Type Here to Get Search Results !

Critic Service | கடவுளுடைய இறையாண்மை நீதி, அமைதியை கொண்டாடுதல் | Celebration of God's Sovereignty, Justice and Peace | Jesus Sam

தமிழ்நாடு இறையியல் கல்லூரி
அரசரடி, மதுரை- 16

திறனாய்வு வழிபாடு

செம்பொருள்
கடவுளுடைய இறையாண்மை நீதி, அமைதியை கொண்டாடுதல்
Celebration of God's Sovereignty, Justice and Peace

வழிபாடு நடத்துபவர்
    திருமிகு. R.ஏனோஸ் ஆர்தர்

திறனாய்வு மாணவர்
    திருமிகு.J.மெல்வின் ஜெரோம்

திறனாய்வு ஆசிரியர்
    ஹஅருட்பணி.முனைவர்.R.C.டென்சன் எக்டர்

நாள்: 22-10-2025 புதன்கிழமை
நேரம்: காலை 6:00 மணி
இடம்: கிறித்தரசர் வழிபாட்டுமனை


சிந்தனை தூளிகள்
மனிதன் ஒரு முழு பைதியக்காரன். அவனால் ஒரு புழுவைக் கூட உருவாக்க முடியாது. ஆனால் டஜன் கணக்கில் கடவுள்களை போலியாக உருவாக்கிக் கொண்டே இருப்பான்.
- Albret Einstein

"அனைத்து நீதி விட அமைதியே முக்கியமானது அமைதி நீதிக்காக அல்ல, மாறாக நீதி அமைதிக்காக உருவாக்கப்பட்டது."
- மார்டின் லூதர்

"அமைதி என்பது யுத்தத்தின் இல்லாமை மட்டுமல்ல'
அமைதி என்பது அடக்குமுறையின் பயமல்ல'
அமைதி என்பது இரு அதிகாரங்களின் பயத்தால் கட்டுப்பட்ட சமநிலையல்ல.
அமைதி என்பது நீதியின் கனியாகும்'
அமைதி என்பது சமுதாயத்தில் அன்பும் நீதியும் மலர்வதின் மலராகும்."
- புனித ஒஸ்கார் ரொமேரோ

வாழ்த்தும் வரவேற்பும் (Greetings and Welcome)
மூவொரு கடவுளின் திருப்பெயராலே ஆமென். காலை வழிபாட்டிற்கு வந்திருக்கும் உங்கள் அனைவரையும் அன்போடு வாழ்த்தி வரவேற்கிறேன்.

வழிபட அழைப்பு (Call to Worship)
ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்: ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.(திருப்பாடல் 98:1,3) என்ற திருமொழிகளுக்கேற்ப கடவுள் நம் வாழ்வில் அருளிய விடுதலையை உணர்ந்தவர்களாய் வழிபடுவோம் வாருங்கள்.

தொடக்க இறைவேண்டல் (Opening Prayer)
படைத்து பாதுகாத்து வழிநடத்துகின்ற எங்கள் பெற்றவராம் கடவுளே, நீர் எங்கள் வாழ்நாளில் தந்த புதிய நாளுக்காக, நல்ல வழிபாட்டு சூழலுக்காக உமக்கு நன்றி படைக்கிறோம். இந்த வழிபாட்டின் வழியாக நாங்கள் உம்மை கண்டுகொள்ளவும், உம்மை புரிந்து கொள்ளவும் அருள்புரியும். வழிபாட்டின் அனைத்து கூறுபாடுகளிலும் உம் இருத்தல் நிலையை நாங்கள் உணர்ந்துகொள்ள எங்களுக்கு உதவி செய்யும். இவை அனைத்தையும் இயேசு கிறிஸ்துவின் வழியாக வேண்டுகிறோம் எங்கள் இறைவா. ஆமென்.

போற்றிப் பாடல் (Song of Praise) கீரத்தனை 5
(யாவரும் எழுந்து பாடுவோம்)
1. சருவ லோகாதிபா, நமஸ்காரம்!
சருவ சிருஷ்டிகனே, நமஸ்காரம்!
தரை, கடல், உயிர், வான் சகலமும் படைத்த
தயாபர பிதாவே, நமஸ்காரம்.

2. திரு அவதாரா, நமஸ்காரம்!
ஜெகத் திரட்சகனே, நமஸ்காரம்!
தரணியின் மனுடர் உயிர் அடைந்தோங்கத்
தருவினில் மாண்டோய் நமஸ்காரம்.

