தமிழ்நாடு இறையியல் கல்லூரி
அரசரடி, மதுரை-16
திறனாய்வு வழிபாடு
செம்பொருள்
கடவுள் அருள்: அடித்தட்டு மக்களுக்கான நம்பிக்கை
Grace of God: The Hope for the Lowly
வழிபாடு நடத்துபவர்: திருமிகு. சு.ஜெஃப்ரின் புஷ்பதுரை
திறனாய்வு மாணவர்: திருமிகு. ர.ஜான் பிரேம்குமார்
திறனாய்வு ஆசிரியர்: திருமிகு. கோ. பிளெஸ்சி ஜார்ஜினா
தேதி: 26-11-2025
நாள்: புதன்கிழமை
நேரம்: காலை 6.00
இடம்: கிறித்தரசர் வழிபாட்டுமனை
வாழ்த்தும் வரவேற்பும் (Greetings and Welcome)
மூவொரு கடவுளின் திருப்பெயராலே ஆமென். திறனாய்வு வழிபாட்டுக்கு வருகை தந்திருக்கும் உங்கள் யாவரையும் வாழ்த்தி வரவேற்கிறேன்.
வழிபட அழைப்பு (Call to Worship)
ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப் படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது. ஏனெனில், அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். (1:47,48) என்கிற திருமொழிகளுக்கு ஏற்ப நம் தாழ்வில் நம்மை பார்த்த கடவுளை வழிபடுவோம் வாருங்கள்.
தொடக்க இறைவேண்டல் (Opening Prayer)
அனைத்து ஆற்றலும் அருளும் பொருந்திய எங்கள் பெற்றவராம் கடவுளே, நீர் கொடுத்த புதிய நாளுக்காகவும், புதிய வழிபாட்டு சூழலுக்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறோம், இவ்வழிப்பாட்டில் உள்ள அனைத்து கூறுபாடுகளின் வழியாக உம் அருளை நாங்கள் பெற்று கடவுளின் அருள் அடித்தட்டு மக்களுக்கான நம்பிகை என்ற தலைப்பில் நாங்கள் தியானகின்ற போது ஒடுக்கதலிருந்து விடுதலைக்காக காத்திருக்கிற அடித்தட்டு மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துகின்றவராய் நாங்கள் இப்பற்றுறுதியில் பணத்தில் திறன்பட தூண்டுகின்றதாய் இவ்வழிபாடு அமைய வேண்டும் என்று இறைமகன் இயேசு கிறிஸ்துவின் வழியாக வேண்டிக் கொள்கிறோம் எங்கள் அருள் நிறைந்த கடவுளே. ஆமென்.
தொடக்கப்பாடல் (Opening Song) பு.பா 101
ஒரு நாள் வருவார் மனுவின் மகனாய்
அருகில் இருந்திடுவார் என
இறைவாக்காளர் உரைத்தது போல
இறை மகன் இயேசு வந்தார் இன்று
மனு மகன் இயேசு வந்தார்
சரணம்
அடிமையின் வாழ்வை ஆண்டவர் வெறுத்தார்
ஆள்களை அனுப்பித் தந்தார் - இன்று
விடியா வாழ்வில் விடுதலை அளிக்க
விடிவெள்ளி இயேசு வந்தார் - இன்று
அடியரை அணைக்க வந்தார்
இறைவர் நம்மோடிருந்திட வந்தார்
குறைவில் நிறைவு தந்தார் - இன்று
கூக்குரல் எழுப்பும் மாந்தர் தம் வாழ்வில்
ஏக்கம் தீர்க்க வந்தார் நல்ல
ஆக்கம் அளிக்க வந்தார் ஒரு நாள்
- மோகள்ராஜ். க. பீட்டர்
பிழை உணர அழைப்பு (Call to Confession)
செய்த பாவத்தையே மீண்டும் செய்யாதே அவற்றுள் ஒன்றாவது உனக்குத் தண்டனை பெற்றுத் தரும். (சீராக்கின் ஞானம் 7:8) என்ற திருமொழிக்கு ஏற்ப நாம் மீண்டும் மீண்டும் செய்து வந்த பாவத்தை உள்ளத்தின் ஆழத்திலிருந்து உணர்ந்தவர்களாய் நாம் கடவுளிடம் அறிக்கை செய்வோம் வாருங்கள்.
