தமிழ்நாடு இறையியல் கல்லூரி
அரசரடி,மதுரை - 16
தலித் விடுதலை ஞாயிறு
வழிபாட்டு முறை
DALIT LIBERATION SUNDAY
God says 'NO' to Caste Discrimination but God has shown me that I should not cull ayane profana er
Acti 10:28
தேதி: 09.11.2025 / ஞாயிறு
நேரம்: மாலை 06.00
இடம்: கிறித்தரசர் வழிபாட்டு மனை
பொருள்:
“ஒருவேளை இது போன்ற நேரத்திற்கெனவே" (எஸ்தர் 4:14) ஒடுக்கப்பெற்றோர் அருள்பணியில் திருச்சபை
அழைப்பு:
தலைவர்:
காயப்பட்ட நிலத்தின் கடவுளும் புதைக்கப்பட்ட கதைகளின் கடவுளுமானவரே, வரலாறுகள் சிதைக்கப்பெற்ற குப்பையிலிருந்து எங்களை நீர் அழைத்துள்ளீர். உயிரற்ற எலும்புகளுக்குள்ளே உம் மூச்சுக்காற்றை மீண்டும் ஊதி இதுவே காலம்என்று கூறுவீராக
மக்கள்:
கடவுளே சிதைந்த கைகளுடனும் உருக்குலைந்த நல்லெதிர்பார்ப்புடனும் நாங்கள் எழுகின்றோம். இத்தகு நேரத்திற்காகவே நீர் எங்களை அளித்துள்ளீர்.
தலைவர்:
எங்களின் தடுமாறிய மனவுறுதியிலிருந்து அம்பேத்கரின் எழுதுகோல் இருக்கிறது. ரோகித் வெமுலாவின் அழுகுரலிலிருந்து முசல்லாம்மாவின் பாடல்களிலிருந்து தண்ணீர்களையும் சொல்லையும் சுமந்துநிற்கும் ஒவ்வொரு அன்னையரிடமிருந்து உம் ஆவி அசைவதாக
அனைவரும்:
ஆண்டவரே இத்தகைய நோக்கத்துடைய தலித் மக்களின் இறையவரே, உம்முன் வந்துள்ளோம். எழுந்திட, நிறைவேற்றிட, கட்டியெழுப்பிட வந்துள்ளோம். இப்போதே எங்களிடையே உமதாவி அசைவாடுவதாக. சாதியத்தின் சங்கிலிகளும் அச்சத்தின் சங்கிலிகளும் தகர்க்கப்பெறுவனவாக. இக்கூடுகை உம் உறைவிடமாவதாக ஆமென்.
போற்றிப்பாடல்:
பூமியில் வாழுற மக்களே
தொடக்க இறைவேண்டல்
புறந்தள்ளப் பெற்றோரின் கடவுளே,அமைதி நிலையிலிருந்து பாடல்கள் பாடிட எங்களை அழைத்துள்ளீர். நம்பிக்கையிழந்த நிலையிலிருந்து நம்பிக்கை பெறவும், ஒடுக்குதலின் குப்பையிலிருந்து மாண்பின் நடனத்துக்கும் எங்களை அழைத்துள்ளீர். இத்தகையதொரு காலத்துக்காகவே நீர் எங்களை வைத்துள்ளீர். எங்கள் உள்ளத்தை வருத்தப்படுத்துவீராக. எங்கள் மனதை துணிவு கனிவு என்பவற்றால் நிரப்புவீராக, எங்கள் பற்றுறுதி உரிமை பெறட்டும். தலித் மக்களின் கடவுளே, உம் புதுப்படைப்பின் அடையாளமாக நாங்கள் கூடி வந்திருக்கும் இந்த நேரத்தை ஆக்குவீராக. ஒவ்வொருவரும் இங்கே தீண்டத்தகாதவராக அல்ல அனைவரும் அன்புக்குரியோர் தாம். ஆமென்.
மறுமொழி: நீதியின் இரக்கத்தின் கடவுளே, எங்கள் மன்றாட்டை கேட்டருள்வீராக.
