Type Here to Get Search Results !

Communication Presentaion | Jesus Sam

30/01/2026
Precentation - Dani Samuel
இரண்டாம் உடன்படிக்கையில் கடவுள் தொடர்பாளர்
இயேசு கிறிஸ்து, தூய ஆவியார், இறை வார்த்தை, இறைவாக்கினர்கள், திருத்தூதுவர்கள் மூலமாக கடவுள் தொடர்பு கொள்ளுகிறார்.

இயேசு கிறிஸ்து
  • கடவுளின் தன்மை, (எபிரெயர் 1:1,2)
  • கடவுள் தம் மக்களை மீட்க, தம் சொந்த மகனையே அனுப்பினார் (யோவான் 1:14)
  • இயேசு கிறிஸ்து கடவுளின் வார்த்தை (யோவான் 1:1,14)
  • உவமைகள், போதனைகள் மூலமாகவும் பேசினார்.
  • உவமைகள் – நடைமுறைக் கடைகள் மூலம் தொடர்பு கொண்டார்
  • போதனைகள் – அன்பு, மன்னிப்பு, இறையரசின் கொள்ளைகள்
  • இயேசு கிறிஸ்து எளிய மொழிநடையைப் பயன்படுத்தினார்.
  • இரக்கம் காட்டுவதன் மூலம் தொடர்பு கொண்டார். (5000 உணவளித்தல்) (மத்தேயு 14:13-21)

தூய ஆவியார் மூலம் தொடர்பு
  • பற்றுறுதியாளர்களை வழிநடத்துகிறார், கற்பிக்கிறார், வழிநடத்துகிறார். (யோவான் 16:13) (தி.பணி. 2:1-4)
  • பற்றுறுதியாளர்களை சத்தியத்திற்குள் நடத்துகிறார். (யோவான் 16:13) (தி. பணி. 1:8)
  • பாவத்தைக் குறித்து உணர்த்துகிறார். சத்தியத்திற்கு நேராய் நடத்துகிறார் (யோவான் 16:8-11)
  • இயேசு கிறிஸ்துவின் போதனைகளை நினைப்பூட்டி வழிகாட்டுகிறார் (யோவான் 14:16)
  • கடவுடைய வார்த்தையைப் பகிர்ந்து கொள்ளவதில் (யோவான்

இறைவாக்கினர்கள் மூலமாக தொடர்பு
  • 2 தீமோத்தேயு 3:16,17
  • ஆரம்ப காலத்திருச்சபையில் திருத்தூதுவர்கள் கடவுளின் வார்த்தையைப் பரப்ப போதித்தார்கள், கற்பித்தார்கள், கடிதங்கள் எழுதினார்கள். (தி.ப. 2:14-41)
  • இறைவாக்கினர்கள் கடவுளின் செய்தியைப் பெற்று பகிர்ந்து கொண்டனர். (தி.ப.

முக்கிய வினா
1. கடவுள் ஓர் தொடர்பாளர் (O.T & N.T)
2. இயேசு ஓர் சிறந்த ஆசிரியர் (Jesus the master of Communication)
3. இயேசு கிறிஸ்து பிறப்பாளர்
மனித அவதாரம், போதனைகள்,

02/02/2026
Presentation - Caleb
Models Of Communication
1. அரிஸ்டாட்டில் தொடர்பு மாதிரி
பேச்சாளர், செய்தி, கேட்போர்.

2. லாஸ்டுவல்ஸ் தொடர்பு மாதிரி
  • செய்தி எங்கே இருந்து வந்தது, யாருக்காக வந்து என்று ஆராயும் ஓர் தொடர்பு முறை.
  • கேள்வி முறையில் ஆராயும் முறை.
எ.கா: செய்தித்தாள், ஊடக செய்திகள்.

(Importent Question)
3. பெர்ஸின் SMCR மாதிரி (Berlos SMCR Model)
S - Source
M - Message
C - Channel
R - Reciever
எ.கா: ஆசிரியருக்கும் மாணவருக்குமான தொடர்பு முறை. 

3. Osgood Schramm Model
இருதிசை தொடர்பு மாதிரி
இருவரும் தங்கள் தொடர்பை பரிமாறிக்கொள்ளும் முறை.
எ.கா: நண்வர்கள் பேசுவது, நேரடி விவாசதம்

4. Transoctional Model
பலர் அமர்ந்து பேசவும், கேட்கவும் செய்யும் முறை. 
இந்த தொடர்பு முறையில் கோபம் கொள்ள முடியாது, உடல் அமைப்புகள் சரியான முறையில் இருக்க வேண்டும்.