பிழை உணர்தல் (Confession of Sins) அமர்ந்தவாறு
ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே பசித்திருப்போரை வாட்டி வதைக்காதே வறுமையில் உழல்வோரை எரிச்சலூட்டாதே. (சீ.ஞா 4:1,2) இதனை அறிந்திறுத்தும் அடித்தட்டுமக்களின் வாழ்வினைக்கு எதிராக செயல்பட்டதை எண்ணி மனம் வருத்துகிறோம்.
(அமைதி)
இனி உங்களிடையே யூதர் என்றும் கிரேக்கர் என்றும், அடிமைகள் என்றும் உரிமைக் குடிமக்கள் என்றும் இல்லை ஆண் என்றும் பெண் என்றும் வேறுபாடு இல்லை கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள நீங்கள் யாவரும் ஒன்றாய் இருக்கிறீர்கள். (கலா3:28) என்பதற்கு ஏற்ப கிறிஸ்துவோடு ஒன்றாய் இருக்கிறோம் என்று அறிக்கை செய்தும் அதற்கு ஏற்ப வாழாமல் பொருளாதாரம் அரசியல்,சாதி ரீதியாக மக்களை ஒடுக்கிய இழிநிலை எண்ணி மனம் வருத்துகிறோம்.
(அமைதி)
நாம் நம்முடைய தனிப்பட்ட பிழைகளை அறிக்கை செய்வோம்
பிழை மன்னிப்பின் உறுதி (Absolution)
மேற்கினின்று கிழக்கு எத்துணைத் தொலைவிலுள்ளதோ, அத்துணைத் தொலைவிற்கு நம் குற்றங்களை நம்மிடமிருந்து அவர் அகற்றுகின்றார். (திருப்பாடல்103:12) என்றுரைக்கும் கடவுளிடம் நம் பிழைகளை உண்மையாய் அறிக்கை செய்து அவைகளை விட்டுவிடும் அனைவருக்கும் அவர் புது வாழ்வை தந்து நிலை வாழ்வின முடிவில்லா கரையில் சேர்ப்பாராக. ஆமென்.
திருமறைப்பாடம் (Scripture Reading)
விடுதலை பயணம் 2:1-10
Exodus 2:1-10
2 தெலோனிக்கர் 2:13-17
2 Thessalonian 2:13-17
தூய லூக்கா 1:46-59
St. Luke 1:46-59
சிறப்பு நிகழ்வு (Special Event)
மனிதா எது நம்பிக்கை? நீ
கடவுளின் அருளை பெற்றது எதற்காக?
எழுந்திடு எழுந்திடு எளியோரின்
வாழ்வு நலம் பெற உழைத்திடு
நிலைத்திரு நிலைத்திரு
அந்த நிலைப்பாடே நம் செயல்பாடு
கடவுளின் அருளை பெற்ற மானிடா
காத்திருப்பது நீ எதற்காக?
மரியாளை போல பாடு! பார்வோன்
மகளை போல செயல்படு
- நிலைத்திரு
தாழ்மையில் அருள் பெற்ற மானிடா
தளர்ந்து போனது எதற்காக?