3. பரிசுத்த ஆவி, நமஸ்காரம்!
பரம சற்குருவே, நமஸ்காரம்!
அரூபியாய் அடியார் அகத்தினில் வசிக்கும்
அரியசித்தே சதா நமஸ்காரம்.

4. முத்தொழிலோனே, நமஸ்காரம்!
மூன்றிலொன்றோனே நமஸ்காரம்!
கர்த்தாதி கர்த்தா, கருணாசமுத்திரா,
நித்ய திரியேகா, நமஸ்காரம்
- ம.வேதமாணிக்கம்

பிழை உணர அழைப்பு (Call to Confession)
நீங்கள் என்னிடம் திரும்பி வந்து அமைதியுற்றால் விடுதலை பெறுவீர்கள் அமைதியிலும் நம்பிக்கையிலுமே நீங்கள் வலிமை பெறுவீர்கள். (எசாயா 30:15) திருச்சட்டத்தின் முக்கிய போதனைகளாகிய நீதி, இரக்கம், நம்பிக்கை ஆகியவற்றைக் கடைப்பிடிக்காமல் விட்டுவிடுகிறீர்கள். (மத்தேயு 23:23) நான் தீமையையே செய்வதில்லை நன்மையைச் விரும்பாத விரும்பும் செய்கிறேன்.(ரோமர்7:19) என்பதை உணர்ந்தவர்களாக நம்முடைய பிழைகளை அறிக்கை செய்வோம் வாருங்கள்.

பிழை உணர்தல் (Confession of Sins)
அமர்ந்த நிலையில்
நடத்துனர்: செல்வமும் மாட்சியும் கடவுளிடமிருந்தே வருகின்றன. அவர் அனைத்தையும் ஆள்பவர் ஆற்றலும் வலிமையும் அவர் கையில் உள்ளன. (1குறிப்பேடு 29:12).கடவுளின் செயல் என்பதை மறந்து, கடவுளை புறம் தள்ளி செல்வம், எவரையும் பெருமைப்படுத்துவதும் அதிகாரமுடையவர்களை மதித்ததற்காக வலியவராக்குவதும்

திருஅவை: மனம் வருந்துகிறோம் இறைவா

நடத்துனர்: கொடுமைத் தளைகளை அவிழ்ப்பதும், நுகத்தின் பிணையல்களை அறுப்பதும், ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்புவதும், எவ்வகை நுகத்தையும் உடைப்பதும், அன்றோ நான் தேர்ந்துகொள்ளும் நோன்பு (எசாயா58:6) என்ற திருமொழியை அறிந்து இருந்தும், சமயத்தின் பெயரால், சாதியின் பெயரால், அரசின் அதிகாரத்தின் பெயரால் ஒடுக்கப்படும் மக்களை கண்டும், செயல்பட வாய்ப்பு இருந்தும், செயல் படாமல் போன தருணங்களை என்ணி

திருஅவை: மனம் வருந்துகிறோம் இறைவா

நாம் நம்முடைய தனிப்பட்ட பிழைகளை அறிக்கை செய்வோம்.

(இசை)

பிழை மன்னிப்பின் உறுதி (Absolution)
மேற்கினின்று கிழக்கு எத்துனைத் தொலைவிலுள்ளதோ, அத்துணைத் தொலைவிற்கு நம் குற்றங்களை நம்மிடமிருந்து அவர் அகற்றுகின்றார். அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார். (திருப்பாடல்கள் 103:12,3) இத்திருமொழிகளின்படி கடவுள் நம் குற்றங்களை மன்னித்து நம்மை விடுவித்துக்காப்பாராக. ஆமென்.

திருமறைப் பகுதிகள் (Scripture Reading)
விடுதலைப் பயணம் 7:1-7
Exodus 7:1-7
Miss.Sukeerthi Malar

ரோமர் 13:1-7
Romans 13:1-7
Mrs. S.Bettina charis

யோவான் 18:33-38
John 18:33-38
Rev. Dixson

சிறப்பு நிகழ்வு [Special Event]
1. நானா..நீயா.. என்பது அல்ல கொண்டாட்டம்
நாமாக இணைந்து மகிழ்வது தானே கொண்டாட்டம்
எந்தன் பெயரால் கொண்டாட்டமே நிலைக்கும் என்று.....
உரக்கச் சொல்லும் இயேசு கிறிஸ்து வெளியே நின்று....

