக்கையையும், கழுவாயையும் கொடுத்ததுமல்லாமல் தம் அருமையான இறப்பை என்றும் நினைவுறுத்தும் நினைப்பூட்டுதலை நிறுவி தாம் மீண்டும் வருமளவும் நாங்கள் அதைக் கடைப்பிடித்து வரும்படி, தம் தூய நற்செய்தியில் கட்டளையிட்டுள்ளாரே.
அவர் தாம் காட்டிக் கொடுக்கப்பட்ட அன்று இரவிலே அப்பத்தை எடுத்து, (+) நன்றி செலுத்தி அதைப்பிட்டு அடியவர்களுக்குக் கொடுத்து, நீங்கள் வாங்கி உண்ணுங்கள். இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என் உடல், என்னை நினைவு கொள்ளும்படி இதனைச் செய்யுங்கள்” என்றார்.
அப்படியே உணவு உண்ட பின்பு அவர் (+) கிண்ணத்தை எடுத்து நன்றி செலுத்தி, அவர்களுக்குக் கொடுத்து நீங்கள் அனைவரும் இதில் அருந்துங்கள். இது பாவமன்னிப்பு உண்டாகும்படி உங்களுக்காகவும், அனைவருக்காகவும் சிந்தப்படுகிற புதிய உடன்படிக்கைக்குரிய என் செங்குருதி. இதை அருந்தும் போதெல்லாம் என்னை நினைத்துக் கொள்ளும்படி இதைச் செய்யுங்கள் என்று கூறினார்.
அனைவரும்: ஆம். ஆண்டவரே உம் இறப்பை நினைவு கூருகின்றோம். உம் உயிர்த்தெழுதலை அறிக்கையிடுகிறோம். நீர் மீண்டும் வரக் காத்திருக்கிறோம். கிறிஸ்துவே உமக்கே மாட்சி உண்டாவதாக.
குரு: ஆதலால் இறைவா, உம் மகனாகிய எங்கள் ஆண்டவரின் அரிய பாடுகளையும், இறப்பையும், மாட்சிமிக்க உயிருற் றெழுதலையும், விண்ணுக்கெழுதலையும், நினைவுகொண்டு உம் அடியார்களாகிய நாங்கள் அவருடைய கட்டளையின் படியே அவர் மீண்டும் வருமளவும் அவரை நினைவு கூர்ந்து இதனைச் செய்கிறோம். அவரில் நீர் எங்களுக்காக நிறைவேற்றின முழுமையான மீட்புக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
அனைவரும்: கடவுளே, எங்கள் ஆண்டவரே உம்மைப் போற்றுகிறோம். உம்மைப் புகழுகிறோம். உம்மை மாட்சிப்படுத்துகிறோம்.
குரு: இரக்கமுள்ள இறைவா, நாங்கள் பிடுகிற அப்பம் கிறிஸ்துவினுடைய உடலின் கூட்டொருமைப்பாடாகவும், நாங்கள் வாழ்த்துகிற கிண்ணம் கிறிஸ்துவினுடைய செங்குருதியின் கூட்டொருமைப்பாடாகவும் இருக்கும்படி எங்களையும், நீரே தந்த இந்த அப்பத்தையும் திராட்சைச் சாற்றையும் உம் தூய ஆவியால் தூய்மைப்படுத்த வேண்டு மென்று மிகுந்த தாழ்மையோடு வேண்டிக் கொள்கிறோம். நாங்கள் அனைவரும் எங்கள் ஆண்டவர் கிறிஸ்துவில் ஒன்றிணைக்கப்பட்டவர்களாகி நம்பிக்கையில் ஒறுமைப் படவும், அவருக்குள் அனைத்திலும் வளரவும், அருள் புரியும் அனைத்து ஆற்றலுமுள்ள தாயும் தந்தையாகிய உமக்கு அவர் வழியாக, அனைத்து மதிப்பும் மாட்சியும் என்றென்றைக்கும் உண்டாவதாக. ஆமென்.
