தமிழ்நாடு இறையியல் கல்லூரி
அரசரடி, மதுரை 625 016.
உடன்படிக்கை வழிபாடு
Covenant Worship
2026
செம்பொருள்
நிசேயாப் பற்றுறுதியை மறுவேற்புச் செய்தலும் பற்றுறுதிப் பயணத்தை உறுதி செய்தலும்
Theme
"Re-Embracing The Nicene Creed and Affirming Our Faith Journey"
நாள்: 2026.01.11
ஞாயிற்றுக்கிழமை
நேரம்: மாலை 6.00 மணி
தமிழ்நாடு இறையியல் கல்லூரி
அரசரடி, மதுரை-16.
உடன்படிக்கை வழிபாடு
Covenant Worship
2026-01-11
மாலை 6.00 மணி
நிசேயாப் பற்றுறுதியை மறுவேற்புச் செய்தலும் பற்றுறுதிப் பயணத்தை உறுதி செய்தலும்
"Re-Embracing The Nicene Creed and Affirming Our Faith Journey"
1. வாழ்த்தும் முகவுரையும்: (Invocation)
2. தொடக்க இறைவேண்டல்: (Opening Prayer)
உடன்படிக்கையின் ஆண்டவரே, உம் மாறாத உடன் படிக்கைக்காக உம்மை வாழ்த்துகின்றோம், போற்றுகின்றோம். 2026ஆவது ஆண்டினைக் காணவும், உம்மோடு சேர்ந்து எங்களுக்கு நீர் கொடுத்துள்ள கடமைகளை நிறைவேற்றவும் நீர் தந்திருக்கின்ற வாய்ப்புக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். இந்த வழிபாட்டில் எங்கள் குரலை நீர் கேட்கின்றீர். உம் குரலை நாங்கள் கேட்க மீண்டும் எங்களை ஒப்படைக்க இந்த வழிபாடு உதவுமாறு அருள் செய்வீராக. ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மன்றாடுகின்றோம். வழியாக ஆமென்.
3. தொடக்கப் பாடல்: (நின்றவாறு) கீர்த்தனை: 10
பல்லவி
ஆதிபிதாக் குமாரன் - ஆவி திரி யேகர்க்கு
அனவரதமும் தோத்திரம்!- திரியேகர்க்கு
அனவரதமும் தோத்திரம்.
அனுபல்லவி
நீத முதற் பொருளாய் நின்றருள் சருவேசன்,
நிதமும் பணிந்தவர்கள் இருதயமலர் வாசன்,
நிறைந்த சத்திய ஞான மனோகர,
உறைந்த நித்திய வேத குணாகர,
நீடு வாரி திரை சூழு மேதினியை
மூடு பாவ இருள் ஓடவே அருள்செய்.
- ஆதி
சரணங்கள்
1. எங்கணும் நிறைந்த நாதர் பரிசுத்தர்கள்
என்றென்றைக்கும் பணிபாதர்,
துங்கமாமறைப்பிர போதர் - கடைசி நடு
சோதனை செய் அதி நீதர்,
பங்கில்லான், தாபம் இல்லான், பகர் அடி முடிவில்லான்,
பன் ஞானம், சம்பூரணம், பரிசுத்தம், நீதி என்னும்
பண்பதாய் சுயம்பு விவேகன்,
அன்பிரக்கத யாளப்பிரவாகன்
பார்தலத்தில் சிருஷ்டிப்பு, மீட்பு, பரி
பாலனைத்தையும் பண்பாய் நடத்தி, அருள்
- ஆதி
2. நீதியின் செங்கோல் கைக்கொண்டு - நடத்தினால் நாம்
நீணிலத்தில்லாமல் அழிந்து,
தீதுறு நரகில் தள்ளுண்டு - மடிவோ மென்று
தேவ திருவுளம் உணர்ந்து,
பாதகர்க் குயிர் தந்த பாலன் யேசுவைக்கொண்டு
பரண் எங்கள்மிசை தயை வைத்தனர்; இது நன்று
பகர்ந்த தன்னடியார்க்குறு சஞ்சலம்,
இடைஞ்சல் வந்த போதே தயவாகையில்
பாரில் நேரிடும் அஞ்ஞான சேதமுதற்
சூரியன் முன் இருள் போலவே சிதறும்
- ஆதி
- காபிரியேல் உபதேசியார்
திருஅவை நிற்க, நடத்துநர் கூறுவது
அனைத்து உள்ளங்களையும், அனைத்து விருப்பங்களையும், அனைத்து மறைபொருள்களையும் அறிந்திருக்கிற அனைத்து ஆற்றலும் மிக்க கடவுளே. நாங்கள் உம்மிடத்தில் முழுமனத்துடன் அன்பு செலுத்தவும், உம் தூய திருப்பெயரைத் தகுதியோடு மாட்சிப்படுத்தவும். உம் தூய ஆவியாரின் ஏவுதலால் எங்கள் உள்ளத்தின் நினைவுகளைத் தூய்மை செய்தருள எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்துவின் வழியாய் வேண்டிக்கொள்கிறோம். ஆமென்.
