தமிழ்நாடு இறையியல் கல்லூரி
அரசரடி, மதுரை 16
திறனாய்வு வழிபாடு
செம்பொருள்: வாழ்வின் முன்மாதிரி கிறிஸ்து
Theme: Christ as the Pattern of Life
வழிபாடு நடத்துபவர்: திருமிகு. J. மெல்வின் ஜெரோம்
திறனாய்வு மாணவர்: திருமிகு. S. பென்னிசாம்
திறனாய்வு ஆசிரியர்: அருட்பணி. K.L.D ராஜசேகரன்.
நாள்: 03, 02, 2026
நேரம்: காலை 6:00 மணி
இடம்: கிறிஸ்தரசர் வழிபாட்டு மனை
வாழ்த்தும் வரவேற்பும் Greetings and Welcome
கடவுள் மைந்தன் தூய ஆவியாரின் திருப்பெயராலே இந்த வழிபாட்டிற்கு வருகைத் தந்திருக்கின்ற உங்கள் யாவரையும் அன்போடு வாழ்த்தி வரவேற்கிறேன்.
வழிபட அழைப்பு, Call to Worship
தூய சகோதர சகோதரிகளே, விண்ணக அழைப்பில் பங்கு கொண்டவர்களே, நாம் அறிக்கையிடும் திருத்தூதரும் தலைமை குருவுமான இயேசுவைப் பற்றி எண்ணிப்பாருங்கள் (எபிரேயர் 3:1) அவரில் நம் வாழ்வின் மாதிரியைக் காண, உள்ளமும் வாழ்வும் அவரை நோக்கித் திரும்பிட வாருங்கள்.
தொடக்க இறைவேண்டல். Opening Prayer
கடந்தும் உள்ளிருக்கும் அன்பு கடவுளே, நீர் தந்த இந்த நாளுக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். நீர் எங்களுக்கு அளித்த இந்த அற்புதமான சூழலுக்காக உமக்கு நாங்கள் நன்றி செலுத்துகிறோம். இப்பொழுது நாங்கள் உம்மைப் போற்றிப் பாட. உம் திருமொழிகளைத் தியானிக்க. உம்மைப் பற்றி அறிய, வாழ்வின் மாதிரியைப் புரிந்துகொள்ள இங்கே கூடி வந்திருக்கின்றோம். இவை அனைத்தின் ஊடே உம் இருத்தல் நிலையை உணர உதவி புரியும். நீர் தாமே எங்களை வழிநடத்தும். இவை அனைத்தையும் எங்கள் வாழ்வின் முன்மாதிரியான இயேசு கிறிஸ்துவின் வழியே கேட்டுக் வேண்டுகின்றோம். அன்பு கடவுளே. ஆமென்.
தொடக்கப் பாடல். Opening Song
தாயி தகப்பனாரே சகலத்தையும் பெத்தவரே
சாமி உன்ன வணங்க செந்தமிழல பாட்ட படிச்சோம்
காசில்லை மெழுகுத்திரி கொண்டு வரல (2) -எங்க
ஒத்துமைய ஒத்துமையா காணிக்கையா படைச்சோம்
நீதி நேர்மைய மறந்து சுயநலத்த நீதியின்னோம்
சாதி மதம் பேர சொல்லி சண்ட போட்டு செதறிப் போனோம்
தை மாசம் சீனி போங்க அய்யா நீ ஜீவ பொங்க
மெய்யாம் அதிலிருந்தா உய்யும் வழி இங்கிருக்கே
தப்பு தாளம் பாட்ட கெடுக்கும் சண்ட சச்சரவு ஒத்துமய நீக்கும்
உப்புகண்டம் சாரத்த கொடுக்கும் உம் உறவு எங்க ஒத்தும் வளர்க்கும்
ஆட்டு மந்தை ஆகிய எங்கள் வெட்டி கறியாக்கி பிரியாணி செஞ்சி
கூட்டா சுக்கா வறுவலுமே பண்ணி கூசாம திங்குற கூட்டம்தான் அதிகம்
மெய்யான ஆட்டிடையர் அய்யாவே நீங்கதானே
செய்வாயே சீர் சிறப்பு சிறுமை அணுகாம காத்து
