Type Here to Get Search Results !

Advent Carol Service 2025 Order of Service | ADVENT AND FAITH JOURNEY | இறைவருகையும் பற்றுறுதிப் பயணமும் | Jesus Sam

தமிழ்நாடு இறையியல் கல்லூரி
அரசரடி, மதுரை - 625 016

கிறிஸ்து வருகை இன்னிசை வழிபாடு - 2025

செம்பொருள்
இறைவருகையும் பற்றுறுதிப் பயணமும்

Theme
ADVENT AND FAITH JOURNEY

2025 நவம்பர் 29 சனிக்கிழமை மாலை 6.00 மணி


கிறித்து வருகை இன்னிசை வழிபாடு 2025

"இறைவருகையும் பற்றுறுதிப் பயணமும்”
"ADVENT AND FAITH JOURNEY "

1. பவனி (Procession)
(தேவியல் இளையர் மூன்றாமாண்டு)

2. மும்மை வாழ்த்து
நமோ... நமோ... - 2
ஆதியில் உம் வார்த்தையாலே
விண்ணும் மண்ணும் படைத்தவா
விந்தையாகி எந்தையாகி
எங்கும் வந்து நிறைந்தவா (2)

நமோ... நமோ... - 2
மைந்தராகி மண்ணில் வந்து
அன்பினைப் பொழிந்தவா
மனுக்குலத்தின் பாவம் போக்க
இன்னுயிரை ஈந்தவா (2)

நமோ... நமோ... - 2
மரணம் வென்று உயிர்த்தெழுந்து
பூதலத்தில் வந்தவா
தேற்றும் உந்தன் ஆவியாலே
எம்மையும் நடத்தவா (2)
நமோ... நமோ... -2

3. வரவேற்பு (Welcome)
(அமர்ந்தவாறு)
அருள்பணி. முனைவர். ஐவி சிங்
பொறுப்பு முதல்வர், தமிழ்நாடு இறையியல் கல்லூரி

4. வழிபட அழைப்பு (Call to Worship)
மூவொரு கடவுள் மீது கொண்டுள்ள பற்றுறுதிப் பயணத்தில் ஆண்டவருடன் சேர்ந்து நடக்க நாம் அழைக்கப் பெற்றிருக்கின்றோம் நிசேயா மன்றம் வகுத்துத் தந்த நிசேயாப் பற்றுறுதி அறிக்கையைக் கடந்த ஆயிரத்து எழுநூறு ஆண்டுகளாக உலகெங்குள்ள திருச்சபையினராக அறிக்கை செய்து நம் பற்றுறுதியைக் காத்து வந்திட ஆண்டவர் வழி வகுத்துத் தந்துள்ளார். இந்தப் பற்றுறுதி அறிக்கையின் உயிர்த்துடிப்பினைத் தொடர்ந்து வரும் தலைமுறையினருக்கும் எடுத்துச் சென்று திரிபுகளற்ற பற்றுறுதிப் பயணத்தில் தொடர்ந்து நடந்திட இந்தத் திருவழிபாட்டில் உறுதியேற்போம் வாருங்கள்.

5. தொடக்க இறைவேண்டல் (Opening Prayer)
விடுவித்து வழிநடத்தி காத்து உடன்படிக்கை செய்திருக்கும் பெற்றவராம் கடவுளே. உம் மீதான பற்றுறுதிப் பயணத்தில் தலைமுறை தலைமுறையாக எங்களை உடன் இணைத் திருப்பதற்காக நன்றி கூறுகின்றோம். கிறிஸ்துவின் வழியாக எங்களை விடுவித்து வழிநடத்தி வருகின்ற உமதருளுக்காகவும் கிறிஸ்துவின் வழியாக செய்து கொண்டிருக்கின்ற உமது புதிய உடன்படிக்கைக்காகவும் நன்றி கூறுகின்றோம். இந்த நாளிலும் கிறிஸ்துவின் வருகையை நன்றியுடன் நினைவு கூர்ந்து உம்மைப் போற்றவும் தொடர்ந்து இறையாளுகையின் மதிப்பீடுகளைச் சுமந்து நடப்பதற்கு உறுதி பூண்டிடவும் ஒப்படைக்கவும் கூடி வந்திருக்கின்றோம். ஆண்டவரின் வருகையின் காலத்தில் பற்றுறுதிப் பயணத்தினைத் தொடர்ந்திட எங்களுக்கு நல்ல மனத்தையும், ஆர்வத்தையும் இந்த வழிபாட்டின் மூலமாக நாங்கள் தொடர்ந்து பெற்றிட அருள்வீராக. இவற்றை எம் ஆண்டவரும் மீட்பருமான இயேசு கிறிஸ்துவின் வழி மன்றாடுகின்றோம். ஆமென்.

6. போற்றிப் பாடல்:
அறுப்பிருக்கும்போல்
1. அறுப்பிருக்கும்போல்
மகிழ்ந்து பாடுங்கள்;
நம்மை ஆற்றும் நன்மை
இம்முன்னணையிலே
மா சூரியன் அத்தன்மை
விளங்கும் பிள்ளையே
ஆதியந்தமே..
ஆதியந்தமே...

2. தெய்வீக பிள்ளையே
அன்புள்ள இயேசுவே
உம்மால் நான் களிக்க
என் நெஞ்சைத் தேற்றுமேன்
நீர் என்னை ஆதரிக்க
நான் உம்மை அண்டினேன்
என்னைச் சேருமேன்
என்னைச் சேருமேன்

3. பிதாவின் தயவும்
குமாரன் பட்சமும்
பாவத்தைக் கழிக்கும்;
நாம் கெட்டோர், திக்கில்லார்
ஆனாலும் எக்கதிக்கும்
வழியை ஸ்வாமியார்
உண்டு பண்ணினார்
உண்டு பண்ணினார் 

4. மெய்யாய் மகிழவே
வாழ்வேது, மோட்சமே;
அங்கே வானோர் பாடும்
சங்கீதம் இன்பமே,
ராஜாவின் ஊரில் ஆடும்
மணிகள் ஓசையே
வா, வா, மோட்சமே
வா, வா, மோட்சமே

7. திருமறைப் பாடம்
தூய லூக்கா 2:10-14
திருமிகு. ஜூலி ஜெபராணி

8. பாடல்
வருக வருக வருக வருக
தாளம்: ஆதி தாளம்
ராகம்: வசந்தா ராகம்
ச க² ம¹ த² நி² ச்
ச நி² த² ம¹ க² ரி¹ ச
தொம்த நான தின - (தாளம் 24 Count)

வருக வருக வருக வருக - 2
இறை மைந்தனே வருக
இறை அருளைத் தருக (2)
ஆண்: வருக வருக வருக வருக
பெண்: வருக வருக வருக வருக

சரணம் 1
எந்தையின் அருளாலே
விந்தையாய் உலகினிலே
எங்களின் குறை தீர்க்க
வந்தவா போற்றுகின்றோம்
உந்தனின் முகம் பார்த்து
உள்ளத்தில் அகமகிழ்ந்து
உருகியே வந்து நின்றோம்
உம் பதம் தொழுகின்றோம்

எங்கும் நிறைந்த எம் பரன் நீரே
எங்கள் குறைகள் தீர்த்திடுமே
பொங்கும் உந்தன் அருளின் நிழலில்
என்றும் தஞ்சம் அடைந்திடவே
ஆ..ஆ..ஆ..ஆ.. ஆ..ஆ..ஆ..ஆ.. - 2

அன்றும் இன்றும் என்றும் வந்து ஆளும்
அன்பின் இறைவன் நீரே
எங்கள் வாழ்வின் இன்பம் என்றும் நீரே
வாழும் தெய்வம் நீரே...