அம்பேத்கார் போல எழுந்திடு! பவுல்
அறிவித்தது போல நிலைத்திடு
- நிலைத்திரு
பண்: சாலஸ் வேலண்டைன் ஜோசப்
பாடல்: ஜெஃப்ரின்
அருளுரை (Sermon)
தலைப்பு: கடவுள் அருள்: அடித்தட்டு மக்களுக்கான நம்பிக்கை
Topic: Grace of God: The Hope for the Lowly
திருத்தூதுவர் பற்றுறுதியறிக்கை (Affirmation of Faith) (தழுவியது)
அநீதியால் ஒடுக்கப்பட்ட மக்களோடிருந்து அவர்களை உயர்த்திய அனைத்து ஆற்றல் பொருந்திய மீட்பராம் கடவுளை நம்புகிறோம். வலியோர் எளியோர் என்ற பாகுபாட்டை கலைந்து சமநிலையை கொண்டு வந்த அவர்தம் ஒரே மைந்தர் இயேசு கிறிஸ்துவை நம்புகிறோம்.அவர் தூய ஆவியராலே அடித்தட்டு மக்களில் ஒருவரான கன்னி மரியாளிடம் கருக்கொண்டு பிறந்தார். சாமனிய மக்களின் வாழ்வை உயர்த்த பொத்தியு பிலாத்துவின் காலத்தில் வலியோரால் விளிம்புநிலைக்கு தள்ளப்பட்டு துன்புறுத்தப்பட்டு சிலுவையில் கொல்லப்பட்டு இறந்து அடக்கம் செய்யப் பெற்று பாதாளம் இறங்கினார். நம்பிக்கை அற்றோருக்கு நம்பிக்கை ஏற்படுத்த மூன்றாம் நாள் இறந்தோரிடையே இருந்து விளிம்புநிலை மக்களின் வாழ்வை உயர்த்திட எழுந்தருளினார். விண்ணகம் ஏறி சமநிலையை விரும்புகிற கடவுளின் வலப்பக்கம் வீற்றிருக்கிறார்.அவ்விடத்திலிருந்து ஒடுக்கப்படும் மக்களுக்கும், ஒடுக்கிறவர்களுக்கும் நீதி செய்ய வருவார், சாமனிய மக்களின் வாழ்வை உயர்த்தத் தூண்டும் தூய ஆவியை நம்புகிறோம். எல்லா மக்களையும் உள்ளடக்கிய தூய திருச்சபையும், தூயோரின் கூட்டுறவும், பிழைப் பொறுப்பும்,உடல் உயிர்ப்பும், மெய் வாழ்வும் உண்டென்று நம்புகிறோம். ஆமென்.
நன்றி (Thanksgiving) (அமர்ந்தவாறு)
- வாழ்வளிக்கும் நல்ல கடவுளை மக்களால் ஒடுக்கப்பட்ட கொச்சைப்படுத்தப்பட்ட பால் புதுமையினர் ஆசிரியராக காவலராக வழக்கறிஞராக இன்னும் பல்வேறு துறைகளில் பணிபுரிய நீர் கொடுத்த அருளுக்காக இறைவா உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
- அன்பின் நல்ல கடவுளே எங்கள் கல்லூரியில் ஆறு ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றி தற்போது ஓய்வு பெற்றிருக்கின்ற எங்கள் கல்லூரியின் முன்னாள் முதல்வர் அருட்பணி முனைவர் மார்கிரேட் கலைச்செல்வி அக்கா அவர்களுக்காகவும் தொடர்ந்து பொறுப்பு முதல்வராக பொறுப்பேற்றுள்ள அருட்பணி முனைவர் ஐவி சிங் அக்கா அவர்களுக்காகவும் இறைவா உமக்கு நன்றி செலுத்துகிறோம்
மன்றாட்டு (Intercessory)
- எளியோரின் வாழ்வை உயர்த்திட போராடும் கடவுளே,தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் தூய்மை பணியாளர்களின் உரிமைப் போராட்டத்திற்காக உம்மிடம் மன்றாடுகிறோம். நாட்டினை தூய்மைப்படுத்தும் இவர்களின் பணி தனியார் மயமாக்குதலினால் வேலையில் நிறந்தரமற்ற தன்மை, ஊதிய குறைவு, ஆபத்தான வேலைகளை செய்வதில் பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இல்லை. இருப்பினும் அவர்கள் தங்கள் வேலையை செய்தும் மக்களால் புறணிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து தூய்மை பணியாற்றி வருகின்றனர். கடவுளே இவர்களுக்கு எதிராக செயல்பட கூடிய தனியார் பண முதலைகளும் மக்களின் வாழ்வை அடமானம் வைக்கும் அரசும், இப்படிப்பட்ட சூழலில் விளிம்பு நிலை மக்களின் வாழ்வு மாறிடவும் உரிமையை மீட்டுக்கொடுக்கவும் இறைவா உம்மிடம் மன்றாடுகிறோம்.
- மனித மாண்பினை காக்கும் கடவுளே, கிராமப் பகுதிகளில் வாழுகின்ற சாமானிய ஏழை மக்களுக்கு கிடைக்கக்கூடிய மருத்துவம், கல்வி. போக்குவரத்து, உணவுப் பொருட்கள், இன்னும் சமூகத்தால் பல நிலைகளில் மறக்கடிக்கப்பட்ட சூழல்கள் அனைத்தும் மாறவும் அவர்களுக்கு கிடைக்க கூடிய அரசாங்க சலுகைகள் சரியாக பெற்றுக் கொள்ளவும், பெண்கள் குழந்தைகள் அனைவரும் பாதுகாக்கபடவும் உம்மிடம் மன்றாடுகிறோம்.
