தமிழ்நாடு இறையியல் கல்லூரி
அரசரடி, மதுரை 16.
திறனாய்வு வழிபாடு 2025 - 2026
செம்பொருள்: படைப்பின் நிறைவை நோக்கி நடத்துகின்ற ஓய்வுநாள்
Theme: "Sabbath Leads to the Fullness of Creation"
வழிபாடு நடத்துபவர்: திருமிகு.செ.மேத்யூ
திறனாய்வு மாணவர்: திருமிகு.செ.அருண்குமார் பீட்டர்
திறனாய்வு ஆசிரியர்: அருட்பணி.முனைவர்.இராக்லாண்ட் செல்வராஜ்
நாள்: 28.01.2026 (புதன் கிழமை)
நேரம்: காலை 06:00 மணி
இடம்: கிறித்தரசர் வழிபாட்டுமனை
வாழ்த்தும் வரவேற்பும் (Greetings and Welcome):-
மூவொரு கடவுளின் திருப்பெயரால் இத்திறனாய்வு வழிபாட்டுக்கு வருகை தந்திருக்கும் உங்கள் யாவரையும் என் இருகரம் கூப்பி அன்புடன் வாழ்த்தி வரவேற்கிறேன்.
வழிபட அழைப்பு (Call to Worship):-
காலை தன் புதுமையினால் நம்பிக்கைத் தருகின்றது, மாலை தன் குளுமையினால் ஆறுதல் தருகின்றது, இரவு தன் ஓய்வினால் நிறைவைத் தருகின்றது, இலை தன் விழுதலினால் பணிவையும், அலைகள் தம் ஓசையினால் ஆற்றலையும், பூமி தன் சுழற்சியினால் ஒழுங்கையும் அறிவித்து, கடவுளைத் தொழுகின்றன. அப்படைப்புகளோடு இணைந்து நாமும் கடவுளை வழிபடுவோம் வாருங்கள்.
தொடக்க இறைவேண்டல் (Opening Prayer) :-
எங்கள் படைப்பாளராம் கடவுளே, இந்தப் புதிய நாளுக்காக நன்றி செலுத்துகின்றோம். ஒவ்வொரு நாளும், எங்களுக்கு நினைவாற்றல் மேம்படவும், உணர்வுகள் சமநிலை அடையவும், படைப்பாற்றல் வளரவும், உம் அருளீந்து வருகின்றீர், இயந்திர மனிதரிலிருந்து மனிதராகவும், அவசர வாழ்க்கையிலிருந்து பொருளுள்ள வாழ்க்கைக்கும், ஓய்வு நாள் படைப்பின் நிறைவு என்பதை புரிந்து கொள்ளவும் இங்கே கூட்டிச் சேர்த்திருக்கின்றீர் உமக்கு நன்றி செலுத்துகின்றோம். இவ் வழிபாட்டில் உம் இருத்தல் நிலையை உணரவும் அருள் தாரும். இந்த வழிபாட்டின் கூறுபாடுகள் அனைத்தும் உமக்கு மாட்சியைக் கொண்டு வருவனவாக., இந்த வழிபாட்டின் தொடக்க முதல் நிறைவு வரை உம் அருள் எங்களை வழி நடத்திச் செல்ல உம் அருள் தாரும். இவை அனைத்தையும் திருமகன் இயேசு கிறிஸ்துவின் திருப்பெயராலே வேண்டுகின்றோம், எங்கள் படைப்பாளராம் கடவுளே,. ஆமென்.
ஒளியேற்றல் பாடல் (Song Of Lighting):
யூபிலி அரசரடி புத்துயிர்ப் பாடல் எண் 202
1. ஒளியென உலகில் உதித்தவர் இயேசு
ஒளியென விளங்க அழைக்கிறார் நம்மை
ஓடியே வருவோம் ஒருமித்தே உழைப்போம்
ஒரிறை அவரை உண்மையாய்த் தொடர்வோம்
2. இருளதின் பிடியில் இருக்கின்ற உலகை
அருளவர் துணையால் விடுவித்துக் காப்போம்
மருளதை நீக்கும் மன்னவர் அவரின்
கருணையின் நிழலில் கடமைகள் புரிவோம்
3. வறுமையாம் இருளில் வாழ்ந்திடும் மாந்தர்
சிறுமைகள் நீங்கி சீர்ப்பட உழைப்போம்
தனிமையைத் துரத்தி நட்பினை அளிப்போம்
கனிவுடன் பிறர்க்குக் கடன்பணி புரிவோம்
4. நாட்டினில் நடப்புகள் இருளடைந்திருக்க
போட்டிகள் மிகுந்து பிரிவினை மிஞ்சிட
நாட்டமுடன் நாம் நாயகர் இயேசு
காட்டிடும் பாதையில் களிப்புடன் செல்வோம்
பாடல்: மெ.தாமஸ் தங்கராஜ்
பிழையுணர அழைப்பு (Call to Confession) :-
படைப்பை மன நிறைவுடன் படைத்த கடவுள், ஓய்வு நாளை அருளாகத் தந்த கடவுள், அவற்றின் ஒழுங்கிற்குள் வாழ்வதற்கு நம்மை அழைக்கின்றார், ஆகவே நாம் அவற்றிற்கு எதிராக செய்த நமது பிழைகளை உணர்ந்து அறிக்கை செய்வோம் வாருங்கள்.
