தமிழ்நாடு இறையியல் கல்லூரி
அரசரடி, மதுரை - 16.
திறனாய்வு வழிபாடு 2025 - 2026
செம்பொருள்: நவீன உலகை எதிர்கொள்ளும் கடவுளுடைய வார்த்தை
Theme: God's Word Challenges the Status Quo
வழிபாடு நடத்துபவர்
திருமிகு.செ.ஜோயல் கிறிஸ்டோபர்
திறனாய்வு மாணவர்
திருமிகு.சு.ஜெஃப்ரின் புஷ்பதுரை
திறனாய்வு ஆசிரியர்:
அருட்பணி.ஜி.ஞானபிரபு
நாள்: 03.12.2025 (புதன் கிழமை)
நேரம்: காலை 06:00 மணி
இடம்: கிறித்தரசர் வழிபாட்டுமனை
வாழ்த்தும் வரவேற்பும் (Greetings and Welcome)
மூவொரு கடவுளின் திருப்பெயரால் இத்திறனாய்வு வழிபாட்டுக்கு வருகை தந்திருக்கும் உங்கள் யாவரையும் அன்புடன் வாழ்த்தி வரவேற்கிறேன்.
வழிபட அழைப்பு (Call to Worship)
உலகத்தின் அனைத்து சப்தங்களுடனும் இணைந்து கடவுளின் அமைதிக்குள் நுழைவோம். இந்த தூய வேளையில் அவரின் இருத்தலை உணர்ந்து மனமகிழ்ந்து பணிவுடன் அவரை வணங்கி போற்றி வழிபடுவோம் வாருங்கள்.
தொடக்க இறைவேண்டல் (Opening Prayer)
அனைவரையும் ஏற்றுக்கொள்ளும் அன்பு நிறைந்த கடவுளே! இந்த காலைப் பொழுதில் எழில் மிகு இயற்கை சூழலில் நாங்கள் உம்மண்டை வந்திருக்கின்றோம் எங்களை ஏற்றுக் கொள்ளும். இந்நாளில் உம்மை வழிபட நீர் தந்த வாய்ப்பிற்காக நன்றி செலுத்துகின்றோம். இன்றைய நாளில் புதிய பட்டறிவை பெற்றுக்கொள்ள உம் அருள் தாரும். எங்களின் கடந்த கால அனுபவங்களும் வாழ்க்கையை குறித்த நம்பிக்கைற்ற சிந்தைகளும் எங்களை சோர்வடையச் செய்யும் வேளையில் உமது அருள் நிறைந்த வார்த்தைகளால் எங்களை தேற்றும். உம் மீது கொண்ட பற்றுறுதியில் நலமானதைப் பெற்றுக் கொள்ள அருள் புரியும். உலகில் காணப்படும் சவால்களை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதை தெளிவாக புரிந்து கொள்ள தூய ஆவியாரின் துணை தாரும். மேலும் இவ்வழிபாட்டில் உம் இருத்தல் நிலையை உணர்ந்து கொள்ள அருள் தாரும். இவை அனைத்தையும் இயேசு கிறிஸ்துவின் வழியாய் வேண்டிக் கொள்கின்றோம் அன்பின் கடவுளே. ஆமென்.
போற்றிப்பாடல் (Song Of Praise):- பாமாலை எண்: 61
1. பக்தரே வாரும் ஆசை ஆவலோடும்
நீர் பாரும், நீர் பாரும் இப்பாலனை;
வானோரின் ராஜன் கிறிஸ்து பிறந்தாரே!
சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
சாஷ்டாங்கம் செய்ய வாரும், இயேசுவை.
2. தேவாதி தேவா, ஜோதியில் ஜோதி,
மானிட தன்மை நீர் வெறுத்திலீர்.
தெய்வ குமாரன், ஒப்பில்லாத மைந்தன்;
3. மேலோகத்தாரே, மா கெம்பீரத்தோடு
ஜென்ம நற்செய்தி பாடிப் போற்றுமேன்;
விண்ணில் கர்த்தா நீர் மா மகிமை ஏற்பீர்!