Presentation - Ebenezerrathinaraja
(Importent Question)
WACC Statement
World Association for Crhistian Communication 
உலக கிறிஸ்தவ தொடர்பு சங்கம்
  • இச்சங்கம் தொடர்பு கொள்கைகளை சமூகத்தைக் கட்டமைக்கும், பங்கேற்பை மேம்படுத்தும், சுதந்திரத்தை ஊக்குவிக்கும் மற்றும்பொறுப்புணர்வைக் கூறும் ஒரு ஆன்மீகப் பயிற்சி ஆகும்.
  • சமூக நீதி பன்முகத்தன்மை மற்றும் ஒற்றுமையை நோக்கமாகக் கொண்ட தகவல் தொடர்புக்கு அடிப்படை மனித உரிமை ஆகும்.
  • கிறிஸ்தவ நம்பிக்கையின் அடிப்படையில் நீதியுடனும், சமத்துவத்துடனும் தகவல் தொடர்பு நடைபெற வேண்டும் என்பதற்காக செயல்படும் 
  • இச்சங்கம் 1968-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 
  • தகவல் தொடர்பு அதிகாரத்தின் கருவியாக அல்ல, மனிதர்களை விடுவிக்கும் ஓர் ஊடகமாக இருக்க வேண்டும் என்பதே இந்த சங்கத்தின் அடிப்படை நோக்கம்.
  • இந்த WACC அமைப்பு ஊடகங்கள், தகவல் தொடர்பு, மொழி, கலாச்சாரம், மனித உரிமைகள் ஆகிய துறைகளில் கிறிஸ்தவக் கோட்பாட்டின் அடிப்படையில் ஆராய்ச்சி, பயிற்சி, செயல்திட்டங்களை முன்னெடுக்கிறது. குறிப்பாக பெண்கள், குழந்தைகள், பழங்குடியினர், ஒதுக்கப்பட்ட சமூகங்களின் குறள் ஊடகங்களில் கேட்கப்பட வேண்டும் என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

முக்கிய அமைப்புகள்
1. பொது சபை (Seneral Assembly)
  • WACC-ன் உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பு. உலகின் பல நாடுகளிலிருந்து வரும் உறுப்பினர்கள், பிரதிநிதிகள் இதில் பங்கேற்க்கின்றன.
  • கெள்கைகள், நீண்ட கால திட்டங்கள், முக்கிய தீர்மானங்கள் இங்கே எடுக்கப்படுகிறது.

2. நிர்வாகக் குழு (Executive Commite)
  • பொது சபை எடுத்த முடிவுகளை நடைமுறைப்படுத்த நிர்வாகக் குழு உதவியாக இருக்கிறது.
  • அமைப்பின் அன்றாட செயல்பாடுகள், திட்டங்கள், நிதிமேலான்மை போன்றவற்றை கண்காணிக்கிறது.

3. பிராந்திய அமைப்புகள் (Regional Association)
  • ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா, இலத்தின் அமெரிக்கா, வட அமெரிக்கா, பசுபிக் பகுதிகள்.
  • இந்த அமைப்புகள் அந்தந்த பகுதிகளின் சமூக கலாசச்சார சூழ்நிலைக்கு ஏற்ப திட்டங்களை உருவாக்குகின்றன்.

4. ஆய்பு மற்றும் பயிற்சி பிரிவுகள் (
  • ஊடக நெறிமுறைகள், பாலின சமத்துவம், தகவல் உரிமை, ஊடகக் கல்வி போன்ற தலைப்புகளில் ஆராய்ச்சிகள் மேற்கொண்டு, பயிற்சிகள் கொடுக்கப்படுகிறது.

5. Securitery 
  • இந்த WACC அமைப்பின் மைய நிர்வாக அலுவலகமாக செயல்படுகிறது. இதன் முக்கியப்பணி உலகலாவிய செயல்பாடுகளை ஒழுங்கிணைப்பது ஆகும். 