சுத்த தண்ணி ஓட பக்கம் ஓட்டி சத்துமிக்க புல்லு தின்ன தருகிற
துஷ்ட புலி ஒநாய்க வந்தாக்கா கஷ்டப்பட்டு காத்து பாத நடத்துற
- தியாப்பிலஸ் அப்பாவு
நன்றியும் மன்றாட்டும் Thanksgiving & Intercessory Prayers
நன்றி செலுத்துவோம்:-
- அன்பு கடவுளே! எங்களுக்கு வாழ்வின் மாதிரியை அறிந்துக்கொள்ள தம் ஒரே மகனை அளிக்கும் அளவுக்கு உலகின் மேல் அன்பு கூர்ந்ததற்காய் உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
- அன்பு கடவுளே! சென்ற ஆண்டு அரசின் தீய செயல்களை மேற்கோளிட்டதற்காக முகேஷ் சந்திரகார், சுபம் சுக்லா, அசுத்தோஷ் ஸ்ரீவத்சவா, ராஜீவ் பிரதாப் சிங் போன்றவர்கள் சமுதாயத்தில உம் வாழ்வின் கொலை செய்யப்பட்டு நமக்கு மாதிரியாக மாதிரியைப் பின்பற்றி உயிரிழந்ததற்காய் உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
மன்றாடுவோம்:-
- கடவுளே, நாங்கள் உம் திருமைந்தனின் மாதிரியைப் பின்பற்றி நடந்து உம் திருவுளம் இந்த உலகினில் நிறைவேற்றிட உமை வேண்டுகிறோம்.
- கடவுளே, மக்களுக்காக லே, லடாக் பகுதியில் பணி செய்து வந்த சோனம் வங்சொக்-காக மன்றாடுகிறோம். கல்விச் சீர்திருத்தங்கள், சுற்றுச்சூழல் கண்டுபிடிப்புகள், சமூதாயத்திற்குத் தொண்டு செய்து இப்பொழுது மக்களின் வாழ்வை அச்சுறுத்தும் சட்டத்திட்டங்களுக்கு எதிராக குரல் எழுப்பியதால் சிறையில் இருக்கிறார். இவர் விரைவாக மீண்டும் வர மன்றாடுகிறோம்.
திருமறை பாடங்கள். Scripture Readings
விடுதலைப் பயணம் (Exodus) 20: 1-17. - Mrs. Jenani Christina (I BD)
எபிரெயர் (Ephesians) 3: 1-14. - Mr. Samuel Kamalanathan (IV BD)
லூக்கா (Luke) 10: 25-37. Mr. Sam Gilbert (III BD)
சிறப்புப் பாடல். Special Song
மறப்பதில்லை. நாங்கள் மறப்பதில்லை.
உங்களோட அன்பை மறப்பதில்லை.
மறப்பதில்லை, நாங்கள் மறப்பதில்லை.
உங்களோட அக்கறையை மறப்பதில்லை.
மறப்பதில்லை, நாங்கள் மறப்பதில்லை.
உம்மப்போல வாழணும்னு மறப்பதில்லை.
மறப்பதில்லை, நாங்கள் மறப்பதில்லை.
நீரே வழி வெளிச்சம், உண்மை என.
மறப்பதில்லை, நாங்கள் மறப்பதில்லை.
உங்களோட கருணையை மறப்பதில்லை.
மறப்பதில்லை. நாங்கள் மறப்பதில்லை.
உங்களோட இரக்கத்தை மறப்பதில்லை.
மறப்பதில்லை. நாங்கள் மறப்பதில்லை.
உங்களோட தியாகத்தை மறப்பதில்லை.
மறப்பதில்லை, நாங்கள் மறப்பதில்லை.
இதெல்லாம் தெரிஞ்சிருந்தும் தவறு செய்ய மறப்பதில்லை.
Racism, நாங்கள் மறப்பதில்லை.
Male dominance, நாங்கள் மறப்பதில்லை.
சாதி சனம், நாங்கள் மறப்பதில்லை.
Politics in church, நாங்கள் மறப்பதில்லை.
Denominations, மறப்பதில்லை.
