Type Here to Get Search Results !

Critic Service | Affirming the Worth of Girl Child | பெண் குழந்தைகளின் மதிப்பை உறுதிப்படுத்துதல் | த. ஜார்ஜ் | Jesus Sam

தமிழ்நாடு இறையியல் கல்லூரி
அரசரடி,மதுரை 16.

திறனாய்வு வழிபாடு 2025 - 2026

செம்பொருள்:
பெண் குழந்தைகளின் மதிப்பை உறுதிப்படுத்துதல்

Theme:
Affirming the Worth of Girl Child

வழிபாடு நடத்துபவர்:
    திருமிகு. த. ஜார்ஜ்

திறனாய்வு மாணவர்
    திருமிகு. சி. மனிஷ் குமார்

திறனாய்வு ஆசிரியர்:
    அருட்பணி. வே. இன்பராஜ் ஜெயக்குமார்

நாள்: 12.11.2025 (புதன் கிழமை). துலை (ஐப்பசி) 27
நேரம்: காலை 06:00 மணி
இடம்: கிறித்தரசர் வழிபாட்டுமனை


சிந்தனைக்கு
பெண் குழந்தைகள் நெஞ்சில் கடவுளின் இதயம் துடிக்கிறது.
- புனித. அன்னை தெரசா.

பெண் குழந்தை கல்வி பெறாமல் சமத்துவம் சாத்தியமில்லை கல்வியே சுதந்திரத்தின் முதற்கல்.
பெண்களுக்குச் சம உரிமை வழங்காமல் ஒரு நாடு முன்னேற முடியாது.
- டாக்டர். அம்பேத்கர்.

பெண்கள் சமுதாயத்தின் உயிர் நரம்பு அவர்களின் பங்களிப்பு இல்லாமல் மனிதகுலம் முழுமையடையாது.
- செயின்ட் ஜான் பால். 2

என் தந்தைக்கு கடவுளால் கொடுக்கப்பட்ட துணை மட்டுமல்ல அவருடைய வழிகாட்டி அவருடைய வாழ்விலும் வார்த்தையிலும் மிக உயரமான நிலைக்கு வழி நடத்தியவர் என்தாய்.
- நதியான்சின் கிரகோரி.

வாழ்த்தும் வரவேற்பும் (Greetings and Welcome)
பெற்றவர் மைந்தர் தூய ஆவியாரின் திருப்பெயராலே ஆமென். திறனாய்வு வழிபாட்டிற்கு வருகை தந்திருக்கும் உங்கள் அனைவரையும் இயேசு கிறிஸ்துவின் இனிய திருப்பெயரினாலே அன்போடு வாழ்த்தி வரவேற்கிறேன்.

வழிபட அழைப்பு (Call to Worship)
"சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள், அவர்களைத் தடுக்காதீர்கள், ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே உரியது." (மாற்கு 10:14) இத்திருமொழிக்கேற்ப சிறுபிள்ளைகள் மீது கரிசனையுள்ள ஆண்டவரை வழிபடுவோம் வாருங்கள்.

தொடக்க இறைவேண்டல் (Opening Prayer)
அஞ்சாதே நான் உன்னுடன் இருக்கிறேன், கலங்காதே, நான் உன் கடவுள் (எசாயா 41:10) என்று நம்பிக்கை கொடுத்து பெலப்படுத்தி வாழ்வுகொடுக்கும் வல்ல கடவுளே, நீர் தந்த இந்த வழிபாட்டுச் சூழலுக்காக உமக்கு நன்றி படைக்கிறோம், இந்த வழிபாட்டின் அனைத்துக் கூறுபாடுகளிலும், குறிப்பாக பெண் சிறார்களின் வாழ்வையும், மாண்பையும் உறுதிப்படுத்தும் வழிபாடாக அமையவும், அவர்களின் மதிப்பினை உணர்ந்து இவ்வுலகினில் அவர்களோடு இணைந்து பயணிக்கவும் ஆற்றல் தாரும், இவை அனைத்தையும் இறைமகன் இயேசு கிறித்துவின் வழியே இறைஞ்சுகிறோம் எங்கள் அன்பின் கடவுளே. ஆமென்.