முதல் கூற்று
இத்தகு காலத்திலேயே எமது ஒளி பேசட்டும்
இத்தகு காலத்திலே எமது ஒளி பேசட்டும்
இத்தகு காலத்திலே எமது ஒளி பேசட்டும் அது ஒளிர்வதாக
அது ஒளிர்வதாகஅது ஒளிர்வதாக.
இரண்டாவது கூற்று
குரல் அடக்கப்பெறும் வேளையில் எமது பாடலின் ஒலியை நாம் உயர்த்துவோம்.
குரல் அடக்கப்பெறும் வேளையில் எமது பாடலின் ஒலியை நாம் உயர்த்துவோம்.
குரல் அடக்கப்பெறும் வேளையிலே எமது பாடலின் ஒலியை நாம் உயர்த்துவோம்.
அது ஒலிக்கட்டும் அது ஒலிக்கட்டும் அது ஒலிக்கட்டும்
நன்றி செலுத்துவோம்
தலைவர்:
இத்தகைய வேளைக்காகவே கடவுளே உம்மக்களை நீர் அழைத்துள்ளீர். விளிம்பு நிலையிலிருந்தும் தெருவோரங்களிலிருந்தும் உடைந்து போன நிலங்களிலிருந்தும் எரிகிறதுமான வயல்களிலிருந்தும் நன்றியுடனும் மனவுறுதியுடனும் எழுந்திட எம்மை அழைத்துள்ளீர்
மறுமொழி:
நீதியின் இரக்கத்தின் கடவுளே எங்கள் மன்றாட்டை கேட்டருள்வீராக
மக்கள்:
எங்கள் முதுவரின் கடவுளே உமக்கு நன்றி கூறுகின்றோம். ஒடுக்குதலின் வெம்மையில் நாங்கள் நடந்தபோது எங்களுடனிருந்தீர். விடுதலையின் பாடல்களில் எங்களுடன் இணைந்து பாடினீர்
தலைவர்:
நிலத்தை உழுதிடும் கைகளுக்காக நன்றி கூறுகின்றோம். சிறிதளவு நம்பிக்கையுடன் உணர்வூட்டிய அன்னைக்காகவும் சுவர்களுக்கு அப்பாலும் காயங்களுக்கு அப்பாலும் கனிவுடன் இன்னும் நின்று கொண்டிருக்கும் சிறுவருக்காகவும் எங்கள் உலகத்தில் சிலுவையில் அறையப் பெற்ற நிலையில் உள்ள திருச்சபைக்காகவும் நன்றி கூறுகின்றோம்
மக்கள்:
உம் மூச்சுக்காற்றின் உமதாவிக்காக நன்றி கூறுகின்றோம். சாம்பலைக் கலக்கி புதிய தொடக்கங்களை உருவாக்குகின்றீர். எங்கள் துயரங்களை இயக்கமாக மாற்றுகின்றீர். எங்கள் புலம்பலிலிருந்து வாழ்வுக்கு வழி நடத்துகின்றீர். உமக்கு நன்றி.
பிழையறிக்கை
தலைவர்:
மெய்மையின் மென்மையின் கடவுளே, எங்கள் ஒவ்வொருவருடைய உள்ளஉமது சாயலிலிருந்து நாங்கள் விலகி நிற்பதற்காக வருந்துகின்றோம். வரவேற்பை நீர் விதைத்த இடத்தில் சுவர்களை கட்டி எழுப்பி விட்டோம். எங்கள் பொது வாழ்வினை கறைப்படுத்தும் சாதியத்தையும் வகுப்புவாதத்தையும் நஞ்சென வளரச் செய்து விட்டோம்.
மக்கள்:
கடவுளே எங்களை பொறுத்தருள்வீராக. வலிமைமிக்கவரைகாக்கும் எமது அமைதிநிலை ஒடுக்கப்பட்டோரோடுடன் நிற்கத்தடுக்கும்அச்சம் ஆகியவற்றுக்காக எங்களை பொறுத்தருள்வீராக.
தலைவர்:
உம் மக்களின் உடைந்த உடல்களை நினைவுப்படுத்திட எங்களை அழைத்துள்ளீர். தண்ணீர் தரவும் வழிபடவும், மதிப்பைத் தரவும், மறுத்தோரை நினைத்திட அழைத்துள்ளீர். ஆனால் கடந்தகால வலிகளினூடே நாங்கள் அப்படியே நடந்து வந்துவிட்டோம். நாங்கள் காயங்கள் ஏற்படுவதற்கு உதவிய நிலையில் அதைக் காண தவறி வேகமாகக் கடந்து செல்கிறோம்.