பிரிவினைகள், நாங்கள் மறப்பதில்லை.
பெண்ணை கீழே தள்ள, நாங்கள் மறப்பதில்லை.
ஒரு. ஆணைக் கீழே தள்ள, நாங்கள் மறப்பதில்லை.
எதையுமே, நாங்கள் மறப்பதில்லை.
நா, நா, நா, நாங்கள் மறப்பதில்லை.
எப்போதுமே, நாங்கள் மறப்பதில்லை.
நா, நா, நா, நாங்கள் மறப்பதில்லை.
எதையுமே. நாங்கள் மறப்பதில்லை.
என்றென்றுமே. நாங்கள் மறப்பதில்லை.
எப்போதுமே, நாங்கள் மறப்பதில்லை.
எந்நாளுமே. நாங்கள் மறப்பதில்லை.
See people, I am not teasing.
In fact, I try, I try to ease in.
Reading the Bible and praising all day.
But what's the point if you don't practice your say?
Christianity is a way of Life.
Christianity is not just a religion.
So lets come together and add meaning to life.
So lets have a communion through a liberation.
எதையுமே, நாங்கள் மறப்பதில்லை.
நா. நா. நா. நாங்கள் மறப்பதில்லை.
எப்போதுமே, நாங்கள் மறப்பதில்லை.
நா, நா. நா. நாங்கள் மறப்பதில்லை.
நல்லதையும், நாங்கள் மறப்பதில்லை.
கெட்டதையும், நாங்கள் மறப்பதில்லை.
நீர் வாழ்ந்த வாழ்க்கை, நாங்கள் மறப்பதில்லை.
அதை போல வாழ, நாங்கள் நினைப்பதில்லை.
பாடல் & பண்: மெல்வின் ஜெரோம்
அருளுரை Sermon
செம்பொருள்: கிறிஸ்து வாழ்வின் முன்மாதிரி.
பற்றுறுதி அறிக்கை (தழுவியது) Confession of Faith, Creed (Adapted)
விண்ணையும் மண்ணையும் படைத்த அனைத்து ஆற்றலும் பொருந்திய கடவுளை நம்புகிறோம்.
அவர் தம் ஒரே மைந்தராகிய நம் வாழ்வின் முழுமையான முன்மாதிரியாகிய இயேசு கிறிஸ்துவையும் நம்புகிறோம். அவர் தூய ஆவியாராலே மரியாவிடம் கருக்கொண்டு பிறந்தார். நம் வாழ்வின் முன்மாதிரியாக அன்பையும் நீதியையும் கற்பித்து வாழ்ந்து பொந்தியு பிலாத்துவின் காலத்தில் பாடுபட்டு சிலுவையில் அறையப்பெற்று இறந்து அடக்கம் செய்யப்பெற்றுப் பாதாளம் இறங்கினார். மூன்றாம் நாள் இறந்தோரிடையே இருந்து எழுந்தருளினார். விண்ணகம் ஏறி அனைத்து ஆற்றலும் பொருந்திய கடவுளின் வலப்பக்கம் வீற்றிருக்கிறார். அங்கிருந்து நம் வாழ்விற்கு உயிருள்ள மாதிரியாக வழிகாட்டி உயிருள்ளோரையும் இறந்துவிட்டோரையும் நடுத்தீர்த்துக்கொண்டிருக்கிறார்.
தூய ஆவியாரையும் நம்புகிறோம் பொதுவாக இருக்கிற தூய திருச்சபையும் பிழை பொறுப்பும் உடல் உயிர்ப்பும் மெய் வாழ்வும் உண்டென்று நம்புகிறோம். ஆமென்.
பிழை உணர அழைப்பு. Call to Confession
அன்பர்களே, நம்பிக்கை கொள்ளாத தீய உள்ளம், வாழும் கடவுளை விட்டு விலகும். இத்தகைய தீய உள்ளம் உங்களுள் எவருக்கும் இராதபடி பார்த்துக்கொள்ளுங்கள். (எபிரேயர் 3:12) என்ற திருமொழிக்கு செவி கொடுத்தவர்களாய், தீமையை விட்டு விலக, நம் பாவங்களை அறிக்கையிடுவோம். வாருங்கள்.