திருஅவை அமர, நடத்துநர் கூறுவது
அன்புக்கு உரிய இறைமக்களே. கிறிஸ்து இயேசுவின் வழியே மீறுதலில் இருந்து மீட்படைந்து, அவர் வழியே கடவுளுக்கென்று திருப்பொழிவு பெற்று அவருக்குள் கிறிஸ்தவ வாழ்வு வாழ நாம் அழைக்கப்பட்டுள்ளோம். நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நடுவராகக் கொண்டு அழியாது நிலைத்திருக்குமாறு, அவருடைய சொந்த செங்குருதியினால் இப்புதிய உடன்படிக்கைக்குப் பங்குள்ளோராகி, புதிய வாழ்வுக்குள் அடியெடுத்து வைத்துள்ளோம்.
நம்மைப் பொறுத்தவரையில், நாம் இந்த உடன்படிக்கைப் பற்றுறுதியின் வழியாக ஏற்றுக்கொண்டு இனி நமக்காக அன்று நம்மிடத்து அன்பு கொண்டு தம்மையே படையலாக ஒப்புக்கொடுத்தவரும், தமது திருப்பெயர் மாட்சிக்காகப் பணி செய்யுமாறு நம்மை அழைத்திருப் பவருமான இயேசு கிறிஸ்துவுக்கென்றே வாழ உறுதி பூணுகிறோம்.
நாம் நம்மையே கடவுளுக்கு ஒப்படைத்ததைத் திரும்பத் திரும்பச் சிறப்பாகத் திருவிருந்தில் சேரும் பொழுதெல்லாம் புதுப்பித்துக் கொள்ளுகிறோம். இந்த நாளில் மகிழ்ச்சியுடனும் பக்திப் பெருக்குடனும், கடவுளுடன் நாம் செய்து கொண்ட உடன்படிக்கையைப் புதுப்பிக்க வேண்டுமென்ற சிறந்த நோக்கத்துடன் கூடி வந்திருக்கிறோம்.
ஆகையால் அவருடைய அளவற்ற அருளையும் அழைப்பின் நம்பிக்கையையும் நினைவுகூர்ந்து நம் இதயங்களை அவரிடத்து உயர்த்துவோம், வாருங்கள்.
4. போற்றுதல்: (Praising) (அனைவரும் அமர்ந்த நிலையில்)
நடத்துநர்:
தாயும் தந்தையுமாகிய கடவுளை வணங்குவோம். நம்மை உண்டாக்கின அன்பின் கடவுள் அவரே. நொடிப்பொழுதும் கைவிடாது காத்து நிலைநிறுத்துகிறவர். நிலையான நட்புணர்வுடன் அன்பு செலுத்துகிறவர். நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவில் தம் மாட்சியின் அறிவாம் ஒளியைக் கொடுத்தவர். அவரை வணங்குவோம்.
திருஅவை:
கடவுளே. உம்மை வணங்குகிறோம்: உம்மையே எங்கள் கடவுள் என்று அறிக்கையிடுகிறோம்.
நடத்துநர்:
நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருளினைப் புகழ்வோம். செல்வந்தராயினும் நமக்காக ஏழையானவர் அவரே. இறையாளுகையின் நற்செய்தியை அறிவித்து, நன்மை செய்கிறவராகவே சுற்றித் திரிந்தவர். நம்மைப் போலவே எல்லா வகையிலும் சோதிக்கப்பட்டும் பாவம் இல்லாதவர்.
இறப்பு வரை. அதாவது சிலுவையின் இறப்பு வரைக் கீழ்ப்படிந்தவர். இறந்தும் எல்லாக் காலங்களிலும் உயிரோடிருக்கிறவர். பற்றுறுதி கொண்டோர் யாவருக்காகவும் விண்ணரசின் வாயிலைத் திறந்தவர். பெற்றோராம் கடவுளின் மாட்சியில் அவர் வலப்பக்கம் வீற்றிருக்கிறவர். நமது அரசாகவும் நீதித் தலைவராகவும் மீண்டும் வரப்போகிறவர். அவரைப் போற்றுவோம்.
திருஅவை: கிறிஸ்துவே நீர் மாட்சிமிகு அரசர்
நடத்துநர்:
தூய ஆவியாரின் திருவுறவில் அக்களிப்போம். ஆண்டவரும் வாழ்வினை வழங்குபவரும் அவரே. நம்மைக் கிறிஸ்துவின் உடலதின் உறுப்புகளும், கடவுளின் பிள்ளைகளுமாக ஆக்குகிறவர்.