வருக வருக வருக வருக - 2

பெண்: தனன தோம்தினன (3) தனன னா - 2
ஆண்: திரனன திரனன திரனன திரனா - 2
பெண்: தனன தோம்தினன (3) தனன னா - 2

சரணம் 2
ஏழைகள் வாழ்வினிலே
நம்பிக்கை தருபவரே
எளியோரின் மாண்பினையே
உயர்த்திட வந்தவரே
வாழ்வற்ற மாந்தர்க்கு
வாழ்வினை அழிப்பவரே
வழிவாய்மை வாழ்வும் நீரே
நின் பதம் பனிகின்றோம்

உந்தன் வழியில் எங்களின் பயணம்
உலகில் என்றும் தொடர்ந்திடவே
பண்புடன் ஏற்று உம் அன்பினைப் பகிர
உந்தனின் அருளைத் தந்திடுமே
ஆ..ஆ...ஆ..ஆ..ஆ.. ஆ..ஆ..ஆ..ஆ..ஆ.. - 2

அடிமை வாழ்வின் இருளை நாங்கள் துறந்து
ஒளியின் வாழ்வைப் பெறவே (2)

வருக வருக வருக வருக - 2
இறை மைந்தனே வருக
இறை அருளைத் தருக (2)
பாடல், பண்: அருட்பணி. வி. ஷீலா டைட்டஸ்


9. திருமறைப் பாடம்
1 பேதுரு 5:7
திருமிகு. மனோ ஃப்ராங்க்ளின்

10. பாடல் 
ஜகநாதா, குருபரநாதா
ராகம்: சங்கரா பரணம் 
தாளம்: ஆதி தாளம் 
ஜகநாதா, குருபரநாதா, திரு
அருள் நாதா, ஏசுபிரசாதா நாதா! (2) ஜகநாதா...

திகழுறுந் தாதா, புகழுறும் பாதா - 2
தீதறும் வேத போதா! - 2
   - ஜக‌நாதா

சரணம் 1 
முற்காலம் ஆதிமைந்தர் மோசப் பிசாசு தந்திர‌
மொய் கொண்டு கனியுண்ட பழியாலோ? (2)
நற்காலம் நீ தெரிந்து, நவின்ற வண்ணம் பரிந்து - 2
நரதேவனாக வந்தாய் மொழியாலோ? - 2
   - ஜக‌நாதா

சரணம் 2
எளிய கோலந் தரித்தே இங் கவதிரித்தாலும்
இமையோர் வந்திறைஞ்சிடத் தெரிந்தாயே (2)
ஒளி செய்யும் பணிமுடி உயர் மன்னர் தொழும்படி - 2
உடு வழி காட்டிடப் புரிந்தாயே - 2

ஜகநாதா, குருபரநாதா, திரு
அருள் நாதா, ஏசுபிரசாதா நாதா! - ஜெகநாதா 

1)
| ஸா நி த | நீ த ப | க ம ப ம கா |
| ம பா த | ப தா நி | த நீ ச | ரி ஸ் த நி | சா |
- ஐகநாதா 

2)
| ஸ் ஸ் நி த | நி நி த த | க ம ப ம | கா |
| ம பா த | ப தா நி | த நீ ச | ரி ஸ் த நி | சா |
- ஐகநாதா 

3)
| ஸா நீ தா | ஸ நி த | ஸ நி த |
| நீ தா பா | நி தா ப | நி த ப |
| தா பா மா | த பா ம | த ப ம |
| நி ச நி | த நி த | ப த ப | ம ப ம | க ரி ச நி |
- ஜகநாதா

4)
| ஸா ஸ ஸ | ஸா ஸ ஸ | ஸா ஸ ஸ | ஸா ஸ ஸ |
| நி ச நி | த நி தா | ப த பா | ம ப மா | - (2)
| க க ம ம | ப ப த த | ம ம ப ப | த த நி நி |
| ப ப த த | நி நி ச சா | ரி ஸ த நி சா | - (2)

ஆண்
| க் க் | க் க் ரி | க ரி ரி ச |
| ச ரி ச க் | ரி க் ச ரி | நி ரி ச் நி | த ப ம க |

பெண்
| ப ப | த த | நி நி | ச் நி த ப |

ஆண்
| க ம ப | க ம ப |

பெண் 
| த நி ச் | த நி ச் |

அனைவரும் 
| ச் நி நி த | த ப ப க | நி த த ப | ப ம ம க |
| ச ரி க ம ப | ரி க ம ப த | ம ப த நி | 

ஜகநாதா, குருபரநாதா, திரு
அருள் நாதா, ஏசுபிரசாதா நாதா! - ஜகநாதா
- வீரமாமுனிவர்


11. திருமறைப்பாடம்
2 கொரிந்தியர் 5:7
திருமிகு. நேசமணி

12. பிழையறிக்கைக்கு அழைப்பு (Call to Confession)
அருள்பணி. முனைவர். டென்சன் எக்டர்
அவர் இறந்தது போலவே நாமும் அவரோடு ஒன்றித்து இறந்தோமெனில், அவர் உயிர்த்தெழுந்தது போலவே நாமும் அவரோடு ஒன்றித்து உயிர்த்தெழுவோம்' (உரோமையர் 6:5) என்ற திருமொழிக்கேற்ப பாவங்களைச் செய்யாமலிருப்பதும் செய்துவிட்டால் மனங்கசந்து மனம் வருந்தித் திருந்தி பொறுத்தருளுகின்ற ஆண்டவரிடமிருந்து பொறுத்தருளலைப் பெற்றுக்கொள்ள இப்போது நாம் நம் மீறுதல்களையும் குற்றங்களையும் தவறுகளையும் பிழைகளையும் அறிக்கை செய்வோம். ஆண்டவர் திருமுன் நம் தவறிய நிலையை உணர்ந்து அறிக்கை செய்யும்போது கிறிஸ்துவோடு கூட நாமும் சிலுவையில் நம் பாவங்களை அறைய ஒப்புக் கொடுத்துள்ளோம் என்பதை நினைவில் கொண்டு அறிக்கை செய்வோம் வாருங்கள்.

13. பிழையறிக்கை (Confession of Sins)
திருமிகு. லிவிங்ஸ்டன் அற்புதராஜ்
நடத்துநர்: பிழைகளைப் பொறுத்தருளுகின்ற ஆண்டவரே, எமது பற்றுறுதிப் பயணத்தில் நாள்தோறும் உண்மையுடன் நடந்திட முடியாது. பல்வேறு ஐயங்களினால் அலைக்கழிக்கப் பெறுகின்றோம். மனிதர் மீது பற்றுறுதி கொண்டு அல்லது எங்கள் அறிவுப்புலத்தின் மீது பற்றுறுதி கொண்டு உண்மையான பற்றுறுதியை விட்டு விலகி வாழ்ந்துள்ளோம். எங்கள் நிலையை எண்ணி வருந்துகின்றோம். எங்களுக்கு இரங்கி எங்களைப் பொறுத்தருள்வீராக.

திரு அவை: ஆண்டவரே, எங்கள் மீறுதல்களைப் பொறுத்தருளி உம்முடன் நல்லுறவில் வாழ்ந்திட அருள்வீராக.

நடத்துநர்: பிழைகளைப் பொறுத்தருள்கின்ற ஆண்டவரே, நாங்கள் உம்மீது கொண்டுள்ளதாக உரிமைகோரும் பற்றுறுதியை எங்கள் சொல்லாலும் செயலாலும் வெளிப்படுத்திட பல நேரங்களில் தவறியிருக்கின்றோம். எங்கள் நிலையை எண்ணி வருந்து கின்றோம். எங்களுக்கு இரங்கி எங்களைப் பொறுத்தருள்வீராக.

திரு அவை: ஆண்டவரே, எங்கள் மீறுதல்களைப் பொறுத்தருளி உம்முடன் நல்லுறவில் வாழ்ந்திட அருள்வீராக.

14. பிழை பொறுத்தருளலின் உறுதி (Absolution)
பேரருட்பணி. முனைவர். ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன்
பேராயர், ஆட்சிமன்றத் தலைவர்
நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் மூலம் கடவுளுக்கு ஏற்புடையவர்களாகியுள்ள நாம் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாய்க் கடவுளோடு நல்லுறவு கொண்டுள்ளோம். (உரோமையர் 5:1) என்ற திருமொழிக்கிணங்க அவர் நம் மீறுதல்களைப் பொறுத்தருளி தம்முடனான நல்லுறவில் நம்மை இணைத்துக் கொள்வாராக. பற்றுறுதிப் பயணத்தில் உறுதியுடன் நடப்பதற்கு வேண்டிய வலிமையையும் தந்தருள்வாராக. ஆமென்.