4. இயேசுவே, வாழ்க! இன்று ஜென்மித்தீரே,
புகழும் ஸ்துதியும் உண்டாகவும்;
தந்தையின் வார்த்தை மாம்சம் ஆனார் பாரும்.
பிழை அறிக்கை (Call to Confession)
"மானிடரே! எவ்வளவு காலம் எனக்குரிய மாட்சிக்கு இழுக்கைக் கொண்டு வருவீர்கள்? எவ்வளவு காலம் வெறுமையை விரும்பிப் பொய்யானதை நாடிச் செல்வீர்கள்?" (தி.பா 4:2) என வினவுகிறார் கடவுள். வாருங்கள் தயவுப் பெருத்த கடவுளிடம் நம்முடைய பிழைகளை முழுமனத்தோடு அறிக்கை செய்வோம்.
பிழை அறிக்கை (Confession of Sins)
நடத்துநர்: எங்கள் வாழ்க்கைப் பயணத்தில் எங்களுக்கு அடுத்திருப்பவர்களின் நலனை சிறிதும் பொருட்படுத்தாமல், எங்களுடைய நலனையே கருத்தில் கொண்டு வாழ்கின்றோம். படைக்கப்பட்ட ஒவ்வொருவரிடமும் விலைமதிப்பற்ற இறை சாயல் உண்டு என்பதை மறந்த, இழிநிலையை உணர்ந்தவர்களாக எங்கள் பிழையை அறிக்கை செய்கிறோம்.
திருஅவை: எங்களை மன்னியும் இறைவா, எங்களை மன்னியும்.
நடத்துநர்: நவீன மயமாக்கப்பட்ட இந்த உலகில் சமூக ஒடுக்கு முறைகளுக்கு ஆளாகும் மக்கள், அடையாளங்களை இழந்து வாடும் மக்கள், என எவரையும் கண்டு கொள்ளாமலும், கிறிஸ்துவின் மீட்புத் திட்டத்தில் பங்கு பெறாமலும், எங்களின் பொழுதுப் போக்குகளில் (ஊடகங்களில்) ஆர்வம் காட்டி வருகின்றோம். ஆகவே உம் திரு முன்னிலையில் பிழை மன்னிப்பை பெற்றுக் கொள்ள அறிக்கை செய்கின்றோம்.
திருஅவை: எங்களை மன்னியும் இறைவா, எங்களை மன்னியும்.
(நாம் நமது தனிப்பட்ட பிழைகளை அறிக்கை செய்வோம்.)
பிழை மன்னிப்பின் உறுதி (Absolution)
நமது கடவுள் மன உருக்கம் உடையவர். நமது தீச்செயல்களை மன்னிப்பவர் பிழைகளை நினைவு கூற மாட்டேன் என்கிறார். ஆகவே நமது அழுகாறை அகற்றி உலகிற்கு பயன் கொடுக்கும் இறை மக்களாய் திகழ்ந்திட அருள் புரிவாராக. ஆமென்.
திருமறைப்பகுதி (Scripture Reading)
11 அரசர்கள் 22:1-13
II Kings 22: 1-13
எபிரேயர் 4:12-16
Hebrews 4:12-16
தூய லூக்கா 1:67-80
St. Luke 1:67-80
(அனைவரும் அமர்ந்திடுக)
சிறப்பு நிகழ்வு (Special Event)
அருளுரை (Sermon)
தலைப்பு: "நவீன உலகை எதிர்கொள்ளும் கடவுளுடைய வார்த்தை”
(Affirmation of Faith) :-(திருத்தூதுவர் பற்றுறுதி அறிக்கையைத் தழுவியது)
அனைத்து படைப்புகளுக்கும் ஆற்றல் தரும் கடவுளை நம்புகின்றோம். நவீன படைப்புகளினால் மானுடத்தின் மான்பை இழந்து தவிக்கும் மக்களை மீட்டுருவாக்கம் செய்யும் வார்த்தையாகிய இயேசு கிறிஸ்துவையும் நம்புகின்றோம். தூய ஆவியார் மூலம் கருவுற்று கன்னி மரியாளிடத்தில் பிறந்து மானுடர் மத்தியில் குடிகொண்டுள்ளார் எனவும் நம்புகின்றோம். கடவுளின் வார்த்தைகளை பிழைப்பிற்காக தவறாக போதனை செய்து மானுடர் மத்தியில் பிரிவினைகளை ஏற்படுத்தியவர்களை எதிர்த்து போராடியதால் பொந்தியு பிலாத்துவின் காலத்தில் பாடுபட்டு சிலுவையில் அறை உண்டு மரித்து அடக்கம் செய்யப்பட்டார். பெருங்குழி இறங்கி மரித்தோர்களிடமிருந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். அவர் செய்த புரட்சிகர செயல்களை நாமும் செய்வோம் என எண்ணி கடவுளிடம் அமர்ந்துள்ளார்.