போற்றிப் பாடல் (Song of Praise) கீர்த்தனை எண் 4
யாவரும் எழுந்துநின்று பாடுவோம், (ஒளியேற்றல் நடைபெறும்)
சீர்திரியேக வஸ்தே நமோ நமோ நின்
திருவடிக்கு நமஸ்தே நமோ நமோ

பார்படைத்தாளும் நாதா
பரம சற்பிரசாதா
நாருறுந் தூயவேதா நமோ நமோ நமோ
- சீர்

தந்தைப் பராபரனே நமோ நமோ எமைத்
தாங்கி ஆதரிப்போனே நமோ நமோ
சொந்தக் குமாரன் தந்தாய், சொல்லரும் நலமீந்தாய்
எந்தவிர் போக்குமெந்தாய் நமோ நமோ நமோ
- சீர்

எங்கள் பவத்தினாசா நமோ நமோ புது
எருசலேம் நகர்ராசா நமோ நமோ
எங்கும் நின் அரசேற, எவரும் நின் புகழ்கூற
துங்க மந்தையிற் சேர நமோ நமோ நமோ
- சீர்

பரிசுத்த ஆவிதேவா நமோ நமோ
திட பலமளித் தெமைக்காவா நமோ நமோ
கரிசித்துத்தா நற்புத்தி, கபடற்ற மனசுத்தி
திருமொழி பற்றும்பக்தி நமோ நமோ நமோ
- சீர்
ஞா.சாமுவேல்

பிழை உணர அழைப்பு (Call to Confession) அமர்ந்த நிலையில்
"கொடியவர் தம் வழிமுறையையும், தீயவர் தம் எண்ணங்களையும் விட்டு விடுவார்களாக, அவர்கள் ஆண்டவரிடம் திரும்பி வரட்டும்" (எசாயா 55:7) என்ற திருமொழிக்கேற்ப நாம் ஆண்டவரிடம் நெருங்கி செல்ல, நம் பிழைகளையும், தீய எண்ணங்களையும் அறிக்கை செய்து விட்டு விடுவோம் வாருங்கள்.

பிழை உணர்தல் (Confession of sins)
நடத்துநர்
சமுதாயத்தில் பெண் குழந்தைகள் விற்கபடும்போதும், அவர்களை ஒடுக்கும்போதும், பாலியல் துன்புறுத்தும்போதும், குழந்தைகளைக் கடத்தும்போதும் நாங்கள் குரல் கொடுக்காததை எண்ணி மனம் வருந்துகிறோம் இறைவா.

திரு அவை
இரங்கும் இரங்கும் கருணை வாரி ஏசு ராசனே -பவ நாசநேசனே

நடத்துநர்
விளிம்புநிலையில் உள்ள பெண் குழந்தைகளின் நியாயத்திற்கு செவிகொடாமல், அவர்களுடைய மனம் வருந்துகிறோம் இறைவா. கருத்துக்களுக்கு வாய்ப்புக் கொடுக்காமல் இருந்தமைக்காக

திரு அவை
இரங்கும் இரங்கும் கருணை வாரி
ஏசு ராசனே -பவ நாசநேசனே 

(நாம் நம்முடைய தனிப்பட்ட பிழைகளை அறிக்கை செய்வோம்)

பிழை மன்னிப்பின் உறுதி (Absolution)
"கிறிஸ்து இரத்தம் சிந்தி தம் அருள்வளத்திற்கு ஏற்ப நமக்கு மீட்பு அளித்துள்ளார், இம்மீட்பால் குற்றங்களிலிருந்து நாம் மன்னிப்புப் பெறுகிறோம்." (எபேசியர் 1:7) என்ற திருமொழியின்படி பெண் குழந்தைகளுக்கு எதிராக நாம் அறிக்கை செய்த நம் பிழைகளையும், நம் தனிப்பட்ட குற்றங்களையும் நமக்கு மன்னித்து, கடவுள் நம்மை நிலைவாழ்விற்கு நேராக வழி நடத்துவராக. ஆமென்.

