Type Here to Get Search Results !

Critic Service | Peace in a Violent Environment | வன்முறைச் சூழலில் அமைதி | தோ. ஜார்லி |

தமிழ்நாடு இறையியல் கல்லூரி
அரசரடி, மதுரை - 16.

திறனாய்வு வழிபாடு 2025 - 2026

செம்பொருள்:
வன்முறைச் சூழலில் அமைதி

Theme:
Peace in a Violent Environment

வழிபாடு நடத்துபவர்:
    திருமிகு. தோ. ஜார்லி

திறனாய்வு மாணவர்:
    திருமிகு. இரா. ஜூலி ஜெபராணி

திறனாய்வு ஆசிரியர்:
    திருமிகு. முனைவர். ஜே. கிறிஸ்டி பெமிலா

நாள்: 19.11.2025 (புதன் கிழமை)
நேரம்: காலை 06:00 மணி
இடம்: கிறித்தரசர் வழிபாட்டுமனை


வாழ்த்தும் வரவேற்பும் (Greeting and Welcome)
மூவொரு கடவுளின் திருப்பெயராலே இத்திறானய்வு வழிபாட்டிற்கு வருகை தந்திருக்கும் உங்கள் யாவரையும் அன்போடு வாழ்த்தி வரவேற்கிறேன்.

விழிபட அழைப்பு (Call to Worship)
"அமைதி ஏற்படுத்துவோர் பேறு பெற்றோர். ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்" (மத்தேயு 5:9) என்ற திருமொழிக்கேற்ப அமைதியைத் தரும் கடவுளை நோக்கி வழிபடுவோம் வாரீர்!

தொடக்க இறைவேண்டல் (Opening Prayer)
அன்பும், அருளும் நிறைந்த இறைவா, நாங்கள் வாழுகின்ற இந்த உலகம் பல நிலைகளில் வன்முறையால் நிறைந்துள்ளது. வன்முறைச் சூழலில் அமைதியை எப்படிக் கட்டுவது என்று நாங்கள் இந்த வழிபாட்டின் வழியாக சிந்திக்க இருக்கின்றோம். இந்த வழிபாட்டில் உம்மை நோக்கி போற்றி பாடுகின்ற பாடல்கள், படிக்க இருக்கின்ற திருமறைப் பகுதிகள் சிந்திக்க இருக்கின்ற திருமொழிகள் இவை அனைத்திலும் உமது இருத்தல் நிலையை உணர நீர் எங்களுக்கு உதவிபுரியுமாறு மீட்பர் இயேசு கிறிஸ்துவின் வழியாக வேண்டிக் கொள்கிறோம். எங்கள் பெற்றவராம் கடவுளே. ஆமென்

போற்றிப்பாடல்
(Song Of Praise) புத்தெழுச்சிப் பாடல் எண் 342
அல்லேலூயா கர்த்தரையே ஏகமாய்த் துதியுங்கள்
அவர் நடத்தும் செயல்களெல்லாம் பார்த்தோரே துதியுங்கள்
வல்லமையாய் கிரியை செய்யும் வல்லோரைத் துதியுங்கள்
எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும் இயேசுவைத் துதியுங்கள்

பல்லவி
இராஜாதி இராஜனாம் இயேசுராஜன்
பூமியில் ஆட்சி செய்வார்
அல்லேலுயா அல்லேலுயா
தேவனைத் துதியுங்கள்

தம்புரோடும், வீணையோடும் கர்த்தரைத் துதியுங்கள்
இரத்தத்தினால் பாவங்களைப் போக்கினார் துதியுங்கள்
எக்காளமும், கைத்தாளமும் முழங்கிடத் துதியுங்கள்
எக்காலமும் மாறாதவர் இயேசுவைத் துதியுங்கள்
- இராஜாதி

பிள்ளைகளே, வாலிபரே தேவனைத் துதியுங்கள்
வாழ்வதனை அவர் பணிக்கே கொடுத்து நீர் துதியுங்கள்
பெரியவரே, பிரபுக்களே தேவனைத் துதியுங்கள்
செல்வங்களை இயேசுவுக்காய் செலுத்தியே துதியுங்கள்
- இராஜாதி
- சாம் டி கமலேசன்

பிழை உணர அழைப்பு: (Call to Confession)
"வன்முறையாளர்களும், பாவிகளும் ஒருங்கே அழிந்தொழிவார்கள், ஆண்டவரைப் புறக்கணிப்போர் அனைவரும் இல்லாதொழிவர்" (எசாயா 1:28) என்ற திருமொழிக்கேற்ப வன்முறை எண்ணங்களையும், ஆண்டவரை புறக்கணிக்கும் செயல்களையும் விட்டு மனந்திரும்ப, நம் பிழைகளை கடவுளிடத்தில் அறிக்கை செய்வோம் வாருங்கள்.