பிழை அறிக்கை (Confession of Sins) :-
நடத்துநர்:
நீர் கொடுத்த ஓய்வு நாளை அருளாக ஏற்காமல், அவசரம் நிறைந்த வாழ்க்கையால் அதைப் புறக்கணித்தோம். படைப்பின் ஓய்வுகளை மதிக்காமலும் மற்றவர்களின் ஓய்வுகளை மறுத்தும் அவர்களின் சுமைகளைப் பெருக்கியுள்ளோம். தன்நலத்திற்காக மனிதர்களையும் இயற்கையையும் சுரண்டியுள்ளோம். படைப்பின் ஒழுங்கை மீறி ஓய்வில்லாத, வாழ்வைத் தெரிந்தெடுத்து, ஓய்வின் முதன்மையை வெறும் சடங்காக மாற்றிக் கொண்டோம். இப்போது இவை பிழைகள் 6T60T அறிகின்றோம், உணர்கின்றோம், வருந்துகின்றோம்.
திருஅவை:
எங்களை மன்னியும் இறைவா மன்னியும்.
நடத்துநர்:
ஆறுகள், ஏரிகள், குளங்கள், குட்டைகள், அனைத்தும் படைப்பின் உயிர்நாடிகள். ஆனால் அவற்றில் கழிவுகளைக் கொட்டி, ஓய்வில்லாத மாசுபாட்டை ஏற்படுத்தியுள்ளோம். காடுகள் "படைப்பின் நுரையீரல்” ஆனால் வளர்ச்சியின் பெயரில் அவற்றை வெட்டி, பருவ மழை பொய்த்தல், பூமி வெப்பமயமாதல், போன்ற தீங்கை ஏற்படுத்தியுள்ளோம். விலங்குகள், பறவைகள், மீன்கள் அனைத்திற்கும் வாழ்விடமும் ஓய்வும் தேவை. ஆனால் வேட்டையாடுதல், நகரமயமாக்கல், தொழிற்சாலைகள் அமைத்தல் ஆகியவற்றின் மூலம் உயிரினச் சூழலின் அமைதியைக் குலைத்துள்ளோம். இப்போது இவை பிழைகள் என அறிகின்றோம், உணர்கின்றோம், வருந்துகின்றோம்.
திருஅவை:
எங்களை மன்னியும் இறைவா மன்னியும்.
நடத்துநர்:
ஓய்வின் அமைதியில் உமது குரலைக் கேளாமல், உமது திருவுளத்தை உணராமல், எங்களின் பேரொலியை ( இரைச்சலை ) மேலிடச் செய்தோம். இப்போது இவை பிழைகள் என அறிகின்றோம், உணர்கின்றோம், வருந்துகின்றோம்.
திருஅவை:
எங்களை மன்னியும் இறைவா மன்னியும்.
(நம்முடைய தனிப்பட்ட பிழைகளை அறிக்கை செய்வோம்)
பிழை மன்னிப்பின் உறுதி (Absolution):-
பிழைகள் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், செய்த பிழைகளை நினைத்து வருந்துவதும் மனம் திருந்துவதும் அதைவிட மிகப்பெரியது. ஆதலால் தீங்கிலிருந்து நன்மைக்கும், அடிமைத்தனத்திலிருந்து விடுதலைக்கும் இறப்பிலிருந்து உயிர்புக்கும், நேராக கடவுள் நம்மை நடத்துவாராக. ஆமென்.
திருமறைப்பாடங்கள் (Scripture Readings) :-
1. தொடக்கநூல் 1:312:3
Genisis 131-2:3
2. எபிரேயர் 4:2-11
Hebrew 4: 2-11
3. தூய மாற்கு 3:1-6
St.Mark 3:1-6
(நாடக வடிவில்)
சிறப்புப் பாடல்
கடவுளே உன்ன நம்பி நாலேல்லாம் காத்திருந்த
கண்முடி தூங்கலையே வேதனையும் நீங்கலேயை
1) படைப்பயே இங்க தானே காத்து இருக்கு உன்ன நம்பி
உழவிலே விதையிலே உம் உதவி இங்க வேண்ணும்
வளர்ச்சிலே விளைச்சலிலே உம் கரமே கூட வேண்ணும்
இறைவனே உன்னை எண்ணி உம் குரலும் கேட்டுருச்சு
2) இயேசுய்யா நீங்க போது வாழ்வலிக்க வந்தாச்சு
நாங்கபட்ட சுமை எல்லாம் இனியேல்லாம் மாறி போகும்
கல்லான மனித எல்லாம் நீங்க தேட்ட மாரிடும் ஐயா
இது போதும் எங்களுக்கு வேறு எதுவும் வேண்டாம் ஐயா
பாடல், பண்: செ.மேத்யூ
அருளுரை (Sermon):-
தலைப்பு: "படைப்பின் நிறைவை நோக்கி நடத்துகின்ற ஓய்வுநாள்"
பற்றுறுதி அறிக்கை (Affirmation of Faith):-
(திருத்தூதுவர் பற்றுறுதி அறிக்கையைத் தழுவியது)
