Type Here to Get Search Results !

தமிழிசை வழிபாட்டு முறை ஏழு | Communion Service | Tamilisai Worship Service Seven | Jesus Sam

தமிழிசை வழிபாட்டு முறை ஏழு (7)
திருவிருந்து

1. ஒளியேற்றல்
இராகம்: ஆரபி
தாளம்: சதுஸ்ர ஆதி
முன்னிசை: கரி²ம¹ ரி²ம¹பம¹ பத²ம¹பத²ச்
ரி²ம¹ரி¹ ச்ரி²ச் த²ச்த² மபத
விடிவெள்ளியே நெஞ்சில் விளக்கேற்றவா
விடியாத வாழ்வுக்கு ஒளியூட்டவா
தடுமாறிப் பாதங்கள் தடந்தேடுது
தடையாக முள்நார்கள் பிணைந்தேறுது
படுஆழக்கரைமேலே உயிராடுது-2
பரஞ்சோதி வரம்வேண்டி மணமேங்குது - உந்தன்
பலம் தந்து ஒளி தந்து இறைவா நீ வா - விடிவெள்ளி
(அமைதி)

2. மும்மை வாழ்த்து
இராகம்: கானடா
தாளம்: சதுஸ்ரஆதி
முன்னிசை: சரி²க¹ம¹பநி¹சா
சாநி¹பம¹பக¹கரி²ச
நடத்துனர்: உயிராய் உணவாய் உலகெலாம்
உறையும் உயிர்ப்பொருளே
உடலால் உணர்வால் உளத்தால் உமக்கே
எம் வந்தனம் வந்தனம் வந்தனம்
(பின்வரும் வரிகளை நடத்துநர் முன்பாட சபையார் பின்பாடுவர்)

வானக உணவே வாழ்வருள் பெற்றோரே வாழ்க நீர் வாழ்க
வார்த்தையாயிருந்த வாழ்வுடலேற்றவா வாழ்க நீர் வாழ்க
வாய்மையின் வரமே வழங்கிடும் ஆவியே வாழ்க நீர் வாழ்க
வந்தனம் செய்தே வணங்குவோம் மலரடி வாழ்க நீர் வாழ்க

3. இறைபுகழ் (பின்வாங்கிப்பாடுவது)
இராகம்: பூபாளம்
தாளம்: சதுஸ்ரரூபகம்
சரி¹க²க²க²க² க²பத¹பப்ப
பச்த¹ பபப க²பக²ரி¹ சச
    வழி வாய்மை வாழ்வும் நீரே
    வரம் ஈயும் வள்ளல் நீரே
ஆதி அந்தம் மையம் நீரே
ஆர்வம் ஆவி அன்பும் நீரே
நீதி சோதி நேர்மை நீரே
நீளம் ஆழம் ஞானம் நீரே
(அமைதி)

4. பிழையுணர்தல்
மாய மாளவ கௌளை
எடுப்பு:
சரி¹ம¹பம¹ம¹பத¹ச்நி¹தநி¹ச்
நடத்துனர்: பிழையைப் பிழையென்றுணராப் பிழையே பிழையுள் பெரிதாம் பிழை (அருள்குறள்)
இராகம்:கீரவாணி
தாளம்: சதுஸ்ர ஆதி
அனைவரும்:
பல்லவி
பொறுத்தாளும் தயாபரரே -பிழை
பொறுத்தாளும் தயாபரரே

துணைப்பல்லவி
பொறுக்க முடியாத புண்காய பாவமதைப்-2
பொறுத்தாற்றிப் புதுவாழ்வு ஈந்திடும் புண்ணியரே - பொறு

சரணம்
வெறுத்தார் இப்புவியோர் எம் துருவையும் பெரிதாக்கி
வெறும் பாவி கொடும் பாவி என மொழிந்தார்
மறுத்தால் இவ்வேழைக்கு மறுவாழ்வு இலையிங்கு-2
மறுக்காமல் மன்னிப்பை ஈந்திடும் மன்னவரே பொறு
(அமைதி)


5. பிழை மன்னிப்பு
இராகம்: இந்தோளம்
சக¹ம¹த¹நி¹ச்
சநி¹த¹ம¹க¹ச
நடத்துனர்: நான் நானே உன் மீறுதலை எனை முன்னிட்டுக் குலைக்கின்றேன் உன் பாவத்தை இனி நினையாமல் இருப்பேன். அமைதியுடன் செல்க.