பிழை அறிக்கை (Confession of Sins) அமர்ந்த நிலையில்
குடும்ப உறவுகளை உருவாக்கிய அன்பின் இறைவா, உறவுகளுக்குள் பிரிவினையாலும், ஒருவரை ஒருவர் சரியாக புரிந்து கொள்ளாமலும், பிறரின் கருத்துகளுக்கு மதிப்பளிக்காமல், கடவுளின் அன்பை பிரதிபலிக்காமல் வாழ்ந்து, குடும்பத்தில் வன்முறைச் சூழலை உருவாக்கும் எங்கள் இழிநிலையை எண்ணி மனம் வருந்துகிறோம் இறைவா.

இசை

அறவாழ்வைக் கற்றுக்கொடுக்கும் நல்ல கடவுளே, அறவாழ்வை மறந்த பாலியல் தாக்குதல்கள், சுரண்டல்கள், சமுதாயத்தில், பெண்களுக்கு எதிரான குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், ஊழல்கள், திருச்சபையில் ஏற்றத்தாழ்வுகள் போன்றவற்றைக் கண்டும் காணாததுபோல் இருந்துள்ள எங்கள் இழி நிலையினை எண்ணி மனம் வருந்துகிறோம் இறைவா.

இசை

ஒன்றினைக்கும் வல்ல கடவுளே, ஒரே குமுகாயமாக வாழ்ந்துவரும் நாங்கள், எங்களுக்குள் இருக்கின்ற பிரிவினைகள், மேட்டிமையான சிந்தனைகள், ஒருவருக்கொருவர் எதிராக பேசும் பேச்சுகள் மூலம் வன்முறைச் சூழலை உருவாக்கும் எங்கள் இழிநிலையை எண்ணி மனம் வருந்துகிறோம் இறைவா.

(நாம் நமது தனிப்பட்ட பிழைகளை அறிக்கை செய்வோமாக)

பிழை மன்னிப்பின் உறுதி: (Absolution)
"அவர் மனம் வருந்துவோரைத் தம்பால் ஈர்த்துக்கொள்கிறார், நம்பிக்கை இழந்தோரை ஊக்குவிக்கிறார்" (சீராக்கின் ஞானம் 17 : 24) என்ற திருமொழிக்கேற்ப கடவுள் தாமே நம்முடைய பிழைகளை மன்னித்து, நம்மை ஊக்கப்படுத்தி, நிலைநிறுத்தி மெய்வாழ்வின் கரையில் சேர்ப்பாராக.

திருமறைப் பாடங்கள் (Scripture Reading)
1 சாமுவேல் 24: 1-12
I Samuel 24:1-12

உரோமையர் 12:14-21
Romans 12:14-21

தூய மத்தேயு 5:38-48
St. Mathew 5:38-48

சிறப்புப் பாடல் (Special Song)
பல்லவி
வாழ்க்கை என்னும் பயணத்திலே
வன்முறை நிறைந்த சூழலிலே
அமைதிய நீயும் நிலைநாட்டு - ஆ
நம்ம வாழ்க்க தான் சிறப்பாகும்
    - வாழ்க்கை

விட்டுக்கொடுத்து வாழ்வதினால்
கெட்டு ஒன்றும் போவதில்லை
உள்ளத்தில் பகையை பதியவைத்தால்
பாழாய்ப் போகும் நம் வாழ்க்கை
    - வாழ்க்கை

வன்முறை உள்ள உலகத்தில்
வல்லவரின் துணை நின்று
நல்ல செயல்கள் நீ செய்தால் நம்
நாடும் வீடும் நலம் பெறுமே
- வாழ்க்கை
பாடல்: தோ.ஜார்லி
பண் : சாலஸ் வேலண்டைன் ஜோசப்
தேவியல் இளையர் நான்காம் ஆண்டு