மக்கள்:
கடவுளே எங்களை புதுப்பியும். பூட்டப்பெற்ற எங்கள் இதயங்கள்மூடப்பட்டுள்ளன. எங்கள் பெருமை எங்களைப் பிரிக்கிறது. உம் இரக்கம் மீண்டும் எங்களை முழுமைப்படுத்துவதாக.
தலைவர்:
எங்களுக்கு நாங்களே செய்து கொண்ட தீவினைகளுக்காக வருந்தி நிற்கின்றோம். குறைவு மனப்பான்மையை ஏற்படுத்தும் பொய்களை நாங்கள் நம்பி விட்டோமே. இவை எங்கள் மன அமைதியின் பாடல்களை அற்றுப்போகச் செய்துவிட்டன. எங்கள் உளக்களிப்பைக் கட்டிப்போட்டு விட்டனவே.
மக்கள்:
கடவுளே எங்களை விடுவியும். படைப்பின்போது நீர் எங்களுக்குத் தந்த மாண்பிலே நாங்கள் எழுந்திட எங்களை விடுவியும். உம் பிள்ளைகளாக வாழ்ந்திட அன்புக்குரியவராக திகழ்ந்திடதுணிவுடையவராக நிலை பெற்றிட எங்களை விடுவியும்.
விவிலியமறைப் பகுதிகள்
பழைய ஏற்பாடு
எஸ்தர் :4:1-14
தூய லூக்கா4:16-19
பாடல்:
மனுசங்கடா நாங்க மனுசங்கடா
ஒன்னப் போல அவன போல எட்டு சானு ஒசரமுள்ள
மனுசங்கடா நாங்க மனுசங்கடா
ஒங்க தலைவர் பொறந்த நாளில் poster ஒட்டவும்
ஒங்க ஊர்வலத்துல தர்ம அடிய வாங்கி கட்டவும்
எங்க முதுகு நீங்க ஏறும் ஏணியாகவும்
நாங்க இருந்த படியே இருக்கனுமா காலம் பூராவும்
எலும்பும் சதயும் நீங்க வச்ச தீயில் வேகுது
ஒங்க சர்க்காரும் கோர்ட்டும் அதுல எண்ணைய ஊத்துது
எத எதயோ சலுகையின்னு அறிவிக்கிரீங்க
நாங்க எரியும் போது எவன் மசுர புடுங்க போனீங்க
அருளுரை
இத்தகைய காலத்துக்குரிய பற்றுறுதியறிக்கை
தொடக்கங்களின் கடவுளை நம்புகின்றேன். விண்மீன்களையும் மண்ணையும் படைத்தவர் அவரே. புழுதியிலிருந்தும் மாண்பிலிருந்தும் மக்களினங்களை படைத்தவர் அவரே. தளர்ந்துபோய் காத்திருக்கும் மக்களுக்குள் இன்றும் மனவுறுதியை ஊதுபவரும் அவரே. விளிம்பு நிலையினரின் கிறிஸ்துவை நம்புகின்றேன். ஏழையரிடையே நடந்தவர் அவர். தீண்டத்தகாதவர் எனப்பெற்றோரைத் தொட்டவர். உலகம் உடைபடும் வேளையில் அங்கே நிற்க அழைப்பவர் இவர்.. மறந்து போன இடங்களில் ஆவியை கிளர்ச்செய்யும் ஆவியாரை நம்புகின்றேன். குடிசைப் பகுதியிலும் தெருக்களிலும் அடுப்படியிலும் வகுப்பறையிலும் குரல் எழுப்பாதிருக்க மறுக்கும் மகளிரிலே, இளையோரின் கனவுகளிலே, கற்பனை செய்து பறந்திடும் சிறாரின் உரிமையிலே இருப்பவர் இவர். இத்தகைய காயத்துக்காக அடிக்கப் பெற்றிருக்கும் திருச்சபையை நம்புகின்றேன். அதிகாரம் பிடித்திடுபவரிடையே உண்மையைப் பேசிட விழுந்துக்கிடப்போரை கைப்பிடித்துத் தூக்கியெழுப்பிட சாதியக் கொடுமை எனும் விலங்குகளைத் தகர்த்திட முனையும் திருச்சபையை நம்புகிறேன். சிலரை தூயவரென்றும் சிலரை தீட்டானவரென்றும் பிரித்திடும் எந்தவொரு அமைப்பையும் மறுக்கிறேன்.