நாம் கடவுளின் பிள்ளைகள் என்று நம்முடைய ஆவியுடன் கூடச் சான்று பகர்பவர். தம் உயர் அறிவால் நமக்குக் கற்பிப்பவர். தம் வல்லமையால் நம்மை ஆற்றல்படுத்துகிறவர். நாம் எண்ணுவதற்கும், கேட்பதற்கும் நமக்கு உதவி செய்ய ஆயத்தமாக இருக்கிறவர். அவரில் அக்களிப்போம்.
திருஅவை:
தூய ஆவியாராகிய கடவுளே. உமக்கே எல்லாப் போற்றுதலும் உண்டாகுக.
5. நன்றி: (Thanksgiving)
நடத்துநர்
நாம் அனைவரும் எழுந்து நின்று கடவுள் அருளும் சொல்லி முடியா அருளுக்காக அவருக்கு நன்றி கூறுவோம். காலங்கள்தோறும் எங்களை வழிநடத்தி வருகின்ற ஆண்டவரே, ஆண்டினை நன்மையினால் நிரப்புகின்றவரே, இந்த நாளில் எங்களை கூட்டிச் சேர்த்திருக்கின்ற உம் பேரன்புக்காக நன்றி செலுத்து கின்றோம்.
திருஅவை
ஆம் ஆண்டவரே, உம் தூய திருப்பெயருக்கு நன்றி செலுத்துகின்றோம்.
நடத்துநர்:
ஆண்டவரே, எங்களை உமக்கென்று ஒப்புக்கொடுத்து இந்த வாழ்நாளில் கிறிஸ்துவின் வழியாக வெளிப்படுத்தப் பெற்ற உயரிய மாண்புகளை எங்கள் வழியாக வெளிப்படுத்தப் பெற்ற உயரிய மாண்புகளை எங்கள் வழியாக வெளிப்படுத்த அழைத்திருக்கும் உம் அருளுக்காக நன்றி செலுத்துகின்றோம்.
திருஅவை:
ஆம் ஆண்டவரே, உம் தூய திருப்பெயருக்கு நன்றி செலுத்துகின்றோம்.
நடத்துநர்:
ஆண்டவரே, இறப்பின் இருள் சூழ்ந்த வழியில் நாங்கள் நடக்கும்போதும் உம் கோலாலும், நெடுங்கழியாலும் கடந்த ஆண்டில் நடத்தியதற்காகவும், இந்த ஆண்டில் நடத்தவிருப்பதற்காகவும் உமக்கு உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றி செலுத்துகிறோம்.
திருஅவை:
ஆம் ஆண்டவரே, உம் தூய திருப்பெயருக்கு நன்றி செலுத்துகின்றோம்.
நடத்துநர்: ஆண்டவரே, கடந்த ஆண்டில் நீர் எங்களுக்கு பல்வேறு இடங்களிலிருந்து தந்த உறவினருக்காகவும், உதவி களுக்காகவும், உம் பேரன்புக்காகவும், பெருந்துணைக் காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
திருஅவை
ஆம் ஆண்டவரே, உம் தூய திருப்பெயருக்கு நன்றி செலுத்துகின்றோம்.
6. பிழை உணர அழைப்பு (Call to Confession)
நடத்துநர்:
''நான் பாவம் செய்தேன் இருப்பினும் எனக்கு என்ன நேர்ந்துவிட்டது? என்று கூறாதே. ஆண்டவர் பொறுமை யுள்ளவர். பாவத்தின் மேல் பாவம் செய்யும் அளவுக்கு பாவமன்னிப்புப் பற்றி அச்சம் இல்லாமல் இராதே. ஆண்டவரின் பரிவு எல்லையற்றது.' (சீராக் 5:4.5).
7. பிழை அறிக்கை செய்வோம்
நடத்துநர்:
எங்கள் பெற்றோராம் கடவுளே, உம் அன்பு மைந்தரை எம் வாழ்வுக்கு முன்மாதிரியாகுமாறு வைத்தீரே! நாங்கள் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள மந்தமாக இருந்ததையும், அவரைப் பின்பற்ற விரும்பாது போனதையும், சிலுவையைச் சுமக்கத் தயங்கியதையும், இப்போது மன வருத்தத்துடன் அறிக்கையிடுகிறோம்.
திருஅவை:
எங்களுக்கு இரங்கி, எங்களைப் பொறுத்தருளும் தயவுள்ள ஆண்டவரே.
நடத்துநர்:
உம்மை வழிபடுவதில் உள்ள எமது குறைபாட்டையும் திரு உறவையும் திருவருள் சாதனங்களையும் நாங்கள் அசட்டை செய்வதையும்,கிறிஸ்துவுக்கு சான்று பகர்வதில் நாங்கள் காட்டும் தயக்கத்தையும், உமக்குப் பணி செய்வதில் நாங்கள் பொறுப்பேற்க மறுப்பதையும், நீர் எங்களை நம்பித் தந்துள்ள திறன்களை அரைகுறையாகப் பயன்படுத்தியதையும் ஆண்டவரே பொறுத்தருள்வீராக.
திருஅவை:
எங்களுக்கு இரங்கி, எங்களைப் பொறுத்தருளும் தயவுள்ள ஆண்டவரே!