முக்கிய செயல்பாடுகள்.
  • ஊடகங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை ஆய்வு செய்தல். பழங்குடியினர் மற்றும் சிறுபாண்மையினர் தொடர்பான தகவல் தொர்பான தகவல் உரிமைகளை வலியுளுத்துதல்
  • ஊடகங்களில் வன்முறை தவறான தகவல் ஆகியவற்றிற்கு எதிராக விளிப்புணர்வு ஏற்படுத்துதல்.
முடிவுரை
உலக கிறிஸ்தவ தொடர்பு சங்கம் (WACC) தகவல் தொடர்பை ஓர் சமூக மாற்றத்தின் கருவியாக காண்கிறது. கிறிஸ்தவ நம்பிக்கைகளும், மனித உரிமைகளும் ஒன்றிணையும் இடமாக இது விளங்குகிறது. உலகளவில் நீதியான மனிதநேயம் மிக்க தகவல் தொடர்பு உருவாக இந்த அமைப்பு தொடர்ந்து 


04/02/2026
Presentation - Elango 
திருப்பணியில் தகவல் தொடர்பின் முக்கியத்துவம்
1. கடவுளுடைய வார்த்தையை துள்ளியமாக அறிவித்தல்
  • திருப்பணியின் முதல் நோக்கம் அருளுரையை பரப்புவது.
  • பவுல் - தீமோத்தேயு - சத்திய திருமொழியை நிதானமாய் பகுத்து போதிக்க வேண்டும்.
  • முதல் உடன்படிக்கை நூல் - இறைவாக்கு - கர்த்தர் உரைப்பது என்னவென்றால்.

2. கலாச்சாரத்திற்கேற்ற தகவல் தொடர்பு
  • இயேசு கிறிஸ்து சிறந்த தகவல் தொடர்பாளர்.
  • மீனவர்களிடம் வலையைப் பற்றியும், விவசாயிகளுக்கு விதையைப் பற்றியும் இயேசு பேசுகிறார்.
  • பவுல் - அறியப்படாத தெய்வத்தைப் பற்றி போதிக்கிறார் (திருத்தூதுவர் பணிகள் 17)
  • இன்றை இளைஞர்கள் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் நற்செய்தியை அறிவிப்பது அவசியமாய் இருக்கிறது. 

3. ஆவிக்குரிய உறவை பலப்படுத்துதல்
  • திருச்சபை - சரீரம்
  • நரம்பு மண்டல் போல தகவல் தொடர்பு செயல்படுகிறது. 
  • அன்பினால் சத்தியத்தைக் கைக்கொண்டு, தலையாய கிறிஸ்துவுக்குள்  (எபேசியர் 4:15)

4. தலைமைத்துவம் நிர்வாகம்
  • ஒரு திருப்பணியின் வளர்ச்சி அதன் நிர்வாகத் திறனைப் பொருத்தது. 
  • நெகேமியா எருசலேமின் மதிலைக் கட்டியபோது, சிறந்த தகவல் தொடர்பாளராக இருந்தார்.
  • நெகேமியா 4:20 எக்கால சத்தம் கேட்டால் அனைவரும் ஓரிடத்தில் கூட வேண்டும். 
  • திட்டங்களை சரியாக கடத்துவது, தலைமைத்துவத்தின் கடமை.

5. திருப்பணியின் வெளிப்படைத் தன்மை
  • பணம், நிர்வாக காரியங்களில் திருப்பணிகள் உலகளவில் விமர்சிக்கப்படுகின்றன. 
  • 2 கொரிந்தியர் 8:20,21 - எருசலேம் சபைக்கு சேகரிக்கப்பட்ட தர்மப் பணத்தை பவுல் நேர்மையான முறையில் கொண்டு சென்றார்.
  • வரவு செலவு விவரங்களை மக்களுக்கு வெளிப்படையாக காட்டும்போது, திருப்பணியில் உண்மைத்தன்மையை காட்டும்.

6. சமாதானத் தொடர்பு
  • திருச்சபைக்குள் வரும் பிழவுகளைத் தீர்க்க பேச்சுவார்த்தை முக்கியம்.
  • திருத்தூதுவர் பணிகள் 15 பிரிவு - எருசலேம் சங்கம் யூதர் மற்றும் பிற இனத்தார்களுக்கான பிரச்சனைகளை தீர்த்து வைத்தது.

7. தனிநபர் அலோசனையும், வெவிமடுத்தலும்
  • தகவல் தொடர்பு என்பது பேசுவது மட்டும் அல்ல, கேட்பதும் கூட. 
  • இயேசு எம்மாவூர் சென்ற சீடர்கள் பேசுவதை கவனித்துக் கேட்டார்.
  • கேட்கத் தீவிரமாயும், பேச பொறுமையாயும் இருக்க வேண்டும். யாக்கோபு 1:19
  • மன அழுத்தம், தனிமை நிறைந்த உலகில், மக்கள் தங்கள் பாடுகளை தெரிவிக்க காதுகளைத் தோடுகிறார்கள். மக்களின் பிரச்சனைகளை பொறுமையோடு கேட்க நாம் அழைக்கப்படுகிறோம்.