பிழை அறிக்கை. Confession of Sins (அனைவரும்/All)
அன்பு கடவுளே, நீர் எங்களுக்கு நல்வழியை காட்டிய போதிலும், நாங்களோ பிறரிடத்தில் அன்பு செலுத்தாமல், பொதுநலனில் அக்கறை கொள்ளாமல், தன்நலத்தில் வாழ்ந்து வருகின்றோம். இந்த இழிநிலைக்காக மனம் வருந்துகிறோம்.
அன்பினை முன்னிலைப்படுத்தாமல் குறுகிய மனதோடு சமய, சாதி, இனம், நிறம், மொழி, வர்க, திருச்சபை, பால் போன்ற வேறுபாடுகளால் பிரிந்திருகிறோம். இந்த இழிநிலைக்காக மனம் வருந்துகிறோம்.
கடவுளே, நீர் கொடுத்த சட்டங்களின் பொருள் உணராமல் அச்சட்டங்களுக்கு முரண்பட்டவர்களாய் இருக்கின்ற இழிநிலைக்காக மனம் வருந்துகிறோம்.
அன்பு கடவுளே, பொருளற்ற மரபு. சடங்குகளுக்கு பலியாகி இருந்தோம். இப்பொழுது தெளிவிருந்தாலும், அவற்றைவிட்டு விலக முடியவில்லை. இந்த இழிநிலையை எண்ணி, மனம் வருந்துகிறோம்.
(நாம் நமது தனிப்பட்ட பிழைகளை அறிக்கை செய்வோமாக)
பிழை மன்னிப்பின் உறுதி. Absolution
சமாரியனைப் போல, பரிவு காட்டி. உண்மையாய் மனம் வருந்தி, தம்மிடத்தில் வருகின்ற யாவருக்கும் கடவுள் நல்ல கொண்டு. இரக்கம் அந்நாளில் திராட்சை இரசத்தையும் எண்ணெயையும் ஊற்றிக் காயங்களைக் கழுவியது போல இரக்கமும் அருளும் கொண்டு நம் பாவங்களைக் கழுவி நம்மை விடுவித்து நிலை வாழ்வில் சேர்ப்பாராக. ஆமென்.
ஒப்படைப்பு. Dedication
(அமைதி)
நிறைவு இறைவேண்டல். Closing Prayer
உம் மக்கள் ஆண்டவரே, உம்மை நோக்கி ஏறெடுக்கும் அனைத்து இறைவேண்டல்களையும் தயவுடன் ஏற்றுக்கொள்ளும். உம் மக்கள் எவற்றைச் செய்ய வேண்டும் என்பதை உணர்ந்து அறியச்செய்யும். அவற்றைச் செய்வதற்கு வேண்டிய உம் அருளையும் ஆற்றலையும் கட்டளையிட்டருளும். எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாக வேண்டுகின்றோம். ஆமென்.
ஆண்டவர் கற்பித்த இறைவேண்டல். (தழுவியது) Lord's Prayer (Adapted)
கடந்தும் உள்ளிருக்கும் அன்பு கடவுளே, உமது திருப்பெயர் தூயதெனப் போற்றப்பெறுக. உமது ஆட்சி வருக. உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல், எங்களுக்குள்ளும் நிறைவேறுக. இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராக குற்றம் புரிந்தோரை நாங்கள் மன்னிப்பது போல், எங்கள் குற்றங்களையும் மன்னியும். நாங்கள் சோதனைக்கு உட்படும் போது, தீயோனிடமிருந்து விடுவியும் ஆட்சியும் ஆற்றலும் மாட்சியும் என்றென்றைக்கும் உம்முடையவையே. ஆமென்.
இறைவாழ்த்து. Benediction
அருளும் அன்பும் கூட்டுறவும் நமக்குள்ளும். நமக்கிடையே இருந்து மூவொரு கடவுளின் திருவாழ்த்து நம் அனைவரோடும் இருப்பதாக, ஆமென்.