அனைத்துப் படைப்புகளுக்கும் ஓய்வு நாளின் நிறைவைத் தரும் கடவுளை நம்புகின்றோம். மானுடத்தின் நடுவில், ஓய்வு நாள்களை இழந்து தவிக்கும் மக்களுக்குப் புதிய விடியலைத் தருகின்ற இயேசு கிறிஸ்துவையும் நம்புகின்றோம். தூய ஆவியார் மூலம் கருவுற்று கன்னி மரியாளிடத்தில் பிறந்து மானுடரில் ஓய்வு நாளின் விழுமியங்களைப் பறைசாற்றுகின்றார் எனவும் நம்புகின்றோம். கடவுள் கொடுத்த ஓய்வு நாளை நன்மைக்கு எதிராகவும், வருமானத்திற்காகவும் பயன்படுத்திய ஆதிக்க வர்க்கத்தினரை எதிர்த்துப் போராடியதால் பொந்தியு பிலாத்துவின் காலத்தில் பாடுபட்டு சிலுவையில் அறையுண்டு மரித்து அடக்கம் செய்யப்பட்டார். பெருங்குழி இறங்கி மரித்தோர்களிடமிருந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். அவர் செய்த நன்மையை ஒய்வு நாளில் நாம் சிந்திப்போம் என எண்ணி கடவுளிடம் அமர்ந்துள்ளார்.கடவுள் கொடுத்த ஓய்வு நாளில் தன்நலமாய் வாழ்வோரையும், ஓய்வு நாளைத் தவறாகப் பயன்படுத்துவோரையும் நடுத்தீர்க்க வருவார். படைப்பின் நிறைவை நோக்கி நகர்த்துகின்ற தூய ஆவியாரையும் நம்புகின்றோம். பொதுவாயிருக்கின்ற தூய திருச்சபையும், தூயோரின் கூட்டுறவும், பிழைபொறுப்பும், கடவுள் ஏற்படுத்திய ஓய்வு நாளில் உடல் உயிர்ப்பும்,நிறைவும் உண்டென்று நம்புகின்றோம். ஆமென்.
நன்றி மன்றாட்டு (Thanks Giving and Intercessory) :-
நன்றி செலுத்துவோம்:
- இன்றைய உலகில், காடுகளை அழிக்கின்றோம், நீர் நிலைகள் வற்றிப்போகின்றன, உயிரினங்கள் தங்கள் வாழ்விடங்களை இழந்து தவிக்கின்றன; இச்சூழல்களிலும் கூட, உமது படைப்புகள் இன்றும் உயிரோட்டம் கொண்டிருக்கின்றன. உமது இந்த படைப்பின் சிறப்புக்காக நன்றி செலுத்துகின்றோம். ஓய்வு நாளின் வழியாக, பூமிக்கும் ஓய்வு தேவை, உயிரினங்களுக்கும் பாதுகாப்புத் தேவை என்று உணர்வடையச் செய்து, உமது படைப்பின் காவலர்களாக எங்களை மாற்றி, தன்நல ஓட்டத்தில் ஓய்வில்லாமல் ஓடும் எங்கள் வாழ்வைத் தடை செய்து படைப்பின் முழுமையைப் பாதுகாக்கும் பொறுப்புணர்வு எங்களுக்கு உண்டு என்ற சிந்தையை அளித்தமைக்காக இறைவா உமக்கு நன்றி செலுத்துகின்றோம்.
- இன்றைய இளைய தலைமுறைகளுக்குக் கல்வியும் எதிர்காலக் கனவுகளும் தொடர்வதற்காகவும், உழைக்கும் மக்களுக்கு அன்றாட வாழ்வாதாரம் கிடைப்பதற்காகவும், பெண்கள், குழந்தைகள், போன்றோரின் பாதுகாப்பை நோக்கி முன்னேறுவதற்கான அரசு திட்டங்களுக்காகவும் உமக்கு நன்றி செலுத்துகின்றோம். அறைகூவல்கள், பொருளாதார அழுத்தங்கள், சமுதாய மாற்றங்கள், அரசியல் குழப்பங்கள் நடுவிலும், எங்கள் நாடு சிதைந்து போகாமல் ஒன்றிணைக்கும் உம்முடைய பரிவுள்ளத்திற்காகவும் இறைவா உமக்கு நன்றி செலுத்துகின்றோம்.
மன்றாடுவோம்:
- வளர்ந்து வரும் இன்றைய செயற்கை நுண்ணறிவுக் காலத்தில் மனிதர், ஓய்வை மறந்து உழைப்பும், உழைப்பை மறந்து ஒய்வும், கொண்ட சூழலில் மானுடர் நிலையற்று அலைந்து திரிகின்றனர். ஆதலால் உழைப்பின் மேன்மையையும், ஓய்வின் சிறப்பையும் அறிந்து கொண்டு, வாழ்வை உறுதி செய்யும் கடவுளோடு இணைந்து கொள்ள அருள் புரிய வேண்டுமென இறைவா உம்மிடம் மன்றாடுகின்றோம்.