இவை கிறிஸ்துவின் வழியாக அனைத்தையும் இறைமைந்தன் இயேசு வேண்டிக்கொள்கிறோம் எங்கள் பெற்றவராம் கடவுளே. ஆமென்.
ஆண்டவர் கற்பித்த இறைவேண்டல் (Lord's Prayer)
ஆட்சி உமது வருக. உமது விண்ணுலகிலிருக்கிற எங்கள் பெற்றவராகிய கடவுளே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக. திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவதுபோல் மண்ணுலகிலும் நிறைவேறுக. இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளது போல எங்கள் குற்றங்களை மன்னியும். நாங்கள் சோதனைக்கு உட்படும்போது. தீயோனிடமிருந்து எங்களை விடுவியும். ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமக்கே. ஆமென்.
ஒப்படைப்பு: (Dedication)
இறைவாழ்த்து (Benediction)
சமநிலையை விரும்பும் பெற்றவராகிய கடவுளின் அன்பும், அடித்தட்டு மக்களின் விளிம்பு நிலை வாழ்வை உயர்த்த போராடிய இயேசு கிறிஸ்துவின் அருளும், மக்களின் வாழ்வை உயர்த்த தூண்டும் தூய ஆவியாரின் உந்துதலும் நம் அனைவரோடும் இன்றும் என்றும் நிலைத்திருப்பதாக. ஆமென்..
நிறைவுப் பாடல் (Closing Song)
ஆராரோ, ஆராரோ, ஆரிராரோ - 2
பல்லவி
நம்ம மரியம்மா கொழைந்தையைத் தான் பாருங்க
கிட்ட வந்து பாருங்க
சும்மா நையாண்டி மேளம் கொட்டி ஆடுங்க
பர கொண்டு ஆடுங்க
அது சிரிச்சாலும் மரியாளு மொரச்சாலும் மரியாளு 2
மொத்தத்தில மரியம்மா சாயலு அத
உரக்கச் சொல்லு இறைவனோட சாயலு... நம்ம
சரணங்கள்
தானானே தந்தன தானானே - தன
தானானே தந்தன தானானே ஏலேலோ...
அன்னாடங் காச்சிகளின் ஒறவு மொறையாக,
ஓலை குடிசை உடம்பொறப்பா வந்தாரு
சாதிசனம் எல்லாருமே ஒத்துமையா வாழனும்னு
சாதி பேய அடிக்க சவுக்கா வந்தாரு
ஆடி காத்துக்கும் அசராம நிமுந்து நிற்கும் - 2
பனைய போலவே பெண்டுக வாழவே
வழியாய், துணையாய் வந்த தெய்வமே
தையாரே தையர தையா.......
ஏழ பால சனங்களின் ஒருல வாழ்க்கைய,
ஓலகம் காண கண் தொறக்க வந்தாரு,
உச்சாணி மேலிருந்து அடக்கும் ஆணவத்த
புடைக்கும் மொறமாக உலகில் வந்தாரு
உச்சி மல பாறையை உளி போல ஒடச்சி செல்லும் 2
வேரை போலவே, ஏழைங்க வாழவே 2
கருவாய், தளிராய் வந்த தெய்வமே - நம்ம
பாடல் & பண்: அருள்பணி. அகஸ்டி ஞான காந்தி
அனுப்புதல் (Sending Out)
நடத்துனர்: கடவுளின் அருள் உங்களோடு இருப்பதாக
அவை: அவர் உம்மோடும் இருப்பாராக
நடத்துனர்: விளிப்பு நிலையிலிருக்கும் மக்களுக்கு நம்பிக்கை கொடுக்க கடந்துச்செல்வோம்
அவை: கடவுளின் திருப்பெயராலே. ஆமென்
Translation of Sermon
Grace of God: The Hope for the Lowly
God's grace is the foundation of faith in all religious traditions. In Hinduism, God's grace is understood through the concepts of anugraha or kripā. According to this belief, divine grace can be received only through devotion, rituals, charity, and the outworking of one's own karma.