15. பேராயரின் வாழ்த்துரை
பேரருட்பணி. முனைவர். ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன்
பேராயர், ஆட்சிமன்றத் தலைவர்

16. திருமறைப் பாடம்
தூய லூக்கா 4:18-19
திருமிகு. மரகதம் (இன்ப இல்லம்)

17. பாடல்
எந்தன் மனதில் உந்தன் மொழிகள்
👰ஆராரிரோ... 🤵தாலேலோ... - 2

எந்தன் மனதில் உந்தன் மொழிகள்
என்றும் வாழுமே - அதில்
இன்பம் மலர்ந்து அமைதி வாழ்வு
இனிதே நீளுமே (2)

சரணம் 1
இறைவர் வருகை இன்னல் தீர்க்கும்
இகமும் மகிழ்ந்திடுதே
உம் கரங்கள் பற்றி யுகங்கள் கடக்க
உள்ளம் ஏங்கிடுதே (2)

ஆண்
அமைதி வேண்டும்
நிலைக்க வேண்டும்
நிகழும் நாள் இதுவே
மக்கள் கூடி மகிழ்ந்து பாடி
காத்து கிடக்குதிங்கே

விரைந்து வாரும் மகிழ்வைத் தாரும்
மதியும் ஒளிர்ந்திடவே
பூவும் மலரும் பொழுதும் புலரும்
வாழ்வும் பிறந்திடவே
வாழ்வும் பிறந்திடவே 
வாரும் இறைமகனே
   - எந்தன் மனதில்

தந்தானானே - 8

சரணம் 2
நெஞ்சில் கனமும் நிறைந்த ரணமும்
எங்கள் வாழ்விதுவே
தந்த உந்தன் மைந்தன் அன்பு
நிலையை மாற்றாதோ (2)

ஆண்
இருக்கும் வரையில்
சான்று உரைக்கும்
பணியும் காத்திருக்க
உறுதி கொண்டு
நீதி தவறா கடமை எமக்கிருக்க

தீமை களைந்து உண்மை நிறைந்த
பாதை வகுத்திருக்க
நீரும் வந்து எம்மை மீட்க
சமயம் வாய்த்திருக்க
வாரும் இறைமகனே 
வாரும் இறைமகனே 

எந்தன் மனதில் உந்தன் மொழிகள்
என்றும் வாழுமே - அதில்
இன்பம் மலர்ந்து அமைதி வாழ்வு
இனிதே நீளுமே (2)

👰ஆராரிரோ... 🤵தாலேலோ... - 2
பாடல்: திருமிகு. கமாலியேல் (BD IV)
பண்: அருட்பணி ஷீலா டைட்டஸ்

18. திருமறைப் பாடம்
எபிரேயர் 10:22-23
சு.ஓ.ஈவ்லின் ஜோகன்னா

19. பாடல்
பற்றுறுதி எங்கள் பற்றுறுதி
ராகம்: தர்பாரி கானடா 
ச ரி ம ப த | நி சா
ச நி ப ம ப | க ம ரி சா
|| தோம் தோம் த னன | தகதிமி | தகஜொனு 
|| தோம் தோம் த னன | தோம் || (2)
|| தகிட தீம் த | தகிட தீம் த | தகதிமி 
|| தக திமி | தகஜொனு | தோம் || (2)
|| தோம் தோம் த னன | தோம் || - 2

பற்றுறுதி எங்கள் பற்றுறுதி
இறைமகன் வரவை எண்ணும் பற்றுறுதி (2)
இறையியல் பயணம் தந்த பற்றுறுதி - 2
இன்பங்கள் வாழ்வில் தரும் பற்றுறுதி - 2
  - பற்றுறுதி

|| தோம் தக | தீம் தக | நம் தக | தகஜொனு
|| தோம் தக | தீம் தக | ஜம் தக | ஜம்  || (2)

சரணம் 1
ஏழைக்கு வாழ்வு தரும் பற்றுறுதி
ஏக்கங்கள் தீர்க்க வரும் பற்றுறுதி (2)
தூயாவி துணைக் கொண்டு...
தூயாவி துணைக் கொண்டு
தூய்மை வடிவம் கண்டு (2)
விண்ணைவிட்டு மண்ணில் வந்த பற்றுறுதி - 2
   - பற்றுறுதி

சரணம் 2
அன்பில் உருவான பற்றுறுதி
துன்பங்கள் நீங்க செய்யும் பற்றுறுதி (2)
சீர்கெட்ட மாந்தர்காக...
சீர்கெட்ட மாந்தர்காக
சிலுவையின் நிழல் தந்து (2)
துன்புறவே வாழ்வை தந்த பற்றுறுதி - 2
   - பற்றுறுதி

|| தோம் தகிட | தீம் தகிட | ஜம் தகிட | திரனா |

|| ஜகன மகன | ஜம்ஜம்தக | ஜகன தீம்த | ஜம்ஜம் | 

|| தீம்த | தீம்த | தீம்த | தீம்த |
|| தீம்த | தீம்த | தீம்த | ஐம் |

|| ச்; நிச்ரீ | ச்நிதா | பமபா | - 2
|| சரிமப | ததத | பா | - 2 

|| ஜகன மகன | ஜம் ஜம் தக | ஜகன தீம்த | ஜம்ஜம் |
|| ஜகன மகன | ஜம் ஜம் தக | ஜகன தீம்த | ஜம் 

பற்றுறுதி.. பற்றுறுதி... பற்றுறுதி.... பற்றுறுதி.....
பாடல், பண்: அருட்பணி. அகிலன்
(ஆர்க்காடு லூத்தரன் திருச்சபை)


20. திருமறைப் பாடம்
A. Payini
சங்கீதம் 119:30

21. பாடல்
பற்றுறுதிப் பயணத்திலே
ஓஹே... (7) - 2
🤵பற்றுறுதிப் பயணத்துலே
👰தன்னன்னன்ன னானனா
👰பார் போற்றும் கிராமத்துலே
🤵தானனன்னன் னானனா 

பற்றுறுதிப் பயணத்திலே பார் போற்றும் கிராமத்திலே 

பாசத்துடன் வாழ்ந்து வந்தோம் நாங்க - ஆஹாஹா..
பாசத்தையே பிரிக்கப்பாக்குறாங்க - ஓஹோஹோ... (2)

கிராமத்துல அனைவருமே உறவோடு வாழ்ந்து வந்தோம்
உறவையே பிரிக்கப்பாக்குறாங்க - எங்க
நிலத்தையும் பறிக்கப்பாக்குறாங்க (2) - எங்க
நிலத்தையும் பறிக்கப்பாக்குறாங்க

ஆண்🤵
ஊரே ஒண்ணாநின்னு ஒத்துமயா வாழ்ந்து வந்தோம்
ஊர விட்டு போகுதே எங்க சனம் - இப்போ
பொழப்ப தேடி அலையுதே எங்க சனம்

பெண்👰
ஊரும் நல்லா இல்ல உலகமும் நல்லா இல்ல 
எங்க போயி நாங்க சொல்ல எங்க நில - இப்போ
வாழ்க்கை போற போக்கு ஒன்னும் புரியல - 2

ஆண்டவர் வருவாரின்னு
ஆர்வத்தோடு காத்திருக்கோம்
ஆசி வழங்குவாரா? எங்களுக்கு
நீதி வழங்குவாரா? - 2
எங்களுக்கு நீதி வழங்குவாரா?
ஓஹே... (7) - 4
பாடல்: அருட்பணி. ஞான பிரபு 
பண்: அறிவர். விக்டர் 
அருட்பணி ஷீலா டைட்டஸ்