8. Digital 
பவுல் அக்காலத்தில் சிறந்த தொடர்பு முறையான கடிதங்களைப் பயன்படுத்தினார்.

9. தவறான தகவல்களை கையாளுதல்
  • இயேசு தம்மைப் பற்றிய தவரான குற்றச் சாட்டுகளுக்கு சில நேரங்களில் மௌனமாகவும், சில நேரங்களில் ஆணித்தரமான கேள்விகள் மூலமாகவும் பதில் கொடுத்தார்.
  • தவரான செய்திகளை தகுந்த ஆதாரங்களுடன் விளக்கவது, திருப்பணியில் பாதுகாப்பைக் கொடுக்கும்.

10. முன்மாதிரியான பேச்சு
  • எபேசியர் 4:29 இதுவே ஊழியத்தின் தாரக மந்திரம்.
  • ஏசாயா - அசுத்த உதடுள்ள மனுஷன் நான் 
  • மேடையில் ஒரு பேச்சு, தரையில் ஒரு பேச்சு என்ற இருக்கக்கூடாது,

முறையான தகவல் தொடர்பு இருக்கும்போது, திருத்தொண்டர்கள் கடவுளின் வழியில் நடப்பார்கள்.


Presentation - Githiyon
அருளுரைத் தகவல்
  • அருளுரை அனைவரும் புரிந்துகொள்ளும் விதத்தில் தெளிவாக இருக்க வேண்டும்.
  • அறிமுகத்தில் மக்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும்.
  • கதை மற்றும் உதாரணங்கள் அருளுரையில் இருப்பது நல்லது.
  • இயேசுவின் வாழ்வை நமது வாழ்வோடு ஒப்பிட்டுப் பேச வேண்டும்.
  • அருளுரையில் ஏற்ற இரக்கம் தேவை.
  • சில பொன்னான குறிப்புகள் இருப்பது நல்லது.
  • நமது பார்வைகள் மக்கனை கவனிப்பதாக இருக்க வேண்டும்.
  • அருளுரைக்கான முழு தகவல்களையும் முன்னரே தயார் செய்ய வேண்டும்.
  • இயேசுவைப்போல அதிகாரம் கொண்டவர்கலாக பேச வேண்டும்.
  • பாவத்தைக் குறித்து பேசும்போது, மிகவும் கவனமாக பேச வேண்டும்.
  • அருளுரையில் சிறுவர்கள், வாலிபர்களின் கவனத்தை ஈர்க்க சில தகவல்கள் இருக்க வேண்டும்.

06/02/2026
Presentation - Gladys
Communication in Counseling
ஆலோசகர், ஆலோசனை பெறுபவர்

ஆலோசகர்
  • ஆலோசனை துறையில் பயிற்சி பெற்றவராக இருப்பர்.
  • தனி நபரின் சமூக உளவியல் பிரச்சனைகளை ஆராய்ந்து, நிவிர்த்தி செய்வது.
  • தனி நபரின் சுய புரிதலை மேம்படுத்துவது.
  • ஆலோசனை பெறுபவரின் நேர்மறையான மாற்றத்தை உருவாக்குபவராக இருக்க வேண்டும்.
  • Self Understanding Develop செய்பவராக இருக்க வேண்டும்.
  • நேர்மறை எண்ணங்களை உருபாக்குபவராக இருக்க வேண்டும்.

ஆலோசனை பெறுபவர்
  • ஆலோசகரிடமிருந்து உதவியையும், வழிகாட்டுதலையும் பெற்றுக்கொள்பராக இருக்க வேண்டும்.
  • தன்னுடைய சிக்கல்களுக்கு தீர்வு காண வேண்டும் என்பது தான் இவரின் நோக்கம்.
  • இதில் தொடர்பியல் பெரும் பங்கு வகிக்கிறது.

இது இரண்டு வகைபடும்
  • மொழித் தொடர்பு
  • மொழியற்ற தொடர்பு

மொழித் தொடர்பு
  • வார்த்தையின் மூலம் தொடர்பு கொள்வது.
  • பேசும் விதம், குரல் ஒளி, சொற்களின் தேர்வு மிகவும் முக்கியமானதாக இருக்க வேண்டும்.
  • ஆலோகர் அறிவுரை கூறும்போது, பெறுபவரின் மனநிலை சுருசுருப்பான, நிலையான மனநிலையாக இருக்க வேண்டும்.
  • Motivation, Encaraging

மொழியற்ற தொடர்பு
  • சொல் உபயோகிக்காமல் தொடர்பு கொள்வது
  • முக பாவனை, கை அசைவுகள், உடல் மொழி, கண் பார்வை.