திருமறைப் பாடங்கள் (Scripture Readings)
எண்ணிக்கை 27:1-11
(Numbers 27:1-11)

திருத்தூதர்பணி: 21:7-14
(Acts 21: 7-14)

தூய மாற்கு :- 5:35-43
(St.Mark 5: 35-43) (நாடக வடிவில்)

சிறப்பு நிகழ்வு (Special Event)

அருளுரை (Sermon)
தலைப்பு: பெண்குழந்தைகளின் மதிப்பை உறுதிப்படுத்துதல்

பற்றுறுதி அறிக்கை (Creed)
விண்ணையும் மண்ணையும் படைத்த அனைத்து ஆற்றல் பொருந்திய பெற்றவராகிய கடவுளை நம்புகிறோம். அவர்தம் ஒரே மைந்தராகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவையும் நம்புகிறோம். அவர் தூய ஆவியாராலே கன்னி மரியாவிடம் கருக்கொண்டு பிறந்தார். பொந்தியு பிலாத்துவின் காலத்தில் பாடுபட்டு சிலுவையில் அறையப்பெற்று. இறந்து அடக்கம் செய்யப்பெற்றுப், பாதாளம் இறங்கினார். மூன்றாம்நாள் இறந்தோரிடையே இருந்து எழுந்தருளினார். விண்ணகம்ஏறி அனைத்து ஆற்றலும் பொருந்திய பெற்றவராம் கடவுளின் வலப்பக்கம் வீற்றிருக்கிறார். அவ்விடத்திலிருந்து உயிர் உள்ளோரையும், இறந்துவிட்டோரையும் நடுத்தீர்க்க வருவார். தூய ஆவியாரையும் நம்புகிறோம். பொதுவாக இருக்கிற தூய திருச்சபையும், தூயோரின் கூட்டுறவும், பிழைபொறுப்பும், உடல் உயிர்ப்பும், மெய்வாழ்வும் உண்டென்று நம்புகிறோம். ஆமென்.

நன்றியும் மன்றாட்டும் (Thanks Giving and Intercessory Prayer) அமர்ந்த நிலையில்
நன்றி செலுத்துவோம்
படைப்பாளராம் கடவுளே, சோலைமலை பொறியியல் கல்லூரி மாணவி பிரவீனா என்பவர், பன்னாட்டுப் பூப்பந்துப் போட்டிக்கு இந்தியாவின் சார்பில் விளையாட தேர்வாகி சாதனை படைத்துள்ளார். பெண் குழந்தையின் மதிப்பு சமுதாயத்தில் உயர்வடைந்து வருவதற்காக இறைவா உமக்கு நன்றி செலுத்துகிறோம்.

மகளிர் உலகக்கோப்பை மட்டைப்பந்து விளையாட்டுத் தொடரில் இந்திய மகளிர் அணி முதல்முறையாக வெற்றிபெற்று ஆண்கள் அணிக்கு இணையாக மகளிர் அணியையும் விரிவுபடுத்த ஐ.சி.சி முடிவெடுத்துள்ளது. பெண்களின் மதிப்பை உறுதிப் படுத்துவதற்காக இறைவா உமக்கு நன்றி படைக்கிறோம்.

மன்றாடுவோம்
வாழ்வழிக்கும் வல்ல கடவுளே, பிலிப்பைன்ஸ் நாட்டில் கல்மேகி சூறாவளிப் புயல் தாக்கியதால் இதுவரை பலர் உயிரிழந்துள்ளனர், இருபது இலட்சத்திறகும்மேலான மக்கள் பாதிக்கபட்டுள்ளனர், இவர்களின் வாழ்வு சீரடையவும், சீக்கிரத்தில் இயல்பு நிலைக்குத் திரும்பவும் இறைவா உம்மிடம் மன்றாடுகிறோம்.

குழந்தைகளின் நல்வாழ்வை விரும்புகின்ற கடவுளே, குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு எதிராக வன்முறைகள் பல நடைபெறுகின்றன. அவ்வன்முறைக்கு எதிராக சட்டம் இயற்றப்படவும், அவர்களின் வாழ்வு காக்கப்பாடவும் இறைவா உம்மிடம் மன்றாடுகிறோம்.

இவையனைத்தையும் இறைமகன் இயேசு கிறித்துவின் வழியாக வேண்டுகிறோம் எங்கள் அன்பின் கடவுளே.ஆமென்.