22. திருமறைப்பாடம்
திருமிகு. P. கலைச்செல்வன்
தூய யோவான் 1:9-10

23. சிறார் பாடல்
இது மகிழ்ச்சியின் திருநாளாம்
இது மகிழ்ச்சியின் திருநாளாம் - நாம்
ஆனந்த மாய் ஆடிப்பாடுவோம் - நம்
நம்பிக்கையின் விடிவெள்ளியை
நாளும் வாழ்த்தியே வணங்கிடுவோம் (2)

Merry merry Christmas
Happy Happy Christmas (2) 

சரணம் 1
தாவீதின் ஊரில் வந்து பிறந்தாரே
தாழ்மையாய் மண்ணில் வந்து பிறந்தாரே
கன்னி மரி மகனாய் உதித்தாரே
கவலைகள் தீர்த்திட வந்தாரே

உன்னத இறைவன் உலகினில் பிறந்தார்
நீதியின் இறைவன் காத்திடுவார் (2)

எங்கும் கொண்டாட்டம், இன்பம்
எந்நாளும் இறைவன் இயேசுவைப் பாடு
மீட்பர் இயேசு வாழ்வினைத் தருவார்
மகிழ்ந்தே போற்றிப் பாடு (2)

Merry merry Christmas
Happy Happy Christmas (2)

சரணம் 2
சிறுவர் எங்கள் வாழ்வினையே
சிறப்பாய் மாற்றிட வந்தாரே
சிறுமைகள் தீர்த்திடும் - பாலகனாய்
பாரினில் வந்து பிறந்தாரே

மீட்பினை அருளும் மரியின் மகனாய்
உலகினில் வந்து பிறந்தாரே
அச்சங்கள் நீங்கி அமைதி பெறவே
மேசியா இங்கு பிறந்தாரே

எங்கும் கொண்டாட்டம், இன்பம்
எந்நாளும் இறைவன் இயேசுவைப் பாடு
மீட்பர் இயேசு வாழ்வினைத் தருவார்
மகிழ்ந்தே போற்றிப் பாடு (2)

Merry merry Christmas
Happy Happy Christmas (2)
   - இது மகிழ்ச்சியின் திருநாளாம் 
பாடல்: திருமிகு. மில்டன் (M.Th I)
பண்: அறிவர். விக்டர்


24. திருமறைப்பாடம்
திருமிகு. ஷெல்டன்
1 தெசலோனிக்கர் 1:3

25. பாடல்
பகலெல்லாம் பசுமை தேடியே
தனனா.. னா... னா.... னா..... 
பகலெல்லாம் பசுமை தேடியே...
வழியெல்லாம் கதைகள் பேசியே...
பகலெல்லாம் பசுமை தேடியே
வழியெல்லாம் கதைகள் பேசியே
மலை எங்கும் மந்தை மேய்த்தோம்

பொழுதாகி இருட்டும் வேளையில்
களைப்போடு மந்தை ஒட்டியே
வயல்வெளிக்கு வந்து சேர்ந்தோம்
பனித்தூவும் இரவில்
குளிர் வாட்டும் பொழுதில்
அனலேற்றி நாங்கள் குளிர்காயும் போது
அந்நேரம் விண்தூதர் எம் நடுவில் தோன்றி

அனுபல்லவி
வேண்டாம் பயம் வேண்டாம்
எனும் பாடல் ஒலித்தன
விண்ணில் இறைவனுக்கு
இனி என்றும் மாட்சியே
மண்ணில் இறை அமைதி
இனி என்றும் சாட்சியே
விண்ணும் இம்மண்ணும்
பற்றுறுதிக் காட்சியே

பகலெல்லாம் பசுமை தேடியே...

👰 தானானா தன்னானனா - 2 

சரணம் 1
🤵பூமி முழுதும் | 👰 ஆஹாஹா - 2 |
🤵சாமி வரவா | 👰 ஓஹோஹோ - 2 |
🤵பூமி முழுதும்
👰சந்தோஷமா என்ன இது
🤵 சாமி வரவா
👰 சொந்தம் வரும் விந்தை இது
ஊருக்குள்ள போவோமே
கேட்ட செய்தி பார்ப்போமே
யாரு என்ன சொன்னாலும்
தூதர் பேச்ச கேட்போமே
வயல் தாண்டி மல தாண்டி
நாம் போவோம் இன்று
   - வேண்டாம்

🤵ஆஹாஹா... - 8


சரணம் 2
🤵தேடிப் போவோம் 
| 👰ஆஹாஹா - 2 |
🤵பாலன் அவர | 👰ஓஹோஹோ - 2 |
🤵தேடிப் போவோம்
👰சுறுசுறுப்பாய் விறுவிறுப்பாய்
🤵பாலன் அவர
👰பனியிருப்பில் படபடப்பாய்
மன்னவரும் பிறந்தாரே
சொன்னதெல்லாம் நடந்தாச்சு
கன்னிமரி அம்மாவும்
கூட வரும் யோசேப்பும்
பார்ப்போமே கேட்போமே
அவர் கதையை இன்று
   - வேண்டாம் 
பாடல்: அருட்பணி. முனைவர். ஜேக்கப் லிவிங்ஸ்டன்
(பேராயர் தெ.இ.தி. ஈரோடு சேலம் திருமண்டிலம்)


26. திருமறைப்பாடம்
திருமிகு. ஆல்ஃபின்
எசாயா 61:10-11

27. பாடல்
சஞ் சஞ் சஞ் சஞ்சனக்கு
தாம் தாம் தாம் தன்னர வன்னர 
தீம் தீம் தனனா 
தீம் தீம் தனனா தந்தனா 
தாம் தோம் தனனா (2)

சஞ் சஞ் சஞ் சஞ்சனக்கு
தாளம் போடுங்க அம்மா
தாளம் போடுங்க
ஜல் ஜல் ஜல் ஆட்டமாடி
நன்றி சொல்லுங்க ஐய்யா
நன்றி சொல்லுங்க (2)

இயேசு சாமி பொறந்திருக்கார்
வாழ்த்து பாடுங்க (2)
கலிலேயா சொந்தம் பூரா ஒன்னு கூடுங்க 
பெத்தலேகேம் வந்து பாருங்க - 3
   - சஞ் சஞ் சஞ்

சரணம் 1
👰 தோட்டத்தில நிக்குது பார் வாழைக்கண்ணுங்க
🤵 ஆமா வாழைக்கண்ணுங்க
👰 மொத்தமாக தன்னையே நமக்கு தருதுங்க
🤵 ஆமா நமக்கு தருதுங்க  (2)

ஏழ சனம் வாழ்ந்திடவே தன்ன தருதுங்க - 2
ஒத்துமையா ஒலகம் வாழ நடத்த வருதுங்க
சாமி ஒலகில் வருதுங்க - 3
   - சஞ் சஞ் சஞ்


சரணம் 2
🤵 மரியம்மா மனசு போல சாமி மனசுங்க
👰 இயேசு சாமி மனசுங்க
🤵 மனுக்குலத்த மாத்த வந்த தெய்வம் தானுங்க
👰 இயேசு தெய்வம் தானுங்க (2)

மக்களோட மக்களாக வாழுஞ்சாமிங்க - 2
ஏழ நெஞ்சில் குடியிருக்கும் இயேசு சாமிங்க 
அவரு நம்ம சொந்தம்ங்க - 3
   - சஞ் சஞ் சஞ்

🤵 தந்தானே தந்தானே தான தந்தானே - 2
👰 தந்தானே தந்தானே தான தந்தானே - 2


சரணம் 3
👰 குட்டக் குட்டக் குனிஞ்ச சனம் நிமிர்ந்து நிற்கவே
🤵 ஆமா நிமிர்ந்து நிற்கவே
👰 அஞ்சி அஞ்சி வாழும் சனம் திமிரி எழுகவே
🤵 ஆமா திமிரி எழுகவே (2)

இறையரசு மண்ணினிலே தழைத்து வளரவே - 2
பறையாட்டம் ஆடி நீதி செய்ய வருகுது
சாமி பொறந்திருக்குது - 3