நிறைவுப் பாடல். Closing Song
கிருபாகரனே உந்தன் கிருபையாலே
மகிபா மகிபா உன் மகிமைதானே
இம்மானுவேலே உடன் இருப்பதாலே
இயேசையா மெசியா உந்தன் சிலுவைதானே
அன்பாய், அருகில் வந்தென்னை அணைத்தீர்,
அமைதியின் மருந்தால் சுகமளித்தீர்,
அயலானாய் வாழ்வைக் கற்றுத் தந்தீர்,
அன்பாய், வாழ்வைக் கற்றுத் தந்தீர்.
வாழ்வை விளக்கி வழிகாட்டி.
வாழா மனிதரை வாழவைத்தீர்
வாழ்க, வாழ்க என் முன்மாதிரி.
வாழ்க, வாழ்வின் முன்மாதிரி.
பாடல் & பண் மெல்வின் ஜெரோம்
நன்றி அறிந்த இதயத்தோடு அனைவரும் இணைந்து சொல்வோம்:-
என் உயிரே, ஆண்டவரைப் போற்றிடு.
என் முழு உள்ளமே. அவர் திருப்பெயரை ஏத்திடு.
என் உயிரே. ஆண்டவரைப் போற்றிடு.
அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே. ஆமென். (தி.பா 103:1,2)
அனுப்புதல் Dismissal
நடத்துநர்:- வாழ்வின் முன்மாதிரியான ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
திருஅவை:- அவர் உமது ஆவியோடும் இருப்பாராக
நடத்துநர்:- அவர் காட்டிய வழியில் அயராது நடந்து செல்வோம்.
திருஅவை:- கடவுளின் திருப்பெயராலே, ஆமென்.
வழிபாட்டில் கலந்து கொண்ட உதவி செய்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
A Translation of the Sermon
Theme: Christ as the Pattern for Life
Beloved brothers and sisters, all of you who have come today to take part in this worship service and to praise and glorify the Triune God, I warmly welcome you
As we meditate upon the three Scripture portions given today, we are able to notice two contrasting strands within these passages, the commandments of Moses, and the teachings of Jesus: Moses on the one hand, and Jesus on the other. A question naturally arises before us: Who is greater? Jesus or Moses? Is this merely a comparison, or is it a conflict?
The epistle passage for today is Hebrews chapter 3. The title given there is "Jesus is Greater." But the sermon title given to us is "Christ as the Pattern for Life."
Bishop Leslie Newbigin says this:
"Jesus Christ is not merely the one who brings salvation, he himself is salvation."
The theologian Emil Brunner says:
"In Jesus Christ, God encounters us personally."
Keeping these theological statements before us, can we understand the greatness of Jesus Christ? On this basis, can we say that Jesus Christ is truly the pattern for life?
Karl Barth says: "Jesus Christ is not only a revelation of God, he is the one who brings about a revolution in humanity."
Non-Christians say this, when Mahatma Gandhi speaks about Christ, he says, "Jesus Christ's exemplary life is greater than his teachings."
So, based on this, can we say that Jesus Christ is a role model for living in this way?
I thought I would forego this sermon with two sub-points.
1. Jesus Christ as the Pattern of Love
2. Jesus Christ as the Pattern for Polities
1. Jesus Christ as the Pattern of Love:-
In order to understand Jesus Christ as the pattern of love, we must begin with the Old Testament background of the Ten Commandments. During the time of Jesus, people used the commandments in distorted ways:
1. They used the law not to build relationships, but to destroy relationships.
2. They used the law not to include people, but to exclude people.
3. They used the law not to promote justice, but to judge and condemn others.
The Ten Commandments can be divided into two parts:
Love towards God (Commandments 1-4)
Love towards neighbour (Commandments 5-10)
Regarding this, Jesus Christ says in Matthew 22:36-40:
"You shall love the Lord your God with all your heart, with all your soul, and with all your mind. And you shall love your neighbour as yourself."
Jesus Christ does not reject the commandments. Rather, he sharpens them further.
He reduces the 613 laws into two lines.
By this we can say, for Jesus Christ:
1. Following the law without love is meaningless.
2. Following religious rules without love is meaningless.
3. Following the law without love and compassion is empty.
Thus, Jesus places love at the very centre.
The Good Samaritan passage stands within this framework.
The lawyer, who is well-versed in the law, says, wanting to justify himself.