அருளுரை (Sermon)
தலைப்பு: வன்முறைச் சூழலில் அமைதி
(Peace in a violent Environment)

 பற்றுறுதி அறிக்கை (Affirmation of Faith) (தழுவியது)
படைப்புகள் அனைத்தும், அமைதி வாழ்வு வாழ வழிநடத்தும் படைப்பாளராம் கடவுளை நம்புகிறோம். அமைதியை மனு குலத்தில் நிலைத்திட செய்ய தூய ஆவியின் ஆற்றலினால் கன்னி மரியின் வழியாய் வந்த உம் மகன் இயேசு கிறித்துவை நம்புகிறோம், உம் மக்களின் விடுதலைக்கென்று அமைதியைக்கான வன்முறையினால் பிலாத்துவின் நாள்களில் சிலுவையில் பட்ட பாடுகளை நம்புகிறோம், தம்மை பலியாகத் தந்து, மறித்து, அடக்கம் செய்யப்பெற்று மூன்றாம் நாள் உயிர்தெழுந்து, வன்முறையை வென்றார் என நம்புகிறோம், பெற்றவராம் கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்து, வன்முறையாளர்களுக்கும், அமைதியை ஏற்படுத்துவோருக்கும் நடுத்தீர்க்க திரும்ப வருவார் என நம்புகிறோம், அமைதிக்கு அடித்தளமிட்டு வழிநடத்தும் தூய ஆவியாரை நம்புகிறோம், அமைதியே எங்கள் வாழ்வும், மூச்சும் என்று கூட்டுறவில் இணைந்திருக்கும் தூயோர் பொதுத் திருச்சபையும், பிழைபொறுத்தலும், உடன் உயிர்ப்பும், மெய் வாழ்வினையும் நம்புகிறோம். ஆமென்.

நடத்துநர்:
நாம் செய்த இந்த பற்றுறுதியில் நிலைத்திருந்து வன்முறை சூழலில் அமைதியை நிலைநாட்ட கடவுள் நமக்கு அருளும் ஆற்றலும் தருவாராக. ஆமென்

நன்றியும் மன்றாட்டும் (Thanks giving and Intercessory Prayer)
நன்றி செலுத்துவோம்
நமது கல்லூரியில் கடந்த இரண்டு வாராங்களாக நடைப்பெற்ற MCS, BCS, DipCS போன்ற தொலைதூர கல்விக்கான தேர்வுகள் சிறப்பாக நடைப்பெற்றதற்காகவும், மாணவர்கள் சிறப்பாக தேர்வுகள் எழுதியதற்காகவும், அவர்கள் பயணம் பாதுகாப்பாக அமைந்ததற்காகவும் இறைவா உமக்கு நன்றி படைக்கிறோம்.

கடந்த 15, 16 ஆம் தேதிகளில் நடைப்பெற்ற தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு சிறப்பாக நடைப்பெற்றதற்காகவும், தமிழக அரசு, அரசு பணியாளர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் 3 சதவிகித அகவிலைப்படி உயர்த்தியதற்காகவும் இறைவா உமக்கு நன்றி படைக்கிறோம்.

மன்றாடுவோம்
ஆறுதல் அளிக்கும் நல்ல கடவுளே, சவுதி அரேபியாவின் மெக்கா நகரில் இருந்து மெதினா நோக்கி உம்ரா புனித பயணம் மேற்கொண்ட பேருந்து விபத்திற்குள்ளாகி தெலுங்கானா மாநிலத்தை சார்ந்த 43 பேர் உயிரிழந்துள்ளனர், அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஆறுதல் அளிக்கவும், மீண்டும் இப்படிப்பட்ட கோர விபத்துக்கள் ஏற்படாமல் காத்துக்கொள்ளவும் இறைவா உம்மிடம் மன்றாடுகிறோம்.

பாதுகாக்கும் வல்ல கடவுளே, வருகின்ற 29.11.2025 சனிக்கிழமை அன்று எங்கள் கல்லூரியில் நடக்க இருக்கின்ற கிறிஸ்து வருகை இன்னிசை வழிபாடு சிறப்பாக நடைபெறவும், அதற்காக பயிற்சியில் ஈடுபட்டுள்ள மாணாக்கர், ஆசிரியர்கள் அனைவரையும் சோர்வுகள் அனுகாமல் பாதுகாத்து வரும்படியாகவும் இறைவா உம்மிடம் மன்றாடுகிறோம்.