2. ஆணவம் கொண்டு கடவுளை தேடும் அகந்தை மனிதர்களே
அதிகாரம் எந்தன் கையில் என்றே அறிவை இழந்தீரே
யாரை நாடி உங்கள் வேண்டல் என்றே புரியவில்லை
கடவுள் தேடும் மனித சிந்தை எங்கே தெரியவில்லை

3. சுயநலமில்லா கொண்டாட்டத்தை எங்கும் காண வில்லை
கடவுளை தேடி வழிபடும் மாந்தர்கள் சுவடே எங்குமில்லை...
நீதியின் வழியில் கடவுளை தேட எவருக்கும் எண்ணமில்லை
அமைதி வழியில் வாழும் மனிதன் எங்கும் தோற்றதில்லை

4. இனிய வாழ்வை வேண்டிடும் மக்கள் இயேசுவை நாடியே
இழந்த வாழ்வை அவரின் பெயரில் மீட்டுக்கொள்ளவே
திருமொழி வழியில் மகுடம் சூட பொதுநலம் வேண்டியே
வழிபடும் மாந்தர்கள் அறத்தின் பாதையில் இறையாண்மை தேடியே
பாடல்: ஏ.கமாலியேல் நிக்சன்,
பண்: சாலஸ் வேலண்டைன் ஜோசப்
இளந்தேவியியல் IV

அருளுரை [Sermon]
செம்பொருள்: கடவுளின் இறையாண்மை, நீதி அமைதியை கொண்டாடுதல்

ஒப்படைப்பு [Dedication]
அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய்
அற்புத நாதா உம் கரத்தில்
அனைத்தும் உமக்கே சொந்தம் என்று
அன்பரே என்னையே தத்தம் செய்தேன்
- J. S. அற்புதராஜ்

திருத்தூதுவர் பற்றுறுதி அறிக்கை [Affirmation of Faith]
(எழுந்து நின்று)
விண்ணையும் மண்ணையும் நீதியும் அமைதியுமாய் படைத்த இறையாண்மை பொருந்திய பெற்றவராகிய கடவுளை நம்புகிறோம்.

அவர்தம் ஒரே மைந்தராகிய விடுதலையாளராம் இயேசு கிறிஸ்துவையும் நம்புகிறோம். அவர் தூய ஆவியாராலே அடிமையின் உரு கொண்டு கன்னி மரியாவிடம் கருக்கொண்டு பிறந்தார்.தீட்டு தூய்மை, நோய்,சாதிய ஆணவம்,சமய அரசியல் அடக்குமுறைகளுக்கு எதிராக போராடி பொந்தியு பிலாத்துவின் காலத்தில் பாடுபட்டு, கள்வர்களில் ஒருவராய் சிலுவையில் அறையப்பெற்று, இறந்து, அடக்கம் செய்யப்பெற்றுப், காவலில் இருந்த ஆவிகளுக்காக பாதாளம் இறங்கினார். ஆணவ கொண்டாட்டத்துக்கு முடிவு கட்டும்படி மூன்றாம் நாள் இறந்தோரிடையே இருந்து எழுந்தருளினார். விண்ணகம் ஏறி வல்லாதிக்கத்தால் பாதிக்கப்பட்டு பாவம் செய்ய நேர்ந்தோருக்காக பரிந்து பேசும் படி அனைத்து ஆற்றலும் பொருந்திய பெற்றவராகிய கடவுளின் வலப்பக்கம் வீற்றிருக்கிறார். அவ்விடத்திலிருந்து பாதிக்கப்பட்டோருக்கும் நடுத்தீர்க்க வருவார். வன்முறையாளர்களுக்கும்,

அடிமைத்தனத்திலிருக்கும் மக்களை விடுவிக்கும்படி விடுதலையாளரை தூண்டி அவர்களுடனிருக்கும் தூய ஆவியாரையும் நம்புகிறோம். பிரிவினையில்லா தூய திருச்சபையும் விடுதலையாளரின் கூட்டுறவும் பிழைபொறுப்பும் உடல் உயிர்ப்பும் மெய்வாழ்வும் உண்டென்று நம்புகிறோம். ஆமென்.

நன்றி செலுத்துவோம் [Thanks giving]
மண்ணுலகை பேணிப் பாதுகாக்கும் கடவுளே. நல்ல மழைபொழிவினால் இந்த வருடத்தில் ஏழாவது முறையாக மேட்டுர் அனை முழுகொள்ளளவை எட்டியது. நல்ல மழை பொழிவை கொடுத்து காவிரி பாசண பகுதிகளை தண்ணீர் பற்றாக்குறையில் இருந்து காத்ததற்காக இறைவா உமக்கு நன்றி செலுத்துகின்றோம் .