ஒடுக்குதலிலிருந்து எழுந்து நிற்கிற வாழ்வு, இறப்பைவிட வலுவானதான அன்பு, ஒடுக்கப்படுகிற மக்கள் நடுவில் வாழ்ந்து அவர்களை விடுவித்துபுதியவானம் புதிய பூமியை உணரச் செய்யும் உயிர்த்தெழுதலை நம்புகிறேன்.
எனவே எஸ்தரின் மனவுறுதியுடன் நாங்கள் எழுகின்றோம், அம்பேத்கரின் கனவுடன், உடைவுபட்டவரின் திருச்சபையாக, துணிவு பெற்றோரின் திருச்சபையாக இந்த காலத்திற்கேற்ப திருச்சபையாக நாங்கள் எழுகின்றோம். ஆமென்.
விடுதலை, நிலம் ஆகியவற்றிற்கான ஆண்டவரின் மன்றாட்டு
(சுற்றுச்சூழலின் தலித் மக்களின் விடுதலை இறைவேண்டல்)
சாதியினால் புறம்பாக்கப்பெற்றோரின் நிலத்தின் கடவுளே. எளியஇல்லத்திலும். மாசடைந்த ஆற்றிலும் வாழ்பவரே, பல மொழிகள் பேசும் உம் பெயர் தூயது. வயல்வெளிகளில் பாடப்பெறுபவரே, எம்சிற்றூர்களிலும், உலகத்தினால்மறக்கப்பட்டவர்களால்முணுமுணுக்கப்பெறுபவரே, பள்ளத்தாக்குகளிலும், எம்நகர்களிலும் எண்ணங்களிலும் உம் விடுதலைத் திருவுளம் நிகழ்வதாக் நீதியின் உமதாட்சி வருக
தூய்மையான மண்ணிலிருந்து முளைத்து ஏற்றத்தாழ்வின்றி பகிர்தளிக்கப்பெற்ற, மாண்புக்குரிய இன்றைய உணவை எங்களுக்குத் தாரும் எங்களிடையேயுள்ள அரவமற்ற அமைதியெனும் மீறுதலைப் பொருத்தருள்வீராக. நிலத்தைப் பாழ்படுத்தும் பேராசை, உம் பிள்ளைக்ளைச் சின்னாபின்னமாக்கும் சாதியம் வெட்கமுறுமாறு, உம் அன்பின் விடுதலையில் வாழ்ந்திடக் கற்பிப்பீராக.
பேராசை ஆதிக்கம் எனும் வழியினின்று விலக்கிக் காத்தருள்வீராக. ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும்போது ஆளுகை உமதே. வல்லமையும் கூட்டொருமையும் உம்முடையவை. எக்காலத்தும் இக்காலத்தும் புதுப்பிக்கப் பெற்ற படைப்பின் மாட்சியும் உமதே. ஆமென்.
இடையீற்று மன்றாட்டு
தலைவர்:
எஸ்தர் மற்றும் ஒவ்வொரு பெயர் தெரியாத தலைமாந்தரின் கடவுளே, பயத்திற்கும் விசுவாசத்திற்கும் இடையில் ஆறுதலுக்கும் தைரியத்திற்கும் இடையிலான இடைவெளியில் நின்றிட திருச்சபை அழைக்கின்றீர். இது போன்ற காலத்தில் ஏறெடுக்கும் எமது இறைவேண்டலைக் கேட்டருள்வீராக.
மறுமொழி:
நீதியின், இரக்கத்தின் கடவுளே, எங்கள் மன்றாட்டை கேட்டருள்வீராக
தலைவர்
உம் திருச்சபைக்காக நாங்கள் மன்றாடுகிறோம். இனியேதும் அது அமைதி காத்து தன் பாதுகாப்பை நாடாமலும் மாறாக ஒடுக்கப்பட்டோருடன் நின்று நற்செய்தியின் நாடித்துடிப்பான விடுதலையை கூறியறிவிக்க அருள்வீராக.