நடத்துநர்:
எல்லாவகை அன்புத் தாழ்ச்சியையும், தகுந்த முன்னறிவின்றி பிறரைக் குற்றப்படுத்தித் தீர்ப்புச் செய்ததையும், பிறரை முழுமனத்துடன் பொறுத்தருளாது போனதையும், ஒப்புரவை நாடுவதில் தயக்கம் காட்டியதையும், எங்கள் அயலாருக்கு நாங்கள் செய்ய வேண்டிய அளவுக்கு உதவி செய்யாததையும் ஆண்டவரே பொறுத்தருள்வீராக.
திருஅவை:
எங்களுக்கு இரங்கி, எங்களைப் பொறுத்தருளும் தயவுள்ள ஆண்டவரே!
திரு அவையினர் தொடர்ந்து முழங்காலில் நிற்க நடத்துநர் நின்று சொல்வது
நடத்துநர்:
"நாங்கள் அவரிடமிருந்து கேட்டறிந்து உங்களுக்கு அறிவிக்கும் செய்தி இதுவே. கடவுள் ஒளியாய் இருக்கிறார். அவரிடம் இருள் என்பதே இல்லை. அவர் ஒளியில் இருப்பதுபோல் நாம் ஒளியில் நடப்போமானால் ஒருவரோடு ஒருவர் நட்புறவு கொண்டிருப்போம். மேலும் அவர் மகனாகிய இயேசுவின் இரத்தம் எல்லாப் பாவத்தினின்றும் நம்மைத் தூய்மைப்படுத்தும். ஆனால் பாவம் நம்மிடம் இல்லை என்போம் என்றால் நம்மையே நாம் ஏமாற்றிக் கொள்வோம். உண்மையும் நம்மிடம் இராது. மாறாக பாவங்களை மன்னித்துக் குற்றம் அனைத்திலிருந்தும் நம்மைத் தூய்மைப்படுத்துவார். ஏனெனில் அவர் நம்பிக்கைக்குரியவர், நேர்மையுள்ளவர்" (1யோவான் 1:5,7,9).
திருஅவை: ஆமென். கடவுளே உமக்கே நன்றி.
நடத்துநர்: ஆண்டவர் உங்களுடன் இருப்பாராக.
திருஅவை: அவர் உம்மோடும் இருப்பாராக.
நடத்துநர்: மன்றாடுவோம்
கடவுளே, புது உடன்படிக்கையின் நடுவராக ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை எங்களுக்குத் தந்தவரே. நாங்கள் முழுமையான பற்றுறுதியுடன் உம்மண்டை சேர்ந்து, உடன்படிக்கையில் என்றும் நிலைத்திருக்க எங்களுக்கு அருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாகத் தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறோம். ஆமென்.
8. விவிலிய மறைப் பகுதிகள்
1. முதல் உடன்படிக்கைப் பகுதி 1அரசர் 3:3-9
படித்து நிறைவானதும்
அவையோர்: இது உம் திருமொழி. கடவுளே உமக்கு நன்றி.
2. திருமுகப் பகுதி உரோமையர் 12:1-8
படித்து நிறைவானதும்
அவையோர்: கடவுளே நீர் எங்களோடு பேசியதற்காக நன்றி.
3. நற்செய்திப் பகுதி தூய மத்தேயு 5:13-16
படித்து நிறைவானதும்
அவையோர்: ஆண்டவர் நம்மோடு பேசினார். ஆண்டவரே தொடர்ந்து எங்களுடன் பேசுவீராக.
சிறப்புப் பாடல்:
தேவியல் இளையர் நான்காமாண்டு மாணாக்கர்
9. அருளுரை: (Sermon)
அருட்பணி. முனைவர். ஐவி சிங்
பொறுப்பு முதல்வர், த.இ.க
10. நிசேயாப் பற்றுறுதி அறிக்கை (Nicean Creed)
விண், மண், காணக்கூடியவை, காண இயலாதவை, ஆகிய எல்லாவற்றையும் படைத்திருக்கிற அனைத்து ஆற்றலும் பொருந்திய பெற்றவராகிய ஒரே கடவுளை நம்புகிறோம்.
ஒரே ஆண்டவராய் கடவுளின் ஒரேபேரான மைந்தராய் இருக்கும் இயேசுகிறிஸ்துவை நம்புகிறோம். அவர் உலகங்கள் உருவாவதற்கு முன்னரே தம் பெற்றவரால் பிறப்பிக்கப் பெற்றார். தெய்வத்தில் தெய்வம் அவர். ஒளியில் ஒளி அவர். மெய்க்கடவுளில் மெய்க்கடவுளவர். உண்டாக்கப் பெற்றவரல்லர் பிறப்பிக்கப் பெற்றவர். பெற்றவராகிய கடவுளின் ஒரே தன்மை கொண்டவர்.