திறமையான தொடர்புக்கான தத்துவங்கள்
அனுதாபம்
  • ஆலோசகர் ஆலோசனை பெறுபவரின் நிலையிலிருந்து, மனநிலையைப் பிரச்சனைகளைப் புரிந்து அறிவுரை சொல்ல வேண்டும்.
  • கேட்புத் திறன் – ஆலோசனை பெறுபவர் ஆலோசகரின் சொற்களை மதித்து, கேட்கவேண்டும்.
  • நம்பிக்கைக்குறியவர் – ஆலோசனை கூறுபவர் நம்பிக்கைக்குறியவராக இருக்க வேண்டும்.
  • ஆலோசனை பெறுபவர் சொல்லும் காரியங்களை, ஆலோசகர் மற்றவரிடம் கூறக்கூடாது.
  • திறந்த மனநிலை – ஆலோசனை பெறுபவர் கூறுவது, அவர் சூழலிலிருந்து புரிந்து கொண்டு, அவரை மதிப்பீடு செய்யாதவராக ஆலோசகர் இருக்க வேண்டும்.
  • ஆலோசனை தகவல் தொடர்பு என்பது உணர்ச்சிகளின் பரிமாற்றம் ஆகும்.

Madam
  • ஆயர் ஆற்றுப்பணி செய்பவராக இருக்க வேண்டும்.
  • நம்பகத்தன்மை உள்ளவராக இருக்க வேண்டும்.
  • பாதிக்கப்பட்டவர் தான் மனக்குமுரளை எத்தனை முறை மீண்டும் மீண்டும் சொன்னாலும் நாம் பொறுமையோடு கேட்க வேண்டும்.

Presentation – Jacob Stanly

பல்சமய சூழலில் தொடர்பு (Communication in a Pluralistic)
  • இன்றை சமூக சூழலில் மதம், சமயம், பொருளாதாரம், இனம், கலாச்சாரம், அரசியல் போன்ற பன்மை சூழல்களால் நிரம்பியுள்ளது.
  • தொடர்பு என்பது சமாதானம், புரிதல், ஒற்றுமைக்கான கருவியாகும்.
  • கிறிஸ்தவ அடிப்படையில் அன்பு, நீதி, ஒற்றுமை ஆகியவற்றின் அடிப்படையில் அமைகிறது.
  • மதம் மதத்திற்கு புறம்பான நம்பிக்கைகள்.
  • மொழி மற்றும் கலாச்சார வேறுபாடு
  • கருத்து முறண்பாடு
  • அதிகார சமநிலையின்மை.
  • இச்சூழலில் தொடர்பு என்பது வெறும்
  • பன்மை சூழலில் தொடர்பின் தேவை
  • பரஸ்பர பரிதலை உருவாக்க, முன் வெறுப்புகள் அகற்ற, சமாதானத்தை நிலைநிறுத்த, சமூக ஒற்றுமையை வளர்க்க, தொடர்பு இன்றியமையாதது.
  • தொடர்பு இல்லாத பன்மை சூழலில் குழப்பமும், மோதலும் உருவாகும்.

தொடர்பு கொள்ளும் கடவுள்
  • கடவுள் படைப்பு மூலமாக, இறைவாக்கினர் மூலமாக, இயேசு கிறிஸ்து மூலமாக தொடர்பு கொள்ளுகிறார்.
  • கடவுள் மனிதனை ஒதுக்கவில்லை, மனிதனோடு உரையாடுகிறார்.

திரித்துவம் தொடர்பின் மாதிரி
  • திரித்துவம் என்பது அன்பு, உறவு, பகிர்வு தொடர்பின் மாதிரி.
  • இது பன்மை சூழலில் தொடர்புக்கான இறையியல் மாதிரி.
  • வேறுபாடுகள் உள்ளது, ஆனால் பிரிவுகள் இல்லை.
  • கடவுள், மைந்தர், தூய ஆவியார் வேறுபாடு உள்ளது, பிரிவுகள் கிடையாது.
  • யோவான் 4 – சமாரியப் பெண்ணோடு தொடர்பு
  • இயேசு பாவிகள், ஒதுக்கப்பட்டவர்களோடு தொடர்பு கொள்ளுகிறார்.