முதல்வராகிய நம் மீட்பராகிய கிறிஸ்து கற்பித்தபடி அவரில் நமக்கு அருளப்பட்டத் துணிவோடே சொல்லுவோம்.
விண்ணகத்திலுள்ள, எங்கள் பெற்றவரே உம் திருப்பெயர் தூயதெனப் போற்றப்படுக. உம் அரசு வருவதாக உம் திருவுளம் விண்ணுலகில் செய்யப்படுவது போல மண்ணுலகிலும் செய்யப் படுவதாக. இன்று எங்களுக்கு வேண்டிய உணவை இன்று எங்களுக்குத் தாரும். நாங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் பொறுத்தருளியதுபோல் எங்கள் கடன்களை எங்களுக்குப் பொறுத்தருளும். எங்களைச் சோதனைக்குட்படும்போது தீமையினின்று எங்களை மீட்டருளும். ஆட்சியும், ஆற்றலும், மாட்சியும் என்றென்றைக்கும் உம்முடையவையே. ஆமென்.
எல்லாரும் அமைதியாய் இருக்கவும்
அனைவரும்
இரக்கமுள்ள கடவுளே எங்கள் நேர்மையை நம்பி நாங்கள் உம் விருந்தில் சேர எண்ணாமல் உம்முடைய அளவற்ற இரக்கத்தையே நம்பிச் சேருகிறோம். உம் திருமேடையின்கீழ் விழும் சிறு துண்டுகளை எடுத்துக்கொள்ள நாங்கள் தகுதியானவர்கள் அல்லர். ஆனாலும் நீர் எப்பொழுதும் இரக்கங் கொள்கிற அழகுடைய மாறாத ஆண்டவராயிருக்கிறீர். ஆகையால் அருள்நிறைந்த கடவுளே, உம் அருமையான மகனாகிய இயேசு கிறிஸ்துவின் விலைமதியாத திருஉடலாலும், திருச்செங் குருதியினாலும், எங்கள் பாவமுள்ள உடலும், ஆன்மாவும் தூய்மையாகி எப்பொழுதும் நாங்கள் அவருக்குள்ளும் அவர் எங்களுக்குள்ளும் வாழ்வதற்கு ஏற்றவிதமாய் அவருடைய திருஉடலை உண்டு. அவருடைய திருச்செங்குருதியைப் பருக எங்களுக்கு அருள் செய்யும். ஆமென்.
குரு: நாம் பிடும் அப்பம் கிறிஸ்துவின் உடலின் கூட்டொருமைப் பாடல்லவா?
கடவுளுடையவை கடவுளுடையவர்களுக்கே
வாழ்வளிக்கும் அப்பமாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் திருஉடல்
உண்மையான திராட்சையாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் திருச்செங்குருதி
மக்கள்: உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற இறை ஆட்டுக்குட்டியே எங்களுக்கு இரங்கும்.
உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற இறை ஆட்டுக்குட்டியே எங்களுக்கு இரங்கும்.
உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற இறை ஆட்டுக்குட்டியே உம் நல்லுறைவைத் தாரும்.
குரு: கிறிஸ்துவின், திருஉடலும், திருச்செங்குருதியுமாகிய திருவருட்சாதனத்தை நம்பிக்கையினால் பெற்றுக்கொண்டவர் களாகிய நாம் அவருக்கு நன்றி செலுத்துவோமாக.