சஞ் சஞ் சஞ் சஞ்சனக்கு
தாளம் போடுங்க அம்மா
தாளம் போடுங்க
ஜல் ஜல் ஜல் ஆட்டமாடி
நன்றி சொல்லுங்க ஐய்யா
நன்றி சொல்லுங்க (2)
ஐயா நன்றி சொல்லுங்க... - 2
பாடல் & பண்: அருட்பணி. அகஸ்டி ஞான காந்தி


28. திருமறைப்பாடம்
திருமிகு. டயானா
1 கொரிந்தியர் 16:13

29. பாடல்
இறைவருகை எதிர்பார்க்கும் மானுடவாழ்வு
(ஆஆ..... இறை வருகை எல்லார்க்கும் மகிழ்வினைத் தருகின்றதே)
இறைவருகை எதிர்பார்க்கும்
மானுடவாழ்வு
ஒற்றுமையாய் பயணம் தொடரும்
நம்பிக்கை வாழ்வு (2)

அமைதி என்ற மூன்றெழுத்தில்
அன்பு நிலவுமே - (2) அதில்
பற்றுக்கொண்ட இறைமக்கள்
பயணம் தொடருமே - (2)
   - இறை வருகை

லலலல லா.. (3) லா லலலல லா... - 2

சரணம் 1
பெண் 
விண்ணாளும் மகிபன் இன்று
மண்ணாள வந்தாரே
பாரெங்கும் இன்பம் பொங்கும்
நற்செய்தியானாரே
பற்றுகொண்ட மக்கள் வாழ்வில்
நம்பிக்கையானாரே
படைப்புகள் அனைத்தும் இங்கு
அகமகிழ்ந்து பாடுதே

ஆண்
இறை மைந்தன் இயேசுவின் வரவால்
இருள் இங்கு போனதே
இறைவருகை அமைதி இன்று
அனைவருக்குமானதே

அனைவரும் 
அனைவரும் கூடி மகிழ்வுடன் பாடி
அன்பரின் வரவைப் போற்றுவோம்
பரமனின் அன்பை பரிவுடன் பகிர்ந்து
திருவுறவில் என்றும் வாழுவோம் (2)
- இறை வருகை எதிர்பார்க்கும்

லல்லல்ல லா லாலால லலலா - 3
லால லால லா லலலா (2)

சரணம் 2
பெண் 
சமயங்கள் கடந்த கடவுள்
நம் இறைவர் ஒருவரே
அவர் நம்முள் ஒளியாய் வந்து
உதிக்கின்ற தருணமே
வேற்றுமைகள் களைந்து நாமும்
இறையன்பில் மகிழவே
இறை மைந்தன் இயேசு இந்த
புவி மீதில் வந்தாரே

ஆண்
இறைவருகை அனைவருக்கும்
அன்பினை பொழிந்ததே
பிரிவினை தடைகள் அகன்று
எல்லைகள் விரிந்ததே

அனைவரும் 
அன்பினில் கலந்து இன்பமாய் இணைந்து
இறைவனின் வழியில் வாழவே
சமயங்கள் மறந்து இதயங்கள் திறந்து
அன்பின் மொழிகளில் பாடவே (2)

இறைவருகை எதிர்பார்க்கும்
மானுடவாழ்வு
ஒற்றுமையாய் பயணம் தொடரும்
நம்பிக்கை வாழ்வு

அமைதி என்ற மூன்றெழுத்தில்
அன்பு நிலவுமே - (2) அதில்
பற்றுக்கொண்ட இறைமக்கள்
பயணம் தொடருமே - (2)
பாடல்: திருமிகு. டயானா (BD IV)
பண்: அருட்பணி. வி. ஷீலா டைட்டஸ்


30. திருமறைப்பாடம்
திருமிகு. கோமதி பிரின்சி
எபேசியர் 2:8-9

31. English Song
GO TO HIM IN BETHLEHEM
Go to Him in Bethlehem
Go to Him in Bethlehem

Shepherds lift your eyes; see the angel's come with heaven's glory
All through your lives, you will go and tell this wondrous story
How the angels came to you, to announce the Holy truth
That a child is born, and he is Christ the Lord

Go to Him in Bethlehem, see this mighty wonder
Go to Him in Bethlehem, see the holy child
Worship Him in Bethlehem, and bow down in praise
He is Christ the Lord. He is Christ the Lord

Shepherds, see the child. Tell the people all the angels told you
Stay with him awhile. Let the holy presence come enfold you
You will celebrate the day, when the angels showed the way
You will shout with joy that, He is Christ the Lord

Go to Him in Bethlehem, see this mighty wonder
Go to Him in Bethlehem, see the holy child
Worship Him in Bethlehem, and bow down in praise
He is Christ the Lord. He is Christ the Lord

O come, let us adore Him
O come, let us adore Him
O come, let us adore Him
O come, let us adore Him

O come, and go to Him in Bethlehem, see this mighty wonder
Go to Him in Bethlehem, see the holy child
Worship Him in Bethlehem, and bow down in praise
He is Christ the Lord. He is Christ the Lord

English Song
O COME TO MY HEART, LORD JESUS
Thou didst leave Thy throne and Thy kingly crown,
When Thou camest to earth for me;
But in Bethlehem's home was there found no
room For Thy holy nativity.

O come to my heart, Lord Jesus,
There is room in my heart for Thee.
O come to my heart, Lord Jesus,
There is room in my heart for Thee.

Heaven's arches rang when the angels sang,
Proclaiming Thy royal degree;
But of lowly birth didst Thou come to earth,
And in great humility.

The foxes found rest, and the birds their nest
In the shade of the forest tree;
But Thy couch was the sod, O Thou Son of
God, In the deserts' of Galilee.

Thou camest, O Lord, with the living word
That should set Thy people free;
But with mocking scorn, and with crown of thorn,
They bore Thee to Calvary.

O come to my heart, Lord Jesus,
Thy cross is my only plea.
O come to my heart, Lord Jesus,
Thy cross is my only plea.

When the heavens shall ring, and the angels sing,
At Thy coming to victory,
Let Thy voice call me home, saying
"Yet there is room,
There is room at my side for thee.

"And my heart shall rejoice, Lord Jesus,
When Thou comest and callest for me.
And my heart shall rejoice, Lord Jesus, When
Thou comest and callest for me.

32. திருப்பணிக்கொடைப் பாடல் (Offertory Song)
(எழுந்து நின்று)
தாளம்: ஆதி தாளம் 
ராகம்: பெகாக் / தியாகு ராகம்
கண்டேனென் கண்குளிர - கர்த்தனை
இன்று கண்டேனென் கண்குளிர (2)

கொண்டாடும் விண்ணோர்கள்
கோமானைக் கையிலேந்திக் (2)
- கண்டேன் 

1. பெத்தலேம் சத்திர முன்னணையில் - 2
உற்றோருக் குயிர்தரும்
உண்மையாம் என் ரட்சகனை (2)
   - கண்டேன் 

2. தேவாதி தேவனை தேவ சேனை - 2
ஓயாது ஸ்தோத்திரிக்கும்
ஒப்புநிகர் அற்றவனை (2)
   - கண்டேன் 

3. பாவேந்தர் தேடிவரும் பக்தர் பரனை - 2
ஆவேந்தர் அடிதொழும் அன்பனை
என் இன்பனை நான் (2)
   - கண்டேன் 

4. முத்தொழிற் கர்த்தாவாம் முன்னவனை - 2
இத்தரை மீட்க எனை
நடத்தி வந்த மன்னவனைக் (2)
   - கண்டேன் 

5. மண்ணோர் இருள் போக்கும் மா மணியை - 2
விண்ணோரும் வேண்டிநிற்கும்
விண்மணியைக் கண்மணியை (2)
   - கண்டேன் 

6. அண்டினோர்க் கண்புருவாம் ஆரணனை - 2
கண்டோர்கள் கலிதீர்க்கும்
காரணனை பூரணனைக் (2)
   - கண்டேன் 