- எங்கள் தமிழ்நாட்டு அரசின் ஓய்வூதியத் திட்டம், மகளிர் உதவித்தொகைத் திட்டம், முதியோர் ஓய்வூதியத் திட்டம் என்ற சிறப்புத் திட்டங்கள் மூலமாக பலர் நன்மை அடைந்து வருகின்றனர், இருந்த போதிலும் இன்னும் பெரும்பான்மையான மக்கள் இத்திட்டங்களுக்குத் தகுதியுடையோராய் இருந்தும், எந்தவிதப் பயனும் பெறாமல் வறுமையில் இருந்து வருகின்றனர், ஆகவே இத்திட்டங்களுக்குத் தகுதியுடையோர் இனம் கண்டு கொள்ளவும், அவர்களின் தேவைகள் சந்திக்கப்படவும், அரசின் நலத்திட்டங்கள் அவர்களிடம் விரைவில் சென்றடையவும், இறைவா உம்மிடம் மன்றாடுகின்றோம்.
- ஆற்றல் படுத்துகின்ற எங்கள் அன்பின் கடவுளே, எங்களோடு இறையியல் பயிலும் நான்காம் ஆண்டு மாணாக்கர் திருமிகு.ஜூலி ஜெபராணி அவர்களின் தந்தைக்கு அறுவை சிகிச்சை நல்ல முறையில் நிறைவடைந்திருக்கின்றது, அவர்கள் முழுமையான உடல் நலம் பெற இறைவா உம்மிடம் மன்றாடுகின்றோம்.
இவை அனைத்தையும் உம் திருமகன் இயேசு கிறிஸ்துவின் திருப்பெயராலே வேண்டிக்கொள்கின்றோம். எங்கள் வேண்டுதல்களைக் கேட்டருளும் இறைவா. ஆமென்..
ஆண்டவர் கற்பித்த இறைவேண்டல் (Lord's Prayer):-
விண்ணுலகிலிருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவதுபோல மண்ணுலகிலும் நிறைவேறுக! இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளதுபோல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும், தீயோனிடமிருந்து எங்களை விடுவியும். ஆட்சியும், வல்லமையும், மாட்சியும் என்றென்றும் உமக்கே. ஆமென். (மத்தேயு 6:9-13)
ஒப்படைப்பு (Dedication):-
இறைவாழ்த்து (Benediction) (அனைவரும் எழுந்து நிற்க) :-
உழைப்பதற்கு அழைப்பும், ஓய்வெடுப்பதற்குக் கட்டளையும் கொடுக்கும் கடவுளின் அன்பும், நீதியோடு கூடிய ஓய்வுநாளை விரும்பும் இயேசுவின் அருளும், படைப்புகளோடு இணைந்து வாழ்வதற்கு உந்துதல் தரும் தூய ஆவியாரின் கூட்டுறவும் நம் அனைவருடனும் இன்றும் என்றும் நின்று நிலவுவனவாக. ஆமென்.
நிறைவுப் பாடல் (Closing Song) :- மங்கலக் கவி எண் 4
தெய்வ ஆசீர்வாதத்தோடே
அடியாரை அனுப்பும்;
வார்த்தை என்னும் அப்பத்தாலே
போஷித்து வளர்ப்பியும்.
இப்போதும்மைத் தேடிவந்து
மனதாரப் போற்றினோம்;
மோட்ச லோகத்தில் களித்து,
உம்மை வாழ்த்தித் தொழு வோம்.
நன்றி அறிதல் உள்ளத்தோடு யாவரும் இணைந்து சொல்லுவோம்:
என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு!
என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! ஆமென். (திருப்பாடல்கள் 103:1,2)
அனுப்புதல் (Commissioning):-
நடத்துநர்: கடவுள் உங்களோடு இருப்பாராக.
திருஅவை: அவர் உம்மோடும் இருப்பாராக
நடத்துநர்: உழைப்பும் ஓய்வும் கடவுள் கொடுத்த நிறைவு என்ற புரிதலோடு புறப்பட்டுச் செல்வோம்
திருஅவை: கடவுளின் திருப்பெயராலே ஆமென்.
இன்றைய வழிபாட்டில் கலந்து கொண்ட உங்கள் யாவருக்கும், எனக்கு உதவி செய்த பேராசிரியர்மார், மாணாக்கர்மார் உங்கள் அனைவருக்கும் என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்..
Sermon Title: "Sabbath Leads to the Fullness of Creation"
That's the title I've chosen for this message.
When the Bible talks about creation, Jürgen Moltmann in his book "God in Creation beautifully describes the future of creation as what ancient thinkers called "the kingdom of glory." In other words, creation isn't finished yet; it's heading toward something glorious. But when Scripture speaks about the **Sabbath** in connection with creation, it shows that rest was built into the very beginning pointing forward to creation's full redemption and completion. The whole world was made with the Sabbath as its ultimate goal and climax.
In Jewish tradition, failing to keep the Sabbath was seen as seriously as breaking the covenant itself (see Exodus 31:14; 35:2). Right from the start, the Sabbath was set apart as a day of joy, holiness, and delight (Deuteronomy 5:12). It was meant for everyone slaves, foreigners, Israelites, animals all were to rest on that day (Exodus 23:12; 34:21). The great festivals of Israel (Passover, Pentecost) were tied to this rhythm of rest and remembrance.