ஆண்டவர் கற்பித்த மன்றாட்டு (Lord's Prayer)
விண்ணுலகிலிருக்கிற எங்கள் பெற்றவராகிய கடவுளே, உமது பெயர் தூயதெனப் போற்றப் பெறுக. உமது ஆட்சி வருக. உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல் மண்ணுலகிலும் நிறைவேறுக. இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளது போல எங்கள் குற்றங்களை மன்னியும். நாங்கள் சோதனைக்கு உட்படும்போது. தீயோனிடமிருந்து எங்களை விடுவியும். ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமக்கே. ஆமென்.

ஒப்படைப்பு (Dedication)
தந்தேன் என்னை இயேசுவே
இந்த நேரமே உமக்கே
உந்தனுக்கே ஊழியஞ்செய்ய
தந்தேன் என்னைத் தாங்கியருளும்
வே.சந்தியாகு

இறைவாழ்த்து (Benediction)
ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை மீட்டெடுக்க கரம் கொடுத்த இயேசுகிறிஸ்துவின் அருளும், சமஉரிமையைப் பெற்றுக் கொடுக்கும் கடவுளின் அன்பும், ஏற்றத்தாழ்வுள்ள உலகில் கூட்டுறவை ஏற்படுத்தும் தூய ஆவியாரின் திருவுறவும் நம் அனைவரோடும் நின்று நிலவுவனவாக. ஆமென்.

நிறைவுப் பாடல் (Closing Song)
கீர்த்தனை எண் 320 (எழுந்துநின்று)

மங்கலம் சதா ஜெய மங்கலம் வேதா
எங்கள் துங்கமங்களர்க்கு மங்கலம் சதா

அணைத்துக்காத்தவா - உலகனைத்தும் படைத்தவா
இணையில்லா பிதாவுமக்கு மங்கலம் சதா

யேசுநாயாகா எம்நேசநாயகா
மாசில்லாத சுதனுமக்கு மங்கலம் சதா

ஞானவாரியே - திருவானமாரியே
ஆனந்தசுத்தாவியுமக்கு மங்கலம் சதா
ஞா.சாமுவேல்

நன்றி அறிதலான இதயத்தோடு அனைவரும் இணைந்து சொல்லுவோம்
என் உயிரே ஆண்டவரைப் போற்றிடு
என் முழு உள்ளமே அவரது திருப்பெயரை ஏத்திடு
என் உயிரே ஆண்டவரைப் போற்றிடு
அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே. ஆமென்.

அனுப்புதல் (Sending Out)
நடத்துநர்
ஆண்டவர் உங்களோடு இருப்பாராக

திருஅவை
அவர் உமதாவியேடும் இருப்பாராக

நடத்துநர்
பெண்குழந்தைகளின் மதிப்பை உறுதி செய்வோம் என்ற உறுதியுடன் புறப்பட்டுச்செல்வோம்.

திருஅவை
கடவுளின் திருப்பெயராலே ஆமென்.

இந்த வழிபாட்டில் கலந்துக் கொண்ட உங்கள் யாவருக்கும், எனக்கு உதவி செய்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி....


TOPIC: AFFIRMING THE WORTH OF THE GIRL CHILD
The Church of South India celebrates Children's Day on November 11, the birth anniversary of India's first Prime Minister, Jawaharlal Nehru, In view of this, the theme for today's reflection is "Affirming the worth of the Girl Child".

January 24 is celebrated as the International Day of the Girl Child in India. October 11 is celebrated as the International Day of the Girl Child. A child is the beauty of a family, the hope of a society, and the enemy of the country. For many years, girl children have been neglected and their rights have been denied. Therefore, it is necessary to ensure the dignity of the girl child.

A girl child is the beacon of happiness in a family and the foundation of a society's development, but for too long, the world has forgotten her value. Some have considered her inferior, some have silenced her voice, but in the eyes of God, a girl child is a rare creation.

When God created Eve as a helper for Adam, he said, "This at last is bone of my bones and flesh of my flesh" (Genesis 2:25). That is, the message is that woman is equal to man and of equal value in the sight of God.