எல்லாவற்றையும் உண்டாக்கினவர். மனிதராகிய நமக்காகவும் நமக்கு மீட்பு உண்டாகவும் விண்ணகத்திலிருந்து இறங்கித் தூய ஆவியாரால் கன்னிமரியாளிடத்தில் உருவாகி மனிதரானார். பொந்தியு பிலாத்துவின் காலத்தில் சிலுவையில் அறையப்பெற்று, துன்புற்று, உயிர் துறந்து, அடக்கம் செய்யப்பெற்றார். மறைச் சொற்கள் கூறியவாறே மூன்றாம் நாள் உயிருற்றெழுந்து விண்ணகம் ஏறி, பெற்றவராகிய கடவுளின் வலப்பக்கம் வீற்றிருக்கிறார். வாழ்ந்திருப்போரையும், இறந்தோரையும் நடுத்தீர்க்க மாட்சியுடனே திரும்பவும் வருவார். அவரது ஆட்சிக்கு முடிவு கிடையாது.
ஆண்டவராய் வாழ்வினைத் தருபவராய் பெற்றவராகிய கடவுளிடமும் மைந்தரிடமும் இருந்து புறப்படுகிறவராய், பெற்றவராகிய கடவுளோடும் மைந்தரோடும் தொழுது போற்றப் பெறுபவராய், இறைவாக்கினார் வழியே உரைத்தவராகிய தூய ஆவியாரை நம்புகிறோம். ஒரே, தூய, பொதுவான திருத்தூதுவர் திருச்சபை உண்டென்று நம்புகிறோம். பிழை பொறுத் தருளலுக்கென்று ஏற்படுத்தப்பெற்ற ஒரே திருமுழுக்கை அறிக்கையிடுகிறோம். மரித்தோர் உயிர்பெற்று எழுதலும் மறுமைக்குரிய வாழ்வும் உண்டாகும் என்று காத்திருக்கிறோம். ஆமென்.
11. உடன்படிக்கை (எழுந்து நிற்க)
மெழுகுத்திரியை ஏற்றிவைத்து நடத்துநர் சொல்வது
அன்புக்குரியோரே, கடவுள் தம் மக்களுடன் செய்த உடன்படிக்கையில் நம் பங்கை முழு இதயத்துடன் புதுப்பித்து கிறிஸ்துவின் நுகத்தை நம்மீது ஏற்றுக் கொள்வோம்.
வழி, வாய்மை,வாழ்வு எனும் நோக்கில் தொடங்கிய இக்கல்லூரிப் பயணம் ஐம்பத்து ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ள தருணத்தில் "நிசேயாப் பற்றுறுதியை மறுவேற்பு செய்தலையும் பற்றுறுதிப் பயணத்தை உறுதி செய்வதையும்" நினைவுகூர்ந்து கிறிஸ்துவின் நுகத்தை பகிர்ந்து கொள்ள இந்த உடன்படிக்கையில் ஈடுபடுவோம்.
கிறிஸ்துவுக்காக நாம் செய்ய வேண்டிய திருப்பணிகள் பல உள்ளன. அவற்றுள் சில எளிதானவை. சில கடினமானவை. சில கண்ணியமானவை, வேறு சில பழிப்பினைத் தரக்கூடியவை. சில நமது இயற்கை விருப்பங்களுக்கும் இவ்வுலக நாட்டங்களுக்கும் பொருத்தமானவை. வேறு சில இவ்விரண்டுக்கும் மாறானவை. சில திருப்பணிகள் வழியாக நாம் நம்மையும் கிறிஸ்துவையும் மனநிறைவு செய்திட முடியும். இன்னும் சில திருப்பணிகளில் நம்மை வெறுத்தாலன்றி கிறிஸ்துவை மகிழ்விக்க முடியாது. எனினும் நம்மைப் பலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே இவை எல்லாவற்றையும் செய்ய நமக்குப் பலமுண்டு.
ஆகையால், கடவுளுடைய உடன்படிக்கையை நாம் ஏற்றுக்கொண்டு, அவை நம்முடையதாக்குவோம். நம் இதயத்தைக் கடவுளிடம் ஒப்படைத்து அவர் வல்லமையினால் ஒருபோதும் பின்வாங்காதிருக்கத் தீர்மானிப்போம்.
இவ்வாறு ஆயத்தப்பட்டோராய் அவர் அருளையும் வாக்குறுதியையும் நம்பி தாழ்மையுடன் நம்மை அவருக்கு மறுபடியும் கையளிப்போம் வாருங்கள்.