The key truth we need to grasp is this: **The Sabbath was made for people; people were not made for the Sabbath** (Mark 2:27). Humanity comes first in God's heart.
When I look closely at Genesis 1:31 and 2:3, I see God surveying everything He had made and declaring it **very good**. Then He blesses and sanctifies the seventh day. That's why this message carries the title "Sabbath Leads to the Fullness of Creation."
Point 1: The Sabbath Completes Creation Through God's Word
In Genesis 1, after six days of work, everything is declared "very good." On the sixth day as evening falls God gives His final blessing. In the same way, on the cross, Jesus cries out "It is finished!" using that same sense of completion and fulfillment.
The Hebrew word *bo'qer* (morning) carries a sense of clarity and order emerging from darkness. The creation account pairs the days in a beautiful symmetry: days 1-3 form the realms (light/dark, sky/sea, land/plants), and days 4-6 fill them (sun/moon/stars, birds/fish, animals/humanity). It's like two matching halves lower framework and upper fulfillment coming together as counterparts.
Genesis 2:1 sums it up as a great "hymn of creation." It celebrates the Creator who, having finished His work, enters rest. This shows that rest isn't laziness or exhaustion; it's the joyful completion of purposeful work. God rests not because He's tired, but because everything is perfectly done nothing missing, nothing broken, nothing to add.
The fourth commandment (Exodus 20) lifts this up for humanity: our Sabbath rest mirrors and participates in God's rest. In God's creation there were no barriers or failures so the Sabbath becomes the sign that His purpose has been fully achieved.
When the work is complete, God rests not from weariness, but from satisfaction. He saw that it was **very good**, and nothing in that perfect order ever needed changing. Rest comes from peace and wholeness, not from collapse. The Sabbath day is made holy because it reveals God's glory.
Point 2: The Sabbath Day - Jesus Brings Life and Healing
Jesus enters the synagogue again, and there is a man with a withered hand. The religious leaders watch closely: Will He heal on the Sabbath? If so, they can accuse Him.
Jesus asks them pointed questions, but they stay silent. Looking around at their hardness of heart, He feels anger and sorrow. Then He simply says to the man, "Stretch out your hand." The hand is restored right there on the Sabbath.
The Pharisees were furious. They wanted strict rule-keeping, even if it meant leaving someone in pain. But Jesus shows that **doing good, saving life, is always lawful** especially on the Sabbath. Compassion trumps rigid legalism.
Jesus exposes their hypocrisy. They surround Him with "law, law, law," yet miss the heart of the law mercy and restoration. With one powerful word, He heals the man, showing creative, life-giving love in action.
This echoes Moses at the burning bush, but now Jesus brings the deeper fulfillment. The crowds outside, unable to grasp His mind, plot against Him joining religious and political powers to destroy Him. Yet Jesus keeps living out truth: He redeems life itself. Whatever happens, He sees it with compassion and acts.
He calls us to equality and justice. As Hebrews 4:6-10 reminds us, true rest comes only when we enter God's rest through faith not by our own endless striving.
Exodus 20:11 - The Sabbath is rest for everyone (Sabbath leads to equality).
Hebrews 4:10 - Those who enter God's rest cease from their works, just as God did from His.
I once heard a story that stuck with me. In a humble place near St. Thomas Mount, there was a brother who lost his eyesight after marriage. He had a sister in a difficult situation. He hid his struggles, raised his children without them even knowing his face clearly. He worked tirelessly day after day, late into the night carrying debts, family responsibilities, endless labor. No rest. A woman in his life said she saw him as someone constantly giving without receiving rest.
How many in our churches and society live like that? Exhausted, burdened, working just to survive. What are we doing for them? We need to stop and ask: In situations like this, what should we do?
In conclusion, the Sabbath is:
1. Rest that heals and refreshes the mind and soul.
2. Rest joined with true liberation and freedom.
3. Rest joined with justice and fairness.
4. Rest without oppression or exploitation.
If we bind ourselves to God's Word, follow the way of Jesus Christ, and rely on the Holy Spirit, we can experience this deep rest even here in this broken world. May God grant us and through us, others this complete Sabbath peace of heart and mind. Amen.