In Islam, the Quran speaks of God's grace and compassion using the term rahma. Here, divine mercy is received through human effort obedience, ascetic discipline, submission, and righteous conduct.
In contemporary world, many people strive to receive God's grace through various means: undertaking sacred pilgrimages, offering, donations, inflicting bodily pain upon themselves, or withdrawing from family and social relationships. People often attempt many such practices to attain divine favor. But, Scripture reveals God's grace in three primary dimensions Love, Redemption, And Upliftment. In many ways, the attributes of God are expressed through grace. Grace is fundamentally a relationship between God and humanity, yet the initiative always belongs to God.
The Dalit theologian James Massey defines that God's grace restores dignity to those who are rejected by society. From my perspective, God's grace is most clearly manifested in the lives of the poor and the powerless, by lifting them from social, economic, and political oppression. God's grace raises them up from the margins and affirms their worth.
Those who struggle daily for basic needs, those who are economically exploited, those who have been silenced, and those who are denied fundamental human rights such individuals are what we commonly refer to as the marginalized and the the socially excluded.
According to the New Testament scholar Joel.B.Green, defines marginalized people are those who have no power, influence, or social standing. From my point of view, women, children, the common poor, and persons with disabilities all fall into the category of marginalized communities.
God's Grace: Protecting Life through Faith (Exodus 2:1-10)
The book of Exodus narrates the oppression faced by the descendants of Jacob who had settled in Egypt, as well as the message of their deliverance. A new king who did not know Joseph arose, and seeing that the Israelites were increasing in number and strength, he feared them. Therefore, he oppressed them with hard labor, making their lives bitter. Yet the growth of the people continued to trouble the king. He commanded the Hebrew midwives, Shiphrah and Puah, to kill all the male children born to the Hebrews. But the midwives preserved the lives of the children. Consequently, the king ordered that all newborn boys be thrown into the Nile.
It is in such a context that the passage assigned for our reading Exodus 2:1-10, titled "The Birth of Moses" is situated. In the opening verses, a child is born to a Levite couple.
The Israelites were subjected to various forms of oppression in Egypt. Yet God chooses to work through those who are pushed to the margins. God makes use of marginalized people to bring deliverance to the oppressed. In the efforts of the people who waited for liberation, God reveals Himself. From the experiences and struggles of the people in their marginalized condition, God's grace empowers them to act.
In Exodus 2:2, Moses is born. His mother, Jochebed, hid the child for three months by faith (Hebrews 11:23). She acted against the decree of the king, risking her own life to preserve her child's life. After three months, she could hide the child no longer. Jochebed made a courageous decision: she placed the child in a basket made of reeds and set it among the reeds of the Nile. The very place designated for the killing of Hebrew babies becomes, by God's grace, the place of his protection. The only place the Egyptians would not search was the Nile itself so the river of death becomes a river of life.
Just as creation was preserved through Noah's ark, so here too this ark becomes a symbol of preservation. It becomes an instrument through which a future generation threatened by genocide is protected.
In verses 5-7, Pharaoh's daughter discovers the basket and the child within it. The child cried, and through the cry of the child, God's grace begins to operate. The work of deliverance does not begin only in Exodus 3:7; rather, through the cry of Moses, through the courage of Jochebed, and through the actions of the women, God had already set in motion the process of liberation. Grace moved Pharaoh's daughter to have compassion. Whenever people are pushed to the margins and subjected to suffering, God identifies Himself with their pain.
Pharaoh's daughter knew of her father's decree. Helping a Hebrew infant meant defying the law of the land. Yet she lifted the child from the Nile. This act reveals her resistance to the genocidal command of her father. Her action is a political protest an act of opposition through the preservation of a Hebrew child. God's grace moves even those in positions of power to act against the injustices inflicted on marginalized people.
The child's sister suggested that a Hebrew nurse be brought to care for the infant a wise and discerning proposal. Thus, the child's own mother was paid wages to raise him. The same empire that commanded the killing of children now pays for a child's protection. The same authority that oppressed the people becomes, through God's grace, the means of the child's safety. God's grace opens a way of deliverance where there seems to be no way.