Even looking at the history of the Bible, God fulfilled His plans through the lives of girls Sarah. Miriam, Ruth, Esther, and Mary all of whom started as girls and changed history through the grace of God.

Today, we are called to reaffirm that truth: A girl child is a gift from God, her life is an instrument that reveals the glory of God. Therefore, we must become a society that respects every girl child from God's perspective and nurtures her dreams. With this introduction, I invite you to reflect on today's message.

1. Jesus touches the life of a little girl. (Mark 5:35-43)
In this passage from the Gospel of Mark, we find a very moving incident. When the news comes that the ruler's daughter has died, Jesus speaks to her. "Do not be afraid, only believe" (v. 36), and he goes to his house. There he raises the girl to life, saying, "Talitha cumi" (Little girl, I say to you, arise!).

This event reveals the value of a girl's life and the depth of Jesus' love for her. Girls are precious in the eyes of God.

She was twelve years old (v. 42), in the prime of life. People thought she was no longer useful. But Jesus did not abandon her. What we learn from this that no girl is small in God's eyes.

Even though she was small, God could use her life as an instrument to glorify her. At a time when no one was willing to touch her, Jesus went to her. He took her by the hand.

Jesus saved the girl's life, defying societal ostracism and religious restrictions. This is the message for today: Girls are loved, cared for, and respected. When Jesus said to her, "Get up," she immediately got up and walked. The people were filled with wonder.

God gives a new beginning and new hope to the lives of girls. The father's faith brought his daughter back to life. When parents have faith in their daughter, the Lord works miracles for them.Building a girl child based on her dreams and talents is the way to glorify God's name.

2. God restores the rights of girls (Numbers 27:1-1)
An important event in the history of the people of Israel is recorded in these verses the story of the daughters of Zelophchad. At that time, daughters had no right to inheritance. The family's property was in the hands of men only. But five daughters Mahlah, Noah, Hoglah, Milcah, and Tirzah- came before Moses to seek justice so that their father's name would not be erased. Their courage changedhistory.

The daughters of Zelophehad spoke out against societal disapproval, and they did not hold back their voices. One question they asked, "Why should our father's name be blotted out, since he had no sons?"

Girls are not meant to be silent; they are meant to speak up for justice, with the awareness that they are created in the image of God.

When Moses took the matter to God, the daughters of Zelophehad were judged (V7). This passage is God's judgment affirming the worth of the girls.

God declared the voice that human society ignored as fair, so the voice of the girl child is heard by God, and her fairness is respected by God.

God's judgment became the law of justice. That one incident became the law of the land of Israel. If not for the sons, the daughters would inherit the freedom of the father. (V8)

This is the first divine act to uphold the rights of girls. Through their lives, God instilled equality, justice, and respect in society.

Even today, God raises the same voice in our society. The right of the girl child is not a matter of human love, but of God's justice. Even today, in many places, girl children are seen in a degraded state, but the Lord says, "You are precious, you are my child."

3. God raises the worth of girls (Acts 21:7-14)
As the apostle Paul nears the end of his missionary journey, he visits Philip's home. Philip's four daughters are filled with the Spirit of God. They have the Spirit of prophecy, which means they have the power to speak the Word of God.

In many places today, the voice of girls is ignored. Their spiritual contributions are not valued, but God says, "Your sons and your daughters will prophesy" (Joel 2:28).

God insists on equality-men and women are of equal spiritual value. Our churches, families, and educational institutions must learn to value the talents and voices of girls.

The lives of Philip's daughters stand as a testimony to the value of women. They received the Spirit of God and spoke the word of God.

CONCLUSION:
A girl child is a rare gift from God. She becomes the lifeblood of a family and the light of a society. The Bible says that from the beginning, woman was created in the image of God. Genesis 1:27. This clearly states that the girl child and the boy child have equal value, but human society has many obstacles.

Assuring the dignity of the girl child must first begin in the family. Parents must raise them with love and teach them to stand up for themselves. The family must be a haven for the girl child and a land where her dreams can flourish.

Respecting the girl child is not just a social responsibility; it is a spiritual calling. God is hidden in her life. Raising her is fulfilling God's plan. May the dignity of the girl child be established in our hearts, in our families, in our churches, in our communities.

Translated By
Mr.S.Manish Kumar BD IV

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.