7. அன்னையாம் கன்னியும் ஐயனுடன் - 2
முன்னறி யாப்பசுவின்
புல்லணையில் உன்னழகைக் (2)
   - கண்டேன்

33. திருப்பணிக்கொடை இறைவேண்டல் (Offertory Prayer)
அருள்பணி.முனைவர். பீட்டர் சிங்
நிதி ஒருங்கிணைப்பாளர்

34. பாடல் 
பற்றுறுதி பயணத்தில்
ஜும் சிக்கா (க்கு சிக்கா-3) - 4

பற்றுறுதி பயணத்தில்
படைப்புகளை நடத்திடவே
பரமனே இறங்கி வந்தார்
படைப்புகளின் நடுவினிலே
ஜும் சிக்கா (க்கு சிக்கா-3) - 2 (2)

சரணம் 1
சடங்குகளை உடைத்து
சமத்துவம் படைத்தவரே
சமூக மறுமலர்ச்சி
வரைந்திட வந்தவரே

நாயக வணக்கத்திலே
மயங்கிப்போன உலகத்திலே
நசுங்கிய உயிர்களுக்கு
நியாயம் செய்ய வாருமையா (2)
மீண்டும் வாரும் புரட்சியாளரே
போராட கற்றுத்தாருமே (2)

ஜும் சிக்கா (க்கு சிக்கா-3) - 2

ஏலேலோ ஏலே ஏலே ஏலேலோ - 4
ஹொய்யாரோ ஹொய்யாரோ - 2
ஹொய்யாரே ஹொய்யர ஹொய்யாரே - (2)

சரணம் 2
சமாரிய பெண்ணால்
சாதியத்தை உடைத்தவரே
சாமானிய மக்களின்
சமத்துவ நாயகரே

ஆணவ கொலைகளும் தான்
அடுக்கடுக்காய் நடக்குது
மாய்ந்து போன உயிர்களுக்கு
நீதி எங்கே கிடைக்குது (2)
மீண்டும் வாரும் புரட்சியாளரே
போராட கற்றுத் தாருமே (2)

பற்றுறுதி பயணத்தில்
படைப்புகளை நடத்திடவே
பரமனே இறங்கி வந்தார்
படைப்புகளின் நடுவினிலே (2)

🤵ஏலேலோ ஏலே ஏலே ஏலேலோ - 4
👰ஜும் சிக்கா (க்கு சிக்கா-3) - 2
பாடல்: திருமிகு. K. இம்மானுவேல் (BD II)
பண்: திருமிகு. சாலஸ் வாலண்டைன் ஜோசப் (BD IV)
திருமிகு. ஜெஃப்ரி எலிஸ் (BD II)


35. திருமறைப்பாடம்
திருமிகு. அருண்குமார் பீட்டர்
தூய யோவான் 4:25-26

36. பாடல் 
பாமாலை எண் 59
ஒப்பில்லா திரு இரா
1. ஒப்பில்லா – திரு இரா
இதில்தான் மா பிதா
ஏக மைந்தனை லோகத்துக்கு
மீட்பராக அனுப்பினது
அன்பின் அதிசயமாம்
அன்பின் அதிசயமாம்

2. ஒப்பில்லா – திரு இரா
யாவையும் ஆளும் மா
தெய்வ மைந்தனார் பாவிகளை
மீட்டு விண்ணுக்குயர்த்த தம்மை
எத்தனை தாழ்த்துகிறார்
எத்தனை தாழ்த்துகிறார்

3. ஒப்பில்லா – திரு இரா
ஜென்மித்தார் மேசியா
தெய்வ தூதரின் சேனைகளை
நாமும் சேர்ந்து பராபரனை
பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம்
பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம்


37. திருமறைப்பாடம்
Miss. R. Ngathingchon
எபேசியர் 2:8-9


38. அருளுரை (Sermon)
அருள்பணி. முனைவர். மார்கிரேட் கலைச்செல்வி
மேநாள் முதல்வர், தமிழ்நாடு இறையியல் கல்லூரி

39. 6 (Thanksgiving)




அருள்பணி. முனைவர். ஆட்லின் ரெஜினாபாய்




நடத்துநர் : ஆண்டவரே, திரு அவையின் பற்றுறுதியை நிலைபெறச்




செய்பவரே. நாங்கள் உம்மீது பற்றுறுதி கொண்டிட தொடக்க முதல் வரலாற்றை வழிநடத்தி வந்திருக்கின்ற உமது மாண்புக்காகவும், எமது பற்றுறுதிப் பயணத்திலே நாங்கள் தொடர்ந்து நடந்து உம்முடன் இணைந்து இந்த உலகத்தில் செயல்படுவதற்கு விழிப்புணர்வைத் தருவதற்காக உமக்கு நன்றி செலுத்துகின்றோம் .




திரு அவை: ஆண்டவரே, எங்கள் நன்றியை ஏற்றருள்வீராக




திருமிகு. பிளஸ்சி ஜார்ஜினா




நடத்துநர் : அமைதியான சமத்துவ சமுதாயம் உருவாக்கிட




அமைதியின் அரசராய் இவ்வுலகில் வந்தவரே, அமைதியின் அரசை நிறுவிட எங்களைத் தெரிந்து கொண்ட உம்முடைய இரக்கத்திற்காக, கல்லூரி வழியே நாங்கள் யாவரும் இணைந்து பெற்று வரும் நல்ல விழுமியங்களுக்காக உமக்கு நன்றி சொல்லுகின்றோம். கிறிஸ்து எமக்குள் வாழ்கின்றார், இறைமகன் மீது கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் நாங்கள் இவ்வுலகில் வாழ்கின்றோம் (கலாத்தியர் 2:20) என்பதனடிப்படையில் எங்களைக் கூட்டிச் சேர்த்திருக்கும் உம் அருளுக்காக உமக்கு நன்றி செலுத்துகின்றோம்.




திரு அவை: ஆண்டவரே, எங்கள் நன்றியை ஏற்றருள்வீராக.




40. மன்றாட்டு (Intercession)




அருள்பணி. ஞானபிரபு




நடத்துநர் : ஆண்டவரே, எங்கள் பற்றுறுதிப் பயணத்தில் எங்கள் காலத்துத் திரிபுக் கோட்பாடுகளை இனங்காணவும் அவற்றை விட்டு விலகி மெய்யான பற்றுறுதியில் திகழவும்,உம்மோடு நின்று தளராமல் செயல்படுவதற்கு உதவியாக எம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வழியாக கற்றுக் கொண்ட முன்மாதிரியைப் பின்பற்றி வாழ்ந்திட எங்களுக்கு அருள்புரிவீராக.




திரு அவை: ஆண்டவரே, எங்கள் பற்றுறுதியைத் திடப்படுத்துவீராக.




முனைவர். இவாஞ்சலின்




நடத்துநர் : ஆண்டவரே, எங்கள் மீட்பரின் பிறப்பை மகிழ்ச்சியுடன்




நினைவு கூருகின்ற நாங்கள் அவர் வழியாக வெளிப்படுத்தப் பெற்றுள்ள இறையாளுகையின் மதிப்பீடுகளைப் பின்பற்றுவதிலே தான் உண்மை மகிழ்ச்சியுள்ளது என்பதை உணர்ந்து பற்றுறுதியில் நிலைபெற்றிடவும் அதில் உறுதிபெற்றிடவும் வழி நடத்துவீராக.




திரு அவை:




ஆண்டவரே, எங்கள் பற்றுறுதியைத் திடப்படுத்துவீராக.




அருள்பணி. க.லு.டே. இராஜசேகரன்




நடத்துநர் : சமத்துவத்தையும் சமூக நீதியையும் விரும்புகின்ற கடவுளே




இந்தியாவில் பெண் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் எதிராக வன்கொடுமைகள் நடைபெறாமல் இருக்கவும், பெண் குழந்தைகளுடைய பாதுகாப்பை உறுதிபடுத்தக் கூடிய சட்டங்கள் இருந்தும் சட்டங்களை மீறி இவர்களுடைய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படாத நிலை காணப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இப்படிப்பட்ட சூழல் அகன்று அனைவரையும் மதிக்கக்கூடிய மனிதர்களாக நாங்கள் அனைவரும் உம்முடைய வருகையை உறுதிப்படுத்த இறைவா உம்மிடம் மன்றாடுகின்றோம்.