This enabled Moses to grow up with knowledge of both cultures the faith and heritage of the Hebrews, and the customs and education of the Egyptian palace. Thus, by faith and through God's grace, Moses was shaped into the leader who would bring deliverance to Israel.
God's grace works through the courageous, faith driven actions of marginalized people. Their willingness to act, disregarding the hardships and dangers before them, became the means through which God prepared the way for Israel's liberation. God's grace empowered them and worked through them for the liberation of His people.
God's Grace: Stand firm in Faith (2 Thessalonians 2:13-17)
The city of Thessalonica was the second-largest civic center in Macedonia and remained under Roman rule, many Jews lived in this region. During Paul's second missionary journey, he went to Thessalonica and carried out his gospel ministry there. He began his work in the Jewish synagogue, and later he proclaimed the gospel also to the Gentiles living in the city. Many among them accepted Christ and became believers.
These new Christians, however, faced severe persecution from both the Roman authorities and the surrounding Jewish community. In the midst of this suffering, false letters circulated under Paul's name created great confusion among the believers. These letters claimed that the Day of the Lord had already arrived, which deeply unsettled the community.
Some believers, thinking that God's day of judgment had already begun, stopped living in a disciplined and faithful manner, and even began to turn away from Christ. Believing that "the Day of the Lord has come," they abandoned their daily responsibilities and lived in an idle and disorderly way.
As we read in Colossians 2:8, such people were giving excessive importance to human traditions. By elevating basic principles and human ideas, they brought confusion into the lives of the newly formed Christian community. Therefore, in this context of fear and unrest, Paul writes to the believers in Thessalonica. In 2 Thessalonians 2:3-12, he explains the events that must occur before the Day of the Lord, so that the church need not be shaken by false teachings.
God, in His grace, has recognized and upheld those who are suffering. Through the gospel, He has called them to Himself. Thus, Paul urges them to stand firm in this hope and not to be troubled by deceptive messages. Instead, grounded in the grace of the One who called them, they must remain steadfast in both word and deed.
Even today, many false preachers exploit people by using fear about Christ's coming, reducing believers to a state of spiritual slavery and mental anxiety, with the intention of gaining personal profit.
However, when we live in the reign of God, God's grace becomes active whenever we uphold justice for those in marginalized and oppressed conditions. Through such acts of righteousness, the truth of God's reign is revealed, and the power of God's grace becomes manifest.
God's Grace: Uplifting the Neglected through Faith (St. Luke 1:46-59)
The Gospel of Luke is generally understood to have been written for Gentile Christians. One of Luke's distinctive features is his attention to those whom Jewish society often ignored women, children, the poor, the socially excluded. In Luke chapter one, we see Zechariah receiving the announcement of the birth of John the Baptist. Although Elizabeth was unable to conceive, she becomes pregnant by the grace of God. Following this, the angel of the Lord brings to Mary the announcement of the birth of Jesus Christ.
Why does God choose Mary? The people of Israel, under Roman rule, were facing various forms of oppression. Within this patriarchal Jewish society, women, children, the poor, the sick, and persons with disabilities were deprived of rights and pushed to the margins. Every morning, a Jewish man would thank God that he was not born as a woman, a slave, or a non-Jew.
Jewish women commonly prayed that the Messiah would be born through their womb, waiting near the Pool of Bethesda with hope. They longed for liberation from their systemic oppression.
Mary herself lived in this deeply marginalized condition subject to Roman oppression, neglected by Jewish patriarchy, and affected by economic vulnerability. Yet within Mary we see a profound longing for the liberation of her people. This longing was accompanied by compassion, humility, obedience, and deep faith. St. Jerome affirms that Mary, being without sin, was chosen by the grace of God.
In Luke 1:31 the angel tells Mary that she will conceive and give birth to a son by the power of the Holy Spirit. He also reveals God's reign. In verse 38 Mary responds, "I am the servant of the Lord; let it be according to your word," revealing her unwavering faith.
As a betrothed woman, to become pregnant before marriage meant, according to Jewish law, to be liable to death. Yet Mary embraces God's plan with courage, not considering her own suffering but the liberation it would bring to all. Her bold faith becomes the path through which God's plan is fulfilled.
Elizabeth plays a crucial role in strengthening Mary's faith. Even in old age, by God's grace, Elizabeth conceives. Her testimony helps Mary trust in God's word and depend on divine grace. This shows that one person's faith experience can give faith to another.