சபை: ஆமென்.

(பின் பாடுதல்-தாளம் : ஆதி)
ஆண்டவரே உம் அருள்முக ஒளியால் அமைதியுடன் செல்வோம். யாமும் இதுபோல் பிறர் பிழை பொறுக்க இன்னுளம் ஈந்திடுவீர்.


6. திருமறை வாக்கு
இராகம்: மத்தியமாவதி
தாளம்: சதுஸ்ர ஆதி
சரி²ம¹பநி¹ச
சநி¹பம¹ரி²ச
நடத்துனர்: ஆண்டவரே உம் அருள்வசனம்
சபை: பாதத்து விளக்கு பாதைக்கு ஒளியே

நடத்துனர்: இறைவரே உந்தன் திருவாய்மொழிகள்
சபை: இதயத்தைத் தேற்றும் இருளினை மாற்றும்

நடத்துனர்: வானக உணவே வார்த்தையின் நினைவே
சபை: வாழ்வினையூக்கும் வசந்தமேயாக்கும்

அ) முதல் திருமறைப் பாடம்
ஆ) ஆண்டவர் இயேசுவின் பேறுபெற்றோர் திருமொழிகள்
இ) இரண்டாம் திருமறைப் பாடம்

7. அருளுரை

8. பற்றுறுதி அறிக்கை

9. நன்றி செலுத்துதல்
இராகம்: மோகனம்
தாளம்: சதுஸ்ர ஆதி
சரி²க²பத²ச
சத²பக²ரி²ச
நடத்துனர்: நன்றி நன்றி நன்மைகள் செய்த
நாதா எங்கள் நன்றி (2)
சபை: நன்றி நன்றி நன்மைகள் செய்த
நாதா எங்கள் நன்றி (2)

நடத்துனர்: மழையும் வெயிலும் மதியும் நன்மை
மனையும் தினையும் மறையும் நன்மை (2)
சபை: நன்றி நன்றி நன்மைகள் செய்த
நாதா எங்கள் நன்றி (2)

நடத்துனர்: உழைக்கும், உதவும் கைகள் நன்மை
உரிமையை பேணும் உத்தமர் நன்மை (2)
சபை: நன்றி நன்றி நன்மைகள் செய்த
நாதா எங்கள் நன்றி (2)

10. மன்றாட்டு
(அமைதி)

11. திருவிருந்து ஆயத்தம் (பாட்டு)
இராகம்: நாட்டை
தாளம்: சதுஸ்ர ஆதி
சக²ம¹பநி²ச
சநி²பம¹க²ச
நடத்துனர்: அடியவராய் அருள் ஆண்டவர் திருவடி
அமர்வது அகமதில் ஆனந்தமே
சபை: ஓருடல் ஓரினம் ஓரிறை மாந்தராய்
ஓர் சபை உறவதில் ஒன்றிணைவோம்


12. இறையருள் நினைத்தல் (பாட்டு)
இராகம்: மலகரி
தாளம்: சதுஸ்ரரூபகம்
சரி¹ம¹பத¹ச
சத¹பம¹க²ரி¹ச
நடத்துனர்: எந்தையே எம் தாயே உந்தன் விந்தையே எண்ண
சிந்தையே அருள்
சபை: சரணம் திருவடி சரணம் சருவேசுரா தினம் சரணம்
சரணம் திருவடி சரணம்

நடத்துனர்: வாழ்வுற இந்த வையம் யாவையும் வார்த்தையால்
வனைந்தாண்டவர் நீர்
சபை: சரணம் திருவடி

நடத்துனர்: செங்கல் சூளையில் வெந்த உம் இனம் செங்கடல்
கடந்தேறச் செய்தவர்
சபை: சரணம் திருவடி..........

நடத்துனர்: மந்தையாம் உடன்பாட்டில் ஒன்றிட மன்னவா
அன்பை மாரியாய்த் தந்தீர்
சபை: சரணம் திருவடி....