மறுமொழி:
நீதியின் இரக்கத்தின் கடவுளே, எங்கள் மன்றாட்டை கேட்டருள்வீராக
தலைவர்:
தலித் குமுகாயத்தவருக்காக சிறாருக்காக பெண்டிருக்காக ஆடவருக்காக பல்வேறு பால்நிலை சார்ந்தோருக்காக மாண்பு மறுக்க பெறுவோருக்காக தீண்டாமை புறந்தள்ளுதல் என்கின்ற சுமையை சுமந்து நிற்கும் மக்களுக்காக மன்றாடுகின்றோம். இத்தகையோரின் கண்ணீர் சான்றுரையாகட்டும், பாடல்கள் வலிமையைத் தரட்டும். இத்தகையோரின் வாழ்வு எங்களுக்கு ஒளியாகட்டும்.
மறுமொழி:
நீதியின் இரக்கத்தின் கடவுளே, எங்கள் மன்றாட்டை கேட்டருள்வீராக
தலைவர்:
புண்பட்டுள்ள எங்கள் உலகுக்காக நிலத்துக்காக மன்றாடுகின்றோம். நஞ்சாகிப்போயிருக்கும் ஆறுகள் மலைகள் மண்டிக்கிடக்கும் நீர் நிலைகள் வறண்டுபோயிருக்கும் நிலங்கள் வேர்கள் அறுக்கப்பெறுவதால் அலறியழுது நிற்கும் காடுகள், பேராசையினால் வாழ்விடங்களை இழந்து தவிக்கும் உயிரினங்கள் யாவற்றிற்காகவும் மன்றாடுகிறோம். நாங்கள் மனம் திரும்பிடபழையநிலைக்கு கொண்டு வந்திட அனைத்து படைப்புகளுடனான குருதியுறவைப் புதுப்பித்திட மன்றாடுகின்றோம்.
மறுமொழி:
நீதியின் இரக்கத்தின் கடவுளே, எங்கள் மன்றாட்டை கேட்டருள்வீராக
தலைவர்:
எஸ்தரை போன்று தம் குரலையும் உயிரையும் பணயம் வைக்கும் பெண்டிருக்காக மன்றாடுகிறோம். சாதியமற்ற சமுதாயத்தைக் காணத் துடிக்கும் இளையோருக்காக மன்றாடுகின்றோம். வியர்வை துளிகளினால் உலக இயக்கத்தை வாழ்வித்துக் கொண்டிருக்கும் உழைப்பாளர் வேளாண்மை செய்வோர் தூய்மைப் பணியாளர் ஆகியோருக்காக மன்றாடுகின்றோம்.
மறுமொழி:
நீதியின் இரக்கத்தின் கடவுளே எங்கள் மன்றாட்டை கேட்டருள்வீராக
தலைவர்:
அதிகாரத்தில் இருப்போர் விளிம்பு நிலையிலிருக்கும் மக்களின் குரலை கேட்டிடுமாறு நடக்க உம்மிடம் மன்றாடுகிறோம். உதவிடும் மனப்பான்மையுடன்அல்லாமல் உணர்வினால் உந்தப்பெற்று செயல்பட அருள்புரியும் இத்தகையோரின் உள்ளத்தை மாற்றுவீராக. ஆண்டவரே எமது சட்டங்கள் அன்பை வெளிப்படுத்திடவும் எங்கள் திட்டங்கள் வாழ்வை காத்திடவும் அருள்வீராக
அனைவரும் இணைந்து:
ஒடுக்கப்பட்டோரின் கடவுளும் நிலத்தின் கடவுளுமானவரே எங்கள் இறைவேண்டல்களையும் எங்கள் வலிகளையும் நீதி மற்றும் மகிழ்ச்சியின் மக்களாக வாழ்வதற்கான ளங்கள் உறுதிமொழியை உம்மிடம் ஒப்படைக்கின்றோம் ஆமென்
திருப்பணிக் கொடைப் பாடல்:
இனிக்காத தேனுமில்ல
தலித் விடுதலை செயல்பாட்டுக்கான ஒப்படைப்பு:
ஒடுக்கப்பட்டோருடன் சேர்ந்து அருள்பணியாற்றும் திருச்சபை
தலைவர்:
கிறிஸ்துவில் அன்புக்குரியவராக நம் பற்றுறுதி ஒரு கோட்டை கிடையாது. அது நற் இயக்கம். நம் வழிபாடு சான்றுரைப்பாக இல்லாதவரை அது முழுமையற்ற தாகாது. எஸ்தரைப் போல அழைக்கப் பெற்றுள்ள நாம் வேறு குரலுக்காக வேறு ஒரு நேரத்துக்காக காத்திருக்க முடியாது. இப்போதே செயலாற்றிட வேண்டும். இதுவே அந்தக்காலம்.