12. திருப்பணிக்கொடைப் பாடல்: (Offertory Song) பு.பாடல் 271
பல்லவி
ஒப்படைக்கின்றோம் இறைவா எமையே
உலகின் ஆதார வாழ்வாம் உமக்கே
துணைப்பல்லவி
அப்பனும் அம்மையும் ஆகினீர் எமக்கே
அடியவர் நாங்கள் அர்ப்பணித்தோமே
1. நீரின்றி வாழாது உலகம் அதுபோல்
நீரின்றி யாம் வாழோம் இறைவா! உலகில்
வேறிங்கு ஆதாரம் எவருமே இல்லை
வேதனைகள் போக்கி வாழ்வளித்திடவா
- ஒப்படைக்கின்றோம்
2. தாகம் நிறைமாந்தர் வாழ்வுகள் மலர (2)
தந்தோம் எமையே அர்ப்பணமாக
ஏகமனதாக யாவரும் சொல்வோம் (2)
இயேசுவே "மாரநாதா" என்றே
- ஒப்படைக்கின்றோம்
மா.ஞானவரம்
13. திருப்பணிக்கொடைக்காக இறைவேண்டல்
14. மன்றாட்டு (Intercession)
நடத்துநர்: வழிநடத்தும் ஆண்டவரே, இந்தப் புதிய ஆண்டில் நாங்கள் கற்கவும், கற்பிக்கவும், கற்றுக்கொள்ளவும் எங்களுக்கு ஊக்கத்தையும், ஆக்கத்தையும் தந்தருள்வீராக. நாங்கள் அறிந்து கொள்கின்றவற்றை வாழ்வில் நடைமுறைப் படுத்திட, எங்கள் வாழ்வாகவே மாற்றிட எங்களுக்கு தொடர்ந்து உமது அருளை வேண்டுகின்றோம்.
திருஅவை: ஆம் ஆண்டவரே, உம் அருளையே நாடி நிற்கின்றோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
நடத்துநர்: வழிநடத்தும் ஆண்டவரே, எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்ற வந்திருக்கும் எங்களிடத்திலே அவரை இந்த ஆண்டில் இன்னும் நெருங்கிச் சேர்ந்திட ஆவல் கொள்ளவும் உமக்கும் உம் திரு அவைக்கும், பெற்றோருக்கும் உண்மையுள்ளவர்களாய் வாழவும் வேண்டிய அருளினை ஈவீராக. உம் திருமொழிகள் எங்கள் செயலிலும், வாழ்விலும் வெளிப்பட உம் அருளை வேண்டுகின்றோம்.
திருஅவை: ஆம் ஆண்டவரே, உம் அருளையே நாடி நிற்கின்றோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
நடத்துநர்: வழிநடத்தும் ஆண்டவரே, உலகின் பல்வேறு பகுதிகளில் போரினாலும், வன்முறையினாலும், வறட்சியினாலும், வெள்ளப் பெருக்கினாலும் மக்கள் பலர் தங்கள் உரிமைகளையும், உயிர்களையும் உடைமைகளையும், வாழ்வாதாரங்களையும் இழந்து வாழ்வதைக் குறித்து நாங்கள் மிகவும் வருந்துகின்றோம். வாழ்வின் கடினமான சூழல்களில் பற்றுறுதியில் உறுதியாய் நிலை நிற்கும் ஆற்றலை தொடர்ந்து நீர் எங்களுக்குத் தாரும் என்று மன்றாடுகின்றோம்.
திருஅவை: ஆம் ஆண்டவரே, உம் அருளையே நாடி நிற்கின்றோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
நடத்துநர்: வழிநடத்தும் கடவுளே, எங்கள் கல்லூரியை வழிநடத்தும் ஆட்சிமன்றக்குழுத் தலைவருக்காகவும், பேராயர் அனைவருக்காகவும், எம் கல்லூரியின் ஆட்சி மன்ற உறுப்பினர் ஒவ்வொருவருக்காவும், கல்லூரிக்காக இறைவேண்டல் செய்யும் தங்கள் திருப்பணிக் கொடையினால் தாங்கும் இறைமக்கள் ஒவ்வொரு வருக்காகவும் மன்றாடுகின்றோம். இக்கல்லூரியில் பணிபுரிவோர். பயில்வோர் குடும்பத்தினர் அனைவருக்கும் உம் வழிநடத்துதலையும், உம் அரவணைப்பையும் வழங்கிட மண்றாடுகின்றோம். எங்களுக்குத் தொடர்ந்து உம் அருளை வேண்டுகின்றோம்.
திருஅவை: ஆம் ஆண்டவரே, உம் அருளையே நாடி நிற்கின்றோம். எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
15. திருவிருந்து வழிபாடு: (Holy Communion)
பாடல்: கர்த்தரின் பந்தியில் வா....
பல்லவி
கர்த்தரின் பந்தியில் வா, - சகோதரா
கர்த்தரின் பந்தியில் வா.
அனுபல்லவி
கர்த்தர் அன்பாய்ச் சொந்த இரத்தத்தைச் சிந்தின
காரணத்தை மனப் பூரணமாய் எண்ணி கர்த்தரின்
சரணங்கள்
1. ஜீவ அப்பம் அல்லோ? - கிறிஸ்துவின்
திருச் சரீரம் அல்லோ?
பாவ மனங் கல்லோ? - உனக்காய்ப்
பகிரப்பட்ட தல்லோ?