திருவிருந்து பகிர்தல்
22. விருந்து பரிமாறுவது (Sharing of Bread & Wine)
குரு தனித்தோ அல்லது அவையோடு சேர்ந்தோ சொல்வது
அனைத்து ஆற்றலுமுடைய கடவுளே, பெற்றவராகிய விண்ணகக் கடவுளே, உம் அன்பு மகனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவுக்குள், எங்களை உம் பிள்ளைகளாக ஏற்றுக்கொண்டு அவரின் விலைமதியாத, திருவுடலும், திருச்செங்குருதியுமாகிய ஆன்மிக உணவால் எங்களைச் சேர்த்து இருக்கிறீர். எங்கள் பாவங்களை மன்னித்து முடிவில்லா வாழ்வினை எங்களுக்கு உறுதிமொழிந்துள்ளீர். அளவிடப்படாத இந்த நன்மைகளுக்காக, உமக்கு நன்றி செலுத்துகிறோம். உடலும் ஆன்மாவுமாகிய எங்களைத் தூய்மையும் வாழ்வுமுள்ள படையலாக உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம். இது நாங்கள் செய்யத் தகுந்த ஒழுங்கான வழிபாடு. நாங்கள் இந்த உலகத்திற்கு,ஏற்ற பாவனை புரியாமல், உம் நன்மையும், முழுமையான திருவுளம் எப்படிப்பட்டது என்பதைப் பகுத்தறியத்தக்கதாக, புதிதாகிறதினாலே, எங்களையே மாற்றிக்கொள்ள அருள்புரியும். கடைசியில் நாங்கள் உம் தூயவர்கள் அனைவரோடும் உம் முடிவில்லா அரசின் மகிழ்ச்சியை அடையத்தக்கதாக, இவ்வுலகத்தில் உமக்குக் கீழ்ப்படிந்து, நடக்க எங்களுக்கு அருள் செய்யும், உம்மோடும், தூய ஆவியாரோடும் ஒரே கடவுளாய், எக்காலத்திலும் வாழ்ந்து அரசாளுகிற எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாய் இவற்றை வேண்டிக் கொள்கிறோம்.
மக்கள்: ஆமென். எங்கள் கடவுளுக்குப் போற்றுதலும், மாட்சியும், அறிவும், நன்றியும், மதிப்பும், ஆற்றலும், வலிமையும், எக்காலத்தும் உண்டாவதாக. ஆமென்.
23. இறைவாழ்த்து (Benediction)
அனைத்து அறிவுக்கும் மேலான கடவுளின் நல்லுறவு உங்களோடு இருந்து, நீங்கள் கடவுளையும், அவர் மகனாகிய நம் தலைவர் இயேசு கிறிஸ்துவையும் பற்றிய அறிவிலும், அன்பிலும் நிலைத்திருக்கும்படி, உங்கள் உள்ளத்தையும், எண்ணத்தையும் காக்கக்கடவது.
தந்தை, மகன் தூய ஆவியாருமாகிய அனைத்து ஆற்றல் பொருந்தின கடவுளுடைய இறைவாழ்த்து உங்களுடனே இருந்து எப்பொழுதும் உங்களோடு நிலைத்திருக்கக்கடவது. ஆமென்.
24. நிறைவுப் பாடல் (Closing Song)
வழி, வாய்மை, வாழ்வு எங்கள் அடித்தளமாகும்
வாழ்வு தேடும் வையம் எங்கள் பணிக்களமாகும்
வழிபாடு வாழ்வில் எங்கள் உயிர்நிலையாகும்
வானரசு வளர்ந்திடவே அது உரமாகும்.
பல்லவி
அரசரடி, தமிழ் இறையியல் இல்லம் - கிறிஸ்(து)
அரசரடி பணியும் அன்பர்கள் இல்லம்
தனிவாழ்வும், திருப்பணியும், இறையியல் உணர்வும்
தகுமுறையில் மறை அறிந்து தினம் உருவாகும்
மனித நலம் மனதில் கொண்டு எழுந்திடும் தீரம்
மனமுவந்த ஈடுடூபாட்டால் கற்றிடும் பாடம்
உள்ளோங்கி ஒடுங்காது உலகினைக் காணும்
உரங்கொண்ட தீமை பல ஒழித்திட முனையும்
உள்ளங்களில் இறையன்பை விதைத்திட விழையும்
உன்னதரின் ஊழியர்கள் உருப்பெறச் செய்யும்.
பாடல் & பண்:
இஸ்ரவேல் செல்வநாயகம்
ஜேம்ஸ் தியாபிலஸ் அப்பாவு
