In such a context Mary sings her song of joy the Magnificat (in Latin). Mary's song can be compared with other major songs in the Old Testament: Miriam, Deborah, and Hannah (Ex. 15:19-21; Judg. 5:1-3; 1 Sam. 2:1-10). These women sang of God's deliverance from oppression. Hannah's song especially parallels the Magnificat. But while Hannah sings of victory over her enemies, Mary's song highlights the mercy of God.
"Magnificat" signifies joy Mary recognizes the joy given by God through her conception by the Holy Spirit. Her song proclaims: "God has looked upon the lowliness of His servant." This expresses the divine act of lifting those in lowly and marginalized conditions.
Elisabeth Schüssler Fiorenza calls the Magnificat a revolutionary song a song that turns the social order upside down. God lifts the lowly and brings down the proud. This is a proclamation of God's preferential grace towards the oppressed, and Calls it as social reversal.
In verses 51-53, God reverses the earlier oppressions and injustices that had been carried out against Mary. D. W. Cleverley Ford explains that these lines speak of events that are about to happen or are already unfolding, and he interprets them as pointing to the coming of the Messiah. Under Roman rule, the Jewish people were waiting for the arrival of the Messiah.
God's grace transforms the lives of those considered slaves or outcasts. In Luke 4:18, Jesus declares in the Nazareth Manifesto that He is sent "to bring good news to the poor, to proclaim release to captives, recovery of sight to the blind, and freedom for the oppressed." Unlike Moses' deliverance, which was for a particular people, the deliverance brought by Jesus is for all humanity. In these passages, God's grace works through Mary's faith and endeavor to bring liberation to all.
Conclusion
Elisabeth Schüssler Fiorenza, notes that in God's saving mission, women act as "agents of redemption." The women's whom we came through, all experienced suffering and oppression, yet God's grace worked through them to bring liberation. Their faith not only upheld their own lives but strengthened the faith of all marginalized people living in hopeless conditions. Through their participation in God's liberating work, many found freedom.
Similarly, in our context, God's grace continues to uplift the marginalized. For example, the Dalit Resource Centre has given recognition and value to the arts of rural artists who lived in marginal conditions, helping to raise their quality of life. In the life of Velu Aasan, receiving the Padma Shri Award enabled his artistic gifts to be seen by the wider world. In his situation of hopelessness, the Dalit Resource Centre became a source of renewed confidence. It has offered hope to people like Velu Aasan who might otherwise remain unseen.
In a similar way, non-profit organization Evidence in madurai is a organization, that works for the protection of human rights. Wherever people face oppression, injustice, or the denial of their rights, it becomes a voice on their behalf. It transforms their situations of hopelessness and lifts them up from the margins.
Through the Church of England Zenana Missionary Society, Ms. Florence Swaison came to India. She first served in the Women's College in Punjab, but due to ill health she returned home. Later, she came to the Tirunelveli district, where she conducted tailoring classes at the Sarah Tucker College that had been opened for women living on the margins. This became significant for their lives and functioned as a means of liberation from social constraints.
Among the women she met was one who could neither speak nor hear, yet who showed great eagerness to learn. Recognizing this as God's call, she opened a school for such women. Later, in 1910, she established the school in Chennai. Through their work, marginalized women especially those with disabilities who were pushed aside by society were given dignity, value, and renewed hope.
In the present context, one of the most pressing issues we face is SIR-Severe Electoral Roll Revision. In many regions where minority communities and those living on the margins constitute
a significant portion of the population, their names are being removed from the electoral rolls. As a result, many are at risk of losing their fundamental democratic right to vote.
According to Article 326 of the Constitution of India, the right to vote without discrimination on the basis of caste, religion, gender, education, or economic status was ensured for all citizens by the Father of the Indian Constitution, Dr. B. R. Ambedkar. But, today this right itself is being denied to minority groups and marginalized communities. This not only restricts their political participation but also threatens their very status as citizens of India.
According to Jürgen Moltmann, hope is not merely an anticipation of heavenly life; rather, it urges us to act against injustice, poverty, and violence. In such context of hopelessness, these biblical texts call us to remain steadfast in hope. Through our efforts to resist injustice and oppression, the grace of God becomes a liberating force.