பன்மைச் சூழலில் திருச்சபை
  • திருச்சபை உரையாடும் இடம்.
  • திருச்சபை அமைதியின் கருவி.
  • நற்செய்தியின் சாட்சியாக இருக்க அழைக்கப்படுகிறது.
  • கடவுள் மனிதனை தம்மைப்போலவே படைத்தார். (தொடக்கநூல் 1:27)
  • திருத்தூதுவர் பணிகள் 2: பன்மை சூழலை கடவுள் அழிக்கவில்லை என்று கூறுகிறது.
  • லூக்கா 10:33-37 நல்ல சமாரியன் உவமை. இது வேறுபாட்டைத் தாண்டிய அன்பைக் கூறுகிறது.
  • 2 கொரிந்தியர் 5:10 அமைதியின் திருப்பணியை கொடுத்தார் கடவுள்.

சவால்கள்
முன்வெறுப்பை விடுதல்
அதிகார பயன்பாட்டை விடுதல்

வாய்ப்புகள்
உரையாடல், பரஸ்பர கற்றல், முன்மாதிரியான வாழ்வு

Madam
  • பண்மை சூழலில் வார்த்தை சரியில்லை என்றால், வன்முறை உண்டாகும்.
  • நம் வார்த்தைகள் பிரிவினைகளை உண்டாக்குவதாக இருக்கக்கூடாது.

09/02/2026
Presenation – Janani Christyna
Freedom of Expression – கருத்துரிமை அல்லது வெளிப்பாட்டு சுதந்திரம்
  • கருத்துரிமை மனிதனுக்குக் கிடைத்த முக்கியமான உரிமைகளில் ஒன்று.
  • எண்ணங்கள், கருத்துக்கள், நம்பிக்கைகள், விமர்சனங்கள் இவைகளை எந்தவொரு அச்சமின்றி வெளிப்படுத்தும் உரிமையே கருத்துரிமை அல்லது வெளிப்பாட்டு சுதந்திரம்.
  • இதை கட்டுப்பாடின்றி பயன்படுத்தக்கூடாது. பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும்.
  • வெளிப்பாட்டு சுதந்திரம் என்பது பேசும் சுதந்திரம், எழுதும் சுதந்திரம், ஊடக சுதந்திரம், கதை, இலக்கியம், திரைப்படம் வழியாக கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமை ஆகும்.

இந்த உரிமைக்கான இரண்டு சட்டங்கள்.
UDHR – 1948 – மனித உரிமைகள் உலக பிரகடனம்
ஒவ்வொருவருக்கும் கருத்து சுதந்திரமும், வெளிப்பாட்டு சுதந்திரமும் உண்டு.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சர்வதேச ஒப்பந்தம் (ICCPR) - 1966
கருத்துக்களை தேடவும், பெறவும் உரிமை வழங்குகிறது.

விவிலியம்
1) மனிதன் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டவன் (தொ. நூ 1:27)
  • சிந்தித்தல், பேசுதல், தேர்வு செய்யும் சுதந்திரம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.
  • ஆதாமும், ஏவாளும் கடவுளுடன் உரையாடினார்கள். இதுவே மனிதனுக்கு கருத்துக்களை வெளிப்படுத்தும் திறன் இருப்பதை காட்டுகிறது.


2) உண்மையை பேசும் திறன். யோவான் 8:32
  • உண்மையைப் பேசுவது சில நேரங்களில் கடினமாக இருக்கலாம். திருவிவிலியத்தில் இறைவாக்கினர் அரசர்களிடமும், மக்களிடமும் கடவுளின் வார்த்தையை துணிவுடன் அறிவித்தனர்
  • எ.கா: 2 சாமுவேல் 12 – நாத்தான் இறைவாக்கினர், அரசர் தாவீது செய்த பிழையை வெளிப்படையாக கூறினார்.
  • எலியா ஆகாப் அரசரை கண்டித்தார்.
  • இதன் மூலம் கருத்துரிமை என்பது தவறைச் சுட்டிக்காட்டும் தைரியத்தை உள்ளடக்கியது.

3. அன்பில் பேசும் சுதந்திரம் (எபேசியர் 4:15)
  • கருத்தை வெளிப்படுத்துவது முக்கியம். அது அன்பில்லாமல் இருந்தால் மற்றவர்களைக் காயப்படுத்தும்.
  • இயேசு எப்போதும் உண்மையைப் பேசினார், ஆனால் கருணையுடனும், அன்புடனும் பேசினார்.
  • பாவத்தில் இருந்த பெண்ணை, கண்டித்தாலும், அவளை நிராகரிக்க வில்லை. யோவான் 8:1-11
  • சமாரியப் பெண்ணுடன் உரையாடி, உண்மையை வெளிப்படத்தினார். யோவான் 4
  • இதன் மூலம் கருத்துரிமை உண்மை, அன்பு இரண்டும் கலந்தது என அறிகிறோம்.