திருச்சபை தன் வசதி வாய்ப்பின் சூழலுக்குள்ளிருந்து எழுந்து தெருக்களிலும் அழுக்குகளிலும் புரண்டு துன்புருவோருடன் தன்னை ஒருங்கிணைத்து கொள்ளட்டும். சாதியத்தை நிலைகுலையச் செய்யட்டும். திருச்சபை காயமடைந்துள்ள நிலத்தின் காயத்தை கட்டுவதாக. உழைப்பாளர் ஒவ்வொருவரின் உழைப்பையும் மதிப்பதாக
மக்கள்:
ஒடுக்கப்பட்ட மக்களின் திருச்சபையாக நாங்கள்ஆகிடுவோம். கடவுளின் விடுதலைப் பணியில் அவருடன் இணைந்து பணியாற்றிடுவோம். நேர்மையின் முகவராகிடுவோம். நல்ல எதிர்பார்ப்பினை ஏற்றி நிற்போராகிடுவோம் அதற்கான காலம் இதுவே எழுவோம் ஆமென்
நிறைவு இறைவேண்டல்:
விளிம்பு நிலையினரின் வலுவான காற்றின் கடவுளே எங்கள் பாடுகளின் பாடல்களில் எங்களைச் சந்தித்திருப்பதற்காக நன்றி கூறுகின்றோம். பற்றுறுதி என்பது பதுங்கும் இடம் கிடையாது. புனித நெருப்பு என்பதை நினைப்பூட்டியுள்ளீர். நாங்கள் திரும்பி செல்கின்றோம். எங்கள் நெஞ்சம் துணிவினால் கொழுந்துவிடுவதாக. எங்கள் மொழிநடை மாற்றத்தைப் பிறப்பிப்பதாக. எங்கள் கைகள் நீதிக்கான பாலத்தை கட்டுவனாக. எங்கள் திருச்சபைகள் புறக்கணிக்கப்பெற்றோரின் புகலிடமாக. விடுதலையின் வகுப்பறைகளாகட்டும். உலகம் தோற்றுப்போனோரின் தோட்டமாகட்டும். தன்னிடத்தில் இத்தகைய நாளுக்காக அழைக்கப் பெற்றிருப்பதை உள்ளத்தால் உணர்வோம். நாம் நிலைக் கொள்வோம். ஆமென்.
இறை வாழ்த்து
தலைவர்:
நெஞ்சுரமிக்க தங்களின் செயல்பாடுகள் ஒவ்வொன்றிலும் உங்கள் முன் தலித் மக்களின் கடவுள் செல்வாராக. நீதியின் பாதையில் நடக்கும் போது கிறிஸ்து உங்கள் பக்கத்தில் ஒவ்வொரடியிலும் உடன் நடப்பாராக. உங்களுக்குள் தூய ஆவியார் மூச்சாக, நெருப்பாக, விடுதலையாக எழுவாராக.
அனைவரும் இணைந்து
இது போன்ற நேரத்திலே இறையமைதியுடன் செல்வோம். வல்லமையுடனும் நல்லெதிர்பார்ப்புடனும் சென்று வருவோம். ஆமென்.
வழிபாட்டு முறைமை உருவாக்கம்
இந்திய திருச்சபைகளின் கூட்டமைப்பு
(NATIONAL COUNCIL OF CHURCHES IN INDIA)