(இசை)

நலனை பறவைகளின் பாதுகாக்கும்படி சிவகங்கை மாவட்டம் கொள்ளுக்குடிபட்டி, வேட்டங்குடி, மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர், ஈரோடு மாவட்டம் வெள்ளோடு, சேலம் மாவட்டம் வவ்வால்தோப்பு, வேப்பிலைப்பட்டி, நெல்லை மாவட்டம் கூந்தன் குளம், செங்கல்பட்டு மாவட்டம் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் போன்ற பகுதிகளில் பட்டாசுகள் வெடிப்பதில்லை. சமய பண்டிகைகளுக்கு மாத்திரம் அல்லாமல் குடும்ப சுக துக்க நிகழ்வுகளுக்கு பட்டாசுகள் வெடிப்பதில்லை. இந்த கிராம மக்களின் சக படைப்புகளின் மீதான பாசத்திற்காக இறைவா உமக்கு நன்றி செலுத்துகிறோம்.

(இசை)

மன்றாடாடுவோம் [Intercessory]
படைப்பாளராம் கடவுளே மூன்றாம் பாலினத்தவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் படி மாவட்டம்தோறும் ஆட்சியர் தலைமையில் குழு ஒன்று அமைக்கவும், அவர்களின் பாதுகாப்பிற்காக நாடு தழுவிய அளவில் கட்டணமில்லா தொலைப்பேசி உருவாக்கப்படவும் உத்தரவிட்டு, மூன்றாம் பாலினத்தவரின் உரிமைகளைப் பாதுகாக்க சமவாய்ப்பு கொண்ட கொள்கைளை வகுக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு ஒன்று உச்சநீதிமண்றத்தால் அமைக்கப்பட்டுளது. இந்த உத்தரவு சரியாக அமல்படுத்தப்படவும், மூன்றாம் பாலினத்தவர்களின் சமஉரிமை பாதுகாக்கப்படவும் இறைவா மன்றாடுகிறோம். உம்மிடம்

திருஅவை: கடவுளே நாங்கள் வேண்டிக்கொள்ளுகிறதை கேட்டருளும்

வழிநடத்தும் நல்ல கடவுளே தென்னிந்தியத் திருச்சபையின் பல பேராயங்களுக்கு புதிய பேராயர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு திருநிலைப் படுத்தப்பட்டுள்ளதற்காக. இறைவா உமக்கு நன்றி படைக்கிறோம். தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தில் வழக்குகளினால் உருவாகியுள்ள குழப்ப நிலைகள் மாறி உம்திருப்பெயர் மாட்சியுரும்படி நல்ல நிர்வாகம் அமையவும், பேராயர் தேர்ந்தெடுக்கப்படவும் இறைவா உம்மிடம் மன்றாடுகிறோம்.

திருஅவை: கடவுளே நாங்கள் வேண்டிக்கொள்ளுகிறதை கேட்டருளும்

ஆண்டவர் கற்பித்த மன்றாட்டு (Lord's Prayer)
விண்ணுலகிலிருக்கிற எங்கள் பெற்றவராகிய கடவுளே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக. உமது ஆட்சி வருக. உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவதுபோல் மண்ணுலகிலும் நிறைவேறுக. இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளது போல எங்கள் குற்றங்களை மன்னியும். நாங்கள் சோதனைக்கு உட்படும்போது. தீயோனிடமிருந்து எங்களை விடுவியும். ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமக்கே. ஆமென்.

இறைவாழ்த்து [Benediction]
குரலற்றுப்போன மக்களுக்காக தன்வாழ்வை அற்பணித்த இயேசுவின் அருளும், ஒடுக்கப்படுகின்ற மக்களின் விடுதலைக்காக நம்மை செயல்பட அழைக்கும் கடவுளின் அன்பும், பிரிவினை நிறைந்த உலகில் கூட்டுறவை ஏற்படுத்தும் தூய ஆவியாரின் திருவுறவும் நம் அனைவரோடும் நின்று நிலவுவனவாக. ஆமென்...

நிறைவுப் பாடல் [Doxology]
தந்தேன் என்னை இயேசுவே,
இந்த நேரமே உமக்கே.

அனுபல்லவி
உந்தனுக்கே ஊழியஞ்செய்யத்
தந்தேன் என்னைத் தாங்கியருளும்!