திரு அவை:




ஆண்டவரே, எங்கள் பற்றுறுதியைத் திடப்படுத்துவீராக.




முனைவர். கிறிஸ்டி பெமிலா




நடத்துநர் : வாழ்வளிக்கும் வல்ல கடவுளே, அதிகாரத்தினாலும்,




ஆணவப் படுகொலையினாலும், தங்களுடைய வாழ்வை இழந்து தவிக்கின்ற, விளிம்பு நிலை மக்களுக்காக உம்மிடம் மன்றாடுகின்றோம். ஒடுக்கப்பட்ட மக்களுடைய வாழ்வு மேம்படவும், அவர்களுடைய வாழ்வு உறுதிப்படவும், சமுதாயத்திலும், திருச்சபையிலும் உள்ள ஏற்றத்தாழ்வுகள் முழுவதுமாக அகற்றப்பட்டு, இனம், மொழி, சமயம் சாதி கடந்து மனித மாண்பு சிதையா வண்ணம் மனிதம் பாதுகாக்கப்பட உம் அருள் வேண்டி மன்றாடுகின்றோம்.




திரு அவை: ஆண்டவரே, எங்கள் பற்றுறுதியைத் திடப்படுத்துவீராக.




அருள்பணி இன்பராஜ் ஜெயக்குமார்




நடத்துநர் : பொருளாதார சீர்திருத்தங்கள் என்ற பெயரில் எங்களை




ஆளுவோர் மேற்கொள்கின்ற உலகமயமாதல் போன்ற திட்டங்கள் அடித்தட்டு மக்களின் வாழ்வினை அழிப்பதாகவும், அவர்களின் வாழ்வாதாரங்களைச் சுரண்டுவதாகவும் அமைகின்றன. இப்படிப்பட்ட திட்டங்களிலிருந்து அடித்தட்டு மக்களின் வாழ்வு பாதுகாக்கப் படவும், அவர்களின் வாழ்வாதாரம் உறுதி செய்யப்படவும் உம் உதவி நாடி மன்றாடுகின்றோம்.




திரு அவை: ஆண்டவரே, எங்கள் பற்றுறுதியைத் திடப்படுத்துவீராக.




41. ஆண்டவர் கற்பித்த இறைவேண்டல் (Lord's Prayer)




விண்ணகத்திலுள்ள, எங்கள் பெற்றவரே உம் திருப்பெயர் தூயதெனப் போற்றப்படுக. உம் அரசு வருவதாக உம் திருவுளம் விண்ணுலகில் செய்யப்படுவது போல மண்ணுலகிலும் செய்யப் படுவதாக. எங்களுக்கு வேண்டிய உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் பொறுத்தருளியதுபோல் எங்கள் கடன்களை எங்களுக்குப் பொறுத்தருளும். நாங்கள் சோதனைக் குட்படும்போது தீமையினின்று எங்களை மீட்டருளும். ஆட்சியும், ஆற்றலும், மாட்சியும் என்றென்றைக்கும் உம்முடையவையே. ஆமென்.




42. அறிவிப்பும் பரிசு வழங்குதலும் (Announcement and Distribution of Prize)




43. நிறைவு இறைவேண்டல் (Closing Prayer)




பற்றுறுதியின் வழியே எங்களை ஒருங்கிணைத்து வழிநடத்துகின்ற அன்பின் கடவுளே! இன்னிசை வழிபாட்டின் வழியே கிறிஸ்து பிறப்பை நாங்கள் நினைவு கூறவும், பிறப்பின் மகிழ்ச்சியை மற்றவர்களுக்கு அறிவிக்கவும் நீர் கொடுத்த இந்த வாய்ப்புக்காக நன்றி செலுத்துகிறோம். ஒரே பற்றுறுதிச் சமுதாயமாக இணைந்து உம் வழியில், வாய்மையோடு நாங்கள் பயணிக்க உம் ஆற்றல் தாரும். இவ்வழிபாடு முழுவதும் உம் இருத்தல் எங்களோடு இருந்தமைக்காகவும், அதை நாங்கள் உணர்ந்தமைக்காகவும் உமக்கு நன்றி படைக்கின்றோம். இவை அனைத்தையும் எங்களுக்காக மனு உருவான இயேசு கிறிஸ்துவின் வழியே வேண்டுகிறோம் எங்கள் அன்பின் கடவுளே ஆமென்...




44. இறைவாழ்த்து (Benediction)




முரண்பாடுகள் நிரம்பிய இந்த உலகப் பயணத்தில் நம்மோடு இருந்து பயணிப்பவராகிய கடவுளின் அன்பும், இப்புவியில் நீதி, உண்மை, சமத்துவம் நிலைநாட்ட மானுடராய் அவதரித்த இயேசுகிறிஸ்துவின் அருளும் தன்னலமற்ற பற்றுறுதி கொண்ட வாழ்க்கையை நோக்கி நம்மை வழிநடத்தி உரமூட்டும் தூய ஆவியாரின் கூட்டுறவும் நம் அனைவரோடும் இந்நாளும் எந்நாளும் நிலைத்திருப்பதாக. ஆமென்.




45. நிறைவுப் பாடல் (Closing Song)




பல்லவி




மங்களம் சதா ஜெய மங்களம் வேதா




எங்கள் துங்கமங்களர்க்கு மங்களம் சதா




சரணங்கள்




1. அணைத்துக்காத்தவா உல கனைத்தும் படைத்தவா இணையில்லா பிதாவுமக்கு மங்களம் சதா




நேசநாயகா மாசில்லாத சுதனுமக்கு மங்களம் சதா 2. யேசுநாயகா எம்




3. ஞானவாரியே - திரு வானமாரியே ஆனந்தசுத்தாவியுமக்கு மங்களம் சதா




ஞா.சாமுவேல்




46. வாழ்த்துப் பாடல் ( Closing Song)




ஐயா உங்களுக்கு அம்மா உங்களுக்கு கிறிஸ்மஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள்-2 இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்




பாடகர்க் குழுவினர்




முதலாம் ஆண்டு மாணாக்கர்




1. க.அபிநாஸ்




2. டே.பெனிட்டா எப்சிபா




3. பிஜு எஸ் சாம்




4. ப.காலேப் மார்க் இவான்ஸ்




5. யோ.கிறிஸ்டி




6. வி.கிளிண்டன் சாம்




7. ரா.டேனி சாமுவேல்




8. தா.எபனேசர் ரத்தினராஜ்




9. மெ.இளங்கோ




10.ம.கிதியோன்




11. ரா.கிளாடிஸ்




12. கெ.ஜேக்கப் ஸ்டேன்லி




13. ரா.ஜனனி கிறிஸ்டினா




14. செ.ஜெபக்குமார்




15. க.ஜெபஸ்டின் மேஷாக் மரியராஜ்




16.தே.ஜே.ஜோசப் தேவப் பிரியம்




17.ம.லூக் கிராசன்




18. ச.ஓவியா




19.ஜெ.பாக்கியராஜ்




20. ர.பிரவீன்




21. ஜா.ரோஸ்லின் ஷைனி




22. மு.சாமுவேல்




23. ம.சோபனா




24. க.ஸ்டீபன்




25. தே.வசந்தம்




இரண்டாம் ஆண்டு மாணாக்கர்




1. இரா.கேர்லின் பிரின்ஸி




2. லி.கார்லி கிரஸண்ட் ராஜ்




3. பி.மோ.டயமண்ட் லாயல் மனோவா




4. மு.கிரேஸ் ஸ்டென்சியா




5. தே.ஐன்ஸ்டின் கேபா




6. சா.ஜோஷ்வா டேனியல்




7. ஹ.ஜாய்ஸ் ராஜாமணி




8. பா.மேஷாக்




9. ஜா.ரெனோ ஜூனியா




10. ம.சாம் பிரகாஷ்




11. உ.சரன்




12. ஆ.சீத்தாலெட்சுமி




13. ஜே.சுகீர்தி மலர்




சிறப்பு பயிற்சி மாணாக்கர்




1. ஜெபர்சன்




இணையர் இறையியல் கல்வி மாணாக்கர்




1. கோமதி பிரின்சி




வளாகக் குழுவினர்




1. இவாஞ்சலின்




2. கெட்சி




Name of English Choir Team




M.Th. I




1. Milton Mark M.R.




2. M. Christu Mohan




3. Rev.Samuel Santhaseelan




4. Thongkholet Haokip




5. Rev.S.G Sun Pradeep




6. Rev. V. Godwin




7. Chirmi Shaiza




8. V. Lalthuammawia




9. Hropathai Zawsi Hlychho




M.Th. II




1. Merlin S




2. Rev.Senfilstar Nongkynrih




3. Rev.Godwin Joyson




4. M. Evangelin Shaliva




5. A. Payini




6. Rev.M. Girija




7. Seikholet Mate




8. L. Nguljemhao Khongsai




வளாகக் குழந்தைகள்




டேரீஸ் பெல்சியா 1.