4. அநீதிக்க எதிராக குரல் கொடுக்கும் சுதந்திரம் (நீதிமொழிகள் 31:8)
  • வாய் இல்லாதவர்களுக்காக உன் வாயைத் திற.
  • சமுதாயத்தில் அநீதி, அடக்கமுறை, துன்பம் ஆகியவற்றிற்கு எதிராகப் பேசுவது ஒரு கிறிஸ்தவரின் பொறுப்பு.
  • இயேசு தாழ்த்தப்பட்டவர்களுக்காகப் பேசினார்.
  • மதத் தலைவர்களின் போலித்தனத்தைக் கண்டித்தார்.
  • இதன் மூலம் கருத்துரிமை நீதியை நிலைநாட்டும் ஒரு கருவியாக இருக்கிறது என்பதை அறியலாம்.

5. கட்டுப்பாடற்ற சுதந்திரத்தின் அபாயம் (கலாத்தியர் 5:13)
  • நீங்கள் சுதந்திரத்திற்கு அழைக்கப்பட்டவர்கள். அதை மாம்சத்திற்கான வாய்ப்பாக பயன்படுத்தாதிருங்கள்.
  • சுதந்திரம் என்ற பெயரில் பிறரை அவமதித்தல், பொய்யான தகவல் பரப்புதல், சண்டை எற்படுத்துதல், முதலிய ஏற்படுத்தக் கூடாது.

6. இன்றைய சமுதாயத்தில் கருத்துரிமை
  • இன்றை உலகில் சமூக ஊடகங்கள் மூலம் அனைவருக்கும் பேசும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. என்றாலும் அதில் நினைவில் கொள்ளவேண்டியது, உண்மையை சார்ந்து பேச வேண்டும், உண்மையைச் சார்ந்து சரிபார்த்துப் பேச வேண்டும், பிற மதத்தாரை மதிக்க வேண்டும், அமைதியை ஊக்கவிக்க வேண்டும், கடவுளுக்குப் பிரியமான முறையில் பேச வேண்டும்.
கொலோசெயர் 4:6

இறையியலாளர்
a) ஆண்ரூ டி. வாக்கர் (Andrew T. Walter)
  • மனிதர்கள் கடவுளுடைய உருவில் படைக்கப்பட்டவர்கள் என்பதால் உண்மையைத் தேடவும், பேசவும் இயற்கையான திறன் கொண்டவர்கள். சுதந்திரமாக பேசுவது மனிதனின் அடையாளத்தின் ஒரு பகுதியாகும்.

b) Graham Joseph Hill
  • இயேசுவைப் பின்பற்றுவது உண்மையைப் பேசுவதையே குறிக்கிறது. ஆனால், அது தாழ்மையும் அன்பும் கொண்டதாக இருக்க வேண்டும். வெறுப்பு அல்லது மனிதர்களை இழிவுபடுத்தும் பேச்சு சுதந்திரம் அல்ல.
  • கருத்துரிமை என்பது நமது உரிமை. எனவே நாம் பேசும்போது ஒவ்வொரு சொல்லும் மனிதரை உயர்த்தக்கூடியதாய் இருக்க வேண்டும். அமைதியை வளர்க்கக்கூடியதாக இருக்க வேண்டும். கடவுளுக்கு மாட்சி சேர்க்கக்கூடியதாக இருக்க வேண்டும். (திருப்பாடல்கள் 19:4)

09/02/2026
Presentation – Jeba Kumar
Censorship – தனிக்கை
  • இது ஒரு செய்தியாகவும், கருத்தாகவும், இணைய ஊடகமாகவும், அதிகாரம், நிறுவனங்களை கட்டுப்படுத்தும் செயல்முறை.
  • நூல், திரைப்படம், செய்தித்தால் போன்றவற்றை கட்டுப்படுத்துவது.