கடவுளுடைய வார்த்தைகளை வியாபாரப்படுத்துவோரையும் தவறாக பயன்படுத்துவோரையும் நடுத்தீர்க்க வருவார். நவீன உலகிற்கு சவால் விடுக்கச் செய்யும் தூய ஆவியாரையும் நம்புகின்றோம். பொதுவாயிருக்கின்ற தூய திருச்சபையும், தூயோரின் கூட்டுறவும், பிழைப் பொறுப்பும், கடவுளின் வார்த்தையில் உடல் உயிர்ப்பும் மெய் வாழ்வும் உண்டென்று நம்புகின்றோம். ஆமென்.
நன்றியும் மன்றாட்டும் (Thanks Giving and Intercessory)
நன்றி செலுத்துவோம்
இன்றைய நவீன உலகில், அனைத்து துறைகளிலும் திறமைகளோடு பணி புரிபவர்களுக்காகவும், சமூக ஊடகங்களை பிறர் நலனுக்காகவும் சமுதாய நலனுக்காகவும் பயன்படுத்துகிறவர்களுக்காகவும் அவர்களுக்கு நீர் கொடுத்த ஞானத்திற்காகவும் இறைவா உமக்கு நன்றி செலுத்துகின்றோம்.
இன்று நவீன உலகில், சமுதாய வாழ்வில் கரிசனையோடு பணி செய்கின்ற திருச்சபைகள், இறையியல் கல்லூரிகள், தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள், நலம் விருபிகள் அனைவருக்காகவும் மேலும் எங்கள் தமிழ்நாடு அரசு சிறுபான்மை மக்களுக்கென நலத்திட்ட உதவிகளை அறிவித்து செயல்படுத்தியும் வருகின்றது. ஆகவே நீர் கொடுத்த இந்த நன்மைகளுக்காக இறைவா உமக்கு நன்றி செலுத்துகின்றோம்.
மன்றாடுவோம்
நாங்கள் வாழும் நவீன உலகில், தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, மானுடம் பெரும்பாலும் மன உளைச்சல், தவறாக தனிமை, அடிமைத்தனம் போன்ற சிக்கல்களில் மாட்டிக்கொண்டு தவிக்கின்றனர். இச்சிக்கல்களில் இருந்து மானுடம் விடுபடவும் நலமிகு வாழ்வில் பயணிக்கவும், தொழில்நுட்பங்களை நல்வழியில் பயன்படுத்தும் மனத்தையும் தந்தருளும் படி இறைவா உம்மிடம் மன்றாடுகிறோம்.
இயற்கையுடன் இணைந்து வாழுதல் போன்ற எண்ணங்கள் குறைந்தும், குடும்ப அமைப்புகளில் நாட்டம் குறைந்தும் நவீன வாழ்க்கை முறை என்ற பெயரில் முற்றிலும் செயற்கையை சார்ந்து வாழ்கின்ற போங்கு மானுடர் மத்தியில் காணப்படுகின்றது. இந்நிலை மாறவும், இயற்கை, குடும்பம், கலாச்சாரம், பண்பாடு, கடவுள் நம்பிக்கை போன்ற விழுமியங்களுடன் மானுடம் வாழ்வதற்கு அருள் புரிய வேண்டும் என்று இறைவா உம்மிடம் மன்றாடுகின்றோம்.