நடத்துனர்: கந்தைக் கோலமாய் மைந்தரை ஈந்து முந்தும் அன்
பினைச் செய்தவா போற்றி
சபை: சரணம் திருவடி
(அமைதி)

13. இயேசுவின் அருட்செயல் நினைத்தல் (பாட்டு)
இராகம்: ரேவதி
தாளம்: சதுஸ்ர ஆதி
நடத்துனர்: இறைவரின் மைந்தனே எங்களின் நண்பரே
இயேசுவே ஏழையின் வாழ்வேற்றாய்
சபை: இயல்பாய் பாவியர் பந்தியில் அமர்ந்தாய்
இரங்கியே திரளோர் பசி தீர்ந்தாய்

நடத்துனர்: உன்னுடல் வானக உணவென உரைத்தாய்
உயர் வாழ்வதனால் உண்டென்றாய்
சபை: பகைவர் கைகளில் அகப்படு முன்னர்
பஸ்கா பந்தியில் பணிந்தமர்ந்தாய்

நடத்துனர்: அப்பத்தைப் பிட்டு இரசமதை ஊற்றி
அவையே உன்னுடல் உதிரமென்றாய்
சபை: உயிருடன் எழுந்தும் உறவினை மீண்டாய்
உணவினை ஈந்துஎன் கண் திறந்தாய்

நடத்துனர்: உயரே எழுந்தவா உலகெலாம் நிறைந்தவா
உம் வரவே எம் முழு நிறைவே
சபை: அடியவர் எங்கள் அகமெலாம் பொங்க
அன்புடன் இங்கு எழுந்தருள்வாய்
(அமைதி)

14. திருவிருந்து வழங்கற்சொற்கள்
இராகம்: மோகனம்
நடத்துனர்: ஆண்டவர் கிறிஸ்து இயேசு / தாம் காட்டிக் கொடுக்கப் பட்ட அன்று இரவில் / அப்பத்தை எடுத்தார்/ நன்றி செலுத்தினார் / அதைப் பிட்டார் / அடியவர்க்களித்தார் /நீங்கள் வாங்கி உண்ணுங்கள் / உங்களுக்களிக்கப்படும் இது என்னுடல் /என்னையே நினைத்து இதை உண்ணுங்கள் / என்றே திருவாய் மொழிந்தார். உணவுண்ட பின்னர் /அவர் கிண்ணத்தை எடுத்தார் / நன்றி செலுத்தினார் /அடியவர்க்களித்தார் / இதிலே எல்லாரும் குடியுங்கள்/இதனால் பாவ மன்னிப்புண்டு / உங்களுக்கும் பலருக்கும் சிந்தப்படும் இது / புது உடன்பாட்டின் என் செங்குருதி /இதைப் பருகும்போதெல்லாம் / என்னை நினைந்தே இதைச் செய்யுங்கள் / என்றே திருவுளம் மொழிந்தார்.

அனைவரும்: நினைவை நிறை நிமலா மறை
நினைந்தே அருள் பெறவே நிறை (3)

15. பந்தியில் அனைவரும் பங்கு பெறுதல்

16. ஒப்படைத்தல்
நடத்துனர்: ஆண்டவர் தம் பேரன்பினால் தம் உடலையும் செங்குருதியையும் நமக்கு வாழ்வின் உணவாகத் தந்தமைக்காக அவருக்கு நன்றி செலுத்துவோம்
(அமைதி)

உலகிலே நாம் அவருக்கென்று உயிருள்ள பலிகளாக வாழவும் பிறருக்கு வாழ்வளிக்கவும் நம்மை ஆண்டவர் கைகளில் ஒரு முறைகூட ஒப்புவிப்போம்

17. இறையாசி
இராகம்: மாயமாளவகௌளை
ஆண்டவர் நமக்கு ஆசி வழங்கி நம்மைக் காப்பாராக
ஆண்டவர் தம் திருமுகத்தை நம்மேல் ஒளிரச் செய்து
நமக்கு அருள்செய்வாராக
ஆண்டவர் தம் திருமுகத்தை நமக்குக் காட்டி அமைதி
அருள்வாராக.

அனைவரும்: ஆ.....மென்

18. மங்கலப்பாடல்
இராகம்: செஞ்சுருட்டி
தாளம்: ஏகம்
மங்கலம் மங்கலமே இறை
மந்தையின் மங்கலமே தாய்
தந்தையின் மைந்தரின் ஆவியின்
தண்ணருள் மங்கலமே தரணியில் மங்கலமே

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.