"Who is my neighbour?" In response, Jesus Christ tells the parable of the Good Samaritan. In the parable, the priest and the Levite, though bound by religious law, purity laws, and fear of contamination, see the wounded man and pass by on the other side
The Greek word used there for the priest is (κατέβαινεν) "was going down" indicates. He was coming back on his way back after his priestly duties. The word used for victim is (ἐκδύσαντες) "stripped" indicates that he was left completely naked and exposed. Through this we know that he was a jew. They knew he was a Jew, both the priest and the Levite crossed over and went away.
But the Samaritan, even though he knew that the wounded man was a Jew, protected him, moved by compassion:
1. He went near him
2. He poured oil and wine on his wounds and bandaged them
3. He placed him on his own animal
4. He took him to an inn and took care of him
5. The next day, he took out two Denarii, gave them to the innkeeper, and said, "Take care of him; when I return, I will repay you whatever more you spend."
It is this love that Jesus Christ highlights. Observing the law is not wrong. But the law must be followed for the sake of love. Love alone must remain supreme. It is out of love that Jesus Christ:
1. Heals on the Sabbath
2. Touches the unclean
3. Eats with sinners
4. Forgives the undeserving
Because of this, in the eyes of some, he appears to be a sinner. But as Paul says, in him all things find their fulfillment. Thus, Jesus Christ the Apostle and the High Priest is the pattern of love for our lives.
2. Jesus Christ as the Pattern for Politics
The parable of the Good Samaritan is familiar to all of us. We have seen it portrayed repeatedly in drama, literature, and various forms. What is the message of this parable?
What is its meaning? What is its central message?
This parable, like other parables of Jesus Christ, contains multiple layers of meaning. When viewed from different perspectives, it reveals new meanings.
I wish to raise a question and move further.
If loving the neighbour is the central message of this parable, then if the wounded man had been helped by a Jew instead of a Samaritan, would not the meaning still remain? Why then must the rescuer be a Samaritan?
At the beginning of this passage, a lawyer asks a question concerning eternal life.
He asks this question not to learn, but to test Jesus. The lawyer is not a civil lawyer or so. He is an expert in Jewish law. When Jesus responds to him, the lawyer, wanting to justify himself, asks: "Who is my neighbour?"
Through this parable, Jesus does not answer the question directly. Even today, we can approach this parable from the perspective of that lawyer. In this parable, whom do we identify ourselves with?
Prof Mark Allan Powell, a biblical scholar, notes this: When he teaches this parable in America, people identify themselves with the Priest or the Levite. When he teaches the same parable in Africa, people identify themselves with the wounded man. As they believe Jesus saves them.
So the question remains. With whom do we identify ourselves? With whom does Jesus identify the lawyer with? To know this we need to answer who is Jesus Christ" Jesus Christ is the compassionate Good Samaritan.
And, the wounded man struggling for life is the lawyer himself. Through this parable,
Jesus silently proclaims:
"The religion you have followed for centuries did not save you. When it saw you, it crossed over and passed by. The Levite who came later also did not save you. I am the one who saved you. You need me as your Good Samaritan. I am the Messiah" Without explicitly stating it, Jesus Christ reveals who he is. At the same time, Jesus Christ exposes the loveless condition of both priest and Levite. He deliberately places a Samaritan as the hero of the story. The word "Samaritan" itself is offensive to the lawyer. By making a Samaritan the central figure, Jesus shatters both the lawyer's religious pride and legal framework. In this way, Jesus Christ responds to the lawyer with deep wisdom. Therefore, Jesus Christ says in Matthew 10:16 "Be wise as serpents and innocent as doves." Jesus Christ himself lived in this manner.
Conclusion
How do we live today?
Where love is required, do we act with love?
Where our wisdom is required, do we remain silent?
Where questioning is required, do we ask questions?
Instead, many times, without asking questions, without resisting injustice, we preserve empty religious traditions. Jesus Christ calls us to live according to his pattern of wisdom and love. As Hebrews chapter 3 says: Jesus Christ is greater. He is the one who built the house. He is the Son over God's household. He existed before Moses. He is greater than Moses. Therefore, Jesus Christ is the true pattern for our life.