எதிர்வரும் கிறிஸ்து பிறப்பு காலங்களுக்காகவும், புதிய வருடத்திற்காகவும் உம்மிடம் மன்றாடுகின்றோம். கிறிஸ்து பிறப்பு திருநாள் என்பது எனக்கானது இல்லை அது பிறருக்கானது என்பதை உணர்ந்து, எங்களிடம் உள்ள நன்மைகளை. ஏழைகள், எளியவர்கள், கைவிடப்பட்டவர்கள், விளிம்பு நிலையில் உள்ள மானுடர் 61607 அனைவருடனும் இணைந்து கொண்டாடுவதற்கும் நன்மைகளை வழங்குவதற்கும், தேவையான மனத்தினையும் சூழல்களையும் பொருளாதாரத்தையும் தந்து வழிநடத்தும்படி இறைவா உம்மிடம் மன்றாடுகின்றோம்.
இவைகள் அனைத்தையும் உம் திருமகன் இயேசு கிறிஸ்துவின் திருப்பெயரில் மன்றாடுகின்றோம், எங்கள் மன்றாட்டை கேட்டருளும் இறைவா! ஆமென்.
ஆண்டவர் கற்பித்த இறைவேண்டல் (Lord's Prayer)
விண்ணுலகிலிருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக, உமது ஆட்சி வருக, உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவதுபோல மண்ணுலகிலும் நிறைவேறுக, இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும், எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளதுபோல, எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும், தீயோனிடமிருந்து எங்களை விடுவியும். ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமக்கே. ஆமென். (மத்தேயு 6:9-13)
ஒப்படைப்பு (Dedication)
இறைவாழ்த்து (Benediction)
அனைத்து படைப்புகளையும் படைத்த, தாயும் தந்தையுமாகிய கடவுளின் அன்பும், சவால்கள் நிறைந்த உலகில் வார்த்தைகளின் ஊடே நம்மை மீட்கும் இயேசுவின் அருளும், துணிவோடு போராட்டங்களை எதிர்கொள்ள உந்துதல் தரும் தூய ஆவியாரின் வழிநடத்துதலும் நம் அனைவருடனும் இன்றும் என்றும் நின்று நிலவுவனவாக. ஆமென்.
நிறைவுப் பாடல் (Closing Song)
(இரண்டாம் ஆண்டு மாணவர்கள்)
Mobile masser
நீ மாட்டிக்கிட்டா closeசு
Fashion அது கெத்து
உன் மானம் போனா வெத்து
Whatsapp ល់ chattingu Pubg எல்லாம்
fightingu Tiktok r actingu
Facebook សំលេů likingu
Phoney App எல்லாம் காலம் காலமா மாறுது மாறுது பார்ரா புதுசா !!! இளமை எல்லாம் internet மூழ்குது மூழ்குது தினமும் பெருசா இயேசுவ Lifey கண்டிடு உன் வாழ்க்கைய நீயும் வென்றிடு அவர் சொன்னத கேட்டு Heartuல போட்டு
புதுசா நீயும் மாறிடு
இவையெல்லாம் மாயையே இயேசுவே போதுமே இயேசு எந்தன் Friendu
அவர் வார்த்தை தானே Trendu
By, Scripture Union
நன்றி அறிதல் உள்ளத்தோடு யாவரும் இணைந்து சொல்லுவோம்
என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு! என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! ஆமென். (திருப்பாடல்கள் 103:1,2)
அனுப்புதல் (Sending Out)
நடத்துநர்: கடவுள் உங்களோடு இருப்பாராக.
திருஅவை: அவர் உம்மோடும் இருப்பாராக.
நடத்துபவர்: சவால்கள் நிறைந்த நவீன உலகில் கடவுளின் வார்த்தையை பெற்றவர்களாக ஆற்றலுடன் கடந்து செல்வோம்.
திருஅவை: கடவுளின் திருப்பெயராலே ஆமென்.
வழிபாட்டில் கலந்துக் கொண்ட உங்கள் யாவருக்கும், எனக்கு உதவி செய்த பேராசிரியர்கள், மாணவ சகோதர சகோதரிகள் உங்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகள்..
Gist in English
God's Word Challenges the status Quo.