சரணங்கள்
1. உந்தஞ் சித்தமே செய்வேன்,
என்றன் சித்தம் ஒழித்திடுவேன்,
எந்த இடம் எனக்குக் காட்டினும்,
இயேசுவே, அங்கே இதோ! போகிறேன்.
- தந்தேன்

2. ஒன்றுமில்லை நான் ஐயா!
உம்மாலன்றி ஒன்றும் செய்யேன்
அன்று சீஷர்க்களித்த ஆவியால்
இன்றே அடியேனை நிரப்பும்! - தந்தேன்
- வே. சந்தியாகு

நன்றி அறிதலான இருதயதோடு அனைவரும் இனைந்து சொல்லுவோம்
என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு! என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! திருப்பாடல் 102:1:2

அனுப்புதல் [Sending Out]
நடத்துனர்: இறையாண்மையால் நீதி அமைதியை உண்டாக்கும் ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.

திருஅவை: அவர் உமதாவியேடும் இருப்பாராக

நடத்துனர்: இறைவன் அருளும் இறையாண்மையால் உலகில் நீதி அமைதியை உண்டாக்குவோம் என்ற உறுதியுடன் புறப்பட்டு செல்வோம்.

திருஅவை: கடவுளின் திருப்பெயராலே ஆமென்.



Celebration of God's Sovereignty, Justice and Peace
I extend my greetings and wishes of love in the name of our Lord and Savior Jesus Christ. The theme given for us to reflect on, In this service is Celebration God's Sovereignty, Justice, and Peace. I would like to preach this sermon as Topical sermon. God's sovereignty, the justice of God, the peace that God gives can only be understood if we look at it from God's perspective. So may God grant us the grace to understand this message.

Let us first look at the message of the given passages. When we look at the background of the verses in Exodus 7:1-7, slave trade is flourishing in Egypt. For centuries, Egypt has been prosperous due to the slave trade. But the lives of the slaves in Egypt are miserable. In Exodus 1:14, proves that. In Exodus 3:7, the Lord says, "I have seen with my own eyes the affliction of my people who are in Egypt." In verses 9,10, "I have seen the oppression with which the Egyptians oppress them. I am sending you to Pharaoh to lead my people out of Egypt."

So, based on these verses, we can see that the Egyptians were very cruel to the people who were their slaves. God chooses Moses to free the people from this cruelty. God makes Moses a king or a God to Pharaoh than Pharaoh himself. That is what we see in the 1st verse of the 7th chapter of Exodus. God frees His people through His sovereignty.

When we look at the first 7 verses of the Epistle to the Romans, chapter 13, we see that everyone should be subject to the governing authorities, for there is no authority except from God. Paul says that the current governmental responsibilities were established by God. When we look at the historical background of this, the Romans thought that those who accepted Christ were revolutionaries and troublemakers in Judaism. Therefore, they punished Christians very severely. Paul, who knew the thoughts of these Romans, gives the idea that if we want to be protected from the problems we have due to the government, we should follow all the laws of the government correctly. By doing so, you will be protected from the cruelty of this government.

In John 18:33-38, Jesus is brought before Pilate for trial. But the charges against Jesus before Pilate are not recorded here. In Luke 23:2, Jesus is accused of saying that he should not pay taxes to Caesar, but that he himself is the Messiah, a king. In particular, Jesus is accused of saying that he is the Messiah, a king. Pilate interrogates Jesus alone. In John 18:3, he asks Jesus, "Are you the King of the Jews?" Jesus replies, "Do you ask this of your own accord, or do others say that you are asking me?" Pilate again asks, "What have you done?" Jesus replies, "My kingdom is not like the kingdom of this world." Pilate asks, "Are you a king then?" Jesus replies, "You say that I am a king. I did not say that." After this, Pilate, who found no fault in Jesus, was unable to release Jesus. Instead, fearing the crowd's accusations, Pilate handed Jesus over to be crucified.

Let us reflect on these passages under title: Celebration God's Sovereignty, Justice, and Peace.

God's Sovereignty
Sovereignty is the autonomous power without interference from others. When we look at the sovereignty of God, God does everything according to God's own will. Sovereignty is the word that explains that his activities cannot be interfered with or criticized. The preamble of the Indian Constitution states that we are determined to make India a sovereign socialist, secular, democratic republic. India can do domestic and foreign activities according to its own will. It does not need the permission or advice of any country. As long as those activities do not affect other countries, no one from any other country can criticize or question this. This is sovereignty. And this sovereignty is for all self-government and all people. God respects this. God's Justice and Peace

When the people experience the peak of cruelty and become powerless to resist it, One should stand with the powerless people and oppress their oppressors and provide justice and peace to the oppressed people. This is the message of the book of Exodus.