Translated By
Mr.Immanuvel.K BD II
எனக்கு கொடுத்திருக்கிற தலைப்பு "படைப்பின் நிறைவை நோக்கி
"Sabbath leads to the fullness of creation"
படைப்பை குறித்து சொல்லும்போது "Moltmann" அவரின் கருத்து ("creation has been termed the kingdom of glory") படைப்பு இறை மாட்சியென்று பெயர் பெற்றது). படைப்பின் ஓய்வு நாளை குறித்து கூறும் போது படைப்பு தொடக்கத்தில் இருந்தே அதன் மீட்பை நோக்கி சீரமைக்கப்பட்டுள்ளது, ஏனெனில் உலக படைப்பு படைப்பின் பண்டிகையான ஓய்வு நாளை முன்னோக்கி சுட்டிக்காட்டுகிறது. யூத முறைப்படி ஓய்வு நாளை கடைபிடிக்காமல் இருப்பது யூத சமயத்தை நிராகரிப்பதற்கு சமம் என்று கருதுகின்றனர் (வி.பயணம் 31:14, 35:2)
தொடக்கத்தில் சாபத்து மகிழ்ச்சி நாளாகவும், ஓய்வின் நாளாகவும், புனித நாளாகவும் கொண்டாடப்பட்டது. (இணைச்சட்டம் 5:12) அடிமைகள், விலங்குகள் இஸ்ரேலர் எல்லாரும் வைத்திருக்கும் நாள் தான் அது. சாபத்து (வி.பயணம் 23:12, 34:12) இஸ்ரேலரின் ஆண்டு விழாக்களை சாபத்து (ஜனவரி- பிப்ரவரி) மாதத்தில் அனுசரிக்கப்படுகிறது. நாம் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று ஒய்வு நாள் மனிதருக்காக உண்டாக்கப்பட்டது, மனிதர் ஓய்வு நாளுக்காக உண்டாக்கப்படவில்லை (மாற்கு 2:27).
நாம் படிக்க கேட்ட திருமறையில் தொடக்க நூல் 1:31 2:3 பகுதியில் இருக்கும் திருமொழிகளை பார்க்கும் போது, தான் உருவாக்கி அனைத்தையும் நோக்கி நன்றாக இருந்தது என்று கண்டு கொண்டார். இதற்கு நான் கொடுத்திருக்கிற தலைப்பு
1."ஓய்வு நாள் : கடவுளின் வார்த்தையால் படைப்பு முழுமை அடைகிறது”
தொடக்க நூள் 1:33 இல் மிகவும் நன்றாக இருந்தது, ஆறாம் நாள் வெள்ளிக்கிழமை அன்று கடவுள் படைத்து நிறைவு செய்த போது வழங்கிய இறுதி ஆசீர்வாதம், இதே போல அதே வாரத்தில் அதே நாளை கிறிஸ்து கூறிய முடிந்தது "It's finished "என்ற இறுதி வார்த்தையுடன் ஒப்பிடலாம்.
Bo'qer என்பதற்கு காலை என்று பொருள், இவை பெயர்ச்சொல் : ஆண்பால் ஒற்றுமை விளக்கம், விடியல் காலை என்பது பொருள். ஒன்றில், இரண்டாம் திருமொழியில் குறிப்பிடப்பட்டிருந்த உருவற்று வெறுமையாக இருந்தது. சரி செய்யும் வகையில் ஒழுங்கும் நிறைவும் மீட்டெடுக்கப்பட்டு இங்கு நிறைவு பெறுகிறது. ஆகவே ஆறு நாட்களின் படைப்பு செயல்களின் விவரம் அந்த இரண்டு திருமொழி இணைப்பாக "Counter Part" விளக்குகிறது. இந்த ஆறு நாட்கள், இரண்டு, மூன்று நாட்களாக பிரிக்கப்படுகின்றன. அவை நிகழ்வின் ஓட்டத்தில் ஒன்றுக்கொன்று ஒத்து இருக்கின்றன.
முதல் நாள், நான்காம் நாட்கள் ஆழத்தின் மேற்பரப்பிலிருந்து இருளை குறிக்கின்றன. இரண்டாம் நாள், ஐந்தாம் நாள் காற்று நீர்ச்சூழல்களின் குழப்பம் வெறுமையைக் காட்டுகிறது. மூன்றாம் நாள், ஆறாம் நாள் நிலத்தின் அதே நிலைமையை காட்டுகிறது. முதல் மூன்று நாட்கள் கீழ்மட்ட ஒழுங்கை குறிக்கிறது. அடுத்த மூன்று நாட்கள் உயர்மட்ட ஒழுங்கை குறிக்கிறது. முதல் நாளில் பூமியின் மேற்பரப்பிலிருந்து இருள் நீக்கப்படுகிறது நான்காம் நாளில் வானத்தின் மேற்பரப்பிலிருந்து இருள் நீக்கப்படுகிறது, இரண்டாம் நாள் நீர் வானத்திற்கும் மேல் கீழ் என்று பிரிக்கப்படுகிறது. ஐந்தாம் நாளில் அவற்றின் வாழும் உயிரினங்கள் உண்டாக்கப்படுகின்றன. மூன்றாம் நாளில் மண்ணில் வேரூன்றிய தாவரங்கள் படைக்கப்படுகின்றன, ஆறாம் நாளில் நிலத்தில் சுதந்திரமாக நடமாடும் மிருகங்களும் படைக்கப்படுகின்றன.