இவையனைத்தையும் இறைமகன் இயேசுகிறித்துவின் வழியாக வேண்டுகிறொம் எங்கள் அன்பின் நல்ல கடவுளே.

ஆண்டவர் இயேசுகிறிஸ்து கற்பித்த இறைவேண்டல் (Lord's Prayer)
விண்ணுலகிலிருக்கிற எங்கள் தாயும் தந்தையுமாகிய கடவுளே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக. உமது ஆட்சி வருக, உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவதுபோல் மண்ணுலகிலும் நிறைவேறுக. இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளது போல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீயோனிடமிருந்து எங்களை விடுவியும். ஆட்சியும், வல்லமையும், மாட்சியும் என்றென்றும் உமக்கே. ஆமென்.

ஒப்படைப்பு (Dedication)
யுபிலி அரசரடி புத்துயிர்ப் பாடல் எண் : 154
அமைதியில் இறைவனைக் காணுவோம்
அமர்ந்தே அவர் அன்பைப் பூணுவோம்
சுமைகளை அவர் பதம் போடுவோம்
சோர்வுகள் நீங்கியே வாழுவோம்
- மெ.தாமஸ் தங்கராஜ்

இறைவாழ்த்து (Benediction)
படைப்புகள் அனைத்தும் அமைதியுடன் வாழ்வதை விரும்பும் படைப்பாளராம் கடவுளின் அன்பும், தம் வாழ்வின் வன்முறைகள் ஏற்பட்ட சூழலிலும் தமது சீடர்களுக்கு அமைதியைக் கற்றுக் கொடுத்த இயேசு கிறிஸ்துவின் அருளும், அமைதியின் துாதுவர்களாக நம்மை உரமூட்டி மாற்றும் தூய ஆவியாரின் வழிநடத்துதலும் நம் அனைவரோடும் அனைத்து நாள்களிலும் நின்று நிலவுவனவாக. ஆமென்.

நிறைவுப் பாடல் (Closing Song)
கீர்த்தனை எண் 317
அனுக்ரக வார்த்தையோடே - இப்போது
அடியாரை அனுப்புமையா
மனமதில் தயவுறும் மகத்துவபரனே
வந்தனம் உமக்காமென்.

நின்திரு நாமமதில் - கேட்ட
நிர்மலமாம் மொழிகள்
சந்ததம் எமதகம் மிக பலனளித்திடச்
சாமி நின்னருள் புரிவாய்

தோத்திரம், புகழ், மகிமை, - கீர்த்தி,
துதிகனம் தினமுமக்கே
பாத்திரமே, அதிசோபித பரனே
பாதசரண் ஆமென்
- ச.ஜெ.சிங்

நன்றி அறிதலான இதயதோடு அனைவரும் இணைந்து சொல்லுவோம்
என் உயிரே ஆண்டவரைப் போற்றிடு. என் முழு உள்ளமே அவரது திருப்பெயரை ஏத்திடு. என் உயிரே ஆண்டவரைப் போற்றிடு. அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே. ஆமென்.

அனுப்புதல் (Sending Out)
நடத்துநர்
வன்முறை சூழலில் அமைதியை உண்டாக்கும் ஆண்டவர் உங்களோடு இருப்பாரக

திருஅவை
அவர் உமதாவியோடும் இருப்பாராக

நடத்துநர்
வன்முறைச் சூழலில் அமைதியை ஏற்படுத்தும் கருவியாக செயல்படுவோம் என்ற உறுதியுடன் புறப்பட்டுச் செல்வோமாக

திருஅவை
கடவுளின் திருப்பெயராலே. ஆமென்..

வழிபாட்டில் கலந்து கொண்ட, உதவி செய்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரவித்துக்கொள்கிறேன்.
Thank You


Peace In the Context of Violence
The topic given to me for this criticism service in "Peace in the Context of Violence". This is going to be a topical sermon centralizing the theme given. Violence is a phenomenon where someone is being affected physically as well as mentally. Violence manifests itself in many forms, which includes physical violence, psychological violence, violence against women and violence in a relationship. Violence befalls in a family, society and even between the nations.

Factors like poverty, economic imbalance, violating human rights, anger, depression, envy, greed, which impacts justice and equality, there is an outburst of violence. In Hebrew violence is known as 'Hamas' on n and in Greek 'Bla'. The term violence in the Bible Is Initially connoted in Genesis 6:11.