2. சு. ஒ. ஈவ்ளின் ஜோகன்னா




3. பா. ஜெபி ஆஸ்லின்




4. கோ.ஆரோன் ஜோஸ்வா




5. ஜா.ஜெஸினா




6. தேஜஸ் லாஜி சாக்கோ




7. சோபியா ரட்சண்யகுமாரி




8. அஜய்




9. ஜூடி பிரைசி .ஆ




10. மாக்சி ஜோர்டன் .ஆ




11. ச. ஜெ. டேலின் டியோனா




12. ச. ஜெ. டேலின் பியோனா




13. பியோனா ஆஷிகா




14. அநுக்கிரகா




15. ரா. ஆக்னஸ் எலிசபெத்

16. யாழினியன்




17. ஜோவானா ஜாய்




18. லெவினா கிறிஸ்லின்




நாட்டியக் குழுவினர்




1. அ.அருண் பிரகாஷ்




2. பி.இசபெல்லா எஸ்தர்




3. இம்மானுவேல் க




4. ஓவியப்பாவை பி




5. காட்வின் சத்ய ஜேம்ஸ் தி




6. கார்த்தி ர




7. கிறிஸ்டோபர் க.ஜ




8. குளோரி தேவசெயல் ஜெ




9. சாமுவேல் கமலநாதன் இரா




10. சாம் கமலேசன் அ




11. ம.டயானா




12. தீபன் ஜெ




13. தேவ ஞான காட்சன் ஜீ




14. பிளஸ்சி ப




15. பெட்டினா கோஸ் சா




16. பொன் சாம் கிறிஸ்டோபர் ஈ




17. மனோஜ் குமார் ஜெ.ப




18. மெல்வின் ஜெரோம் ஜெ




19. மேத்யூ செ




20. ஜான் சக்தி சு




21. ஜான் மெல்கிசேதேக




22. ஜெரோம் இராஜா து




23. ஜெரோம் லிவிங்ஸ்டன் தே




24. ஜேசன் ஞானக்குமார் ஞா.ஜெ




25. ஜோஸ்வா ச




இசைக்கருவிகள் இசைப்போர்




இசை விசைப்பலகை




திருமிகு. வி.சாலஸ் வேலண்டைன் ஜோசஃப், திருமிகு. எட்வின், திருமிகு.ஜெப்ரி எல்லீஸ்




நரம்பிசைக் கருவி




திருமிகு.வி.சாலஸ் வேலண்டைன் ஜோசஃப், திருமிகு.லீவன்சிங் யுலாங்கடி




இசைப்பலகை




: திருமிகு.ர.பிரின்ஸ் தாம்சன், (முன்னை மாணவர்) திருமிகு.ரா.டேனி சாமுவேல்




தபேலா




: திருமிகு.பா.காருண்யா ஒபதியா பால், திருமிகு.அமேரியா டைட்டஸ்




பாடகர்க் குழு பயிற்றுநர்




: அருள்பணி.வி.ஷீலா




அருள்பணி.அகஸ்டி ஞான காந்தி




அருள்பணி.அகிலன்




அறிவர். விக்டர்




முனைவர். ஜான்சன் கிறிஸ்துதாஸ்




அருள்பணி. நெல்சன்




நாட்டியக் குழு பயிற்றுநர் :




:




அருள்பணி.ஜீவரத்தினம் திருமிகு. ஜான் சக்தி




பாடகர்க் குழு பொறுப்பாளர்:




அருள்பணி.வி.ஷீலா




ஒளிப்படம், நேரடி ஒளிபரப்பு ஆவணமாக்கல்:




திருமிகு.மனீஷ் குமார்




திருமிகு. சாம் கமலேசன்




கூண்டு விளக்கு ஆயத்தப்பொறுப்பு:




அருள்பணி. முனைவர். பீற்றர் சிங்




M.Th and D.Th. Students




ஒலி, ஒளி அமைப்பு




: திருமிகு. கலைச்செல்வன், திருமிகு.மலைச்சாமி




தேநீர் விருந்தோம்பல்




: முனைவர். கிறிஸ்டி பெமிலர், திருமிகு. பிளஸ்சி ஜார்ஜினர், திருமிகு.ராஜேஸ்குமார், திருமிகு. ஆலன் கிளார். திருமிகு.எலிஜா பிரின்ஸ், திருமிகு.வில்சன் பிரேம்குமார். திருமிகு. தேவ் ஆனந்த். திருமிகு.அமிர்தராஜ்




விருந்தினர் வரவேற்பு :




அருள்ணி.க.லு. டே.இராஜசேகரன், அருள்பணி.இன்பராஜ் ஜெயக்குமார், திருமிகு. மேத்யூ, திருமிகு. மெல்வின், திருமிகு. பெட்டினா கோஸ், திருமிகு. யேசுராஜா, திருமிகு.ஸ்டாலின், திருமிகு.ஈஸ்டர் ராஜ், திருமிகு. ஃபிலிப் சீகன் பால்




ஊர்வலம்




:




அருள்பணி. ஞானபிரபு & மூன்றாமாண்டு மாணாக்கர்




தட்டச்சு உதவி




:




திருமிகு. வைரமாலா, திருமிகு. மனோ ஃப்ராங்க்ளின்




வழிபாடு ஒருங்கிணைப்பு :




அருள்பணி.முனைவர். ஐவி சிங், அருள்பணி. ஷூலா, அருள்பணி. முனைவர். டென்சன் எக்டர், திருமிகு.மனோ ஃப்ராங்க்ளின்




Stage Decoration & Arrangements, Pandhal, Stage & Stage Chairs




Faculty In-Charge




Rev.Dr.Ivy Singh




Rev. Dr. Tenson Hector




Mr.Livingstone Arputharaj




Students




Gamaliel Nixon




Alex Clinton




Emmanuel




Dhinakaran




Enose Arthur




Jarlee




Vasanthakumar




Godson




Stalin




Joel




Arunkumar




Nelson




Julie




Jebarson




Xavior Jebaraj




Registration




Faculty In-Charge




Rev.Dr.Adlin Reginabai




Ms.Ngathingchon




Students




Arun kumar Peter




Manoj Kumar




Raveendran




Sam Austin Jebas




Entrance Arch Decoration




Faulty in Charge:




Rev. Dr. Peter Singh,




Dr. Evangelin




Students : M.Th and D.Th




Re-arrangement of Chairs and Decoration after the program




Students




Pon Sam




Alfin




Daniel Vedharaj




George




Ezekiel Prasannakumar




Benny Sam




Jackson Pinks




இன்னிசை வழிபாட்டுக்கு I வருகை தந்திருக்கும் அனைவருக்கும் எங்கள் இதயம் கனிந்த கிறிஸ்து வருகை, கிறிஸ்து பிறப்பு, الا புத்தாண்டு வாழ்த்து! カレ




கல்லூரிக் குடும்பத்தினர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.