தேவ குமாரனாம் ஜீவ அப்பத்தை நீ
தின்று அவருடன் என்றும் பிழைத்திட
- கர்த்தரின்
2. தேவ அன்பைப் பாரு, கிறிஸ்துவின்
சீசர் குறை தீரு,
பாவக் கேட்டைக் கூறு, - இராப்போசன
பந்திதனில் சேரு
சாவுக்குரிய மா பாவமுள்ள லோகம்
தன்னில் மனம் வைத்து அன்னியன் ஆகாதே
- கர்த்தரின்
3. அன்பின் விருந்தாமே, - கர்த்தருடன்
ஐக்கியப் பந்தி யாமே,
துன்பம் துயர் போமே, - இருதயம்
சுத்த திடனாமே,
இன்பம் மிகும் தேவ அன்பின் விருந்துக்கு
ஏது தாமதமும் இல்லாதிப்போதே வா
- கர்த்தரின்
- மரியான் உபதேசியார
16. திருவிருந்து: (HOLY COMMUNION)
அப்பம் பிடுதல்
குரு: இதோ உடன்பிறப்புகள் ஒருமித்து வாழ்வது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது. நாம் அனைவரும் ஒரே அப்பத்தில் பங்கு பெறுகிறபடியால், பலரான நாம் ஒரே அப்பமும் ஒரே உடலுமாய் இருக்கின்றோம்.
மக்கள்: நான் அவர் கூடாரத்தில் ஆனந்த பலிகளைச் செலுத்திக் கடவுளைப் புகழ்ந்து பாடுவேன்.
நல்லுறவு வாழ்த்து இங்கே கொடுக்கலாம் அனைவரும் மன்றாடுவோம்
இயேசுவே தகுதியுடைய தலைமைக் குருவே நீர் உம் அடியவர்கள் நடுவில் எழுந்தருளியது போலவே எங்கள் நடுவிலும் எழுந்தருளி, அப்பத்தைப் பிடுகையில் எங்களுக்கு உம்மை வெளிப்படுத்தியருளும். நீரே பெற்றவரோடும். தூய ஆவியாரோடும், எந்தக் காலமும் ஒரே கடவுளாக வாழ்ந்து அரசாளுகின்றீர். - ஆமென்.
குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
மக்கள்: அவர் உம்மோடும் இருப்பாராக.
குரு: உங்கள் உள்ளத்தை உயர்த்துக.
மக்கள்: எங்கள் உள்ளத்தை ஆண்டவரிடத்தில் உயர்த்துகின்றோம்.
குரு: நம் ஆண்டவராகிய கடவுளுக்கு நன்றி செலுத்தக்கடவோம்.
மக்கள்: அப்படிச் செய்வது தகுதியும் நீதியுமாயிருக்கும்.
குரு: ஆண்டவரே, பெற்றவராகிய தூய கடவுளே அனைத்து ஆற்றலுமுடைய முடிவில்லா இறைவா, நாங்கள் எந்தக் காலத்திலும், எந்த இடத்திலும் உமக்கு நன்றி செலுத்துவது, தகுதியும், நீதியும், எங்களுக்குத் தலையாய கடமையுமாய் இருக்கின்றது. உம் மகனும், எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறித்துவின் வழியாக நீர் வானத்தையும், பூமியையும் அவற்றிலுள்ள அனைத்தையும் உண்டாக்கினீர். மனுக் குலத்தையும் உம் போலவே உண்டாக்கினீர். மனுக்குலம் பாவத்தில் விழுந்தபோது புதிய படைப்பின் முதற் பலனாக நீர் மனுக்குலத்தை மீட்டுக் கொண்டீர்.
மக்கள்: ஆதலால் தூதரோடும், தலைமைத் தூதரோடும், விண்ணக சபையனைத்தோரும், நாங்கள் உம் மாட்சிமையுள்ள திருப்பெயரைப் புகழ்ந்து மேன்மைப்படுத்தி, படைத்திரளின் கடவுளாகிய ஆண்டவரே, நீர் தூயர், தூயர், தூயர் வானமும் பூமியும் உம் மாட்சியால் நிறைந்திருக்கின்றன. உயர்ந்தவராகிய உமக்கே மாட்சி உண்டாவதாக என்று இடைவிடாமல் உம்மைப் போற்றுகின்றோம். கடவுளின் திருப்பெயரினாலே வந்தவரும் வருகிறவருமானவர் போற்றுதலுக்குரியவர் உயர்நிலைகளில் வாழ்க எனப் போற்றப்படத்தக்கவர்.