We should stand against the occurrences and the Ideologles which instigates the violence and not against the individual. In the context, peace is used as a word cognate with war and violence. In Hebrew peace in known as Shalom and in Greek Ειρήνη Elrini. Mother Theresa Is a great example of how we should uphold peace in the midst of violence. In this violent conditions, Mother Theresa established peace through love, because our anger can pave way to violence.

Through our curriculum, Dr. Christy Femila taught us that, seeking peace through forgiveness, reconciliation, and repentance is a powerful act against violence, rather than repeatedly augmenting and wounding the scars that arise when conflict occurs through violence. Now, let us reflect on three brief appellations based on the scripture portions we have read and heard about how peace can be built in a violent environment.

1. Peace on Virtue's Path (1 Samuel 24: 1-12).
Goilath the Palestine stood before the people of Israel, threatening, challenging, and mocking them. When the Israelites saw him, they all fled in great fear. Then, for the sake of the people of Israel and to put an end to Saul's rebellion, David courageously went and defeated Goliath. He later marries Saul's daughter and becomes a close friend of Saul's son, but Saul was

looking to take David's life. Later David flees and stays in the wilderness, afraid of Saul. When Saul heard this news, he gathered three thousand men from all over Israel and went to look for David in the wilderness of En-gedi.

Saul went to the opposite side of the rock and entered a cave there to take a bath. David and his men were hiding inside the cave for fear of Saul. And the men of David said to him, "Here is the day of which the Lord said to you, 'Behold, I will give your enemy into your hand, and you shall do to him as it shall seem good to you.' Then David arose and stealthily cut off a corner of Saul's robe (1Samuel 24:4).

David feared God and, because of his adherence to God's word that he would not kill anointed one, he restrained his men and prevented violence from occurring. In this violent circumstance, Saul sees David and weeps aloud, realizing hismistake. My dear beloved brothers and sisters, there are many things happening in every stage of our lives that oppress us, crush us, and hinder our progress. Violence is not the solution to violence.

2. Peace In Love's Way (Romans 12: 14-21).
Love has three different meanings in Greek - Eros, Philia and Agape. In this epistle reading, the love of God, the love of Christ and the love of the spirit in mentioned. In these verses Paul refers to human love and God's love as the heart of human love.

This scripture portion speaks about the relationship that believers of God should have with the outside world and the love they should show to them. Paul also mentions the kind of love we should have towards God and with the people, that is unconditional and selfless love. We are called to manifest our love not only to the ones who are close and favourable to us, but also to the ones

who hurt, and hurting us. In Amos 5:15 and Psalms 97:10, it says to hate evil and seek good. Love is seen as the foundation for maintaining human relationships. During the corona pandemic and in events like natural disasters, we can see the humanity that has shown love to everyone, regardless of Hindu or Islam.

In this scripture portion, love is not to be contained within a family, but also for others, who are suffering and needy, being hospitable to those who are in daily needs, and we are called to live a life of well-being without retaliating.

3. Peace through Warmth (Matthew 5:38-48).
In the Gospel portion, Jesus connotes the words from the first testament, knowing that they create a violent environment among people, and teaches them to act in a kind way. Instead of eye for an eye and a tooth for a tooth, he says, not to resist an evildoer. Through this, he teaches us the love of God. In Exodus 22:21, "You shall not wrong a sojourner or oppress him, for you were sojourners in the land of Egypt.", the non-Jews are not to be oppressed, rather, the ones who deserve justice and love.

But in today's context, we need to think about how people in Tamil Nadu view the people from the northern state of India. We should be the people who can love everyone and share love in different dimensions.

Third Year Experience.
Conclusion
The peace that all humans desire varies according to the circumstances. For every action there is an equal and opposite reaction, and that is the lesson of Jesua Christ-do not repay evil for evil. Being created in the image of God, we must stand with God and find a way to end violence and establish God's peace. As we manifest qualities such as love, justice, mercy and peace toward others through our commitment, we will become like our heavenly father and thus remain complete in the word and way of Jesus Christ.

God weeds out violence from us. The extension of the thought of Jesus calls us to remove the root of violence that arises from human thinking. Violence does not come from outside; it comes from within. Let us prepare our hearts and remove violent thoughts and reap peace in abundance

- V. Salus Valentine Joseph
BD. IV

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.