தொடக்க நூல் 2:1 இந்தப் படைப்பு பாடலின் (Hymm of Creation) மிகப்பெரிய நோக்கம் சாபத்துக்கும், படைத்தவரின் அங்கீகாரத்தை வழங்குவதாகும். ஆகையால் சோர்வடையாத கடவுளுக்கு ஓய்வு உண்டு என்று கூறப்படுவதும் படைப்பின் பல்வேறு நிலைகள் நாட்கள் என விவரிக்கப்படுவதும் இங்கே காணப்படுகிறது. படைப்பு கடவுள் வேலை என கூறுவதால் உழைப்பு உயர்த்தப்படுகிறது என்பது உண்மை. ஆனால் இந்த திருமறையின் உயர்ந்த நோக்கம் நான்காம் கட்டளை (Fourth Commandment) இதை மேற்கோள் காட்டுவது போல மனிதரின் வாராந்திர ஓய்வு நாளை உயர்த்துவதே ஆகும். கடவுளுடைய படைப்பு செயலில் எந்த தடைகளும் குறைபாடும்களும் இல்லை. ஆகவே இந்த திருமொழியின் முடிவில் வரும். சாபத்து ஒய்வு கடவுளுக்கு ஓய்வு தேவைப்பட்டதால் அல்ல மாறாக அவர் தமது நோக்கத்தை முழுமையாக நிறைவேற்றிய அதற்கான அடையாளமும் ஆகும்.
பணிகள் முடிந்தன என்பதனால் கடவுள் தமது செயலில் இருந்து ஓய்ந்தார். மேலும், அவர் மிக நல்லதாக இருப்பதை அவர் கண்டார், ஆறு நாட்களுக்குப் பிறகு கடவுள் படைப்புச் செயலில் இருந்து ஓய்ந்தார். அருஞ்செயல்களில் அவர் இயற்கையை மீறி செயல்பட்டார், ஆனால் அதன் நிலையான ஒழுங்கை ஒருபோதும் மாறவில்லை. அதில் எதையும் சேர்க்கவும் இல்லை, கடவுள் சோர்வடைந்தால் ஓய்வில்லை மாறாக திருப்தி அடைந்ததால் ஓய்ந்தார். சாபத்து நாளை தூய்மை ஆக்கினார். இது கடவுளின் இறை மாட்சியாகும்.
2 ஓய்வு நாள்: இயேசு கிறிஸ்து வார்த்தையால் வாழ்வளிக்கிறது
மீண்டும் தொழுகை கூடத்துக்கு வந்தார், அங்கே கை சூம்பிய ஒருவர் இருந்தார் அவர் மேல் குற்றம் சாட்டும்படி ஓய்வு நாளில் குணமாக்குவாரா என்று பார்த்துக் கொண்டே இருந்தனர். அவரோ கை சூம்பிய அவரை நோக்கி நீ வந்து நடுவில் நில் என்றார்.
இரண்டு கேள்வியைக் கேட்டார், இயேசுவிடம் அவர்கள் பேசாமல் இருந்தார்கள் ஒரு சினத்தோடு அவர்களை சுற்றிப் பார்த்து அவர்களது மனகடினத்தை கண்டு வருந்தி அவர்களை நோக்கி கையை நீட்டு என்றார். கை குணமாயிற்று ஓய்வு நாளில் கப்பர்நகூம் ஊரிலிருந்து வந்து தொழுகைகூடத்துக்கு வருகின்றார், கை சூம்பியவர் தன்னுடைய கையை நலமாக்குவாரா, இல்லையா, அவர் நினைத்தாரோ இல்லையோ ஆனால் பரிசேயர் இயேசுவின் மீது குற்றம் சாட்ட வேண்டும் என்று பார்த்துக் கொண்டே இருந்தனர். இயேசு கிறிஸ்துவோ அவர்களின் கருத்தை அனைவருக்கும் முன்பாக கடைந்தெடுக்கிறார், கை சூம்பிய வரை குணப்படுத்தி அவர்களை அவமானப்படுத்துகிறார். உயிருக்கு ஆபத்தாக இருக்கும்போது ஓய்வு நாளில் சில காரியங்களை செய்யலாம் தேவையான வேலையை செய்யலாம் என அக்கால போதகர்களில் சிலர் கூறினர் என்று காணலாம். (1 மக் 2:32-34).
ஓய்வு நாளில் இளைப்பார்ந்த நிலையை விட அன்போடு உதவுவது எவ்வளவு மேல் எனவே இதற்கு தடை விதிக்கலாகாது என்கின்றார். இயேசு கிறிஸ்து பரிசேயர், கல் மனத்தினராய் ஞானக் குருடராய் மனதிலே இயேசுவை கொள்பவராய் என்ன பதிலளிப்பது என அறியாதவராய் விழித்துக் கொண்டே இருந்தனர். இயேசுவின் மனித உணர்ச்சிகளை மாற்கு இங்கே மிக தெளிவாக காட்டுகின்றார். நான்கு பக்கமும் சுற்றி பார்க்கும் இயேசுவுக்கும் சட்டம், சட்டம், சட்டம் என்று சொல்லிக்கொண்டே உள்ளன்பு சிறிதும் இல்லாதிருக்கும் கடுமணம் படைத்த பரிசேயரை பார்க்கும்போது ஒரு பக்கம் கோபமும், மறுபக்கம் வருத்தமும் வருகிறது. இறுதியில் ஆற்றலுடைய ஒரு சொல்லால் கை சூம்பிய அவரை கையை உடனே குணப்படுத்துகின்றார். தாம் புரிந்த அருஞ்செயல், அன்புச் செயல் வழியாக பரிசேயருக்கு புத்தி புகட்டுகிறார்.