திருநிலைப்படுத்துதல்
(அவையோர் முழங்காலில் நிற்க நடத்துநர் பாடுவது)
நம்முடைய நாதர் இயேசு கிறிஸ்து, தாம் காட்டிக் கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியில், அப்பத்தை எடுத்து தோத்திரம் செய்து அதைப் பிட்டு தம்முடைய சீடர்களுக்குக் கொடுத்து "நீங்கள் இதை வாங்கிப் புசியுங்கள். இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகின்ற என்னுடைய மெய்யான திருச்சரீரமாய் இருக்கின்றது (+). என்னை நினைவுகூறும்படி இதைச் செய்யுங்கள்” என்று திருவாக்கு அருளினார். உணவு அருந்திய பின்பு அவர் அவ்வாறே பாத்திரத்தையெடுத்து தோத்திரம் செய்து அவர்களுக்குக் கொடுத்து “இதிலுள்ளதை எல்லாரும் பருகுங்கள். இந்தப் பாத்திரம் பாவமன்னிப்புக் கென்று உங்களுக்காக சிந்தப்படுகிற என்னுடைய மெய்யான திருஇரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாய் இருக்கிறது (+). இதை நீங்கள் பருகும் போதெல்லாம் என்னை நினைவுகூறும்படி இதைச் செய்யுங்கள் " என்று திருவாக்கு அருளினார்.
மக்கள்: ஆமென்... ஆமென்... ஆமென்...
குரு: (ஆண்டவர் கற்றுத்தந்த இறைவேண்டலைப் பாடுவார்)
மக்கள்: ஆமென்.
குரு: கர்த்தாவின் சமாதானம் உங்களோடிருப்பதாக.
மக்கள்: ஆமென்.
திருவிருந்து சாதனங்கள் பரிமாறப்படும்
குரு: கர்த்தரைத் துதியுங்கள் ஏனெனில் அவர் நல்லவர். அல்லேலூயா
மக்கள்: அவர் கிருபை என்றுமுள்ளது. அல்லேலூயா
குரு: வேண்டிக்கொள்வோமாக
எல்லாம் வல்ல பராபரனே உம்முடைய குமாரனாயிருக்கிற இயேசு கிறிஸ்துவின் திருச்சரீரமும் திருஇரத்தமுமாகிய இந்த ஆத்தும ஆகாரத்தினாலே ஆண்டவர் எங்கள் பாவங்களை மன்னித்ததற்காகவும் ஆன்ம பசிதாகத்தை தீர்த்ததற்காகவும் உமக்கு தோத்திரம் செலுத்துகின்றோம். இதைக் கொண்டு நாங்கள் ஆண்டவரைப் பற்றிக்கொள்ளும் உறுதியான விசுவாசமும் பிறரிடம் கொள்ளும் உண்மையான அன்புமுடையவர்களாய் வாழும்படி செய்தருள வேண்டுமென்று எங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக உம்மை வேண்டிக்கொள்கின்றோம். சுவாமி.
மக்கள்: ஆமென்
17. இறைவாழ்த்து
நடத்துநர்: ஆண்டவர் உங்களோடிருப்பாராக
அவை: அவர் உமதாவியோடும் இருப்பாராக
நடத்துநர்: ஆண்டவர் உன்னை ஆசீர்வதித்து உன்னைக் காப்பாராக. ஆண்டவர் தமது திருமுகத்தை உன்னில் பிரகாசிக்கச் செய்து உன்னிடம் கிருபையுள்ளவராயிருப்பாராக. ஆண்டவர் தமது திருமுகத்தை உனக்குப் பிரசன்னமாக்கி உனக்கு சமாதானம் (+) தந்தருளுவாராக.
மக்கள்: ஆமென்... ஆமென்... ஆமென்...
18. நிறைவுப் பாடல்: (Doxology)
கீர்த்தனை 322 சூரியன் மறைந்து.......
1. சூரியன் மறைந்து அந்தகாரம் சூழ்ந்தது
சோர்ந்த என் தேகம் அயர்ந்துமே இளைப்பாறப்போகுது,
தூயா கிருபைகூர்ந்து காருமையா!
2. பகல் முழுவதும் பட்சமாய் என்னைப் பாதுகாத்தீரே,
சகலதீமையுமகல வைத்தருள் நலமுந்தந்தீரே,
சுவாமி உன்றன் பாதம் பணிகிறேன்.
3. பாதகம் மிகப் புரிந்தேன் பரம நாயகா,
பாவி நானிந்த நாளிலும் பல தீவினைசெய்தேனையா,
கோபமின்றி என்பவம் பொறுத்திடுவாய்.
4. ராவில் வரும் மோசமொன்றும் என்னைச் சேராமல்,
பேயின் சர்ப்பனை தீய சொப்பனம் மனதில் நேராமல்,
நேயா நின் நல்தூதர் காவல்தா.
5. ஆத்துமம் சரீரம் எனக்கான யாவையும்
அப்பனுன் கையிலொப்புவித்து நான் அமர்ந்து தூங்குவேன்,
ஐயனே உன் பொன்னடி சரணம்.
- ஜ. சாமுவேல்
கல்லூரிக் குடும்பத்தின்
சார்பாக
அனைவருக்கும்
இனிய
புத்தாண்டு
நல்வாழ்த்து


