God's words are powerful. These divine words are said to invigorate the relationship between God and humans. Whenever people stood in need of help for salvation, for life, for rights and for relationships, God helped them by giving out the word in the form of commandments and prophesies message of doom as well as message of hope. We can see that from the outset of creation, the Word of God has been powerful in creating and guiding lives. The coming of God, announced by the prophets and believed through the ages, was itself the embodiment of the Word of God.
1. Karl Barth "The Word of God as Event." God's Word comes not as theory but as an event that happens to us.
2. Thomas Aquinas He says that "Truth is the unveiling of reality"-the revealing of what is hidden.
3. Martin Luther He says that conscience must be held captive to God's Word.
Only then can true reformation happen. Reformation means turning away from falsehood and returning to truth. Modern World. The modern world generally refers to the current period of rapid change in terms of scientific and technological development.
Globalization Fast movement of people, money, and technology. Cultures mix, boundaries blur, and local identity weakens. Urbanization People migrate in masses from the villages towards the cities, Industrialized Society Focusing more on industrial and service sector than the agricultural sector. Precisely, the modern world is an era of rapid change, new inventions, global connections and rational thinking. The modern world is filled with social media, Al, smartphones, CCTV, facial recognition, Alexa, Google Assistant, ChatGPT, Meta Al, email, and so on.
1. God's word redirects (2 Kings 22: 1-13):
Josiah became king at the age of eight. Despite being raised by Hezekiah with pious, Manasseh made mistakes in the sight of God. Josiah's father Amon was a wicked man, but Josiah was righteous in God's sight. Unlike his predecessors Josiah walked uprightly before the Lord.
And he did what was right in the eyes of the Lord and walked in all the way of David his father, and he did not turn aside to the right or to the left (2 Kings 22:2). During the restoration of the temple, the Book of the Law was discovered and brought to the king with joy. This book is a handwritten copy of the original five books of Moses. At this time, Hilkiah was happy to find this book, and whether it was the only authentic copy or not, the contents of it were new to the king and the high priest. The timely revelation of the Book of the Law to guide and revive the reforms that Josiah had begun was a great event and a sign of good for Josiah and his people. Hilkiah makes everyone from the young to the elderly to hear the word of God, breaks down all idolatry and restores the Word of God.
2. God's word prepares (Luke 1:68-80):
This song is the manifestation of the fulfilment of the Lord's word in the life of Zechariah, who was hopeless and unconcerned about the future at a time when the coming of the Messiah was the yearning expectation of all. The First testament prophecies are often expressed in hymns and new songs. This also is the inception of Second testament prophecy. Speaking of the work of redemption, Zechariah called God the God of Isracl. Israel had been given the prophecies of redemption, and they now had the first foreshadowing and plans for it. God has given people a gracious visit by sending the Messiah. He met with them as a friend to learn about their lives and journey together,
3. God's word is full of life and truth (Hebrew 4: 12-16):
The author of the epistle saw that; the Hebrews were more inclined to follow God's traditional customs than to obey the revelation given by God through the Son. The word of God is like a sharp sword that pierces the heart of man. Even the hardest of the heart can be penetrated and transformed by the word of God. "For we do not have a high priest who is unable to sympathizewith our weaknesses, but we have one who in every respect has been tested as we are, yet without sin" Hebrew 4:15. Jesus Christ, the Son of God, did not succumb to temptation andfall into sin, but he was able to help others who fell into sin.
Conclusion:
At present context;
1. Digital thraldom.
2. False information and money laundering.
3. Cyber Crime.
4. Loss of autonomy.
5. Unemployment due to Al.
6. Online ministries.
Humans are trapped within the things like these. The relationships have new names been given to them during this time:
1. Soul Friend.
2. Day One Friend.
3. True Friend.
4. Peace Friend/Best Friend.
The only constant is the Word of God. The modern world is ever changing and it is good for an individual to be modern and to take in good ideas, but it is wrong to get lost in it.
"Spiritual emptiness is the forgetting of God and the self-realization of man. The Word of God is revealing new theology in each context" - Joel.
V. Salus Valentine Joseph.
BD IV