மாற்கு இதுவரை விவரித்த மோதல் (2:1, 3:5) ல் இங்கு உச்ச கட்டத்தை அடைகிறது, இயேசுவின் எண்ணத்தை புரிந்து கொள்ள முடியாத மனமில்லாத. பரிசேயரும், வெளியே போய் தங்கள் அடக்கி வைத்திருந்த கோபத்தை எல்லாம் கொட்டி தீர்க்கின்றனர், புதிதாக தலை எடுத்து இந்த இயேசு கிறிஸ்துவை தொலைக்க வழி தேடுகின்றனர். இதற்கான பொதுவாக அதிகம் தோழமை கொள்ளாத ஏரொது, அந்திப்பாசின் ஆதரவுகளையும் கூட்டி வைத்து ஆராய்கின்றனர். யூதர்களின் சமய ஆட்சியும், கலிலேயரின் உலக ஆட்சியும் இயேசுவை அழிப்பதற்கு என்றே கூட்டுச் சேர்கின்றனர், இந்த திருமொழியில் இயேசு கிறிஸ்துவின் செயல் என்பது தான் உயிரையே தியாகம் செய்து இருக்கிறார். என்ன நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்கின்ற மனத் துணிவும் கொள்கின்றார்.
அவர் சமமாக இருக்க வேண்டும் சமுதாயத்தில் கரிசனை கொள் வேண்டும், இயேசு கிறிஸ்து எபிரேயர் 4 : 6 இல் கீழ்படிந்தால் ஓய்வு, கீழ்ப்படியாது இருந்தால் ஓய்வு பெற முடியாது என பவுல் கூறுகின்றார்.
விடுதலைப்பயணம் 20:11 ஓய்வு என்பது அனைவருக்கும் ஓய்வு (Sabbath Leads to Equal). எபிரேயர் 4:10 இல் பவுல் கூறியது, உழைத்து முடித்தவருக்கு ஓய்வு ஆகவே யாரெல்லாம் முழுமையாக உழைத்து தனக்கு கொடுக்கிற பணிகளை முடிக்கின்றாரோ அவர்களுக்கு ஓய்வு இருக்கிறது. மூன்றாம் ஆண்டில் சிற்றூர் வாழ்த்திட்டத்தின் மூலமாக நான் பயிற்சி பெற்றேன், திண்னாநேரி கிராமத்தில் திருமிகு.மாலா என்கின்ற ஒரு அக்காள் இருந்தார்கள். அவர் திருமணம் ஆகி மூன்று ஆண்டுகளில் தன்னுடைய கணவரையே இழந்தார், அவருக்கு ஒரு பெண் இருக்கின்றார், இப்படிப்பட்ட நிலையோடு அவர் மறைந்து விட்டார்.
அதற்குப் பிறகுதான் தாய் தந்தையின் பாதுகாப்பில் வாழ்கின்றார், இந்த அக்காள் அவரின் மகளுக்கு, தந்தையினுடைய முகம் கூட தெரியாது. அவருடைய மகளும் தன்னுடைய குடும்ப பொருளாதாரத்துக்காக பங்கையை கொடுத்து வருகின்றார். செவிலியராகவும் பணியாற்றி வருகின்றார். கடுஞ்சுமை வேறு இருக்கிறது, தினம்தோறும் தன்னுடைய அயராத பணிகளை மேற்கொள்வார், கடன் கட்ட வேண்டும், குடும்பத்தை கவனிக்க வேண்டிய பொறுப்பும் இருக்கிறது. இரவு வரை தையல் பணி செய்வார். இரவு 10:15 மணிக்கு கடைசி பேருந்தில் தான் தினம்தோறும் வருவார், இவரை ஓய்வு இல்லாமல் உழைக்கும் பெண்ணாக நான் பார்க்கிறேன். இதுபோல நாம் சார்ந்திருக்கும் திருச்சபையிலும் சமுதாயத்திலும் பல பேர் போராடியும் தவித்தும் தன்னுடைய வாழ்வுக்காக நாம் என்ன செய்யப் போகிறோம் என்று சொல்லி தவித்துக் கொண்டே இருக்கின்றனர். இப்படிப்பட்ட நிலைமையில் இருக்கின்றவர்களுக்கு நாம் என்ன செய்யப் போகின்றோம் என்பதை சிந்தித்து செயல்படுவோம்.
நிறைவாக
ஓய்வு என்பது.
1. மனதிற்கு உடைய ஓய்வாக இருக்க வேண்டும்
2. விடுதலையோடு கூடிய ஓய்வாக இருக்க வேண்டும்
3. நீதியோடு கூடிய ஒய்வாக இருக்க வேண்டும்
4. அச்சுறுத்தல் இல்லாத ஒய்வாக இருக்க வேண்டும்
ஆகவே கடவுளின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு அவற்றை கடைபிடித்து இயேசு கிறிஸ்துவின் வழிகாட்டுதலை பின்பற்றி தூய ஆவியாரின் துணை கொண்டு உணர்ந்து வாழ்ந்தால் நாமும் இச்சமூகத்தில் மன ஓய்வை பெற முடியும் கடவுள்தாமே இவ்வார்த்தையின் அடிப்படையில் இருந்து நமக்கு மனநிறைவின் ஓய்வை தருவாராக. ஆமென்.