1) அரசு தனிக்கை


20/02/2026
Presentation - Luke Gerason
பதிப்புரிமையும் இலக்கியத் திருட்டும் (Copyright & Plagiarism)
  • ஒருவர் உழைத்த உழைப்பைத் திருடுவது சம்பந்தப்பட்டது.
  • ஒருவர் உழைப்பைத் திருடும் நபருக்கு 6 மாதம் 3 ஆண்டுகள் தண்டனை கொடுக்க சட்டம் உண்டு.
Mam
  • ஒருவர் தம் சிந்தனைத் திறன் பயன்படுத்தி உருவாக்கும் ஓர்  படைப்பு. (இசை, பாடல்)
  • இந்த படைப்பை யாரேனும் ஒருவர், அந்த படைப்பாளருக்குத் தெரியாமல் பயன்படுத்துவது தான் கருத்து திருட்டு (Copyright).
  • நாம் பேசும்போது, ஒரு கருத்தை சொல்லுகிறோம் என்றால், அது நானாக  சொல்லும் கருத்தா? வேறு எவருடைய கருத்தா? என்று நாம் பார்க்க வேண்டும். வேறு ஒருவரின் கருத்து என்றால் அவர் பெயரை பயன்படுத்த வேண்டும்.
  • Intellectural Property Rihgt என்ற சட்டம் இருக்கிறது. 

Presentation - Oviya
அச்சு ஊடகம் (Print Media)
  • அச்சு ஊடகத்தினால் திருமறை பலருக்கும் பயன்பட்டது.
  • அச்சு ஊடகம் சமூக மாற்றத்திற்கான கருவியா மாறியது.

வகைகள்
  • செய்தித்தாள்கள்.
  • இலக்கியங்கள்
  • ஆய்விதழ்கள்
  • சிற்றேடுகள் விளம்பரத் தாள்கள்
  • போஸ்டர்கள்

நன்மைகள்
  • நீண்ட காலம் பாதுகாக்கப்பட உதவுகிறது.
  • திருமறை போன்ற நூல்கள் பல ஆண்டுகள் பாதுகாக்கப்படுகிறது.
  • அட்சு ஊடகத்தை பயன்படுத்த மின்சாரம் போன்ற தொழில் நுட்பங்கள் தேவை இல்லை.

குறைகள்
  • அதிக செலவு
  • காகிதம், மை, இயந்திரம், போக்குவரத்து தேவை.
  • காகிதத்திற்காக மரங்களை வெட்ட வேண்டி உள்ளது.
  • அச்சுப் பொருட்கள் நேரடியாக செல்ல காலம் ஆகும்.
  • பிழைகளை திருத்த வாய்ப்பு இல்லை.
  • புத்தகங்களை பாதுகாக்க இடம் தேவை. காலப்போக்கில் சேதம் அடையளாம்.
  • தற்காலத்தில் வாசிப்பது குறைந்துவிட்டது.

விமர்சனங்கள்
  • அச்சு ஊடகம் மெதுவாக செயல்படுகிறது.
  • கல்வி அறிவு தேவை. எழுத்தறிவு இல்லாமல் பயன்படுத்த முடியாது.

இறையியல்
  • மார்டின் லூத்தர் தன் சீர்திருத்த இயக்கத்தை அச்சு ஏடுகள் மூலம் பரப்பினார்

இந்திய சூழல்
  • இந்தியாவில் பல செய்திதத்தாள்கள் தினமும் வெளியாகின்றன.

Mam
  • சமுதாயத்தில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவர அச்சு ஊடகமே பயன்படுத்தப்பட்டது.
  • கல்வி அறிவு இல்லாதவர்களுக்கு அச்சு ஊடகம் பயன்படாது.
  • அச்சு ஊடகத்தின் தாக்கம் பெரிய மாற்றத்தையும் கொண்டு வந்துள்ளது.
  • அச்சு ஊடகம் அரசுக்கு சாதகமாகவே தற்போது பயன்படுத்தப்படுகிறது.
  • யாரிடம் பணம் இருக்கிறதோ, அவர்களுக்கு துணையாக ஊடகம் செயல்படும்.

Radio 
Mam
  • எல்லா இடங்களுக்கும் எளிதில் கொண்டு செல்ல முடியும்.
  • நற்செய்தி பரப்புவதற்கு மிகவும் பயன்பட்டது.

தொலைக்காட்சி (Television)
Mam
Electroni Church - Tele evangelist 
Online Church - E Pastors 

மாற்று ஊடகம் (Alternative Media)
கோயில் திருவிழாக்கள்
நாடகக் கலைகள் மூலமாக கருத்துக்கள் பரிமாறப்பட்டது.
இன்று இந்த கலை அழிந்து வருகிறது. நாடகங்களைப் பார்ப்பதற்கு இன்று ஆட்கள் அதிகம் இல்லை. இதனால் நாடகக் கலைஞர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.