God killed the firstborn male of the people (primogeniture) and animals of Egypt, and also demanded and plundered gold and silver ornaments. This is an activity that gives justice and peace to the people whose lives have been made miserable by slavery.

Let's look at celebrations. Celebrations of religious festivals, birthday celebrations, celebrations of the opening day of organizations. New Year's celebrations, our college commencement celebrations, etc. We can keep talking about celebrations. If we think about what celebration is, it is culmination a happiness thanksgiving, planning for future activities, and so on.

1. Arrogant celebration
Those who are supposed to establish justice and peace by the sovereignty that God has given us, use that sovereignty to rule, to suppress others, and to do whatever they want. They consider it an achievement When the powerless people uphold silence due to they're inability to oppose these evil. We see this in the reign of the Egyptian Pharaoh. He makes a law to kill the male children of slaves in the river in order to carry out his tyrannical rule peacefully. They thought that the peace of the people who are powerless to oppose the law was an act of justice that would bring peace to the country. The act of the Jews who killed Jesus was to calm the riot among the people uprising against the religious leaders they justified that it was an act of justice that brought peace.

On December 6, 1992, the 464-year-old mosque in Ayodhya was demolished. Who demolished it? What is the punishment for them? There was a case. Who owns the place where the mosque was located? Two cases were pending. The verdict on the case of who owns the place where the mosque was located? was given by the Supreme Court on November 9, 2019. In that verdict, there is no evidence that worship was held in the mosque 150 years ago. There is no evidence that there was a Ram temple. But according to the people's belief, we are giving that place to the Ram temple and the verdict came that a Ram temple can be built there.

Who demolished? What is their punishment? The verdict in this case was given on September 30, 2020. It was said that none of the accused were guilty. The question of who demolished? There is no answer. When many people post on social media about the situation of those days, how many riots would have occurred across India if this had been a different Government. Look at our Governance when such a verdict was given, no one committed riots. They said that we are acting with great justice and peace. The same situation exists in our churches and institutions. It is a celebration of arrogance for those who hold power to forget that it is to do justice and create peace and to do whatever they want and act with the thought that no one can question them.

2. The celebration inside the room
The celebration inside the room is the celebration my God, the great one, the sovereign one, has given that sovereignty to us as well. This God brought justice and peace to the people in Egypt. In the time of Jesus, he gave himself up on the cross and freed people from their sins, so he has helped us all live free from the pressure of sin. Through Paul, he has taught us how to live a peaceful life as sovereign people. Today, as sovereign people, we protect ourselves and live in peace without causing any harm to anyone. We accept and tolerate the injustices done to us and other people, saying that it is God's plan.

During the third year, Village dwelling programme, when I was in Chinna Udaipu, the villagers fought for over three months demanding compensation for the damage caused by the airport expansion. In that context, when we talked to the villagers, they said the role of R.T.I (Bethel Pannai) in the development of our village was very significant. But that day they said it is a great disappointment to us that R.T.I (Bethel Pannai) did not participate in our protest. The celebration of God the Liberator by people who have no action for liberation is a celebration within the room.

3. Joyful Celebration
God has given me sovereignty. It is a joyful celebration to act with that sovereignty and with God's help, saying that I will bring freedom to people against the evils in this society. In Luke 4:18,19, Jesus says in the of Nazareth Manifesto, "The Spirit of the Lord is upon me, because he has sent me to set the oppressed free, to proclaim the year of the Lord." He did what he was proclaimed and accepted the injust judgment that resulted. Jesus is still our Savior today.

Moses, who fled from Pharaoh in fear, stood up to Pharaoh's authority when he received the authority given to him by God. We see in Exodus 12:38 that he used God's authority to free not only the Israelites but also all the slaves there.

In today's environment, we see injustice and oppression taking place in religious, social, political, and economic realms. In this context, Jesus' challenge to us is in John 14:12, "He who believes in me will do the works that I do, and greater works than these." What God expects from us is that we continue to do the work of Jesus' deliverance. This is a joyful celebration.

What kind of celebration is ours today? Is it a celebration of pride? Is it a celebration within the room? May the Lord grant us the grace to live as those who celebrate joy, exalt the sovereignty of God, receive the justice that God gives to all creation, and establish a peaceful society. Amen.
Translated by
Mr. J. Melvin Jerome BD IV

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.